பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 12, 2009

அ. இ. ஆ. மு.க

சினிமா இயக்குனர்கள் படம் தொடங்கும்முன்பே செய்யும் முதல்காரியம் பிலிம் சேம்பருக்குபோய் 'டைட்டிலை' பதிவு செய்வதுதான். அந்த 'பழக்கதோஷத்தில்' ,கட்சி ஆரம்பிக்கும் முன்பே தனது கட்சியின் பெயரை அறிவித்துஇருக்கிறார் நடிகர் எஸ். வி. சேகர்.

அகில இந்திய ஆர்ய முன்னேற்றக்கழகம் - இதுதான் அந்தப்பெயர். இந்திய அரசியல் வரலாற்றில், முதல் முறையாக(?) பிராமணர்களுக்காக தொடங்கபோகும் ஒரு சாதிக்கட்சி. கட்சிபெயரை பார்த்தால் சாதிக்கட்சி மாதரி தெரியவில்லை. எதோ நடிகர் ஆர்யாவின் ரசிகர்மன்றம்போல இருக்கிறது. சிறுத்தை, புலி,சிங்கம் என்று சேர்த்தால்தானே இளைஞர்களுக்கு சமுதாய 'உணர்வு' வரும்?

கட்சிபெயரை அறிவித்துவிட்டு அவர் ஒரு பேருரை ஆற்றினார்.

"பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்து உள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம், ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால் நாங்கள் கட்சி தொடங்க அவசியம் இருக்காது. எனவே கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் இருக்கிறது.

தந்தை பெரியார் சொன்னது போல் எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன்.

12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏ.க்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்ட மன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து செல்லவும் தயாராக இருக்கிறோம்"

என்றவர், ஹைலைட்டாக "தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட தர மறுக்கிறார்கள். புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடும்" என்று பஞ்ச் வைத்தார் சின்ன கேப்டன்(!).

கட்சியின் சின்னத்தில் தேசிய கொடியின் வண்ணங்களும், ராஜாஜி உட்பட்டோரின் படங்களும் இருக்கும் என்றார் ('ஜெ' வுக்கு இடம் உண்டா?).

விரைவில், 'இனமான சிங்கம் எஸ். வி. சேகர் அழைக்கிறார், அலை கடலென அணி திரள்வீர்' என்ற டிவி விளம்பரத்துடன், மயிலாப்பூரில் விரைவில் ஒரு மாநாடு நடத்துவார் (பிரியாணிக்கு பதில் தயிர்சாதம்?). ' அவாள்' ல பாதிப்பேர் அமெரிககாவில் இருகிறார்கள். அலைகடல் கூட்டத்திற்கு எப்படி 'ஆள்' தேற்றுவார் என்று தெரியவில்லை.

'யார்' வந்தாலும் சேர்த்துகொள்ளும் பாஜகவுடன் கூட்டணிஅமைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடகூடும்.

சு.சாமி, சோ, சங்கர மடத்தினர் போன்றோர் 'வெளியில் இருந்து' ஆதரவு அளிக்க வாய்ப்புகள் அதிகம்.

சாதிக்கட்சிகளுடன் கூட்டணி என்பதையெல்லாம் 'ஓல்டு பேஷனாக்கி' , தமிழக அரசியலில் தனது 'இலவசங்களால்' புது 'டிரெண்டை' செட் செய்துவிட்டார் நம் 'சதாபிஷேக தலைவர்(??)'. இந்த யுகத்தில் சாதிக்கட்சி தொடங்கவிரும்பும் எஸ். வி. சேகர், அவரது நாடக பாணியில் சொல்வதானால்,
ஒரு அய்யோ பாவம்.

பலமுறை எழுப்பபட்ட , விடைதெரியாத மெகா 'பாரத' கேள்விகள் இரண்டு.

பரமஏழையாய் பிறந்த ஒருவர், பிராமிணர் என்ற ஒரே காரணத்துக்காக அரசின் உதவிகளுக்கு புறக்கணிக்கபடுவது, சரியா?

சகலவசதிகளுடன் பிறந்த ஒருவர், தனக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பயன்படுத்துவதை சரி என்பதா? இல்லை தவறு என்பதா?

இந்த முரண்பாடுகளுக்கு, மாற்றுத்திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியம்?
- இன்பா


இன்பா எழுதும் போஸ்டுக்கு மஞ்சள் கமெண்டே தேவையில்லை :-)

46 Comments:

Anonymous said...

Who is Inba..? is he pongal group ?

Boston Bala said...

-- இன்பா எழுதும் போஸ்டுக்கு மஞ்சள் கமெண்டே தேவையில்லை :-)---

வழிமொழிகிறேன் :)

Guru said...

என் புருசனும் கச்சேரிக்கு போகிறான்....

Anonymous said...

//**
விரைவில், 'இனமான சிங்கம் எஸ். வி. சேகர் அழைக்கிறார், அலை கடலென அணி திரள்வீர்' என்ற டிவி விளம்பரத்துடன், மயிலாப்பூரில் விரைவில் ஒரு மாநாடு நடத்துவார் (பிரியாணிக்கு பதில் தயிர்சாதம்?). ' அவாள்' ல பாதிப்பேர் அமெரிககாவில் இருகிறார்கள். அலைகடல் கூட்டத்திற்கு எப்படி 'ஆள்' தேற்றுவார் என்று தெரியவில்லை.

'யார்' வந்தாலும் சேர்த்துகொள்ளும் பாஜகவுடன் கூட்டணிஅமைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடகூடும்.

சு.சாமி, சோ, சங்கர மடத்தினர் போன்றோர் 'வெளியில் இருந்து' ஆதரவு அளிக்க வாய்ப்புகள் அதிகம்.**//

Really this is much better than yellow comments.

Anonymous said...

great sense of comedy in writing ..

chinna captain s.v.sekar rocks

Anonymous said...

This is better than making a film his son as hero.

Anonymous said...

ஒரு வேளை அம்மா அடி பின்னி எடுத்து இருப்பாங்களோ?? அல்லது நம்ம மு. க வின் வேலையாக இருக்குமோ? கலி காலம் என்பதால் அனைத்தையும் பொறுத்து தான் ஆக வேண்டும். கனிமொழியும் கலைஞரும் இன்னமும் கவிதை எழுதுவது, ராஜா ஐ டி அமைச்சர்+எம்.பி ஆனது, அழகிரி எம்.பி ஆனது, விஜய் சினிமாவில் நடிப்பது, விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது, திருமா வெற்றி பெற்றது, ராஜ பக்சேவுக்கு உலக நாடுகள் ஆதரவு தருவது மற்றும் தந்தது, பாரதம் வெள்ளையனுக்கு மீண்டும் அடிமை ஆவது, கண்டவர்களெல்லாம் புத்தகம்,கவிதை ,Blog எழுதுவது, தகுதி இல்லாதவர்களுக்கு விருது வழங்குவது, India is growing and என்று கூசாமல் சிலர் பொய் சொல்வது என எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்............

Anonymous said...

this post has "some funny side" and to be honest, i too enjoyed the way it is presented!.

on the other hand, it is sad that Mr Inba had taken the whole brahmin community for a ride - which is reflected by some of his comments.

Mr SV Sekar was known as a professional comedian to the people of TN and in the last few years he has turned into "one" in real life!

The brahmins who have some common sense will NEVER go behind Mr Sekar. even the brahmin association which is in existence for ages now could not unite them. mind you, there are many "avALs" who even today vote for mr karunanidhi.....

////பலமுறை எழுப்பபட்ட , விடைதெரியாத மெகா 'பாரத' கேள்விகள் இரண்டு.

பரமஏழையாய் பிறந்த ஒருவர், பிராமிணர் என்ற ஒரே காரணத்துக்காக அரசின் உதவிகளுக்கு புறக்கணிக்கபடுவது, சரியா?

சகலவசதிகளுடன் பிறந்த ஒருவர், தனக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பயன்படுத்துவதை சரி என்பதா? இல்லை தவறு என்பதா?

இந்த முரண்பாடுகளுக்கு, மாற்றுத்திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியம்?////

i don't understand the context of the above statements in this post by Mr Inba, and i don't see any connection between this and the essence of this post.

finally, a request. if some one wants to target SV Sekar or politicians they can very well do.

but IMHP they need not bring in "avAL-ivAL" who live/survive in the US/other developed countries on their merits and hard work, as like many other "non-avALs and non-ivALs".

thanks for understanding.

Anonymous said...

சேகர் ஒரு பக்கா சுயநலவாதி.
சதா தன் புராணமும் “ரோஜா” படத்தில் வெள்ளை பணியாரம் கேட்ட அவர் அப்பா { அதை எல்லா பேட்டியிலும் சொல்லி தொலையணுமா?? } புராணமும் காலட்சேபம் பண்ணுவார்.

அதானால் அரசியலுக்கு ஏற்றவர்தான். அதில் சந்தேகமில்லை.

காஞ்சி மடத்தில் கொஞ்சி கொண்டிருந்தவர், சின்னவர் தடாலன கைதானவுடன் பயந்து போயி ஜெவின் காலில் சரண்டரானார். அங்கேயும் தன் வாய் கொழுப்பால் ‘அம்மா’வை பற்றி கமெண்ட் அடித்தார்.

கால்ல விழந்தவர்களையே கண்டுக்காத அம்மா இவரை ஒரம் கட்டி ஆண்டு விழா கூட நிறை வேறி விட்டது.

இப்போ மஞ்சள் மகிமையால் ஏதாவது செய்ய நினைக்கிறார்.


அவர் நடித்த ‘குடும்பம் ஒரு கதம்பம்” படத்தில் வரும் வசன்ம் தான் நினைவிற்கு வருகிறது.

AYYO PAAVAM.

Anonymous said...

Brahmins in tamil nadu need a credible leadership that will work for them instead of just talking.
Sekar may end up another Karthik in
T.N politics.If muslims can get 3.5% reservation what is wrong with the demand for a similar reservation for brahmins.

Rajesh said...

I pity my MLA. I used to have a small liking for his social service activities.He has become a laughing stock !!

nila said...

thiruththavae mudiyathu ivangalai ellam

பா. ரெங்கதுரை said...

’ஆரிய’ முன்னேற்றக் கழகம் என்ற பெயரிலிருந்தே இது மஞ்சள் துண்டின் வேலைதான் என்பதைத் தெரிந்துகொண்டுவிடலாம். பாவம் தமிழக பிராமணர்கள். உலகம் தட்டை என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு நபரை ஜகத்குரு என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது; மஞ்சள் துண்டின் பினாமியான மசாலா நாடக நடிகரைத் தங்கள் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

R.Gopi said...

//கட்சிபெயரை பார்த்தால் சாதிக்கட்சி மாதரி தெரியவில்லை. எதோ நடிகர் ஆர்யாவின் ரசிகர்மன்றம்போல இருக்கிறது.//

Ha ha ha ha

//கட்சியின் சின்னத்தில் தேசிய கொடியின் வண்ணங்களும், ராஜாஜி உட்பட்டோரின் படங்களும் இருக்கும் என்றார் ('ஜெ' வுக்கு இடம் உண்டா?).//

Kandippaaaa......... irukkaadhu

//இன்பா எழுதும் போஸ்டுக்கு மஞ்சள் கமெண்டே தேவையில்லை :-)//

Unmai thaannn.............

இராயர் அமிர்தலிங்கம் said...

இன்னுமா இந்த ஊரு நம்பல நம்புது
சும்மா கேளுப்ப்புரங்கப்ப பீதிய

Anonymous said...

Q:பரமஏழையாய் பிறந்த ஒருவர், பிராமிணர் என்ற ஒரே காரணத்துக்காக அரசின் உதவிகளுக்கு புறக்கணிக்கபடுவது, சரியா?

A:Wrong.

Q:சகலவசதிகளுடன் பிறந்த ஒருவர், தனக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பயன்படுத்துவதை சரி என்பதா? இல்லை தவறு என்பதா?

A:Wrong.

இந்த முரண்பாடுகளுக்கு, மாற்றுத்திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியம்?

Possible, wait for another 10 years.One good CM & PM will come to solve this issue :)

"Our patience will achieve more than our force"

விஷ்ணு. said...

யார் யாரோ கட்சி ஆரம்பிச்சி காமெடி பண்ணிகிட்டு இருக்காங்க. அண்ணாத்தே எற்கனவே காமெடி.. அதனால பிச்சி எடுபாறுன்னு நினைக்கிறேன்.

அஹோரி said...

கடைசியா கேட்ட ரெண்டு கேள்வியும் 'நச்' ரகம்.

ஏழையை விட , பணக்காரர்களே இந்த கோட்டாவை அதிகம் பயன் படுத்துகிறார்கள்.

மூளை உள்ள அரசாங்கம் ( கண்டிப்பா இப்ப இருக்குற ஆளுங்க இல்ல ) எதாவது இந்த பிரச்னையை ய தீர்த்து வையிங்க.

Anonymous said...

He is the person removed Cracy Mohan from his troup,since Mohan is talking Brhamin language in drama.

Anonymous said...

I fyou want to grow politically in TN you have to burn buses,cut trees,take to rowdism, Katta panchayathu,rape,cycle resort to soda bottle boot legging and cycle chain methods which This community cannot do. Whichever community cannot do these, can never dream of becoming politically viable. I dont know if SV sekar can become one.Can he do atleast what Vijayakanth did.He will only sub devide the breahmin groups which are already devided in many ways.
Besides many brahmins do not believe in the political caste equations. Or else JJ would have won handsomely in the recent election.
It is one way of liquidating his hard earned money. Let us enjoy that.

Anonymous said...

//கடைசியா கேட்ட ரெண்டு கேள்வியும் 'நச்' ரகம்.

ஏழையை விட , பணக்காரர்களே இந்த கோட்டாவை அதிகம் பயன் படுத்துகிறார்கள் //

உண்மை. ஆனால் இதை வாக்கு வங்கி புத்தியுடன் அரசியல் நடத்தும் எந்த கட்சியும் ஒப்புக்கொள்ளப் POVADHILLAI.

பார்ப்பனர்களுக்கு ஒரு கட்சியோ தலைவனோ வேண்டாம். என்னிடம் புள்ளிவிவரம் ஒன்றும் இல்லை. ஆனால், அவர்களில் வறுமையால் நலிந்திருப்பவர்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களின் குழந்தைகளுக்கு படிப்பிற்கோ வேலையில சேர்வதற்கோ அரசு எந்த உதவியும் அளிக்காது தான். மேல் தட்டு பார்ப்பனர்கள் தாங்கள் "MORE SECULAR THAN KING" என்று இருக்காமல் தாம் தொடங்கிய தொழில் முயற்சிகளில் தம் சாதி நலிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கினால் தவறு ஆகாது என நினைக்கிறேன். அதற்காக கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையார்க்கு உடைக்க சொல்லவில்லை, அதாவது அரசு வேலைகளை அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், ஆனால், தகுதி அடிப்படையில் அவர்கள் முன் இருந்தால் தாண்டி செல்லாமல் பணியாற்ற இயலும்; முயற்சிக்கலாம்.

மாயாவதி ஒரு முறை எங்கோ சொல்லியிருந்தது போல் ரிசர்வேஷன் பொருளாதார அடிப்படையில் ( price reflects all underlying factors என்ற அர்த்தத்தில் பொருளாதாராத்தில் ஒரு தொடர் உண்டு ) ஒரு கால கட்டத்தில் வருமானால் ( கனவு காணுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு ) இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு இருக்கும்.
ஆனால் s v சேகர் ஒரு நாளும் ஒரு தலைவர் ஆகப் போவதில்லை. அவரை காமெடியனாக பார்க்க அவாளும் மற்றவர்களும் விரும்புவார்கள்.

shiva said...

superb post with terrific timing jokes..

i think this is the right time to revise and review the reservation policies

லவ்டேல் மேடி said...

ஏனுங் சாரே......!!! இந்த ஆ. ஈ. ஆய் . மூக்காவுல சேந்தா.... எல்லா கோயில்லையுமும் ப்ரீ தரிசன்மாமே......!!! நெசமாலுங்களா...????

R.Gopi said...

//லவ்டேல் மேடி said...
ஏனுங் சாரே......!!! இந்த ஆ. ஈ. ஆய் . மூக்காவுல சேந்தா.... எல்லா கோயில்லையுமும் ப்ரீ தரிசன்மாமே......!!! நெசமாலுங்களா...????//

*********

Unga vaarthai palichaalum palikkum.

Inba said...

//இன்பா எழுதும் போஸ்டுக்கு
மஞ்சள் கமெண்டே தேவையில்லை :-)//

இட்லிவடை அண்ணா,

இப்படியொரு
'பரிசை(!)'
நான் எதிர்பார்க்கவே இல்லை.

தங்களுக்கும்,

என் பதிவுகளை
(தி-கு-ஷொ)ட்டும்
வாசக நண்பர்களுக்கும்
என்
நன்றிகள்

Inba said...

// Anonymous said...
this post has "some funny side" and to be honest, i too enjoyed the way it is presented!.
on the other hand, it is sad that Mr Inba had taken the whole brahmin community for a ride - which is reflected by some of his comments.
//
Dear Anony,

i have written some of the comments
only just for FUN
not for புண்

thanks

Anonymous said...

(எவனாவது காசு போடுவான், இவன் தலைவனா இருப்பானாம். பணம் போட்டவ்ன் தலைவனாக இருந்தால் என்ன?)


பிராமணருக்காக கட்சி துவங்க தயார்-எஸ்.வி.சேகர்

சென்னை: "எனக்கு யாராவது பணம் கொடுத்து உதவி பண்ணத் தயாரா இருந்தா பிராமணர்களுக்காக கட்சி நடத்தத் தயார்", என்று நடிகரும் அதிமுக சார்பில் எம்எல்ஏவாகி இப்போது தனித்து இயங்குபவருமான எஸ்வி சேகர் கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்

இப்போது எந்தக் கட்சியையும் சாராதவனாகவே நான் உள்ளேன். பல கட்சிகளில் சேருமாறு என்னை அழைத்தார்கள்(எங்க கனவிலயா?). ஆனால் எனக்கு உடன்பாடில்லை(கூப்பாட்டாதானெ உடன்படாடே வரும் கனவுல எஙக உடன்பாடு).

இப்போது பிராமண சமுதாயத்துக்கு தொண்டு செய்ய புதிய கட்சியைத் துவங்குமாறு பலர் வற்புறுத்தி வருகிறார்கள்(யாரு வீட்டு மாமியா?).

நான் தலைமை ஏற்க தயார். ஆனால் கட்சி நடத்துவது சாதாரணமா... அதற்கு தலை இருந்தால் மட்டும் போதாது((அ)வாலும் வேண்டும்). பெரிய அளவு பணமும் ஆள் பலமும் தேவை. அதை சமுதாயத்தில் உள்ளவர்கள் செய்து கொடுத்தால் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாராவது பணம் கொடுத்து கட்சி ஆரம்பிக்க பக்கபலமா இருந்தா நான் ரெடி.

புதுக் கட்சிக்கு 'அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்', மற்றும் 'ஆர்ய முன்னேற்ற கழகம்' என இரு பெயர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். கட்சி தொடங்குவதா? இல்லையா? என்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்து விடுவோம். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.(அவர் தனக்குள்ளே பெசிகொள்வதை தான் இப்படி சொல்லுகிறார்.)

(இங்க தான் மிகப்பெரிய காமெடியே தொடங்குகிறது.)
ஈழ தமிழரைவிட மோசமான நிலையில் பிராமணர்கள்:

பிராமணர்கள் என்றாலே, அவங்களுக்கென்ன உயர்ந்த சாதிக்காரர்கள் என்ற உணர்வு பலருக்கும். உண்மையில் பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு அவசியம்.

தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட எங்களுக்கு தர மறுக்கிறார்கள்.
(டேய் வெண்ணெய், ஈழ தமிழர் என்ன பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டு டிவியா பார்த்து கொண்டு இருக்கிறார்கள்?.அவங்க என்ன்மோ பிளாஸ்மா டிவில 'மிட் நைட் மாசலா' பார்க்கிற மாதிரியும், தமிழக பிராமணவாள் எல்லாம் கருப்பு /வெள்ளை டிவியில் 'ராமாயணம்' பார்க்க மாதிரிலா இந்த அரைவேக்காடு பேசிக்கொண்டிருக்கிற்து.அவன்(ஈழ தமிழன்) உயிருக்கே போராடி கொண்டிருக்கிறான். நீ என்னனா கலைஞர் டிவியில மானாட மயிலாடவில் ஆட வரும் மாமிகளை கலர் டிவியில் பார்க்கனும்ங்கிறேயே. இது உனக்கே ரொம்ப ஓவரா தெரியல) புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடுவதாக இருக்கும்.

பிராமணர்கள் கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் உள்ளது(ஏன ராமர் கையில் இல்லையா?). ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால்(ரொம்ப கடிக்கிறானே? இந்த கொசு தொல்லை தாங்கமுடியலைடா சாமி) நாங்கள் ஏன் கட்சி தொடங்கப் போகிறோம்(சர்க்கரை பொங்கலும், நெய்யுமாய் தின்னதால் கொழுப்பு அதிகமாய்ச்சு அதுக்குதான்).

தந்தை பெரியார் சொன்னது போல்(வெளிய வந்தால் கழக கண்மணிக 'கவனி'த்துவிடுவார்கள் என்பதற்காக தெளிவா தான் பேசுறான்யா) எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. மீண்டும் சொல்கிறேன், பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன்.

12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏக்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணக்கமாக செல்வோம்.(இப்பவே கண்ணை கட்டுதே. சுப்பிரமணிய சுவாமி ஒரு அர்சியல் கோமாளி பண்ணுற அட்டூழியம் தாங்க முடியலைன்னா, இப்ப இத மாதிரி குட்டி கோமாளிகள் தொல்லையும் தாங்க முடியலையப்பா...)

எங்களிடம் 20 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன(எப்ப கி.பி 5000லயா?. அப்ப கூட சந்தேகம் தான்.). போன தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளின் வெற்றி வித்தியாசமே 15 லட்சம் ஓட்டுகள்தான். பிராமணர் ஓட்டுக்களை ஆதரவு ஓட்டுக்களாக மாற்ற திமுக எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. அதிமுக ஏற்கெனவே அந்த ஆதரவை இழந்துடுச்சி.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கும், உள்ஒதுக்கீடு வேண்டும்(டேய் , இது எல்லாம் ரொம்ப ஓவருடா? ஒன்னுடைய அலும்புக்கு ஒரு அளவேயில்லாமல் போச்சு). இந்த விஷயத்தில் எங்கள் குறைகளை கேட்க குறைந்தது ஒரு கமிட்டி கூட போடாதது வருத்தம் அளிக்கிறது என்றார் எஸ்வி சேகர்.(ரொம்ப அழுவுறான். ஏதோ பார்த்து போடுங்கப்பா.. சொர்ணமால்யா - மகளிர்(மாமி) அணி தலைவியாக்க ஆதரவு தரப்படும். )

shiva said...

ஏழையை விட , பணக்காரர்களே இந்த கோட்டாவை அதிகம் பயன் படுத்துகிறார்கள் //

i do agree..

we can understand this from the crowds gathering for DPI Thirumavalavan

Anonymous said...

//(டேய் வெண்ணெய், ஈழ தமிழர் என்ன பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டு டிவியா பார்த்து கொண்டு இருக்கிறார்கள்?.அவங்க என்ன்மோ பிளாஸ்மா டிவில 'மிட் நைட் மாசலா' பார்க்கிற மாதிரியும், தமிழக பிராமணவாள் எல்லாம் கருப்பு /வெள்ளை டிவியில் 'ராமாயணம்' பார்க்க மாதிரிலா இந்த அரைவேக்காடு பேசிக்கொண்டிருக்கிற்து.அவன்(ஈழ தமிழன்)//

Please take care of your words

parupu,
unaku enna periyarnu ninaipa??

such a questions
go and ask those who are giving Color tvs as Free gift at first

Mohan Kumar said...

Inba is putting goals on both sides.. For brahmins and against brahmins..

While it is to be admitted that even in Brahmins, there are poor people, despite reservation, on a percentage basis brahmins are certainly well placed than non brahmins. In private companies, whether in the companies I have worked with or other companies I have visited, most of the managers and senior management team consists of 90 % brahmins only. They are still holding the power. You cannot see many CEO's in brahmins; but from No: 2 to No: 20 in any company will be that community only. Make no mistake about that.

Anonymous said...

// Mohan Kumar said...

You cannot see many CEO's in brahmins; but from No: 2 to No: 20 in any company will be that community only
//

the reason is their merit and dedication, nothing else

நாரத முனி said...

//“ “ரோஜா” படத்தில் வெள்ளை பணியாரம் கேட்ட அவர் அப்பா { அதை எல்லா பேட்டியிலும் சொல்லி தொலையணுமா?? } புராணமும் காலட்சேபம் பண்ணுவார்.//

அட பாவி அவர் செததுக்கப்றோம் கண் தானம் பண்ணினத பத்தி வசதியா மறந்துரு ராசா.. அத பத்தியும் தான் நிறையா பேட்டில சொல்லிருக்காரு???

//(எவனாவது காசு போடுவான், இவன் தலைவனா இருப்பானாம். பணம் போட்டவ்ன் தலைவனாக இருந்தால் என்ன?)//

கரீக்ட்டு பா .. அப்டியே இன்னொரு கொஷ்டீன் இப்போ திமுக தலீவரா இருக்கற கலைஞர் தான் அந்த கட்சிக்கி 1949 ல துட்டு போட்ட மொதலாளிங்களா??? நான் கூட p.தியாகராயர் , pt.ராஜன், நடேசனார் இவங்க தான்னு நெனசேன்பா... சொக்கா சொன்னபா

Anonymous said...

//அவன்(ஈழ தமிழன்) உயிருக்கே போராடி கொண்டிருக்கிறான். நீ என்னனா கலைஞர் டிவியில மானாட மயிலாடவில் ஆட வரும் மாமிகளை கலர் டிவியில் பார்க்கனும்ங்கிறேயே.//

hello anony, mind ur words. "mamigal" dhan maanada mayilada pakkarangala??? unga veetla yaarum pakkaradhu illaya? adhu ennaya ellathukkum "mami, aval" appadinu use panreenga? if you want to scold S.Ve for his foolishness, limit your words with him only. Dont pull his caste and other stuff.

Appadi patha namma "nakka mookka", "maruthuvar" polavanga panra komali thanathuku avangaloda caste pathiyum thayiriyama pesunga. ungaloda enda "paruppum" anga vegaadhu. vandutaanga pesrathuku.

Anonymous said...

such a questions
go and ask those who are giving Color tvs as Free gift at first.


if he want to tell the sitution his community people, he can tell about their condition.
Why is he comparing with innocent eleam tamils?
Is eelam tamils and brahims in same condition?
that also he crying abt the colour TVs are not issued to them?
Is it eleeam tmails holding TVs? they are running for life. these fellows are runnnig for luxuary lfe? there is a big diference?
eleam tamils not found the communities by which brahmis treated other humans as a slaves...

as per brahmins mythology, the fsther/ancestors sins comes to sons. Now your ancestor done lot of sins in the name of 'jathi'. SO their sons have their sins. thats all. Once you done, now you are having It.

Anonymous said...

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா? அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், முதலில் தேசாபிமானம் என்றால் என்ன தெரியுமா ?

1. இந்தியா, இந்து இந்துராஷ்டரம் பற்றி தெரிந்த இந்தியராகவும் இந்துவாகவும் இருக்க வேண்டும்.

2. இந்தி வாழ்க, இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாடு தனித்து நின்றுவிட்டது என்ற தேசிய அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

3. மோடி அல்லது அத்வானி போன்ற இந்துக் கடவுள்களின் கலர்படம் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் அல்லது அலுவலக மேசையில் வைத்திருக்க வேண்டும்

4. சமஸ்கிரதம் இந்தியாவின் பொது மொழி என்றும் அது மட்டுமே கோவில் அர்சனைக்கு உபயோகிக்க வேண்டும் என்பதை ஊடகங்கள் வழியாக அது பற்றி தெரியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

5. இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தனித்தனியாக பிரித்து புரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டும், அதற்கு அடிக்கடி நீங்கள் துக்ளக்கும் தினமலரும் படிக்க வேண்டும். குறிப்பாக விடுதலை புலிகள் பற்றி எவரும் ஆதரவாக பேசினால் தேச துரோகி என அவரைப்பற்றி எச்சரிக்கை செய்து இந்திய அரசை விழித்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

6. ஈவெராமசாமி பற்றி தெரிந்திருக்க வேண்டியதில்லை, அவருடைய சாதி நாயக்கர் என்று தெரிந்தாலே போதும்.

7. கருணாநிதியும் கருணாநிதி குடும்பமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக அடிக்கடி பலருக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

8. நாற்பது ஆண்டுகால திராவிடர் ஆட்சியில் தமிழகம் பின் தங்கிவிட்டது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

9. துலுக்கர்களை சிறுபான்மையினர் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு என்று அரசாங்கம் பேச்சு எடுத்தாலே அபாய சங்கு வாசித்து, பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைவதாக அக்கறைபட்டுக் கொள்ளவேண்டும்.

10. இட ஒதுக்கீடு இந்தியரின் திறமையை குறைத்துவிட்டது, தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்று சொல்லத் தெரியவேண்டும். அதாவது, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சமத்துவம் பேஷ தெரிந்திருக்க வேண்டும்

Anonymous said...

12. கடவுள் சேவை செய்யும் வகுப்பினர் குறிப்பாக பார்பனர் கடவுளுக்கும் மேல் என்று தெரிந்து கொண்டு அவர்கள் செயலில் குறிக்கிடாமல் இருக்க வேண்டும்.

13. கோவில் என்பது தனிமனிதரின் சொத்து அல்ல, அதற்கு என்றே ஆகம வரை முறை இருக்கிறது, அதை மதித்தாலே போதும், மாற்றம் வேண்டும் என்று எவராவது கேட்டால், அதெல்லாம் மாறப்படாது, இப்போது இருக்கும் நடைமுறையே சரி ஆண்டவனும் இதைதான் விரும்புகிறார். மாற்றினால் ஆண்டவனுக்கு ஆகாது, அடுக்காது, சுனாமி வரும், பூகம்பம் வெடிக்கும் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

14. தமிழில் அர்சனை என்று எதாவது மூதேவிகள் வந்து நின்றால் ஆண்டவனுக்கு எல்லா மொழிகளும் புரியும், தமிழென்ன? சமஸ்கிரதமென்ன? ஆனால் சமஸ்கிரத்தில் செய்வது தான் ஆண்டவனுக்கும் ஆச்சாராத்துக்கும் நல்லது, ஆண்டவனுக்கு பல மொழி தெரிந்தாலும், ஆண்டவனுக்கு அவன் பாஷையில் பேசினால் அவனுக்கு உகந்ததாக் இருக்கும் என்று எவரும் கேட்டால் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

15. இந்து மதத்துக்கு விரோதமாக எவரும் பேஷினால் அவர்களை இந்திய துரோகி, இன துரோகி என்று அடையாளம் காட்ட வேண்டும்.

16. மோடி போன்ற பெரிய மனிதர்கள் வருகை தரும் போது அது பற்றிய முழுகவரேஜ் செய்து அவர்களின் புகழை பரப்ப வேண்டும்.

17. வந்தேறிகள் என்று எவரும் பேஷினால், அப்படி யாரும் இல்லை, அது கிறித்துவ மிஷனரிகளின் சதி என்று சொல்லிவிட்டு திராவிடர்கள் தான் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தேறினார்கள் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

18. கோத்ரா ரயில் எரிப்பு பற்றி எவரும் கேட்டால், டீசல் டாங் வெடித்து ரயில் எரிந்ததாகவும் மோடியின் அரசு எவ்வளவோ போராடியும் முஸ்லிம்களை அல்லா அழைத்துக் கொண்டதை தடுக்க முடியவில்லை என்ற உண்மையை உறக்கச் சொல்லவும், இறைவன் மோடி மீது பழிச்சொல்லாக சொல்லப்படுவது, காங்கிரஸ் ஏஜெண்ட் தெகல்காவின் திட்டமிட்ட சதி என்று சொல்லத் தெரிய வேண்டும்.

19. ஆண்டி சோனியாவை ஆணடினோமெய்னோ, இத்தாலிகாரி, கிறித்துவர்களின் கைக்கூலி என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

20. லோக குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரிய பெரியவாளின் புகழை அகில லோகத்துக்கும் பரப்பவேண்டும்.

22. தேசம், தேசியம் தேசநலன் என்ற வார்த்தையை அவ்வப்போது உபயோக படுத்த வேண்டும்.

21. இதில் ஒன்றிரண்டை செய்தும், மேற்கண்ட எல்லாவற்றையும் போற்றி அடிவருடும் அடியார்களை கண்டு கொண்டு அவர்களை தட்டிக் கொடுத்து பேஷ வேண்டும்.

இன்னும் 100 எழுதாலம். யாருக்கு தேசவிசுவாசம் இருக்கிறது? இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள், எல்லோரும் நாத்திக நாயகரின் துர்போதனையிலும், திராவிட கம்யூனிசத்தின் கெட்ட சவகாசத்திலும் இருக்கிறார்களே என்று நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது, அலுப்பாக இருக்கிறது. கடைசியாக,

மேற்கண்ட இருபத்து சொச்சம் பாயிண்டையும் ஒருவர் செய்து தான் தேசாபிமானியாக இருக்க வேண்டுமா? இல்லை. இல்லை. ஒரு சுலப பாதை இருக்கிறது. எட்டாம் ஆம் நம்பர் நூலை வாங்கி மூன்று புறிகளாக்கி தோளைச் சுற்றி மார்பு வழியாக இடுப்பின் குறுக்கில் சுற்றிக் கொண்டால் போதும், மேலே சொன்னவை எல்லாம் தன்னாலேயே நடக்கும், அதன் பிறகு நீங்கள் தேசாபிமானிதான்.

உடனே அது இல்லாதவர்கள் எல்லோரும் அணிந்து தேசாபிமானி ஆகப்போகிறேன் என்கிறீர்களா? முப்புறி நூல் எல்லோரும் அணிய முடியுமா? அதற்கே உள்ள மகிமை தான் என்ன? துர்அதிர்ஷட வசமாக நினைத்த மாத்திரத்தில் எல்லோரும் அணிய முடியாது. குலம் கோத்திரம் இவை எல்லாம் இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் தேசாபிமனியாக முடியாது. பூனூல் அணிபவர் எவரோ அவர்களே தேசாபிமானிகள், மற்றவர்கள் தேசதுரோகிகள்.

Anonymous said...

கிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.
கிச்சுமாமா உள்ளங்கையை தேய்து சொல்கிறார், "தேவபாசையும், தமிழும் ஆதிகாலத்து பாஷைகளாம், இரண்டிற்கும் பொதுவான அம்சம் என்பது போல் தேவ ரிஷிகளின் பெயர்கள் இரண்டு பாஷைகளின் பொத்தகங்களிலும் உள்ளதாம், வெள்ளைக்காரன் ஆரியர் திராவிடர் என்று பிரித்து போட்டுவிட்டு பிராமனாளுக்கும், மத்தவாளுக்கும் பேதம் பிரிச்சு வச்சிட்டான்"

மாமாவுக்கு சில கேள்விகள்.

வெள்ளைக்காரன் எத்தனை 'ஆரிய' பவன்களை திறந்து வைத்து பெயர் வைத்தான்?
வெள்ளைக்காரன் எங்கே எப்போது 'ஆரிய' சமாஜ் என்ற பார்பன அமைப்பை தோற்றுவித்தான்?
வெள்ளைக்காரன் சூத்திரவாள் யார் ? ப்ராம்ணவாள் யார் என்று எப்போது பிரித்தான்?
வெள்ளைக்காரன் மனுவை அச்சிட்டு வீடுவிடாக கொடுத்தானா?
வெள்ளைக்காரன் ப்ராம்ணவாள் ப்ரம்மாவின் மூக்கில் இருந்து பிறந்தவராகவும், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவராகவும் எப்போது பிரச்சாரம் செய்தான்?

Anonymous said...

///hello anony, mind ur words. "mamigal" dhan maanada mayilada pakkarangala??? ////

'கலைஞர் டிவியில மானாட மயிலாடவில் ஆட வரும் மாமிகளை'
என்று எழுதியிருக்குது.
மாமிகள் தான் பார்க்கிறார்கள் என்று எழுதவில்லை.

தமிழக் பிராமிணர்காளியும், ஈழ தமிழர்களையும் ஓப்பீட்டதால் இது போன்ற கருத்துக்கள் வந்துள்ளன. தன்னுடைய சாதியின் நிலமை பற்றி அவர் பேசியிருக்கலாம். தேவையில்லாமல் ஈழதமிழர்களை பற்றி பேசியிருக்ககூடாது.
என் மீது குண்டு போடாதிர்ர்காள். குழந்தை அழுகிறது பால் கொடுங்கள் என்ரு கதறுபவர்களை, எனக்கு கலர் டி கொடுக்கவில்லையே என்று கேட்பவரிடம் ஓப்பீடு செய்வது ஒரு மனித இனத்தில் பிறந்தவனால் முடியாது(வார்த்தைகள் கடுமையாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை).
தமிழ் நாட்டு மக்கள் பிராமணர்களை கொன்றார்களா? வீடு வீடாக சென்று கற்பழித்தார்களா? சக குடிமகனாக மதிக்க வில்லையா?
சமசுகிருத நூலகள் அடங்கிய நூலகத்தை எரித்தார்களா?
(இட ஓதுக்கிட்டு என்பது இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓன்று. இதில் தமிழ்நாட்டுக்கு எந்டஹ் சம்பந்தமும் இல்லை. இந்திய அரசு எஸ்/எஸ்டி பிரிவினக்கு இடஓதுக்கிடு அளிக்கிறது. தமிழ்நாட் அரசு பிசி பிரிவினருக்கும் இடஓதுக்கிடு அளிக்கிறது. நீங்கள் இடஓதுக்கிட்டிற்கு எதிராக் போரட வேண்டுமென்றால் மத்திய அரசிடம் தான் உங்கள் காழ்ப்புணர்ச்சியை காட்டவேண்டும்.மாறாக இந்திய தேசியத்தை தூக்கி பிடிக்கிறீர்கள். தமிழ்நாட்டை தூற்றுகிறீர்கள். உங்களுக்கு எசி.எஸ்டி - இடஓதுக்கிடு சம்மதம் ஆனால் பிசிக்கு கொடுக்க கூஅது. என்ன ஒரு நியாயம்)
குண்டு மழைபொழிந்து பிராமணர்களை கொன்று குவித்தார்களா?
இனப்படுகொலை நடத்தினார்களா? அதை மறக்க தான் செய்தார்காளா?
ஆனால் இவற்றையெல்லாம் அனுபவிக்கும் ஒருத்தனை , கலர் டிவி கொடுக்கத்தால மேலே கூறிவிட்டதை விட மோசமாக இருப்பதாக் கூறியுள்ளார். அவர் மற்றட் தமிழ் மக்களை விட பிராமணர்கள் தாழ்ந்த நிலையில் உள்ளார் என்று கூறினால் அது வாதத்ட்ஜிற்கு தகுந்தது ஆகும். அதை விட்டு ஈழதமிழரோடு ஓப்பீடு செய்து தான் ஒரு மனிதன் என்ற நிலையை இழ்ந்துவிட்டார்.

Anonymous said...

//as per brahmins mythology, the fsther/ancestors sins comes to sons. Now your ancestor done lot of sins in the name of 'jathi'. SO their sons have their sins. thats all. Once you done, now you are having It.
//

hallo anony,

jathi then is even between dalits
pallar and paraiyar

and such kind of partiality also there in christians, there are protestants and catholics

in muslims, sunny and shia

as if you are talking brahmins are only following so called jathi

yours is a foolish and rubbish statement

Erode Nagaraj... said...

1. இங்கே இடஒதுக்கீடு கேட்கும் எவரும் வாழ்க்கையோடு போராடவில்லை; வசதிகளுக்காய் போராடுகிறார்கள். ஈழத்தில், சொந்த மண்ணில், வாழ்வது கூட இல்லை, உயிரோடிருப்பதே பெருங்குற்றம் என எண்ணும் அரசை எதிர்த்து வாழ்க்கைக்காய்ப் போராட்டம் நடக்கிறது. இந்த வித்தியாசம் தெரியாமல் எஸ்.வி.சேகர் சொல்லியது உளறல் & தவறு.

2. ஆரியன் - திராவிடன் என்று அழைப்பது Race Theory-ஐக் கிளப்பி பிரித்தாளும் சூழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே, பிராமணர்கள்தான் ஆரியர்கள் என்று பொருள்படுமாறு கட்சிக்குப் பெயர் வைப்பது பெருந்தவறு. ஆர்ய (ஆர்யா அல்ல) என்றால் மரியாதைக்கு உரியவர் என்று பொருள் அவ்வளவுதான். அதனால் ஆரிய பவன் என்றால் நல்லவர்கள் நடமாடும் இடம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. சீதை, க்ஷத்ரியராகிய இராமரைப் பார்த்து ஆர்ய புத்திரனுக்கு வணக்கம் என்கிறாள்.

சற்று கீழான செயல்களைச் செய்து விட்டால், அனார்யன் ஆகிவிட்டாய் என்பார்கள். happy-unhappy, button-unbutton என்று un சேர்த்தால் எதிர்ச்சொல் என்பது நம் சொத்து தான்.

Erode Nagaraj... said...

3. ஆரிய சமாஜ் என்பது நானறிந்த வரையில் பார்ப்பன அமைப்பு அல்ல.
விவரங்களுக்கு கூகிள் செய்து பார்க்கவும்.

4. தமிழில் அர்ச்சனை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான். எது வேண்டாம் என்றால், தமிழில் அர்ச்சனை என்று சொல்லி இருப்பவற்றை தமிழ்"படுத்த" வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். காரணம், ஓலி தான் முக்கியமே தவிர பொருள் அல்ல. என்னையே, பாம்பரசா என்றுகூப்பிட்டாலோ அல்லது அருட்செலவரே என்று முதலமைச்சரை அழைத்தாலோ, திரும்பிப் பார்க்க மாட்டோம். ஏனெனில், அங்கு சப்தம் தான் கணக்கே தவிர அர்த்தம் அல்ல.

இப்போதைய, அறிஞர்கள் என்று சொல்லப்படுகிற நாத்திக வாத தமிழ் அறிவுடையோர், இந்த அர்ச்சனை முதலிய ஆத்திக விஷயங்களை மொழி மாற்றம் செய்வதற்கு பதில், தேவார - திருவாசகங்கள், திருப்பாவை - திருவெம்பாவை, நாயன்மார்கள் - ஆழ்வார்கள், இராமலிங்க அடிகள் போன்றோர் பக்தியில் திளைத்து அந்த ஆன்ம உணர்வில் வெளிப்படுத்திய பாடல்கள் மற்றும்
சொற்களை அர்ச்சனைக்குப் பயன்படுத்தவேண்டும்.

அந்த தமிழ் சற்று கடுமையாகத்தான் இருக்கும். சமஸ்க்ருதம் போலவே, "பிடியதன் உரு உமை"
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி"
"கீசுகீசென்ற ஆனைச் சாத்தான்" என்றெல்லாம் சொன்னால் புரியாமல் தான் இருக்கும். ஆனால் அவற்றிற்கு நம் குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

அதை விடுத்து, குழந்தைகளுக்கான மானாட மயிலாட என்று ஒரு நிகழ்ச்சி வந்தால், அதில் போய் அரைகுறையாய் ஆட தமிழக மழலையரின் தாய் தந்தையர் துடிக்காமல், வீட்டின் நடுவில் ஒரு பெட்டியிலிருந்து முப்பொழுதும் அடுத்தவர் குடிகெடுக்கும் வார்த்தைகளை, மரண ஓலங்களை காசுக்காய் அள்ளித்தெளிக்கும் அவலத்தை அப்போது தான் ஒழிக்கலாம்.

அப்போதுதான் தமிழில் அர்ச்சனை என்பது முழுமை பெரும். இல்லாவிட்டால் மெட்ராஸ் தமிழில் அர்ச்சனை பண்ணு, எங்களுக்குப் பிரியவில்லை என்பது போலஆரம்பிப்பார்கள்.
"கொயந்தையா இருந்த கோவாலா... ஓன் அக்குரும்பு தாங்கல... இத்த யார் கேக்கறது... நீ கண்டி மெய்யாலுமே தவறால் பண்ற ஏன் மச்சானை அப்பீட் ஆக்கீட்டியானா, ரிஷ்காமெரிச்சுக்கினு ஒன்ன வநது கண்டுக்கறேன்... அக்காங்.. என்று அர்ச்சனை நடக்கலாம்.

ஆனால், ஒரு கதை என்றால், அதில் ஆசிரியர் கூற்றுக்கு உபயோகமாகும் மொழி நடை, பாத்திரப் பேச்சுக்கு உதவாது. அவரவர் வேண்டுதல்கள் அவரவர் பழக்கமான வட்டார வழக்கில் தான் இருக்கும்.
(in fact, i like the chennai slang a lot) ஆனால் அர்ச்சனைக்கு என்று வரும்போது, சகலருக்கும் பொதுவாக நம் தமிழில், செம்மொழி என்று செம்மாந்து கொண்டாடும் வகையில் அருளாளர்களின் தமிழை கைகொள்ள வேண்டும்.

5. உலகம் தட்டை என்று சொல்லிக்கொண்டிருக்கவில்லை நாம். நியூட்டனுக்கு முன்பே, புவியீர்ப்பு விசையை, புவியீர்ப்பு விசை என்றே அறிந்தவர்கள் நாம் தான். அதுவும், வெறும் தத்துவமாகவோ விதியாகவோ அன்றி, மேற்கோளாகவே உபயோகப்படுத்தியிருக்கிறோம். எந்த ஒரு விஷயமும், அறிமுகம் ஆகி வெகு காலம் பழக்கப்பட்ட பின்பு தான் உவமையாக எடுத்தாளப் படுகிறது. ஏனெனில், யாவரும் அறிந்த ஒன்றாக அது மாறியிருந்தால்தான் உவமையால் சொல்ல வந்தது விளங்கும். இல்லாவிட்டால், உவமைக்கே dictionary வேண்டும். [அகராதி - நிகண்டை விட இது தான் எல்லோருக்கும் தெரிந்த சொல்!]

ஆதி சங்கரர் தன்னுடைய ஒரு சுலோகத்தில், பூமி எவ்வாறு மேலே போடப்பட்டவைகளை எல்லாம் தன் "ஆகர்ஷண" சக்தியால் ஈர்ப்பதைப் போல என்று சொல்கிறார். (I shall give the lines when once I recall them)

5. பொதுவாகவே இந்து மதம் என்பது, ஒரு மிகப்பெரிய Departmental Store போல சகல வயதினருக்கும் தேவையான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டது. For kids of the age 3 to 5 என்றிருக்கும் விஷயத்தை 12,25,48-ஆவது வயதிலும் உபயோகப்படுத்தினால், எவருமே சிரிக்கத்தான் செய்வார்கள். ஏன் சிரிக்கிறார்கள் என்று பார்த்து, நம்மை சரிசெய்து கொள்ளவேண்டும், அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும், அதனாலேயே மீண்டும் சொல்லித்தருவதற்கு தவிர முந்தைய நிலைக்குச் செல்லாதிருத்தல் வேண்டும்.

Erode Nagaraj... said...

6. மேலும், மூச்சுப் பயிற்சி சொல்லித்தருகிறேன் என்றால் ஒரு வைராக்கியத்தோடு அதை பழக வேண்டும். அதை விடுத்து, வேறு எளிய பயிற்சி இருக்கிறதா என்று கேட்டு, பின்னர் அதுவும் முடியாமல் வேறு உண்டாஎன்று இப்படியே, எளிமைப் படுத்துவதாகக் கூறிக்கொண்டே கீழே போக ஆரம்பித்தால் அதற்கு முடிவு ஒன்றும் இருக்காது.

7. பிராமணர்கள் நெற்றியிலிருந்து சூத்திரன் காலிலிருந்து என்று சொல்வது ஒரு உருவகம் அவ்வளவுதான். அவன் திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்து ஓதுகிற புத்தியால் ஆனா வேலையைச் செய்தான். சூத்திரன் காலால் ஆன, சமூகத்தைத் தாங்குகிற வேலையைச் செய்தான். இது Division of Labour. அவ்வளவு தான். அதை மீறி, கீழ் ஜாதி என்று யாராவது ஏளனம் செய்ய உபயோகப்படுத்தினால் நாலு தட்டு தட்டி உள்ளே தள்ளுங்கள். நாங்கள் கூட தாளங்களில் திச்ர ஜாதி, மிஸ்ர ஜாதி, சங்கீர்ண ஜாதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். அதற்கு வகை என்றுதான் பொருள், Caste இல்லை.

Erode Nagaraj... said...

8. எனவே, எஸ்.வி.சேகர் மட்டுமல்ல, யாராயிருந்தாலும் சமூகத்திற்கு ஒவ்வாத நடைமுறைக்கு மாற்றான எதையேனும் சொன்னால் அதைக் கண்டிப்பது நம் கடமை. இதை விடுத்து, பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்று இந்த விவாதம் போவது வேலையற்ற வேலை.
ரஜினி (அ) ஒழிக என்று யாராவது கூறினால், கமல்(அ) விஜய் ஒழிக என்று ஏதோ ஒரு மூலையில் குரல் வருவது போல் ஆகிவிடும்.

வலைஞன் said...

தமிழ் நாட்டை பொறுத்தவரை இங்குள்ள பிராமணர் அல்லாதோர் எல்லாம் பிராமண விரோதிகள் என்ற பொய்யான கருத்தை மிக தந்திரமாக மு.க பரப்பியுள்ளார் .இது உண்மையாக இருப்பின் ஜெயா இரண்டு முறை ஆட்சி அமைத்திருக்க முடியாது
ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர் வீணடித்து விட்டார்.அது மு க வின் அதிர்ஷ்டமே!
மற்றபடி சேகர் செய்ய நினைப்பது வடிகட்டின முட்டாள் தனம் .மு க வின் பிராமண துவேஷத்திற்கு ராஜா பாட்டை அமைத்து தரும் செயல்.
ஈரோடு நாகராஜின் தனி ஆவர்த்தனம் EXCELLENT (வழக்கம்போல்)

KGG9840937420 said...

எதிர்ப்பாளர்களை - இரண்டு படுத்தி, மூன்று படுத்தி
இன்னும் பகுதிகள் அதிகமாக்கினால் -
ஆளும் கட்சி அப்படியே தொடர முடியும்.
இதை உணர்ந்து - எதிர்க் கட்சிகள் எல்லாம்
ஒன்று திரண்டால் நல்லது -
எஸ் வெ சேகர் தொடங்கி அனைத்து
முன் ஏற்றக் கழகங்களும்
சிந்தித்துச செயல் படுதல் நலம்.
இல்லையேல் -
தை மாதத் தொடக்கம் தமிழ்ப் புத்தாண்டு ஆனது போல்
கலி யுகம் 'கனியுகம் ஆகலாம் -
தமிழ் மாதங்கள் - அழகிரி என்று தொடங்கி,
இசுடாலின் வரை 12 பெயர்கள் இடப்படும் -
மற்ற 10 மாதங்களும் நிதி என்று முடியும்!

AbuDhabi Sivakumar said...

Summary by Erode Nagaraj is pretty interesting to read and I believe M K knows most of them but dare not to speak them out as such to the 'kazhaga udanpirappugal' who are still waiting in the line to get ministerial berth in the Central / State cabinet!!