பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 09, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 09-06-2009

வழக்கம் போல் ரொம்ப நாள் கழித்து முனிக்கு கடிதம்...

முனியே வணக்கம்,

கொஞ்சம் அவசரத்துல எழுதற கடிதம். இப்ப எல்லாம் நிறைய வேலை. ’வியாபாரி’ படத்துல எஸ்.ஜே.சூர்யா செஞ்சதுமாதிரி பதிவு எழுத பேசாம இட்லிவடையை குளோனிங் செஞ்சுடலாம் போல இருக்கு.

’ரையுஜோ யனாகிமிச்சி’ (படிக்கும்போதே நாக்கு சுளுக்கிக்கிச்சி.) பத்தி நீ கேள்விப்பட்டிருக்கியா ? இவர் குளோனிங் செய்ற விஞ்ஞானி. எலியை குளோனிங் செய்றதுதான் ரொம்ப கஷ்டமாம். அதோட உடலமைப்பு அப்படியாம். அவருடைய மனைவி ஹீரோக்கோ. புத்திர பாக்கியம் இல்லாத தம்பதி!.

சில நாட்களுக்கு முன்னால குளோனிங் முறைல, உலகத்துலயே இரண்டாவது எருமைக் கன்னுக்குட்டியை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைச்சிருக்காங்க. இந்தியால, குளோனிங் முறைல முதல்ல உருவாக்கப்பட்ட எருமைக் கன்னுக்குட்டி நிமோனியா காய்ச்சல் வந்து ஒரே வாரத்துல இறந்திடுச்சாம். நம்ப விஞ்ஞானிகள் சளைக்கலையே. அடுத்த மூணே மாசத்துல இன்னோரு எருமைக் கன்னுக்குட்டியை குளோனிங் முறைல பிறக்கச் செஞ்சு சாதனை படைச்சிருக்காங்க. "என்ன அதிசயம், நான் பெத்தது எல்லாமே எருமை"தான்னு அலுத்துக்கறாரு எங்க பக்கத்துவீட்டுக்காரரு. விஞ்ஞானிகளாவது எருமை, எலியோடு இவங்க ஆராய்ய்சியை நிறுத்திண்டா பரவாயில்லை. உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகளை குளோன் செஞ்சுடப் போறாங்க. அப்பறம் அணு ஆயுதத்தைவிட மோசமான கண்டுபிடிப்பு அதுவாத்தான் இருக்கும். போகட்டும், இந்தக் குட்டிக்கு "கரிமா' ன்னு பேர் வெச்சிருக்காங்க. கருத்தம்மான்னு தமிழ் பேரா இருந்திருந்தா ஒரு தங்க மோதிரமாவது கிடைச்சிருக்கும்!.

தமிழக அரசு இப்போ புதுசா ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கு. "மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டினால் அந்தக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும்' ன்னு அரசு அறிவிச்சிருக்கு. இதுக்கு ஒரு குழு அமைச்சு, ”அது தமிழ் பெயர் தானா?” ன்னு ஆராய்ஞ்சு மோதிரம் கொடுக்கப் போறாங்களாம். இஷ்டத்துக்கு கருணாநிதி, ஆதித்யான்னெல்லாம் பேர் வெச்சா கிடையாதாம். இதை ஆரம்பிச்சு வெச்சவர் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் தமிழ் பெயரா ?

தங்கம் வாங்க தமிழ்நாட்டுல இப்படி எல்லாம் தமிழ் பேர் வெச்சு கஷ்டப் படறோம். ஆனா ஆந்திர மாநிலத்துல விஷயமே வேற. சில நாள் முன்னாடி கர்னூல்ல இருக்கற வயல்கள்ல விவசாயிகள் சின்னச் சின்ன கண்ணாடிக் கற்களை கண்டெடுத்தாங்க. மினுமினுப்பா இருந்ததால மக்கள் கிடைச்சதை எல்லாம் எடுத்து பாக்கெட்டுல போட்டுண்டு போயிருக்காங்க. ஜியோ மைசூர் அப்படீங்கற நிறுவனம் ஆய்வு நடத்திப் பார்த்தா அதெல்லாம் வைரக் கல்லாம். இது மட்டும் இல்லை ஆய்வுல தங்க உலோகம் இருக்கறதும் கண்டுபிடிச்சிருக்காங்க. உடனே அந்தப் பகுதி மக்கள் அரக்கப்பரக்க மண்ணைத் தோண்டி தங்கம்-வைரம் இருக்கான்னு தேடுதல் வேட்டையில் குதிக்க ஆரம்பிச்சுட்டா. கொஞ்சம் பேருக்கு வைரக் கல்லும் கிடைச்சிருக்கு. அதை அந்த விவசாயிகள்கிட்டேயிருந்து வைர வியாபாரிகள் குறைஞ்ச விலைக்கு வாங்கிப் போயிருக்கா. ரொம்ப கூட்டம் கூடிட்டதால அந்தப் பகுதில போலீசைக் குவிச்சுட்டாங்க. இனிமே அது அரசியல்வாதிகளோட சொத்து. ஹூம், இதைத்தான் ரெட்டிகாரு பஞ்சதந்திரத்துலயே "சின்ன கல்லு பெரிய பிசினசு"ன்னு சொன்னாரு போல.

நான் இந்த ஸ்கீரின் ரைட்டிங் பயிற்சிக் களத்தை ஆரம்பிக்க காரணம் இது என் 30 வருட கனவு” அப்படீன்னு கமல் குமுதத்துல பேட்டி கொடுத்திருக்கார். ஆனா அதே குமுதத்துல, ”ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, திரைக்கதை, எழுத்து பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வார குட்டு" ன்னு ஞாநி குட்டியிருக்கார். இந்த ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சியை அவர் தமிழ் பட ஆர்வலர்களுக்காக மட்டுமே நடத்தலை. இந்தியா முழுக்க இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நடத்தியிருக்கார். அதில் தமிழ் தெரிஞ்சவங்க மிகச் சிலரே. இது இப்படி இருக்க எப்படி ஞாநி கமலை குட்டலாம்? ஞாநிக்கு வாரா வாரம் யாரையாவது குட்டணும். அதுக்கு கமல்தான் கிடைச்சாரா?

பணவீக்கம் வந்தாலும் வந்தது வேலை எக்கசக்கமா இருக்கு. எங்க கம்பெனியில் என் ஃப்ரெண்டைக் கூப்பிட்டு, “நீ எப்போதிலிருந்து வேலை செய்ற?” ன்னு கேட்டேன். அதுக்கு அவன், “நேத்தி பாஸ் என்னைக் கூப்பிட்டு வேலை செய்யாட்ட வீட்டுக்கு அனுப்பிடுவேன்னார். அதுனால நேத்திலேருந்து"ங்கறான். வேலை செய்யவே மறந்து போனவங்க என்ன செய்வாங்களோ பாவம். இவங்களுக்கு நினைவூட்டல் பயிற்சிப் பட்டறை ஒன்னு மொட்டை மாடில ஆரம்பிக்கலாம்.

இந்த படத்தை ஒருவர் எனக்கு மெயிலில் அனுப்பியிருந்தார் படத்துல இருக்கற இவருக்கு சொந்த ஊர் எதுன்னு விசாரித்துச் சொல்லு.

நாமளானா இப்படி தமிழ் தமிழ்னு உயிரை விடறோம். ஆனா பிரபல இந்தி நடிகைகளை தமிழுக்குக் கொண்டுவந்து தமிழர்களோட தாகம் தீர்க்கிற வேலையை செஞ்சுகிட்டிருக்கற புண்ணிய இயக்குநர்கள் லிஸ்டுல தன்னையும் இணைச்சுகிட்டிருக்கார் ராஜுசுந்தரம். அஜீத் நடிக்க, இவர் இயக்கற படத்துல கேத்ரினா கைப்(katrina kaif) நடிக்கப் போறாராம். ஒருவேளை இவர் நடிக்கலைன்னா தமிழ் கூறும் நல்லுலகம் ஏமாந்துடுமோன்னு கவலை இல்லை. ஏன்னா, ரஜினிக்கு ஜோடியாக ஐஸ் நடிக்கிறார் நடிக்கறார்னு ஒவ்வொரு படத்திலும் ஏமாந்த நமக்கு இது எல்லாம் பழகிடுச்சு. இப்போதைக்கு கேத்ரினா கைஃப்தான் கூகிள்ல அதிகம் தேடப்படற பெண்ணாம். என்ன செய்ய, ஐஸுக்கு கல்யாணம் ஆயிடுச்சோன்னோ. ஆனா முனி நீ கேத்ரினா படங்களை டவுன்லோட் செய்யும் போது ஜாக்கிரதையா இரு, அதுல வைரஸ் இருக்காம். அந்த வைரஸுக்கு கேத்ரினான்னு பேர் வெச்சது மெக்காபி. அமெரிக்காவுல பேரழிவையே கொண்டுவந்த ஒரு பெரிய புயலோட பேர் கேத்ரினா. அதே போல இவர் மற்ற நடிகைகளுக்கு பேரழிவை தருவார்னு நினைக்கறேன். படு ஹாட்டான கேத்ரினா படத்தை ரிஸ்க் எடுக்காம பார்க்க விருப்பம் இருக்கறவங்க இங்க பார்க்கலாம். (வீட்டுல யாரும் இல்லாத போது ஓப்பன் செய்யலைன்னா, குடும்பத்துல புயல் அடிக்கும். அலுவலகத்துல வேண்டவே வேண்டாம், கேர்ள்ஸ் எக்ஸ்க்யூஸ் மீ!)

குற்றாலத்துல இப்ப சீசன். எல்லா அருவிலயும் தண்ணீ கொட்டோ கொட்டுனு கொட்டுதாம். அதேபோல தற்கொலை சீசனும் ஆரம்பிச்சாச்சு. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேத்த மத்திய அரசு முயற்சி(செய்யற மாதிரி பாவ்லா காண்பிச்சா) நாடாளுமன்றத்துக்குள்ளயே தற்கொலை செஞ்சுப்பேன்னு ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் மிரட்டியிருக்கார். ஜனாதிபதி உரைல வழக்கம்போல இந்த முறையும் 33% வந்துடுத்து. எனக்கு ஒரு சந்தேகம், வலைப்பதிவுல 33% பெண்கள்(அட ரா(உ)மா, பெண் பேர்ல எழுதறவங்க இல்லை) இருக்காங்களா? எவ்வளவு பேர்னு உனக்குத் தெரிஞ்சா சொல்லு. (அப்படியே இருந்தாலும் பல்பிடுங்கறதை எழுதறாங்க.) நிச்சசயம் 33% இருக்காது. இருந்திருந்தா நாங்க வலைப்பதிவர் எல்லாருமே இந்நேரம் தற்கொலை செஞ்சிருந்திருப்போமே. "மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றிய சரத் யாதவின் கருத்தை நான் வரவேற்கிறேன்" னு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவிச்சிருக்கார். இவருக்கு என்ன போச்சு, இவரா தற்கொலை செஞ்சுக்கப் போறார்?

சரி, வோட்டுப் போடற இடத்தை ஏன் வாக்கு சாவடின்னு சொல்றோம் தெரியுமா?

ஜெயிச்சுவந்ததும் தேர்தலுக்கு முன்னாடி கொடுத்த வாக்கை சாவடிச்சுடறாங்களே அதான்" ஹி ஹி.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருந்தால், தி.மு.க., கூட்டணிக்கு கூடுதலாக மயிலாடுதுறை, தென் சென்னை, திருச்சி ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் கிடைத்திருக்கும். - எஸ்.வி.சேகர். இதுக்கே தனியா ஒரு தற்கொலை செஞ்சுக்கலாம் போல இருக்கு.

காங்கிரஸ் கட்சில இருக்கறவங்க இனிமே ஒரு நேரத்துல ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும்னு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவிச்சுட்டாராம். ஒரு வேலையைச் செயுங்கோ, அதையாவது நன்னா செய்ங்கோன்னு இதுக்கு அர்த்தம். தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒரு மனைவின்னு யாராவது சொன்னா நன்னா இருக்கும். சரி ஒரு ஜோக்

காதலன் அரவணைப்பில் இருந்த போது டெலிபோன் அடித்தது. அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு எழுந்து போய் பேசிவிட்டு திரும்பினாள் அவள்.

"யார் கூப்பிட்டது" கேட்டான் அவன்"

"என் புருஷன்"

""ஐயையோ என்ன சொன்னான்"

"உங்களுடன் கால்ஃப் விளையாடிக்கொண்டிருப்பதாக"

மருத்துவக் கல்லூரில நன்கொடை கொடுத்துப் படிக்கற ஒருத்தரோட நேத்து பேசிகிட்டிருந்தேன். 40 லட்சம் கொடுத்தாராம். "சரி, உங்களுக்கு ஸ்பெஷலா என்ன சொல்லித் தருவாங்க?"ன்னு கேட்டேன்.

அவர் சொன்ன பதில்- "பிரிஸ்கிரிப்ஷன்களைப் புரியாதபடி எழுதவும், பில்களை புரியும்படி எழுதவும் சொல்லித்தருவர்கள்". இந்த ஜகத்தை ரக்ஷிக்க ஜெகத்ரட்சகன் வந்தால் தான் உண்டு!

19 Comments:

Anonymous said...

The BEST letter you have written to முனி, so far!
என்னமாத் "think" பன்னறாருப்பா நம்ம இட்லி!!!!
enjoyed it. நன்றி!

ஹைக்கூ... said...

ஹைக்கூ...

ஓய்வெடுக்க
மொரீஷியஸ் போனார்
விஜய்காந்த்!
மொரீஷியஸ்-ல்
நிலநடுக்கம் - அரசு எச்சரிக்கை

அஞ்சா நஞ்சன் said...

படு ஹாட்டான கத்ரினா படத்தை வெளியிட்ட உம்மை kaif கையிலிருக்கும் பேட்டாலேயே அடித்தாலென்ன?

வெட்டிப்பயல் said...

கலக்கல் :)

அக்னி பார்வை said...

///கொஞ்சம் அவசரத்துல எழுதற கடிதம். இப்ப எல்லாம் நிறைய வேலை. ’வியாபாரி’ படத்துல எஸ்.ஜே.சூர்யா செஞ்சதுமாதிரி பதிவு எழுத பேசாம இட்லிவடையை குளோனிங் செஞ்சுடலாம் போல இருக்கு.
///

சரியா போச்சு ஏற்கனவே இட்லிவடை துக்ளகின் க்ளோனிங் தானே, இப்போ எதுக்கு இட்லிவடைக்கு தனி க்ளோனிங்?

Anonymous said...

Kamal first oru nalla script-oda oru pada edukaatum. Appuram matthavangalukku solli tharalaam. Eduthathellam hollywood copy...ivar paadam edukkuraaru !!

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒரு மனைவின்னு யாராவது சொன்னா நன்னா இருக்கும்//

எனக்கு ரொம்ப நாளைய சந்தேகம் இதுதான், அரசு ஊழியர்கள் சட்டப்படி இரண்டு மனைவி கூடாது என்றால். தமிழகத்தில் முக்கிய மந்திரிகளுக்கு(பலர்) தெரிந்தும் தெரியாமலும் இரண்டோ அதற்கு மேலும் மனைவிகளுக்கு அரசும் அரசு மரியாதையும் எப்படி?????????

Anonymous said...

மாநில மத்திய அமைச்சர்கள் தங்கள் இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவி/துணைவிமார்களை மணந்தது 1951 ஜனவரி 26க்கு முன்பு என ஆவணம் உருவாக்கிக் காட்டினால் போதும்.
புரிகிறதா?

Ragavendiran said...

ஆனாலும் இப்படி ஏமாத்தக் கூடாது, கேத்ரினா கைப் என்று , எத்தனை பேர் ஏமாந்தார்களோ தெரியவில்லை, அந்தலிஸ்ட்டில் நானும் உண்டு
எங்க பாவம் உங்களை சும்மா விடாது
தாங்கொணாத கொலைவெறியுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி

Anonymous said...

nice article

R.Gopi said...

//மானஸ்தன் said...
The BEST letter you have written to முனி, so far!
என்னமாத் "think" பன்னறாருப்பா நம்ம இட்லி!!!!
enjoyed it. நன்றி!//

Repetteeeiiiiiiii

//ஹைக்கூ... said...
ஹைக்கூ...

ஓய்வெடுக்க
மொரீஷியஸ் போனார்
விஜய்காந்த்!
மொரீஷியஸ்-ல்
நிலநடுக்கம் - அரசு எச்சரிக்கை//

Hello, anga rest edukka pona kooda vida maattendreengale??

// Ragavendiran said...
ஆனாலும் இப்படி ஏமாத்தக் கூடாது, கேத்ரினா கைப் என்று , எத்தனை பேர் ஏமாந்தார்களோ தெரியவில்லை, அந்தலிஸ்ட்டில் நானும் உண்டு //

Correctpaa

வால்பையன் said...

கேத்ரீனா கைஃப்

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

Anonymous said...

கேத்ரினா படத்தை பார்த்தேன்..ஸ்ஸ்ஸ்..முடிய்ல..
ஏன்..இப்படி.. காலங்காத்தால இங்க வந்தேனே என் சொல்லனும்..

Anonymous said...

Katrina Photo...

Muka vai vida un mela naan kadaum kovathulla erukken.Mavane nee kaiyile kidaicha...

Oru mission ninaichikittu photo open panninna...Endha pavam unnai summa vidathu...

Karnanukku kidaitha sabam madhiri mukkiyamana nerathulla unakku use agathu....

Ennai madhiri veruthupona saga nanbargale ethe sabathai IV kku kudungal

Kameswara Rao said...

வாத்தியாரே இட்லிவடை,

இன்னாமா முனி கடுதாசி சும்மா நச்சுன்னு இருந்துச்சு கண்ணு, அங்க அங்க சும்மா பஞ்ச் வெச்சிகினு, அப்பிடியே ச்ய்டுல ஒரு LEFTU ஒரு RIGHTUNU குடுத்துகினு,

ஜோரா ஒரு விசில் வாத்தியாரே...

காமேஷ்

Erode Nagaraj... said...

இதோ பட்டம் இட்லிக்கு... கெட்ட-ரீனா-கைப்புள்ள

ரிஷபன் said...

//The BEST letter you have written to முனி, so far!
என்னமாத் "think" பன்னறாருப்பா நம்ம இட்லி!!!!
enjoyed it. நன்றி!//

வழக்கமான நய்யாண்டி நடையை தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது இந்த கடிதத்தில், பழைய கடிதத்தோடு ஒப்பிட்டால் கொஞ்சம் சுமார் ரகம் தான்.

ஆனால் மானஸ்தன் அன்னாச்சி மாதிரி நிறைய பேருக்கு பிடித்திருக்கும் போல. கழகத்தின் தாக்கம் தமிழ் மக்களுக்கு வராமல் இருக்குமா என்ன?

இடலி வடையின் வேறு ஒரு மாஸ்டர் இட்ட சரக்கு போல எனக்கு தோனுது.

Baski said...

//ஆனாலும் இப்படி ஏமாத்தக் கூடாது, கேத்ரினா கைப் என்று , எத்தனை பேர் ஏமாந்தார்களோ தெரியவில்லை, அந்தலிஸ்ட்டில் நானும் உண்டு //

Me too IV.

One doubt: What is that dog? I feel you morphed with someone...Who is that guy/girl...

Subu said...

எறுமைகளைப்பத்தி எழுதின ஒரே பதிவில் மனிதர்களையும்...குறிப்பாய் பெண்களையும் பத்தி எழுதி !! .ஹூம்... ஹூம்.. என்ன தைரியம் ...என்ன தைரியம் !! :-) :-)

அது சரி, இந்த பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையில் பெண்காளுக்காகவா, இல்லை அரசின் திசை திருப்பல் விளையாட்டா ?

அவசரமா இன்னும் ஓர் பதிவு ப்ளீஸ் !!

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html