பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 11, 2009

தவறாமல் வாக்களிப்போம்....தவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு தினம், வாக்களிப்பது கடமை. அதை தவறாமல் செய்ய உறுதி பூணுவோம். இந்தச் செய்தி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என உண்மையாக நினைப்போம். நம்மால் இயன்றவரை இதனை நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

நாம் செய்ய வேண்டியது என்ன மறக்காமல் வாக்குச் சாவடிக்கு சென்று நம் வாக்கை பதிவு செய்வோம். இந்தக் கடமையினை செய்திட நம் உறவினர், நண்பர்களையும் வேண்டுவோம்
வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். ஆகவே வாக்குச் சாவடிக்குச் செல்ல வேட்பாளர்கள் தரும் வாகன்ங்களை புறக்கணித்து நாமே நம் சொந்த முயற்சியில் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்.

நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நாம் வாக்களிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிடத்துளிகளே ஆனால் சொற்ப நேரத்தில் எடுக்கும் முடிவு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் வாழ்க்கையினை எப்படியெல்லாம் பாதிக்கும் எனத் தெரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வோம் ஆண்டு தோறும் இந்த நாட்டில் பல்வேறு நிலைகளில் கல்வி அறிவு பெற்று கல்வி நிலையங்களிலிருந்து புறப்படும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா? அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றி குறைவற்ற வேலை வாய்ப்பினை வழங்கிடும் வண்ணம் நம் வாக்கு ஒரு நிலையான தரமான ஆட்சியினை நமக்கு தர வேண்டாமா?

இந்த பரந்து விரிந்த பாரத்த்திலே இயற்கைச் செல்வங்கள் எத்தனை எத்தனை. அவையெல்லாம் நமக்கு முழு பலன் தரும் வண்ணம் நல்ல செயல் திட்டங்கள் வழங்கிடும் அரசு நமக்கு வேண்டுமல்லவா நேர்மை என்பதே ஓர் அபூர்வ குணமாகி, நேர்மையாக இருப்பவர் ஒரு சிலரே என்ற துர்பாக்கியமான நிலை தொடர வேண்டுமா ? அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா ? இப்படியான நிலையினை மாற்ற வேண்டியது நம் கடமைதானே. அதனை செவ்வனே செய்ய நம் வாக்கு ஒரு கருவி தானே?

இவையெல்லாம் நாம் வாக்களிக்கும் முன்பு நம் வாக்கை யாருக்கு அளிக்கிறோம் என்பதை முடிவு செய்யும் காரணிகளில் சில. இதை விடுத்து கட்சி, ஜாதி, மதம், தேர்தல் நேரத்தில் கிட்டும் சில சலுகைகள் இவையா நம் வாக்கினை முடிவு செய்ய வேண்டும் நாம் மே 13 அன்று அளிக்கும் வாக்கு வெறும் ஓட்டு அல்ல.. அது நம் வருங்காலத்திற்கு நமக்கு நாமே தரும் வாக்கு.. நம்பிக்கை. வாக்கு என்பது உறுதி மொழி என்ற அர்த்தமும் தரும்
நாம் நம் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தரும் உறுதி மொழி.
தவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

என்னுடைய ஒரு ஓட்டு என்ன செய்யும் என்று வீட்டில் இருந்துவிடாதீர்கள்
99துடன் ஒன்றை கூட்டினால் தான் 100!


36 Comments:

மானஸ்தன் said...

மெசேஜ் சரி.
படம் சரி "இல்லை".

சீரியஸ்-ஆன போஸ்டுக்கு இப்டி படத்த போட்டு "distract" பண்ணாதீங்க.

SathyaRam said...

Ok I have these queries. What should be the best result for DMK in this election?

To me the best result for them should be the victory of NDA and Jaya supporting them.

Reasons:

a. Congress will continue with him for some more time
b. Congress will not be forced to withdraw the support to state govt. otherwise if cong. needs to come back to centre it needs support of ADMK/PMK/LEFT which will put this condition.
c. DMK can raise Tamil and all Srilankan cause again as it is a different government
d. DMK can quote Secularism and get Left back in its alliance in Tamilnadu for state elections


So either DMK gets a thumping win (unlikely) or the best they would want is Jaya to win everything and go with NDA. that makes their life easy.

Any comments?

kitcha.blogspot.com said...

sir

i want to vote but both the parties are bribing us. they are giving money for votes. It's really shameful for me.

டன்மானடமிழன் said...

***99துடன் ஒன்றை
கூட்டினால் தான் 100***

கணக்குல வீக்கா....

110துடன் ஒன்றை
கூட்டினால் தான 111 வரும்.

இதுதான் நமக்கு நா(ம)மே திட்டம்.

உமது போட்டோவை வெளியிட்டதுக்கு
மிக்க நன்றி ;-)

போன எலெக்ஸன் போது எடுத்த போட்டோவா?

Balaji Manoharan said...

Awesome message......

One photo Multiple Meaning......

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா...!!!! ஓய்..... இட்லி வட......!! இது என்னையா.... பார்த்த சாரதியோட போட்டோ.......!! எப்புடி பேரு தெரியும்மின்னு பாக்குறியா...!!! அதுதான் நெத்தியில இருக்குத்தே ஈருகுச்சி கோடு...!!!நல்ல கெலப்புரிங்கியா பேதிய..... து.... பீதிய .........!!!

கிரி said...

//தவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்//

வழிமொழிகிறேன்

பதிவு நன்றாக உள்ளது ஆனால் படம் பொருத்தமில்லாததாக உள்ளது.

Ravee (இரவீ ) said...

நீ உன் கடமையை செய் ,
அவர்கள் அவர்களது கடமையை கண்டிப்பாக செய்வார்கள் என அருமையா படத்தில் சொல்லிட்டீங்க. நன்றி.

Krish said...

வோட்டு போடுங்க ..அப்பறம் வேட்பாளர்கள் ஜெயிச்சி வந்து நமக்கு நாமம் போடுவாங்க!

சந்திரமௌளீஸ்வரன் said...

ஓட்டு போட வேண்டிய கடமையினை நினைவு படுத்த வேண்டிய செய்திக்கு படம் பொருத்தமாக இல்லை என “நான்” நினைக்கிறேன்

சந்திரமௌளீஸ்வரன் said...

வணக்கம்

என் கட்டுரை வெளியானதில் இரண்டு நிலைகளில் மகிழ்ச்சி. ஒன்று செய்தி தகுந்த அளவில் கவனத்தை அடையும் என்பது. இரண்டு மாலன் போன்றும் இட்லி வடை போன்றும் முன்னணியில் உள்ள் பதிவர்கள் என்னைப் போன்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வெளியிட்டது

கட்டுரைக்கு “நாமம்” பொருந்தவில்லை என்ற கருத்துகள் பதிவுக்குப் பின்னூட்டமாக இட்லிவடையில் வந்துள்ளன. என் கருத்தும் அது தான். அதனை மதித்து இட்லி வடையார் அந்த நாமத்தை நீக்கி விட்டார்.

மாலன் சொன்னது போல ஏன் நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் சிந்திப்பது போல “ நாமம்” போட விடாமல் காப்பது நம் கையில் தான் இருக்கு.

இட்லி வடையார் பதிந்திருந்த நாமம் படம் மறைமுகமாக அதைத்தான் சொல்லியதோ. நம் இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் அடையாள மை “நாமத்”தை துரத்தி அடிக்கும்

தவறாமல் வாக்களிக்க வேண்டும்.. நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிக்க வேண்டும்

இந்த வாசகம் ஒரு பெரும் இயக்கமாக வேண்டும்

அதற்கு உங்களைப் போன்ற முன்னோடிகள் இச் செய்தியினை முடிந்த அளவு மக்களிடம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும்

தேர்தல் அறிவிக்கப்ப்பட்ட நாளிலிருந்து நான் அனுப்பும் எனது தனிப்பட்ட எஸ் எம் எஸ் செய்திகளில் கூட வாக்களிக்கும் கடமையினை நினைவுறுத்தும் செய்தியினை சேர்த்திருக்கிறேன்

IdlyVadai said...

கவர்ச்சியான படத்துடன் செய்தி போட்டால் நிறைய பேரை சென்றடையும் என்று போட்டது. வேறு உள் குத்து எதுவும் இல்லை. தற்போது அந்த படத்தை எடுத்துவிட்டேன்.
நன்றி.

மானஸ்தன் said...

இட்லி வடை, நீங்களுமா "கவர்ச்சியை" நம்ப ஆரம்பிச்சுடீங்க!
கொடுமைடா சாமீ!

UMA said...

வாக்கள மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:

வாக்களிக்கும் முன் பின் வரும் கருத்துக்களை சற்று சிந்தியுங்கள்.

இலங்கை பிரச்சனையை இந்த தேர்தல் மூலம் தீர்க்க முடியாது.

நமது நாட்டில் நல்ல ஆட்சியை அமைக்கவே இந்த தேர்தல்.

தமிழ் நாட்டிலும் , மத்தியிலும் ஒத்து போகும் ஆட்சி ஏற்பட்டால் மட்டுமே நிறைய நல்ல திட்டங்களை தமிழ் நாட்டில் கொண்டு முடியும் .

லஞ்சம் என்பது , அராஜகம் , வோட்டுக்கு பணம் கொடுப்பது எல்லா கட்சிக்கும் பொதுவானது .

ஒரு லக்ஷம் கோடி ஊழல் என்பது சாமானியம் அல்ல. ஆனால் அதை ஜெயா ஒரு மீடிங்கில் மட்டும் சொன்னார்.பின்னர் சொல்லவில்லை. ஏனெனில் அது மக்கள் நம்பாத அபாண்டமான குற்றச்சாட்டு.

நம்மை நேரடியாக பாதிப்பது ஊழல் அல்ல.

பல நல்ல திட்டங்களை,நல்ல ரோடு, நிறைய மேம்பாலங்கள்,நல்ல புது பஸ் அனைத்து ஊருக்கும்,மற்றும் பல நல்ல திட்டங்கள தான் நமக்கு தேவை .

அதை செய்யாமல் ஊழல் செய்த ஜெயாவை விட ஊழல் குற்றசாட்டு இருந்தாலும் அதை செய்து பலனை அனுபவிக்கும் நாம் அந்த நல்ல திட்டங்கள் தொடர தி.மு.க. கூட்டணியை ஆதரித்தால் தான் பெற முடியும்.

இன்னும் 5 வருடங்கள் இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ் நாடு மிக பெரிய முன்னேற்றம் அடையும் என்பது உறுதி.

எனவே வாக்களியுங்கள் உதய சூரியனுக்கும், கைக்கும், நட்சத்திரத்துக்கும்.

Anonymous said...

"கவர்ச்சியான படத்துடன்"

Parthasarathy namathoda erukara padathulla enappa kavarchi erukku unakku. Nee aal sariellai..

Anonymous said...

My vote is in ward 140 -Sripuram I Street - Chennai - 600 014 and my booth is situated at Oficers Association Complex - I had been there to cast my vote by 9-30 and when myself and another lady asked for 49-O Form I was told by the concerned Officer that such a Form was not at all provided to them. When, I I insisted the Officers asked me to wait for sometimes to get the same. Since they could'nt get it by 10-AM I told them that I would be back by 11AM and asked them to get the form early. I was asked to give my Cell: no to enable them, to inform me on arrival of the 49-O form. I refused and told them that I am not for giving my identitiy publicly in this regard. I intend going back by 11AM there but I dont know whether the form or auto would be waiting for me:

Erode Nagaraj... said...

s.
vote.
Its your privilege to prevent BAD.

Dear Idly,

Why this "Round Figure Syndrome" like 99+1=100? Let that be with the guys who roam near Stella Maris or Ethiraj.

Anonymous said...

தி மு க ஜால்ரா உமாவே

இன்னும் தி மு க வை ஆதரிக்க கொஞ்சம் கூட உனக்கு வெட்க்கமாக இல்லை? இன்று காலையில் என் வீட்டுக் கதவைத் தட்டி வயதான ஆட்களிடம் அழகிரியின் ஆட்கள் தலைக்கு 500 என்று கொடுத்திருக்கிறார்கள். வாங்க மறுத்த பெரியவர்களை அசிங்கமாகத் திட்டி கத்தியைக் காட்டி மிரட்டி ஓட்டுப் போடாட்டி உயிர் மிஞ்சாது என்று மிரட்டியுள்ளார்கள். இதற்கு மேலும் கருணாநிதியை சப்போர்ட் செய்வதற்குப் பதில் ***** **** *****

sowri said...

I have voted to sarath babu.. just now

ராஜ சுப்ரமணியம் said...

இன்று (13-05-2009) காலை வாக்களிக்கக் குடும்பத்துடன் சென்றோம். வாக்குச்சாவடியை தேடுவதற்கே நிறைய நேரம் பிடித்தது. போலீஸுக்குக் கூட சரியாக வழி சொல்லத் தெரியவில்லை.

வீட்டிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில், ஒரு சிறிய தெருவில் வாக்குச் சாவடி இருந்ததை கடைசியில் கண்டுபிடித்து, வாக்களித்தோம். பல நடுத்தர மக்கள் ஏன் வாக்களிப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலும் கிடைத்தது.

தென்சென்னை 13-05-2009

UMA said...

எல்லோரும் ஒன்றை சுலபமாக கவனிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.

நல்ல சாலை வசதி, நிறைய மேம்பாலங்கள், புத்தம் புது வசதியான பாஸ் அனைத்து ஊருக்கும் போன்ற திட்டங்களை ஏன் கவனிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பது.

ஜெயலலிதா ஆட்சியில் ரோடே போடவில்லை .மேம்பாலம் எதுவும் கட்டவில்லை. சென்னையின் வளர்ச்சிக்கு போதுமான வசதிகள் செய்யவே இல்லை.

அதே போல தான் எல்லா இடங்களிலும்.ஆனால் பில் மட்டும் பாஸ் ஆகி பணம் மட்டும் கை மாறி இருக்கும்.அராஜகம் வெளியில் தெரியாது.

இந்த 5 வருட ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு இதுவரை இல்லாத வகையில் பல்லாயிரம் கோடிக்கு இந்திய அரசின் திட்டங்கள் நிறை வேற்ற பட்டு வருகின்றன.

அதை விட்டு விட்டு எங்கோ ஒரு ஊரில் பணம் தருகிறான் என்று சொல்லுவது பச்சை துரோகம்.

இங்கு மாயவரத்தில் ஓ ஸ் மணியன் கொடுக்காத பணமா?.பணத்தை கொடுப்பதில் இரண்டு கட்சிகளும் ஒன்று தான்.அதில் வித்தியாசம் ஏதும் இல்லை.

இந்த ஆட்சி தொடர்ந்தால் நமக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் அல்லது ஜெயா வாலை பிடிக்கும் ஆட்சி வந்தால் பட்டை நாமம் தான். 5 வருட திட்ட விடுமுறைதான். கருணாநிதி தொடங்கிய திட்டங்கள் அனைத்தையும் பாதியில் நிறுத்தி மக்களுக்கு பட்டை நாமம் போடுவார். பணமும் மாயமாக போயிருக்கும்.

எனக்கு ஒன்று தோன்றுகிறது.ஏன் கருணாநிதி அப்படி சென்னைக்கு காசை கொட்டி செலவு செய்து ( மேம்பாலங்கள் கட்டி) முன்னேற்றவேண்டும்?. அவர்கள் அதை நினைத்து பார்த்து வோட்டு போடவில்லை என்றால்,யாருக்கு நஷ்டம்?.அடுத்த ஐந்து வருடங்கள் ரோடு வசதி,மேம்பாலம்,புது வசதியான பஸ்
(கலர் கலரா, தாழ் தளமாம், குளிர்சாதனமாம்)இல்லாமல் மக்கள் அவதிப்படத்தான் வேண்டும் என்றால் அதை யார் தடுக்க முடியும். ஆனால் அதில் தி.மு.க வுக்கு ஓட்டு போட்ட மக்களும் கஷ்டபடுவார்கள்.

கருணாநிதி கட்சி பார்த்து திட்டம் போடவில்லை.நாங்கள் கிராம மக்கள் என்றும் விசுவாசத்துடன்,நன்றி மறவாமல் கருணாநிதி கூட்டணிக்கு ஓட்டு போடுவோம்.

இலங்கை விவகாரம்,
பணம் தருவது என்பது
மக்களை நன்றி மறக்க திசை திருப்பும் முயற்சியை தவிர வேறு இல்லை.

வைகோ பிரசாரத்தின் போது, தான்
(தந்து சொந்த காசில்) போட்ட 50 ஆயிரம் மஞ்சள் காமாலை ஊசியை நினைவுறுத்தி ஓட்டு கேட்டராம்.
இது மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுத்து போல ஆகாதா?

நாளை எப்படி இந்த ஜெயா ராணுவத்தை அனுப்பி தமிழ் இலங்கையை வாங்கி தரப்போகிறார்? என்பதையும், அவரை ஆதரிக்கும் படித்த இன்டெர் நெட் யுகத்தில் உள்ள பட்டணத்து மக்களும் உணரத்தான் போகிறார்கள். இதே ராமதாசும் , வைகோவும், இடதுசாரிகளும் ஜெயாவிடம் பட போகிற அவமானமும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

பின் குறிப்பு: நான் நாளை ஊருக்கு போவதால் (இன்டர்நெட்,கணிபொறி வசதியில்லாத )
என்னை இனி யர்ரும் திட்ட வேண்டியிருக்காது.இன்றுடன் கடைசி .

லவ்டேல் மேடி said...

ஏனுங் உமா அம்முனி...!! மின்தடைய பத்தி நீங்க எதுவுமே சொல்லுல....!!!

டேக்...!! ரெடி..!!!

ம்ம்...!! இப்போ சொல்லுங்க.....

UMA said...

என்னுடைய உறவினர்கள் மின் துறையில் இருப்பதால் நல்ல விவரமான கட்டுரைகள் எழுத இருந்தேன்.மின் துறை பற்றி வந்த என்னுடைய விளக்கமான கட்டுரைக்கும் அதன் பின் ஊட்டமாக வந்த மற்றொரு கட்டுரைக்கும் இட்லி வடை வாசகர்கள் ஏதேனும் விபரம் கேட்டு தெளிவு பெற எண்ணாமல் ஏதேனும் தவறு கண்டுபிடித்து அதற்கும் கருணாநிதியே குறை சொல்ல வருவதால் அந்த கட்டுரையில் கருத்தான - மின்சார நிலையத்தில் வேலை பார்பவர்களின் கடும் கண்காணிப்புடன் முழு உற்பத்தியே அவர்கள் நோக்கம் என்பதையும் , மின் தட்டுபாடு யாரும் விரும்பி வரவில்லை என்பதும் ஜெய வந்தால் மாய மந்திரத்தால் மின்சாரம் உடனே வரப்போவதில்லை,இப்போது கட்டப்பட்டு வரும் மின் நிலையங்களால் பின்னர் தன் ஆட்சி காலத்தில்(?)உற்பத்தி ஆக போகும் மின்சாரத்தை தானே தான் உற்பத்தி செய்தேன் மின் வெட்டி இல்லை என்று சொல்ல போவதையும் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

ஒரு வருடைய உறவினாராக இருப்பதால் அவர் சும்மாவே உருப்படாமல் இருக்க வேண்டும்.
( மகாத்மா காந்தியின் மகன்களை போல ) என்று எண்ணுவது சரி என்று தெரியவில்லை.

ஒரு கட்சியில் உள்ள தொண்டர்கள் விரும்பும் யாரும் அந்த கட்சியில் பதவியில் இருக்கலாம்.
அதை குறை கூற யாருக்கும் உரிமை இல்லை.( கட்சியினர் தவிர)

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஓட்டு போட வேண்டாம்.அதை விட்டு விட்டு குறை சொல்வது நியாயம் இல்லை.

திரை உலகத்திலும்,பத்திரிக்கை உலகத்திலும் அவர்களது மகன்/மகள் என்பதால் யாரும் ஒதுக்குவது இல்லை.தகுதி இருந்தால் யாரும் எந்த வேலையும் செய்யலாம்.

UMA said...

சென்னையில் நேற்று ஏற்பட்ட மின் தடை தண்டயார்பேட்டை 230 KV மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது. அதை சில விஷமிகள் ஆளுங்கட்சிக்கு தேர்தல் சமயத்தில் கெட்ட பெயர் உண்டு பண்ண செய்த வேலை. அங்கு வேலை பார்ப்பவர்கள் வேண்டுமென்ற செய்த வேலை அல்ல .இதை செய்ய ஆளும் கட்சியினர் ஒன்றும் முட்டாள் அல்ல (ஜெயா கோஷ்டி தான் இதை செய்திருக்க முடியும்) ஆனால் அதை மூன்று மணி நேரத்தில் சரி செய்த மின் வாரியத்தை பாராட்டவேண்டும். இது மின் வெட்டல்ல. அந்த 4 விஷமிகளை பிடித்து விட்டார்கள்.

UMA said...

ஜெயாவை சென்னை உயர் நீதி மன்றம் தண்டித்தால்,சுற்றுலா சென்ற மாணவிகளின் பஸ் ஜெயா கட்சியினரால் கொடுரமாக(பஸ்ஸின் வெளியில் தாழ்பாள் போட்டு யாரும் வெளியில் இறங்க முடியாதபடி செய்து ) தீ வைத்து கொளுத்தியதில் உடல் முழுவதும் கருகி இறந்தவர் நெய்வேலி ஜவஹர் பள்ளியில் படித்த விருத்தாசலம் மனைவியும் ஒருவர்.

மூன்று மாணவிகள் கருகி இறந்தனர். கட்டிபிடித்திருந்த படி இருந்த அந்த முவரின் கருகிய உடல்கள் தமிழக மாணவிகளின் கண் முன்னே எப்போது இருக்கும்.

இதை விட கொடுமை உலகில் ஏதும் உண்டா?

நெய்வேலி மக்களின் அனைவரின் கண்முன்னே இப்போதும் நினைவுக்கு வரும் அந்த கொடூர காட்சி ஜெயாவை இந்த ஜென்மத்தில் மன்னிக்க விடாது.

முன்பு நக்கீரன் ஆபிசில் அங்கு வேலை செய்தவர்களை கொலை செய்ததும் ஜெய கோஷ்டியே.

அதனால் ஜெயா கோஷ்டி மட்டும் நல்லவர்கள்,கருணாநிதி மகன்கள் ரவுடிகள் என்பது உண்மை அல்ல. இருவரும் ரவுடிகள் தான்.

இருவருள் யார் வந்தால் மக்களுக்கு நன்மை என்று பார்க்கவேண்டும்.

rohan said...

anatawa aeigoga wakarimas ka??????? what you don't no english you...... you what are you men???? SHAPESHIFTER........ BODY SNATCHER?????????? ALIENS YOU ARE ALL ALIENS YOU...... YOU DIRTY APES WHAT HAVE DONE YOU DIRTY APES........

Erode Nagaraj... said...

I went to cast my vote. Details published in my blog.

http://erodenagaraj.blogspot.com/

IdlyVadai said...

//I went to cast my vote. Details published in my blog.

http://erodenagaraj.blogspot.com///

படித்தேன். வேதனையாக இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது - உங்க பூத் நம்பர், அங்கே இருப்பவர் பெயர் நீங்கள் போன சமயம், உங்களுக்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக ஆங்கிலத்தில் எழுதி தலமை தேர்தல் ஆணையருக்கு ரெஜிஸ்ட்ர் போஸ்டில், சுயவிலாசம் இட்ட கார்டும் சேர்த்து அனுப்பவும்.

Erode Nagaraj... said...

righttu..

லவ்டேல் மேடி said...

// ஜெயாவை சென்னை உயர் நீதி மன்றம் தண்டித்தால்,சுற்றுலா சென்ற மாணவிகளின் பஸ் ஜெயா கட்சியினரால் கொடுரமாக(பஸ்ஸின் வெளியில் தாழ்பாள் போட்டு யாரும் வெளியில் இறங்க முடியாதபடி செய்து ) தீ வைத்து கொளுத்தியதில் உடல் முழுவதும் கருகி இறந்தவர் நெய்வேலி ஜவஹர் பள்ளியில் படித்த விருத்தாசலம் மனைவியும் ஒருவர்.

மூன்று மாணவிகள் கருகி இறந்தனர். கட்டிபிடித்திருந்த படி இருந்த அந்த முவரின் கருகிய உடல்கள் தமிழக மாணவிகளின் கண் முன்னே எப்போது இருக்கும்.

இதை விட கொடுமை உலகில் ஏதும் உண்டா? //


ஆ.தி.மு.க செய்ததும் குற்றம்தான்...!! ஆனால் தி.மு.காவை நியாயப்படுத்தாதீகள்.......


சரிகாஷா ஈவ்டீசிங் கொலை ...?


மதுரை தினகரன் ஆபீஸ் எரிப்பில் பலியான பணியாளர்கள் ...?


உட்கட்சி பூசலில் பலியான ஆலடி அருணா.....???


இன்னும் எத்தனை மறைமுகக் கொலைகளோ...????

மானஸ்தன் said...

மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஈரோடு அண்ணா.


@இட்லி வடை
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது உங்கள் ஆலோசனை.

இந்த திருட்டு அரசியல் வியாதிகளின் கைக்கூலிகளாக வேலை செய்யும் முதுகெலும்பு இல்லாத the "so-called" booth-officers வேற ஏதாவது செஞ்சு பொழைக்கலாம்.


தெய்வம் நின்று கொல்லும். விரைவில்.

மானஸ்தன் said...

@லவ்டேல் மேடி


ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி!
அந்த அம்மிணி இதுதான் கடைசி போஸ்ட் (UPA-post) அப்டின்னு சொன்னதுக்கு அப்போறமும் எதுக்காக வம்படியா கூப்டு மொக்கைய தொடர சொல்றீங்க! வேணாம். முடியல. அழுதுடுவேன்....

:-D

Erode Nagaraj... said...

Hello Mr.மானஸ்தன்,

Are you from Thabjavur or you have some connection in the music field?

சகஜமாக அண்ணா என்கிறீரே... யாரைய்யா நீர்?

மானஸ்தன் said...

ஐயா ஈரோட்டாரே!
வயசுல பெரியவங்கள அண்ணான்னு சொல்றது மரியாதை...

அது தப்பு இல்லீங்கோனா!!

Anonymous said...

wait ....dmk alliance surely win above 30 seats.......surely

குடிமகன் said...

நாங்களும் எங்க தலைவரும் தினமும் நேசிக்கும் Bottleன் மீது சத்தியமா சொல்லறேன், எங்க captain தாங்க ஜெயிப்பாரு. தலைவர் வந்தா எங்கள மாதிரி ஏழைகளுக்கு இலவச கள்ளு கொடுப்பாருங்கண்ணா. நமீதாவுக்கு ராஜ்யசபா சீட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கு.