பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 07, 2009

அந்த 7 நாட்கள்



பாரீஸ் கார்னரின் மொட்டை மாடி ஒன்றில், ஒற்றை ஆளாக டைப்ரைட்டரில் தடதடத்துக்கொண்டு இருக்கிறார் 'டிராஃபிக்' ராமசாமி. 'காங்கிரஸின் வெற்றிக்கு நீங்கள் தவிர்க்க முடியாத காரணம். வாழ்த்துக்கள். ஆனால், தமிழ கத்தின் சீர்குலைவுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதோடு, தேர்தல் நன்னடத்தை விதிகளையும் மீறியதால் தி.மு.க. சார்பாகத் தேர்வான 18 எம்.பி-க்களும் பதவிப் பிரமாணம் ஏற்கவோ, அமைச்சரவையில் பங்கு எடுக்கவோ அனுமதிக்காவிட்டால் உங்களுக்கு அது இன்னும் பெருமை தேடித்....' என்று நீள்கிறது ராகுல் காந்திக்கான அந்தக் கடிதம். 'டிராஃபிக்' ராமசாமி... உண்மையிலேயே ஒன் மேன் ஆர்மி!



001

''1953-ல் எனக்கு 18 வயசு. ஒரு நாள், ரேஷன்ல அரிசி வாங்கப் போயிருந்தேன். 14 கிலோ அரிசியை அளந்து பையில கட்டிட்டு கிளம்புறப்போ வந்து நின்ன தாசில்தார், 'ஒரு ஆள் இத்தனை கிலோ அரிசியைத் தூக்கிட்டுப் போறதுக்குச் சட்டப்படி அனுமதியில்லை. பையை வெச்சுட்டுப் போ'ன்னாரு. 'இப்ப நான் போறேன்... ஆனா, இதே அரிசியை நீங்களே என்னைத் தேடி வந்து வாங்கிக் கோன்னு கெஞ்சுவீங்க'ன்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். அவர் மேல கேஸ் போட்டேன். தீர்ப்பு வந்துச்சு. நான் சொன்ன மாதிரியே, ஒரு பையில அதே 14 கிலோ அரிசியைத் தூக்கிட்டு வந்து எங்க வீட்டுக் கதவைத் தட்டுனாரு அந்த தாசில்தார். அந்த வயசுல அது பெரிய சாதனையா, ரொம்ப மிதப்பா இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் தாண்டிப் புரிஞ்ச ஒரு விஷயம்... எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்!''

002

''எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க. பொண்ணு வீட்ல 1,500 ரூபாய் வரதட்சணை கேட்டார் எங்கப்பா. ஆனா, அவங்க வீட்ல 16 பிள்ளைகளை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டத்துல இருந்தாங்க. 'நான் அந்தப் பொண்ணைத்தான் கட்டிக்குவேன். என்னை நம்பி அவங்க பொண்ணு கொடுக்குறாங்க. எனக்குக் கை, கால் இருக்கு. காசு பணம் வேண்டாம். இதுல உங்களுக்கு எதுக்கு வரதட்சணை கொடுக்கணும்?'னு சொல்லிட்டு, வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன்.

அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்குப் பிறகு ஒரு தடவைகூட நான் திரும்ப எங்க வீட்டுக்குப் போகலை. வீட்டுக்கு வெளியே நடக்குற அநியாயங்களைத் தட்டிக் கேக்குறதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள இருக்குற கோளாறுகளைச் சரிசெய்யணும். அந்த அளவுக்கு மனசுல தெளிவையும் துணிவையும் வளர்த்துக்குற பக்குவம் வரணும். ஒவ்வொரு தனி மனுஷனும் கத்துக்க வேண்டிய விஷயம் இது. ஆனா, இங்கே பல தலைவர்களுக்கே அந்தத் தகுதி இல்லாததனாலதான், நம்ம தகுதி இப்படி இருக்கு. நம்ம வீட்டுப் பொண்ணு கையை ஒருத்தன் நடுரோட்ல பிடிச்சு இழுத்தா, அவன் மேல நமக்கு எவ்வளவு கோபம் வருமோ, அதே கோபம் நம்ம வீட்டுப் பையன் ஏதோ ஒரு பொண்ணு கையைப் புடிச்சு இழுத்தாலும் வரணும். அப்பதான் நாம மனுஷன்... நான் மனுஷன்!''

003

''என் ஒரே பொண்ணு மார்க் குறைச்சு வாங்கிட்டதால காலேஜ்ல பி.காம்., சீட் கிடைக்கிறது சிக்கலா இருந்துச்சு. 'உங்களுக்குத்தான் வக்கீல், கோர்ட், கட்சி ஆளுங்கன்னு பழக்கம் இருக்கே... சிபாரிசு பண்ணச் சொல்லுங்க. முடியலைன்னா லஞ்சம் கொடுங்க'ன்னு சிலர் சொன்னாங்க. 'பிரமாதமான மார்க் எடுத்தவங்களுக்கு மட்டும்தான் சீட் கொடுப்பாங்கன்னா, காலேஜ்ல ஒரு கிளாஸ்ல படிக்கிற எல்லா பொண்ணுங்களும் யுனிவர்சிட்டி கோல்ட் மெடல்வாங்கணுமே! மார்க் கொஞ்சம் குறைஞ்சுட்டா அவங்க எதுக்குமே லாயக்கில்லாதவங்க ஆயிடுவாங்களா?'னு அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு, காலேஜுக்குப் போனேன்.

தினமும் பிரின்சிபாலைப் பார்த்து, 'என் பொண்ணு மார்க் இது. இதுக்கு என்ன வாய்ப்பிருக்கோ அதைச் செய்யுங்க!' சொல்லிட்டு வருவேன். கடைசியில பி.காம்., சீட்டே கிடைச்சிருச்சு. சிபாரிசு, லஞ்சம் சங்கதிகளை எல்லாம் தாண்டி நம்ம முனைப்புதான் எதையும் சாதிக்கும்னு நான் அந்த விஷயத்துல புரிஞ்சுக்கிட்டேன்!''

004

''பின்னி மில் வேலையை விட்டுட்டேன். அப்ப முதல்வரா இருந்த கருணாநிதி 'ஒன் வே'யில் கார்ல போனா படம் புடிச்சுப் போடுறது, போலீஸ்காரங்களோட முறைகேடுகளைத் தட்டிக்கேக்குறதுன்னு பரபரப்பா இருந்ததால, என்னைத் தொல்லையா நினைச்ச ஒரு கிரைம் இன்ஸ்பெக்டர், நாலு பேரை செட்டப் பண்ணி என் மேல் பொய்ப் புகார் கொடுக்க வெச்சார். அதுக்காக விசாரிக்கிறேன்னு சொல்லி என்னைப் பெரிய பட்டாளத்தோடு வந்து பனியன், ஜட்டியோடு கையில விலங்கு போட்டு நடுரோட்ல அடிச்சு இழுத்துட்டுப் போயி தலைகீழா கட்டி அடிச்சாரு. ஒவ்வொரு அடி விழுந்தப்பவும், 'இதுக்கு நிச்சயம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும்'னு மட்டும் சொல்லிட்டே இருந்தேன். ஸ்டேஷனைவிட்டுக் கிளம்புறப்போ, 'தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்... இப்போ நான் கிளம்புறேன். ஆனா, சீக்கிரமே இந்த நாளுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்..

கோர்ட்ல கேஸ் நடந்தது. அவர் அந்த இடைவெளியில் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆகி டிரான்ஸ்ஃபர்ல நன்னிலம் போயிட்டார். எனக்கு எதிரா நிப்பாட்டுன 22 சாட்சிகளையும் பொய் சாட்சின்னு உடைச்சேன். தீர்ப்பு சொல்ற அன்னிக்கு 'விசாரணை அதிகாரி' என்பதால் அவரையும் வரச் சொல்லி இருந்தாங்க. கோர்ட்ல ரெண்டு பேரும் எதிரெதிர் கூண்டுல நிக்கிறோம். 'ராமசாமி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அவரை விடுவிக்கிறோம். தேவையே இல்லாமல் அவரை உள்நோக்கத்தோடு அவமானப் படுத்தி காயமடையச் செய்த உங்கள் மீது ஏன் நடவ டிக்கை எடுக்கக் கூடாது?'ன்னு தீர்ப்பு. நிமிர்ந்து என் முகத்தை ஒரு தடவை பார்த்தார் அவர். கூண்டை விட்டு இறங்கினவர், தடால்னு கீழே விழுந்துட்டார். அதுக்கப்புறம் அவர் எழுந்திரிக்கவே இல்லை. கோர்ட், தீர்ப்பு, தண்டனைகளைவிட நம்ம மனச்சாட்சிக்கு உண்மையா இல்லைன்னா என்ன ஆகும்னு நான் தெரிஞ்சுக்கிட்ட நாள்!''

005

''1998-ல சென்னை ஹைகோர்ட்டைச் சுத்தி ஒன் வே ஆக்கினாங்க. போக்குவரத்து நெரிசலுக்கு எந்த விதத்திலும் தீர்வளிக்காத, ஒரு சில கான்ட்ராக்டர் களைத் தவிர, வேற யாருக்கும் பலனளிக்காத திட்டம் அது. அவ்வளவு அகலமான காலியான ரோடுல சர்... சர்னு பறந்த வண்டிகளால் 23 பொதுமக்கள் உயிர் இழந்தாங்க. பொதுநல வழக்குப் போட்டேன். அந்த ரோட்ல ஓவர் பிரிட்ஜ் கான்ட்ராக்ட் எடுத்திருந்த ஆளுங்கட்சிக்காரன் என்னைக் கொல்ல வந்தான். போலீஸ் மிரட்டுச்சு.

சளைக்காம கோர்ட்ல மல்லுக் கட்டினேன். 'அந்தச் சாலையை மீண்டும் இருவழிப் பாதை ஆக்கவும். இனி எக்காலத்திலும் அங்கு ஒன் வே திட்டம் அமல்படுத்தக் கூடாது'ன்னு தீர்ப்பு வந்தது. இப்ப, சமீபத்தில் அசோக் நகரைச் சுத்தியும் ஒன் வே ஆக்கினாங்க. அதனாலயும் எந்தப் பலனும் இல்லை. திரும்பவும் இருவழிப் பாதை ஆக்கச் சொல்லி கோரிக்கைகள், போராட்டங்கள்! 'நீங்க எடுக்குறீங்களா... இல்லை, கோர்ட் மூலமா எடுக்கவைக்கவா?'ன்னு மட்டும் நான் கேட்டேன். 'ராமசாமி, அவசரப்படாதீங்க. ரெண்டு வாரத்துக்குள்ள அசோக் நகர் மீண்டும் இரு வழிப் பாதை ஆகும்'னு சொன்னவங்க, சொன்னதைச் செஞ்சாங்க. ஒரு பாதையில் முதல் தடவை நடக்கும்போதுதான் முள்ளு, கல்லு எல்லாம் காலைக் குத்தும். எடுத்துப் போட் டுட்டு நடந்தோம்னா, அடுத்த தடவை அதே பாதை உங்களுக்கு அத்தனைச் சிரமம் தராது!''

006

''2002-ல் மீன்பாடி வண்டிகளை ஊருக்குள்ள ஓட்டத் தடை போடச் சொல்லி, பொதுநல வழக்கு போட்டேன். அதுல கடுப்பான ஒருத்தன் கத்தியால என்னைக் குத்த வந்தான். என் கண்ணுகிட்ட கத்தி பாய்ஞ்சு பார்வை பாதிக்கப்பட்டது. நாம போட்ட வழக்கால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு மீன்பாடி டிரை வர்தானே ஆத்திரத்துல இப்படிப் பண்ணியிருக்கான்... நேர்மை, நியாயம்னு பேசிட்டு நாம பண்றது தப் போன்னு தோணுச்சு. தடுமாற்றத்துல இருந்தேன்.

மறுநாள், ஒரு மீன்பாடி வண்டி அடிச்சு பரிதாபமாச் செத்துப் போனாரு ஒருத்தர். அவரோட ரெண்டு குட்டிப் பொன்ணுங்க அப்பா இறந்துட்டது தெரியாம, பாடி மேல விழுந்து புரண்டு விளையாண் டுட்டு இருந்தாங்க. எனக்குள்ள இருந்த தடுமாற்றம் தெளிவாச்சு. இன்னும் தீவிரமாப் போராடி, மீன் பாடி வண்டிகளுக்குத் தடை வாங்கி னோம்.''

007

''நடைபாதைக் கடைகளுக்குத் தடை போடச் சொன்னப்பவும் இதே சிக்கல். பிராட்வே பகுதிகள்ல மட்டும் கிட்டத்தட்ட 5,000 வியாபாரிகள். ரோட்ல நடக்குறப்பல்லாம் அத்தனை பேரும் என்னை திட்டித் தீர்த்தாங்க. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கள்லாம் ஏதோ அவங்களுக்கு நல்லது செய்யறதா நினைச்சு, அவங் களோட சேர்ந்துக்கிட்டு என்னை எதிர்த்தாங்க. எந்தத் தயக்கத்துக்கும் இடம் கொடுக்காம அவங்க எல்லா ரையும் கடைகளைக் காலி பண்ணவெச்சேன். காலி பண்ணவங்களுக்கு மாற்று இடத்தை அரசாங்கமே தரணும்னு சொல்லி, அதுக்கும் போராடினேன். கொஞ்சங்கொஞ்சமா எல்லாருக்கும் இடம் கொடுத் துச்சு அரசாங்கம். அதுவரை தண்டல் காசா தினமும் 100 ரூபா கொடுத்து, பயந்து பயந்து வியாபாரம் செஞ்சுட்டு இருந்தவங்க, அதுக்குப் பிறகு அரசாங்க இடத்துக்கு 40 ரூபாய் வாடகை குடுத்து மரியாதையா, கம்பீரமா வியாபாரம் செய்ய ஆரம்பிச்சாங்க.

என்னைத் திட்டின எல்லாரும் ஒரு நாள் என்னை வந்து பார்த்து மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவிச் சாங்க. அதை விடுங்க... அதிகாரிகளும் பொதுமக்க ளும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா, இந்த அரசியல்வாதிங்கதான் வழிக்கு வர மாட்டேங்குறாங்க. பரவாயில்ல பார்த்துக்கலாம்... நான் போறதுக்குள்ள அவங்களை ஒரு வழி ஆக்கிடுவேன்ல! என்ன பெருசா வயசாயிடுச்சு... ஒன்லி 76-தானே

மொக்கையாக சினிமா பதிவு ஏன் என்று கேட்ட சிலருக்கு இந்த பதிவு!

( நன்றி: விகடன் )

46 Comments:

Erode Nagaraj... said...

அதுக்காக இப்படியா இட்லி-வடை ன்னு பேர் வேச்சுட்டதால, "சுட்டு" போடறது... நாட்டு நடப்பை உங்க வார்த்தைகளில் போடுங்க ஐயா... உங்க stylu - punchu இதெல்லாம் இருக்கட்டுமே...

மானஸ்தன் said...

திரு (traffic) ராமசாமி பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறேன்.

ஆனால், இதில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் எனக்கு புதிது.

மிக்க நன்றி இட்லி அண்ணா!

S Suresh said...

Great Traffic Ramasamy. How he is managing expenses? Please let us know how we can help for the expenses.

Anonymous said...

Enna IV, 2 weeks-a Vikatan padikalaya? Palasu eduthu ippo podureengale...

கிரி said...

ராமசாமி அவர்கள் ஒரு "நிஜ" சாதனை நபர்

மானஸ்தன் said...

///Erode Nagaraj... said...
அதுக்காக இப்படியா இட்லி-வடை ன்னு பேர் வேச்சுட்டதால, "சுட்டு" போடறது... நாட்டு நடப்பை உங்க வார்த்தைகளில் போடுங்க ஐயா... உங்க stylu - punchu இதெல்லாம் இருக்கட்டுமே...////


அதெல்லாம் இருக்கு ஈரோடு அண்ணாச்சீ!
அந்த மஞ்ச கமெண்ட்-ஐப் பாருங்க! நச்சுனு பன்ச் வெச்சுருக்காரு (எனக்கு!)!! :-D

Anonymous said...

கலைஞருக்கு ரெட்டைத் தலைவலிக்கு காரணம்: சோ ராமசாமி மற்றும் டிராபிக் ராமசாமி.

எல்லாரும் பராட்டறோம்.. சரி...கேஸ் போடற செலவுக்கு ஏதாவது பண உதவி செய்யறோமா? உரத்த சிந்தனை, ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம் போன்ற அமைப்புகள் நிதி வசூலித்துக் கொடுக்கலாம். சினிமா பற்றி எழுதிக்கொண்டிருக்கிற ப்ளாக்கார்கள், மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசி ஒருத்தரை ஒருத்தர் பாராட்டி அல்லது பிறாண்டி விட்டு போகி்றார்கள். எழுத்து நமக்குத் தொழில் என்று மெடல் குத்திக்கொண்டு
விட்டால் போதுமா?

IdlyVadai said...

//நாட்டு நடப்பை உங்க வார்த்தைகளில் போடுங்க ஐயா... உங்க stylu - punchu இதெல்லாம் இருக்கட்டுமே...//

நீங்க சொல்லுவது சரி, ஆனால் சில செய்திகள் மக்களுக்கு போய் சேர வேண்டும் இதுவும் அதில் ஒன்று.

padukali said...

நல்ல பதிவு.

=/ எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்!''/=

நல்ல சிந்தனை.


டிராபிக் ராமசாமி என்னும் அடை மொழி அவர் அடிக்கடி சாலை போக்குவரத்துக்கு சம்பந்தமாக நீதி மன்றம் சென்றதற்காகவா

padukali said...

நல்ல பதிவு.

=/ எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்!''/=

நல்ல சிந்தனை.


டிராபிக் ராமசாமி என்னும் அடை மொழி அவர் அடிக்கடி சாலை போக்குவரத்துக்கு சம்பந்தமாக நீதி மன்றம் சென்றதற்காகவா

வலைஞன் said...

சோ ராமசாமி சாதித்ததை விட டிராபிக் ராமசாமி சாதித்தது அதிகம் என தோன்றுகிறது.

R.Gopi said...

IV

Super article and punch at the end.

One side Anjaanenjan Annan Maanasthan is claiming that IV's last line PUNCH is for him.

Other side, Erode Nagaraj is telling you to write in your style.

Ore kashtamappaa.......

வேழாம்பல் said...

sambar ponra pathivugal.. idli saambaar yenru maatrik kollungal.. :)

சரவணகுமரன் said...

என்னா மனுசன்!!!

Anonymous said...

தமிழினத்தலைவர் கலைஞரா இருக்கத்தொட்டு தலைகீழா தொங்க விட்டு அடிச்சாரு..

தேசியத்தலைவர் பிரபாகரனா இருந்திருந்தா பொட்டரை கூப்பிட்டு நெற்றிப்பொட்டுல பொட்டு வைச்சிருப்பாரு..

Venkat said...

Good Article. As Anonymous said, we should help him.

Narayanan M said...

ஒரு நல்ல பதிவு படித்த திருப்தி! நல்ல ஊக்கமளிகக்குடிய விஷயம் மட்டுமின்றி சில தத்துவங்களும் இருப்பதாகவே உணருகிறேன். இது போன்ற நல்ல செய்திகளை எடுத்துரைக்கும் செய்தித்துறைக்கு வாழ்த்துக்கள். இட்லிவடைக்கு நன்றி!

ராஜசேகரன் said...

//Great Traffic Ramasamy. How he is managing expenses? Please let us know how we can help for the expenses//

//எல்லாரும் பராட்டறோம்.. சரி...கேஸ் போடற செலவுக்கு ஏதாவது பண உதவி செய்யறோமா? உரத்த சிந்தனை, ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம் போன்ற அமைப்புகள் நிதி வசூலித்துக் கொடுக்கலாம்.//

யாரோ ஒருத்தன் உயிரை பணயம் வைத்து போராடுவான் நாம செலவுக்கு காசு கொடுப்போம்.

Anonymous said...

==
யாரோ ஒருத்தன் உயிரை பணயம் வைத்து போராடுவான் நாம செலவுக்கு காசு கொடுப்போம்.===

எல்லோரலும் போரட முடியாது.வெளி நாட்டில்,வெளி நகரங்களில் இருக்கிறவர்கள் பண உதவி செய்யட்டுமே! ...ஆட்சேபனை சொல்வதற்கு எல்லாரும் தயார்!..

ரிஷபன் said...

இவரிடம் போய் பி.ஜே.பி. கார்கள் சண்டை போட்டார்களாமே ! மஞ்சள் கட்சிக்கும் தாமரைக்கும் இப்போதெல்லாம் வித்தியாசம் தெரிவதில்லை.

ஹரன்பிரசன்னா said...

//சளைக்காம கோர்ட்ல மல்லுக் கட்டினேன். 'அந்தச் சாலையை மீண்டும் இருவழிப் பாதை ஆக்கவும். இனி எக்காலத்திலும் அங்கு ஒன் வே திட்டம் அமல்படுத்தக் கூடாது'ன்னு தீர்ப்பு வந்தது. இப்ப, சமீபத்தில் அசோக் நகரைச் சுத்தியும் ஒன் வே ஆக்கினாங்க. அதனாலயும் எந்தப் பலனும் இல்லை. திரும்பவும் இருவழிப் பாதை ஆக்கச் சொல்லி கோரிக்கைகள், போராட்டங்கள்! 'நீங்க எடுக்குறீங்களா... இல்லை, கோர்ட் மூலமா எடுக்கவைக்கவா?'ன்னு மட்டும் நான் கேட்டேன். 'ராமசாமி, அவசரப்படாதீங்க. ரெண்டு வாரத்துக்குள்ள அசோக் நகர் மீண்டும் இரு வழிப் பாதை ஆகும்'னு சொன்னவங்க, சொன்னதைச் செஞ்சாங்க. ஒரு பாதையில் முதல் தடவை நடக்கும்போதுதான் முள்ளு, கல்லு எல்லாம் காலைக் குத்தும். எடுத்துப் போட் டுட்டு நடந்தோம்னா, அடுத்த தடவை அதே பாதை உங்களுக்கு அத்தனைச் சிரமம் தராது!''//

அசோக் நகரில் ஒருவழிப்பாதையானபோது, அதைப் போன்ற டிராஃபிக்கை உலகத்திலேயே பார்க்கமுடியாது. இடது பக்கம் இருந்து வலப்பக்கமும், வலது பக்கம் இருந்து இடது பக்கமும் செல்லவேண்டும். சிக்னலும் கிடையாது. இப்படி கிறுக்கத்தனத்தை எப்படி செய்தார்கள் என்றே புரியாமல் இருந்தது. ஆனால் அது நல்ல முடிவுதான். இரண்டு இடங்களில் சிக்னல் வைத்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும். டிராஃபிக் ராமசாமி, அதை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றுவதற்குப் பதிலாக, சிக்னல் வைக்கக் கேட்டிருக்கலாம். தொடர்ந்து பெருகி வரும் போக்குவரத்து நெரிசலில் ஒருவழிப்பாதை என்பது தவிர்க்கமுடியாதது.

Anonymous said...

Superb!

Anonymous said...

குறள் 622:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

மு.வ உரை:
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

மு.வ உரை:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்

ட்ராபிக் ராமசுவாமி வாழ்க :)

Anonymous said...

ராமசாமி வாழ்க :)

Kameswara Rao said...

இட்லி வடை,
"எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்!''/=

ஆனால் நம் நாட்டில் நீதி கிடைக்க எடுத்து கொள்ளபடும் நேரம் தான் அதிகம். திரு (traffic) ராமசாமி தனது 76 வயதில் நம் நீதித்துறை சரியானதாக இருந்தால் அவர் சொல்வதுபோல் நம் அரசியல்வாதிகள் கூட பல படம் பெற்றிப்பர்கள்
///
ஜெகத்ரத்ஷகன் விஷயத்தில் பொன்முடியின் அறிக்கை பார்த்தீர்களா

காமேஷ்

வேலு said...

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

இவர் வாழ்க பல்லாண்டு......

Anonymous said...

நான் ஒரு வக்கீலை ரயில் பயண்தின் போது சந்தித்தேன் அவர் பெயர் வேண்டாம் இங்கே, அவரும் இவரை போலவே பல பொதுநல வழக்குகளில் (வெற்றி பெற்றுள்ளார்) நியாயம் வெல்ல துணை நின்றார். அவர் சொன்ன வார்த்தைகளும் இதுதான் "எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்!'' நல்லவர்கள் ஒரே மாதிரித்தான் சிந்திக்கிறார்கள்.....
நான் குறிப்பிடும் அவர் அதிகம் குறி வைப்பது பொதுநல வழக்குகளில் தவறாக நீதி சொல்லும் நீதிமான்களை தான்...... அவரை பார்த்தாலே மதுரை நீதி மன்றமே நடுங்கும் என்பது நான் பின் அறிந்த செய்தி..... வாழ்க பல்லாண்டு இந்த உயரிய மனிதர்கள்.......

Mohan Kumar said...

One of the best article to read in recent times. Though it is published in Vikatan, I read in Idly vadai only. Thanks Idly vadai.

It requires extreme mental strength to follow the points shared by traffic Ramasamy, which I doubt may be possible at ALL TIMES for ordinary people like us.

But yes, atleast whenever and wherever possible, we can oppose Illegal, arrogant behaviours. (A family man cannot fight in some places; one good example is the school where your son or daughter studies).

Mohan Kumar said...

One of the best article to read in recent times. Though it is published in Vikatan, I read in Idly vadai only. Thanks Idly vadai.

It requires extreme mental strength to follow the points shared by traffic Ramasamy, which I doubt may not be possible at ALL TIMES for ordinary people like us.

But yes, atleast whenever and wherever possible, we can oppose Illegal, arrogant behaviours. (A family man cannot fight in some places; one good example is the school where your son or daughter studies).

Anonymous said...

நான்காம் வகுப்பு பாடத்தில் ரஜினி படத்தை போடும் (பார்க்கவும் http://www.envazhi.com/?p=8417) மட்டரகத்திற்கு பதிலாக இந்த மாதிரி உயரிய மனிதர்களின் குறிப்புகளை போடலாம்..... அந்த வகையில் விகடனையும், இட்லி வடையையும் உளமாற பாராட்டுகிறேன்......
நல்லதை நம் மக்கள் செய்யவே மாட்டார்கள்.... (ஒரு சில மனிதர்களை தவிர உதாரணம் திரு. ராமசாமி)

sowri said...

At his age of 76, starting from the age of 15 he has fight for the right. If this 61 years of untiring fight for justice and honesty doen't inspire the next generation and people around, then its a shame for the whole mass.
Lets make a better tomorrow.

R.Gopi said...

//நல்லதை நம் மக்கள் செய்யவே மாட்டார்கள்.... (ஒரு சில மனிதர்களை தவிர உதாரணம் திரு. ராமசாமி)//

***********

Nalladhu seyyaradha NIJA PERLA vandhu paaraatum dhairiyam kooda illaadha ANONY ya enna solradhu...........

Anonymous said...

பெயர் சொல்லி எழுதுபவர்கள் எல்லாம் தைரியமானவர்கள் என்று ஏதாவது இலக்கணம் உள்ளதா? இருந்தால் R.Gopi என்பது போலி அல்ல என்பதற்கு என்ன ஆதாரம்? உண்மையில் நான் Blog ஆரம்பிப்பது எப்படி என்று இது வரை முயற்சி செய்ததில்லை (அதனால் தான் பின்னூட்டத்தில் பெயர் போட வில்லை), தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை, என் நண்பன் சொன்னான் இவ பதிவுகள் நன்றாக இருக்கும் என்று, அதனால் தான் கொஞ்ச நேரம் பார்த்தேன் (கடந்த சில தினங்களாக), மற்ற படி Blog எழுதுவது, படிப்பது போல வெட்டி வேலை கிடையாது (என்னை பொறுத்தவரை!!), என்னுடைய கணிப்பு தவறவில்லை, இனி தொடரமாட்டேன்..... ரஜினியை பற்றி எழுதி விட்டதால் கோபமா????? கோபம் என்றால் நான் என் வீட்டு முகவரியையே தருகிறேன்.....Please Contact me at methavk@yahoo.co.in

R.Gopi said...

//ரஜினியை பற்றி எழுதி விட்டதால் கோபமா????? கோபம் என்றால் நான் என் வீட்டு முகவரியையே தருகிறேன்.....Please Contact me at methavk@yahoo.co.in

Anonymous said...
நான்காம் வகுப்பு பாடத்தில் ரஜினி படத்தை போடும் (பார்க்கவும் http://www.envazhi.com/?p=8417) மட்டரகத்திற்கு பதிலாக //

*******

Mr.Anony

Idhu NALLA RAGA commentaa??

Nallaa irunga....... ungala contact panni, ungala thedaradha vida uruppadiyaana vela neraiya enakku irukku.........

M Arunachalam said...

//ரஜினியை பற்றி எழுதி விட்டதால் கோபமா?????//

Why are you UNNECESSARILY dragging Rajini's name here? Because of a few Stomach-burners like you Rajini's name is not going to go down.

If you want to praise something, you don't necessarily have to degrade something/someone else.

It seems, like your name, even your house address is anonymous in the cyberworld? You really have got guts.

BTB, are you a member of any political party? Why I am asking is, like a politician, you also blabber irrelevant to the topic and "promise" sky-high (will give my house address) but ultimately fail to "deliver" on your promise - exactly like a politician.

Anonymous said...

என் பெயரும் அனானியே.

முந்தைய அனானிக்கும் எனக்கும் பெயர் பொருத்தம் மாத்திரமே உண்டு.
என்னை பிந்தைய அனானி என்று கூப்பிட்டால் கூட ஒகே.

ட்ராஃபிக் ராமசாமி பதிவில் அவரை போற்றலாம், துற்றலாம்.சம்மந்தம் இல்லாத ரஜினியை நுழைப்பது சந்தர்பத்திற்காய் காத்திருந்தது போலெ தோன்றுகிறது.

தனி மனித வெட்டு குத்துகள் நல்லது அல்ல. கோபி என்றும் .... எங்க எரியாவுக்கு வா என்று சௌண்ட் விடுவதை விட ஒரு நல்ல நர்செரி ரைம் சொல்லி விடலாம்.

முடிக்கும் முன்: தங்கள் எழுத்துக்கள் நல்லாவே உள்ளன. வலை பதிவு ஆரம்பியுங்கள்.

Anonymous said...

என் பெயரும் அனானியே.

முந்தைய அனானிக்கும் எனக்கும் பெயர் பொருத்தம் மாத்திரமே உண்டு.
என்னை பிந்தைய அனானி என்று கூப்பிட்டால் கூட ஒகே.

ட்ராஃபிக் ராமசாமி பதிவில் அவரை போற்றலாம், துற்றலாம்.சம்மந்தம் இல்லாத ரஜினியை நுழைப்பது சந்தர்பத்திற்காய் காத்திருந்தது போலெ தோன்றுகிறது.

தனி மனித வெட்டு குத்துகள் நல்லது அல்ல. கோபி என்றும் .... எங்க எரியாவுக்கு வா என்று சௌண்ட் விடுவதை விட ஒரு நல்ல நர்செரி ரைம் சொல்லி விடலாம்.

முடிக்கும் முன்: தங்கள் எழுத்துக்கள் நல்லாவே உள்ளன. வலை பதிவு ஆரம்பியுங்கள்.

Erode Nagaraj... said...

மொக்கைக்கு பதிலாக...

இந்த ஏழு கேள்விகள்:

1. கரிய முன்டா துணை சபாநாயகர் ஆனதில், பா.ஜ.கா.விற்கு ஏதேனும் காரியமுண்டா?

2. A330-ஐ கூட்டினால் ஏழு வருவதற்கும் 216+12 பேர் இறந்ததற்கும் நியூமராலஜி தில்லாலங்கடிகள் என்ன சொல்லுவார்கள்?

3. உர விலையைக் குறைப்பேன் என்று மதுரை அண்ணன் சூளுரைத்ததால் இந்நேரம் எதிர்பார்த்த "நியாயமான" collections, தொழிலதிபர்களிடமிருந்து வசூலாயிருக்குமா?

4. மம்தா வந்த பிறகாவது, இரயில்களில் இணைக்கப்பட்ட இடைச்செருகல் - பாடாவதி extra fitting berth-கள் நீக்கப்படுமா?

5. எது முதலில் வரும்?
அ. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே
பொதுவான சட்டம் ...

ஆ. பொது சிவில் சட்டம்...

இ. பெண்களுக்கான 33%...

6. இந்தியப் பயணிகளை அவமதித்த ஃப்ரான்சு விமானப் போக்குவரத்து நிறுவனம் விஷயத்தில் இந்தியா தனது மானப் பிரச்சனையாக பார்க்குமா (அ) அவரவர் சுயமரியாதை என்று வாளாவிருக்குமா?

7. சூப்பர் சிங்கர் ஜூனியர் 2011-க்குள் முடிந்துவிடுமா?

R.Gopi said...

//Erode Nagaraj :
3. உர விலையைக் குறைப்பேன் என்று மதுரை அண்ணன் சூளுரைத்ததால் இந்நேரம் எதிர்பார்த்த "நியாயமான" collections, தொழிலதிபர்களிடமிருந்து வசூலாயிருக்குமா?

Collection REMBA dullungo.....

4. மம்தா வந்த பிறகாவது, இரயில்களில் இணைக்கப்பட்ட இடைச்செருகல் - பாடாவதி extra fitting berth-கள் நீக்கப்படுமா?

Innoru idai serugal (4th) saathiyamaa endru ellaa pettigalaiyum aaraigiraargalaam....

5. எது முதலில் வரும்?
அ. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே
பொதுவான சட்டம் ...

ஆ. பொது சிவில் சட்டம்...

இ. பெண்களுக்கான 33%...

Rendumey ...... varum ..... aanaa varaadhu........

6. இந்தியப் பயணிகளை அவமதித்த ஃப்ரான்சு விமானப் போக்குவரத்து நிறுவனம் விஷயத்தில் இந்தியா தனது மானப் பிரச்சனையாக பார்க்குமா (அ) அவரவர் சுயமரியாதை என்று வாளாவிருக்குமா?

Ah ha - SUYAMARIYADHAI. Tamilanukku REMBA pudicha vaarthai aachey........

7. சூப்பர் சிங்கர் ஜூனியர் 2011-க்குள் முடிந்துவிடுமா?

2012-la kelunga THALA

Anonymous said...

ஒருவருக்கு சரி என்று படுவது மற்றவருக்கு தவறு என்று தெரியும், நான் எனது கருத்தை சொன்னேன், கல்வி என்பது நல்ல கருத்துகளை புகட்ட வேண்டும், தவறினால் இதுபோல சினிமாகாரர்களுக்காக சண்டை போட வேண்டியதுதான், இதை புரிந்து கொள்ள முடியாதவர்களுடன் பேசுவது அபத்தமானது....ஆனால் கண்டிப்பாக நான் வேண்டும் என்றே ரஜினியை இழுக்கவில்லை அவர் நல்ல நடிகர் தான் அது மட்டுமே பாடபுத்தகத்தில் வருமளவுக்கு தகுதி உடையது அல்ல, உண்மையாகவே அவரை விட சிறந்த பொதுநல நோக்கு உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர் (உதாரணம் திரு. ராமசாமி) , அவர்களின் வாழ்க்கை குறிப்புகளை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல், இது தவறு என்று கூறுபவர்களை நான் என்ன சொல்வது? "ஏட்டுக் கல்வி பயின்ற முட்டாள்கள்" என்பதுதான் பொருந்தும்.
என்னுடைய எழுத்துக்கள் நன்றாக உள்ளது என்று கூறியதற்கு நன்றி!!!! இது தான் நான் இடும் கடைசி பின்னூட்டம் இட்லி வடைக்கு!!!!!

Erode Nagaraj... said...

//R.Go: Rendumey ...... varum ..... aanaa varaadhu//

reNdu illai mooNu...

D.R.Ashok said...

//மீன்பாடி வண்டி அடிச்சு பரிதாபமாச் செத்துப் போனாரு ஒருத்தர்.அவரோட ரெண்டு குட்டிப்பொன்ணுங்க அப்பா இறந்துட்டது தெரியாம, பாடி மேல விழுந்து புரண்டு விளையாண்டுட்டு இருந்தாங்க//

:-(

ஈ ரா said...

/அவர் நல்ல நடிகர் தான் அது மட்டுமே பாடபுத்தகத்தில் வருமளவுக்கு தகுதி உடையது அல்ல/

உண்மைதான்.... அவர் அந்த பாட புத்தகத்தில் இடம்பெற்றது நடிப்பு திறமைக்காக மட்டும் அல்ல...

ட்ராபிக் ராமசாமி அவர்களை வேண்டுமானால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் வசனத்துக்கு விதிவிலக்கு அளிக்கலாம்....சூப்பர் மேன்... ஒரு அஹிம்சை இந்தியன் தாத்தா..வாழ்க பல்லாண்டு..

அன்புடன்

ஈ ரா

R.Gopi said...

//Erode Nagaraj... said...
//R.Go: Rendumey ...... varum ..... aanaa varaadhu//

reNdu illai mooNu...//


**********

Sorry paaaa

Sardhaan 3 thaan........

Guru said...

I agree with you ஈ ரா, he is not only a good actor, he dedicated himself for the society and we cant count his contribuitions to welfare of the society, so his life history should be added to 10 th standard books!!!!!

Krish said...

Hats off to Ramasamy. He contested in South Chennai...mmm..We will not change!