பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 17, 2009

மூன்றாவது அணி ?


( ஜோக்: நன்றி விகடன் )

11 Comments:

வேலாமூர் திருமங்கலம் அம்மங்கி ஸ்ரீராம் முரளி said...

ஹா ஹா ஹா... விட்டா தேர்தல்னு ஒண்ணு இருக்கணுமான்னே கேப்பாங்க.. வெளங்கும்..

padukali said...

தேர்தல் சமயத்துல அசத்திட்டீங்க வாழ்த்துகள். ஓவ்வொரு நாளும் முதல் வேலை உங்க இட்லி வடை அறிவு சாப்பாடு தான்.

இது என்னோட பதிவு தேர்தல் முடிவு பத்தி

தேர்தல் முடிஞ்சுச்சு.

நான் போட்ட தேர்தல் நிலவரம் பதிவு மறுபடி படிச்சு பார்த்தேன்.
கேரளா, மூன்றாம் அணி பத்தி சொன்னது சரி ஆச்சு. ஆனா அம்மா பத்தி சொன்னது ரிவேர்ஸ் ஆச்சு. குதிரை பேரம் நடக்கும் என்று நான் சொனது தப்பா ஆச்சு.

கூட்டணியிலே விட்ட கோட்டை பெரிய ஓட்டையா தான் இருக்கு என்று நான் சொல்ல - காலம் அதை திருத்தி இப்படி எழுதி விட்டது.
கூட்டணியில் விட்ட கோட்டை நல்ல வேட்டை.

இல்லேனா அனாவசியமா இடது, லாலு, மாம்பளம்னு தேவை இல்லாம வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கனும். குடும்பத்துல உள்ள எல்லோருக்கும் பதவி கேட்பது ஒரு தொந்தரவுதான், ஆனா ஊடு செங்கல் உருவறது இல்லாததால தி மு கா பரவாயில்லை என்று காங்கிரஸ் நினைத்திருக்கும்.

காங்கிரஸ் காட்டிலே மழை.

அடிப்படையா பார்த்தா - மன் மோகன், அத்வானி, இவர்களில் முன்னவர் பெட்டர். வாக்காளர் இப்படி யோசிச்ச முடிவு மாதிரி தெரியுது. இப்ப ஓட்டை போடுங்க, நாங்க கூடி கும்மி அடிச்சு ஒரு தலைவன அல்லது தலைவிய தேர்ந்தெடுப்போம் என்ற வாதம் பிடிக்கவில்லை போல் தோன்றுகிறது

தோல்வியை ஒத்து கொண்டு - எதிர்பாராதது, காங்கிரசுக்கு வாழ்த்துகள் என்று தொலைபேசியில் பேசிய அத்வானியை பிடித்தது. ஆனா இதே ஆளு அந்த அப்புராணி மன் மோகன் சிங்கை சோம்பேறி என்று பிரச்சாரத்தில் பேசியது நினைவுக்கு வந்து மறந்தும் போனது.

ஜெயிச்சது சரி. அதுக்கு காரணம் ராகுல் அவர மந்திரி ஆக்குவேன், என்ற பேச்சு காங்கிரசுக்கு வேண்டுமா. செய்யனுமுனா செய்ங்க, செய்யுறதா சத்தம் இல்லாம செய்யுங்களேன்பா

டாக்டர் ஐயா சுறுசுறுப்பாய் அணியை மாத்தி அம்மாகிட்ட வந்ததும், கூட்டணி பலம் ஆனதும் வெற்றி நமக்கே என்ற தோரணையில் அம்மா நடந்ததும் கொஞ்சம் ஆட வெட்டுறதுக்கு முன்னாலே ______ சுட்ட கதையோ.

விஜய காந்த பலம் பரவாயில்லை. ஆனா நாயர் பிடிச்ச புலி வால் கதையா, அம்மாவையும் ஐயாவையும் சரி இல்லேனு சொல்லிட்டு கூட்டணியும் வைக்க முடியாம, ஜெயிக்கவும் முடியாம தவிக்கிராரோ.

வை கோ வின் இந்த தேர்தல் தோல்வி துக்கம் தான். ஆனால் எல்லார் கையிலேயும் நோட்ட திணிச்சு என்ன தோக்க அடிச்சிட்டாங்க என்று சொல்லுவது, தலைவனுக்கு அழகா. வெற்றியை சமாளிக்க எந்த முட்டாள்களாலும் முடியும், ஆனால் தோல்வியை சந்திக்க ஒரு வீரம் விவேகம் வேண்டும் என்ற பழமொழி நினைவில் கொண்டால் இந்த அடி ஒரு படி ஆகும்.

தேர்தலில் செயிப்பது எப்படி என்று அஞ்சா நெஞ்சன் கிளாஸ் எடுக்கலாம். சொல்லி சொல்லி நோட்டையும் ஆட்களையும் வெற்றியையும் அடிப்பது அவரின் தனித்துவம்.

காசு வாங்கிகிட்டு ஒட்டு போட்டாங்க என்ற குற்ற சாட்டு எப்போதும் உண்டு.

எனக்கு தெரியலே, அதால கேட்கிறேன். உயர் மட்டத்திற்கும், நடுத்தர வர்கத்திற்கும் இவங்க காசு கொடுக்கிரதில்லே. அப்போ ஏழை பாளை மட்டும் தான் இந்த காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுரன்களோ. சரி காச வாங்கிட்டு மாத்தி போடுங்கன்னு சொன்னாலும் கேட்காம சரியாதான் குத்துராங்க இப்ப அமுக்குராங்க.

சிங்கம், கரடி - கார்த்திக், விஜய ராஜேந்தர் அணில் முயல் எல்லாம் அடுத்த தேர்தல் வரை ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த தேர்தல் வந்ததும் மறுபடி வந்து எங்களை கிச்சு கிச்சு முட்டனும்னு சங்கம் சார்பா கேட்டுகிறேன்.

வெற்றி பெற்ற இன்னொரு சிங்கத்துக்கு (ஜெ கே ரித்தீஷ் )சங்கம் சார்பா வாழ்துக்கள் .

அஞ்சு வருஷம் ஆண்ட அதே ராசா மறுபடி பதவிக்கு வந்து இருக்கிறார், சில மாற்றங்களோடு. ஆனா இவர் தான் ராசா இது இப்படி தான் அது அப்படிதான்னு சொல்லுரகுக்கு வேற எதாவது மார்க்கம் இருந்து இருந்துச்சுனா நாம செலவழிச்ச தேர்தல் பணத்திலே நாட்ட தூக்கி நட்ட குத்தல் ஆக்கியிருக்கலாமே என்று ஒரு நப்பாசை.

வேற ஒண்ணும் இல்லை, இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாத மன்னர் ஆட்சியில வாழ்ந்து கொண்டு இருக்கிற பாதிப்பு

http://padukali.blogspot.com/

chutneysambhar said...

Hello idlivadai

Your followers number has crossed 500.It will be fitting if u can do a write up on ur history & geography.

Readers will be happy to know more about u

Anonymous said...

I think we should start a poll or a new discussion or whatever for the next portfolio of ministers.

Krish said...

மூன்றாவது அணியில் தப்பி பிழைத்தது அம்மா மட்டும் தான் நினைக்கிறேன்! வலது, இடது, பாபு காரு, கௌடா, ஊத்தி மூடிட்டாங்க

Anonymous said...

நாலு நாள் net access பண்ண முடியல!! அதுனால கொஞ்சம் லேட்டு!
"தமிழ்க்குடி" கூட்டத்துக்கு சரியான பாடம். சந்தோஷம்.

அதே நேரம் மு,க.கட்சியின் வெற்றியும் நாட்டுக்கு நல்லதல்ல.
சீக்கிரம் எதிர் பாருங்கள், ஒரே குடும்பத்தில் இருந்து "மூன்று" காபினெட் அமைச்சர்கள்.
கூடவே இன்னும் பல "spectrum" type ஊழல்கள்.

திருட்டுத்தனமாக ஜெயித்த சிவகங்கை வேட்பாளர் மீண்டும் இந்தத் திருநாட்டின் "முக்கிய" காபினெட் அமைச்சர்.

காங்கிரசும், மு.க.வும் நினைத்ததை "முடித்து" விட்டார்கள். இலங்கையையும் சேர்த்து.

லவ்டேல் மேடி said...

ஐயோ பாவம்...!!! என்னது ......!!! எல்லாரும் கையா தூக்கி ஜெய் ... ஹோ .... பாட்டு படுற மாதிரி தெரியுதே ....!!! நெசமாவா .....??????

Anonymous said...

அய்யா.. மானஸ்தன்,

Spectrum என்றாலே, ஒன்றிலிருந்து பிரிந்து பலவாக கிளம்புவது தானே! இருதயாவின் (மனசாட்சி) ஒரு தயா, இப்போது கனியாகி, அழ-கிரி(மலை)யாகி கெளம்பீட்டாய்ங்கய்யா... கெளம்பீட்டாய்ங்க...

ஒரு வார்த்தையுடன் "சு" சேர்ந்தால், நல்ல என்று பொருள்.
ஸ்வரம்-சுஸ்வரம், சீலா-சுசீலா, முகம்-சுமுகம் என்பன போல. இங்கே, "SU" சேர்த்தால்....?!?!

பதவி என்பதே போதை தரும்.

So, Spectrum - Suspect-Rum ஆகும்.

Erode Nagaraj... said...

இனி, இலங்கையை இளங்கைகளிடம் (வாரிசுகள்) விட வேண்டியது தான்.

மஞ்சள் ஜட்டி said...

இப்படி சிம்பன்சி குரங்கு மாதிரி கை தூக்கி ..என்ன பயன்? அக்குள் நாத்தம் தான் மிச்சம் :))

padukali said...

" மஞ்சள் ஜட்டி said...
இப்படி சிம்பன்சி குரங்கு மாதிரி கை தூக்கி ..என்ன பயன்? அக்குள் நாத்தம் தான் மிச்சம் :))"நச்சுன்னு ஒரு கமெண்ட்.

வாய் விட்டு சிரித்தேன். நன்றி மஞ்சள் ஜட்டி.

சுவையான நகைச்சுவை துணுக்குகளே எடுத்து போட்டு தூள் பாரதி விட்டிர்கள்

வாழ்த்துகள் இட்லி வடை