பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 13, 2009

தவறான வெற்றியை விட சரியான தோல்வி மேல் : நரேஷ் குப்தா

தவறான வெற்றியை விட சரியான தோல்வி மேல் : நரேஷ் குப்தா வின் சிந்தனைகள்...


நாம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டுமென்றால், ஒவ்வொரு நாடும், சமூகமும், தனி நபரும் உலகளாவிய சிந்தனையும், மனிதாபிமான கொள்கைகளும் கொண்டிருப்பதோடு, அவற்றை எண்ணம், பேச்சு மற்றும் செயலில் நடைமுறைப்படுத்த பாடுபட வேண்டும். நன்னெறி மற்றும் ஆன்மிக அடிப்படைகளில் தான் மதமும், அரசியலுமே காணப்பட வேண்டும். அந்தக்கால இந்தியாவில், நன்னெறியின் கிளையாகவே அரசியல் கருதப்பட்டது.


அரசியலை நன்னெறியின் கிளையாக கொண்டிருக்க வேண்டுமென காந்திஜியும் பரிந்துரைத்துள்ளார். ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கட்டுப்படுவதோடு, உலகில் உள்ள சாதாரண குடிமகனும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். காரணம், தனி வாழ்வையும், பொது வாழ்வையும் பிரிப்பதற்கு எவ்விதக் கோடும் கிடையாது. இந்திய சுதந்திரச் சட்டம் 1947, ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு ஆட்சி பிரதேசங்களை உருவாக்க கொண்டு வரப்பட்டது. சுதந்திரம், பொறுப்புடைமையை கொண்டு வரும். சுதந்திர இந்தியா பல வகையான பிரச்னைகளை சந்தித்தது. அதில் பல, மிகவும் கடுமையானவை. சுதந்திரத்துடன், நாட்டின் பிரிவினையும் வந்தது. மத வன்முறைகள் ஏற்பட்டு, நாடே அதில் மூழ்கியது. தேசிய இயக்கத்தின் பாரம்பரியத்தை உருவாக்க, நாட்டில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தங்களது செயல்பாடுகள் மூலம் இந்தியத் தலைவர்கள் மேலும் வலுப்படுத்தினர். ஜனநாயக முறைக்கு அவர்கள் உரிய முக்கியத்துவம் கொடுத்து, ஜனநாயக அமைப்புகளின் விதிகளை மட்டும் பின்பற்றாமல், அவற்றை உணர்வுபூர்வமாகவும் கடைபிடித்தனர். சுதந்திரம் அடைந்தது முதல் தனது ஜனநாயக முறையை எவ்வித இடைவெளியும் இன்றி இந்தியா நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது ஜவஹர்லால் நேருவுக்கு வியப்பை அளித்தது.


ஆல் இந்தியா ரேடியோவில் 1951 நவம்பர் 22ம் தேதி நேரு உரையாற்றும்போது, "தேசிய விவகாரங்களில் மக்கள் காண்பிக்கும் ஆர்வம் மற்றும் அறிவாற்றலாலும், தேர்தல்களாலும் அரசு அமைவதை அடிப்படையாகக் கொண்டது தான் ஜனநாயகம்' என்றார். பொருளாதார அளவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சமூகத்தின் மதிப்புகள் மற்றும் அமைப்புகளின் மதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தலைவர்களின் மனதில் எழுந்த மிக முக்கியமான கேள்வி, இந்தியா எவ்வாறு ஜனநாயக நாடாக விளங்கும் என்பது தான். அப்போது ஒரே ஒரு பெரிய கட்சி தான் இருந்தது. தீண்டாமையை ஒழிக்கவும், அடிப்படைக் கல்வியை விரிவாக்கம் செய்யவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும், கிராமத் தொழில்களை மேம்படுத்தவும், கைத்தறியை ஊக்குவிக்கவும் பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் மூலம் தொண்டாற்றிவந்த ஆண்கள், பெண்கள் என தனது தொண்டர்கள், அதிகார அரசியலுக்குள் நுழைவதை மகாத்மா காந்தி விரும்பவில்லை. "நான் அதிகாரத்தை எனது கையில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை' என்று தனது நண்பர்களிடம் மகாத்மா உறுதியளித்தார்.


"அதிகாரத்தை ஒதுக்கிவிட்டு, தூய, சுயநலமில்லாத சேவையை வாக்காளர்களுக்கு வழங்குவதில் நாம் ஈடுபட்டால், அவர்களை வழிநடத்தி, கவர முடியும். அது, அரசை நடத்தும்போது கிடைப்பதை விட, அதிகமான உண்மையான அதிகாரத்தை நமக்கு அளிக்கும்' என்றார் அவர். சரியான முடிவுகளை அடைவதற்கான சரியான வழிமுறைகளை வலியுறுத்தி நேரு பேசும்போது, "தேர்தலில் வெற்றி பெறுவதில் நாம் ஆர்வம் காட்டுவதால், சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. அது தவறானது. அதனால் போட்டியை இழந்துவிடுகிறோம்' என்றார்.


தேர்தலில் வெற்றி பெறுவதற்கோ, தோல்வியடைவதற்கோ அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. நமக்குள்ளான போராட்டத்தில் நாம் வென்றுவிட்டால், நமது வெற்றிகளும் நம்மைத் தேடி வரும். ஆனால், முன் இருந்ததை போல், நம்மை விட பெரிதும் மதிப்புமிக்கதுமான ஒன்றுக்காக நாம் பாடுபட்டிருக்கிறோம் என்பதே உண்மையான வெற்றி. ஜவஹர்லால் நேரு 1951ம் ஆண்டு தனது உரையில், "ஜனநாயகத்தில், நாம் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதையும், கவுரவமாக எப்படி தோல்வியடைய வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். வெற்றி பெற்றவர், அதை தனது தலைக்கு ஏற்ற அனுமதிக்கக் கூடாது. தோல்வியடைந்தவர் துவண்டுவிடக் கூடாது. வெற்றி பெறுவதோ, தோல்வியடைவதோ அதற்கான வழிமுறை தான், தேர்தல் முடிவுகளை விட முக்கியமானது. தவறான வழியில் வெற்றி பெறுவதை விட சரியான வழியில் தோல்வியடைவதே மேல். முறைகேடான முயற்சியில் அல்லது தவறான வழிகள் மூலம் வெற்றி கிடைத்தால், அந்த வெற்றியின் மதிப்பே தோல்வி தான்' என்றார். நம் முன்னோர், நம் மீது வைத்திருந்த நம்பிக்கை மெய்ப்பட, அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இதுவே நம் அடிப்படை கடமை.

( நன்றி: தினமலர் )

8 Comments:

Anonymous said...

//முறைகேடான முயற்சியில் அல்லது தவறான வழிகள் மூலம் வெற்றி கிடைத்தால், அந்த வெற்றியின் மதிப்பே தோல்வி தான்' என்றார். நம் முன்னோர், நம் மீது வைத்திருந்த நம்பிக்கை மெய்ப்பட, அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இதுவே நம் அடிப்படை கடமை.//


வோட்டு போடப் போன பலருக்கு "அல்வா" குடுத்து அனுபிருக்கங்க, திரு நரேஷ் குப்தாவின் கீழ் செயல் படும் அலுவலர்கள்.
என்ன நடவடிக்கை எடுப்பார் இந்த நாதாரிகளின் மேல்?


படிக்கறது ராமாயணம்.........

Anonymous said...

In the words of Nehru, he never mentioned or worried about the work to be done by Government officials..

Hence, everybody have to follow and vote without fail..

Vote.. even your name is not listed..

Best regards
- Voting Name removed Tamilan.

Anonymous said...

In the words of Nehru, he never mentioned or worried about the work to be done by Government officials..

Hence, everybody have to follow and vote without fail..

Vote.. even your name is not listed..

Best regards
- Voting Name removed Tamilan.

Erode Nagaraj... said...

முயலுக்கு "முயல்-வதைக் காட்டிலும்" யானைக்கு வேல் எறிதல் மேல் என்பதைப் போல, நேற்றைக்கு இருந்ததை விட இன்று முன்னேறி இருக்கிறோமா என்பது தான் விஷயம்.

Quality of Living என்பதற்கும் Standard of Living என்பதற்கும் இடையில் உள்ள மெல்லிய ஆனால் மலையளவு வித்தியாசம் அது தான்.

Hamsa said...

அவரு சொல்லுரது சரிதான்.. ஆன நம்ம தலைங்க அந்த மாதிரி இல்லயே!!

Anonymous said...

Satta market: Manmohan still tops list of PM hopefuls
14 May 2009, 0515 hrs IST, S Balakrishnan, TNN


MUMBAI: With only two days remaining for the Lok Sabha results, there is heavy betting on the fate of political parties and individual candidates
across the country.

"Bets worth several thousand crore rupees have already been laid so far, and the tempo is likely to go up in the next couple of days. Mumbai has created a record of sorts with a punter — who is in the real estate business — betting as much as Rs 30 crore on different candidates, parties and their combinations," a leading bookie told TOI on Wednesday.

Manmohan Singh continues to be the hot favourite for prime ministership with the bhav (odds) on him being 60 paise. This means that every rupee bet on Singh will fetch the bettor Rs 1.60 if he is indeed re-elected PM.

If the bookies' odds are any indication, L K Advani, who is leading the NDA alliance, has very little chance of becoming PM. The bhav on him is Rs 2.50.

In fact, some bookies are also offering bhav of Rs 6 on his quitting politics before May 31. NCP head honcho Sharad Pawar is an extremely dark horse (unfancied contender in betting parlance) with the bhav on his becoming PM being Rs 50.

The Congress-led UPA is backed to secure 151 seats at even bhav, meaning every rupee bet fetches an extra in return. For the BJP-led NDA, it is even odds for the party winning 122 seats.

There is speculation that Lalu Prasad, Ram Vilas Paswan and Mulayam Singh Yadav may face surprise defeats — the bhav on such upsets is Rs 3, Rs 1.50 and Rs 1.40 respectively.

The AIADMK, led by J Jayalalithaa, is commanding even bhav for 25-plus seats. Even bhav is also on offer for the CPM securing 35 seats.

Srinivasan said...

People like this Naresh Gupta, who have & nurtured SANER thoughts, must be sort of DICTATORS, ruling our India.
To that Glorious Period, may God guide us.
Thanks and Regards,
srinivasan. v.

Anonymous said...

This is an eye-witness account in a booth in Gopalapuram area.
I went inside and after preliminaries pressed the button and was on my way back.
A lady with a kid entered. The following conversation ensued between her and the polling officer (also a lady):
P.O.: Hey! Where is your ID?
The lady voter: I do not have any.
P.O.: Have you brought your Ration Card? (Naresh Gupta has repeatedly been say that Ration Card is not an admitted ID.)
The lady voter: No I have not brought.
Meanwhile, an outsider entered, and said oh, she is a voter. Allow her.
The P.O. allowed the lady voter to record her vote without any further question.
This scenario appears to be not uncommon in most of the booths.