பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 24, 2009

சென்னை அணியின் தோல்விக்கு காரணம - இன்பா

இட்லிவடையில் தொடர்ந்து வரும் சூடான அரசியல் பதிவுகளுக்கு இடையே அரைகுறையாய் ஆடினாலும் அரையிறுதிவரை சென்று பெங்களுரு அணியிடம் உதைவாங்கி திரும்பியிருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் பற்றிய விமர்சனம்.


ஹைய்டன் : வெல்டன் என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் அரையிறுதியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் ஆடிய இவரை.

ரைனா : 'ரன் ரெயினா' என்று சில போட்டிகளில் மட்டும் சொல்லவைத்தார். முக்கால்வாசி போட்டிகளில் கோடை 'ரெயின்' ஆனார்

பாலாஜி : வேகமாக ஓடிவந்து, நிதானமாக 'பேட்டை' நோக்கி பந்து விசினார். தோல்விக்கு இவர் முக்கிய பங்கு வகித்தார். பெயரில் 'லட்சுமி(!) ' இருப்பதாலோ என்னவோ தோனி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து எரிச்சல் மூட்டினார்.

ஜேகப் ஓரம் : ஜேகப் 'ஓரம்போ' என்று இவருக்கு பெயர் வைத்திருக்கலாம். எதற்கு அணியில் இருக்கிறோம் என்று இவருக்கு கடைசி வரை தெரியவில்லை. இவரை தேர்வு செய்தவர்களுக்கும் தெரியவில்லை.

ஜகாதி : ஆடிய முதல் போட்டியில் 'ஜிகாதி' போன்று செயல்பட்டவர் பின் சதாம் போன்று எதிரணியிடம் சரண் அடைந்துவிட்டார்.

முரளிதரன் : முரளி 'தரம்' . அணியில் இருந்த ஒரே ஒரு பௌலர்.

தியாகி : சரியான பெயர் வைத்திருகிறார்கள் என்பதுபோல துவக்க ஓவர்களில் ரன்களை 'தியாகம்' செய்தார்.

ஆல்பி மோர்கல் : காலை 'வாருகல்' . ஒரு நல்ல ஆல் ரௌண்டர் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசியில் 'வைகோ' பணியில் பார்ம் அவுட் ஆகி கவுத்துவிட்டார்.

பத்ரிநாத் : சரியான 'உதிரி'நாத். ஓடி ஓடியே ரன் எடுக்கும் இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் லாயக்கு.

பர்திவ்படேல் : வேகபந்து வீசும்போது மட்டும் 'பளார்' படேல் ஆகி, சுழல் பந்து
வரும்போது 'பரிதாப' படேல் ஆகிவிடுகிறார்.

மகேந்திர சிங்க் தோனி : சரியான திட்டமிடல் இல்லாதது, சூழ்நிலைக்கு ஏற்றதுபோல அணியை தேர்வு செய்யாதது, தன் பலம, பலவீனம் அறியாதது, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை போன்ற காரணங்களால் 'கேப்டன்' தோற்றுவிட்டார். (கவனிக்க இரண்டு 'கேப்டன்'களும் ). அரையிறுதியில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல், ஐந்து ஓவர்களை வீணடித்தார்.

வெற்றிகோப்பை 'மிஸ்' ஆனதற்கு அடிப்படை காரணம
தோனியின் சென்னை 'மிஸ்' ஸிங்தான்.


- இன்பா

18 Comments:

Anonymous said...

எனக்கென்னமோ "மல்லையா" "தோனியோட" ஏதோ டீல் போட்டுருபாரோனு தோணுது.
நேத்திக்கு அண்ணனோட பேட்டிங் ஸ்டைல் அப்டிதான் இருந்தது, (especially when haydoo and kozhandai gave such a blistering start of 60 from 7 overs, it was totally spoiled by rest of the dhoni & co, in particular the "தலை" himself!

old warrior கும்ப்ளேக்கு பாராட்டுகள். இன்னிக்கும் இந்த போஸ்ட் போடும்போது 3-0-10-2.
laudable effort!

Anonymous said...

its mallaya magic

when that Van der Merwe got out the ball after murli dropped catch...
tis confirmed....its a pale effort to add soem dramatism in a fixed match

think about this. Mallaya is missing MONACO GRAND PRIX...its a celebrity event and an unparalled socializing oppportunity

if he can miss that...he should have set this match up.

--VAAL PAYYAN

M Arunachalam said...

Chennai has been blowing hot & cold throughout this IPL 2. So, there is nothing to feel that the match has been fixed.

If Nakkeeran publishes a "photo" in cover page, we can know who has "fixed" that cover. But, Murali missing a catch in a high-pressure semi-final can't be termed a fixed one. It is insulting to a "real Warrior" and the world record holder Murali.

Anonymous said...

//மகேந்திர சிங்க் தோனி : சரியான திட்டமிடல் இல்லாதது, சூழ்நிலைக்கு ஏற்றதுபோல அணியை தேர்வு செய்யாதது, தன் பலம, பலவீனம் அறியாதது, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை போன்ற காரணங்களால் 'கேப்டன்' தோற்றுவிட்டார். //

அப்ப அரையிறுதி வரை வெற்றி பெற்றது எல்லாம்? ஆவ்வ்வ்வ்... உடனே மேட்ச் ஃபிக்ஸிங்னு ஆரம்பிச்சிருவாங்க

இந்த மாதிரி விமர்சனம் எல்லாம் முதல்ல தடை பண்ணிடறது (அட்லீஸ்ட் என்னோட ரீடர்லயாவது) போரடிக்காம இருக்கறதுக்கு நல்லது.

கடப்பாரை said...

ஏங்க....

ஓட்டங்களை வாரிக்கொடுத்து
கேட்சுகளை கோட்டை விட்ட மன்ப்ரீத் கோனிய விட்டுட்டீகளே

Krish said...

அரைஇறுதியில் தோற்றதற்கு இவர்கள் எல்லாம் கரணம் என்றால், மீதமுள்ள ௧௪ போட்டிகளில் ௮ வெற்றி பெற்றதற்கு யார் கரணம்?
//தியாகி : சரியான பெயர் வைத்திருகிறார்கள் என்பதுபோல துவக்க ஓவர்களில் ரன்களை 'தியாகம்' செய்தார்./////
ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். கோனியை காட்டிலும் இவர் பரவில்லை.

//இந்த மாதிரி விமர்சனம் எல்லாம் முதல்ல தடை பண்ணிடறது (அட்லீஸ்ட் என்னோட ரீடர்லயாவது) போரடிக்காம இருக்கறதுக்கு நல்லது./////
I agree.

Anonymous said...

hayyo hayyoo.. anotheriplpalyer.blogspot.com idhai padinga.. adhula vandha post.. timings ellaam paarunga..

chutneysambhar said...

I too have my own apprehensions about the ipl matches. All the heavy weight team owners are also playing their game. Big question is why LAlit Modi is refusing to allow the anti corruption unit of ICC to be part of IPL???

Thinking of Chennai, the team was no where near any standard. First culprit is Dhoni. He was no where near any form and kept blaming his bowlers and fielders. Had he been a bowler like Bala or murali, he will know the pain to bowl to gilchrist, yusuf pathan etc.

The biggest worry now should be the mental fatigue for all indian players after such a grueling tournament

Anonymous said...

I wouldn't accept this. Chennai did a gud job in whole d series.

shiva said...

/பெயரில் 'லட்சுமி(!) ' இருப்பதாலோ என்னவோ தோனி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து எரிச்சல் மூட்டினார்./

nice comments abt players...
especilay about 'lakshmi' pathy balaji

Anonymous said...

தொடர்ந்து அரசியலா போட்டு மண்டை காஞ்சு போயிருந்த நேரத்துல
விளையாட்டு விமர்சனம் வருது

இதை போன்று அவ்வபோது
நல்ல சினிமாக்கள், இசை விமர்சனம் போடும்படி
இட்லிவடையை கேட்டு கொள்கிறேன்

Anonymous said...

இந்த மாதிரி விமர்சனம் எல்லாம் முதல்ல தடை பண்ணிடறது (அட்லீஸ்ட் என்னோட ரீடர்லயாவது) போரடிக்காம இருக்கறதுக்கு நல்லது.
/

I dont agree...

நன்றாக விளையாடினால் பாராட்டுவதும்
தோல்வி அடைந்தால் விமர்சிப்பதும்
அவசியம்

i feel its a entirely different review from usual boring analysis....

zahir said...

starting 4 matches sothappal - then in the middle some what ok
in the last all of them know it
but right from the beginning there is no bowler
need atleast one good pace bowler for next season

good comments

Erode Nagaraj... said...

அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்கள் அணிக்குச் செல்லும் "வீரர்", அதை விட அதிகத் தொகை கிடைத்தால், விலை போக மாட்டாரா? இதெல்லாம் சகஜமப்பா...

Vikram said...

innumma IPL(2) pathi pesittu irrukeenga...


Getting reminded of thervar magan dialogue -
"poyi pulla kuttiya padikka vekkara velaiya paarunga"

the only thing i liked abot IPL was the IPL Page2 of Cricinfo
:-)

Sample :
Rules from hell:
f123 -
Fans attending any "gala" opening or closing cermonies at future IPL tournaments agree that the organisers will not be liable for damage done by dangerously hovering fireworks, brain-numbing speeches, and one-hit wonders who can't even lip-sync properly.

ரா.கிரிஷ் said...

இந்தியா வீரரை கேப்டனாக கொண்ட அணி வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

Mr. M said...

enakku oru doubt ..... Ntini also belongs to CSK but never played a match in IPL2 ....

Siraj-Kuwait said...

Bowling right from the beginning was not upto the mark. The fielding was very poor and the fielding placement by Dhoni was also very bad. Something wrong with this Dhoni during IPL.

நல்லா விளையாண்டால் தான் டப்பு...இல்லன்னா ஆப்பு என டீம் ஓனர் கள் அறிவிக்கனு