பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 07, 2009

ஒளிந்திருப்பவர் யார்?

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' இது இந்த படத்தின் பெயர். பெயரைப் போலவே புதிய, மாறுபட்ட கதை. "பத்தாண்டுகளுக்கு முன்னால் கன்யாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்"... வழக்கமாக தமிழ் பட இயக்குனர்கள் பூஜை அன்று சொல்லும் டையலாக் இது நமக்கு படம் வந்த பிறகு தான் தெரியும்.

தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் வசிக்கும் மாவட்டம், குமரி மாவட்டம். ஆனால் அங்குதான் குற்றவாளிகள் அதிகம் என புள்ளிவிபரம் சொல்கிறது. இந்த முரண்பாட்டால் நிகழந்த ஒரு உண்மை சம்பவம் தான் கதை என்கிறார் ( யாரோ சொல்றாங்க இப்ப இதுவா முக்கியம் ? )

‘இந்தப் படத்தில் உண்மையில் இரண்டு கதாநாயகர்கள். ஒன்று கரண். இன்னொன்று கதை! ஓர் உண்மைச் சம்பவத்தை, சாயம் பூசாமல், வீரியம் கெடாமல், அப்பட்டமாக உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கிறோம். படத்தில் 5 பாட்டு உண்டாம், எல்லாம் வைரமுத்துவாம். ஃபைட் மாதிரி ஒரு சீன் உண்டாம் ஆனால் ஃபைட் கிடையாதாம். உண்மை சம்பவத்தில் எப்படி பாட்டு வரும் என்று கேட்ககூடாது.

இந்த உண்மை சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே படபிடிப்பும் நடந்ததால் காட்சிகள் படமாக்கும் விதத்தைபார்த்து அட! இது அவரோடகதையில்ல!! என்று மக்கள் ஆச்சிரியபட்டவிதமே அட அட என்கிறார் இயக்குனர். மற்றவர் கதை இவர் சுடவில்லை என்று நம்புவோம்.

இசை - வித்யாசாகர்- பாடல்கள் வைரமுத்து -வசனம் பா.ராகவன் ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு- எடிட்டர் சுரேஷ்அர்ஸ்-சண்டைப் பயிற்சி கனல்கண்ணன் -நடனம் தினேஷ்-மக்கள்தொடர்பு நிகில்-கதை திரைக்கதை இயக்கம்- வி.சி வடிவுடையான்- தயாரிப்பு


படத்தில் இருக்கும் பெண் பெயர் - டெரினா. மறைந்து கொண்டு இருப்பவர் யார் ? பா.ராகவன் இல்லை, வசனம் எழுதுபவர்களுக்கு பிளாக் எழுதுவதை தவிர இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்காது.


15 Comments:

R.Gopi said...

மறைந்து கொண்டு இருப்பவர் யார் ? பா.ராகவன் இல்லை, வசனம் எழுதுபவர்களுக்கு பிளாக் எழுதுவதை தவிர இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்காது.

--------

"Paaru Online"0ukku வசனம் Ezhudha kooda chance kedaikkaliyaame?

chutneysambhar said...

Pudhu herovaga idli vadai

ஆளவந்தான் said...

கரண்

Guru said...

It should be Karan.. Correcta??

Guru said...

Karan???

Anonymous said...

Paarthiban

Anonymous said...

//பா.ராகவன் இல்லை, வசனம் எழுதுபவர்களுக்கு பிளாக் எழுதுவதை தவிர இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்காது.//

மறைந்திருந்து எழுதுபவர்களுக்கு வசனம் எழுதக் கூட சான்ஸ் கிடைக்காது என்ற வயித்தெரிச்சலா? அது ஏன் பாரா, பத்ரின்னா நோண்டி நொங்கெடுக்கறீங்க? இவ-க்கு பிடிச்ச திசை மேற்குதானா?

Krish said...

No Karan...

Anonymous said...

இட்லி அண்ணாச்சி, என்ன ஆச்சி (ஒங்களுக்கு)?

இந்த மாதிரி மொக்கை போடுவதற்கு பதிலாக "ஊசிப்போன இட்லி/வடை" எடுத்து நல்ல "உசிலி/உப்புமா" கிண்டலாம்.

தயவு செய்து ஏதாவது உருப்படியா மேட்டர் இருந்தா போடுங்க.

Erode Nagaraj... said...

//இந்த மாதிரி மொக்கை போடுவதற்கு பதிலாக "ஊசிப்போன இட்லி/வடை" எடுத்து நல்ல "உசிலி/உப்புமா" கிண்டலாம்.//

ஆஹா இப்பதான் சுஹாசினி-ல உப்புமான்னு எழுதீட்டு வந்தேன், நீங்களும் அதையே சொல்லியிருக்கிறீர்கள்... ஹ்ம்ம்... இன்னிக்கு அயோத்யா மண்டபத்துல கச்சேரி இருக்கு சாயங்காலம்... நான் போயி மிருதங்கத்தை ரெடி பண்ணறேன்... பின்னூட்டம் போடறாமாதிரி ஏதாவது தகவல் இருந்தா பரவாயில்லைநாளைக்காவது...

Anonymous said...

ஹா ஹா!
time stamp பாருங்கோ ஈரோட்டாரே!!
நான் 01.21 pm, நீங்க 01.32 pm. இருந்தாலும் same-time, similar thoughts!!

கச்சேரி முடிச்சுட்டு வந்து updates குடுங்க, "எல்லா பூக்களிலும்" வலைமனையில்.ரொம்ப நாளா அது பக்கமே நீங்க போகலை.

Anonymous said...

pa ragavanodu enna virodham?

Anonymous said...

////பா.ராகவன் இல்லை, வசனம் எழுதுபவர்களுக்கு பிளாக் எழுதுவதை தவிர இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்காது.////

ஓசிக்கு நீங்களே ஆசை படலாமா?.

எழுதும் எழுத்துக்கு கிடைக்கும் பணத்துக்கு இதுக்கு மேலேயே கிடைக்கும். ராகவன் அண்ணாவை தனியாக கேட்டு பாருங்கள்.

உண்மைய சொன்னா உடனடி. லேட்டா சொன்னா ஆட்டோ பயோகிராபி.

Anonymous said...

படத்திலுள்ள பெண்ணிற்கு தொந்தி இருப்பது தெரிகிறது.அதை மறைக்கத்தான் முகத்தை மறைத்துக் கொண்டு ஒருத்தர் பாடுபடுகிறார் :).

Anonymous said...

நாஞ்சில் நாட்டுக் கதைக்கு வசனம் எழுத பாராவா?. இதில் கூட ஜெயமோகன்/நாஞ்சில் நாடன்/நாஞ்சில் சம்பத்/காலச்சுவடு கண்ணன் போன்ற உள்ளூர் காரர்களுக்கு வாய்ப்பு கிடையாதா?.