பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 28, 2009

அழகிரி ஆகிய நான் ...

சற்று முன் மு.க.அழகிரி பதவியேற்றார்...

வைகையிலிருந்து யமுனைக்கு! என்ற தலைப்பில் இன்றைய தினமணி தலையங்கம்

சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, சேலம் என்று ஏனைய நகரங்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்போது முதல்முறையாக மதுரைக்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் செயல்பாடுகளிலும் அவர் கையாளும் அரசியல் வழிமுறைகளிலும் நம்மில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். மத்திய அமைச்சரவையில் அவர் இடம்பெற்ற விதத்தில் கூட நம்மில் பலர் முகம் சுளித்தது உண்மையிலும் உண்மை. ஆனால் அதைவிட நிதர்சனமான உண்மை மு.க.அழகிரி மத்திய அமைச்சர் என்பது!

முதல்வர் கருணாநிதியின் மகன், திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்கிற தகுதிகள் எல்லாம் பின்னால் தள்ளப்பட்டு இப்போது தமிழகத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்புள்ள பதவி வகிக்கும் மாண்புமிகு அமைச்சராக மு.க.அழகிரி மாறியிருப்பது அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பதில் தவறு காணமுடியாது.

அழகிரிக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? கோப்புகளைப் பார்க்கத் தெரியுமா? நாடாளுமன்றத்தில் அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியுமா? பல மேதைகளும் அரசியல் ஜாம்பவான்களும் அமர்ந்த இடத்தில் போய் அமரும் தகுதி இருக்கிறதா? இப்படி எத்தனை எத்தனையோ விமர்சனங்கள் திமுகவின் எதிர் முகாம்களில் இருந்தும் ஊடகங்களிலும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

1952 முதல் இதுவரை அமைந்த 15 மக்களவைகளின் உறுப்பினர்களாக இருந்த பலரைப் பற்றி மேலே எழுப்பப்பட்ட கேள்விகள் இப்போதும் எழுப்பப்படலாம் என்பதுதான் உண்மை. ஆங்கிலம் தெரிந்திருப்பதும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றும் திறமை உள்ளவர்களும் மட்டுமே மக்களவை உறுப்பினர்களாக ஆகவேண்டும் என்று சட்டமும் இல்லை. அப்படிப்பட்ட தகுதி இல்லாதவர்கள் அனைவருமே செயல்படாத உறுப்பினர்களாக இருந்துவிடவும் இல்லை.

வைகைக் கரையில் தன்னைச் சுற்றி சிறியதொரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் நடத்தத்தான் அழகிரிக்குத் தெரியும் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். யமுனைக் கரையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்கும்போது ஆர்ப்பாட்ட, அடாவடி அரசியலால் தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பலரும் அரசியல் முதிர்ச்சியும் நாகரிகமும் பெற்றவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்கு உணர்த்தியிருக்கும் உண்மை.

திமுகவின் பொருளாளரும் முதல்வர் கருணாநிதியின் இளைய மகனும் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்குக் கிடைக்காத வாய்ப்பு மத்திய அமைச்சராகி இருக்கும் மு.க.அழகிரிக்கு கிடைத்திருக்கிறது. முன்பு சென்னை மாநகர மேயராகவும் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்படும் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் கீழே வேறு எதுவும் தழைத்துவிட முடியாது என்பதுதான்.

ஆனால் மத்திய அமைச்சரான மு.க.அழகிரிக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. மாநில அரசு போலில்லாமல் மத்திய அரசில் அமைச்சர்கள் தங்களது தனித்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சுதந்திரமும் அவகாசமும் முழுமையாகத் தரப்படுகிறது. எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை உடையவர் என்று அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற முற்படுவாரேயானால் அவரை நாடு போற்றும்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் மத்திய உணவுத்துறையின் அப்போதைய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் "பசுமைப்புரட்சி' திட்டம். அதன் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் பங்களிப்பு இப்போதும் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது. அதுபோல அமைச்சர் மு.க.அழகிரி இந்திய சரித்திரத்தில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால் அது ஒன்றும் இயலாத விஷயமல்ல.

தேவிலாலும் லாலுபிரசாத் யாதவும் முலாயம்சிங் யாதவும் அமைச்சர்களாகச் செயல்பட்டு முத்திரை பதிக்க முடிந்ததென்றால், முதல்வர் கருணாநிதியின் மகனால் முடியாத விஷயமாக அது இருக்க முடியாது. அரசியலையும் நிர்வாகத்தையும் சுவாசித்து வளர்ந்த அழகிரி, நேர்மையும் திறமையும் உள்ள நிர்வாகிகளைத் தேடுகிறார் என்கிற செய்தி வியப்பளிக்கவில்லை. தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான அழகிரி, யமுனைக் கரையில் உருவாகக் கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இனிமேல் அழகிரி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் என்பதுகூட அவர் பார்க்காததோ, அனுபவிக்காததோ அல்ல. ஆனால், புகழ் என்பதும் சாதனை என்பதும் தகுதி என்பதும் அவர் தேடிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். அதற்கான வாய்ப்பை மத்திய அமைச்சர் பதவி அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. "செயல் வீரர்' அதை நன்கு பயன்படுத்துவார் என்று நம்புவோமாக!

நன்றி:37 Comments:

Rafiq Raja said...

என்னவோ போங்க.. நாடு கெட்டு குட்டி சுவரா போயிட்டிருக்கு... இதிலே ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன ? :)

மணிரத்தினத்தின் யுவா படத்தில வந்த மாதிரி மாற்றம் நிகழுமா...

ÇómícólógÝ

Vikram said...

I can only think of the following words on reading this:
"wishful thinking"
"nappasai"
"perasai"
hmmm...(perumoochu)

nalladhu panna therdal-la ninnarrunna - edhukku panatha eraichi jeyikanam.
ivarrukku irrukara selvakkukku - MP/mandiri post illamalle nalladhu seiyallame...

anyway - nambikkai thaan vallkai - nalladhu seivarnu nambuvomaga....

வண்ணத்துபூச்சியார் said...

பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐயன் காளி said...

சரியான தலையங்கம். நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்க வேண்டியது என்ன? என்ற பார்வை பொறுப்புணர்வு மிகுந்தது.

ஒரு பொறுப்பான பத்திரிகாசிரியர் எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதியிருக்கிறார்.

இதைப் புரிந்துகொள்ளாமல், தினமணி பயந்துபோய்விட்டது என்று படம் போடுவது அவசர முடிவு.

ஆனால், இதே தினமணி வரும்காலத்தில் மத்திய அமைச்சர் அழகிரியின் தவறுகளைக் கண்டிக்காமல் இருக்குமானால் இந்தப் படத்தைப் போடலாம்.

M Arunachalam said...

I liked Dinamani's editorial on MKA becoming a Union Minister. It has a point.

When Lalu Prasad Yadav can do miracles as Railways minister with good adminstrators at his command, we can't rule out that possibility with MKA too, at least not at this stage when he is just beginning his stint.

Moreover, when his brother MKS was equally, if not more, fearful rowdy during his college days in Chennai, didn't he mellow down over the years after becoming prominent in Party & Mayor, minister, etc?

So, as Dinamani says, may be we should wait for our judgment on MKA becoming a Union Minister.

Anonymous said...

I am sure Algiri will become role model minister. Now that he has come out of the Madurai shell and his coteries and his father's remote control, the new independence and the enviornemnt and the contacts of men of high calibre will bring a metamorphosis in him. I am NOT a DMK man but a person who has seen how people who were prisoners of evironment and henchmen take wings once they are free from these clucthces, I have very little doubt Alagiri will prove to be a right choice. Yes, He has seen seen enough money and fame ( notriety?). Delhi horizon will bring a sea change in him and he will blossom into a minister of integrity and efficiency. Remember he has to make a mark over his nephew Dayanidhi Maran.
--Dilli Palli

குரு said...

அடப்பாவிங்களா!!! என்னடா இப்பிடி திரும்பிட்டிங்க???? :(

Anonymous said...

///குரு said...
அடப்பாவிங்களா!!! என்னடா இப்பிடி திரும்பிட்டிங்க???? :(///


அண்ணே குரு!
இதுக்கே இப்டி அதிர்ச்சி ஆகி இப்டி வாயப் பொளந்த மாதிரி படத்த போட்டுருக்கீங்க!

"அஞ்சா நெஞ்சனுக்கு" சுக்ரன் உச்சமாம்! இன்னும் என்ன எல்லாம் நடக்கும்னு பாருங்க.

பா. ரெங்கதுரை said...

மார்வாடிகளால் நடத்தப்படும் தினமணியின் ஆசிரியராக வைத்தியநாதன் என்கிற பிராமணர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே அதன் சீரழிவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் விளம்பரம் வேண்டுமென்பதற்காக எநத அளவுக்கு வேண்டுமானாலும் அயோக்கியத்தனமாக எழுதமுடியும் என்பதற்கு இந்தத் தலையங்கம் ஒரு சிறந்த உதாரணம். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஞாநியையும் காலச்சுவடு கண்ணனையும் மிஞ்சக்கூடிய ஒரு வக்கிரம் பிடித்த பிராமணப் பத்திரிகையாளர் இருக்கமுடியுமென்றால் அவர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனாகத்தான் இருப்பார்.

UMA said...

மிக நல்ல தலையங்கம். நிச்சயம் அழகிரி மதுரைக்கு நல்ல முன்னேற்றம் தருவார்.

Vikram said...

//UMA said...
நிச்சயம் அழகிரி மதுரைக்கு நல்ல முன்னேற்றம் தருவார்//

UMA avargale - solradhu than solreenga - adhulla enna kanjathanam...

"maduraikku..tamilnaatukku...matrum india thirunattukku nalla munnetram tharuvaar"nu sollungalen ;-)

கருத்து கந்தசாமி said...

என்ன பண்ணுறது, "அழகிரிக்கு வாழ்க்கை பட்டால்", அடித்துதானே ஆகானும், "ஜிங் ஜாக்"....

Inba said...

ஆமாம் அண்ணன்
என்றவர்கள் எல்லாம்

இனி
'எஸ் பாஸ்' ன்னு கூப்பிடபோறாங்க
அவ்ளோதான்

இதுக்குபோய் தினமணி
ஓவர் பில்டப் பண்ணிஇருக்கு

சி.சுப்ரமணியமா?

எங்க அண்ணனுக்கு தெரிஞ்சது எல்லாம்
மதுரையில இருக்கிற 'சுப்ரமணியம்' சாமி மட்டும்தான்

sam said...

I am So happy about Mr Alagiri, Because Now we can get more Bollywood Movie DVDs Without Any Cost

sriram said...

ஜோக் ரொம்ப பெரிசா இருக்கு.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

Baski said...

//மார்வாடிகளால் நடத்தப்படும் தினமணியின் ஆசிரியராக வைத்தியநாதன் என்கிற பிராமணர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே அதன் சீரழிவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.//

பா.ரெங்கதுரை ,

நீங்க வைத்தியநாதனை திட்டுவது தப்பில்லை. ஆனால் திட்டுற விதம் உங்களைதான் அசிங்கமா ஆக்குகிறது.

பிராமணனும் மனுஷன் தான்.
மார்வாடியும் மனுஷன் தான்.
ஜாதி வெறி ஒரு மனோவியாதி. உங்களுக்கு தான் கேடு.

ஐம்பது வருசமா ஒரே பாட்டு பாட எப்படி தான் முடியுதோ?

Baski said...

அழகிரி சும்மா இருந்தாலும், அவர் சகாக்கள் சும்மா இருக்கனுமே??

paarvai said...

இட்லிவடையாரே...தினமணியின் தலையங்கங்கள் தரமானவை. இன்று கூட ஒரு நல்ல தலையங்கம் வந்துள்ளது. அதையும் நீர் பதிவிடலாமே...

RAMesh Kumar said...

ஒரு பத்திரிகாசிரியர் எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதியிருக்கிறார்.

இப்படி பொறுப்புள்ள முறைகளில் அனைத்து ஆசிரியர்களும் ((((( இட்லி வடை உட்பட ))))) நல்ல சிந்தனையை தூண்டும் செய்திகளை போடவும்.

படிப்பவர்களுக்கும், நடக்க வேண்டியவர்களுக்கும் மிகவும் நன்று.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

lalitha said...

நிச்சயம் அழகிரி மதுரைக்கு நல்ல முன்னேற்றம் தருவார்-----

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ? ? ?

nerkuppai thumbi said...

தினமணியின் ஆசிரியர் எழுதியிருப்பது தான் சரியான அணுகு முறை.

லாலு, முலாயம் , அழகிரி போன்றவர்கள் ஆங்கிலத்தில் உரையாடாததால் ஏதோ அவர்கள் அறிவில் குறைந்த்தவர்கள் என்பது நடுத்தர, மேல் தட்டு தமிழர்களின் எண்ணம். வேற்று மாநிலங்களில் பல ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில், ஆங்கில புலமை என்பது வேறு, புத்திசாலித்தனம் என்பது வேறு என பல பல நிகழ்வுகளில் கண்டிருக்கிறேன்.

சி. சுப்பிரமணியம் என்பது வேண்டுமானால் கொஞ்சம் தூக்கலாக இருக்கலாம். ஆனால், சொல்லிய விஷயம் சரி தான்

நண்பர்கள் மார்வாரி, பிராமணன், என்ற vattaththirku வெளியே வர துவங்க வேண்டும்.

Anonymous said...

***எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன்தாûஸ கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோமீட்டர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இதுகாலத்தின் கேவலமான கோலமல்லவா?***

நன்றி : தினமணி (29.05.2009)
++++++++++++++++++++++++++++++++

திரு ரங்கதுரை அவர்களே !
இது என்ன மத்திய மாநில அரசுகளுக்கு ஜால்ரா அடிக்கும் தலையங்கமா?

தயவுசெய்து முதலில் சிந்தியுங்கள், பிறர் மேல் சேற்றை வாரி இறைக்கும் முன்பு.

நன்றி.

M Arunachalam said...

//இது என்ன மத்திய மாநில அரசுகளுக்கு ஜால்ரா அடிக்கும் தலையங்கமா?//

No. Neither is it a sensible Editorial. Whats happened in Vienna was a sectoral war within the Sikh community, which has got its echo in Punjab, which is their mother-land.

Dinamani is foolishly trying to compare that & the reaction from Indian establishment to that of what has happened in Sri lanka, which may be just 50 km across the sea but A FOREIGN & A SOVEREIGN COUNTRY. No country can interfere in other countries internal affairs.

Anonymous said...

தமிழ் மொழியின் சிறப்பு இலக்கண வகைகள், அவைகளில் ஒன்று அணி இலக்கணம், இந்த பதிவில் பயின்றுள்ள அணிவஞ்சப்புகழ்ச்சி அணி!!, இதன் ஆழம் தெரியாதவர்கள் தயவு செய்து இந்த பதிவிற்கு பின்னூடடம் எழுத வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Anburaj said...

எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன்தாûஸ கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோமீட்டர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இதுகாலத்தின் கேவலமான கோலமல்லவா?

UMA said...

Tamil Nadu Chief Minister M Karunanidhi’s son, M K Stalin has been appointed as Deputy Chief Minister.

UMA said...

CHENNAI: Tamil Nadu chief minister M. Karunanidhi's son M K Stalin, who is also state rural development minister, was on Friday promoted to the post of deputy chief minister.

The announcement came a day after DMK chief Karunanidhi's elder son M K Azhagiri was sworn in as cabinet minister in the Manmohan Singh government.

Political analysts say Azhagiri's elevation to national politics is a tacit move by Karunanidhi to make his younger son M K Stalin, now a minister under him, as the chief minister.

UMA said...

தமிழகம் அடுத்த தலைமுறையின் கீழ் வருகிறது.இனி ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் நாள் தொலைவில் இல்லை.தி .மு. க .வில் அனைவராலும் மதிக்கப்படும் ,
விரும்பப்படும்,ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தின் காரணமாக கலைஞரின் தேர்தல் பிரச்சாரம் செய்யாத குறை தெரியாமல் தி.மு.க கூட்டணி நல்ல வெற்றி கண்டுள்ளது.

எனவே ஸ்டாலின் முதலவர்வதற்கு முழு தகுதி பெற்றவர். தமிழக துணை முதல்வராக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி வசமிருந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தொழில், சிறுபான்மையினர் நலன், பாஸ்போர்ட், சமூக சீரமைப்பு ஆகிய துறைகளையும் இனி மு.க.ஸ்டானின் கவனிப்பார் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, உள்ளாட்சி மற்றும் ஊரக மேம்பாடு ஆகிய துறைகளை ஸ்டாலின் கவனித்து வருகிறார்.

Anonymous said...

திரு அருணாசலம்!
நீங்க "sensible"-ஆக எழுதுகிறீர்கள். ஆனால் இந்த முறை தவறி விட்டீர்கள்.

அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தவறு/கஷ்டம். இருந்தாலும், ராஜீவ் காந்தி தலையிட்டு ஒப்பந்தம் போட முயற்சி செய்த போது அது கஷ்டமாக இல்லை. அந்த ஒப்பந்தம் நல்ல முறையில் நிறைவேறியதா இல்லையா என்பது வேறு விஷயம்.

வியன்னாவில் நடந்த சீக்கியர் விவகாரம் பஞ்சாபில் கலவரமாக வெடித்தது. அரசும் பதைபதைத்து.
நல்ல வேலையாக இலங்கை விவகாரம் தமிழ் நாட்டில் இந்த மாதிரி பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

அதே நேரத்தில், இரு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசியல் வியாதிகள் இந்தப் பிரச்சினையை வைத்து இன்றும் நன்றாக விளையாடிக் கொண்டு
இருகிறார்கள்.
நீங்கள் கூறுவது போல் "No country can interfere in other countries internal affairs. No country can interfere in other countries internal affairs." என்பதை அப்படியே "literally" எடுத்துகொண்டால், எதற்காக இலங்கை அகதிகளுக்கு தமிழ் நாட்டில் இடம் தர வேண்டும்?? எதற்காக திரு பிரணாப் முகர்ஜீ பல முறை "வெட்டியாக" கொழும்பு சென்று வந்தார்?

எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
"அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்".

M Arunachalam said...

Maanasthan,

Till now, Sri Lanka has been fighting the insurgents in their own country. If some of the people in TN and Web wants the general public to believe that SL is fighting against the SL Tamils - the innocent ones, I mean - they have been told by the TN voters clearly to go & take a dive in Bay of Bengal, if the results of the recent Lok Sabha polls in Tn is any indication.

so, India, or for that matter any other country in the world, cannot interfere in SL fighting to end the menace of terrorism. After all, the single most important agenda in the world today is fight against Terrorism, right?

As far as Rajeev - Jayavardena agreement is concerned, it was done ON THE REQUEST OF SL - on a political level. So, the SL situation, has not come to the political level till recently.

Now that the terrorists have been decimated, the priority now is to rehabilitate the affected civilians. only after taking care of that which is a top most priority, the question of India getting involved in resolving SL Tamils issue will arise.

So, Dinamani is wrong in accusing India of not getting involved SO FAR in SL matters as till now there is no political dialogue but only anti-insurgency measures taking place in SL.

Anonymous said...

Mr Arunachalam!
You are trying to defend your earlier statement!! well, you have all the right!!

You say that "Till now, Sri Lanka has been fighting the insurgents in their own country". But, what is its consequence? See that.

my point, again, is simple.

If the Indian Police/or army kill innocent people in the name of the fight against Naxalites in various parts of the country - will it be acceptable to you???

UN had reported the large death toll in SL over the last few months. Who is/are responsble for it? The Lankan army or LTTE?

What is your view on the Indian government's alleged support to the Lankan Army????

My understanding is that both LTTE and the Lankan government have had a good hand in these killings.
The Indian government was/has been a "silent spectator" which is rather unfortunate.

Baski said...

//தமிழகம் அடுத்த தலைமுறையின் கீழ் வருகிறது.//

Correction. Stalin is going to serve us as Dy.CM.

M Arunachalam said...

Maanasthan,

//You say that "Till now, Sri Lanka has been fighting the insurgents in their own country". But, what is its consequence?// In any war-like combat, particularly when it is done to flush out the enemy hiding in civilian buildings & behind human shields, it is INEVITABLE that there are some civilian collateral damage.

//If the Indian Police/or army kill innocent people in the name of the fight against Naxalites in various parts of the country - will it be acceptable to you???// If the naxalites are hinding in civilised areas & hiding behind abducted civilians as human shields, and because of which some civilians die in cross-fire, I WILL UNDERSTAND & NOT FOOLISHLY BLAME THE GOVT.

//UN had reported the large death toll in SL over the last few months. Who is/are responsble for it? The Lankan army or LTTE?// THE LTTE IS SINGULARLY RESPONSIBLE as they are the ones who forcibly kept the civilians with them & were hiding behind them knowing that on a traditional army type fight SL army has been beating them to dust. I will not blame SL army for this, as the civilian casualty till now, is not of their making but that of LTTE's.

//What is your view on the Indian government's alleged support to the Lankan Army????// At last, the Indian Govt. did what it should have done in 1989 - allowing a FREE-HAND to IPKF to decimate the LTTE then & there. We would not have lost a PM & the world would have been rid of suicide bombing culture. So, BETTER LATE THAN NEVER - Hats Off to India for its strategy of allowing SL Army to complete the job fully.

My understanding is that it is not only India but also all other nations - incl. US, UK, France, Russia, China & even Pakistan - who are all silently watching & HOPING at least this time, SL Army will not let go its ascendency & complete the Job of finishing the terrorists fully & ensuring its leadership is either captured or killed.

Now, THE WHOLE WORLD CAN HEAVE A SIGH OF RELIEF THAT THERE IS ONE TERRORIST OUTFIT LESS ON PLANET EARTH.

மானஸ்தன் said...

well written, appreciations!

nevertheless, you have completely digressed! :-D

the mail questions i posed still remain unanswered (that why the hell mr mukerjee and his team visited colombo on pressure from mr MK, if the government is firm on not to interfere in the other nation's issue!
if they are against LTTE, why the hell the congress accepted VC into the alliance? when LTTE is a banned organisation why the govt has not taken action against those who even today openly support them.

further,
the damage done is NOT to "some civilians" but a large chunk of innocent tamils. Lankan army is definitely responsible for this and if u deny that you are completely biased. sorry about it.

///My understanding is that it is not only India but also all other nations - incl. US, UK, France, Russia, China & even Pakistan - who are all silently watching & HOPING at least this time,...//
this sounds funny. china and pak have been supplying arms and ammunitions to the LA, as was highlighted in many news items..

for the european nations, LTTE never posed any threat at any point of time and there are plenty of SL tamils living over there peacefully....hence they need not and will not bother about this - whether LTTE is weeded out or not...

Russians are working now to stabilise themselves and for the US there are other top priority issues ahead of this...

but for India, the situation is altogether different, and because of the nasty games of the politicians - especially the ones in TN - the outcome of the war will have a greater impact...

Finally, as the UN secretary said after his visit to the hit areas, the situation is grim over there, and the tamils are definitely and terribly affected....

you need not support LTTE but at the same time reconsider your supportive statements on the lankan govt's actions...

Try to be neutral.

UMA said...

டெல்லியில் தவித்த தமிழக சுற்றுலா பயணிகளுக்கு அழகிரி உதவி.
ஏர் கண்டிஷன் பெட்டியில் சென்னை திரும்ப ஏற்பாடு .

Syed said...

See this, at least someone is happy with Azhagiri being a minister.

http://timesofindia.indiatimes.com/Chennai/Azhagiri-turns-saviour-for-TN-tourists-at-Delhi-airport/articleshow/4605936.cms

Syed said...

See this, someone is benefitted and happy with Azhagiri

http://timesofindia.indiatimes.com/Chennai/Azhagiri-turns-saviour-for-TN-tourists-at-Delhi-airport/articleshow/4605936.cms