பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 02, 2009

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் - தப்பாய் எரிந்த லைட் ?

பா.ம.க
ஓட்டுப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யலாம்!''-ராமதாஸ் செய்முறை விளக்கம்!!
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் எப்படி மோசடி செய்யலாம் என்பது பற்றி 'செயல்முறை விளக்கம்' அளித்தார். இதற்காக பாமகவே தயாரித்த எலக்ட்ரானிக் இயந்திரம் ஒன்றில் திமுகவின் உதயசூரியன், பாமகவின் மாம்பழம் உள்ளிட்ட சின்னங்கள் இருந்தன.

அந்த இயந்திரத்தில் நிருபர் ஒருவரை அழைத்து மாம்பழம் சின்னத்தில் 20 ஓட்டுகளை போடும்படி கூறினர். அதன்படி 20 ஓட்டுகள் போடப்பட்டன. யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் விழுந்தன என்று எண்ணும்போது, உதயசூரியன் சின்னத்துக்கு 8 ஓட்டுகளும், மாம்பழம் சின்னத்துக்கு 12 ஓட்டுகளும் விழுந்ததாக இயந்திரம் காட்டியது.

இதைக் காட்டி ஒரு ஓட்டுகூட போடப்படாத உதயசூரியன் சின்னத்துக்கு எப்படி 8 ஓட்டுகள் வந்தன என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் உள்ள புரோகிராமை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல்விழும் ஓட்டுகள் எல்லாம் உதயசூரியன் சின்னத்துக்கு விழும்படி இயந்திரத்தில் புரோகிராமை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட சின்னத்துக்கு போடும் ஓட்டுகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்துக்கு வரும்படியும் மாற்றலாம்.

ஓட்டு பதிவு செய்வதற்காக பட்டனை அழுத்தும் போது அங்கிருக்கும் அதிகாரிகள், குறிப்பிட்ட வயரை பிடுங்கிவிட்டு விடவும் வசதியுள்ளது. இதனால் சத்தம் மட்டுமே கேட்கும். ஆனால் ஓட்டு பதிவு ஆகாது என்று தானே உருவாக்கிய எந்திரத்தைக் காட்டி மனம்போன போக்கில் பேசினார் ராமதாஸ்.

அதிமுக
மின்னணு வாக்குப்பதிவிற்கு பதிலாக, வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தவேண்டும்
ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக
இன்றைக்கு இயந்திரத்திலே கோளாறு என்று சொல்கிறவர்களைக் கேட்கிறேன் சென்ற முறை நடைபெற்ற தேர்தலிலே இதே இயந்திரத்தை வைத்துத் தானே தேர்தல் நடைபெற்று, இவர்கள் போட்டியிட்டார்கள். அப்போது வெற்றி பெற்றார்களே, அப்போது கோளாறு இல்லை, இப்போது மட்டும் கோளாறா? அவர்கள் வெற்றி பெற்றால் நல்ல இயந்திரம், தோற்றால் இயந்திரத்திலே கோளாறா?

"எங்கள் சின்னத்திற்கு வாக்கினைப் பதிவு செய்தால், அது உதய சூரியன் சின்னத்திலே விழுகிறது'' - என்ன அற்புதமான கற்பனை இது? அப்படியென்றால், விழுந்ததில், 9 இடத்தில் உங்களுக்கு சார்பாக விழுந்ததே, மொத்தம் 28 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே, அந்த 12 இடங்களில் மாத்திரம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்கள் சின்னத்தில் பதிவு செய்தால், உங்கள் சின்னத்திற்கே விழுந்திருக்கிறதா? மற்ற 28 இடங்களில் உங்கள் சின்னத்திற்கு வாக்கு பதிவு செய்தால், எங்கள் சின்னத்திற்கு விழுந்து விட்டதா? இதையெல்லாம் சிந்தித்து பார்க்கவேண்டும்.

தேமுதிக
தமிழக சட்டசபைக்கு நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தேமுதிக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக சில பெரியவர்கள் என்ன சொல்லுகிறார்கள் ?

பிச்சைப்பாத்திரம், சுரேஷ் கண்ணன்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்று பா.ம.கவும் அதிகமுவும் புலம்பியிருக்கிறது. பழைய படி வாக்குச் சீட்டில் முத்திரை குத்தி ஓட்டளிக்கும் முறையையே திரும்பவும் அமைக்கச் சொல்லுகிறது. தே.தி.மு.க., ஒருபடி மேலேயே போய் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கும் போட்டிருக்கிறது. நல்ல வேளையாக இன்னும் பின்னால் போய்... யாருக்கு யானை மாலை அணிவிக்கிறதோ அவரே முதலமைச்சர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து ஏற்கெனவே ஜெயலலிதா புலம்பிய போது அந்த இயந்திரத்தை உருவாக்கிய குழுவில் இருந்த எழுத்தாளர் சுஜாதா நடைமுறையில் அது சாத்தியமேயில்லை என்று தெளிவாகவே எழுதியிருந்தார். இருந்தாலும் இந்த அரசியல்வாதிகள் ....


நரேஷ் குப்தா பேட்டி ( குமுதம் 3-6-09)
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவைச் சந்தித்தோம். "தேர்தல் ஆரம்பிக்குறதுக்குப் கொஞ்சம் நேரம் முன்னாடி வோட்டிங் மெஷினின் சரியான செயல்பாட்டை எல்லா கட்சிகாரர்களுக்கும் காட்டுறதுக்காக ஒரு சின்ன சாம்பிள் தேர்தல் ( Mock Poll ) நடத்துவோம். மெஷினின் ஆபரேஷனில் எல்லோரும் திருப்தி ஆன பிறகுதான் தேர்தலைத் தோடங்குவோம். ஒரு சின்னத்துக்கு பட்டனை அழுத்துனா இன்னொரு சின்னத்தில் லைட் எரிஞ்ச சம்பவம் எல்லாம் அந்த சாம்பிள் தேர்தலில் நடந்ததுதான் அதை உடனே சரி செஞ்சாச்சு ஒரு வேட்பாளர் சர்ச்சைக்குரிய முறையில் ஜெயிச்சதாகச் சொல்லப் படுற புகாரைப் பொறுத்தவரை. அந்தத் தொகுதிக்குப் பொறுப்பு வகிச்ச "ரிட்டர்னிங் அஃபீசர்" எனக்கு தர்ற தகவலைத்தான் நான் சொல்ல முடியும்" என்ற நரேஷ் குப்தாவின் பேச்சில் எக்கச்சக்க கோபம்


இது என்ன மாயம்?( துக்ளக் 21-5-09)
எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரத்தில், கள்ள ஓட்டுப் பதிவு
நடந்திருக்கிறது என்ற புகார் இருக்கிறது; இது ஒதுக்கி விடக் கூடியது அல்ல என்கிற எண்ணத்தை, விருதுநகர் விவகாரம் ஏற்படுத்துகிறது.

விருதுநகரில் (வைகோ தொகுதி) பதிவான வாக்குகளை விட, வாக்கு
எண்ணிக்கையின்போது 23,000 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருக்கின்றன. இது எப்படி நடக்கும்? பல பூத்களில் இயந்திரங்களில், கை சின்ன பட்டன், யாராலோ, பலமுறை அழுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாகி, வைகோவின் தோல்வி அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாருமே இவ்வாறு இயந்திரத்தில் புகுந்து விளையாடவில்லை என்றால், பதிவான வாக்குகள், எண்ணிக்கையின் போது
கூடிய மாயம் எவ்வாறு நடந்தது?

ஆக, இயந்திரங்கள் வந்தும், அதை இயக்குபவர்கள் மனிதர்கள் என்பதால், கோளாறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. "இப்படி பல தொகுதிகளில் நடந்திருக்கலாம். அங்கெல்லாம் அளவு பார்த்து கள்ள ஓட்டுப் பதிவு நடந்ததால், விவகாரம் வெளியே வரவில்லை; வைகோ தொகுதியில் கண்மூடித்தனமாகக் கள்ள ஓட்டுப் பதிவு நடந்ததால், விஷயம் அம்பலமாகிவிட்டது' என்று நினைக்க இடமிருக்கிறது, என்றே தோன்றுகிறது.

ஒருவேளை – "இருபத்தைந்து ஆண்டுகளாக இல்லாத வரலாறு காணாத வாக்குப் பதிவு' என்பதற்கு, இந்தக் கள்ள ஓட்டு உற்சவமும் ஒரு காரணமோ என்னவோ!மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் செயல்படும் முறை ( நன்றி: http://www.mdmkonline.com/ )

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் என்பது இரு பகுதிகளை கொண்டது.

1. கட்டுப்பாட்டு பகுதி 2. வாக்கு பதிவு பகுதி

இவை இரண்டும் ஒரு 5 மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும்.
கட்டுப்பாட்டு பகுதி என்பது ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் அதிகாரி முன்பு வைக்கப்படிருக்கும்.
வாக்குப்பதிவு பகுதி என்பது வாக்களிக்கும் அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்கு மைய தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுக்கு பதிலாக கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்திய பிறகுதான் வாக்களிக்க வாக்கு பதிவு பகுதி தயாராகும். வாக்குப்பதிவு அறைக்குள் செல்லும் வாக்காளர் தான் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்தின் முன்பாக உள்ள நீல நிற பட்டனை அழுத்துவதால் வாக்குபதிவு செய்யப்படுகிறது.


மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1998 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலின் போது மத்திய பிரதேசம்,(5) ராஜஸ்தான்(5) மற்றும் டெல்லி மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரமானது 6 வோல்ட் அல்கலைன் பேட்டரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே
மின்சாரம் இல்லாத பகுதிகளிலும் இதனை பயன்படுத்தலாம்.

ஒரு மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் அதிகபட்ச வாக்குகள் 3840.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 1500க்கு அதிகமாக வாக்குகள் பதிவாகாது என்பதால் இதுவே
போதுமானது.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் உள்ள வாக்கு பதிவு பகுதியில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்களின் பட்டியல் இருக்கும். 64க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்கு சீட்டு முறையைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வாக்கு பதிவு மையத்தில் உள்ள ஒரே ஒரு வாக்கு பதிவு இயந்திரம் செயல்படாமல் போனால் அந்த வாக்கு பதிவு மையத்தின் தேர்தல் அதிகாரி தன்னிடம் உள்ள கூடுதலான வாக்கு பதிவு இயந்திரத்தை
பயன்படுத்துவார். ஒரு வேளை வாக்கு பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயம் அந்த இயந்திரம் பழுதுப் பட்டாலும் கவலைப்பட்ட தேவையில்லை. ஏனெனில் அதுவரை பதிவான வாக்குகள் இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணிக்கையிலிருந்தே புது இயந்திரம் செயல்படும்.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பெங்களூர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஹைதராபாத்.

இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின் விலை 1989ல் 5,500 ரூபாயாக இருந்து. இப்பொழுது அதைவிட குறைவு. ஆனால் வாக்கு சீட்டிற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள காகிதங்கள் அச்சடிக்கப்படுவதும் அதை குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவுகளுடன் ஒப்பிட்டால் இந்த மின்னணு வாக்குபதிவு
இயந்திரத்தினால் ஆகும் செலவு மிகமிக குறைவு.

நமது நாட்டில் எழுத்தறிவற்ற மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு மிகவும் எளிமையான முறை இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திர முறையே. வாக்களர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளரின் சின்னத்தின் அருகில் உள்ள நீல நிற பட்டனை மட்டும் அழுத்தினால் போதும். வாக்குப் பதிவாகிவிடும்.

தேர்தலின் போது வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளை கூட வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் தடுக்க இயலும். வாக்கு சீட்டு முறையில் குறிப்பிட்ட சிலர் பாதுகாப்பை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி ஆயிரம் வாக்குகளை ஒரே நேரத்தில் தங்கள் வேட்பாளரின் சின்னத்தில் வாக்களித்து விட்டு சென்று விடலாம். ஆனால் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் ஓரு நிமிடத்தில் 5 வாக்குக்ளுக்கு அதிகமாக வாகளிக்க முடியாது. அது மட்டுமின்றி வாக்குசாவடியின் தலைமை அதிகாரி தன்னிடம் உள்ள கட்டுப்பாடு கருவியை அணைத்து விட்டால் மேற்கொண்டு ஒரு வாக்கும் பதிவாகாது.
எனவே தேர்தலின் போது வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளை கூட வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் தடுக்க இயலும்.

ஒரே நேரத்தில் மக்களவை தேர்தலுக்கும் மாநில சட்ட பேரவை தேர்தலுக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை பயன் படுத்தலாம். ஆனால் வாக்குச்சீட்டு முறையில் தனித்தனியாகத்தான் வாக்குச் சீட்டு அச்சடிக்க வேண்டும்.

முன்பே கூறியது போன்று மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் காகிதம் மற்றும் போக்குவரத்து செலவு குறைகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது மிக சீக்கிரத்தில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்து
விடலாம். முன்பு ஒரு தொகுதியின் முடிவை அறிவிக்க 30லிருந்து 40 மணி நேரமாகும். ஆனால் தற்போது இந்த மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணிக்கை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள்ளாக முடிந்து விடுகிறது. அதுமட்டுமின்றி இந்த இயந்திரம் செல்லாத வாக்குகளை தடுத்து விடுகிறது. வாக்குச்சீட்டு முறையில் ஒரு வாக்காளர் ஒரே நேரத்தில் இரு வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிடுவார். ஆனால் இந்த இயந்திரத்தில் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நீல நிற பட்டனை அழுத்திவிட்டால் அதுவே வாக்காக பதிவாகிவிடும். அடுத்த நீல நிற பட்டனை அழுத்தினாலும் வாக்கு பதிவாகாது.

இந்த வாக்கு பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதனால் வாக்களிக்கும் நேரமும் குறையும். முன்பு ஒரு வாக்காளர் வாக்கு சீட்டையும் மை நிரப்பிய முத்திரையையும் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்று கொண்டு வாக்களிக்கும் அறைக்குள் செல்ல வேண்டும். ஆனால் தற்போது நேராக வாக்களிக்கும் அறைக்குள் சென்று இயந்திரத்தின் பட்டனை அழுத்த வேண்டியதுதான்.

இந்த இயந்திரத்தின் மெமரியில் 10வருடங்கள் வரை பதிவான வாக்குகளை பாதுகாத்து வைத்திருக்கலாம்.

ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தோல்வியடைந்த வேட்பாளர் நீதி மன்றத்தில் தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் மீண்டும் வாக்குகளை எண்ணி அறிவிக்க இயலும்.
மேலும் வாக்கு பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் இந்த வாக்கு இயந்திரத்தின் பேட்டரியை அணைத்து கழற்றிவிட்டாலும் பதிவான வாக்குகள் இயந்திரத்தின் மெமரியில் இருக்கும்.

ஒருவர் தான் வாக்கு பதிவு சரியாக செய்தாரா இல்லையா என்பதை அவரே தெரிந்து கொள்ள முடியும். அவர் தன் வேட்பாளருக்கு நேராக உள்ள நீல நிற பட்டனை அழுத்திய உடன் அதற்கருகிலேயே ஒரு சிவப்பு விளக்கு எரியும். அதுமட்டுமின்றி ஒரு பீப் ஒலி கேட்கும். இதன் மூலம் தான் வாக்கு பதிவு செய்ததை அவர் தெரிந்து கொள்ள
முடியும்.

ஒரு வாக்காளர் தான் வாக்களிக்கும் போது அந்த இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு மின்சார பாதிப்பு ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. அது வெறும் 6வோல்ட் மட்டும் கொண்ட பேட்டரியால் இயங்குகிறது. அதில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு மின்சாரம் பாய்வதில்லை.

நூறு வாக்குகள் வரை அது சரியாக இயங்குவதாகவும், நூறு வாக்குகளுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்குகள் விழுமாறு இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு வதந்தி மக்களிடையே நிலவுகிறது. அது தவறு. இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மைக்ரோ சிப்பை சிதைக்காமல் அதை திறந்து அது நூறு வாக்குகளுக்கு மேல் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குகள் சேரும்படி அதன் ப்ரோக்ராமை மாற்றி எழுத முடியாது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மிக லேசான எடை கொண்டிருப்பதாலும், அதை மூடகூடிய பெட்டி பாலிப்ரோபைலின் பொருளால் செய்யப்பட்டிருப்பதாலும் அதனை தூக்கிசெல்வது எளிது. ஒரு லாரிக்குள் வைக்கமுடிகிற வாக்கு சீட்டு பெட்டிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு எண்ணிக்கையில் இந்த இயந்திரங்களை வைக்கலாம்.

இந்த இயந்திரத்தை மிகவும் குளிர்ச்சியான பகுதியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அது வைக்கப்படுகின்ற அறையில் தூசுகளோ, தும்புகளோ இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மட்டும் அவசியம்.

வழக்கமான வாக்குச்சீட்டு முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின என சொல்ல முடிவதுபோல இந்த இயந்திரத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என சொல்ல முடியும். இந்த இயந்திரத்தின் டோட்டல் என்கிற பட்டனை அழுத்துவதன் மூலம் அதுவரை பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரியவரும். அதே போன்று ரிசல்ட் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரியவரும்.

ஒரு தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றனர். ஒரு இயந்திரத்தில் 16 பேருக்கான பட்டியல் இருக்கும் இந்த 11 முதல் 16 வரையிலான பட்டன்களை வாக்களர்கள் தவறுதலாக அழுத்தினாலும் வாக்குக்கள் பதிவாகாது. எனெனில் வாக்கு பதிவு துவங்குவதற்கு முன்பு தேர்தல் அதிகாரி அந்த 6
பட்டன்களையும் செயலிழக்கச் செய்துவிடுவார்.

முன்பு வாக்கு பெட்டிகளின் மீது எண் எழுதும் வழக்கம் இருந்தது போல் தற்போதும் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதிக்கும் ஒரு சிறப்பு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணை ஒவ்வொரு வேட்பாளரின் தேர்தல் ஏஜெண்ட் பார்த்து எழுதிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அதற்கு பிறகுதான் வாக்குபதிவு துவங்கும். அதனால் இயந்திரம் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கான சாத்தியமில்லை.

சுவாமி திடுக்
....சோனியாவின் வெளிநாட்டு ஆலோசகர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ளனர். நான் சொன்ன இந்த தில்லுமுல்லை அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்கள். இதை நடைமுறைப்படுத்தியது, அமேரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி ஜீரோ கிரைமில் மாட்டி ஜெயிலுக்குப் போனவர்கள் அவர்கள் மேலிட உத்திரவுப்படி இங்கு இப்படி நிறைய மெஷினை ரெடி பண்ணியுள்ளார்கள் ( சு.சாமி, குமுதம் )
எல்லாம் சரி, சிவகங்கையிலும், விருதுநகரிலும் நடந்தது என்ன ?

15 Comments:

Anonymous said...

Election commission should enforce printed receipt system along with the electronic voting. This system will prevent any sort of corruption and the printed voting slips can be counted manually if there is any allegation. Or a manual counting can always be followed by the electronic result processing. Malware and firmware alteration is always possible in any ASIC design. Congress huge victory this time is made possible by altering the chips in the EVM at selected constituencies through out India. This was accomplished by the corrupt Chawla, the new EC who was appointed by Sonia, since he is a trusted agent and a devout Catholic. He was in fact assigned by Vatican to help Sonia capture India and enforce massive harvest to Xtianity. It is an international consipiracy

Anonymous said...

அது ஜீரோ கிரைம் இல்லை. சைபர் கிரைம்.

இதை வைத்து சு.சாமி த்ரில்லர் எழுதலாம் :). அதை ராமதாஸ் மக்கள் தொலைக்காட்சியில்
தொடராக ஒளிபரப்பலாம் :).

M Arunachalam said...

Pl see this blog-post on the same topic:

http://jayasreesaranathan.blogspot.com/2009/05/evms-are-not-tamper-proof-dr.html

Anonymous said...

இதை படிக்கும் போது விஜய்காந்த் படம் பார்க்கும் feel வருகிறது, எதிரியின் Desktop ல் இந்தியாவின் தேசிய கொடியையை வர வைப்பார் (கொடுமை என்னவென்றால் அவருக்கு அவருடைய computer லேயே desktop photoவ மாத்த தெரியாது!)

நீங்கள் (ADMK,PMK,DMDK,MDMK, IdlyVadai......) என்ன சொன்னாலும் சரி, ஆயிரம் Demoக்கள்நடத்தினாலும் சரி, மக்கள் Congress Goverment வேண்டும் என்று விரும்பினார்கள் என்பதே நிதர்சனமான உண்மை (உண்மை எப்பொழுதும் கசக்கும்!!!). என்னதான் நவீன் சாவ்லா congress govermentன் அல்லக்கையாக இருந்தாலும் அவர் ஒருவர் மட்டும் இந்த நீங்கள் சொல்லும் குளறுபடியை நிகழ்த்த முடியாது, குறைந்த பட்சம் ஒரு 100 அதிகாரிகளாவது involve ஆக வேண்டும் (ஏனெனில் ஒரு machine ல் மாற்றம் செய்தால் மட்டும் இவ்வளவு ஒட்டு வாங்க முடியாது), உண்மையில் 100 (approximate) அதிகாரிகள் involve ஆகி இருந்தால் சத்தியமா இந்தியா உருப்படாது..............

ந.லோகநாதன் said...

Why this article is published now? This issue was discussed after the election?....

Moreover this election , MONEY + POWER won...

Rakesh said...

Unless people begin accepting their defeats, these sort of stupid arguments are always going to happen. Lalu, Mulayam have accepted their defeat and have started finding reasons for their defeat. Our politicians are good at blaming others for the defeat(While the reason for defeat of them are because of themselves). We don't even have the maturity of Bihar, UP politicians(please compare their educational qualifications with our's). The truth is people don't consider Advani as the replacement of Manmohan, or Jaya is not the replacement for karuna.(Look at the percentage of votes won by all the parties in the election. They are more or less the same as that of previous elections. Only the number of seats have changed). Don't mollify yourselves by any large scale bogus voting. There could be bogus voting but not large enough to win any constituency.

P.S. Atleast try to increase your maturity level to that of lalu.

மானஸ்தன் said...

எதுக்கு இந்த post-mortem?

அடுத்த ஆட்டம் நடக்க இன்னும் 2 வருஷம் இருக்கு...எந்தக் குப்பை வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை...

waste of time, இட்லி அண்ணாச்சி.

Natrajan said...

வாக்குசீட்டு மூலமே நடந்த சென்னை கார்பொரேஷன் தேர்தல் முடிவு சொன்னது என்ன?

Anonymous said...

ராமதசனின் எல்லா வேலையும் களை எடுத்தாகி விட்டது இபோழுது பயாஸ்கோப் காட்டுகிறார் நம்புங்கள் தமிழர்களே இவர் ஒருவர்தான் உத்தம புத்திரன் சீ அடங்கு

வாழவந்தான் said...

மாமியார் உடைச்சா மன்கொடம் மருமக உடைச்சா பொன்கொடம்!

அஞ்சா நஞ்சன் said...

EVM-ற்கு சூரியன், இலை என்றெல்லாம் தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் 1,2,3 என்ற வரிசை எண் தான். வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி அச்சிடப்பட்டு ஒட்டப்பட்ட பின்னர்தான் எந்த நம்பருக்கு எந்த சின்னம் என்பது தெரிய வரும். இது தொகுதிக்கு தொகுதி வேறுபடும் ஆதலால் முன்கூட்டியே ' இதற்கு அழுத்தினால் அதற்கு விழுகிறது' என்பதெல்லாம் கதையாகத்தான் இருக்க முடியும்.

Baski said...

ராமதாஸ் கரடி விடுகிறார் என்றே வைத்து கொள்வோம்.
ஆனால் இது போன்ற தவறுகள் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

Such equipments can be hacked and misused.

1. Paper voting will be better.
2. We must have Video monitoring with time on it and stored.
3. more army/crpf protection

shanmuganathan said...

ம்ம்ம்............தவறு என்று பார்த்தல் ஆரம்பம் முதலே தவறு......உதாரணத்திற்கு வாக்குப்பதிவு நடந்தது வேலை நாட்களில் இடைப்பட்ட நாள் அதாவது புதன்கிழமை..சரியாய் வாக்கு எண்ணிக்கை நடந்தது சனிகிழமை...உண்மையை சொல்ல போனால் புதன்கிழமை நடந்த வாக்கு பதிவுக்கு படித்த இளைஞர்கள் அதிகம் பேர் வாக்கு பதிவு செய்ய செல்ல வில்லை ஏன் என்றால் ஒரு நாள் விடுமுறை எடுத்து சென்னையில் வேலை செய்யும் ஒருவர் தம் சொந்த நகரங்களுக்கு சென்று திரும்ப முடியாது...........

ஆகையால் வாக்குப்பதிவு சனிகிழமை நடைபெற்றிருந்தால் படித்த இளைஞர்கள் அதிகம் பேர் வாக்களித்திருப்பார்கள்.தேர்தல் முடிவும் மாறி இருக்கும்.அதை விட்டு வாக்குஎந்திரம் தவறாக வேலை செய்கிறது என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.................

Anonymous said...

இட்லி வடை

REPEATU

ஏசிக் ப்ரோக்ராமிங் தெரிந்தவர்களைக் கேட்டு கொஞ்சம் கட்டுரை எழுதினால் புண்ணியமாப் போகும். இப்படி அரைகுறையாக எழுதாதீர்கள்

மொத்த 1 லட்சம் மெஷின்களில் ஒரு பத்தாயிரம் மெஷின்களில் ரிக் செய்யப் பட்ட சிப்களைப் பொருத்தி அதை காங்கிரஸ், தி மு க ஆளும் மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் உள்ள சந்தேகத்துக்கிடமான தொகுதிகளில் நுழைத்து விடலாம்

அதற்கு தேர்தல் கமிஷனரின் ஒத்துழைப்பு இருந்தால் போதும். அதற்காகத்தான் ஊழல் கறை படிந்த அயோக்யன் நவீன் சாவ்லா என்ற கிறித்துவன் வாட்டிக்கனின் கட்டளைப் படி சோனியா அன்னையினால் நியமிக்கப் பட்டான்

தேர்தல் ஆரம்ப்பித்த பிறகு கமிஷனரான கோபால்சாமி ஓய்வு கொடுக்கப் பட்டார். அல்லது அவர் ஓய்வு ஆன பிறகு க்ரூஷியல் தேர்தல்கள் நடக்குமாறு அட்டவணை தயாரிக்கப் பட்டது

இந்த இ வி எம்க்குக்கான சிப்கள் எங்கு தயார் செய்யப் பட்டன, யார் தயாரித்தார்கள் என்று சொல்ல முடியுமா?

அத்தனை சிப்களும் சோதனை செய்யப் பட்டனவா? நான் சொல்லும் சோதனை கம்பெனிகள் செய்தது இல்லை, அனைத்து கட்சிகளின் முன்பாக அனைத்து இ வி எம்களும் சோதிக்கப் பட்டனவா?

அப்படியே சோதிக்கப் பட்டிருந்தாலும் கூட தேர்தல் நாளுக்குப் பிறகு தேவைப் படும் கட்சிகளுக்கு ஓட்டைச் சேர்க்கும் ப்ரோகிராம் செக்மெண்ட் ஒர்க் ஆகுமாறு டேட் சென்சிட்டிவாக ப்ரோகிராம் செய்யப் படலாம் அது கடினமானது அல்ல. ஆக தேர்தலுக்கு முந்தின நாள் வரை யார் எப்படி சோதனை செய்தாலும் சரியாகவே வேலை செய்யும், அதைப் போலவே தேர்தலுக்குப் பின்னால் யார் சோதனை செய்தாலும் சரியாகவே வேலை செய்யும். ஆனால் தேர்தல் நாளன்று தன் வேலையான காங்கிரஸ்/திமுக வுக்கு ஓட்டுக்களை ஒதுக்கும் வேலையை தேர்தல் நாள் அன்று மட்டும் செய்ய வைக்க முடியும். இது போன்ற மைர்ரோபிராசர்களைத் தயார் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிபவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்

இப்படியாக திட்டமிடப் பட்டு ப்ரோகிராம் செய்யப் பட்ட ப்ராசசர்கள் பொருத்தப் பட்ட இ வி எம்கள் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் பரவலாகப் பயன் படுத்தப் பட்டுள்ளன.

இதற்கு ஒரே வழி ப்ரோகிராம் டம்பை எடுத்து பாரபட்சம் அற்ற தொழில்நுட்பர்களால் அலசச் சொல்வது ஒன்றே. அதில் இருந்தும் கூட தப்பிக்கக் கூடிய ஸ்மார்ட்டான வழிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த அளவிற்கு இதைத் தயாரித்தவர்கள் யோசித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.

காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் வென்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள அனைத்து இ வி எம்களின் ப்ராசர்களில் உள்ள சோர்ஸ் கோடும் உடனடியாக அனலைஸ் செய்யப் பட வேண்டும். ஆனால் இந்நேரம் அந்த சிப்கள் மீண்டும் மாற்றிப் பொருத்தி வைக்கப் பட்டிருக்கக் கூடும்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற காரணம் மக்கள் அல்ல நவீன் சாவ்லா என்றொரு குள்ள நரி மட்டுமே.

இதை தயவு செய்து பி ஜே பி பிரமுகர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள். சுவாமி ஏற்கனவே இது பற்றி பேசினார் யாருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை

Subu said...

மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ? சாத்தியம் என்றே தோன்றுகிறது...

மென்பொருளை மாற்றுவது செய்யக்கூடியதே..

மேலும்

http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html