பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 29, 2009

Konkatsu bra

இது என்ன என்று புரியாதவர்கள் கீழே படிக்கலாம்...பார்க்கலாம் !

ஜப்பானியப் பெண்களுக்கு திருமணம் மீதான ஆசை குறைந்து வருகிறதாம் ( அப்படியா ? ) நிறைய பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர்; அல்லது தனியாக வாழ்ந்து முடிக்க முடிவு செய்கின்றனர். நாட்டின் மக்கள் தொகை குறைவதில் கவலைப்பட்ட உள்ளாடை நிறுவனம் ஒன்று, 'கணவனை வேட்டையாடும் பிரா' என்ற பெயரில் ஒரு உள்ளாடையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த உள்ளாடையின் மையப்பகுதியில் திருமண கடிகாரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கும். கல்யாண வயசு நெருங்குவதை இது ஞாபகப்படுத்தும்( என்ன டெக்னாலஜி ). இதன் அருகே இதய வடிவில் சாவித்துவாரம் போன்ற ஒரு துளை இருக்கும். திருமணம் நிச்சயமானதும் இதற்குள் ஒரு மோதிரத்தை சொருகினால், கல்யாண வாழ்த்து பாட்டு பாடியபடி கடிகாரம் நின்றுவிடுமாம்.

ஆண்களே உஷாராக இருங்கள். இந்த மிஷினை பார்த்தால் இது உங்களுக்கு வைத்த டைம் பாம்!

13 Comments:

வலைஞன் said...

அபத்தம்!

யோசிப்பவர் said...

கவர்ச்சி கரமா இல்லையே!

Vijay said...

தீப்பெட்டி தொழில் செய்த மாணவன் ஒருவருக்கு சென்ற வருடம் உதவி செய்தோம் அல்லவா? அந்த மாணவர் இப்போ ஒரு வருடம் இன்ஜினீரிங் முடித்திருப்பார். அவர் மார்க்ஸ் விவரம், மேலும் மற்ற விபரம் தரவும்.

--
விஜயஷங்கர்
பெங்களூரு

Anonymous said...

I am from Bhadravathi….
NAMED R.PARAMESHWARAPPA...
my daughter has now completed her 2 puc (science)by scoring 97.3%
(583-600)and has stood 2nd for college and 3rd for the district ….2 nd for the Bhadaravathi taluk…….
and as been 39 th rank in Karnataka cet engineering stream………
By gaining 39th rank she has stood 1st for the district in cet results...
so wanted to apply for the scholarship……..
can u give me guidelines how to access……

IT WOULD BE HELPFUL IF U RESPOND AS EARLY AS POSSIBLE…..

for more details:
R.PARAMEAHWARAPPA,
NSB 7/198 ,
NEAR 10TH WARD STOP ,
PAPER TOWN ,
BHADRAVATHI….
PIN: 577302
MOBILE:9008982141

Email - navin.paradox@gmail.com / naveen.pyramid@rediffmail.com

Anonymous said...

இட்லி வடையாரே!
நாட்டுல வேற செய்தியே இல்லையா..... :-/

sad.

Inba said...

இதைஎல்லாம் போட்டு
ஏன் அய்யா
எங்க
'பிரா'ணனை வாங்கறிங்க.

Baski said...

மட்டமான கண்டுபிடுப்பு.

கொக்கு பிடிக்க, அதன் தலையில் வெண்ணையை வைக்கும புத்திசாலி கூட்டத்தை சேர்ந்தவகளோ?

இதை செய்தியாக வெளியிடும் உள்நோக்கமும் புரிகிறது. எதையாவது எழுதி பின்னூட்டம் வந்தால் போதும்ன்னு இ.வ நினைக்கிறார் போல.

Anonymous said...

யோவ் இட்லி,

உங்களுக்காக ஒரு நியூஸ். (உங்களுக்கு நியூஸ் கிடைக்கலைனு நினைக்கிறன்.)

அதற்கு முன் ஒரு படத்து வசனம்.

"வாழறது முக்கியத்தேன், இல்லனு சொல்லல, ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து பொறதுதேன், அந்த சாவுக்கே பெருமை, விதை விதச்சொன பழம் சாப்படனும்னு நினைக்க முடியுமோ!?, இன்னைக்கு நான் விதைக்குறேன் நாளைக்கு நீ பழம் சாப்புடுவ, அப்பறம் உன் பய சாப்புடுவேன், அதுக்கப்பறம் அவன் பய சாப்புடுவேன், அதேல்லாம் இருந்து பாக்கறதுக்கு நான் இருக்க மாட்டேன், ஆனா.., வெத, நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா??, கடம ஒவ்வொருத்தனோட கடம..."

இப்போ நியூஸ்

அமெரிக்காவின் போக்குவரத்து துறை ஒரு புதிய திட்டத்தை அமல் படுத்த இருக்கிறது.

அமெரிக்காவோட தற்போதைய கட்டமைப்புகள் அடுத்த ஐம்பது வருசத்துக்கு போதுமானதாக தான் இருக்கிறது. இப்போ இவர்கள் போடும் திட்டம் அதற்கு அடுத்த நூறு வருசத்துக்கு நல்லா உதவும்.

சரி, அதுக்கு என்ன இப்ப என்ன அமெரிக்க கதை என கேக்குறீங்களா ?

வருங்காலத்தில் ஒரு நல்ல இந்தியா வேணுமுனா விதை விதைக்கணும்.

உங்களுக்கு உடன்பாடு உள்ள கொள்கைகள் கொண்ட கட்சியில் சேருங்கள். (நான் ஜோக் அடிக்கவில்லை). சக சிந்தனையுள்ள நண்பர்களோடு ஒன்றிணையுங்கள்.

ஒரு அரசியல்வாதியிடம் எளிதில் அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பு எலக்சன் நேரத்தில் (மட்டுமே) கிடைக்கும். உங்களிடம் வரும் தேறுகின்ற வாக்காளர்களை நன்கு அறிமுகம் செய்துகொண்டு விடுங்கள். விரும்பினால் தேர்தல் பிரசாரத்தில் உதவுங்கள்.

அவ்வப்போது உங்கள் ஊரு எம்.பியையும் , எம்.எல்.ஏ. வையும் கும்பலாய் போய் பாருங்கள். (தனியாய் போனா உங்கள் உங்கள் டவுசருக்கு நான் பொறுப்பல்ல).
பிறந்தநாள், பொங்கல், தீபாவளி , புது வருட வாழ்த்து சொல்வது அவசியம்.

ஒரு சாமானியனுக்கு பல பிரச்சனைகள் உண்டு.
குறைகளை தொகுத்து, அதற்கான தீர்வையும் பட்டியலிடுங்கள்.
ஒரு பத்திரிகையோ, டி.வி. சேனலையோ ஜோடி சேர்த்து கொள்ளுங்கள்.
அந்தந்த துறை அமைச்சர், அதிகாரிகள் தொர்டர்பு கொள்ளுங்கள். உங்கள் திட்டம் பற்றி விவரியுங்கள்.

இதைத்தான் இந்த ஊரு (பொறுப்பான) குடிமக்கள் செய்கிறார்கள்.

Anonymous said...

Adhenna tag "Aanmigam" ?!

Erode Nagaraj... said...

கொங்கை என்பதே மார்பகங்கள் தான். பெயர் பொருத்தம் உள்ளது. அந்த சாவி த்வாரத்தை நிரப்ப katsu - guts வேண்டும். BTW, சாவி என்பதற்கு பதர், காலியான என்ற பொருளுண்டு. உள்ளே அரிசி இல்லாத நெல்லுக்குப் பதர் என்று பெயர்.

anyway, this is an useless post!

Jollan said...

இட்லி variety யா news குடுக்க try பன்னுது....எவ்ளோ நாள் தான் அரசியல் news படிப்பது....

இட்லிக்கு சாம்பார் இருந்தாலும்...கூட கொஞ்சம் கார சட்ணி வேனும்.

உஷாரான ஆண் said...

//... ஆண்களே உஷாராக இருங்கள். இந்த மிஷினை பார்த்தால் இது உங்களுக்கு வைத்த டைம் பாம்!..//

நான் மிஷினைப் பார்க்கவில்லை.

Erode Nagaraj... said...

அண்ணே.. இட்லியண்ணே... ஆன்மீகத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே... நல்லா போடறீங்கய்யா லிங்க்கு...!!