பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 18, 2009

முற்றும்!

விடுதலைப்புலிகளின் எழுச்சியும்- வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு

இந்தியாவின் தென்முனையில் கண்ணீர் துளிபோல இருக்கும் குட்டி நாடு இலங்கை.

சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மூர் இனத்தவர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் வாழும் நாடு.

1948-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. அங்குள்ள சிங்களர்கள், தமிழர்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களர்களுக்கு மட்டும் தமிழர்கள் மீது எரிச்சல் ஏற்பட தொடங்கியது.

ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியமான உரிமைகளை பறித்தனர்.

கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல விஷயங்களில் ஈழத்தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டனர். இது என்ன அநிநாயம் என்று ஈழத் தமிழர்களின் தலைவர்கள் கேள்வி கேட்டனர். அதை சிங்களர்கள் கண்டுகொள்ளவில்லை.

நம்ம ஊரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக வழியில் போராடி சுதந்திரம் பெற்று தந்தது போல, அங்கு ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வா உள்பட பல தமிழ் தலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காக அமைதி வழியில் போராடினார்கள்.

கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ முடியும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் தமிழ் இனம் ஒரு அடிமை இனம்போல இருக்க வேண்டியதுதான் என்று சொல்லாமல், சொல்லி சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்தனர்.

இதையடுத்து தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டம் ஊர்வலங்கள் நடந்தன. தமிழர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

1954-ம் ஆண்டு பிறந்த பிரபாகரன் சிறு பையனாக இருந்தபோது, ஈழத்தமிழர்கள் மீது போலீசார் நடத்திய வெறியாட்டங்கள் அதிகரித்திருந்தன. அப்போது பிரபாகரன் கேட்ட கேள்வி, ஏன் அடிக்கிறார்கள்? நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை?

இந்த சிந்தனை பிரபாகரன் போலவே பெரும்பாலான சிறுவர்கள் மனதில் ஏற்பட்டிருந்தது. அவர்கள் வளர்ந்து வாலிப வயதை தொட்டபோது, குட்ட குட்ட குனிவதா? உரிமைக்காக இனி ஆயுதம் ஏந்துவோம் என்றனர்.

பிரபாகரன் ஒருபடி மேலே சென்று, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை எங்களுக்கு தனியாக பிரித்து கொடுத்து விடுங்கள். நாங்கள் தமிழ் ஈழம் பெயரில் தனி சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொள்கிறோம் என்று ஆவேசமானார்.

இலங்கை மொத்த மக்கள் தொகையில் 73.8 சதவீதம் பேர் சிங்களர்கள். 13.9 சதவீதம் பேர் ஈழ தமிழர்கள். 4.6 சதவீதம் பேர் இந்திய வம்சா வழி தமிழர்கள். சுமார் 2 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க போவதாக 1972-ம் ஆண்டு பிரபாகரன் அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் பிறந்தது.

இலங்கையை வென்ற தமிழ் அரசன் சோழனின் கொடி புலிக்கொடி. அதையே பிரபாகரன் தன் கொடியிலும் பதித்தார். புலி தலையை சுற்றி 33 துப்பாக்கிக் குண்டு வளையம் அமைத்தார்.

அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும், ஈழப் போராளிகளுக்கு உதவினார்கள். எதிரி நாடுகள் இலங்கை மண்ணில் தளம் அமைத்து விடக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்தார்.

ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர். 1983-ம் ஆண்டு முதல் ஈழம் போர் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் வெறியர்களாக மாறினார்கள்.

கொழும்பில் அரசு பணியில் இருந்த, கடை வைத்திருந்த தமிழர்கள் ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டனர். 600 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் ரத்த ஆறு ஓடியது.

1985-ம் ஆண்டு சிங்கள அரசு முதன் முதலாக ஈழப் போராளிகளிடம் பேச முன் வந்தது. ஆனால் அதை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.

இந்த சமயத்தில் டெலோ, ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டி.யூ.எல்.எப் என்று பல போராளிக் குழுக்கள் இருந்தன. இவர்களால் விடுதலைப்போராட்டம் திசை திரும்புவதாக கருதிய புலிகள் ஸ்ரீசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி இலங்கை கொள்கையில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் புலிகளை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தார்.

1990 வரை 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருந்த இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளிடம் இருந்த ஆயுதங்களில் 90 சதவீதத்தை பறித்தது. பிறகு சுமார் 1000 ராணுவ வீரர்களை இழந்து விட்டு இந்தியா திரும்பியது. இது ஈழப்போரின் 2-வது கட்டமாக கருதப்படுகிறது.

இலங்கை பிரச்சினையை தீர்க்க ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒரு ஒப்பந்தம் செய்தார். இது விடுதலைப்புலிகளிடம் அதிருப்தியை உருவாக்கியது.

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அதன் பிறகு விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் பார்வை முழுமையாக மாறியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது சர்வதேச பார்வை மாறவும் இது வழி வகுத்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்று போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள்.

1993-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு மூலம் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார். இந்த நிலையில் சிங்கள ராணுவமும் தன்னை நவீனப்படுத்தி வலுவாக்கிக் கொண்டது. இதன் காரணமாக 1995-ல் யாழ்ப்பாணம் முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றியது.

அதற்கு பதிலடியாக 1996-ல் முல்லைத் தீவில் இருந்த ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் பிடித்தனர். அங்கு இருந்த 1200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் 1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தன.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத புலிகள் தங்கள் லட்சியப் பயணத்தில் உறுதியுடன் இருந்தனர். 1998-ல் கிளிநொச்சி ராணுவ முகாமை கைப்பற்றினார்கள். அங்கு இருந்த சுமார் 1000 சிங்கள ராணுவ வீரர்களை கொன்றனர்.

இதனால் வன்னிப் பகுதியில் புலிகள் வசம் பெரிய அளவில் நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுமார் 5 ஆண்டுகளில் தன் ஆயுத பலத்தை பெருக்கி புலிகள் இந்த அதிரடிகளை நடத்தியதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன.

புலிகள் வேகத்தை பார்த்த இங்கிலாந்து 2001-ல் புலிகளை தீவிரவாதிகள் என்று அறிவித்தது. இதை காதில் வாங்கிக் கொள்ளாத விடுதலைப்புலிகள் அதே ஆண்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். 6 விமானங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. உலகமே விடுதலைப்புலிகளை திரும்பிப்பார்த்தது.

இதையடுத்து உலகின் பல நாடுகள் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க முன் வந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியாவின் சமரசத்தை எதிர்பார்த்தது.

இந்தியா தலைமையில் ஒரு சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என்று பிரபாகரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் சமரசத்தில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. வெளியுறவு கொள்கை மாற்றம் காரணமாக இந்தியா அமைதி காத்தது.

இதையடுத்து நார்வே நாடு புலிகளிடம் பேச முன் வந்தது. அதை புலிகளும் ஏற்றுக்கொண்டனர். நார்வே நாட்டின் சமரச முயற்சி காரணமாக சிங்கள ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்தனர்.

2002-ம் ஆண்டு நார்வே நாட்டில் வைத்து சமரச பேச்சு நடந்தது. இலங்கை வடக்கு- கிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அதிகார பகிர்வு திட்டத்துக்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு இந்த சமரச திட்டத்தை ஏற்பதில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொத்து, பணம் சேர்த்து சொகுசாக வாழ ஆசைப்பட்ட கருணா என்ற முரளீதரன் 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினார். அவருடன் கிழக்கு மாகாணப் பகுதியில் இருந்த சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தனர். புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்பட்டது.

அடுத்தடுத்து கருணா துரோக செயல்களில் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை சிங்கள ராணுவத்திடம் முழுமையாக சொல்லி கொடுத்தார்.

விடுதலைப்புலிகளை எங்கிருந்து, எப்படி தாக்கினால் வேரோடு அழிக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை போர் கருவிகளை வாங்கியது. சர்வதேச கொள்கை மாற்றங்களும் சிங்கள அரசுக்கு சாதகமாக மாறின.

புதிதாக 2007-ல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சேவுக்கு சீனா அதிகமான ஆயுத உதவி செய்தது. உடனடியாக ராஜபக்சே போரைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2008ல் போர் நிறுத்தம் முறிக்கப்பட்டது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. கிழக்கு பகுதி முழுவதையும் விடுதலைப்புலிகள் இழந்தனர்.

4-வது ஈழப்போரை தொடங்குவதாக புலிகள் அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் போரில் கிளிநொச்சி, ராணுவத்திடம் வீழ்ந்தது. அதன் பிறகு முல்லைத் தீவு வீழ்ந்தது.

பிறகு மூன்றே மாதத்தில் வடக்கு பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து விட்டது. நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளி வாய்க்காலில் ராணுவம் தன் போரை நிறைவு செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்று கூறுவதற்காகத்தான் என்று சொல்வார்கள்.

நேற்று போர் முடிந்த 17-05-2009 ன் கூட்டுத் தொகையும் 33 என்பது குறிப்பிடத்தக்கது.


"for all who draw the sword will die by the sword"
- Matt 26:52Holly Bible

அமென்!


( நன்றி: மாலை மலர், சில மாற்றங்களுடன் )

41 Comments:

தங்க முகுந்தன் said...

super idly & vadai!

Anonymous said...

Its nice , you placed the chronology from malaimalar not from NDTV, which projects prbhakaran as justa terrorist and not as a one who became terrorist in the course of struggle. Worse they miss the events that triggered the struggle. I guess "the hindu" will surpass NDTV . History is always written by winners. The good news war is over. Lets see what diplomatic pressure India gives for the soverngity of people.

தங்க முகுந்தன் said...

இட்லியும் வடையும் நன்றாகத்தானிருக்கிறது! நல்லதொரு அலசல் - ஈழத் தமிழர் பிரச்சனையை விரிவாக எழுதியிருக்கிறீர்கள் நன்றி.

முகமது பாருக் said...

நீங்க கொஞ்சம் செத்த சாத்திட்டு இருங்கோ..


//1983-ம் ஆண்டு முதல் ஈழம் போர் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் வெறியர்களாக மாறினார்கள்.//

சிங்கள இனவெறியர்கள் இதற்கு முன்னர் என்ன புத்தர் போலவா இருந்தார்கள்?..வரலாறுகளை திரிக்காதீர்கள் ஒருபோது உங்களை போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.. பொய்யை திரும்ப திரும்ப சொல்ல உங்கள போன்ற பண்டாரங்கள் ஒருநாளும் வெட்கபடுவதே இல்லை.. என்ன ஒரு குரூர எண்ணங்கள் உங்களுக்கு.
உங்கள் ஆசைகள் ஒருநாளும் பலிக்காது பண்டாரங்களே!!!

புலிகளை ஆயுதம் ஏந்த வைத்த சிங்கள அரசாங்கத்திற்கு எடுபுடி வேலை பார்க்கும் இந்திய தரகர்களே!! வீரம் செறிந்த விடுதலை போராட்டம் சுலபத்தில் முடிந்துவிடாது, தமிழ் தேசிய தலைவருக்கு வயது 5000க்கும் அதிகம் என்று தமிழர்களுக்கு தெரியும்..மாவீரர்களுக்கு மரணம் என்பதே இல்லை.. காலத்தை வென்றவர்கள், மனிதர்கள் உள்ள வரை அவர்கள் புகழ் நிலைத்து இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..மேலும் "பிரபாகரன் என்ற ஒற்றை சொல்லுக்கு அர்த்தம் தமிழீழம்" என்பதை மறக்காதீர்கள், எம் தலைவன் மரணத்திலேயே தான் வாழ்கிறார் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார், ஆகையால் உங்கள் சந்தோசத்திற்கு வேண்டுமானால் கொன்று கொன்று விளையாடுங்கள் அற்ப பிறவிகளே...//"for all who draw the sword will die by the sword"
- Matt 26:52Holly Bible

அமென்!//


இது சிங்கள இனவெறியர்களுக்கு பொருந்துமா?..உங்களுக்கு தேவைனா எதில் இருந்தும் உதாரணம் கூறுவீர்கள். எங்களுக்கு தின மலம், துக்ளக், ஹிந்து, ஆனந்த விகடன், சன் குழுமம் மற்றும் நீங்கள் உட்பட அனைவருமே புறக்கணிக்கப்பட வேண்டியவர்களே...


உங்களிடம் ஏற்கனவே சொல்லியுள்ளேன் தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று..ஆனால் உங்களை போன்ற பண்டாரங்கள் ஒருபோதும் திருந்துவதில்லை..மக்களை குழப்பும் பணியை ரொம்ப காலமா எமது மண்ணில் செய்து வரும் சுப்ரமணிய சாமியும் துக்ளக் சோ வையும் போல நடக்காதீர்கள்.. உங்களுக்கு பொறுப்பு நிறைய உள்ளது புரிந்து கொள்ளுங்கள்..தமிழர்களை வீணான மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்...


தோழமையுடன்

முகமது பாருக்

UMA said...
This comment has been removed by the author.
Durairaj Sukumar said...

Viduthalai puligal ilangaiyil seitha ore thavaru saha iyakkangalai aliththathu.Indiavil seitha ore thavaru rajivai kontrathu.Intha iru thavarum thavirkkapattirinthal 17.05.2009 kkul eelam malarnthirukkum.iniyaavathu india arasin seyalkalil maatram erpattu tamilarkalukku oru nimmathiyaana vaazhkkai kidaikka yellam valla iraivanai prarthippom.

Anonymous said...

ஒவ்வொரு துளியிலும்...

தினமனி, தலையங்கம்.

தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கிறது.

பேச்சுவார்த்தைக்கு முன்வந்து போர்நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த பின்னரும் இலங்கை அரசு போரை நிறுத்த முன்வரவில்லை. இந்தப் போரை நிறுத்த இந்திய அரசும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்திய அரசின் மெத்தனத்துக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசும் ஒத்திசை நிகழ்த்தியது. திட்டமிட்டு நடந்தேறிய நாடகம் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்த கோரிக்கையாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரு தினங்களுக்கு முன்பே, ‘துப்பாக்கிகளை மௌனத்தில் ஆழ்த்துகிறோம்' என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுவது பிரபாகரனை களங்கப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொருத்தவரை இறுதிவரையிலும் அவர் ஒரு தமிழ்ப் போராளி மட்டுமே. ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை, மனித உறவுகளை இழந்து நின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத் தீர்ப்பு சொல்ல முடியும்.

மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்பு சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே.

சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தனது நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்குக் காரணம் தெரியாதவரை பிரபாகரனை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம்.

தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்றும், கேப்டன் கருணாவின் ஆலோசனைகளும், இந்திய அரசின் ஆயுத உதவிகளுமே இந்த இயக்கத்திற்கு முடிவை ஏற்படுத்தின என்பதும் பொதுவான கணிப்பு. இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை.

இலங்கைத் தமிழர் மீதான ஒடுக்குமுறைதான் புலிகள் அமைப்பு பிறக்கக் காரணமாக இருந்தது. இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லலாம். ஆனால் இலங்கைத் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேறாதவரை, அங்கே ஒவ்வொரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டேதான் இருக்கும்.

விடுதலைப் புலிகளும் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இலங்கை அரசு இனி அரசியல் தீர்வு ஏற்படுத்தும் என்றும், நிரந்தர அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு சம்மதிக்கும் என்றும் நினைப்பது கனவாகத்தான் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணாதவரை ஈழத் தமிழர் எழுச்சியும், தீவிரவாத உணர்வும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்குமே தவிர அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=61868&SectionID=132&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...

டன்மானடமிழன் said...

முற்றும்?

பா. ரெங்கதுரை said...

//சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தனது நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். - தினமணி//

பிரபாகரனுக்கு கிழக்கு பதிப்பகம் பற்றி தெரிந்திருக்கவில்லை என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

Anonymous said...

அது தின மணி கட்டுரையா கொளத்தூர் மணி கட்டுரையா? தமிழ் நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும் விடுதலைப் புலிகள், நக்சலைட்டுக்கள், ஜிகாதிகள் மற்றும் தேசத்துரோகிகள் கைகளில் சென்று விட்டன. விகடன் சீனுவாசனைப் போல பாலுவைப் போல தினமணி வைத்யநாதனும் மற்றொரு டம்மியாக்கப் பட்டு விட்டார் போலும். எதுத்துப் பேசினால் குழந்தை குட்டிகளை வெட்டிப் போட்டு விடுவார்கள் சண்டாளர்கள். விகடனுடன் இப்பொழுது இந்த தின மணியும் சேர்ந்து கொண்டது பெரிய கொடுமை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வன்முறை இருபுறமும் கூரிய ஆயுதம் பயன்படுத்துபவனை நிச்சயம் கூரிக் கிழிக்கும்

இது மற்றுமொரு துன்பவியல் சம்பவம்........................................
..................

அல்ல, இது இலங்கைத் தமிழர்களுக்கும்
இந்தியத் தமிழர்களுக்கும்
இனி ஒரு இன்பவியல் சம்பவம்

இந்த நாள் அரர்க்கர்கள் அழிக்கப் படும் நாளைக் கொண்டுவது போல கொண்டாடப் பட வேண்டும்.

இதைப் போலவே இந்தியாவில் ஜிகாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் மீடியாக்களுக்கும், மன்மோகன் அண்ட் கம்பெனிக்கும் ஒரு நல்ல நாள் வரும். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிந்திய ரத்தம் விடுத்த சாபம் காங்கிரஸ்காரர்களை ஒரு நாள் கேள்வி கேட்டே தீரும். தெய்வம் கொஞ்சம் நின்றுதான் கொல்கிறது.

தமிழன் said...

தினமணியில் சொன்னதுபோல் பிரபாகரனை விமர்சனம் செய்யும் தகுதி ஈழ மக்களுக்கு மட்டுமே உள்ளது. உங்களுக்கோ எனக்கோ ஈழத்த்மிழர்களால் என்ன கேடும் இல்லையென்பதை யாரால் மறுக்க முடியும்?

காஷ்மீர் பிரச்சனையால் இந்தியாவுக்கு உள்ள தலைவலியோடு ஒப்பிட்டால் ஈழப்பிரச்சனை ஒன்றுமே இல்லை. தேர்தலிலும் திமுகவை வெற்றிபெற வைத்து ஈழத்துக்கு ஆப்பு வைத்துவிட்டோம்(ஏதோ நம்மால் முடிந்தது) அட்லீஸ்ட் ’கத்தி எடுத்தவன்’ போன்ற அடிமுட்டாள்தனமான வசனங்களை சொல்லாமல் அமைதிகாத்தாவது கொஞ்சம் டீசண்டாக இருப்போமே?!?

Anonymous said...

ஒரு உண்மையை அனவரும் மறைக்கிறார்கள். நமது கரிகாலச்சோழன் ஆட்சி புரியும் செந்தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் அரசு வேலை அனைத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு இருந்ததை எதிர்த்து இனவெறியைக் கிளப்பி தூள் பரப்பி இன்றும் அதை விடாமல் கொடிபிடித்துக்கொண்டு கோலோச்சும் இனமானஸ்தர்களை எல்லோரும் அறிவர். அதேபோல் ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தமிழர்கள் சிங்கள அரசின் அத்தனை பதவிகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தனர். நமது இனமானஸ்தர்களுக்கு ஏற்பட்ட வெறி அங்கு சாமானியச் சிங்களவர்களுக்கும் ஏற்பட்டது சகஜம். அந்த வெறியினை ஊதி ஊதிக் கொழுந்து விட்டு எறியச்செயதனர் சிங்கள இன அரசியல் வியாதிகள் - நமது இனமான அரசியல் வியாதிகள் செய்து வருவது போல.
இதுதான் உண்மை.

Rajesh said...

LTTE forgot the reason why they started everything. Eventually, they met with destiny. The root cause for all the happenings in the past 3 decade needs to be fixed. I hope the SL government, having burnt their fingers , acts with matchurity.

Anonymous said...

டமிளன்

என்னது புலிகளால் தமிழ் நாட்டுக்கு கஷ்டம் ஏதும் இல்லையா? விட்டிருந்தால் ரத்த ஆறு ஓடும் என்று சொன்னவன் எவன்? இனத் துரோகிகளை அழித்துக் கொல்வோம் என்று சவுண்டு விட்டவர்கள் யார்? விட்டிருந்தால் இந்தியாவின் தெற்கே மற்றொரு காஷ்மீர் வந்திருக்கும். அந்த ஒரு காரணத்திற்காகவே புலிகள் ஒழிந்ததை இந்தியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். அரக்கர்கள் அழிந்தால் அது தீபாவளி. மே மாதம் தீபாவளியை அளித்த ராஜ பக்சே வாழ்க

Anonymous said...

செங்கோலிடம் சங்கீதம் பலிக்காது
வன்முறைகளால் மட்டுமே சுதந்திரத்தை அடையமுடியாது
அப்படி அடைந்தாலும் அது நிலைக்காது
அதனுடன் விவேகமும் அறிவும் கலக்கவேண்டும்
இல்லையேல் பயனில்லை
இப்போது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அவர்கள் சார்பாக
பேச யார் இருக்கிறார்கள்.?
இனிமேல் இலங்கை ராணுவம் மக்களிடையே
தப்பியோடிய விடுதலை புலிகளை தேடி
அவர்களை இன்னும் துன்புறுத்ததான் போகிறது.

Anonymous said...

சேகு வேராவோ, நேதாஜியோ தங்கள் மக்களுக்குப் போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு எதிரிகளை விட அதிக அளவில் தங்கள் மக்களையே கொன்று குவித்ததில்லை. அவர்கள் உண்மையாகவே மக்கள் நலனுக்குப் போராடினார்கள். தம் மக்களையே கேடயமாகப் பயன்படுத்தவில்லை.
சர்வதேச கொள்கை மாற்றங்கள் இருப்பதை உணராமலும் , பலம் உள்ள போதே பேச்சுவார்த்தையில் பலன் பெற்று அமைதி வழிக்கி திரும்பமால் இலக்கில்லாது போராடினால் இது தான் முடிவு.

மலர் மன்னன்.

ந.லோகநாதன் said...

இலங்கைக்கு உதவி செய்த அனைவரும் நாசமாக போவது உறுதி...

Chinese weapons, Indian intelligence, Sinhala Armed personals and racist Sri Lankan leaders came together to perform one of the most cruel war that has cost the lives of many thousands innocents tamil civilians.

Naren's said...

"It is not the critic who counts ; not the man who points out how the strong man , or where the doer of deeds could have done them better. The credit belongs to the man who is actually in the arena, whose face is marred by dust and sweat and blood ; who strives valiantly ; who errs, who comes short again and again, because there is no effort without error and shortcoming ; but who does actually strive to do the deeds ; who knows great enthusiasms, the great devotions ; who spends himself in a worthy cause ; who at best knows in the end the triumph of high achievement, and who at the worst, if he fails, at least fails while daring greatly, so that his place shall never be with those cold and timid souls who neither know victory or defeat"-Theodore Roosevelt

and i hope prahakaran is still alive

Anonymous said...

just look at the photos.

http://my.telegraph.co.uk/chandradavid

Anonymous said...

சிங்களர்கள் ஏன் தமிழர்களை வெறுத்தார்கள் என்று இந்தப் போராட்டத்திற்கான ஆரம்பக் கால காரணத்தை இவர்கள் சொல்லும் பொழுது தமிழர்கள் எல்லா பதவிகளிலும் இருந்தார்கள், படித்து முன்னேறி இருந்தார்கள் என்றும் அதனால் பொறாமையடைந்த சிங்களர் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தர மறுத்தார்கள் என்றும் அதனால் இந்தப் போராட்டம் துவங்கியது என்றும் சொல்கிறார்கள். அதே காரணத்தைச் சொல்லித்தானே பிராமணர்களும் இந்தியாவில் இன அழிப்புச் செய்யப் படுகிறார்கள்? பிராபகரனை விடத் துப்பாக்கி ஏந்த அதிக பட்சக் காரணங்கள் இந்திய தமிழ் பிராமணர்களுக்குத்தானே உண்டு? ஆனால் இங்கே பிராமணர்களை வெறுக்கும் அதே கூலிப்பட்டாளங்கள் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறார்கள். என்னே ஒரு முரண்? காரணப் படிப் பார்த்தால் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுப் பிராமணர்களும் ஒரே தளத்தில் வருகிறார்கள். ஆனால் அங்கே உரிமை கோரும் அதே புலிகள் தமிழ் நாட்டுப் பிராமணர்களை அழிப்போம் என்கிறார்கள். அங்கே தமிழர்களை ஒடுக்குகிறார்கள் அழிக்கிறார்கள் அது தவறு அது இன அழிப்பு என்று சொல்லும் அதே நெடுமாறனும், வீரமணியும், கோபாலசாமியும் இங்கே அதே தவற்றைச் செய்யத் துடிக்கிறார்கள். அதே இன அழிப்புச் செய்ய அலைகிறார்கள். ஒரு வேளை தனி ஈழம் பெற்றிருந்து தனி நாடு அமைத்திருந்தால் அதைப் பெற்றுத் தர உறுதி பூண்ட ஈழத்தாய் ஜெயலலிதாவைத்தான் முதலில் வெட்டிக் கூறு போட்டிருந்திருப்பார்கள். புலிகளை ஆதரிக்கும் இணையப் பிராமணப் புலிகளைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கழுகுக்குப் போட்டிருந்திருப்பார்கள்.

பிராபகரன் அழிவு நிம்மதியை அளிக்கிறது. ராஜீவ் கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொன்ன அதே பிரபாகரணின் மரணம் இன்பியல் ஒரு இன்பியல் சம்பவம் என்பேன் நான். இந்த ஈழத் தமிழ் வியாதி ஒரு கான்சர் போல தமிழ் நாட்டைப் பிடித்திருந்தால் தமிழ் நாட்டில் முதலில் அழிக்கப் பட்டிருப்பது பிராமணர்களும், வட இந்தியர்களும், சொளராஷ்டிரா, கன்னடர்கள் போன்ற மைனாரிட்டிகளாகத்தான் இருந்திருப்பார்கள். ஏதோ ராஜ பக்சேயின் புண்ணியத்தில் தமிழ் நாட்டுப் பிராமணர்கள் இன்று தப்பித்திருக்கிறார்கள் ஆனால் இதே நிம்மதி எதிர்காலத்தில் தொடரும் என்று உறுதி கூற முடியாது. நிச்சயம் நெடுமாறன்களுக்கும் கோபாலசாமிகளுக்கும் கொளத்தூர் மணிகளுக்கும் அடுத்த வேலை வேண்டும். அவர்களுக்கான வேலையையும் ஊதியத்தையும் நிச்சயம் சர்ச்சுக்கள் தரத் தயாராகவே இருக்கும். தமிழ் நாட்டில் மதமாற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கும் பிராமணர்களை முதலில் அப்புறப் படுத்தும் பணி அடுத்த அசைன்மெண்டாக நெடுமாறன்களுக்கு அளிக்கப் படலாம். நெடுமாறன்கள் ஓய்வு எடுப்பதில்லை.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று கொக்கரித்த ஒருவனும் நாளைக்கு அமைதி திரும்பிய பின்னால் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யப் போவதில்லை. அவர்கள் நலத் திட்டத்தைப் பற்றி யோசிக்கப் போவதில்லை. அதையும் ராஜபக்சே வந்து செய்தால்தான் உண்டு. எப்படியோ இது வரை புலிகளை ஆதரிக்காத தமிழர்கள் அனைவரும் மீண்டும் தன் சொந்த ஊருக்குச் சென்று வரவும், நிம்மதியாக வாழவும் ராஜ பக்சே ஏற்பாடு செய்ய வேண்டும். அதைச் செய்ய இந்திய அரசு உதவ வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும், சம உரிமையும் அளிக்கப் பட வேண்டும். இனிமேலாவது இலங்கைப் போரில்லாத ஒரு பூமியாக மலர வேண்டும்.

இன்று பிரபாகரனுக்கும் அவன் கூட இறந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் வருத்தப் படலாம் என்று கண்களை மூடினால் வரிசை வரிசையாக புலிகள் கொன்ற பிணங்கள் கண்களுக்குள் ஓட அவன் மீது பரிதாபம் கூட வரவில்லை. இதே நிலமை ஹமாஸ்களுக்கும், தாலிபான்களுக்கும், காஷ்மீர பயங்கரவாதிகளுக்கும், அரபிகளுக்கும், பாக்கிஸ்தானிகளுக்கும் சீக்கிரமே வர அல்லா அருள் புரிய வேண்டும். நலல் செய்தி உலகம் எங்கிருந்தும் வரட்டும். இது போன்ற இன்பியல் சம்பவங்கள் தொடரட்டும். ராஜ பக்சே இந்தியப் பிரதமராக வர வேண்டும் ஜிகாதிகளை அழிக்க வேண்டும்.

Jeeva said...

இதுவரை சிங்கள இராணுவத்தினரின் இறந்த புகைப்படத்தைப் பார்த்தாலும் மனம் கனமாகும். ஏன் இத்தனை உயிர் இழப்புக்கள் என்று வேதனைப் படுவேன் ஆனால் இன்று BBC, Al Jazeera போன்றவற்றில் சிங்களவர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்தவுடன் எனக்குள் இருந்த மென்மை இறந்து விட்டது. சிங்களவர்களோடு சேர்ந்து திமுக பீரங்கி உமாவும் இது ஒரு இன்பவியல் சம்பவம் என்று கூறிய அரக்கர்களும் கொண்டாடட்டும். இனித்தான் சிங்களவர்கள் நிம்மதி இழக்கப் போகிறார்கள். போரின் இழப்புக்களை இனிமேல்தான் சிங்களவர்கள் உணர்வார்கள்.

உமா உனக்கு ஈழப்போரைப் பற்றி என்ன தெரியும் என்று உன் திருவாயைத் திறக்கிறாய்? IPKF in Sri Lanka by Depinder Singh written by an Indian Army commander who was directly involved in the process. He talks about how SL goverment violated the accord by failing to release Kumarappa and Pulenthiran and IPKF could not do any thing because they received instructions from Delhi to abandon any efforts to save them. I am quoting on of his lines from the book "The incident was a turning point in the Indo-Sri Lankan peace accord, as anticipated by the Sri Lankan government. The death of the Tamil militants resulted in scenarios never anticipated by the Indian government. India was reduced to a pawn in the cleverly manipulated move of the wily president of Sri Lanka, who began to dictate the pace of events and by which New Delhi eventually became the scapegoat of the century". Please learn something about the war before you open your mouth to talk about it. If you don't want to learn it from Tamils atleast learn it from the person who was part of it.

உமா.......... கருணாநிதியும் ஜெயலலிதாவும் எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம் என்று ஈழப்பிரச்சினையைப் பேசி முடித்து விட்டார்கள். இதைப்பற்றி இனி நீங்கள் யாரும் பேச வேண்டாம். இனி புலம் பெயர்ந்த தமிழர்கள் நாம் எம்மக்களைக் காப்பாற்றுவோம். நீங்கள் போய் தமிழ் நாட்டில் தமிழைக் கற்பது அவசியமா இல்லையா என்று பட்டிமன்றம் ஏதாவது நடத்துங்க!!!!!

Anonymous said...

பிரபாகரன் மரணத்தை நம்ப முடியவில்லை; டைரக்டர்கள் சேரன், அமீர் பேட்டிசென்னை, மே. 19-

இலங்கை தமிழர்களுக்காக திரைப்படத்துறையினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். உண்ணாவிரதம், ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி திரையுலகினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் சீமான் வீட்டில் நேற்று கூடி இதுபற்றி ஆலோசித்தனர்.

பின்னர் டைரக்டர் சேரன் கூறியதாவது:-
பிரபாகரன் மரண செய்தியை நம்ப முடியவில்லை. 17 வயதிலேயே அவர் துப்பாக்கி தூக்கினார். தமிழ் ஈழத்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார். அவரது வாழ்க்கை சுயநலமற்றது. கடந்த 37 வருடமாக போராட்டத்தை வழி நடத்தி வருகிறார். அவரை சுட்டுக்கொன்று விட்டனர் என்பது நம்பத் தகுந்த செய்தி இல்லை. உறுதியான ஆதாரத்தை காட்டாத நிலையில் அவர் இறந்ததாக நான் நம்ப மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் அமீர் கூறியதாவது:-

பிரபாகரன் தப்பிய போது சுட்டுக்கொன்றதாக சிங்கள ராணுவம் சொல்வது நம்பும்படி இல்லை.

பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மரணம் அடையவில்லை. உயிருடன்தான் இருக்கிறார். எங்கேயாவது ஒரு இடத்தில் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.


ஒரு வேளை பிரபாகரன் மரணம் அடைந்ததாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மே 18-ந்தேதி என்பது உலக வரலாற்றில் மிகப்பெரிய தவறாக கருதப்படும்.

இவ்வாறு அமீர் கூறினார்.

Jeeva said...

புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்று பாடிக்கொண்டிருப்பவர்கள் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள். சர்வதேச ஊடகங்களும் உதவி நிறுவனங்களும் மக்கள் முகாம்களுக்குள் இருந்து இராணுவத்தை வெளியேற்றிய பின் (அப்படி நடந்தால்) யார் யாரைக் கேடயமாக பயன் படுத்தினார்கள் என்று தெரிய வரும்.

My uncle (mom's brother) who moved from Iranaimadu with our relatives got in touch with us two days ago after 3 months. He is 62 years old and hence was released from the camp after staying there for almost a month. He told us that Army was shelling their houses and people were scared to stay behind and hence decided to go with tigers. He was in Puthukudiyiruppu for 3 weeks. He said they were staying in safe zone and were fine for 3 weeks, after which there was shelling in the area where he was staying. so the people in that area decided to leave. When he was in the camp, one of the army officer told one of the mothers in the camp that if she wants to see her son, who was detained at the checkpoint, alive she has to tell the white person (apparently some reporter) what they tell her. Obviously any mother who is scared for her son's life will tell anything they tell her to. You will all get to know the truth when independent media and NGO's have access to people in the camp without the accompaniment of SL army. Until then please stop spreading SL goverment propaganda.

SAIKRISHNAMURARI said...

DEAR MR IDLYVADAI PLESE DONT PUBLISH UMA'S COMMENTS //SHE'S TALKING RIDICULOUS//NORWAY MEADIATED MANY WARS//SHE DOESN'T KNOW HISTORY//

INDIAN said...

முடர்களே!! யார் சொன்னது பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று?
தவறான செய்தி நம்பாதீர்கள்!!

இந்தியாவை ஆளும் இத்தாலி ராணி, பழிக்குபழி வாங்கிவிட்டார்.
ஏற்கனவே அவ்ங்க் மாமியார் கிளிக்சதையே தைய்க்கமுடியலை (பங்காளதேஷ்).
இப்ப மருமக வந்துட்டா மல்லாக்க போட்டு கிழிக்க...

முதலில் இந்தியா தன் kundiya mudalil kaluvattum (Kashmir). பிறகு ராஜபக்கஷே kundiya கழுவணும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல் LTTE இந்தியாவில் தாக்குதல் நடத்தினால் தெரியும் இந்தியாவின் நிலமை.
ராஜீவ் காந்தி கொல்லப்பபட்டது தவிர வேறு எந்த தக்குதலையும் அவர்கள் வாய்ப்பிருததும் நடத்தவில்லை என்பதை நினைவீழ்கொளவெண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அரனாக இருந்த புலிகள் அழிவதற்கு உதவி செய்த
இந்திய அரசு தான் இனி சிங்கள அரசிடம் சம உரிமை வாங்கி கொடுத்து காக்கவேண்டும்.

-இந்தியன்

Udayakumar Sree said...

இந்தியாவில் தேர்தல் முடித்த உடன் போர் முடிவுக்கு வந்தது? எதோ லிங்க் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு!!!

Anonymous said...

முற்றும் என்று முட்டாகள் நினைக்கலாம். அந்த முட்டாள்களில் ஒருவர் இட்லிவடையாக இருக்கலாம்.
எனக்கும் பிராபகரன் மீது 1000 விமர்சனங்கள் உண்டு. அதற்காக
மகிந்தக்ளை, ராம்களை ஆதரிக்க முடியாது.

Anonymous said...

தினமனி தலையங்கம் முழு பிதற்றல் பயங்கரவாதிகளை ஆதரிப்போரை குசிப்படுத்துவதற்காக எழுதபட்டது.

//ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது.//

அதற்க்கு முதலும் பின்பும் கொல்லப்பட்ட தமிழ் தலைவர்கள் ஆயிரகணக்கான மக்கள சிங்களவர்கள் முசிலீம்கள் எல்லாம் உயிர்களே இல்லையா!

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

"for all who draw the sword will die by the sword"
- Matt 26:52Holly Bible
அப்ப ஏன் காந்தி குண்டடிப்பட்டு செத்தார்????????
காந்தி என்ன போராளியா?

என்ன ஓய் பதிலே காணும்...

காந்திய ஒரு பார்ப்பண் தான் கொன்றான். இன்னிகு அவாள் தான் அகிம்சை பத்தி நீட்டி முழங்குறாள்?
ஈஸ்வரா கலிகாலம்...

thillai said...

Let his soul rest in peace,let us not forget we need to answer for this to our furture genration why we had let down our own borthers and siters in Srilanka.

ungaluku epozhuthu emudaya vali therium endral neengal oru velai saapatuku kaienthumpothu,ungal sagotharigal ungal kan munnal palathkaarathal vedumbinal,ungaluku engalathu valli puriyum,athu varaikum cricket parthukondu,cinema parthu kondu irukavum.

Idly vadai pls dont humiliate us,engalathu valli ungaluku puriyathu.

Anonymous said...

Hi all,Please don't spread the rumours about prabhakaran or LTTE based on News paper or announcement from Srilanaka government.....We don't know actually what is happened in Sri Lanka. Sri Lanakan Tamilan only know about prabhakaran(LTTE).

LTTE made a Historical mistake of killed Former Prime Minister Rajiv Gandhi but actually we don't know what was happened in the back ground of between Rajiv and Prbhakaran.

However Please don't support the Srilankan President Rajapaksha is done the right Job.Srilankan army killed many people and many Lost their lives.Please re-think if we are welcome prabharakaran shot dead and sameway we have to hate the Rajapaksha killed the tamilans in srilanka.

Anonymous said...

இனி இந்திய ராணுவத்தின் அடுத்த கட்டம் POK (Pakistan Occupied Kashmir ) மீட்பது... அப்படித்தானே

Anonymous said...

What ever we speak, its not gonna return that warriors life, but what remains is not only his soul but his principles for which he stood, my deepest condolonces to Madhivadhani...particularly we dont have any right to speak about discrimination, cos India is a country which sees discrimination to the core.

Its waste to say "let his soul rest in peace", it wont.

Guys please stop posting your views on this, its not gonna change anything. thats the only thing we can do for the greatest warrior of our time.

Vivekanandan.M said...

comments'உம 33 என்பது குறிப்பிடத்தக்கது :)

இன்பா said...

இனிமேல்
மார்க்கெட் இல்லாத சினிமாகாரர்கள்
பொழுதுபோகாத நெடுமாறன்கள்
செல்வாக்கு இல்லாத வைகோ வகையறாக்கள்
யாரும்
இலங்கை விவகாரத்தை வைத்து
'பிழைப்பு' நடத்தமுடியாது

'Air coolers' புடைசூழ
சொகுசாய் படுத்தபடி
யாரும் 'உண்ணாவிரத' போஸ் கொடுக்கமுடியாது
அனாவசியமாய் 'பந்த' நடத்தி,
மக்கள் பணத்தை விரயமாக்கி,
சொந்த தொலைக்காட்சிகளில்
புத்தம் புதிய படம் போட்டு
வருமானத்தை கூட்டமுடியாது.

இதுபோன்ற
அரசியல் நாடகங்களுக்கு போடலாம்
'முற்றும்'

ஆனால்
அங்கு வாழும்
தமிழர்களின் பிரச்சினைகள் எல்லாம்
'தொடரும்'

Inba said...

இனிமேல்
மார்க்கெட் இல்லாத சினிமாகாரர்கள்
பொழுதுபோகாத நெடுமாறன்கள்
செல்வாக்கு இல்லாத வைகோ வகையறாக்கள்
யாரும்
இலங்கை விவகாரத்தை வைத்து
'பிழைப்பு' நடத்தமுடியாது

'Air coolers' புடைசூழ
சொகுசாய் படுத்தபடி
யாரும் 'உண்ணாவிரத' போஸ் கொடுக்கமுடியாது
அனாவசியமாய் 'பந்த' நடத்தி,
மக்கள் பணத்தை விரயமாக்கி,
சொந்த தொலைக்காட்சிகளில்
புத்தம் புதிய படம் போட்டு
வருமானத்தை கூட்டமுடியாது.

இதுபோன்ற
அரசியல் நாடகங்களுக்கு போடலாம்
'முற்றும்'

ஆனால்
அங்கு வாழும்
தமிழர்களின் பிரச்சினைகள் எல்லாம்
'தொடரும்'

Jafar said...

தொடரும்....

இது முடிவல்ல... ஆரம்பம்


இலங்கை ராணுவம் வெளியிட்டிருக்கும் படத்தில் இருப்பது பிரபாகரன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உற்றுப் பார்த்தால் இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரபாகரன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியுலகுக்கு தன் முகத்தை காட்டிய பிரபாகரன் மீசையை எடுத்திருந்தார். அதன்பிறகு அவர் மீசை வைப்பததாக தெரியவில்லை. ஐம்பதைக் கடந்ததால் முகம் கொஞ்சம் சுருங்கி இருந்ததையும் கவனித்திருக்கலாம். இலங்கை அரசு இப்போது காட்டியிருக்கும் படத்தில் அவ்வாறாக இல்லாமல் மீசையோடு ஜம்மென்று இளமைக்கால பிரபாகரன் இருக்கிறார். பிரபாகரனின் முகத்தை உற்றுப் பார்ப்பவர்கள் முகவாய்க்கட்டின் கீழே வெட்டு போல இருப்பதை கவனிக்கலாம். இலங்கை அரசு தரும் வீடியோவில் அந்த வெட்டு இருப்பதாக தெரியவில்லை.

இலங்கை அரசு கொடுத்துவரும் தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. ஆம்புலன்ஸில் தப்பிச் சென்றபோது கொன்றோம் என்றார்கள். இப்போது ஒரு நதிக்கரை ஓரத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் உடலை ஏற்றுவது போல காட்டுகிறார்கள். டி.என்.ஏ. சோதனையை இரண்டு மணி நேரத்தில் செய்துவிட முடியுமாவென்ற சந்தேகமும் இருக்கிறது. நேற்று இலங்கை அரசு கொடுத்த சார்லஸ் அன்ரனி படத்தில் இருப்பதும் பிரபாகரன் மகனல்ல என்கிறார்கள்.

இலங்கை அரசு சொன்னதுமாதிரி தப்பிச் செல்பவராக இருந்திருந்தால் க்ளீன் ஷேவ் செய்துக் கொண்டு கிளம்பியிருப்பாரா என்பது சந்தேகம். பிரபாகரனின் அடையாள அட்டையை காண்பித்தார்களே என்று கேட்கிறார்கள். ஒபாமாவின் அடையாள அட்டையை கூட, பாஸ்போர்ட்டை கூட கொஞ்சம் நஞ்சம் போட்டோஷாப் தெரிந்தவர்கள் உருவாக்கமுடியும்.

எதுவாக இருந்தாலும் புலிகள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்கலாம்.

Anonymous said...

ஊரை எரித்து புலியை கொன்று விட்டார்கள் அவர்களுக்கு என்ன போச்சு எரிந்தது தமிழனின் வீடுகள் தானே வீழ்ந்த்தது தமிழனின் உயிர் தானே ... "ஆயிரம் தந்தி அனுப்பிய அபூர்வ சிந்தாமணி" கருணாநிதி பதவி பிச்சை கேட்டு சோனியாவுக்கு துதி பாட ஓடினார் தமிழனுக்கும் ஏதாவது கவிதை வைத்திருப்பார் பொருத்திரு மானம் கெட்ட தமிழனே ! இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஒரு ரூபாய் அரிசி வாங்கி வாய்க்கரிசி போடு செத்து போன நம் இன மக்களுக்கு...

Anonymous said...

prabhakaran is the great man.till the end he lived as a fighter.i donno whether he is a terror or not but he is a great man for tamils when compared with our stupid politicians.a big salute for his struggle.SL army is not capable of killing/capturing Prabhakaran.they might have got the dead body alone.prbhakaran will live in the hearts of all the tamils.

Anonymous said...

//அதே காரணத்தைச் சொல்லித்தானே பிராமணர்களும் இந்தியாவில் இன அழிப்புச் செய்யப் படுகிறார்கள்? பிராபகரனை விடத் துப்பாக்கி ஏந்த அதிக பட்சக் காரணங்கள் இந்திய தமிழ் பிராமணர்களுக்குத்தானே உண்டு? ஆனால் இங்கே பிராமணர்களை வெறுக்கும் அதே கூலிப்பட்டாளங்கள் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறார்கள். என்னே ஒரு முரண்? காரணப் படிப் பார்த்தால் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுப் பிராமணர்களும் ஒரே தளத்தில் வருகிறார்கள். ஆனால் அங்கே உரிமை கோரும் அதே புலிகள் தமிழ் நாட்டுப் பிராமணர்களை அழிப்போம் என்கிறார்கள். அங்கே தமிழர்களை ஒடுக்குகிறார்கள் அழிக்கிறார்கள் அது தவறு அது இன அழிப்பு என்று சொல்லும் அதே நெடுமாறனும், வீரமணியும், கோபாலசாமியும் இங்கே அதே தவற்றைச் செய்யத் துடிக்கிறார்கள். அதே இன அழிப்புச் செய்ய அலைகிறார்கள்//

கேட்டுக்குங்க...பிராமண இன அழிப்பாம்..அப்டிநா என்னனு தெரியுமா அய்யா? இன அழிப்பில் உயிர் விட்ட பார்ப்பான் எவன்? எத்தனை ஆயிரம் பேர்? இனப் பிரச்னையில் கற்பிழந்த பார்ப்பனப் பெண்கள் எத்தனை ஆயிரம் பேர்? இன அழிப்பென்றால் என்னவென்றே தெரியாத மூடனெல்லாம் ஆயிரம் வார்த்தைகளில் கமெண்ட் அடிக்கிறான்:(

Anonymous said...

Pls see the current situation of so called "Liberated Jaffna"

http://www.kalachuvadu.com/issue-113/page44.asp