பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 26, 2009

10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - 11th std மாணவர் கருத்து

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாட திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இத்திட்டத்தை மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்கிறது. இதன் அடிப்படையில் 10-வது வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து விட்டு 12-ம் வகுப்பு பொது தேர்வை மட்டும் மாணவர்களுக்கு வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
( அடுத்த வாரம் ஞாநியிடமிருந்து கபில் சிபலுக்கு பூச்சிண்டு நிச்சயம் )

இதை பற்றி இன்று வந்த கருத்துக்களை படித்தால் பலரை பற்றி புரிந்துக்கொள்ள முடிகிறது. குறிப்பாக பொற்றோர்கள்...


இன்று வந்த செய்திகளில் ( மாலைமலர் ) டாக்டர், என்ஜினீயர், வக்கீல், ஆசிரியர் சில மாணவர்கள் கருத்து ஒரே மாதிரி இருக்கிறது - அதாவது பொது தேர்வு தேவை என்று.

சில மாணவர்கள் மட்டும் பொது தேர்வு ரத்து வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

"எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) தேர்வை ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு கேரள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கேரள கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். எவ்வளவு மக்கள் இதை படித்திருப்பார்கள், இவர் எவ்வளவு மக்களிடம் கருத்து கேட்டிருப்பார் என்று தெரியாது. அரசியல்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்தால் மாணவர்கள் மத்தியில் படிப்பு பற்றிய பயம் போய்விடும் மற்றும் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம் மங்கிவிடும் என்று நிறைய பெற்றோர்கள் கூறுவதாகவும் செய்தி வந்திருக்கிறது.

பொற்றோர்கள் மாணவர்கள் படிப்பை பயத்துடன் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு தங்கள் பிள்ளைகள் அறிவை வளர்க்க விருப்பப்படவில்லை என்று தெரிகிறது.

வாசகர் கமெண்ட் ஒன்று இப்படி வந்திருக்கிறது

நானும் பத்தாம் படிச்சி 395 மதிப்பேன் பெற்றுள்ளேன். இது மட்டும் பொதுத்தேர்வு இல்லாம இருந்தால் நான் 250 கூட எடுத்திருக்க மாட்டேன். இப்ப நான் கேட்ட குருப் கிடைக்குது. இல்லாட்டி லோலோன்னு சுத்த வேண்டியது தான். அதனால் பொதுத்தேர்வு ரத்து செய்ய கூடாது. இப்படிக்கு மாணவர்கள் நலம் விரும்பும் 11thமாணவர்


இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், நாளை அமெரிக்கா சென்று திரும்பியவுடன் ஏர்போர்ட்டிலிருந்து கால் டாக்ஸியில் வரும் போது... "அமெரிக்காவில் இந்த மாதிரி பொது தேர்வு எல்லாம் கிடையாது சார், அங்கே படிப்பே வேறு மாதிரி....இங்கேயும் தான் இருக்கே.... அமெரிக்கா அமெரிக்கா தான்" என்று சலித்துக்கொள்வார்கள்.

37 Comments:

மானஸ்தன் said...

நன்றி.

மானஸ்தன் said...

நல்ல முடிவு. வரவேற்போம்.

குழந்தைகள் "stress" இல்லாமல் அறிவை வளர்த்துக்கொள்ள வழி வகுப்போம்.

Erode Nagaraj... said...

i know mr.m.a.baby personally. if he says, it might be true only...

Anonymous said...

//இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், நாளை அமெரிக்கா சென்று திரும்பியவுடன் ஏர்போர்ட்டிலிருந்து கால் டாக்ஸியில் வரும் போது... "அமெரிக்காவில் இந்த மாதிரி பொது தேர்வு எல்லாம் கிடையாது சார், அங்கே படிப்பே வேறு மாதிரி....இங்கேயும் தான் இருக்கே.... அமெரிக்கா அமெரிக்கா தான்" என்று சலித்துக்கொள்வார்கள்//

அவங்க அப்படித்தான். ஆனா இப்படி எதையெடுத்தாலும் மாத்தனும்னு எழுதறவங்க, மாத்தினா என்ன ஆகும்னு விவரமாத்தான் எழுதறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எடுத்தாச்சு. இப்ப என்னாகும்? பதினொன்னாவது வகுப்பில வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருக்கு. பொருளாதாரம், கனிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல், கண்ணி படிப்புன்னு... ஆனா எல்லாத்துக்கும் குறிப்பிட்ட சீட்கள்தான் இருக்கு. அதை மாத்தி விரும்பறவங்களுக்கு விரும்பற சீட் கொடுக்கலாம்னு மாத்திரலாம். இங்க நிறைய கம்பெனிகள் குதிரைகு கடிவாளம் போட்ட மாதிரி பொறியியல் படிச்சவஙகளுக்கு மட்டும் பொட்டி தட்டற வேலை கொடுக்கிறாங்க. அதையும் மாத்தி எல்லாருக்கும் பொறியியல் படிப்புக்கான சீட்டு கொடுத்திடலாம். மெடிக்கல் சீட்டுக்கு 20-40 லட்சம் வாங்கறாறாம் ஜெகத்ரட்சகன். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் ஒழிச்சிட்டா அவரு 1 கோடியாக் கூட ஏத்திடுவார் சீட்டை.

அய்யா.... பிரச்சினை பொதுத் தேர்வில இல்லை. சமச்சீரான வேலைவாய்ப்பு இல்லாததுன்னு எப்ப புரிஞ்சிப்பீங்க? அமெரிக்கா உதாரணம் சொல்றாங்கன்னா அங்க பொட்டி தட்டற வேலை பாக்கறவனும், குழாய் ரிப்பே பண்றவனும் ஒரே மாதிரி சம்பாதிக்கிறான். அதனால அவனுக்கு தொழில் படிப்பு கை கொடுக்குது. அப்படியே குழாய் ரிப்பேர் செய்ய சரியான ஆள் கிடைக்கலன்னா ‘யப்பா யாராவது இருக்கீங்களா’ன்னு மெக்ஸிகோ பக்கம் குரல் கொடுத்தா ஆயிரகணக்கில வந்து செஞ்சு கொடுக்க ஆள் இருக்காங்க. குரல் கொடுக்காமலேயே ஆசியர்கள் முண்டியடிச்சிட்டு இருக்கோம்.

பிரச்சினையோட வேரை புரிஞ்சிக்காம எத்தையாவது செஞ்சா அரசியல்வாதிகள் மற்றும் சுரண்டல்காரஙகளுக்குத்தான் அதிக லாபம். இதுக்கு முன்னாடி புண்ணியவான் முரளி மனோகர் ஜோஷி தடாலடியா பண்றேன்னு கூத்தடிச்சார். இப்ப கபில்சிபல் முறை.

நீங்களாவது எழுத முன்னாடி யோசிங்கைய்யா... யோசிங்க.

Anonymous said...

America has common SAT/ ACT tests for all the students throughout US. This is in addition to subject exams by school district...!

ஆ.ஞானசேகரன் said...

//இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், நாளை அமெரிக்கா சென்று திரும்பியவுடன் ஏர்போர்ட்டிலிருந்து கால் டாக்ஸியில் வரும் போது... "அமெரிக்காவில் இந்த மாதிரி பொது தேர்வு எல்லாம் கிடையாது சார், அங்கே படிப்பே வேறு மாதிரி....இங்கேயும் தான் இருக்கே.... அமெரிக்கா அமெரிக்கா தான்" என்று சலித்துக்கொள்வார்கள்.//


உண்மை போட்டு உடைக்காதீங்க

நான் இதை வரவேற்கின்றேன்... ஆனால் பொறுப்புடன் அதிகாரிகள் நடந்துக்கொண்டு செயல்ப்படுத்தவேண்டும் என்பதே என் ஆசை

லவ்டேல் மேடி said...

என்னை கேட்டால்.. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அவசியம் தேவை... !!

அதற்க்கு பதிலாக பாட திட்டத்தை கடினமற்றதாக மாற்றி அமைக்கலாம்.. !!

Anonymous said...

அடுத்த வாரம் ஞாநியிடமிருந்து கபில் சிபலுக்கு பூச்சிண்டு நிச்சயம்.

SO neenga gnani thannu enakku paduthu.
Raj from LA.

Sundara said...

நமது - குறிப்பாக தமிழகத்தின் - கல்விமுறை அகல உழவு.
அமெரிக்கக் கல்வி முறை ஆழ உழவு.
இதுதான் வித்தியாசம்.
எது முக்கியம் என்பதை கல்வியாளர்கள்தான் நிச்சயிக்கவேண்டும்.
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனி கால்கள்? என்ற கேள்விக்குப் பதில் அளிப்பது நமது கல்வி முறை.
which inset has eight legs என்பது அவர்கள் கல்விமுறை.

kggouthaman said...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இல்லை என்றால்,
மாணவர்கள் திடீரென்று 12 ஆம் வகுப்பு பொதுத்
தேர்வை எதிர்க்கொண்டால் - அவர்கள் Funk
ஆவதற்குச சாத்தியக் கூறுகள் அதிகம்.
ஏற்கெனவே வாழ்க்கையில் ஒரு பொதுத் தேர்வைச் சந்தித்தவர்கள்
தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுவார்கள்.

மீனாக்ஷி கௌதமன்.

kggouthaman said...

நமது - குறிப்பாக தமிழகத்தின் - கல்விமுறை அகல உழுவது... அமெரிக்கக் கல்வி முறை ஆழ உழவு.
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனி கால்கள்? என்ற கேள்விக்குப் பதில் அளிப்பது நமது கல்வி முறை.
which insect has eight legs என்பது அவர்கள் கல்விமுறை.
.

-- உதாரணம் சரியில்லையோ என்று தோன்றுகிறது.

"பூச்சி இனங்களுக்கு கால்கள் உண்டா? எவ்வளவு? விதிவிலக்கு எது? ஏன் ? எப்படி?"
--- அகல உழுவது.
"எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்?" - ஆழ உழுவது

Anonymous said...

"அங்க பொட்டி தட்டற வேலை பாக்கறவனும், குழாய் ரிப்பே பண்றவனும் ஒரே மாதிரி சம்பாதிக்கிறான்"

This is true. But this cannot be implemented here. Plumber, Road Podaravan, Muttai thukkaravan ellam neraiya sambadicha appram arasiyalvadigalukku poster otta, manadu aaall serka llam varamattanga. Panam sambadikka arambicha avan jakkiradhai ya agiduvan.. Avanai appadiye than vaithirukka vendum appo than arasiyal nadakka mudium..

M Arunachalam said...

IV,

Pl highlight this week's Thuglaq cover page cartoon.

It is a SERUPPADI cartoon.

If the person concerned or his followers, assuming they are TRUE TAMILIANS, have any inkling of VEKKAM, MAANAM, SOODU & SORANAI, they will at least feel obliged to condemn Karunanidhi or put pressure on him to act in a meaningful way.

But, if they are ONLY A DRAVIDA KUNJU (like UMA & some anonys), we can understand that all these VEKKAM, MAANAM, SOODU & SORANAI are "unknown commodities for a Dravida Kunju" and they will only keep a studied silence & start harping on anti-Cho or anti-Brahmin propaganda to DIVERT ATTENTION from the issue of WHY KARUNANIDHI IS NOT PREPARED TO PRESSURISE THE CENTRE FOR PUBLIC CAUSES IN THE SAME WAY THAT HE PRESURISES THEM FOR HIS MINISTERIAL OR FAMILY RELATED MATTERS.

SathyaRam said...

bAD MOVE. People need to write 10th exam otherwise we cant impact seriousness. may be our government is worried that in March the Manada Mayilada show has poor rating. so they are trying to correct.

Dinakaran headline - '10 Vagupu Thervu Oyindadhu' - The heading says the state of the country

மானஸ்தன் said...

/////அவங்க அப்படித்தான். ஆனா இப்படி எதையெடுத்தாலும் மாத்தனும்னு எழுதறவங்க, மாத்தினா என்ன ஆகும்னு விவரமாத்தான் எழுதறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எடுத்தாச்சு. இப்ப என்னாகும்? பதினொன்னாவது வகுப்பில வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருக்கு. பொருளாதாரம், கனிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல், கண்ணி படிப்புன்னு... ஆனா எல்லாத்துக்கும் குறிப்பிட்ட சீட்கள்தான் இருக்கு. அதை மாத்தி விரும்பறவங்களுக்கு விரும்பற சீட் கொடுக்கலாம்னு மாத்திரலாம். இங்க நிறைய கம்பெனிகள் குதிரைகு கடிவாளம் போட்ட மாதிரி பொறியியல் படிச்சவஙகளுக்கு மட்டும் பொட்டி தட்டற வேலை கொடுக்கிறாங்க. அதையும் மாத்தி எல்லாருக்கும் பொறியியல் படிப்புக்கான சீட்டு கொடுத்திடலாம். மெடிக்கல் சீட்டுக்கு 20-40 லட்சம் வாங்கறாறாம் ஜெகத்ரட்சகன். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் ஒழிச்சிட்டா அவரு 1 கோடியாக் கூட ஏத்திடுவார் சீட்டை.////

திரு அனானி அவர்களே.
(1) பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எடுக்கணும் என்று எடுக்கப்பட்டுள்ள முடிவு முதல் படிதான். அடுத்தது +2வையும் இதே போலவே மாற்ற வேண்டும்.

(2) for all the college admissions, the administrators must evolve a common entrance, and based on the ranks the students can be admitted to various streams - be it engineering, medicine, commerce, arts or science.

(3) students should NOT be taxed with too many entrance examinations. in my opinion IIT-JEE and AIEEE must be merged for admissions to IITs and NITs.
(i personally know students who got admitted in IITs like Guwahati or Roorkee, prefer NITs (Trichy or Surathkal) for obvious reasons). the students of the current-age are choosy, and prefer better courses (of their choice) over better institutions.

(4) one more major issue with all these "mundane" mug-and-vomit type "marathon" 3 hour examinations is that the students are completely "burnt-out" in the 10+2 stream itself, and they (i mean a good-lot of students") lose interest to showcase their talent in their higher education pursuits.

(5) like the western system - the students must be given an opportunity to choose their subjects for higher education (for which they need to prove their mettle in the entrance) and engineering courses must be tuned with more practical orientation than the current "text-book" learning.
(as all of know, with the growth of புற்றீசல் engineering colleges, students who have just-merely-passed +2 can get an admit for engineering!!!).

(6) the parents, instead of making a hue-and-cry on the abolishment of public examinations, must realise the situation and make their kids learn what they are interested in - rather than forcing them to do "engineering"/"medicine". the country is in need of good "scientists", "accountants", "journalists" and for that matter good "committed teachers" (right from school to university). today, the education system is collapsing/dying (i am sorry to say this) because of dearth of faculty - in terms of quantity and quality as well. in the early days the teachers "commanded" respect from all corners, but today it is NOT the situation.

(7) the "latent-talent" of kids must be identified and nurtured without "taxing" them too much (for which the existing unhealthy-examination procedures must be thrown to the dust-bin right away.)

இந்த மாற்றங்கள் கொண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. இருந்தாலும் யாராவது ஒருநாள் இதைச் செய்துதான் ஆகவேண்டும்

Anonymous said...

தேர்வு என்பதை ரத்து செய்வது, அகில இந்தியாவிற்கும் ஒரே போர்டு போன்றவை தில்லியில் வெயில் மிக அதிகம் என்பதைக் காட்டுகின்றன.
10ம் வகுப்பு தேர்வு ஒரு அளவீடு.
அதை எடுத்துவிட்டால் படிப்பில் மாணவர்களுக்கு அக்கறை குறைந்துவிடும்.

Erode Nagaraj... said...

I second mAnasthan.

Lack of Common Sense, Confidence, Presence of Mind and going drained if illustrations are limited, getting tensed for even smallest hurdles have become common qualities of a major percentage of present day's students.

டகிள் பாட்சா said...

இந்த Test எல்லாம் வச்சாதானே இவனுங்க படிச்சு முன்னேறி நமக்கெல்லாம் தண்ணி காட்டறாங்க! Test இல்லேன்னா எவன் ஒழுங்கா படிக்கபோறான். அப்புறம் இந்த படிக்காதவன் ஓட்டெல்லாம் நமக்குதான் என்று எல்லா அரசியல்வாதிக்கும் சந்தோஷம்

Shankar said...

தேர்வு ரத்து என்பது தவறான முடிவு. இது மாணவ,மாணவியர்களுக்கு கெடுதலாகவே முடியும். எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை ஓப்பிடக்கூடாது. அமெரிக்காவில் எத்தனை பேர் 10வது தாண்டியும் படிக்கிறார்கள்? வெகு குறைவே. 10வது முடித்தவுடன் அவரவர் வேலையைப் பாத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். பெற்றோர் கவனிப்பு என்பது தேவையற்ற ஒன்றென விவரமாகிவிடுகிறார்கள். மேற்படிப்பிற்கு வருபவர்கள் சொற்பமே...அதனால் தான் ஆசிய மாணவர்க அமெரிக்க பல்கலைக் கழகங்களில் அதிகம். என்னைப் பொறுத்தவரை, இந்த மாதிரி ஒரு முடிவு, கல்விக்கொள்ளையர்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல் ஒரு கல்விக்கொள்ளையர் மந்திரியாக வேறு இருக்கிறார்.

RamKumar said...

இதற்கு முன்னால் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இருந்தன அதை எடுத்த பின்னர் மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது. சிபிஎஸ்சியை விட நம் மாநில போர்டு தேர்வுகள் மணப்பாடம் செய்து படித்ததை அப்படியே எழுதும் பழக்கத்தை தான் வளர்க்கிறது. அதை எவ்வளவு அழகாக செய்கிறோமோ அவ்வளவு அழகாக மதிப்பென்கள் கிடைக்கின்றன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நீக்கினோம் என்றால் அரசு சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டி வரும். பதினொன்றாம் வகுப்பு முதல் மாணவர் கேட்கும் குரூப்பை பள்ளிகள் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவர்களும் பிறரின் கட்டாயத்திற்கு ஆளாகாமல் தங்களுக்கு பிடித்த குரூப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள இந்த குரூப்பை தான் நீ எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. இதனால் மாணவர்களுக்கு சுயமாக சிந்திக்கின்ற தன்மை வளரும். ஒரு துறையை நாம் விரும்பி படிப்பதற்கும் , மற்றவர்கள் கட்டாயப்படுத்தி நம்மை படிக்க வைப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகம், இது மேற்படிப்பில், வாழ்க்கையில் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒன்று. அமெரிக்காவில் இதை நாம் கானலாம் ஒரு படிப்பை விரும்பி படிப்பதால் அதில் நாட்டம் உண்டாகிறது. அதில் சாதனைகள் புரிய வேண்டும் , புது கண்டுப்பிடிப்புகள் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் உருவாகிறது. இதனால் தான் மேலை நாட்டினர் தற்காலத்தில் பல கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். வேலையை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு படிப்பது கடனே என்றுதான் கழியும்.

நன்றி,
ராம்குமரன்

R.Gopi said...

//லவ்டேல் மேடி said...
என்னை கேட்டால்.. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அவசியம் தேவை... !!

அதற்க்கு பதிலாக பாட திட்டத்தை கடினமற்றதாக மாற்றி அமைக்கலாம்.. !!//

*********

A good idea from லவ்டேல் மேடி

R.Gopi said...

//kggouthaman said...
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இல்லை என்றால்,
மாணவர்கள் திடீரென்று 12 ஆம் வகுப்பு பொதுத்
தேர்வை எதிர்க்கொண்டால் - அவர்கள் Funk
ஆவதற்குச சாத்தியக் கூறுகள் அதிகம்.
ஏற்கெனவே வாழ்க்கையில் ஒரு பொதுத் தேர்வைச் சந்தித்தவர்கள்
தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுவார்கள்.

மீனாக்ஷி கௌதமன்.//

***********

Ippadiyum oru sangadam irukku.....

Inba said...

பத்தாம் வகுப்பு என்பது
கல்வி பயணத்தில்
ஒரு மாணவன் பக்குவம் அடையும் இடம்.

பொது தேர்வு
மிகவும் அத்தியாவசியமானது

nerkuppai thumbi said...

கல்வி முறைகள் வேலை வாய்ப்பு அதற்காக் இருக்கும் போட்டி, முதலியன சம்பந்தப் பட்ட விஷயங்கள். இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்பிட முடியாத துருவங்கள்.
எவ்வளவு பேர் பத்துடன் படிப்பை நிறுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் ஏன் நிறுத்துகிறார்கள்.? பத்து பொது தேர்வு நிறுத்தப்பட்டு விட்டால், அவர்களுக்கு பள்ளியில் கொடுத்த சான்றிதழ் இருக்கும். அதை எந்த அளவு நம்பி, தனியார் துறையில் குமாஸ்தா வேலைக்கு எடுத்துக்கொள்வார்களா? I T I போன்ற தொழில் கைவினை கல்வி நிறுவனங்களில் இந்த பத்தாம் படிப்பு சான்றிதழ் மேல் ஆதாரம் கொண்டு சேர்த்துக் கொள்வார்களா ? இல்லை அவர்களும் ஒரு COMMON ENTRANCE EXAMINATION என்று ஆரம்பிப்பார்களா?

பள்ளிகளின் நிலை, ஒப்புறவு KAANPADHARKU அப்பாற்பட்டது. அரசாங்க பள்ளிகளின் இடையே கூட மலைக்கும் மடுவுக்கும் இDAIயேயான வேறுபாடு உண்டு. SAIDHAPETTAI அரசு பத்தாம் வகுப்பும், சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பும் நெல்லை திசையன்விளை .பள்ளியில் பத்தாம் வகுப்பும் ஒன்று ஆகாது. அவைகளை சமன் உறுத்தவே பொது தேர்வு ஒன்று வேண்டும்.

ஒன்று செய்யலாம். பத்துடன் நிறுத்தி கொள்ள விழைபவர்கள் பொது தேர்வு எடுத்து கொள்ளலாம். மேற படிப்புக்கு போகும் மாணவர்கள் தொடர்ந்து 12 முடித்து பொது தேர்வு எழுதலாம்.

Erode Nagaraj... said...

பொதுத் தேர்வு ரத்துக்கு பின்னூட்டம் இடப்போய் அது சற்று நீண்டு விட்டதால், என் வலைப் பக்கத்தில் (இல்ல இல்ல, அதுலேயே தான்!) போட்டு விட்டேன்! தமிழ் கூறும் நல்லுலக இட்லி வடையார் தம் கருத்தைப் பதிவு செய்யுமாறு கோருகிறேன்...

நானும் அவ்வண்ணமே கோருகிறேன்.. (வேற யாரு, நான் தான்!)

kggouthaman said...

WELL SAID NERKUPPAI THUMBI. WORTHY VIEWS.

Anonymous said...

பகுத்தறிவும் பக்தி தரும்!

என்னது கடவுள் நம்பிக்கையை பகுத்தறிவுதான் தருகிறதா? ஏன் இப்படி தலைப்பிலேயே குழப்பறாங்க என்று நீங்கள் யோசித்தவாறே இந்தக கட்டுரையில் நுழையறீங்களா? வாங்க! உங்களைத்தான் தேடுகிறோம்!.

பகுத்தறிவு என்பதும் தன்னம்பிககை என்பதும் நமக்கு நாமே கொடுத்துக கொள்கிற டானிக்குகள்தான் இல்லையா? இந்த ‘தன்னம்பிககை’ என்ற வார்த்தையை வைத்துக கொண்டு ஏகப்பட்ட ஜல்லியடி நாட்டில் நடககிறது-ஏகப்பட்ட எழுத்தாளர்கள், பப்ளிஷர்கள் பிழைப்பை பெருக்கிக கொண்டிருககிறார்கள். அதை மறுபடி ஒரு முறை பார்ககலாம். இப்போது ‘பகுத்தறிவு’.

பகுத்தறிவு என்பது உண்மையில் என்ன?

நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி ‘கடவுள் இல்லை’ என்பதுதான் பகுத்தறிவா?.

மிகச் சரியாகச் சொன்னால் கடவுள் இருககிறாரா, அதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை யோசிப்பதும்-கடவுள் இல்லை என்றால் அதற்கான சான்றுகள் என்ன என்பதை நமககுள் யாசிப்பதுமே பகுத்தாயும் அறிவு அதாவது- பகுத்தறிவு. இல்லையா?.

ஆனால் நம்மில் பலர் கடவுள் இல்லை என்று வாதாடுவதுதான் பகுத்தறிவு என்றே எண்ணிக கொண்டிருககிறோம். பல பகுத்தறிவுவாதிகளின் வாதமும் அதுதான். அதனால்தானோ என்னவோ பகுத்தறிவுவாதிகள் பலர் நமது சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாய் எண்ணப்படுகின்றனர் அல்லது ஒதுங்கியிருககின்றனர்.

பகுத்தறிவுவாதிகள் சமுதாயத்தோடு ஒட்டாமல் தனியராய் இருந்தால் அந்த சமுதாயம் சிந்திக்க மறுககும் சமுதாயமாகத்தானே அர்த்தம்.

நாம் நம் மீது சந்தேகப்படும்போதெல்லாம் நம் பகுத்தறிவுதானே நமககு வழித்துணை? நம் மீது விசாரணைகள் ஏவப்படும்போதெல்லாம் நாமெப்படி சிந்திககிறோம்? அல்லது நிர்ப்பந்திககப்படுகிறோம்?.

கடவுள் இருககிறார் என்று மார்தட்டுவதும் பகுத்தறிவுதான், கடவுள் இருககிறாரா என்று கேள்வி எழுப்பதும் பகுத்தறிவுதான். நமககுள் ஒரு பயம் ஏற்படும்போது கடவுள் பேரைச் சொல்லி நமககு நாமே தைரியப்படுத்திககொள்வதற்கும், தப்பான வழியில் போகவிருககும் ஒருவனை கடவுள் பேரைச் சொல்லி நல்ல வழியில் திருப்புவதற்கும்....................சொல்லுங்கள், இதுதான் பயப்படவேண்டியது- இதுதான் சரியான பாதை எனும் பகுத்தறிவு வேணுமா,வேண்டாமா?.

மாடனை, காடனை, வேடனைப் போற்றி வணங்கும் மதியிலிகாள்! பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வமென்றோதி அறியீரோ? என்றாரே பாரதி? ஏன்? ‘அறிவே தெய்வம்’ என்றதனால்தானே?

‘தெய்வம் நீ என்றுணர்!’ என்பதன் முழுமை எப்போது? நாம் நம்மை முழுமையாக அறிந்தபின்தானே? அந்த நிலையில் பகுத்தறிவும், கடவுளும் இரண்டற கலந்து ஒன்றிவிட்ட தன்மை தெரிகிறதே?

‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ என கலந்து செய்த கலவையாக மனிதன் இருககலாம். ஆனால் எந்த பாதியை அவன் தனககுள் தேடுகிறானோ அது தானே அவனுககுள் பெருகும்?.

என்னுள் என் எல்லா காரியங்களுககும் உறுதுணையாக இருப்பது யார், அது தான் கடவுளா? ரைட். அவரை நான் நம்புகிறேன். நான் அவரைப் பின்பற்றுகிறேன். என் எல்லாம் வல்லவனே நீ என்னுடன் எப்போதும் என் எல்லா நல்ல காரியத்திலும் இரு. நீயின்றி நானில்லை அய்யனே!.-இப்படி வேண்டிக கொள்ளவும் குறிப்பிட்ட பகுத்தறிவு வேண்டுமில்லையா?.

உண்மையில் கடவுளிடமிருந்து தூர விலகி இருப்பவன் பகுத்தறிவுவாதி இல்லை. அவரின் அருகிலேயே இருப்பவனே உண்மையான பகுத்தறிவுவாதியாக தன்னை தைரியமாக அறிவித்துக கொள்ள தகுதி உள்ளவன் ஆவான்.

இல்லையென்றால் ‘சுயமரியாதைச் சுடர்’, ‘பகுத்தறிவுப் பகலவன்’, ’வெண்தாடிவேந்தன்’ , ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’, ‘இந்நாட்டு இங்கர்சால்’......தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ஈரோட்டின் திருககோயிலுககு அறங்காவலராக இருந்திருகக முடியுமா?.

Source: http://thatstamil.oneindia.in/cj/velumani/2009/0629-bakthi-through-rationalism.html

Annamalai said...

அடிப்படை கல்விமுறை மாற்றம் செய்யாமல் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது நமது தலையில் பெட்ரோல் ஊற்றி நாமே தீ வைப்பதற்கு சமம். நமது கல்வி முறை சற்று கடினமாக இருந்தாலும் வளர்த்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நம் மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் அடிப்படை அறிவு அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது நம் நாட்டு எதிர் காலத்தை குழி தோண்டி முடும் செயலாகும். ரத்து செய்வதை எதிர்போம். எதிர்கால இந்தியாவை காப்போம். ஜெய் ஹிந்த்.

Anonymous said...

எம்பிபிஎஸ்-ரேங்க் பட்டியலில் அதிக அளவில் பிற்பட்ட மாணவர்கள்

எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் பொதுப் பிரிவில் சேர முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,483 எம்பிபிஎஸ் இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 460 இடங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 393 இடங்களும் உள்ளன.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆப் மதிப்பெண் 197.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆப் 196.25 ஆக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேர மொத்தம் 14,321 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 8,873 பேர் மாணவிகள், 5,064 பேர் மாணவர்கள்.

நிராகரிக்கப்பட்ட 384 விண்ணப்பங்கள் போக, 13,937 விண்ணப்பங்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு வாரியாக கட்-ஆப் விவரம்:

பொதுப் பிரிவு- 197.75 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 196.25
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)- 196.25

எம்பிசி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 192.5 ஆக இருக்கும் என்று தெரிகிறது.

கவுன்சலிங்கில் பெருமளவில் மாணவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் இந்த கட்-ஆப் மதிப்பெண்கள் சிறிய அளவுக்குக் குறையலாம்.

குறைந்த முற்பட்ட மாணவர்கள்:

நேற்று வெளியிடப்பட்ட எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் பொதுப் பிரிவில் முதலில் இடம் பெறும் 460 இடங்களில், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 மாணவர்கள் (10.87 சதவீதம்) மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இவர்களது எண்ணிக்கை 54 ஆக இருந்தது.

அதிகரி்த்த பிற்பட்ட மாணவர்கள்:

அதே நேரத்தில் இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அளவுக்கு ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Erode Nagaraj... said...

பொதுத் தேர்வு ரத்து :) :)

1. B.Com-ஐ முடித்துவிட்டு அப்பாவின் நண்பருக்குத் தெரிந்த இடத்தில் ஏதேனும் வேலைக்குச் சேருதல் எடுபடாத காலம் இது. தான் என்னவாகப் போகிறோம் என்பதை ஒரு மாணவன்/வி தீர்மானிக்கும் வயது குறைந்து கொண்டே வருகிறது...

"எங்க நாள்ல எல்லாம் ஒக்காரரதுக்கு பதனாறு பதனேழு வயசாச்சு... இப்போவெல்லாம் ஒம்போது பத்துலையே ஒக்காந்துடறா" என்று பாட்டிகள் அங்கலாய்ப்பது போல. (ஆமாம் இந்த கலாய்க்கறதுக்கும் அங்கலாய்க்கறதுக்கும் என்ன தொடர்பு?)

Erode Nagaraj... said...

2. படிப்பு, அனுபவம், வசதிகள், காதல், காமம் எல்லாமே முன்தேதியிட்டு நடந்துவிடுகின்றன, அரசு அளிக்கும் சம்பள உயர்வு போல.

பத்தாவதோ ப்ளஸ்-டுவோ இரண்டிலும் விருப்பப் பாடம் தவிர மற்றவற்றையும் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டியிருப்பதால் அவ்வருடம் முழுவதுமே, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்று முனைப்புச் சிதறல் ஏற்படுகிறது.

எட்டாம் வகுப்பிலேயே நான் ஒரு கணிதவியல் நிபுணனாக வேண்டும் என்று தீர்மானித்து விட்டாலும், என் முழு கவனத்தையும் கணிதம், மொழியின் வளமை, யதார்த்த வாழ்க்கைக்குத் தேவையான மேலாண்மைத் தகுதிகள், நாளிதழ்களும் வலைப்பூக்களும் தரும் பொது அறிவு, விவாதப் பண்பு மற்றும் communication skills இவற்றில்ஆழமாக வைக்கலாம் என்றால், ம்ம்ஹும்...

"NACL and H2O + கொதிக்கின்ற தண்ணீர் நொதித்து வரும்போது எழுகிற புகையை ஒரு குழாயில் பிடித்து..."

"கடலைகளும் ஒதங்களும் பற்றித் தெரிந்துகொள்ள ஜெர்மெனியின் ஆராய்ச்சியாளர் நாடா மாயா கூறும்..."

"பகுபதப் பண்பிலக்கனம் என்பது ஒரு வார்த்தையின் திரிபிலிருந்து வரும் தனக்குரிய மாத்திரையில் குறைந்தொலிக்கும் குற்றியலுகரத்தை..."

Erode Nagaraj... said...

3. நாராயணா... இதையெல்லாம் ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டு என்னுடைய பாடத்தில் என் முழு கவனத்தையும் வைத்து, நான் வளரும் காலத்திலேயே என் துறையும் வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்து, அதன் update-களுடன் என் அறிவையும் தேடலையும் சமன் செய்துகொண்டே என் வேலையை நான் செய்வது, offering தி fullest concentration and the best of my அபிளிட்டி என்று என் வேளையில் நிம்மதியாக ஈடுபடுகின்ற வாழ்க்கை இவற்றுக்கு இந்த பொதுத்தேர்வு முறைகள் இடைஞ்சல் என்பது என் அபிப்பிராயம்.

கல்லூரிக்கு செல்லுமுன், நான் எந்தத் துறையை விரும்புகிறேனோ அதைப் பற்றிய theoretical knowledge-ஐயேனும் வளர்த்துக் கொண்டால், முழுமையான practical knowledge எனக்கு கல்லூரிச் சூழலில் கிடைத்துவிடும். இப்போது, அவசர அவசரமாக நான்கு வருடங்கள் தடவுகிற விஷயங்களை அப்போது நிதானமாகவோ அல்லது தெளிவாக மூன்று வருடங்களிலேயோ படித்து விடலாம்.

Erode Nagaraj... said...

4. எந்தத் துறை சம்பந்தப் பட்ட விஷயத்தையுமே, புரிந்துகொண்டு படிப்பதற்குப் போதுமான கால அவகாசமோ (breathing time) பொறுமையோ இன்றி குழறுவதும் குழப்புவதும் தடுக்கப்படும். மனப்பாடம் செய்து ஒப்பித்து விடுவது எளிமையான வழியாகத் தோன்றுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். அப்போ, அதானே எல்லாரும் பண்ணுவான்?

மேலும், கலையிலோ விளையாட்டிலோ இருக்கின்ற திறமைகள் கூட சரியான முறையில் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப்படாத நிலைக்கும் இது ஒரு காரணம்.

Also , "Stress and அன்க்ஸ்யேட்டி" results in obesity and in a life enveloped with tension and anger. தானே விளையாடுதலில் இருக்கும் ஆனந்தம் அறியாமல் பதினொரு பேர் நாள் முழுதும் விளையாடுவதை வீட்டுப் பாடமும் அசைன்மென்ட்டும் எழுதிக்கொண்டே பார்க்கிற அவலம் என்பது, துணையிருந்தும் நீலப் படம் பார்த்து மைதுனம் செய்து மனம் பிழறும் நிலைக்கு ஒப்பானது.

Erode Nagaraj... said...

5. மருத்துவம், சங்கீதம், மொழியிலக்கணம் போன்றவை குறித்த பொது அறிவு தான் நமக்கு இருக்கிறது. அதற்கு மேலே தேவையென்றால் கற்றுக்கொள்ளவோ குணமடையவோ அதற்குரியவரிடம் போகிறோம். அது போல, அறிவியலோ சரித்திரமோ ஏதாவது தேவை என்றால் கோழி, "பறப்பதைப்" போல தெரிந்து கொண்டுவிட்டு, எஞ்சிய நேரத்தில் கிளரும் வேலையை சரியாகச் செய்தால் வாழ்க்கை சுமுகமாகும்; குஞ்சுகளும் பிழைத்துக்கொள்ளும்.

இந்நிலையில், பொதுத் தேர்வுகள் என்று சகல பாடங்களுக்கும் செலுத்தப் படுகின்ற முனைப்பு சற்று, விருப்பப் பாடங்களின் நுழைவுத்தேர்விற்கென்று முழுவதாகப் பயன்படுத்தப்படும் சூழல் வரவேற்கத்தக்கதே.

Erode Nagaraj... said...

6. இன்னும் சற்று நேரம் கிடைக்கும்...

எனக்கே எனக்கான
என்னுடைய வாழக்கையை
அறுபதும் ஆகியபின்

தேடலுக்கு களைத்து
தேக்கி வைத்த உணர்வுகளை
கனவில் மட்டும் கண்டு மகிழாது,

இன்றே..
இப்பொழுதே...

வாழ்தலுக்கும் வரைவதற்கும்
வாயையே திறக்காவிடினும்
வம்புகளைப் "வலை"யறுத்துப்
பூக்களைப் படிப்பதற்கும்
பதிப்பதற்கும்...

இன்னும் சற்று நேரம் கிடைக்கும்...

Kameswara Rao said...

இ,வ,

இன்றைய சுழலில் பத்தாம் வகுப்பு பரிட்சையில் கூட பேப்பர் சேசிங் நடக்குது. நிறைய மாணவர்கள் வடிகட்டபடுகிறார்கள் இது ஒரு அடிப்படை தேர்வுபோல் ஆகும்... பத்தாவதில் குறைவான மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்பவர்கள் சுதாரித்துக்கொண்டு +2 வில் அதிகமதிப்பெண்கள் வாங்க பாடுபடுகிறார்கள் ... இந்த தேர்வை நீக்கிவிட்டால் ... பணம் உள்ளவன் எந்த குரூப்பை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்றாகிவிடும் .. இப்பொழுதே ஒரு நல்ல பள்ளியில் சேர்ப்பதற்கு கொடுக்கும் நன்கொடை, டெர்ம் பீஸ் அதிகம் தான். நம் நாட்டில் கல்வியை ஒரு தொழிலாக மாற்றி நெடுங்கலமகிறது அதை ஒரு Professional Business அக மாற்ற முயற்சி நடக்கிறது ... "இந்திய முழுவதும் ஒரே தேர்வு வரவேற்கத்தக்கது" அதை விட்டு பத்தாவது தேவைல்லை எனும் முடிவு விபரீதமானதே.

நம் நாட்டை அமெர்க்கவுடன் ஒப்பிடுவது அதுவும் கல்வி விஷயத்தில் சுத்த அபத்தம்.

காமேஷ்

Kameswara Rao said...

இ,வ,

இன்றைய சுழலில் பத்தாம் வகுப்பு பரிட்சையில் கூட பேப்பர் சேசிங் நடக்குது. நிறைய மாணவர்கள் வடிகட்டபடுகிறார்கள் இது ஒரு அடிப்படை தேர்வுபோல் ஆகும்... பத்தாவதில் குறைவான மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்பவர்கள் சுதாரித்துக்கொண்டு +2 வில் அதிகமதிப்பெண்கள் வாங்க பாடுபடுகிறார்கள் ... இந்த தேர்வை நீக்கிவிட்டால் ... பணம் உள்ளவன் எந்த குரூப்பை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்றாகிவிடும் .. இப்பொழுதே ஒரு நல்ல பள்ளியில் சேர்ப்பதற்கு கொடுக்கும் நன்கொடை, டெர்ம் பீஸ் அதிகம் தான். நம் நாட்டில் கல்வியை ஒரு தொழிலாக மாற்றி நெடுங்கலமகிறது அதை ஒரு Professional Business அக மாற்ற முயற்சி நடக்கிறது ... "இந்திய முழுவதும் ஒரே தேர்வு வரவேற்கத்தக்கது" அதை விட்டு பத்தாவது தேவைல்லை எனும் முடிவு விபரீதமானதே.

நம் நாட்டை அமெர்க்கவுடன் ஒப்பிடுவது அதுவும் கல்வி விஷயத்தில் சுத்த அபத்தம்.

காமேஷ்