பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 06, 2009

ஹாசினி பேசிய படம்

கடந்த மே 31 அன்று, ஜெயா டிவியில் ஒளிபரப்பான "ஹாசினி பேசும் படம்" நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி மணிரத்தினம் விமர்சனத்திற்கு எடுத்துகொண்ட படம் ராஜாதி ராஜா. சக்தி சிதம்பரத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான படம்.....


மிகவும் காட்டமாக அதே சமயம் மிகவும் உண்மையான விமர்சனத்தை வெளிக்காட்டினார் சுஹாசினி. " பார்முலா படங்கள் எல்லாம் நல்ல சினிமாவை முழுங்கிவிடுகின்ற டைனோசர்கள்" என்றவர் மேலும்

" 30,40 வருஷ பார்முலாவை லாரன்ஸ் பண்ணும்போது நொந்து போயிடறோம். நாப்பது வருஷத்துக்கு அப்புறம் எதாவது புதுசா யோசிக்க கூடாதா. ஆடியன்ஸ் குற்றுயிர் ஆகிவிடுகிறார்கள். wrong sister centiments, குழந்தைதனமான பஞ்ச் டையலாக்குகள் காதை கிழிக்கின்றன" என்றல்லாம் பொரிந்து தள்ளியவர் "excuss me, லாரன்சுக்கு ஏத்த கேரக்டர் கிடையாது இது.. அது மாதரி லாரன்சும் இந்த கேரக்டருக்கு wrong slection " என்று கூறினார்.

மொத்தத்தில் இந்த படமே ஒரு மிஸ் கால்குலேஷன் என்று முடித்தார். இதே நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் " என்னுடைய படங்களை பாக்க வரவங்களுக்கு லாஜிக் இல்லாத மேஜிக் , ஜாலியான படம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கு" என்று விளக்கமளித்தார்.

அதோடு விடாமல் இப்படி இவர் பேசியதால் தியேட்டரில் வசூல் குறைஞ்சிருக்கு, அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார் சக்தி சிதம்பரம். மேலும் இது குறித்த தனது பேட்டியில் " இவரது கணவர் 2000 வருடங்களுக்கு முந்தைய ராமாயணத்தை "ராவணா" என்ற பெயரில் எடுத்து கொண்டிருக்கிறார். மேலும் சத்தியவான் சாவித்திரி கதையை ரோஜாவாகவும், கர்ணன் கதையை தளபதியாகவும் எடுத்தவர். 20 வருட பழைய ரஜினிகாந்த் கதையை நான் எடுத்ததாக குறை கூறுவதற்கு இந்த பெண்மணி யார்" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சுஹாசினியின் விமர்சனம் ரொம்பவே சரி என்கிறார்கள் காசுகொடுத்து இந்த படத்தை பார்த்த புண்ணியவான்கள். அதே நேரம் சக்தி சிதம்பரம் பேசி இருப்பது நியாயமே, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளிவரும் படத்தை இப்படி எல்லாம் விமர்சிக்க சுஹாசினிக்கு உரிமை இல்லை என்கிறது ஒரு தரப்பு.

பொதுஜன பார்வைக்குவரும் படைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமை உள்ளது. அதே சமயம் நல்ல விமர்சனம் என்பது படைப்பாளியை உற்சாகப்படுத்துகிற, நிறை மற்றும் குறைகளை சுட்டிக்காட்டுகின்ற ஒரு நல்ல நண்பனாக இருக்கவேண்டும்.


விமர்சனங்களை, நேர்மறையான கோணத்தில், ஆரோக்கியமான முறையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம் இந்த சினிமாகாரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏன் வருவதில்லை?.


- இன்பா

44 Comments:

வலைஞன் said...

சக்தி சிதம்பரம் சொல்வது சரியே!இதே சுஹாசினிக்கு அபத்த களஞ்சியங்களான
பாபா,ஆளவந்தான்,சிவாஜி,தசாவதாரம்
படங்களை இந்த முறையில் விமரிசிக்க தைரியம் உண்டா?

Narayanan M said...

ஒரு விமர்சனமாவது தனக்கானது அல்ல தன் படைப்புக்கானது என்று புரிந்து கொள்ள மறுப்பதின் விளைவு தான் இது . . . .ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய கண்ணியம், விமர்சனத்தை ஏற்பது அல்லது அதற்கான எதிர் வாதங்களை முன்வைப்பது. அதே கண்ணியத்தை இழப்பது என்னபது, விமர்சித்தவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது. இங்கு அதையும் தாண்டி விமர்சனம் செய்தவரின் சமந்தப்படவர்களை பற்றி கருத்து வெளிட்டுஇர்ருகிறார்.

ஹரன்பிரசன்னா said...

சுகாசினி ஒரு பேத்தல், சக்தி சிதம்பரம் ஒரு பேத்தல். இதை ஒரு விஷயமாக ஒரு பதிவு போடும் நீங்கள் இன்னொரு பேத்தல்.

Erode Nagaraj... said...

விமர்சனங்களை, நேர்மறையான கோணத்தில், ஆரோக்கியமான முறையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம் இந்த சினிமாகாரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏன் வருவதில்லை?.

அவற்றில் முடக்கப்படும் பணமும் உழைப்பும் தான் காரணம்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

// " பார்முலா படங்கள் எல்லாம் நல்ல சினிமாவை முழுங்கிவிடுகின்ற டைனோசர்கள்"//

தகுதியுடவை தப்பிப் பிழைக்கும் என்பது தெரியாதவரல்ல சுஹாசினி.

டைனோசர்கள அழிந்துவிட்டன எனபதும் தெரியாதவரல்ல

இதைவிட அதிக மதிப்பெண்கள் வாங்கவல்ல ஃபார்முலா படங்களைப் பார்க்காதவரல்ல சுஹாசினி

இருந்தாலும் அவரது உணர்வுகளை மதிப்போம், ரசிப்போம்.

இவரது விமர்சனத்தைக் கேட்டு வசூல் குறைந்ததாக சக்தி சிதம்பரம் கூறுவது அபத்தம். ஒருவேளை இந்த நிகழ்ச்சியின் போது கூட்டம் குறைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கது எனப்து வெளியாகியுள்ள புகைப் படத்திலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

Anonymous said...

//இப்படி எல்லாம் விமர்சிக்க சுஹாசினிக்கு உரிமை இல்லை என்கிறது ஒரு தரப்பு.//

இதெல்லாம் வேண்டாத மருமகள் கைபட்டால் குத்தம் கால்பட்டால் குத்தம் கதைதான். மதன், சுஹாசினி போன்ற விமர்சகர்கள் எல்லாம் சினிமாக்காரர்களுக்கு சாஃப்ட் டார்கெட்ஸ். சாதிப் பெயரைச் சொல்லி திட்டத்தான் முற்போக்குவியாதிகள் ரெடியா இருக்காங்களே.

சுஹாசினி தைரிமாக இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வார் என்றே எதிர்பார்க்கலாம்.

வண்ணத்துபூச்சியார் said...

சுஹாசினி செய்தது தவறுதான். இந்த மாதிரி குப்பைகளை விமர்சிக்கவே வேண்டாம்.

பசங்க படத்தை மிகச்சிறந்த படமாக, அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் "Best Feel Good Movie " என்று சொன்ன சுஹாசினி இந்த படத்திற்கு சரியான விமர்சனமே தந்துள்ளார் என நினைக்கிறேன்.

நடுநிலையோடு எல்லா நல்ல மற்றும் கண்ராவிகளையும் கஷ்டப்பட்டு பார்த்து நமக்காக சிரத்தையோடு விமர்சனம் செய்யும் அருமை நண்பர் கேபிள் சங்கரின் விமர்சனம் இதோ:

http://cablesankar.blogspot.com/2009/05/blog-post_19.html

விமர்சனங்களை புரிந்து கொண்டாவது நல்ல சினிமாக்களை எடுப்பார்கள் என்பதே அனைத்து சினிமா ஆர்வலர்களின் எண்ணம். மாட்டோம். இதை மாதிரி குப்பையை மட்டும் எடுத்து சீரழித்து காசோக்குவோம் என்று சபதம் செய்தால் என்ன செய்ய முடியும்..


வாழ்க தமிழ் சினிமா...

ராஜாதிராஜாவின் அருமையான ஸ்டில்

http://www.tamilmegatube.com/cinema/wp-content/uploads/2008/07/rajathi-raja-stills-1.jpg

கிருஷ்ணா, இந்த பதிவிற்கு இந்த போட்டோவை போடவும்.

milagaipodi said...

padam nalla irukku, nalla illainnu karuthu sollanumnu producers yaarum poi suhasini kitte request pannaangala ? entha urimaiyile ivanga ippadi pesuraanga ?

podhu jana padaippu thaan.. athai podhu janame paarthu padam eppadinnu therinijikkatum... unga kitte yaarum advice kekkala...

antha alavu poruppu irunthaa govt eppadinnu vimarsikka vendiyathu thaane.. podhu makkalukku innum ubayogama irukkum....

maturity pathiyellam pesuravanga ithule paisa nashta pada porathilla... unga kaasunnu varum pothu theriyum... appraisal- varush varusham unga manager sollurathai neenga eppadi eduthukkureengannrathai yosichu paarthaale maturity pathi pesa thaguthi irukkanu therinjikkalam...

Anonymous said...

1) இவங்க பூவும் பொட்டும் புடவையுமா வந்தாக்கத் தான்,
அழகோ அழகுங்க.

2) வலைஞன் சொல்லுறதும் சரிதாங்க.

Anonymous said...

இதனை படைப்பாளி விமர்சனத்தை எடுத்துக்கொள்ளும் விதம் என விமரிசிப்பதைவிட வணிக முயற்சியை பாழ்செய்து தனது வணிகத்தை வளர்த்த விதம் எனக் கருத்துக் கூறுவதே சரி.இந்த விமரிசனத்தை படம் டப்பாவில் போனபிறகு செய்திருந்தால் யார் என்ன சொல்லப் போகிறார்கள் ?

டகிள் பாட்சா said...

இதெல்லாமே ஒரு செட் அப். ஜனங்களின் கவனத்தை கவர இவர்கள் செய்யும் நாடகம். இதெயெல்லாம் விவாதிப்பதே waste. போய் ஆவுற வேலயப்பாருங்க.

sundaikai said...

படம் (பணம்) பண்ணுபவர்கள் கொஞ்சம் சொந்த சரக்கை உபயோகித்தால் நன்றாக இருக்கும். விமர்சனம் செய்பவர்கள் குறைகளை முன்னேற்றுவதற்கான நோக்கோடு சுட்டி காட்ட வேண்டும். இரண்டு தரப்பும் அவர்கள் எல்லையை தாண்டி விட்டார்கள். படம் விமர்சிப்பவர் சொன்னது போல் இல்லை என்றல் தியட்டேரில் மக்கள் அலைய வேண்டியுமே தவிர இயக்குனர் வசூலுக்காக அலைய கூடாது.

சினிமாவில் நிஜ வாழ்க்கையின் சாயல் இருந்தால் தான் மக்களால் ஏற்று கொள்ள படும், மாயஜாலம் மட்டும் வசூலை வாரி குவிக்காது. திரு. சக்தி சிதம்பரம் சற்று சிந்தித்து நல்ல படங்களை வரும் வருடங்களில் தருவார் என்றுநம்புவோம்.

Anonymous said...

"இந்த விமரிசனத்தை படம் டப்பாவில் போனபிறகு செய்திருந்தால் யார் என்ன சொல்லப் போகிறார்கள் ?"

THats fair. Fans will eventually reject. may be Suhasini should have been little considerate and not taken it for review. saying not worth it..

Suhasini has one more problem. She has conflict of interest in doing her current job.
She did a crap called Indira,Mani had given many copy cats and same old masalas.(I agree Mani had also given good ones.)

WE can't expect her to give a fair review for "Ravanan".lets see, how she does that.

பாபா,ஆளவந்தான்,சிவாஜி,தசாவதாரம் . Itha eppadi suhasini review pannuvanganu theriyala.

R.Gopi said...

The same Suhasini has acted in RAJATHI RAJA kind of movies in Telugu with Chiranjeevi and other heroes.

When she acted those roles for money, why she should comment and insult others now, after retiring?

RamKumar said...

ஒரு சினிமா எடுப்பதில் என்னற்ற கலைஞர்களின் உழைப்பும் , மிக அதிக பணமும் முதலீடு செய்யப்படுகிறது , அப்படியிருக்கையில் சுகாசினியின் விமர்சனங்கள் அந்த திரைப்படத்திற்கு கெட்ட பெயரை வாங்கி தருவது என்றால் அது நல்லதல்ல. அவருக்கு ஃபார்முலா படங்கள் வருவதில் ஆதங்கம் இருக்கலாம், ஆனால் இந்த ஆதங்கத்தை அவர் திரைப்படம் வெளியான 100 நாட்களுக்கு பிறகு வேறு ஏதெனும் நிகழ்ச்சியில் குறிப்பிடலாம், படம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே விமர்சிப்பது அதன் வருவாயை பாதிக்கும். ஒரு சிறிய மசாலா படத்தின் விமர்சனத்தில் இதனை சொல்லும் சுகாசினி விஜயின் பெரிய பட்ஜெட் மசாலா படங்களான குருவி, ஆதி , வில்லு மற்றும் சங்கரின் அந்நியன், சிவாஜி போன்றவற்றை விமர்சனம் செய்யும் பொழுதும் சொல்லுவார்களா.

chutneysambhar said...

சுகாசினி ஒரு பேத்தல், சக்தி சிதம்பரம் ஒரு பேத்தல். இதை ஒரு விஷயமாக ஒரு பதிவு போடும் நீங்கள் இன்னொரு பேத்தல்//

Totally agree with you.....

தமிழ் said...

//சுகாசினி ஒரு பேத்தல், சக்தி சிதம்பரம் ஒரு பேத்தல். இதை ஒரு விஷயமாக ஒரு பதிவு போடும் நீங்கள் இன்னொரு பேத்தல்//

//Totally agree with you.....//

இருவரும் மிகச்சரியே. இட்லிவடை அவர்களே, இது அரசியல், சமூக வலைப்பதிவா அல்லது சினிமா வலைப்பதிவா?? சரி, எல்லாமும் போடுவேன் என்றால் ஏன் கமல் நடத்திய திரைக்கதை பயிலகம் பற்றி ஒருவார்த்தையும் இல்லை

இட்லிவடை டூ பேட்

சந்திரமௌளீஸ்வரன் said...

சுஹாசினி தன்னை அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பம் ஹாசினி பேசும் படம்

அந்த நிகழ்ச்சிக்கு ஹாசினி படம் காட்டுகிறார் என வைக்கலாம்

யோசிப்பவர் said...

சினிமா சம்பந்தமான தமிழ் நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு உருப்படியான நிகழ்ச்சி, இந்த ஹாசினி பேசும் படம்தான். சிலர் படம் வந்தபின் 100 நாட்கள் கழித்து விமர்சிக்கட்டும் என்கின்றனர். இந்த நிகழ்ச்சியே சினிமா விமர்சனம் நிகழ்ச்சிதான். அப்படியிருக்கும் பொழுது 100 நாட்கள் கழித்து ஆறிப் போன சரக்கை விமர்சியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

சுஹாசினி இப்படி விமர்சித்ததால் படத்தின் வசூல் பாதித்துவிட்டது என்கின்றனர். ஆனால் இதே சுஹாசினி இதே படத்தை ஆஹா என்று சொல்லியிருந்தால் அதை போஸ்டரில் போட்டு இவர்கள் வசூலை அதிகரிக்க வியாபாரமாக்கி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் ஒன்று கவனித்திருக்கக் கூடும். படம் வெகுஜன ரசனைக்கு உகந்ததாயாயிருந்தாலும் கூட, சுஹாசின வெகுஜன ரசனைக்கான விமர்சனமாய் கொடுக்காமல், ஒரு படைப்புக்கான விமர்சனம் என்ற ரீதியிலியே கருத்துக்களை அளிக்கிறார். இதில் தவறேதும் இல்லை.

ஷக்தி சிதம்பத்தின் கேள்விகள், அவரது படத்தைப் போலவே - தரமே இல்லை!!!:-(

Hariharan # 03985177737685368452 said...

ஓ சுஹாசினியை வைத்து இப்படி இந்த படத்திற்கு இந்த மாதிரி ஒரு விளம்பரயுக்தியா? சக்தி சிதம்பரம் எப்டீல்லாம் யோசிக்கிறாரு!

அது இதே அய்யங்கார் பாமிலி மாடல் சுகுணா சிக்கனுக்கு விளம்பரம் செய்தபோது சுகுணா சிக்கன் வியாபாரம் எகிறியதா?

Anonymous said...

////ஹரன்பிரசன்னா said...
சுகாசினி ஒரு பேத்தல், சக்தி சிதம்பரம் ஒரு பேத்தல். இதை ஒரு விஷயமாக ஒரு பதிவு போடும் நீங்கள் இன்னொரு பேத்தல்.////


பலே,பலே!
ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர், திரு ஹரன்.

Erode Nagaraj... said...

டியர் மானஸ்...

நல்லதா ஒரு மேட்டர் கெடைச்சா இதெல்லாம் ஏன் போடறாரு... வேகற வரைக்கும், இட்லி உப்புமா தான்..

sankarfilms said...

sakathi cidamaramum nalla director alla.
suhasiniyum nalla vimarsagar alla.

Anonymous said...

Whoever gives us a break from this formula masala aka Vijayish movies should be given support for the very survival of Kollywood.

Madhan, Jagan, Rambala(Lollu Sabha), Yugi Sethu and Suhasini all should be effectively used in this mission.

manju said...

If a movie is good, it will be appreciated by public, no matter what the review is.

I don't understand the logic of reviewing the movie after 100 days, when the reviews of movies usually come out on the day of the movie's release, sometimes even a day before after the preview.

Though, I agree, Suhasini is not a good critic, I have watched many of her reviews, and she tries to show off her technological skills, which doesn't help any common movie goer. Saying that, it doesn't give any rights for the movie producers/directors to blame the critic for the movie getting flopped. The creators have to accept both the appreciations/criticizations in equal measure for their product.

Instead if he compares his movies with Maniratnam's movies, what to say. There is a difference between making the same non-logical masalas over and over again, and taking an inspiration out of our own mythological epics and presenting it that suits present times. If Sakthi Chidambaram has the talent to do that, then let him show it through his next movie, let his movie speak out instead of him speaking out.

Ramesh said...

Naattaamai intha Shakthi chidamparatha cinema va vittu thalli vaikka midiyaathaa?

வேத்தியன் said...

வலைஞன் said...
சக்தி சிதம்பரம் சொல்வது சரியே!இதே சுஹாசினிக்கு அபத்த களஞ்சியங்களான
பாபா,ஆளவந்தான்,சிவாஜி,தசாவதாரம்
படங்களை இந்த முறையில் விமரிசிக்க தைரியம் உண்டா?//

ஐயா...
ஆளவந்தான், மற்றும் தசவதாரம் போன்ற சினமாக்களை விளங்கிக்கொள்ள கூர்மையான அறிவு வேண்டும்..
விளங்காமல் அவை அபத்தமான படங்கள் என்று சொல்லக்கூடாது...
என்னைப் பொறுத்தவரை கமல் ஒரு புதுமையான நடிகர்.
அவரது படங்களை விளங்க, கொஞ்சம் கஷ்டம் தான்...
:-)

zahir said...

due to this post idlyvadai is in the top position for most popular post of the day..

http://www.tamilish.com/published/today/category/CinemaNews

பிரியமுடன் பிரபு said...

22

பிரியமுடன் பிரபு said...

ஐயா...
ஆளவந்தான், மற்றும் தசவதாரம் போன்ற சினமாக்களை விளங்கிக்கொள்ள கூர்மையான அறிவு வேண்டும்..
விளங்காமல் அவை அபத்தமான படங்கள் என்று சொல்லக்கூடாது...
என்னைப் பொறுத்தவரை கமல் ஒரு புதுமையான நடிகர்.
அவரது படங்களை விளங்க, கொஞ்சம் கஷ்டம் தான்...
:-)

Kameswara Rao said...

இட்லி வடை,

சுதசினியின் "ராஜாதிராஜ" விமர்சனம் சரியானதாகவே இருக்கலாம் (நான் படம் பார்க்கவில்லை). ஆனால் திருமதி சுச்சினி மணிரத்னத்னம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் விதம் (இந்த படம் இவருக்கு சரியானது இல்லை, இதை எல்லாம் போய் ஒரு படம்னு பர்கர்த்து தப்பு) இது அவர்களின் வம்சவழில் வந்தது, உலகில் தாம் தான் அறிவாளி மற்றவரெல்லாம் அடி முட்டாள்.. எனும் எண்ணம் இவர்தம் நடித்த படங்கள் ஒருமுறை நினைவு கூர்தால் நன்றாக இருக்கும் அதுவும் ஜிகினா உடையில் ஆந்திர தேசத்தில் அம்மணி " ஆடிய ஆட்டம் என்ன" , "பேசிய வார்த்தை என்ன"

காமேஷ்

R.Gopi said...

//R.Gopi said...
The same Suhasini has acted in RAJATHI RAJA kind of movies in Telugu with Chiranjeevi and other heroes.

When she acted those roles for money, why she should comment and insult others now, after retiring?

**********

Kameswara Rao said...

உலகில் தாம் தான் அறிவாளி மற்றவரெல்லாம் அடி முட்டாள்.. எனும் எண்ணம் இவர்தம் நடித்த படங்கள் ஒருமுறை நினைவு கூர்தால் நன்றாக இருக்கும் அதுவும் ஜிகினா உடையில் ஆந்திர தேசத்தில் அம்மணி " ஆடிய ஆட்டம் என்ன" , "பேசிய வார்த்தை என்ன"

காமேஷ்//

********************

My feeling your feeling same feeling Mr.Kamesh........

Anonymous said...

தான் பழைய படங்களில் ஆடிய ஜிகிணா உடையில் தான் இந்த நிகழ்ச்சிக்கும் வந்துள்ளார்..... இந்த அரை வேட்காடை பற்றியெல்லாம் தயவு செய்து இனிமேல் போட வேண்டாம் இட்லி வடை,.....
கமலை தயவு செய்து இந்த பகுதியில் இழுக்க வேண்டாம்.....

////ஹரன்பிரசன்னா சைட்...
சுகாசினி ஒரு பேத்தல், சக்தி சிதம்பரம் ஒரு பேத்தல். இதை ஒரு விஷயமாக ஒரு பதிவு போடும் நீங்கள் இன்னொரு பேத்தல்.//// அருமை!!! அருமை!!! இதில் இன்னொரு பேத்தலும் உள்ளது அது நாம் தான், இந்த வீணா போன பதிவிற்கு பின்னூட்டம் எழுதுவது....

Rajesh said...

forget this issue. apart from FEW, everybody in cinema and politics take things personally. its sad

Anonymous said...

generally tamil tv industry thinks they are super talented and commenting the movies, if they guts go and direct the movie and tell the world, this is how the real movie....

by the way, who is she, whats her achivements..., does she has guts to comment about valued stars.

she is just making a show, pretends to be genius, how ridiculous this is.

Kameswara Rao said...

ஐயா அனாநிமௌஸ்

யார் இங்கு கமலை இழுத்தார்கள், யாருக்கும் இல்லாத ஒரு எனதை விதைக்கர்தீர்கள்
காமேஷ்

Anonymous said...

காமேஷ் அவர்களே
//** "வலைஞன் சைட்...
சக்தி சிதம்பரம் சொல்வது சரியே!இதே சுஹாசினிக்கு அபத்த களஞ்சியங்களான
பாபா,ஆளவந்தான்,சிவாஜி,தசாவதாரம்
படங்களை இந்த முறையில் விமரிசிக்க தைரியம் உண்டா?**//

இதற்கு பெயர் என்னவாம்? ஆளவந்தான், தசாவதாரம் படங்களை ரசிக்க தெரியவில்லை என்று வேண்டுமானால் கூறலாம், ஆனால் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்ய தகுதி யாருக்கும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கோபம் கொள்ள வேண்டாம் காமேஷ்!!!!!

shiva said...

after this 'case'

can we expect any nutral,true flim reviews??

Anonymous said...

கமலுக்கும், சுகாசினிக்கும்
தான் மட்டுமே அறிவுஜீவிகள்,
மற்ற எல்லாரும் முட்டாள்கள் என்று நினைப்பு

எத்தனை தடவை மக்கள்
கமல் படங்களை தூக்கி எறிந்தாலும்
அவர் திருந்துவதாக இல்லை

Guru said...

hi annony,
kamalai patri pesa yaarukkum arukathai illai....avarai criticise seyyum alavukku arukathai iruppavan avarai intha mathiri solla maatten, pambariyum pambinathu kaal!!!!!

khaleel said...

i was also a fan of kamal once. however the way he has been making movies once is nothing but terrible.
Aalavandhan should rank with rajadhi rajaa (new or old) and movies like thullal.
infact after avvai shanmughi all of his movies are crap(save virumandi, thenali and anbe sivam)

i wud seriously suggest him to direct movies with new faces instead of doing make up and showing his fleshy / old face again and again.

ராகவன் பாண்டியன் said...

சுகாசினி ஒரு பேத்தல், சக்தி சிதம்பரம் ஒரு பேத்தல். இதை ஒரு விஷயமாக ஒரு பதிவு போடும் நீங்கள் இன்னொரு பேத்தல்.
//
Really Superb....

zahir said...

this post initiates wide discussion
on flim reviews...

velumani1 said...

22.08.2010.அன்று ( அதாவது நேற்று), மேற்குறிப்பிட்ட படத்தை தொலைக்காட்சியில் காண நேரிட்டது. படம் படு குப்பைதான். ஒரிஜினல் 'ராஜாதி ராஜா' வே குப்பைதான். அந்தப் பெயரை எடுத்துக் கொண்ட இதும் சூப்பர் குப்பைதான். எள்ளளவும் சந்தேகம் இல்லை. சுஹாசினி விமரிசிக்கிரார் என்பதற்காக எல்லாமே குப்பைத்தனமா விமரிசனங்கள் என விட்டு விட முடுயாது. பாபாவும், தசாவதாரமும் அபத்தங்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

கிறுக்குத்தனமாக ராவணன் படம் நூற்றாண்டுகளுக்கு முந்தையது, நான் எடுக்கும் இப்படம் 20 ஆண்டுகளுக்கு முந்தையது என ஷ்கதி( சக்க்க்தி அல்ல....சகதி)சிதம்பரம் சொல்வதும் ஏற்கக் கூடியதும் இல்லை.

சிதம்பரத்தின் எப்படம் உருப்படியான படம். இவர் மணிரத்னம் படங்களஒடு தன்னை ஒப்பிடுவது எவ்வகையில் சரி?

ஒன்றை நன்ராகப் புரிந்து கொள்லவும் வேண்டும்; விமரிசனம் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு. தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லையே படம் எடுக்கக் கூடாது.

ஊருக்குப் போய் பெட்டிக் கடை வைத்து ஜவ்வு மிட்டாய் வைத்தாலும் கூட யாராவது விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்.

உங்களிடம் உண்டா அந்தத் துடிப்பும் துணிவும்?