பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 11, 2009

SMSல் உங்க பூத் நம்பர்


போன மாதம் நண்பர் ஒருவர் எனக்கு பெங்களூரில் வந்த இந்த விளம்பரத்தை அனுப்பி (மேப்புக்கு கீழே) இது மாதிரி தமிழ்நாட்டில் உண்டா என்று கேட்டிருந்தார். வேலை, மற்றும் வெயில் அதிகமாக இருந்தாதால் அதை பற்றி மறந்தே போய்விட்டேன். இன்று காலை நண்பர் உங்க பூத் நம்பர் என்ன என்றார் ?


ஒரு தொகுதியின் கதை போட்ட எஃபெக்ட் என்று நினைத்து வீட்டு பக்கத்தில் இருக்கும் பால் பூத் நம்பரை கொடுத்தேன்.

பிறகு தான் தெரிந்தது BOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்> என்று 575758 என்ற எண்ணுக்கு SMS கொடுத்தால் உங்க பூத் நம்பர் கிடைக்கும் என்று.

மக்களே ஓட்டு போடுவது ரொம்ப முக்கியம், இன்றே உங்க பூத் நம்பர் போன்ற விவரங்களை விரல் நுனியில் வைத்திருங்கள். விரல் நுனியில் மை வைக்க உதவியாக இருக்கும்.

நாளை மறு நாள் உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். யாருக்கு என்பது முக்கியமில்லை. ஓட்டு போடுவது தான் முக்கியம்.

பிகு:
1. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை மக்களுக்கு மட்டும் தான் இந்த SMS வசதி. மற்றவர்கள் அனுப்பினால் கமலாம்பாள் மெஸுக்கு எதிர்புறம் உள்ள கல்யாண மண்டபத்தில் புத்தக கண்காட்சி பற்றிய விவரம் வரும் ஜாக்கிரதை.

2. மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொறுத்து 10 பைசாவிலிருந்து 3ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று சொல்லுகிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு TOKEN என்று அனுப்பினால் தொகுதியை பொறுத்து எவ்வளவு பணம், எங்கே வந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வந்தால் நல்லா இருக்கும். பத்ரி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு!

5 Comments:

கிரி said...

//மக்களே ஓட்டு போடுவது ரொம்ப முக்கியம், இன்றே உங்க பூத் நம்பர் போன்ற விவரங்களை விரல் நுனியில் வைத்திருங்கள். விரல் நுனியில் மை வைக்க உதவியாக இருக்கும்.

நாளை மறு நாள் உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். யாருக்கு என்பது முக்கியமில்லை. ஓட்டு போடுவது தான் முக்கியம்//

இட்லிவடை ஒட்டு போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நறுக்குன்னு உங்க ஸ்டைல் ல ஒரு பதிவு எழுதினால் நல்லா இருக்கும்.

படித்தவர்கள் ஒட்டு போடுவதில்லை சும்மா வாயடிக்க மட்டும் தான் லாயக்கு.

உங்கள் பதிவை பலரும் படிக்கும் நிலையில் இதை வலியுறுத்தி பதிவிட்டால் ஒரு சிலராவது மனம் மாற மாட்டார்களா!

சித்து said...

என்ன இட்லிவடை உங்க தேர்தல் டீம் ஒரே சொதப்பல்?? மொத்தத்தில் ஏழு தொகுதி நிலவரம் தான் வந்துள்ளது இன்னும் ஒரு சில நாள் தான் உள்ளது பாக்கி தொகுத்து நிலவரம் எப்படி?? வரும் ஆனா வராதா???

Suresh said...

next net voting facility?

Krish said...

நல்ல முயற்சி!

லவ்டேல் மேடி said...

அட எனுங் நீங்க வேற.... !! அதுக்குதான் ஊர்பட்ட கட்ச்சிங்க இருக்குத்தே...!! அடுச்சு புதுசு அவுனுகளே வந்து சலிப்பு , பூத்து நம்பரு எல்லாத்தையும் சொல்லிபோடுரானுங்கோ...!!!! அப்ப்றம் எதுக்கு எஸ். எம் . எஸ் .. இதுக்கு சார்சு வேற பண்ணுவாங்க....!!!!