பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 04, 2009

தற்கொலை இல்லை கொலை !


அன்புள்ள இவ,

நேற்று நடந்த இந்த சம்பவம் இன்று காலை எந்த மீடியாவிலும் வரவில்லை. முடிந்தால் இட்லிவடை மீடியாவில் இதை பிரசுரிக்கவும்.
நன்றி,
க்ருபா


எங்கள் வீட்டில் என் பாட்டியை காலைமுதல் சாயங்காலம் வரை பார்த்துக்கொள்பவர் லோகாம்பாள். நடுத்தரவயதிற்கும் கம்மியான வயது. தினமும் கண்ணகிநகரிலிருந்து சைதாப்பேட்டைக்கு வருகிறார். இவருடைய மகள் ராஜேஸ்வரி. பத்தாவது தேர்வு இப்பொழுதுதான் எழுதி முடித்து 390 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். ராஜேஸ்வரி நிறைய விளையாட்டு போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறாள்.

கிட்டத்திட்ட டிமென்ஷியா நிலையில் இருக்கும் என் பாட்டி படுத்தும் பாடு சொல்லி மாளாது. என் பாட்டிக்கு நினைவு அடிக்கடி தப்பித்தப்பி வரும். வரும் நேரத்திலும் தன்னிலை தெரியாது. என்ன பேசுகிறோம் என்று சரிவரப் புரியாது. லோகாம்பாளுக்கு என் பாட்டியைச் சமாளிக்க தன் புன்முறுவள் மட்டுமே துணை. என் பாட்டியை இதுவரை லோகாம்பாள் ஒருமுறை கூட கடிந்து பேசி நான் பார்த்ததில்லை.

அம்மாவிற்கு மிகவும் பிடித்த பெண் ராஜேஸ்வரி. எப்படியாவது நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போய் அம்மாவை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்றவேண்டும் என்று கனவு காண்பவள். ராஜேஸ்வரிக்கு செல்ஃபோன் கிடையாது. சாயங்காலம் தோழிகளுடன் சுற்ற ஸ்கூட்டி பெப் கிடையாது. அம்மா தினமும் வீட்டுக்கு வருவதற்கு இரவாகிவிடும். ராஜேஸ்வரியேதான் குழம்பு முதற்கொண்டு எல்லாவற்றையும் வைத்து அம்மாவை வரவேற்பாள். லோகாம்பாளுக்கு வீட்டிற்குள் படியேறும்போதே மகளைப் பார்க்கப்போகிறோம் என்ற பூரிப்புதான்.

ராஜேஸ்வரி பத்தாவது தேறிய தன்னுடைய மகிழ்ச்சியை அக்கம்பக்கத்தவருக்கு கொஞ்ச நாட்கள் முன்பு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினாள். மேற்படிப்புக்கு தான் படிக்கும் சாந்தோம் பள்ளியிலேயே சேர்ந்தாள்.

துரதிர்ஷ்டவசமாக, 80% வாங்கியிருந்தும் பள்ளி நிர்வாகம் ராஜேஸ்வரிக்கு வணிகவியல் க்ரூப் தரவில்லை. சரித்திரம், பூகோளம் என்று உள்ளடங்கிய வொகேஷனல் க்ரூப்தான் கிடைத்தது. ராஜேஸ்வரி ஒரு நாள் முழுதும் தலைமையாசிரியரின் அறைமுன்னே நின்று காலில் ( நிஜமாகவே) விழுந்து அழுதிருக்கிறாள். கத்திக்கதறியிருக்கிறாள். தலைமையாசிரியர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார், “உன்னோட மார்க்குக்கு வேற க்ரூப்பெல்லாம் தரமுடியாது.”

ராஜேஸ்வரியின் அப்பாவும் வந்து கேட்டுப்பார்த்தார். எதுவும் கதைக்கே ஆகவில்லை.

நேற்று இரவு காஞ்சிபுரத்துப் பள்ளியொன்றில் ராஜி விரும்பும் க்ரூபிலேயே சேர்ப்பதாக அம்மா/அப்பா சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.

விடிந்ததும் அம்மாவை வேலைக்கு அனுப்பிய ராஜி கொஞ்சம் போற மோர்சாதம் மட்டும் சாப்பிட்டிருக்கிறாள். பக்கத்துவீட்டுப் பாட்டியிடம், "ஆயா, வேலைக்கு இன்னும் போலையா" என்று எல்லாம் கூட கேட்டிருக்கிறாள்.

சாயங்காலம் ஒரு தகவல் வந்தது, ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டு உடல் ராயப்பேட்டை ஜி.ஹெச்சில் இருப்பதாக. "ஃபெயிலாப்போய் அழுது செத்துப்போயிருந்தேன்னாக்கூட நான் மனசத் தேத்திப்பேம்மா, நல்ல மார்க் எடுத்தும் இப்படி போயிட்டியே" என்று கதறும் லோகாம்பாளுக்கு என்ன சமாதனம் சொல்வது என்று தெரியவில்லை.

எந்த மெகாசீரியல் புண்ணியத்தாலோ, துப்பட்டாவை வைத்தே கழுத்தை இறுக்கித் தொங்கியிருக்கிறாள். லோகாம்பாள் காலையில் கொடுத்த 1100 ரூபாய் ("ஃபீஸ் இந்த ஸ்கூல்லயே கட்டிடு. இல்லாட்டி TC வாங்கிடு, நாம வேற ஸ்கூல்ல சேர்ந்துக்கலாம்") மாலையில் மாலை வாங்கவும் குளிர்ப்பதனப் பெட்டி வாங்கவும்தான் பயன்பட்டது.

பெரியவர்களின் தற்கொலையை முட்டாள்தனம், கோழைத்தனம் என்று சுலபமாக ஒதுக்கித்தள்ளிவிடலாம். இந்தக்குழந்தையின் தற்கொலை? ராஜேஸ்வரி நிச்சயம் கோழை இல்லை. தன் அம்மாவிற்கு எவ்வளவோ தைரியம் சொல்லி இருப்பவள். எத்தனையோ நாள் ஆறுதலாகப் பேசி இருப்பவள்.

எங்களுடையதுதான் சிறந்த பள்ளிக்கூடம் என்று சொல்லிக்கொள்ளும் பள்ளிகள், எப்படிப்பட்ட மாணவர்களை வழங்குகின்றன? ரேஸ் குதிரைகளைத்தான் என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் வேறு பள்ளியில் கிடைக்கும் என்றாவது சொல்லி இருக்கலாம். சொல்லி இருப்பார்கள், "இங்க எல்லாம் கிடைக்காது, வேணும்னா கார்ப்பரேஷன் ஸ்கூல்ல கேட்டுப்பாரு" என்று.

பத்தாம் வகுப்பில் வேறு பள்ளியில் படித்திருந்தால் ராஜேஸ்வரி இன்று உயிருடன் இருந்திருப்பாளோ என்னவோ. இன்று காலை சில நாளிதழ்களில் தேடிப்பார்த்தேன். எதிலும் இதுபற்றிய செய்தி இல்லை. இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் வெளியில் கொண்டுவருவதால் மீடியாவிற்கும் எந்தலாபமும் இல்லை. அல்லது கொண்டுவராததால் ஏதேனும் லாபம் கிடைத்திருக்கலாம்.


பள்ளிப்பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி தேவையா தேவையில்லையா, மரபுசார் கல்வி தேவையா தேவையில்லையா என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் கல்வி என்றால் என்ன என்பதை எப்பொழுது சொல்லித்தரப்போகிறோம்?


27 Comments:

கலைக்கோவன் said...

கல்வி என்ற பெயரில் நடக்கும்
வியாபாரங்களுக்கு..,
ஒரு இந்தியன் தேவை.

நெஞ்சு பொறுக்குதில்லையே.....

Ravi said...

IV, really sad. Though I don't approve of the girl's decision, it definitely does highlight the issue with schools. I did post something on similar lines sometime back. Pls do check with you get a chance. Thanks!
http://kondattam.blogspot.com/2007/10/showy-schools.html

SPIDEY said...

HEARTBREAKING :-(((

Velu said...

முதலில் பள்ளியை குறை கூறுவதை நாம் நிறுத்த வேண்டும், திருடுபவன் திருடிக்கொண்டுதான்இருப்பான் பணம் பிடுங்குபவன் பிடுங்கிக் கொண்டு தான் இருப்பான் அவர்களை திருத்துவது நம் வேலை கிடையாது ,விரக்தியில் நாம் எவ்வாறு தைரியமாக இருக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும், இந்த பள்ளியில் படிக்கா விட்டால் என்ன, இதை விட சிறந்த பள்ளி இது என்று அவர்களே மனத்தை மாற்றிக் கொள்ளும்படி (நம்மை போன்றவர்கள் இப்படி தான் வாழ வேண்டும், வேறு வழி!!!!) அவர்களை சிறு வயதிலிருந்து வளர்த்த வேண்டும் (அவர்களுக்கு கண்டிப்பாக எதையும் கேட்டவுடன் வாங்கி தரக் கூடாது, ஏனெனில் நான் அப்படித்தான் வளர்த்தப்பட்டேன், எனக்கு இந்த மாதிரி மனப்பான்மை நிறைய உண்டு). எனது கல்லூரியில் ஒரு மாணவன் DVD Drive வாங்கி தரவில்லை என்று இறந்து விட்டான் (இது போல நான் இருந்திருந்தால் நான் ஒரு ஆயிரம் முறையாவது இறந்திருக்க வேண்டும்) என்ன செய்ய? ஒருவன் வாத்தியார் கையொப்பம் போட வில்லை என இறந்து விட்டான், கண்டிப்பாக பிரச்சினை வாத்தியாரிடம் இல்லை பெற்றோர்களிடம் தான். ரொம்ப மேலோட்டமாக (மனிதர்கள் என்று பாராமல் ஒரு உயிரினமாக) பார்த்தால் Survival of Fittest!!!!!

tamilan said...

கொழும்பு, ஜூன் 4- இலங்கையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளனர் என்றும் அவர்கள் படும் துன்பங்களை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்று இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் என். சில்வா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெகோம்பா மாவட்டத்தில் உள்ள மாரவிலா என்னுமிடத்தில் நீதிமன்றக் கட்டிட வளாகத்தை திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அவர் கூறியதாக வெளியாகியுள்ள கருத்துக்கள்:

செட்டிகுளம் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட்டேன். அவர்கள் மீது இலங்கை அரசு எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இலங்கையின் சட்டத்தின் கீழ் அவர்கள் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது. இதை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதை கூறுவதற்காக இலங்கை அரசு என்னை தண்டித்தாலும் பரவாயில்லை.

நிவாரண முகாம்களில் தங்களியுள்ள வன்னி மக்களின் துயரங்களை நான் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெரும்பான்மை சிறுபான்மை என்று பாகுபாடு இல்லை என்றும் இலங்கை மக்கள் ஒரே இனம் என்றும் நாம் இனியும் கூறிக்கொண்டிருந்தால் அது முழுப் பொய்யாகவே இருக்கும்.

செட்டிகுளம் பகுதியில் உள்ள மக்களுக்கு என்னால் ஆறுதல் கூட கூறமுடியவில்லை. அவர்கள் வசித்துவரும் நிலை பற்றி என்னால் விவரிக்க முடியவில்லை.

நாம் பெருமளவில் கட்டிடங்களை கட்டிக்கொள்கிறோம். ஆனால், உள்நாட்டு அகதிகள் டென்ட்களில் வாழ்கின்றனர். அந்த குறுகிய டென்ட்களின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்களால் நிமிர்ந்து நிற்க முடியும்.

அந்த மக்கள் இயற்கை உபாதைகளுக்காக 50 முதல் 100 பேர் வரை வரிசையில் நிற்கின்றனர். இதுதான் செட்டிகுளம் பகுதியில் தங்கியுள்ள வன்னி மக்களின் நிலை.

அந்த மக்களுடன் பேசும்போது புன்னகையுடன் பேச முயன்றேன். ஆனால் முடியவில்லை. அவர்களைப் பற்றிய எனது கவலைகளை அவர்களிடம் வெளிபடுத்த முடியாமல் போய்விட்டது. அவர்களின் துயரங்களுக்காக நாங்களும் வருத்தப்படுகிறோம் என்பதை கூற முடியவில்லை. அவர்களுக்கு புதிய உடைகளை வாங்கித் தருவேன் என்பதைக் கூட தெரிவிக்க முடியவில்லை.

உள்நாட்டு அகதிகளாக வாழும் அந்த மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். இதை செய்யத் தவறினால் நாம் குற்றம் சாட்டப்படுவோம்.

இந்த நாட்டின் சட்டம் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களின் இடம்பெயர்வும் துயரங்களும் நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இதை நான் பகிரங்கமாக கூறுகிறேன். இதற்கான நான் தண்டிக்கப்படலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

இவ்வாறு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரபரப்பாக பேசியுள்ளார்.

chutneysambhar said...

Very sad

Would like to remind the student community that studying in famous schools is not the only solution for anyone's problems.

99% of the people who r in good positions are not from the top schools or colleges.

Leave Dr Kalam, the girl should have thought where Dr Mayilswamy Annadhurai, the chandrayan hero did his schooling before commiting suicide...........

Anonymous said...

Read slowly....

கட்டாயக் கல்வியை ஒரு மாணவனுக்குள் திணிக்கும்போது அவனது மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகக் கூடுமா?

“வித்யாவிகாஸ்” பள்ளியைப் பொறுத்தவரையில் ஒரு மாணவனை அடித்தோ, துன்புறுத்தியோ படிக்கச் சொல்வதில்லை. பெற்றோர்களின் கவனிப்பு போன்றுதான் நாங்களும் மாணவர் களைப் பார்த்துக் கொள்கிறோம்.

அமைதியான, தெளிவான மனநிலையைப் பெறமாணவர்களுக்காக வேதாத்ரி மகரிஷி அவர்களின் அகத்தாய நிலை, காயகல்ப பயிற்சி ஆழியாரில் பிரம்மஞானப் பயிற்சி என்ப தெல்லாம் கொடுக்கப் பெற்றபின்புதான் தேர்வை மாணவர்கள் எழுதுகிறார்கள். இப்பயிற்சியின் மூலம் நல்ல ரிசல்ட் மாணவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றோம். சராசரி மாணவன் கூட சாதனை மாணவனாக உயர்ந்தான். அதனால் தியானம், யோகா, உடற்பயிற்சி என்பதெல்லாம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்த(2008) எங்கள் பள்ளி மாணவி தாரணி மற்றும் இரண்டாவது இடம் பிடித்த தளபதி குமார் விக்ரம் இவர்களிடம் வெற்றி குறித்து கேட்டபோது அவர்கள், எங்கள் பள்ளியில் “எங்களுக்கு கிடைத்த பிரம்மஞானப் பயிற்சியும் ஒரு காரணம் என்று சொல்லி யிருந்தார்கள்”. அதனால் எந்த விதத்திலும் பாதிப்பின்றி நல்ல மாணவர்களை உருவாக்க அத்தனை முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்.

Achya Rangarajan student who got First mark in CBSE Results(2009),she too learned Exercise and Meditation from வாழ்க வளமுடன்(SKY).

Yethiraja Sampath Kumar said...

மிகவும் வருத்தமளிக்கக் கூடிய செய்தி.

இன்றைய தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சென்னை பதிப்பில் முதற்பக்கத்திலேயே " Girl hangs herself after failing to get course of choice" என்று தலைப்பிட்டு இச்செய்தி வெளியாகியுள்ளது என்பதனை இட்லிவடையின் கவனத்திற்கும், இதனைப் இங்கு பதிப்பிக்கக் கேட்டுக் கொண்டவரின் கவனத்திற்கும் கொண்டு வர விரும்புகிறேன்.

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

அரசு பள்ளிகளில் 390க்கு கீழாககூட கணிதம்,அறிவிய்ல் பிரிவுகளே கொடுப்பார்கள். ஆனால் யாரு போய் சேருகிறார்கள்...
அங்க படிசசா , காலம் முழ்க்க வருத்தப்பட வேண்டியது தான்...ஒரு டிகிரி வாங்குவதற்கு அரசு பள்ளிகள் போதும்.

Guru said...

உண்மை. அந்த பெற்றோரை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கண்ணீர் பெருகிகறது. (இது கண்கள் பனித்தது இதயம் இனிது வகை அல்ல)

யாரை குறை சொல்ல ? காசையே அல்லது பள்ளியின் பெயரையே காப்பாற்ற நினைக்கும் பள்ளிகளையா? இல்லை மார்க் இயந்திரங்களை உருவாக்கும் இந்த கல்வி முறையைய ? இல்லை சம சீர் கல்வி முறை என்று சொல்லி ஏமாற்றும் கல்வி துறையையா? இல்லை தன் பிள்ளையை எப்படியாவது இந்த பள்ளியில் இந்த குரூப்பில் சேர்க்க எவ்வளவு வேண்டுமானாலும் அழுக (பணம்) , எதை வேண்டுமானாலும் செய்ய தயாராய் இருக்கும் பெற்றோரகளையா? இல்லை இதையெல்லாம் கண்டும் காணாதது போல் இருக்கும் அரசாங்கத்தையா ? இல்லை நடிகைகளின் காதல்,கிசுகிசு,அரசியல் காமெடிகள்,வட இந்தியர்கள் மட்டும் தான் இந்தியர் என்று நினைத்து காசாக்கும் மீடியாயவைய ?

நம் ஆசிரிய பெருமக்களில் பலர் வெறும் மார்க் எடுக்க வைக்கும் இயந்திரங்களாய் மாறி விட்டனர். வாழ்கை கல்வி என்று இருந்த ஒன்றையே எடுத்து விட்டு.. மார்க் கல்வி ஒன்றே புகட்டுகின்றனர்.

ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரியாது என்று விஜய் டிவியில் டான்செர் கோபாலின் சகோதரி சொன்னது தான் என் நினைவுக்கு வருகிறது .

உண்மையில் நாம் அப்படி தான் ஆகி விட்டோமா? நமக்கு இன்னும் உயிரின் மதிப்பு நினைவிருக்கிறதா??

வெட்கமாய் இருக்கிறது. நம் அருகில் உள்ள உயிர்களையே காப்பாற்ற முடியாத நாம் எங்கு இலங்கை தமிழரை காப்பாற்ற போகிறோம்?

இதை மாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா ? எல்லோருக்கும் ஒரே சீரான கல்வி ஒரே கட்டணத்தில் உருவாக்க முடியாதா?
இந்த விஷயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இட்லிவடையின் முயற்சிக்கு பாராட்டுகள் ! நிச்சயம் பதிவர்கள் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இனிமேலாவது இது போன்ற உயிரிழப்புகள் நிகழாமல் இருக்க ...

Shankar said...

This came today in Indian Express I think. The school is St. Raphael's Hr. Sec. School at kutchery road, Chennai.

Very sad demise. I know a little bit about the school. I know a person who works as a teacher there and I have been acquainted with the general attitude of the school for quite some time now. That's precisely why I am surprised, since this school is a bit better when it comes to such decisions (though I have been hearing about it getting stricter and less personal about such decisions due to increasing competition from other so-called good schools). There are other schools in this vicinity which are much more cut-throat (I studied in one such school and I have tons of personal incidents to cite).

It goes to show how much the child valued the education :( I certainly feel that it was immature but what more maturity can we expect from a kid of that age? But the role of media is again big here: the concept of suicide and graphic descriptions of it are so rampant in the media :(

Baski said...

குழந்தை தொழிலாளர் கொடுமை., முதலில் இது போன்ற முதலாளிகளை தான் தண்டிக்க வேண்டும்.

ஒரு வேளை, படிப்பில் முழு கவனம் செலுத்தி இருந்தால் கமேர்ஸ் என்ன, சயின்ஸ் குரூப் கூட கிடைத்திருக்கும் என நினைக்கிறன்.

மதிபென்களின் அடிப்படையில் வரலாறு வழங்கிய பள்ளி நிர்வாகத்தை குறை சொல்வது மடத்தனம்.
ஒருவேளை, இவர்கள் இருபது லகரம் கேட்டுருந்தால் தான் தப்பு.

கதிர் said...

I read this news here...
http://thatstamil.oneindia.in/news/2009/06/04/tn-school-student-commits-suicide-in-chennai.html

Anonymous said...

I knew about that school well and their attitude was always bad. Now they killed a poor child whose only crime is wanted to learn, If God is there let him punish this cruel authorities of school, only a mom like me will understand the pain the child's mom going through.

charmlee said...

எத்தனை ந்யூஸ்பேப்பர்களில் வந்து இருந்தால் என்ன? ராஜேஸ்வரியின் உயிர் திரும்பியா வரப்போகிற்து?

இந்த போட்டி போடும் பள்ளிகளின் தவறுகள் என்றுதான் சரி செய்யப்படுமோ?

Heam said...

மிகவும் வருத்தமளிக்கக் கூடிய செய்தி.மனது கனக்கிறது.

Anonymous said...

At the outset,my condolonces to the bereaved...
This is typical of our emotional reaction. More accentuated by personal knowledge. Perhaps, if Kiruba had read about an unknown girl, he might not have reacted the way he did.

I would not blame the school but the society for this malaise. We, as a society, are insensitive to individual's feelings as well as have the courage to face the realities.Whenever I had to be denied a ticket,whether bus or cinema or train reservation, it was done rudely..as if I had trespassed somebody's territory. It is due to our secretive nature and lack of openness. We are afraid to say NO politely,lest we will be questioned. Sameway, we get stumped when we receive a negative response. I know people who would not raise any genuine grievance for fear of getting rejected.

தோமா said...

மிகவும் வருத்தமளிக்கக் கூடிய செய்தி.மனது கனக்கிறது.இப்பொது பள்ளிகளும் கோர்போரடே கம்பெனி போல நடந்துகொள்வது நாளைய சமுதாயத்தை எங்கு கொண்டுபோய்விடுமொன்னு பயமாக இருக்கிறது

Anonymous said...

Very sad. We must blame ourselves for still following a stupid educational system and obsession with marks.

Even with 17 years of experience in IT, I find it difficult to get a good job back in India simply because of my Degree and marks. I prefer to stay back in the US.

If this is the situation, I'm not surprised about the fear felt by these aspiring students.

This is simply a case of society pushing the girl to suicide.

-Ram

Narayanan M said...

வருந்தத்தக்க ஒரு செய்தி. இதற்கு சரியான திடமான திர்வு என்றால், இங்கு முன்பே ஒரு தோழர் சொன்னது போல "கல்வி என்றால் என்ன, அதன் வெளிபாடு என்ன" என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிய செய்ய வேண்டும். இது போன்ற கேள்வியே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் இதுபோன்ற செயல்களிடம் இருந்து மீண்டு வர செய்யும்.நன்றி.

RamKumar said...

வருந்தத்தக்க விஷயம், இதை பற்றி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். தற்கொலைகள் வேறு அதிகமாகி வருகின்றன. நமது கல்விமுறை வெறும் அறிவியல், கணக்கு, மாதிரி பாடங்களை சொல்லி கொடுக்கின்றவனவே அன்றி எதையும் தாங்கும் இதயத்தை ஆழ்ந்து சிந்திக்கும் அறிவை நல்ல ஒழுக்கத்தை சொல்லிகொடுப்பதில்லை

Kameswara Rao said...

இட்லி வடை

பள்ளி நிர்வாகத்தை சொல்லி குற்றமில்லை, அந்த மனைவியின் மனநிலை தான் இந்த முடிவுக்கு ஒரு காரணம், சமூகத்தின் மேல் கோபங்கொண்டு என்செய்ய, 10, 12 தேர்வு முடிவுகள் வந்தால் இது போன்ற செய்திகள் துரட்ருஷ்டவசமாக நாம் காண நேரிடுகிறது

மாற்றம் தேவை... கல்வி தரத்தில் தான் இருக்கிறது, கற்றுத்தரும் பள்ளி அமைப்புகளில் இல்லை என்று

ராஜியின் பெற்றோற்றுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

காமேஷ்

Kaliraj said...

பெற்றோர்கள், பிள்ளைகளை சிறு சிறு தோல்விகளை ஏற்றுக்கொள்ள பழக்கப்படுத்தவேண்டும். தற்போதைய சமுதாயம் அப்படி இல்லை. பிள்ளைக்கு பேர் வைப்பதில் தொடங்கி மிகச்சிறந்ததே அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உன் மேற்படிப்பு நீ தற்போது எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலே அமையும் என்ற ஆரம்ப தத்துவத்தை விதைக்கவேண்டும். கடனை வாங்கியாவது / சொத்தை வித்தாவது நீ கேட்ட கோர்சில் சேர்க்கிறேன் என்றால், அவனும் படிக்கமாட்டான்.
பின்னர் பெற்றோரையும் புரிஞ்சுக்கமாட்டான்.

ரிஷபன் said...

//Kaliraj said...
உன் மேற்படிப்பு நீ தற்போது எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலே அமையும் என்ற ஆரம்ப தத்துவத்தை விதைக்கவேண்டும். கடனை வாங்கியாவது / சொத்தை வித்தாவது நீ கேட்ட கோர்சில் சேர்க்கிறேன் என்றால், அவனும் படிக்கமாட்டான்.
பின்னர் பெற்றோரையும் புரிஞ்சுக்கமாட்டான்.//

நூற்றுக்கு நூறு வாஸ்தவமான பேச்சு.

பெண்ணை இழந்தவர்களுக்கு அதைத் தான்கும் சக்தியையாவது கடவுள் கொடுக்கட்டும்.

வாழ்வே தகர்ந்த இந்த சூழலில் இருந்து மீளட்டும்.

ஓகை said...

//Baski said...
குழந்தை தொழிலாளர் கொடுமை., முதலில் இது போன்ற முதலாளிகளை தான் தண்டிக்க வேண்டும்.//

இதில் எங்கே குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை வருகிறது?

//ஒரு வேளை, படிப்பில் முழு கவனம் செலுத்தி இருந்தால் கமேர்ஸ் என்ன, சயின்ஸ் குரூப் கூட கிடைத்திருக்கும் என நினைக்கிறன்.//

390 மதிப்பெண்கள் என்பது வணிகவியல் படிப்பிற்கு குறைந்த மதிப்பெண்கள் இல்லை என்பதறிக!

//மதிபென்களின் அடிப்படையில் வரலாறு வழங்கிய பள்ளி நிர்வாகத்தை குறை சொல்வது மடத்தனம்.
ஒருவேளை, இவர்கள் இருபது லகரம் கேட்டுருந்தால் தான் தப்பு.//

பள்ளி நிர்வாகத்தைக் குறை சொல்வது மடத்தனம் என்று சொல்வது மடத்தனத்தின் உச்சம். இதைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு அதே பள்ளியில் வணிகவியலில் இடம் கொடுக்கப்பட்டிருப்பதே அந்தப் பெண் மனம் உடைந்து போனதற்குக் காரணம் என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வந்திருக்கிறது.

மெய்ப்பொருள் காண்பதறிவு.

நடராஜன்

வலைஞன் said...

அந்த பெற்றோர்களுக்கு என் நெஞ்சார்ந்த அனுதாபங்கள்
ஒன்று நிச்சயம் .அந்த குழந்தையின் துக்கம் நம்மை சும்மா விடாது
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி:

CHENNAI: A Class X student, Rajeshwari (15), hanged herself at home on Wednesday, reportedly after a school rejected her application for the Accountancy group.

Rajeshwari (15), a resident of Kannagi Nagar and a student of St. Raphael Girls Higher Secondary School, Santhome, had cleared Class X with a score of 390. On Tuesday, when she had gone to the school to submit her application for the accountancy group in Plus I, the school authorities rejected it stating that her marks were too low and she could opt only for the History group.

“My daughter was waiting in the school from 10 am till 4 pm, and met all the teachers, seeking their help. When she returned home yesterday, she was crying all the time and went to bed without food,” said Rajeshwari’s mother Logambal.

Logambal said: “What affected my daughter most was that an affluent student who had scored two marks less than her was given the Accountancy group.”

“She wanted to become a police inspector,” said her brother Prakash (13) who dropped out of school when the family moved from Santhome after the tsunami to Kannagi Nagar. Rajeshwari continued her studies by staying in the school hostel.

Vijayan, Rajeshwari’s neighbour, said, “When they dumped us from different slums in the city to this godforsaken place, nobody thought that getting the children to go to school would be difficult.”

Rajeshwari had fought on despite the heavy odds. However, she could not take the unkind cut, said another neighbour.

R.Gopi said...

மாற்றம் தேவை... கல்வி தரத்தில் தான் இருக்கிறது, கற்றுத்தரும் பள்ளி அமைப்புகளில் இல்லை என்று

ராஜியின் பெற்றோற்றுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

காமேஷ்
----------

Well said Kamesh.