பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 18, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-06-2009

இந்த வாரம் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்..

அன்புள்ள இட்லிவடை

நலமா?
முதலில் முக்கியமான நியூஸ் சொல்லணும். மல்லிகா ஷெராவத்திற்கு. (தசாவதாரம் படத்தில் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு டான்ஸ் ஆடுவாரே, என் உடம்பு எவ்வளவு தெரிகிறதோ அதைவிட அதிகமா தமிழ் தெரியும்னு சொல்வாரே அவரே தான்) "ப்யூர் ஆத்மா" என்ற பட்டத்தை சங்கராச்சாரியார் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டு சங்கராச்சாரியார் இல்லை; கர்நாடகாவில் இருக்கும் ஒருவர். கோகர்ணாத்திலுள்ள ஸ்ரீராமச் சந்திரப்பூர் மடத்துக்கு மல்லிகா விஜயம் செய்த போது இந்த பட்டம் அவருக்கு கிடைத்திருக்கிறது. முற்றும் துறந்தவரிடமிருந்து இன்னொரு முற்றும் துறந்தவருக்கு பட்டம் கிடைப்பது சரிதானே! இனி டாக்டர் பட்டம் எல்லாம் ஃபேஷன் இல்லை என்றாகிவிடுமோ?

டாக்டரின் தைலாபுரம் தோட்டம் பக்கம் போயிருந்தேன். பெரிய அரங்கு, பழக்க தோஷத்தில் ஓட்டுப் பெட்டி கூட வைத்திருந்தார்கள். ராமதாஸ் வெகுநேரம் பேசிக்கொண்டே இருந்தார். பாட்டாளிகள் எல்லாம் நெளிய ஆரம்பித்தனர். ஆப்ரேஷன் தியேட்டர் மாதிரி கதவுகள் மூடப்பட்டிருத்தால் அறுவை சிகிச்சையிலிருந்து யாரும் எழுந்து வெளியே தப்பித்துப் போக முடியவில்லை. பேச்சாளர் ஒரு கட்டத்தில் சுயநினைவுக்கு வந்து, "ஸாரி ரொம்ப நேரம் பேசிட்டேன் இல்ல? வரும்போது வாட்ச் கட்டிவர மறந்துட்டேன் அதான்" என்றார்.

கடைசியில் இருந்த தொண்டர் சத்தமாகச் சொன்னார். "யோவ் உன் எதிரில் காலண்டர் மாட்டியிருக்கு அதையாவது பார்த்திருக்கலாம் இல்ல?" ஆனால் அதைவிட நிஜமான ஒரு பெரிய ஜோக் கேள்...

சில நாட்கள் முன் "எந்தக் கட்சியிடமும் உள்ளாட்சிச் தேர்தலில் இந்த வார்டு வேண்டும் என்றும், சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி வேண்டும் என்று எதுவும் கேட்க வேண்டியதில்லை. இனி அந்த மாதிரி எந்தக் கட்சியிடமும் சீட் கேட்கப் போவதில்லை" என்று சொல்லியுள்ளார். என்னமோ இவர் கேட்டதும் மற்ற கட்சிகள் தூக்கிக் கொடுத்துவிடப் போவதுமாதிரி. "தேங்காய்ச் சட்னி - கொளுந்தியாள் மாதிரி; தொடாத வரை நல்லது," என்று வைரமுத்து முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறார். இப்போது ராமதாஸும் தேங்காய் சட்னி மாதிரி தான்.

'சாப் ஸ்டிக்' என்பது ஆங்கில வார்த்தையா என்று தெரியாது ஆனால் Chinese Pidgin English வார்த்தை என்று சொல்லுகிறார்கள். நம்ம தமிலிஷ் மாதிரி. அதில் "Chop Chop" என்றால் சீக்கிரம் என்று அர்த்தம். ஆங்கில வார்த்தைகளை அங்கீகரித்து, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள், இன்டர்நெட், ப்ளாக்குகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது வார்த்தைகளை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து அங்கீகரிப்பர். பல நாடுகள் பல வார்த்தைகளை அனுப்பியுள்ளன. தமிழ் ப்லாக்குகளில் நிறைய கிடைக்குமென்பது அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பெண்கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலின் அந்த வார்த்தையும், பத்து லட்சமாவது வார்த்தை ஆகும் போட்டியில் இடம்பெறுகின்றன. கட்டீஸுக்கு ஜெய் ஹோ!

படத்தில் நீ பார்ப்பது ஜெர்மனியில் நடந்த ஒரு டிவி ஷோவில் விருந்தினர் சாப் ஸ்டிக்கை வைத்துக்கொண்டு 25 மாடல் பெண்களின் பிராவைக் கழட்டுகிறார். அவர் மேல எந்த தப்பும் இல்லை. விருந்தினருக்கு சாப் ஸ்டிக் கொடுத்துவிட்டு உடனே ஏதாவது சாப்பிட கொடுத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? நாடு ரொம்ப முன்னேறி விட்டது, முற்போக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே அது இதுதானா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

திருவாரூர் அருகே உள்ள தங்களது குடும்பத்தின் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்று துணை முதல்வர் ஸ்டாலின் வழிபாடு செய்தார். காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மாள் சமாதிக்கு தனது மனைவி துர்காவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நாம் நாள் கிழமை என்றால் கோயிலுக்கு போவதில்லையா, திதி எல்லாம் செய்வதில்லையா அது போல தான் இதுவும். பகுத்தறிவுக்கோ, பெரியாருக்கோ தோல்வி எல்லாம் இல்லையாக்கும்!

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பை இழந்ததைத் தொடர்ந்து டோனி உருவபொம்மையை எரித்திருக்கிறார்கள் நம் ரசிகர்கள். நல்ல வேளை டெண்டுல்கர் வேடிக்கை பார்க்க மட்டும் போயிருக்கிறர். இனிமேல் ரிடையர் ஆன கிரிக்கெட் வீரர்கள் கமெண்டரி சொல்லப் போகலாம் அல்லது சியர் லீடர்ஸாக(யாருக்கு?)ப் போகலாம், கவர்ச்சியாக இருக்காது அவ்வளவு தான்.

கதாநாயகர்கள் தாங்கள் நடிக்கிற படங்களில் பாடுகிற கலாசாரம், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கமலஹாசன், விஜய் ஆகிய இருவரையும் தொடர்ந்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் `கந்தசாமி' படத்தில் விக்ரம் சொந்தக் குரலில் 4 பாடல்களைப் பாடியிருக்கிறார். இதேபோல் `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தனுஷ் சொந்த குரலில் பாடியிருக்கிறார். யார் சொன்னது, தமிழனுக்கு சகிப்புத் தன்மை கிடையாது என்று?

4 வயதில் தட்டமை நோயால் பாதிக்கப்பட்டு பார்வையைப் பறிகொடுத்த சக்கரவர்த்தி இப்போது கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் கோர்ட்டின் நீதிபதி. சட்டம் ஒரு இருட்டறை என்று அண்ணா சொன்னார் - இனியாவது நியாயத் தராசில் வெளிச்ச மழை பொழியட்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(31) தற்போது திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கும் முத்துராமலிங்கம், காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். 2 மகன், ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 150 வரை மட்டுமே சம்பளம் பெறும் இவர், கடந்த மே 8ம் தேதி ‘இந்தியாவின் கடனை அடைக்க’ என்று குறிப்பிட்டு ரூ.5,000க்கு டி.டி. எடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார். அதை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துக் கொண்டனர். அவருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். இதுபற்றி முத்துராமலிங்கம் கூறுகையில்,‘ நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.30,000ம் கடன் உள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். எனவே, சேமித்த பணத்தை, கடனை அடைக்க என்று எழுதி பிரதமருக்கு அனுப்பினேன்’ என்றார். ராமநாதபுரத்தில் ஏன் மழை பெய்வதில்லை?

ஈரோடு மாவட்ட காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஜோதிமணி தம்பதியின் மகன்கள் அருண் செல்வராஜ்(12) அன்பு வெற்றி(7). தமிழ் ஆர்வலரான சுப்பிரமணி தன் மூத்த மகன் அருண் செல்வராஜை 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்யவைத்தார் அவன் மேடை ஏறி திருக்குறள் அனைத்தையும் கூறி விளக்கி பலரது பாரட்டைப் பெற்றுவருகிறான். இந்த நேரத்தில் விதி விளையாடியது. இதய நோயாளியான அவன் அம்மா உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வியசாயக் கூலித் தொழிலாளியான சுப்பிரமணி சோர்ந்துபோனார். ஆனால் மனம் தளராது அருண் செல்வராஜ் தாயின் உயிரைக் காப்பாற்ற மேடை மேடையாக ஏறினான். ஏறக்குறைய 500 மேடைகளில் தனது மழலைக் குரலால் திருக்குறள் ஒப்புவித்து கண்ணீர் மல்க உதவி கேட்டான். பலர் உதவி செய்தார்கள். ஆனால் அவர் அம்மா ஆபரேஷன் செய்தும் பிழைக்கவில்லை. அருண் மனம் தளரவில்லை. தற்போது திருக்குறள் பொருள் கூறி சிடி வெளியிட்டுள்ளான். தற்போது தொல்காப்பியம், திருமந்திரம், பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை மனப்பாடம் செய்துவருகிறான். அண்ணனிடம் திருக்குறள் பயிற்சி பெற்று வருகிறான் தம்பி. தாயின் இடத்தை தாய்மொழி இட்டு நிரப்பட்டும்.

நடிகைளின் தாய்க்குலங்கள் எழுத்தாளினிகளுக்கு இணையாக இப்பொழுது பத்திரிகையில் கேள்வி பதில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது அட்வைஸ் - லேட்டஸ்ட் வரவு த்ரிஷா அம்மா. எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம், எந்த நடிகைகளின் அம்மாவை பார்த்தாலும் அக்கா தங்கை மாதிரி இருக்கிறார்களே ஏன்? சில சமயம் அம்மா தங்கை மாதிரியும் பெண் அக்கா மாதிரியும் இருக்கிறார்களே ஏன்? ஏன்??

ஔவையார் தெரியும் அவர் தங்கை உவ்வையார் தெரியுமா ?. இருவருக்குமாக ஒரு கோயில் நாகை மாவட்டத்தில் துளசியாபட்டினத்தில் உள்ளது. அவ்வை உவ்வை கோயில் என்று அழைக்கப்படுகிறது. அடுத்த ஷங்கர் படத்தில் அங்கவை சங்கவை மாதிரி அவ்வை உவ்வை காமெடி வந்தாலும் வரலாம்.

நயன்தாரா பற்றி நக்கீரன் முதல் ஆனந்தவிகடன் வரை கவர் ஸ்டோரி போட்டுவிட்டார்கள். நானும் என் பங்கிற்கு ஏதாவது போட வேண்டும் - சமீபத்தில் நயன்தாரா கேரளாவில் நடிக்கும் மலையாள படத்திற்காக இலவசமாக ஒரு நடனக் காட்சி அமைத்துக் கொடுத்தாராம் பிரபுதேவா படத்தின் பெயர் - பாடிகாட்.

கேரளாவில் இல்லாத இலக்கியச் செழுமை தமிழ்நாட்டில் இருக்கிறது என்கிறார் மனுஷ்யப்புத்திரன். இதற்கு சாரு, ஜெயமோகன் என்ன சொல்லுவார்கள் ? நிச்சயமா எனக்கு விடை தெரியாது ஆனால் "ஃபஸ்ட் நைட் லாஸ்ட் என்ன வித்தியாசம்?" என்பதற்கு விடை


பூ மேல நீ படுத்தா அது ஃபஸ்ட் நைட்.
படுக்கும்போது உன் மேல பூ விழுந்தா அது லாஸ்ட் நைட்


இப்ப குட் நைட்
அன்புள்ள
முனி

33 Comments:

Anonymous said...

///பூ மேல நீ படுத்தா அது ஃபஸ்ட் நைட்.
படுக்கும்போது உன் மேல பூ விழுந்தா அது லாஸ்ட் நைட்///


டேய் மவனே முனி!
நீ யாரு பெத்த மவராசனோ! நல்லா இரு!

மொதல்ல உங்க அம்மா கிட்ட சொல்லி சுத்திப் போடச்சொல்லு.
என்ன ஒரு அறிவு! ஊருல உள்ள எல்லார் கண்ணும் பட்டுடுத்து!

KGG9840937420 said...

முனிஸ்வரா!
இட்லி வடையை விட ரசித்து, ருசித்துப் படித்தேன்.
pure aathmaa - மல்லிகா பற்றி நாம் கூறுவதைவிட
படத்தில் ஜாக்கிச சான் காட்டும் அபிநயமும் நையாண்டியும்
அதிகமாக பொருத்தமாக இருக்கிறது.
செய்திகளும் - வழக்கமான முனி நையாண்டியும்
எப்பொழுதும்போல் சிறப்பாக உள்ளன.
வாழ்த்துக்கள்!
கௌதமன்.

Anonymous said...

யோவ் முனி!
அந்த மஞ்ச கமெண்ட தவிர இந்த போஸ்ட் "ஒரு சப்பை".
இந்த லெட்டர் எழுத ஒனக்கு ஏழு கடல் மாதிரி ஏழு மகாபாரத கேள்வி/பதில் வேற.

உன்னை அந்த மஞ்ச கமெண்ட் காப்பாத்திடுது. இல்லென என்னோட வாயில விழுந்து பொரப்பட்டுருப்ப! :-D

KGG9840937420 said...

முனிஸ்வரா!
இட்லி வடையை விட ரசித்து, ருசித்துப் படித்தேன்.
pure aathmaa - மல்லிகா பற்றி நாம் கூறுவதைவிட
படத்தில் ஜாக்கிச சான் காட்டும் அபிநயமும் நையாண்டியும்
அதிகமாக பொருத்தமாக இருக்கிறது.
செய்திகளும் - வழக்கமான முனி நையாண்டியும்
எப்பொழுதும்போல் சிறப்பாக உள்ளன.
வாழ்த்துக்கள்!
கௌதமன்.

இராயர் அமிர்தலிங்கம் said...

பூ மேல நீ படுத்தா அது ஃபஸ்ட் நைட்.
படுக்கும்போது உன் மேல பூ விழுந்தா அது லாஸ்ட் நைட்

what a dialog idli vadai???

R.Gopi said...

//மானஸ்தன் said...
யோவ் முனி!
அந்த மஞ்ச கமெண்ட தவிர இந்த போஸ்ட் "ஒரு சப்பை".
இந்த லெட்டர் எழுத ஒனக்கு ஏழு கடல் மாதிரி ஏழு மகாபாரத கேள்வி/பதில் வேற.

உன்னை அந்த மஞ்ச கமெண்ட் காப்பாத்திடுது. இல்லென என்னோட வாயில விழுந்து பொரப்பட்டுருப்ப! :-D//

**********

தல "மானஸ்தன்"

ஏன் இம்புட்டு கோவம்............

முனி கடுதாசி நல்லாதானே இருந்துச்சு..........

கிளுகிளுப்புக்கு "மல்லிகா", நயன்தாரா .....

R.Gopi said...

//மல்லிகா ஷெராவத்திற்கு. (தசாவதாரம் படத்தில் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு டான்ஸ் ஆடுவாரே, என் உடம்பு எவ்வளவு தெரிகிறதோ அதைவிட அதிகமா தமிழ் தெரியும்னு சொல்வாரே அவரே தான்)//

//பகுத்தறிவுக்கோ, பெரியாருக்கோ தோல்வி எல்லாம் இல்லையாக்கும்!//

//ரிடையர் ஆன கிரிக்கெட் வீரர்கள் கமெண்டரி சொல்லப் போகலாம் அல்லது சியர் லீடர்ஸாக(யாருக்கு?)ப் போகலாம், கவர்ச்சியாக இருக்காது //

// நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.30,000ம் கடன் உள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். எனவே, சேமித்த பணத்தை, கடனை அடைக்க என்று எழுதி பிரதமருக்கு அனுப்பினேன்’ என்றார். ராமநாதபுரத்தில் ஏன் மழை பெய்வதில்லை?//

//பூ மேல நீ படுத்தா அது ஃபஸ்ட் நைட்.
படுக்கும்போது உன் மேல பூ விழுந்தா அது லாஸ்ட் நைட்//

*********

இட்லிவடை

மானஸ்தன் சொல்றதுபோல அவ்வளவு ஒண்ணும் மோசம் இல்ல.. முனி லெட்டர் நல்லாத்தானே இருக்கு...........

நான் நினைக்கிறேன்

மானஸ்தன் "PIZZA"க்கு மாறிட்டாரோன்னு !!

Krish said...

///மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(31) தற்போது திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கும் முத்துராமலிங்கம், காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.////

இது தானோ நாட்டுப் பற்று! மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள், பத்துக்கும் இருபதுக்கும் கை ஏந்தும் அரசு அலுவலர்கள், தான் உண்டு வீடு உண்டு என இருக்கும் சுயநலவதிகளுக்கு நடுவில், இப்படியும் சில மனிதர்கள்!

Litmuszine said...

"/ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலின் அந்த வார்த்தையும், பத்து லட்சமாவது வார்த்தை ஆகும் போட்டியில் இடம்பெறுகின்றன/"

I.V, you seem to be late as mentioning that ஜெய் ஹோ still in competition.

"ஜெய் ஹோ' already booted out from the competition a week ago, got no 2 position.

1,000,000: Web 2.0 – The next generation of web products and services, coming soon to a browser near you.

999,999: Jai Ho! – The Hindi phrase signifying the joy of victory, used as an exclamation, sometimes rendered as “It is accomplished”. Achieved English-language popularity through the multiple Academy Award Winning film, “Slumdog Millionaire”.


Ref: http://www.languagemonitor.com/

IdlyVadai said...

//I.V, you seem to be late as mentioning that ஜெய் ஹோ still in competition.//

ஆமாம், தெரியும். web 2.0 என்று போட்டிருந்தால் இந்த கமெண்ட் வந்திருக்காது இல்லையா :-)

lalitha said...

இந்த போஸ்ட் "ஒரு சப்பை".
இந்த லெட்டர் எழுத ஒனக்கு ஏழு கடல் மாதிரி ஏழு மகாபாரத கேள்வி/பதில் வேற.

ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்கு
.கோபம்////// என்னதான் செய்வாரு பாவம் இட்லி வடை

Kameswara Rao said...

இ,வ,

தைலாபுரத்தில் தலைவர் தனியாக பேசும் நாள் கூட விரைவில் வரும். முத்துராமலிங்கத்தின் செயலுக்கும் ஒரு வந்தனம், மிகச்சிறந்த இந்தியக் குடிமகன் ஆவார், அருண் செல்வராஜ் மேலும் பல பாராட்டுக்களை பெற வாழ்த்துக்கள்,
துணை முதல்வரின் ஆலய வழிபாடு, --- பித்தலாட்டம்
pure aathamaa பட்டம் கிடைத்ததைத்தான் ஜாகீ பரிகசிக்கிராரோ
பட்டம் குடுத்தவர் "Pure Aathma" தானா என்று சந்தேகம்
எல்லாவற்றுக்கும் மேல் அந்த மஞ்சள் பஞ்ச் அருமை அருமை
முனீஸ்வர தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்

காமேஷ்

Anonymous said...

நான் திட்டியது இட்லி வடையை அல்ல. முனியை மட்டுமே. :-D :-)

காரணம் ஒன்று.
முனி குடுத்த பில்டப்.

காரணம் இரண்டு.
மல்லிகா, கட்டீஸ், சாப் ஸ்டிக், த்ரிஷா அம்மா, நயன் என்று நாட்டுக்கு ரொம்ப அவசியமான நியூஸ் போட்டதுக்கு.

@இட்லிவடை
முனி திருந்தி நல்லமாதிரியா லெட்டர் எழுதரவரைக்கும் அவர் கூட சகவாசம் வெச்சுக்காதீங்க. அதுதான் உங்களுக்கும் எங்கள மாதிரி "நல்ல" வாசகர்களுக்கும் நல்லது!

:-D :-)

IdlyVadai said...

//காரணம் ஒன்று.
முனி குடுத்த பில்டப்.//

பில்டம் கொடுத்து போட்ட போஸ்ட் போனவாரம் இந்த வாரம் எந்த பில்டப்பும் கொடுக்கல.

கண் தெரியாத நீதிபதி பற்றி எழுதினேன் அது எல்லாம் உங்க கண்ணுல தெரியல என்ன செய்ய ? தெரிஞ்சது எல்லாம் சரி வேண்டாம்.

லவ்டேல் மேடி said...

மல்லிகா செராவத்துக்கு இட்லி வடை சார்பாக கெட்டி சட்ட்னி 'னு பட்டம் குடுங்க... ஒண்ணா ஐக்கியம் ஆயிறலாம்.....


.......................................................................................................நல்ல வேல டாக்டர் பீஸ் கேக்காம இருந்தாரே.....


..............................................................................................................அடுத்த தடவ யெலெக்ஸன்ல தமிழ்நாட்ட ஜெர்மையோட இணைக்குறேன்னு எவன் சொல்லுரனோ ......... அவுனுக்குதான் எம்பட ஓட்டு.......


.................................................................................................
லட்சுமி ராயோட உருவ பொம்மை கெடைக்குல போல..........


....................................................................................................................அட பாவமே... முத்து ராம லிங்கம்ம் இவ்வளவு அப்பிராணி இருக்குறாரே... !!! அந்த பணத்த ஒரு அனர்த்த ஆஸ்ரமத்துக்கு குடுத்திரிந்தா கூட புண்ணியமா இருந்திருக்கும்....!!
அந்த ஐயாயிரம் ரூவா.. தலிவரு கட்டிங்க்க்கு கூட பத்தாதே....!!!!!


..........................................................................................................................................
அருண் வாழ்க்கையில் முன்னேற ஏன் பிரத்தனை மற்றும் வாழ்த்துக்கள்..............................................................................................................................
அட இதுகூட தெரியாதா... இப்பெல்லாம் ஆண்டிங்குளுக்குதான் மவுசு அதிகம்.....

கம்பியூட்டர்ல கூட விறைச்ச கொல்லுறதுக்கு ஆண்டியத்தான் யூஸ் பண்ணுறாங்க.....


மருந்துல கூட ஆண்டி பயாடிக், ஆண்டி செப்டிக் 'ன்னு... ஒரே ஆண்டி மோகம்தான்....


......................................................................................................................................பாவம்யா அவ்வையாறு... அவிகலயாச்சும் உட்டு வெய்யுங்க........

.......................................................................................................................................அதுலையும் சும்மிங் டிரஸ்சு போட்டுட்டு நடுச்சிருக்காங்களா.......????


அதுலதான் நெம்ப அழகா இருக்குது அந்த அம்முனி..........
..................................................................................................................."
பூ மேல நீ படுத்தா அது ஃபஸ்ட் நைட்.
படுக்கும்போது உன் மேல பூ விழுந்தா அது லாஸ்ட் நைட் "உனக்கு மட்டும்தான் மொக்க போடா தெரியுமா... எங்குளுக்கும் தெரியும்.......
" செக்கப்புக்கும் ...... பிக்கப்புக்கும் ....... என்ன வித்தியாசம்...?நர்சு நம்ம கய்ய புடுச்சா செக்கப்பு...........


நாம நர்சு கய்ய புடுச்சா பிக்கப்பு ............" வாழ்க்கை எனபது பனைமரம் போல.......மேல ஏறுனா நொங்கு .......


கீழ உழுந்தா சங்கு......... "
லவ்டேல் மேடி.......

Anonymous said...

IdlyVadai said...
///பில்டம் கொடுத்து போட்ட போஸ்ட் போனவாரம் இந்த வாரம் எந்த பில்டப்பும் கொடுக்கல.

கண் தெரியாத நீதிபதி பற்றி எழுதினேன் அது எல்லாம் உங்க கண்ணுல தெரியல என்ன செய்ய ? தெரிஞ்சது எல்லாம் சரி வேண்டாம்.///

தெரிஞ்சது. ஆனா (சரியாத்) தெரியல!
நீங்க போட்ட மற்ற மேட்டர் மொத்தமா கண்ணா கட்டிடுத்து.

நாங்க எப்பவுமே இட்லிவடை formula தான். 50% நக்கல். 25% நையாண்டி, 15% வம்பு, 10% ரகளை. அதுனால
கமெண்ட் அடிச்சா சீரியஸா எடுத்துக்காதீங்க அண்ணாச்சி.

கொதிக்கற எண்ணைல குதிக்கற வடை மாதிரி இல்லாம, நன்னா தோஞ்ச தயிருல இருக்க வடை மாதிரி சூலா இருக்கணும் நீங்க!

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

///ராமநாதபுரத்தில் ஏன் மழை பெய்வதில்லை?///

கண்டிப்பா மழை பெய்யாது.
இந்த மனிசன் புரியாம பணத்தை அனுப்பி வைக்கிறார். ஆனால் அது பல ஆயிரம் உயிர்களை கொல்வதற்கும், கொல்பாவ்ர்களை உதவவும்/காப்பாற்றவும் தான் பயன்படுகிறது...
சிலோன் நடந்ததை பார்த்த பிறகுமா அந்த சுமை தொழிலாளிக்கு தெரியலை..ஆனால் மனதளவில் அவ்ர் ஒரு நல்ல மனிதர். அதற்கு அவரை எவ்வள்வு பாராட்டினாலும் தகும். ஆனால் அவர் செய்த காரியம் எதற்கு பயன்படப்பொகிற்து என்று அவருக்கு தெரியாமல் போய்விட்டது.
அந்த பணத்தை தன் குடுமப்த்திற்காக செலவு செய்திருக்கலாம். இல்லையெனில், இலங்கை தமிழ் மக்கள்/அகதிகளுக்கு உதவியிருக்கலாம். ஓவ்வொருத்தரின் மீதுள்ள கொலை பழியில், தன்னுடைய பங்கு பாவத்திற்கு அவர் பிராயிச்சித்தம் செய்திருக்கலாம்...

Anonymous said...

இட்லி வடைக்கு ஒரு சஜஷன்: இட்லி வடை அபிமானிகள் பலர் நல்ல வேளையில் இருக்கலாம். அவர்கள் "இப்போதுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கு எந்த மேல் படிப்பு /காம்பயுடர் கோர்ஸ் படிக்கலாம்? , எந்த துறை வரும் காலத்தில் நன்கு டிமான்ட் இருக்கும்? போன்ற விஷயங்களை எழுத சொல்லலாம். பங்கு சந்தை தெரிந்தவர்கள் எப்படி முதலிடு செய்யலாம், என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் , எந்த ஷேர் வாங்கலாம் என்பதை பற்றி எழுத சொல்லலாம்.

KGG9840937420 said...

இட்லி வடை பங்குகள் விற்றால்
நான் வாங்கத் தயார்.
அவைகள் ஊசிப் போகாது என திடமாக நம்புகிறேன்.
சாம்பார் சட்டினி போன்ற போனஸ் பங்குகளும் அவ்வப்போது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கௌதமன்.

Anonymous said...

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது அதிர்ச்சியும் ஆத்திரமும் அளிப்பதாக உள்ளது என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


அண்ணாச்சி, தமிழ்நாட்டுக்கு எதுக்கு தண்ணி? அது தான் நாமெல்லாம் இந்தியன். நீங்க குடிச்சா என்ன? ஆந்திராகாரன் குடிச்சா என்ன? அவனும் குடிச்சுட்டு போகட்டும். ஒரு இந்தியனுக்காக இத கூட விட்டு கொடுக்க மாட்டோம்மா என்ன?. பல ஆயிரம் இலங்கை தமிழர்கள் சாகும் போது நாமெல்லாம் இந்தியன் என்று சொல்லி, இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு அவங்க சாவறதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். இப்ப்வும் அத மாதிரி இந்தியனுக்காக தண்ணி இல்லாம இருப்போம்... நமெல்லாம் இந்தியனுப்பா...

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

///
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது அதிர்ச்சியும் ஆத்திரமும் அளிப்பதாக உள்ளது என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
//

எதிர்காலத்தில், ’தமிழ்நாட்டு பிராமணர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை விட மோசமாக இருக்கிறார்கள்’ என்று எஸ்.வி சேகர் அவ்ர்கள் ஒரு பேட்டி கொடுப்பார்.

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

///
அண்ணாச்சி, தமிழ்நாட்டுக்கு எதுக்கு தண்ணி? அது தான் நாமெல்லாம் இந்தியன். நீங்க குடிச்சா என்ன? ஆந்திராகாரன் குடிச்சா என்ன? அவனும் குடிச்சுட்டு போகட்டும். ஒரு இந்தியனுக்காக இத கூட விட்டு கொடுக்க மாட்டோம்மா என்ன?. பல ஆயிரம் இலங்கை தமிழர்கள் சாகும் போது நாமெல்லாம் இந்தியன் என்று சொல்லி, இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு அவங்க சாவறதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். இப்ப்வும் அத மாதிரி இந்தியனுக்காக தண்ணி இல்லாம இருப்போம்... நமெல்லாம் இந்தியனுப்பா
///


அதுவும் சரிதான். நமக்கு எதுக்கு தண்ணி? கருநாடகா காரனும் தான் இந்தியன். அவன் காவிரி தண்னி குடுச்சால் என்ன? தமிழ்நாட்டு இந்தியன் குடிச்சா என்ன?அதனால் க்ருநாடாக தமிழ்நாட்டுக்கு தண்ணி குடிக்க வேண்டியதில்ல்லை. டது மாதிரி முல்லை பெரியாற்றிலும் தமிழ்நாட்டுக்கு தண்ணி கொடுக்க வேண்டியதில்லை. நாமெல்லாம் இந்தியனுப்பா...

அட ஓகேனக்கலையும் கருநாடகத்து கொடுத்துவோம். ஒரு சின்ன ஊர்க்காக நம் ரத்தம் இந்தியரிடம் சண்டையா? அதுவேல்ல்லம் கூடாது. நாமெல்லாம் இந்தியர்கள். அத்னால் ஓகேனக்கல் கருநாடாகவில் இருந்தாலென்ன? தமிழ்நாட்டில் இருந்தாலென்ன? இந்தியாவில் தானே இருக்கிறது...
வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்...

இராயர் அமிர்தலிங்கம் said...

அடுத்த சட்ட மன்ற தேர்தல் வரும் வரைக்கும் இட்லி வடை கடைக்கி வியாபாரம் கம்மியா தான் இருக்கும்

என்ன சரிதான ?

Anonymous said...

முன்பு ஓர் பின்னுட்டத்தில் ஆந்திர பாங்கை 60 ரூபாய்க்கு வங்க யாரோ அட்வைஸ் பண்ணினாங்க. ஆனால் இப்படி ஒருவர் கமன்ட்
( /// Vikram said...
"பங்கு சந்தையில் எருதுகளின் எழுச்சி"----- குருட்டு அதிஷ்டம் நம்புறவங்க தான் உங்கள் பின்னூட்டம் பார்த்துவிட்டு உங்களை போல் முதலீடு செய்வார்கள். /// )
செய்ததால் பின் எந்த ஃபாலோ அப்பும் இல்லை.அந்த ஆந்திர பேங்க் இப்ப 84 ரூபாய் இருக்குது. ( ரூபாய் 4.50 டிவிடெண்டுக்கு பின்னால் ) அதை இன்னமும் வைத்திருக்கலாமா? விற்றுவிடலமா? திரு விக்ரம் அண்ணன் பதில் சொன்னால் உபயோகமா இருக்கும்.மார்க்கெட் இறங்குமா?

IdlyVadai said...

பங்கு சந்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்கள் பதிவு எழுதினால் போடுகிறேன்.

வயதான வாலிபன் said...

///பூ மேல நீ படுத்தா அது ஃபஸ்ட் நைட்.
படுக்கும்போது உன் மேல பூ விழுந்தா அது லாஸ்ட் நைட்///

எல்லாம் வல்ல இறைவா போற்றி
இட்லிவடையை காத்து அருள்வாய் போற்றி.

கிரி said...

கடிதம் நல்லா இருக்கு :-)

Baski said...

/////
அண்ணாச்சி, தமிழ்நாட்டுக்கு எதுக்கு தண்ணி? அது தான் நாமெல்லாம் இந்தியன். நீங்க குடிச்சா என்ன? ஆந்திராகாரன் குடிச்சா என்ன? அவனும் குடிச்சுட்டு போகட்டும். ஒரு இந்தியனுக்காக இத கூட விட்டு கொடுக்க மாட்டோம்மா என்ன?. பல ஆயிரம் இலங்கை தமிழர்கள் சாகும் போது நாமெல்லாம் இந்தியன் என்று சொல்லி, இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு அவங்க சாவறதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். இப்ப்வும் அத மாதிரி இந்தியனுக்காக தண்ணி இல்லாம இருப்போம்... நமெல்லாம் இந்தியனுப்பா
////


என்னானுறீங்க. ஒரு வேலை "இந்தியன் பீஸ் கீப்பிங் போர்சு" அனுப்பிருகனுமோ?

வைகோ பேசுறதை கேட்டுவிட்டு சும்மா குதிகாதீங்க.

இதற்கு (இந்த பேரழிவிற்கு) காரணம் பிரபாகரன் தான்.

எல்லாம் முடிஞ்சு போச்சு! இனி பேசி ப்ரோயோஜனம் இல்லை.

இந்திய இறையாண்மையை அசிங்க படுத்தும் உங்களை மாறி ஆள்களை எல்லாம் தூக்கில் போட வேண்டும்.


இந்த இந்திய இறையான்மையால் தான் உங்களுக்கு ஏதோ தண்ணி வந்துகிட்டு இருக்கு.

நீங்க தமிழன் , தமிழினம் ன்னு பேசிகிட்டே இருங்க., முட்டா பசங்களா !

தமிழினம் கண்டுடீங்கனா அப்பரும் மூத்திரம் மட்டும் தான் பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து வரும். குடிக்க தயாரா ??

Anonymous said...

இட்லி வடை கேபிள் சங்கரை காப்பியடித்து ஏ ஜோக் போட முயல்வது ஏனோ?.

கிராம் said...

முனி கடிதம் டாப்பு!

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

//என்னானுறீங்க. ஒரு வேலை "இந்தியன் பீஸ் கீப்பிங் போர்சு" அனுப்பிருகனுமோ?

வைகோ பேசுறதை கேட்டுவிட்டு சும்மா குதிகாதீங்க.

இதற்கு (இந்த பேரழிவிற்கு) காரணம் பிரபாகரன் தான்.

எல்லாம் முடிஞ்சு போச்சு! இனி பேசி ப்ரோயோஜனம் இல்லை.

இந்திய இறையாண்மையை அசிங்க படுத்தும் உங்களை மாறி ஆள்களை எல்லாம் தூக்கில் போட வேண்டும்.


இந்த இந்திய இறையான்மையால் தான் உங்களுக்கு ஏதோ தண்ணி வந்துகிட்டு இருக்கு.

நீங்க தமிழன் , தமிழினம் ன்னு பேசிகிட்டே இருங்க., முட்டா பசங்களா !

தமிழினம் கண்டுடீங்கனா அப்பரும் மூத்திரம் மட்டும் தான் பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து வரும். குடிக்க தயாரா ??
//

ஐயா,
சிந்து நதியில வருகிற தண்ணிய பாகிஸ்தானுக்கு கரெக்ட்டா விடாமல் இருந்தா, இந்தியாவிற்கு ஆப்பு வைத்துவிடும் உலக சமுதாயம். அந்த பாகிஸ்தானெ - இந்தியாஅவின் ஒரு மாநிலமாக இருந்தால் நீங்க சொன்ன மாதிரி மோத்திரம் தான் வரும். அப்படி வரும் மோத்திரத்தையும் ' தீர்த்தம்'னு சொல்லி விக்கிற கூட்டம் இருக்கிறது.
கங்கை தண்ணியும் பங்களாதேஷ்க்கு கரெக்டா அபுப்பி வைக்கனும் தெரியும்ல. போயி உலக நாடுகளின் நதி நீர் பகிர்ப்பு பத்தி படிங்க..
நீஙக் சொன்னா மாதிரி தமிழினம் கண்டால். கண்டிப்பாக காவேரி தண்ணீர், இந்தியா கொடுத்தாகனும். இப்ப மாதிர் ஏமாத்த முடியாது. (நைல் நதி எப்படி எகிப்துக்கு சொந்தம் நெறு படித்து வாருங்கள். நைல் நதி எகிப்தில் உருவாக்வில்லை. பல் நாடுகளை கடந்து தான் எகிப்திற்கு வருகிரது. அந்த நாடுகள்ம் கண்டிப்பாக் எகிப்திற்கு டஹ்ண்ணீர் கொடுக்க வேண்டும்)

இந்திய் இறையண்மையின் இப்ப கத்திறீங்களே?
பங்காளாதேஷ் விடுதலையான் போது, பாகிஸ்தானிற்கு எதிராக நீங்க இந்தியா செய்த்து என்ன பாகிஸ்தானின் இறையாண்மைக்கு உட்பட்ட. உலகத்திலே இந்தியாவிற்கு மட்டும் தான் இறையாண்மை இருக்கா?

இலங்கையில் தமிழீழம் கேட்டு போராளிகள் போராடியது போது, அவர்காளுக்கு இந்தியாவில் ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்பொது இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படவில்லையா?.அடுத்த நாட்டில் குழப்பம் விளைவிக்கும் செயலில் இந்தியா ஈடுபடும் போது தன் இறையாண்மை பாதிக்கப்படவில்லையா?
இது மாதிரி, தனி நாடு கேட்டு ஏதாவ்து ஒரு குழு இந்தியாவில் போராடினால் அவர்காளுக்கு பாகிஸ்தான் உதவினால் இந்தியா பொறுத்து கொள்ளுமா?

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

///
என்னானுறீங்க. ஒரு வேலை "இந்தியன் பீஸ் கீப்பிங் போர்சு" அனுப்பிருகனுமோ?
///

அத அனுப்பி தான் எத்தனையோ உயிர்களை கொன்றதும், எத்தனையோ பெண்களை கற்பழித்ததும் போதாதா. இன்னுமா?

எவ்வளவு தைரியம் இருந்தா தண்ணி கேட்பானு? காவேரி தண்ணிய இலங்கை தமிழ்ரக்ளுக்கு(உங்கள் பாசையில் தீவிரவாதிகள்) கொடுக்கிறாங்க. அத நிறுத்தனும் சொல்லி
செய்தாலும் செய்வாங்க. தமிழ்நாட்டிலும் அவர்களின் வெறியாட்டாத்தை....

///
இதற்கு (இந்த பேரழிவிற்கு) காரணம் பிரபாகரன் தான்.
//
ஆந்திரா பாலாற்றில் அணை கட்டுவதற்கும் பிரபாகரனுக்கு என்ன சம்பந்தம்?
கொஞ்ச விட்டா இந்தியனுக்கு மூத்திரம் வரலைனா கூட பிரபாகரன் தான் காரணம் என்று சொல்லுவீங்க போலிருக்கே...

Eswari said...

பகுத்தறிவுல ஆன்மிகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஆண்மீகத்தில பகுத்தறிவு இருக்குதுங்க அண்ணா................