பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 07, 2009

தவறு திருத்தப்படட்டும்

அமெரிக்க நிறுவனங்கள் பெங்களூர் போன்ற வெளிநாட்டு ஐடி நகரங்களில் அவுட்சோர்ஸிங் செய்தால் அவற்றுக்கு அளித்து வரும் வரிச்சலுகை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் நேற்று கூறினார். இதை பற்றிய தினமணி தலையங்கம். கீழே....


வெளி நாடுகளில் அயல்பணி ஒப்படைப்பு மூலம் வேலைகளை ஒப்படைத்து லாபம் சம்பாதிக்கும் அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்கள் அனுபவித்துவரும் வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருக்கிறார். இதை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே வலியுறுத்தினார். அதிபர் பதவிக்கான தேர்தலின்போதும் பிரசாரத்தில் பேசினார். அமெரிக்க பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்பதை இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்.

""வெளிநாடுகளுக்கு அயல்பணி ஒப்படைப்பு (பி.பி.ஓ.) முறையில் வேலைகளை ஒப்படைத்துவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டு வராமல் அயல் நாடுகளிலேயே முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அளித்துவரும் வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும்,

அமெரிக்காவிலேயே முதலீடு செய்து, வேலை வாய்ப்பு அளித்து பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும், இதற்காக கம்பெனிகள் வருமானம் மீதான வரிவிதிப்பு சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்படும்'' என்பதே அவருடைய அறிவிப்பின் முக்கிய அம்சங்களாகும்.
அமெரிக்காவில் இப்போது மிகக்கடுமையான பொருளாதார தேக்க நிலை நிலவுகிறது. வங்கி, காப்பீட்டுத் துறைகளில் ஏற்பட்ட திவால் நிலைமையால் அங்கு பொருளாதாரத்தை மீட்சி அடைய வைக்கும் வழி தெரியாமல் அரசு விழிபிதுங்கி நிற்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இதனால் பிற துறைகளில் நுகர்வு மிகவும் குறைந்து வருகிறது.

தேசபக்தியுள்ள அமெரிக்கர்கள் மட்டும் அல்ல, அமெரிக்காவின் தொழில், வர்த்தகத்துறையினரும் ஒபாமாவின் அறிவிப்பை மறைமுகமாக ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தியா, சீனா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளின் பொருளாதாரங்களை வீழ்ச்சி அடையாமல் காப்பாற்றி வருவது தகவல் தொழில்நுட்பத்துறையின் வேலைவாய்ப்புகள்தான். இப்போது அதற்கு ஆபத்து வந்திருப்பதால் நம்மால் கவலைப்படாமல் இருக்க முடியாது.

ஒபாமாவின் இந்த நடவடிக்கையால் நம்முடைய தகவல் தொழில்நுட்பத்துறை முற்றாக செயலிழந்துவிடாது; வேலைவாய்ப்புகளும் அடைபட்டுப் போய்விடாது. ஆனால் அந்தத் துறைக்கு வரும் வருவாய் குறைந்தால் அதை ஒட்டி வளர்ந்து வரும் துறைகளுக்கு ஊக்குவிப்பு குறைந்துவிடும். எனவே கவலைப்படாமல் இருக்க முடியாது.

இந்தியாவிலிருந்து மென்பொருள் ஏற்றுமதி மூலம் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ. 2,25,600 கோடி வருவாய் கிடைக்கிறது. மென்பொருள் ஏற்றுமதி, அயல் பணி ஒப்படைப்பு ஆகிய பணிகள் உள்ளிட்ட அந்தத்துறை மூலம் ஆண்டுக்கு ரூ. 5,04,100 கோடி மதிப்புக்கு விற்றுமுதல் சாத்தியமாகிறது. சுமார் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. இதில் பெருமளவுக்கு ஈடுபட்டிருப்பவர்கள் தொழில்முறைக் கல்வி பயின்ற பொறியாளர்கள், இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய வருவாய், சேமிப்பு ஆகியவற்றை மையமாக வைத்துத்தான் இந்தியாவின் நுகர்பொருள் வர்த்தகமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மென் பொருள் ஏற்றுமதியிலும் அயல் பணி ஒப்படைப்புப் பணியிலும் பல நாடுகளுடன் இந்திய நிறுவனங்கள் கூட்டாகச் செயல்படுகின்றன. அவற்றில் 60 சதவீதம் அமெரிக்க நிறுவனங்களாகும். எனவே அந்த நிறுவனங்கள் தங்களுடைய வேலைகளை இந்திய நிறுவனங்களுக்கு முழுக்க நிறுத்த வேண்டாம், கணிசமான அளவுக்குக் குறைத்தால்கூட நமக்குப் பாதிப்பு ஏற்படும்.

அதே வேளையில் அமெரிக்க நிறுவனங்களுமே இந்த கட்டுப்பாடுகளை விரும்பமாட்டா என்பது நிச்சயம். இந்தியாவில் பணிகளை ஒப்படைத்துச் செய்வதற்குப் பதிலாக அந்தப்பணிகளை அமெரிக்காவிலேயே செய்வதென்றால் பத்து மடங்கு செலவிட நேரும். அதனால் அவற்றின் லாபம் குறையக்கூடும் அல்லது அந்தச் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கக்கூடும். அதே சமயம் ஒபாமா விதிக்கப்போகும் வரி அளவு அவற்றால் செலுத்தக்கூடிய அளவுக்கு இருந்துவிட்டால் இந்தியாவிலேயே தொடர்ந்து பணிகளைச் செய்துகொண்டு, வரியையும் செலுத்திவிட அவை முடிவு செய்யும்.

இனி பார்க்க வேண்டியது, அமெரிக்க அரசு அயல் பணி ஒப்படைப்புக்கு விதிக்கப்போகும் வரி விகிதங்கள் என்ன என்பதுதான்.


இதில் இந்திய அரசு கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. வரிச்சலுகை சட்டங்களைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் அரசை ஏய்க்கின்றன என்பதை அடையாளம் கண்டு அந்த ஓட்டைகளை அடைக்க அதிபர் ஒபாமா முன்வந்திருக்கிறார், நாமோ வரியற்ற வர்த்தக மண்டலங்களையும் துறைகளையும் உருவாக்கி சலுகைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறோம். அடித்தள கட்டமைப்புகளை மேம்படுத்த பணம் இல்லை என்று சொல்லி கோடிக்கணக்கான ஏழைகளுக்குத் தரமான கல்வி, சுகாதார வசதி போன்றவற்றை மறுத்துக்கொண்டே வசதி படைத்தோருக்கு மட்டுமே சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம். இனியாவது நமது ஆட்சியாளர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்களா?


நன்றி: தினமணி

19 Comments:

Krish said...

We need to react to this move. America is supporting FTA(Free Trade Agreement) and they are selling all their products in India, China etc. GM,Ford,Microsoft,Dell,HP etc.....
If we don't allow those products, or put lot of constraints, then American companies suffer.

If America doesn't want other people to work in their country, they can also stop selling all their products outside! They will not do.

பா. ரெங்கதுரை said...

டி.சி.எஸ்., விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற பெரும் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் H1 மற்றும் L1 விசாக்களில் இங்கிருந்து ஆட்களை அமெரிக்கா கூட்டிச் சென்று குறைந்த சம்பளம் கொடுப்பது, ஓவர்டைம் ஊதியம் கொடுக்காமலேயே அதிக நேரம் வேலை வாங்குவது போன்றவற்றை ஒபாமா முறைப்படுத்தினாலே மென்பொருள் துறையில் அமெரிக்கர்கள் வேலை இழப்பது கணிசமாகக் குறையும்.

லவ்டேல் மேடி said...

நெம்ப கஷ்டம்......!!!!

Baski said...

It is India's Mistake for having high dependence on America. (also other developed countries).
BTW., Pepsi/Coke should be the first in our hit list.

No use of these companies apart from sponsoring sporting/other events. Also making our stars/players rich.

Closing GM, Ford factories:
How about the Job Loss if all these companies are out.
- Only Ratan Tata has a homegrown auto manufacturing unit(hats-off).

Closing/Ignoring Microsoft/Dell/HP:
Do we have any domestic built OS/Hardware?
For OS we can use open-source (Advaniji's mission).
How about hardware?

For American business, India is not a big business place. But a place for low-cost labor.

Any *good* decisions in US will be *bad* for us.

When USA closes the loopholes that causes this recession, It will heavily impact in India .

Unfortunately, we are on the other side of the hole in this case.

Will our leaders think beyond vote bank? I dont think so.

சோஷலிஸ்டு said...

தினமணியில் இவ்வளவு நல்லக் கட்டுரையா?. இவ்வளவு நல்ல கட்டுரையை எழுதியது நிச்சயமாக் குருமூர்த்தி போன்ற ஒரு பாசிஸ்டாக இருக்க முடியாது.

Pooja said...

அதற்காக நாமும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் SEZ க்களை மூடிவிட்டு ஏழைகளுக்கு கல்வியும் சுகாதார வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதில்லை. கொடுக்கும் இலவச டிவிக்களையும், நிலங்களையும் இன்ன பிற இலவசங்களையும் நிறுத்தி விட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தால் அவர்களே அனைத்தையும் வாங்கி கொள்வார்கள்.

UMA said...

YOU ARE ABSOLUTELY CORRECT KRISH:
INDIA MUST STOP ALL IMPORT FROM USA AND EUROPE.WE MUST ENCOURAGE INDIAN MANUFACTURERS.

We need to react to this move. America is supporting FTA(Free Trade Agreement) and they are selling all their products in India, China etc. GM,Ford,Microsoft,Dell,HP etc.....
If we don't allow those products, or put lot of constraints, then American companies suffer.

If America doesn't want other people to work in their country, they can also stop selling all their products outside! They will not do.

அஞ்சா நஞ்சன் said...

அருமையாக சொன்னீர்கள் பூஜா!

அஞ்சா நஞ்சன் said...

CAUTION!

AVAST reports:

Sign of "JS:Redirector-H4 [Trj]" has been found in "http://www.ntamil.com/vote/url.php?url=http://jackiesekar.blogspot.com/2009/05/blog-post_8193.html" file.


Please use caution while visiting the pages of Tamilish.

Anonymous said...

Mr Socialist,
Dont rush to blame Gurumurthy!
If you want to praise Dinamani, do it openly. Otherwise don't simply bash Gurumurthy with out any reference.

BTW, Gurumurthy is a hard core supporter of economy based only within India, not dependent on any country.

RAMesh Kumar said...

ஸ்விஸ் மற்றும் மற்ற நாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை வரும் புதிய அரசு மீட்டால்,இந்தியா மிகவும் வலிமையான நாடக மாறும்.(Current ruling party may hesitate because they are very good people and won't reveal the truth)

இன்று உலகம் இருக்கும் பொருளாதார நிலைமையில் இந்தியாவின் இந்த கருப்பு பணம் மீட்கப்பட்டல் உலகம் வாயடைகும்.பொருளாதாரம் செழித்தல் இந்தியாவிற்கு அனைத்தும் கைகூடும்.(Poverty is the only problem in India, already we are rich spiritually and culturally)

இந்தியாவின் மங்கிய பெருமை மீட்பது காலத்தின் கட்டாயம்.கருப்பு பணத்தை மீட்பது உண்மையான இந்தியனின் கடமை.மீட்கப்பட்டல் உலகம் இந்தியாவின் உதவிக்கு காத்திருக்கும்.

மானஸ்தன் said...

தமிழ் நாட்டில் சென்னையைத் தவிர வேறு இடமே இல்லை போலிருக்கு தொழிற்ச்சாலைகள் தொடங்க!!!!!

கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் தொடங்கப்பட்ட தொழிற்ச்சாலைகள் காரணமாக, சென்னையில் ஏற்பட்டுள்ள அவலங்கள் பல...

இவ்வளவு வசதிகளும் வாய்ப்புகளும் "பெரிய" நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்ப்பேட்டைகளின் நிலையை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைக் கேட்டால் சொல்வார்கள்.

இது தவிர, திருச்சி மற்றும் கோயம்பதூரின் தொழிற்பேட்டைகளின் வளர்ச்சி ரொம்ப மோசம். மதுரை மற்றும் திருநெல்வேலி போன்ற பெருநகரங்கள் கண்டு கொள்ளப்படவே இல்லை என்பது மிகவும் சோகம். மொத்தத்தில் சென்னையின் ஜனப் பெருக்கத்திற்கு இதெல்லாம் முக்கிய காரணம் ஆகி விட்டது.

இது எல்லாவற்றிக்கும் மேலாக இந்த கணினி-சார் zones (as these government claims), அமைப்பதிலும் மதுரை, கோவை மற்றும் திருச்சி புறம் தள்ளப்பட்டுள்ளது.

இதை உணர்ந்து, தமிழ் நாடு என்றால் சென்னை மட்டுமே என்ற நிலை மாற, இனி வரும் ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும். unfortunately none of the parties had talked about these issues in the election manifesto.

பயிர்க்கடன், வராக்கடன் என்று கொடுத்து இந்த அரசியல் கடன்காரர்கள் கொள்ளை அடிப்பதைத் தவிர்த்து - நல்ல முயற்சி உடைய, தன்னம்பிக்கை கொண்ட இளைய சமுதாயத்தை தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சுய-தொழில் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நம் இளைஞர்களின் "our-sourced" வேலையின் மோகம் குறையும்.

மானஸ்தன் said...

தமிழ் நாட்டில் சென்னையைத் தவிர வேறு இடமே இல்லை போலிருக்கு தொழிற்ச்சாலைகள் தொடங்க!!!!!

கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் தொடங்கப்பட்ட தொழிற்ச்சாலைகள் காரணமாக, சென்னையில் ஏற்பட்டுள்ள அவலங்கள் பல...

இவ்வளவு வசதிகளும் வாய்ப்புகளும் "பெரிய" நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்ப்பேட்டைகளின் நிலையை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைக் கேட்டால் சொல்வார்கள்.

இது தவிர, திருச்சி மற்றும் கோயம்பதூரின் தொழிற்பேட்டைகளின் வளர்ச்சி ரொம்ப மோசம். மதுரை மற்றும் திருநெல்வேலி போன்ற பெருநகரங்கள் கண்டு கொள்ளப்படவே இல்லை என்பது மிகவும் சோகம். மொத்தத்தில் சென்னையின் ஜனப் பெருக்கத்திற்கு இதெல்லாம் முக்கிய காரணம் ஆகி விட்டது.

இது எல்லாவற்றிக்கும் மேலாக இந்த கணினி-சார் zones (as these government claims), அமைப்பதிலும் மதுரை, கோவை மற்றும் திருச்சி புறம் தள்ளப்பட்டுள்ளது.

இதை உணர்ந்து, தமிழ் நாடு என்றால் சென்னை மட்டுமே என்ற நிலை மாற, இனி வரும் ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும். unfortunately none of the parties had talked about these issues in the election manifesto.

பயிர்க்கடன், வராக்கடன் என்று கொடுத்து இந்த அரசியல் கடன்காரர்கள் கொள்ளை அடிப்பதைத் தவிர்த்து - நல்ல முயற்சி உடைய, தன்னம்பிக்கை கொண்ட இளைய சமுதாயத்தை தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சுய-தொழில் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நம் இளைஞர்களின் "our-sourced" வேலையின் மோகம் குறையும்.

Anonymous said...

It is not fair to compare Obama's push to recover differential tax for profits enjoyed by US firms abroad, vs. tax-free SEZ zones created in India. And it is not true that local US government constituents (states, townships, etc) do not offer discounts. For example, a county in Georgia offered enormous sums just to establish something as less labor-intensive as a Data Center). Corporations like Microsoft, Cisco, Google, etc. have dedicated groups just to scout for locations and negotiate benefits with US state/county/municipal governments.

I am not saying that SEZs are right or wrong, just that SEZs are a different issue from what Obama is trying to accomplish. Obama's move will bring more money to US without affecting local employment. SEZ's have the potential to impact locality - positive or negative.

geeyar said...

சோசலிஸ்டுக்கு

தமிழில் வரும் தரமான நாளிதழ் தினமணி ஒன்றே. வாங்கி படிக்காமல் அவசரகதியில் வார்த்தைகளை விரயம் செய்யாதீர்கள்.

நீரஜா சவுத்ரி, முருகன், இல.கணேசன் என தினம் ஒருவர் கட்டுரை. இன்று டீக்கடை பெஞ்ச் மாமா மாமி என வதந்தி வடிவில் கட்டுரை எழுதுபவர்களுக்கு மத்தியில் தலையங்கம் எழுதம் ஒரே தமிழ் நாளிதழ் தினமணி ஒன்றே.

நீங்க டீக்கடை பேப்பர் படிப்பவரா? பழைய பேப்பர்கடையில் படிப்பவரா?
முதலில் காசு கொடுத்து பேப்பர் வாங்கி படியுங்கள்.

Krish said...

அமெரிக்கர் களுக்கு தேவை என்றல் 'தாரள பொருளாதாரக் கொள்கையை' கடைபிடிப்பார்கள். இந்திய , அமெரிக்க பொருட்களுக்கு தடையோ , அல்லது கட்டுப்பாடு விதித்தால் , அமெரிக்க நிறுவனங்கள் எலாம் போண்டி யாக வேண்டியதுதான்.

மது said...

தலையங்கத்தைப் பார்த்தவுடன் UMA, Krish மாதிரி கருத்துப் பதியப் போறிங்கன்னு நினைச்சேன்!!! பரவாயில்லையே உருப்படியான கருத்தாத்தான் பதிஞ்சு இருக்கிறீங்க இட்லிவடை

கிரி said...

அனைத்தையும் இலவசம் இலவசம் என்று அறிவித்து அனைவரையும் பிச்சைகாரர்கள் ஆக்கியது தான் நம்மவர்கள் சாதனை

UMA said...

// மது said...
தலையங்கத்தைப் பார்த்தவுடன் UMA, Krish மாதிரி கருத்துப் பதியப் போறிங்கன்னு நினைச்சேன்!!! பரவாயில்லையே உருப்படியான கருத்தாத்தான் பதிஞ்சு இருக்கிறீங்க இட்லிவடை //

என்ன சொல்லறீங்கன்னு புரியல. என்னுடைய கருத்து உருப்படியில்லையா?