பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 07, 2009

பஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன ?

பஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன ? சந்திரமௌளீஸ்வரன் எழுதி அனுப்பிய தகவல்...

இடம் தேர்தல் ஆணைய அலுவலகம், நிர்வசன் சதன், புது தில்லி
தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா அறை

நவீன் சாவ்லா: வாங்க வாங்க ஸ்ரீபதி சார். என்ன இப்படி செஞ்சிட்டீங்க. ஒரு பெரிய ஐ ஏ எஸ் ஆபிசர். ஒரு ஸ்டேட்டோட சீஃப் செகரட்டரி. நீங்க இப்படி செய்யலாமா

ஸ்ரீபதி: சாவ்லா. சார். இதென்ன அபாண்டம் நான் என்ன செஞ்சேன். நீங்க மத்தியானம் 3 மணிக்குள்ளே உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஓடோடி வந்திருக்கேன்.

நவீன் சாவ்லா: என்ன்ங்க இப்படி சொல்லிட்டீங்க. உங்க ஸ்டேட்லே பஸ் கட்டணம் எல்லாம் திடீர்னு பேர் பாதியாக் கொறச்சிட்டீங்கனு நியூஸ் பேப்பர்லே போட்டிருக்காங்க; டிவிலே சொல்றாங்க.

ஸ்ரீபதி: சாவ்லா சார்! உங்களுக்குத் தெரியாத அபிஷியல் பார்மாலிட்டியா. இந்த மாதிரி பஸ் ஃபேர் கொறைக்கனும்னா அதுக்கு அபிஷியல் ஆர்டர் சிஎம் கிட்டே கையெழுத்து வாங்கி வெளியிடனும். அப்படி எதுவும் தமிழ்நாடு அரசு வெளியிடலையே.

நவீன் சாவ்லா: அப்ப எப்படி ரேட் கொறஞ்சது
ஸ்ரீபதி: அது டிரான்ஸ்போர்ட் கார்ப்பொரேஷன் எம்டிங்க அவங்களாவே செஞ்சிருப்பாங்க. அதுக்கு என்னைக் கேள்வி கேட்டீங்கன்னா நான் எப்படி பதில் சொல்வேன்

நவீன் சாவ்லா: என்ன்ங்க டிரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் எம்டிஸ் அவங்களா எப்படி செய்வாங்க. அப்படின்னா அந்த எம்டிஸ் யாரையாவது என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க. நான் என்னானு விசாரிக்கிறேன்
மாநில போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நவீன் சாவ்லா முன்பு கை கட்டி நிற்கிறார்.

நவீன் சாவ்லா: என்ன்ங்க நீங்க தான் டிரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் எம்டியா?

டிகாஎ: ஆமா சார்

நவீன் சாவ்லா: நீங்களா எப்படி அரசாங்க உத்தரவு இல்லாமே பஸ் ஃபேர் குறைக்கலாம். அதுவும் எலெக்‌ஷன் டைம். கோட் ஆஃப் கண்டக் அமுலில் இருக்கிறது உங்களுக்குத் தெரியாதா.

டிகாஎ: சார் . இது எனக்கும் தெரியாது. பஸ் கண்டக்டர்கள் அவங்களா ப்ஸ் சார்ஜ் குறைச்சி வாங்கிருக்காங்க. நீங்க எல்லா கண்டக்டர்களையும் டில்லிக்கு வரவைச்சு விசாரிங்க.

9 Comments:

சித்து said...

ஐயோ ஐயோ நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. இதுவும் சொல்வார்கள் இதற்கு மேலும் சொல்வார்கள்.

vinoth kumar said...

good joke

UMA said...

இனிமேல் எவனும் ( எதிர் கட்சிகள் மற்றும் தினமணி, தினமலர் )பஸ் கட்டணத்தை குறைக்க சொல்லி போராடமாட்டான். பஸ் கட்டணத்தை குறைத்ததால் தினம் 40 லக்ஷம் ரூபாய் நஷ்டம் என்ற இவர்களின் , போக்குவரத்து கழக பக்தியை மெச்ச வேண்டும்.

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா...!!! உட்டா... மக்கள் அவ்வளவுதான் குடுக்குறாங்கன்னு சொல்லி ... தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களையும் டெல்லி வரச்சொல்லுவாங்கலாட்ட.....!!!!!!

Anonymous said...

//அடங்கொன்னியா...!!! உட்டா... மக்கள் அவ்வளவுதான் குடுக்குறாங்கன்னு சொல்லி ... தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களையும் டெல்லி வரச்சொல்லுவாங்கலாட்ட.....!!!!!!
//
awesome!
--anamika

Baski said...

Nice

மணிகண்டன் said...

:)-

கிரி said...

;-)

Anonymous said...

@UMA

all your jaalraa to the mu.ka. goshti suggests that you can change the name to

UPA!