பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 26, 2009

ஜக்குபாய்


ராடன் டிவி தயாரிப்பில் ஜூனில் வெளியாக இருக்கிறது ‘ஜக்குபாய்’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட அதே கதையில் சரத்குமார் நடித்திருக்கிறார்.

ஜோடியாக புதுமுகம் மதுமாலினியும் அவருக்கு மகளாக ஸ்ரேயாவும் நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவிலும் மலேஷியாவிலும் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கிறது. சரத்குமாரின் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். செண்டிமெண்ட்டும் ஆக்‌ஷனும் கலந்து சூப்பர் கலவையாக படத்தை கொண்டு வந்திருக்கிறார். கே.எஸ்.ஆர். படத்தின் ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். ஜெமினி உட்பட கதாநாயகியாக பல படங்களில் நடித்த கிரண், இதில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பது நமது வலைப்பதிவர் கல்யாண்ஜி. அவர் எழுதியிருக்கும் பாடலின் பல்லவி என்ன தெரியுமா? ’ அச்சம் மடம் நாணம் - என்னை விட்டுப் போக வேணும்... நீ வா...! ஏ.ஆர்.ரஹ்மானின் பல படங்களில் உதவியாளராக பணி புரிந்து கொண்டே பாடல்களுக்கு குரல் கொடுத்திருக்கும் ரஃபி - இந்த ஜக்குபாய் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவுண்டமணி வெளுத்துக் கட்டியிருக்கிறார், அப்பா மகள் செண்டிமெண்ட் ஆக்‌ஷன்(கனல் கண்ணன்) நிரம்ப இருக்கும் கதை(கே.எஸ்.ரவிகுமார்)...

சரத்குமாருக்கு இந்த முறை நிச்சயம் வெற்றி கூட்டணி என்று நினைக்கிறேன்!

24 Comments:

ஹரன்பிரசன்னா said...

இந்தப் படத்தில் நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் பங்களிக்கிறீர்கள் என நினைக்கிறேன். படப்பீடிப்பு என எழுதியிருக்கிறது!

Inba said...

/சரத்குமாருக்கு இந்த முறை நிச்சயம் வெற்றி கூட்டணி
என்று நினைக்கிறேன்/


வற்றிபோன
குளத்து 'தாமரையாய்'
இருக்கும்
சரத்குமாருக்கு
வழக்கம்போல
ரவிக்குமார்
'கை' கொடுப்பார் என
நம்பலாம்

IdlyVadai said...

//இந்தப் படத்தில் நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் பங்களிக்கிறீர்கள் என நினைக்கிறேன். படப்பீடிப்பு என எழுதியிருக்கிறது!//

புரியவில்லை விளக்கவும்

லவ்டேல் மேடி said...

" ஜக்குபாய் "... வெற்றியடைய இந்த லவ்டேல் மேடியின் வாழ்த்துக்கள் .....!!!!!அட... .. நானு படத்த சொன்னனுங்கோவ்......!!!!!

Anonymous said...

///வற்றிபோன
குளத்து 'தாமரையாய்'
இருக்கும்
சரத்குமாருக்கு
வழக்கம்போல
ரவிக்குமார்
'கை' கொடுப்பார் என
நம்பலாம்.///


மிச்சத்தையும் ஏன் விட்டுடீங்க?

"கதிர் அருவாள்" கொண்டு அறுவடை பண்ண நெல்லை வெய்த்து சமைச்சு "உதயத்துல சூரியனுக்கு" காட்டிட்டு, "ரெண்டு இலைல" "மாம்பாழத்தோட" பரிமாறி, சாப்டதுக்கு அப்பொறம், விளையாட ஒரு "பம்பரம்" வாங்கி குடுத்து, "நட்சத்திரம்" வருவதற்கு முன்னாடி ஊர்க்கு அனுப்பி வையுங்க.

ஹரன்பிரசன்னா said...

இதுக்கு விளக்கம் வேற. உங்க தமிழ்தான் இந்த லட்சணத்துல இருக்கும்னு சொன்னேன்!

Baski said...

எனக்கு தெரிஞ்சி சரத் குமாரின் six வெற்றி ரகசியங்கள்.

1. கண்டிப்பா கிராமத்து கதை.
2. சரத்குமார் சட்டை போடாமல் கோயமுத்தூர் பாசை (என்றை / ஒன்றை) பேச வேண்டும்.
3. படத்தில் விஜயகுமார் கண்டிப்பா இருக்கனும். அவருக்கும் சட்டை (பனியன் கூட) கிடையாது.
4. ஒரு பெருசு ஒரு சிறுசு ரெட்டை வேடத்தில் சரத்குமார். பெருசு சிறுசை கொவிசுகொனும். ஆனா கடைசியில் திருந்தி பெருசு மண்டைய போடுரனும்.
5. ஒரு பஞ்சாயத்து சீன. எல்லோரும் பம்மனும் (காலில் விழுதல், வணக்கம் போடுதல்). சரத் மட்டும் சிங்கம் மாறி இருக்கனும்.
6. அவரை ஹிரோஇன் அவமான படுத்தி, அப்பறமா திருந்தி டூயட் பாடனும்.

கிரி said...

ரவிக்குமார் சரத்குமாரை காப்பாற்றுவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.

Krish said...

எல்ல இயக்குனர்களும் சொல்கிற கதைதான். "இது ஒரு வித்தியாசமான படம். இதுபோல ஒரு காட்சியை பார்த்திருக்க மாடீங்க, ஹீரோக்கும் , ஹீரோயினுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி..."

இத எல்லாம் கேட்டவே எரிச்சல வருது.படத்தை போய் பார்த்தா 'என்ன கொடுமை சரவணா' ரேஞ்சிக்கு இருக்கும்

Inba said...

அய்யா மானஸ்தன்

எதோ சின்ன பையன் தெரியாம சொல்லிட்டேன்

உங்க ஆட்டத்துக்கு நான் வரல

Anonymous said...

Totrupoi virathiyin uchathil erukira oruvarai kindal seivathu manidhabimanam agadhu IV...

Unakku kusumbu..

KSR enda endha aalai vachu oru padam eduthomnnu feel pannum bothu

Ellaraium verupethara neenga oru sadist..

Pavam ya sarathkumar avarai vitrunga ennamo pannittu poraru

சூரியன் said...

டெபாசிட் போகாமா இருந்தா சரி ...

குடுகுடுப்பை said...

சரத்குமாருக்கு இந்த முறை நிச்சயம் வெற்றி கூட்டணி என்று நினைக்கிறேன்!//

வெற்றி பெற்றாலும் கூட்டனியால் இருக்குமே தவிர அவரால் இருக்காது:)

மாயவரத்தான்.... said...

//முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவிலும் மலேஷியாவிலும் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கிறது. //

'ஆஸ்த்ரேலியாவிலும், மலேஷியாவிலும் கூட ஷூட்டிங் நடத்தப்பட்டது'. ஆனால் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

http://mayavarathaan.blogspot.com/2008/09/481_07.html

இப்போதெல்லாம் வெளிநாடுகளில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி விட்டு முழுக்க முழுக்க தாய்லாந்தில் தான் எடுக்கிறார்கள். அதிலும் வில்லு படத்தில் முழுக்க முழுக்க தாய்லாந்தில் எடுத்து படம் முழுக்க தாய்லாந்து நாட்டுக் கொடியையும், தாய் மொழி பெயர்ப்பலகைகளையும் காட்டி விட்டு ஆஸ்த்ரேலியா என்று கதை விட்டிருப்பார்கள்.

குடுகுடுப்பை said...

மாயவரத்தான்.... said...

//முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவிலும் மலேஷியாவிலும் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கிறது. //

'ஆஸ்த்ரேலியாவிலும், மலேஷியாவிலும் கூட ஷூட்டிங் நடத்தப்பட்டது'. ஆனால் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

http://mayavarathaan.blogspot.com/2008/09/481_07.html

இப்போதெல்லாம் வெளிநாடுகளில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி விட்டு முழுக்க முழுக்க தாய்லாந்தில் தான் எடுக்கிறார்கள். அதிலும் வில்லு படத்தில் முழுக்க முழுக்க தாய்லாந்தில் எடுத்து படம் முழுக்க தாய்லாந்து நாட்டுக் கொடியையும், தாய் மொழி பெயர்ப்பலகைகளையும் காட்டி விட்டு ஆஸ்த்ரேலியா என்று கதை விட்டிருப்பார்கள்.//

அந்த படத்தை அவ்ளோ உன்னிப்பா பாத்தீங்களா? உங்களுக்கு ஏதோ தெய்வசக்தி இருக்குதுங்கோ

நல்லூரான் said...

அய்யோ சரத் குமார் படமா..!!! அதுவும் அப்பா-மகள் சென்டிமெண்டா?!!! அய்யோ இப்பவே கண்ணக் கட்டுதுடா சாமி. மகள் கேரக்டர் யாருப்பா ரேயானா?!!!!!!!...

Selva Kumar said...

Oru visayam sollikuren, Sarathkumar enakku chiithappa. Enga amma chithhi serial virumbi paapaanga. athunala sarathkumar enakku chitthappa. Enakku chithappa na unakku chithappa, oorukke chithappa.

Pesama avaru screenla mattum nadichittu irukkalam. avarukku streetla irangi nadikka therialai.

மாயவரத்தான்.... said...

// மகள் கேரக்டர் யாருப்பா ரேயானா?!!!!!!!..//

Shreya!

மாயவரத்தான்.... said...

//அந்த படத்தை அவ்ளோ உன்னிப்பா பாத்தீங்களா? உங்களுக்கு ஏதோ தெய்வசக்தி இருக்குதுங்கோ//

பஞ்சம் பொழைக்க வந்த நாட்டோட கொடி கண்ணுல படும் போது தெரியாதா என்ன?!

மாயவரத்தான்.... said...

ஜக்குபாய் படத்தின் கதைக்கு இங்கே செல்லவும்...

http://en.wikipedia.org/wiki/Wasabi_(film)

Anonymous said...

இட்லி அண்ணே வணக்கம்!
இன்னிக்கு ஆபீஸ் போகவில்லையா? :-D :-)

நாரத முனி said...

// இதுக்கு விளக்கம் வேற. உங்க தமிழ்தான் இந்த லட்சணத்துல இருக்கும்னு சொன்னேன்! //

ஒன்னும் பிரச்சனை இல்லை... தமிழன்னை கோவில் கட்டி முடிச்சவுடனே, இட்லி வடை பேருக்கு " க ச ட த ப ர" னு ஒரு அர்ச்சனை பண்ணறதா வேண்டிப்போம். அப்புறம் பாருங்க அவரு தமிழ் நல்ல improve ஆகிவிடும்.

rajkumar said...

mayavarathan than idly vadai.

Erode Nagaraj... said...

நாரத முனி,

" க ச ட த ப ர" இல்லை.. " க ச ட த ப ற"