பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 08, 2009

ராஜாதி ராஜா சினிமா விமர்சனம்

ராஜாதி ராஜா சினிமா விமர்சனம் பற்றி நிறை விவாதங்கள் நடக்கிறது.

விமர்சனத்தின் ஒரு பகுதி இப்படி போகிறது...

கையால் அடிக்கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்கியதா என்று ஊகிப்பதற்குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது... தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்-னேறி வருகிறது!


முழு விமர்சனம் கீழே...


மினி..!
படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஹாஸ்யம், ரௌத்ரம், காமம், குரோதம் எல்லாம் கலந்து, ரஜினிக்கென்றே மசாலா தூவி வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் ஃபார்முலா படம். சரி... எதிர்காலத்தில் ரஜினிக்கு எப்படித் தீனி போடவேண்டும் என்று டைரக்டர் கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

மாக்ஸி..!
'அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கறேன்'' என்று பல்லைக் கடித்தபடி உறுமுகிறார் பட்டணத்து ரஜினி. அதே மாதிரி, ''எப்படியாவது 50,000 ரூபாயை என் மாமன் மூஞ்சியில கடாசிட்டு லட்சுமி(நதியா)யைக் கட்டிக்கறேன்'' என்று கிளம்புகிறார் பட்டிக்காட்டு ரஜினி. செய்யாத கொலைக்காகப் பட்டணத்து ரஜினிக்கு மரண தண்டனை வழங்கப்பட, அவர் ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி ஓடும்போது, வழியில் இன் னொரு ரஜினியைப் பார்க்கிறார். ''எனக்குப் பதில் பதினைந்து நாள் நீ உள்ளே இரு. நான் நிரபராதினு நிரூபிச்சுட்டு உன்னை விடுதலை பண்றேன். உன் கல்யாணத்துக்குப் பணமும் தர்றேன்'' என்று சொல்ல, பட்டிக்காட்டார் தலையாட்டி விட்டு, 'உள்ளே' போகிறார். தலை யில் கறுப்புத் துணி மாட்டி, கழுத் தில், சுருக்கை இறுக்குகிற பரபரப் பான சமயத்தில், முன்னவர் ஆதா-ரங்களோடு பாய்ந்து வந்து இவரை மீட்கிறார்.

சட்டம் தெரிந்தவர்கள் படத் தைப் பார்த்தால், புழுவாக நெளிந்து போவார்கள். அத்தனை குளறுபடி! ஆனால், அண்ணன்(!) ரஜினி பண் ணுகிற அட்டகாசத்தில் குளறுபடி யெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடு கிறது என்பது வேறு விஷயம்!

இடப்பக்கக் கடை வாயைக் கடித்தபடி வசனம் பேசிக்கொண்டு படம் முழுக்கச் சண்டை போடுகி றார் சூப்பர் ஸ்டார்! கையால் அடிக்- கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்-கியதா என்று ஊகிப்பதற்-குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது... தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்-னேறி வரு-கிறது!

மேக்கப்காரர் வித்தியாசமே காட்டவில்லையென்றாலும், இரண்டு காரெக்டர்களுக்கும் நடிப் பில் செமத்தியான வித்தியாசம் காட்டிவிடுகிறார் ரஜினி.

கோடீஸ்வரர் வேஷம் போட் டாலும், ரிக்ஷாக்காரர் ஜனக ராஜால் மசால் வடை, சைனா டீயை மறக்கமுடியவில்லை. ராதா ரவியிடம் அடிக்கடி உளறி அப்புறம் சமாளிக்கிறார். அநியாயத்துக்கும் வயிற்றில் கத்தி வாங்கிக்கொண்டு, தவளை மாதிரி காலைப் பரப்பிக்-கொண்டு அவர் செத்துப்போவதி-லும் பரிதாபம் இருக்கிறது.

முழுக்க முழுக்க ஹீரோ படம் என்பதால், ராதா, நதியா இரண்டு பேருமே டெபாஸிட் இழக்-கிறார்கள்! சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்து அடித்திருக்-கிறார் இளையராஜா. ஆனால், டியூன்களில் பழைய வாசனை கொஞ்சம் அதிகம்-தான்!
- -விகடன் விமர்சனக் குழுஇந்த படத்தை சுஹாசினியால் ’ஹாசினி பேசும் படம்’ நிகழ்ச்சியில் விமர்சனம் செய்ய முடியுமா ? ஹிஹி!
( நன்றி: விகடன் )

20 Comments:

Anonymous said...

ஹா ஹா ஹா!
இட்லிவடை, உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா?

Anonymous said...

ஒரு சினிமா எப்படி எடுக்க கூடாது என்பதற்கான உதாரணம் இந்த இரண்டு ராஜாதி ராஜாவும்.....
பழைய ராஜாதி ராஜவில் ஒரே ஒரு ஆறுதல் பாடல்கள் மற்றும் பின்னணி இசை....
ஆனால் இதில்(இன்றைய ராஜாதி ராஜவில்) ஒட்டு மொத்த கொடுமைகளும் கூடி கும்மி அடித்து உள்ளன.....

Anonymous said...

மொக்க படங்களையும் தன் பெயரால் ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு (M.G.R க்கு பிறகு) மட்டுமே உண்டு. அந்த வரிசையில் இந்த ராஜாதி ராஜாவும் (பழைய) வெற்றி பெற்றது, மற்ற படி அந்த படத்தை பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை.

சித்து said...

ஏங்க இட்லிவடை இந்த மாதிரி உப்புமா பதிவு போடாம ஒழுங்கா பாடிகாட் முனிக்கு கடிதம், கேள்வி பதில் இந்த மாதிரி ஏதாவது சுவாரசியமா போடலாம்ல??

வேலு said...

இதே போல இன்னொரு பதிவை எதிர் காலத்தில் போட இப்போதே இடம் ஒதுக்கி கொள்ளவும், காரணம் விஜய் ன் 50 ஆவது படத்தின் தலைப்பு உரிமைக்குரல், கண்டிப்பாக இந்த படத்தை சுஹாசினி அம்மனி எவ்வாறு விமர்சனம் செய்கிறார் என்று பார்க்க வேண்டும்.
செய்தி உபயம் : http://www.envazhi.com/?p=8748

R.Gopi said...

//மானஸ்தன் said...
ஹா ஹா ஹா!
இட்லிவடை, உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா?//

********

Maanasthan, NAKKAL nu mudivu panninadhukku appuram koodavaathu, korachchalaavadhu.........

Idlyvadai, adichu dhool kelappunga

Note :

We can soon expect ROBOT review (there is a movie in that title already released in Malayalam)

Kameswara Rao said...

இட்லிவடை,


இந்த விமர்சனம் இத்தோடு .... அனானிமஸ் அவர்களே ரஜினி பற்றி இங்கு வேண்டாம்

இட்லிவடை, பாடிகாட் முனுஸ்வாமி கடிதம் எப்போது...

காமேஷ்

Anonymous said...

IV aai kadumaiya kandikkaren...Thalaivar padathai eppadi vimarsanam seivatharkku...

I still cannot forget the dialogue

"ohhh apdiyanne!!!! neenga endha pakkam pona naan appadi andha pakkam poiduve nna"

Super star at his best in comedy

Anonymous said...

Hello ..please write something on ur own..As ur die hard fans we expect and respect ur originality also.

ரிஷபன் said...

//ஏங்க இட்லிவடை இந்த மாதிரி உப்புமா பதிவு போடாம ஒழுங்கா பாடிகாட் முனிக்கு கடிதம், கேள்வி பதில் இந்த மாதிரி ஏதாவது சுவாரசியமா போடலாம்ல??//

பேசாமல் பாடிகாட் முனிய்யாவுக்கு எழுதுங்க , ரொம்ப நாளாச்சு போலருக்கே.

Inba said...

அய்யா இட்லிவடை,

'எதுவும்' கிடைக்காமல்
காய்ந்து போயிருந்த
உங்களுக்கு

எதோ பொழுதுபோகாமல்
நான் எழுதிய ஒரு
'மொக்கை' பதிவு (ஹாசினி பேசிய படம்)
இன்று
விவாதங்களில் (தமிலிஷ் உட்பட)
'சக்கை' போடு போடுவதற்கு காரணம்
தங்களின் ஆசிர்வாதமே..

இதை எழுதியதற்காக
என்னை தேடி
அண்ணன் மானஸ்தன் போன்றவர்கள்
'ஆட்டோ' வில் வரும்முன்
எதாவது
'பரிசு' தருவதாக இருந்தால்
உடனே அனுப்பிவைக்கவும்.
( என் அபாய நிலையை consider செய்யவும்.
தயவுசெய்து காத்திருப்போர்(!?) பட்டியலில் சேர்க்கவேண்டாம்).

IdlyVadai said...

//எதோ பொழுதுபோகாமல்
நான் எழுதிய ஒரு
'மொக்கை' பதிவு (ஹாசினி பேசிய படம்)
இன்று
விவாதங்களில் (தமிலிஷ் உட்பட)
'சக்கை' போடு போடுவதற்கு காரணம்
தங்களின் ஆசிர்வாதமே./

தமிழ் படம் பற்றி எழுதிய உங்க பதிவு தமிழ் படம் மாதிரி. எதுக்கு ஹிட்டாச்சுனே தெரியவில்லை ஆனால் நல்லா போகுது.

IdlyVadai said...

//பேசாமல் பாடிகாட் முனிய்யாவுக்கு எழுதுங்க , ரொம்ப நாளாச்சு போலருக்கே.//

அடுத்த பதிவு முனி கடிதம் வெயிட் பிளீஸ்

Anonymous said...

இந்த வார கட் அன்டு பேஸ்ட்டு கோட்டா முடிஞ்ச்சிரிச்சி. அடுத்த வாரம் குமுதத்தை காபி அடிங்க.

appaavi said...

so, padam paakka polamnu solreenga.

ennikku, enga release?

shiva said...

dear Inba,

as far i have observated on ur regular posts in idlyvadai,

you have good writing skills..

why dont u write about serious social or political issues rather then such kind of cinema issues???

zahir said...

the post hasini pesiya padam is
realy becomes super hit also one of the most popular post

and it is 1000 times far better than olinthirupathu yaar kind of uppuma posts

Anonymous said...

ஓரு சமயம், சுஹாசினி காரில் போய்க் கொண்டிருந்தார். ஒரு டிராஃபிக் சிக்னலில் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இ்ளைஞர்கள் “என்ன மேடம், இந்திரா படத்தை இப்படி மோசமா எடுத்து இருக்கீங்கோ?” என்று கேட்டார்களாம்.

என்னை இப்படி கேட்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று ஒரு பேட்டியில் கேட்டார். ... ஒரு படத்தை விமரிசிக்க என்ன தகுதி இருக்க வேண்டுமாம்?..காசு கொடுத்து படம் பார்க்கிறவன், FILM APPRECIATION படிப்பில் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமா?...யார் விமரிசித்தார் என்பது முக்கியமில்லை. என்ன விமரிசித்தார் என்பதுதான் முக்கியம். இதை சுகாசினி மற்றும் சிதம்பரமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

R.Gopi said...

//சித்து said...
ஏங்க இட்லிவடை இந்த மாதிரி உப்புமா பதிவு போடாம ஒழுங்கா பாடிகாட் முனிக்கு கடிதம், கேள்வி பதில் இந்த மாதிரி ஏதாவது சுவாரசியமா போடலாம்ல??//

********

Sidhu

Aduthu Idlyvadai ezhudharadhu பாடிகாட் முனிக்கு கடிதம்.....

Anonymous said...

பழைய ராஜாதி ராஜா ரஜினிக்காகவே எடுக்கப்பட்ட படம். அது ரஜினியின் திரை ஆளுமைக்காகவே ஓடிய படமும் கூட!