பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 11, 2009

சொல்வனம்நண்பர்களே,

சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம், இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு, இதழ்பார்வை எனப் பல்வேறு திறப்புகளில் படைப்புகள் கொண்டிருக்கும் முதல் இதழே இந்த இதழின் பன்முகத்தன்மையைக் காட்டுவதாய் இருக்கும் என நம்புகிறோம்.

இந்த இதழுக்கு உங்களுடைய ஆதரவையும், படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம். வன்முறையைத் தூண்டாத, காழ்ப்புணர்வில்லாத எந்த படைப்பையும், அது எந்தத்துறை, கொள்கையைச் சார்ந்ததாய் இருப்பினும் வரவேற்கிறோம். உங்கள் மேலான கருத்துகளையும், படைப்புகளையும், விமர்சனங்களையும் editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


முதல் இதழின் உள்ளடக்கம்:

திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்
அக்ரகாரத்தில் பூனை - திலீப்குமார் - சிறுகதை
அரசியலாக்கப்படும் அறிவியல் - க்ளோபல் வார்மிங் புனைவா? உண்மையா? - அருணகிரி
திசை - சுகா
இந்திய இசையின் மார்க்கதரிசிகள் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ், கத்ரி கோபால்நாத், தெபாஷிஷ் பட்டாச்சார்யா ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை - ஸ்ரீ
ஒலிக்காத குரல்கள் - கோபிகிருஷ்ணனின் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தை முன்வைத்து - ஹரன்பிரசன்னா
அறிவியல் கல்வியின் சமுதாயத்தேவை - அரவிந்தன் நீலகண்டன்
வன்முறையின் வித்து - ஓர் விவாதம் - ஹரிவெங்கட்
மகரந்தம் - இதழ் பார்வை

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்.
http://www.solvanam.com

இப்ப சைட்டில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை( இப்படியே இருந்தா நல்லா இருக்கும்), வந்த பிறகு படித்துவிட்டு மஞ்சள் கமெண்ட் எழுதலாம் என்று இருக்கேன் :-)

18 Comments:

Anonymous said...

///இப்ப சைட்டில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை( இப்படியே இருந்தா நல்லா இருக்கும்), வந்த பிறகு படித்துவிட்டு மஞ்சள் கமெண்ட் எழுதலாம் என்று இருக்கேன் :-)//

இட்லி அண்ணே!
வெப்சைட் நல்லாத்தான் வொர்க் பண்ணறது. நல்ல விஷயங்கள் வந்தால் நல்லதுதான்!
வாழ்த்துகள் சொல்வனம் டீம்!

IdlyVadai said...

கொஞ்சம் நேரத்துக்கு முன்பு வரவில்லை. இப்ப உங்க கண்களுக்கு தெரியுது.
பார்த்தேன் நல்லா அழகாக தான் இருக்கு :-)

R.Gopi said...

வாழ்த்துகள் சொல்வனம் (மானஸ்தன்)

வாழ்த்துக்கள் சொல்வனம்

Which is right??

Anyway, my hearty congratulations to SOLVANAM and its TEAM.

வண்ணத்துபூச்சியார் said...

சொல்வனம் குழுமத்திற்கு வாழ்த்துகள்.

பகிர்விற்கு நன்றி

Anonymous said...

மற்றொரு ‘இலக்கிய’ பத்திரிகை!

பொது ஜன இ்தழாக - சினிமா, கிசுசு, லொள்ளு-ஜொள்ளு,நமீதா, இல்லாத பத்திரிகையாகக் கொண்டு வரக்கூடாதா?
வழக்கமான ’இலக்கிய’க் குழாய் அடி சண்டை இதில் இருக்காது என்று நம்புகிறேன்.--வாழ்த்துக்கள்---டில்லி பல்லி

தண்டோரா said...

கண்டிப்பா பங்கு எடுத்துகிறோம்..வாழ்த்துக்கள்(மன்னிக்கனும் பரிசு இன்னும் வரலே)

மானஸ்தன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

தண்டோரா அண்ணாச்சி!
எந்தப் போட்டிக்கு உங்களுக்கு பரிசு வரலைன்னு தெளிவா சொல்லுங்க.
ஏன்னா, இட்லி வடை ஒரு போட்டிக்கு இன்னும் பரிசே அறிவிக்கலை!! (நேரு மாமா-காக்கை போட்டி).

இந்தப் பின்னூட்டத்த பாத்ததுக்கு அப்புறமாவது நம்ம அண்ணன் பரிச அறிவிச்சா இட்லி-வடை கடைக்கு வர என்ன மாதிரி மக்களுக்கு சந்தோஷம்!

எனக்கு மஞ்சள் கலர்ல டைப் அடிக்க முடியல. இருந்தாலும், சொல்லிடறேன்.
ஊருல சொல்லறது சொலவடை.
உண்மைய சொல்லறது - (மஞ்சள் begins) "சொன்னத செய்றது" (மஞ்சள் ends) - இட்லிவடை.

கால்கரி சிவா said...

வாழ்த்துக்கள் சொல்வனத்திற்கு

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

Anonymous said...

Solvanam is likely to be another version of tamilhindu site.

Anonymous said...

அநாநி

சொல்வனத்தைப் படித்தீர்களா? மினிமம் பார்க்கவாவது செய்தீர்களா? அதில் எங்கே ஐயா நமீதாவும், கிசுகிசுவும், இலக்கிய அரசியலும் இருக்கின்றன? உளறுவதற்கு ஒரு அளவே இல்லையா? முதலில் படித்து விட்டு அல்லது ஒரு முறை பார்த்து விட்டாவது உங்களது கஎண்ட்டைப் போடலாமே? தமிழில் எந்த இதழ் ஐயா இது வரை மாவோவின் பேரழிப்பையும், ஸ்டாலினினின் அரக்கத்தனத்தையும் அலசியுள்ளது? தமிழில் எந்த இதழ் ஐயா பூமி சூடாவதாகக் கூறப்படும் அறிவியலின் பின்னால் இருக்கும் அரசியலை வியாபாரத்தைப் பேசியுள்ளது? தமிழில் எந்த இதழ் ஐயா கார்ல் சாகன் சிவதாண்டவத்தில் கண்ட பிரபஞ்ச சூத்திரத்தைப் பேசியுள்ளது? தமிழில் எந்த இதழ் ஐயா திலீப் குமாரையும், கோபிகிருஷ்ணனையும் கண்டு கொண்டிருக்கிறது. போய் படியுங்கள், படித்து விட்டுப் பேசுங்கள். தமிழ் இணையம் இன்று திராவிட இயக்க இன வெறியர்களாலும், புலி ஆதரவு கொலைக் கும்பல்களாலும், மார்க்சிய லெனினிய பேய்களாலும் மாசு பட்டு மலினப் பட்டு அசிங்கப் பட்டுக் கிடக்கும் ஒரு சூழலில் ஒரு புது பிராணவாயுவாக புத்துணர்ச்சி வீசும் இதழாக சொல்வனம் மலர்ந்திருக்கிறது. துவக்கியவர்கள் யாராக இருந்தாலும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

சந்திரமௌளீஸ்வரன் said...

தண்டோரா எனும் நண்பருக்கு

இட்லி வடைக்காக அந்தப் பரிசு நான் தான் ஸ்பான்சர் செய்தேன்

அதை கூரியரில் அனுப்பினேன். உங்களுக்கு வந்து சேரவில்லை என அறிகிறேன். எனது செல் நம்பர் 9840656627. நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள இயலுமா.. நானே நேரில் வந்து அந்தப் பரிசினை தந்துடறேன். இதில் இட்லி வடையாரின் பிழை ஏதும் இல்லை.. நானே அந்த தாமதத்துக்குப் பொறுப்பு

உங்களிடம் இருந்து போன் கால் எதிர்பார்க்கிறேன்

Boston Bala said...

பதிவை விட தமிழர்ஸ்.காம் தளப் பின்னூட்டம் பெருசா இருக்கும் போல!

Anonymous said...

On Solvanam
Someone questions the science behind IPCC reports while another
writes about need for scientific
literacy.This irony is not lost to the reader.But the folks who run solvanam seem to be unaware of this
irony.IPCC reports themselves mention about limitations of the
models and other issues.Today the global scientific community has
accepted that accumulation of greenhouse gases in the atmosphere can alter climate and result in global climate science. Yet somebody recycles old stories for
Solvanam in 2009. Jayabharathan
and others have written about
the scientific basis of global warming. Carl Sagan is not an unknown name to tamil reading public. Aravindan Neelakantan has recycled what he has written elsewhere, perhaps in
different articles.As expected he invokes Capra :).

Anonymous said...

People think that Idlyvadai is a proxy (for whom?). Now that proxy has another proxy for
sending/sponsoring gifts.Is thandora also a proxy? :).

Anonymous said...

பொது ஜன இ்தழாக - (சினிமா, கிசுசு, லொள்ளு-ஜொள்ளு,நமீதா, இல்லாத பொது ஜன இ்தழாக) பத்திரிகையாகக் கொண்டு வரக்கூடாதா? என்று தானே அநானி சொல்லி இருக்கிறார். சொல்வனத்தில் நமீதா இருப்பதாவா எழுதி இ்ருக்கிறார்?

ந.லோகநாதன் said...

சினிமா, லொள்ளு-ஜொள்ளு,நமீதா - அந்தி மழை இணையதளத்தை பார்க்கவும்..

www.andhimazhai.com