
காதல்,காதல், காதல் போயின் சாதல் என்றார் பாரதி. காதலிக்காதவர்கள் எல்லாம் இந்த உலகத்தை ஒரு கண்ணால் மட்டும் பார்த்தவர்கள் என்றார் வைரமுத்து. வைரமும், முத்துவும் சேர்ந்து காதல் காந்தமாய் கவர்கின்றன 'மாஸ்கோவின் காவேரி' படத்தில் வைரமுத்துவின் பாடல வரிகள்.
வைரமுத்துவின் கவிதைகளுக்கு பின்னணி இசைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் தமன் ('பாய்ஸ்'ஸில் ஒருவராக நடித்தவர்).
மேற்கு ரஷ்யாவில் பாயும், பனி படர்ந்த மாஸ்கோ நதிக்கும், குடகு மலை காவேரிக்கும் என்ன தொடர்பு? அமைதியான மாஸ்கோ நதி போன்ற குணமும், ஆரவாரமான காவிரியின் குணமும் கொண்ட காதலர்கள் ஒன்று சேரும் கதை என்கிறார் தனது முதல் படத்தை இயககும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
வேட்டையாடு விளையாடு இவரது ஒளி வண்ணதிர்கொர் உதாரணம்.
அழகான முரண்பாடு உள்ள காதலர்கள். அதிகாலை பூக்கள் மீது விளையாடும் மழைத்துளிகளை விரும்பும் நாயகி. மே மாத அக்னி வெய்யிலில், கடற்கரையில் விளையாடும் அலைகளை விரும்பும் நாயகன். அவளுக்கு ஜெயகாந்தன் கதைகளில் விருப்பம். இவனுக்கு வைரமுத்து கவிதைகளில் விருப்பம். வர்தனி தமன், சங்கர் மகாதேவன் பாடி இருக்கும் "அதிகாலை பூக்கள் மேலே " என்ற பாடல் படத்தின் ஒட்டுமொத்த கதையை உள்ளடக்கிய கவிதை.
காதலின் முரண்பாடுகள் போலி என்ற கான்செப்டில் "ஆணும், பெண்ணும் இல்லை என்றால்" மாலதி மற்றும் பிரியா பாடிஇருக்கும் பாடல.
காதலுக்கு கண்ணில்லை என்பது காதல் தேசத்து பழமொழி.
நீ ஒன்றும் அழகி இல்லை
ஆனால் எனக்கு
உன்னைப்போல்
இன்னொருத்தி அழகில்லை.
என தொடங்கும் பாடலை நவினும், ராகுல் நம்பியாரும் பாடிஇருக்கிறார்கள்.
கண்ணதாசனுக்கு தத்துவம் என்றால் வைரமுத்துவுக்கு கிராமியம்.
தான் மரணமடிந்தால், சொந்த கிராமத்தில் கல்லறை கட்டடா என மகனுக்கு கவிதை எழுதி வைத்திருக்கும் வைரமுத்து, பிறப்பும் இறப்பும் கிராமத்தில் நடக்க வேண்டும் என்ற ஆசையை "கிராமம் தேடி வாடா மச்சான்" பாடலின் மூலம் சொல்லி, மாட்டுமணி சத்தம் கேட்கவும், நல்ல காத்து வாங்குவதற்கும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுகிறார். பாடலை பாடிஇருப்போர் திப்பு, ரஞ்சித், ரிட்டா.
வெரைட்டியான இசையும் தரமுடியும் என தமன் உணர்த்தும் பாடல்.
கார்த்திக், சுசித்ரா பாடிஇருக்கும் கோரே பாடல மற்றும் சுசித்ரா,நரேஷ் அய்யர் பாடிவுள்ள தேன் முத்தம் போன்ற பாடல்கள் காலர் டோன்களுக்கான டூயட். கார் ஸ்பீகர்களுக்கான இசை கலெக்க்ஷன்.
விற்கிற விலைவாசியில், காதல் பரிசாக இனி பூக்களுக்கு பதிலாக "மாஸ்கோவின் காவேரி" போன்ற படங்களின் ஆடியோ சிடிக்களை தரலாம்.
- இன்பா
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, June 02, 2009
மாஸ்கோவின் காவேரி - இன்பா
Posted by IdlyVadai at 6/02/2009 10:53:00 AM
Labels: இன்பா, சினிமா, விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)











19 Comments:
Really good songs...i liked it too...
எனக்கு புரியவில்லை நீங்கள் பாடல்களை நன்றாக உள்ளது என்று சொல்கிரீர்களா? அல்லது கிண்டல் பண்ணுரீங்களா? எனக்கு பாடல்கள் பிடிக்கவே இல்லை, ஏதோ Fruti Loop. Sound Edit போன்ற Synthesiser ல் சப்தங்களை Simulate செய்து இருக்கார், இன்று அனைத்து Music Director களும் (Vidhyasakar, Yuvan, A.R.Rahman உட்பட!!! ஆனால் A.R.Rahman ஆரம்பத்தில் சுதி மற்றும் தாளங்களுக்கு மரியாதை கொடுத்தார் இப்போது காற்றில் பறக்க விட்டு விட்டார், அவரது பாடல்களில் இப்போது Bass என்று சொல்லப்படும் Lower Frequncies (நமது கேட்கும் திறன் 20 Hz in lower bound)ன் volume அதிகமாக உள்ளது, மக்களும் இந்த மாதிரி சப்தங்களை ரொம்பவும் விரும்புகிறார்கள், என்ன செய்ய?)
//** விற்கிற விலைவாசியில், காதல் பரிசாக இனி பூக்களுக்கு பதிலாக "மாஸ்கோவின் காவேரி" போன்ற படங்களின் ஆடியோ சிடிக்களை தரலாம்.**//
எனக்கு புரியவில்லை நீங்கள் பாடல்களை நன்றாக உள்ளது என்று சொல்கிரீர்களா? அல்லது கிண்டல் பண்ணுரீங்களா? எனக்கு பாடல்கள் பிடிக்கவே இல்லை, ஏதோ Fruti Loop. Sound Edit போன்ற Synthesiser ல் சப்தங்களை Simulate செய்து இருக்கார், இன்று அனைத்து Music Director களும் (Vidhyasakar, Yuvan, A.R.Rahman உட்பட!!! ஆனால் A.R.Rahman ஆரம்பத்தில் சுதி மற்றும் தாளங்களுக்கு மரியாதை கொடுத்தார் இப்போது காற்றில் பறக்க விட்டு விட்டார், அவரது பாடல்களில் இப்போது Bass என்று சொல்லப்படும் Lower Frequncies (நமது கேட்கும் திறன் 20 Hz in lower bound)ன் volume அதிகமாக உள்ளது, மக்களும் இந்த மாதிரி சப்தங்களை ரொம்பவும் விரும்புகிறார்கள், என்ன செய்ய?)
நான் படித்துக் கொண்டிருப்பது இட்லி வடையா இல்லை வேறு எதுவுமா?
இட்லி வடைக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம்? மஞ்சள்
கமென்ட்டும் இல்லை. யாராவது இட்லி வடையை கிட்நாப் பண்ணிட்டு இந்த மாதிரி பதிவை எல்லாம் போட்றாங்களா?
இதுக்கு போய் என்ன கமெண்ட் போடறது..ஆனா ஒண்ணு..இன்னும் பரிசு வரலே..தெரிஞ்சுக்கங்க
//**வெரைட்டியான இசையும் தரமுடியும் என தமன் உணர்த்தும் பாடல்.
கண்ணதாசனுக்கு தத்துவம் என்றால் வைரமுத்துவுக்கு கிராமியம்.
தேன் முத்தம் போன்ற பாடல்கள் காலர் டோன்களுக்கான டூயட். கார் ஸ்பீகர்களுக்கான இசை கலெக்க்ஷன்.
படத்தின் ஒட்டுமொத்த கதையை உள்ளடக்கிய கவிதை.
வைரமும், முத்துவும் சேர்ந்து காதல் காந்தமாய் கவர்கின்றன 'மாஸ்கோவின் காவேரி' படத்தில் வைரமுத்துவின் பாடல வரிகள்.
**//
என்ன கொடுமை சார் இது? என்னையும் இந்த பாடல்களை கேட்க வச்சிட்டீங்களே!!! என்னால முடியல......... இனிமே நீங்க நல்லா இருக்குது என்று சொன்னா நான் கொஞ்சம் யோசிக்க வேண்டி வரும்.......
ஆழ்ந்த அனுதாபங்கள் இனி கேட்க இருக்கும் மக்களுக்கு.
what is this.....?
என்ன இட்லி நீங்க சொல்ற கருத்து எவ்ளோ ரீச் ஆகுதுன்னு பார்க்க இந்த விமர்சன பதிவா?
மாமியார் உடைச்சா மன்கொடம் மருமக உடைச்சா பொன்கொடம்!
Realy too good songs
and good review also...
ரொம்ப நாளைக்கு அப்புறம்
நல்ல தமிழை கேட்க முடிகிறது
பாடல்களில்
sweet music...
lovable lyrices..
/காதல் பரிசாக இனி பூக்களுக்கு பதிலாக "மாஸ்கோவின் காவேரி" போன்ற படங்களின் ஆடியோ சிடிக்களை தரலாம்./
I do agree
sweet music...
lovable lyrices..
/காதல் பரிசாக இனி பூக்களுக்கு பதிலாக "மாஸ்கோவின் காவேரி" போன்ற படங்களின் ஆடியோ சிடிக்களை தரலாம்./
I do agree
songs already rocking everywhere...
// எனக்கு பாடல்கள் பிடிக்கவே இல்லை, ஏதோ Fruti Loop. Sound Edit போன்ற Synthesiser ல் சப்தங்களை Simulate செய்து இருக்கார், //
உண்மை அனானி .. இன்று அணைத்து இசை அமைபாளர்களும் Synthesiser மற்றும் loops மட்டுமே கொண்டு இசை அமைகின்றனர் .. நல்ல இசை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு...
இன்று பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு வாழ்த்துக்கள்
நானும் ஒரு கடை திறந்திருக்கேன் .. வந்து பார்த்து வாழ்த்தவும் ..
http://isayinmadiyil.blogspot.com/
பாட்டு கேட்டுவிட்டு திட்டுறேன்.
The Music Director (??) is Idlyvadai's relation boy?? so this is an advertisment ??
Really you started a very good work Heam.....
Please continue your good work......
உண்மையில் இரைச்சல் கூட ஒரு இசை தான், அபஸ்வரங்கள் கூட கேட்க இனிக்கும் நேர்த்தியான முறையில் அடுக்கப்பட்டால், சப்தங்களின் தோரணம் தான் இசை என்பது தவறு, அதையும் தாண்டிய ஒரு உணர்வு உள்ளது, அதை அவ்வளவு எளிதாக உணர முடியாது, கண்டிப்பாக அது ஏட்டுக் கல்வி அறிவால் வரவே வராதது.....
Post a Comment