பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 30, 2009

கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும் - ஞாநி

கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும் - ஞாநி - ஓ-பக்கங்கள், குமுதம்...( ஒரு பகுதி மட்டும் இங்கே )

தொலைக்காட்சிகளில் டெல்லியில் தள்ளு வண்டியில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை வைத்து தள்ளிக் கொண்டு சென்றபடி அவருடைய குடும்ப உறுப்பினர்களும் குடும்ப விஸ்வாசிகளும் வலம் வந்த காட்சிகளைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை அனுபவத்தை நான் சிறுகதையாக எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக அந்த விடுதலை வீரரை நான் சென்னைக்கு வரக் கேட்டிருந்தேன். . அவருக்கு வயது எண்பதுக்கு மேல். உடல் தளர்ச்சி பெரிதாக இல்லாவிட்டாலும் கடும் மன தளர்ச்சியில் இருந்தார். சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் அவ்ருடைய பிள்ளையும் பேரனும். நிகழ்ச்சிப் பதிவு முடியும்வரை என் வீட்டில் தங்கியிருந்தார்கள். எல்லாம் முடிந்து ஊருக்குத் திரும்பும் தினத்தன்று ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன்னால் அவர் என் அறைக்கு பேரனுடன் வந்தார். என்னிடம் ஒரு உதவி வேண்டுமென்று தயங்கித் தயங்கிச் சொன்னார். என்னவென்று கேட்டேன் பேரனுக்கு சினிமாவில் சேர ஆசை. எப்படியாவது கமல்ஹாசனிடம் சொல்லி சேர்த்துவிடவேண்டுமென்று கேட்டார் ஆங்கிலேய ஆட்சியில் தேசத்துக்காகஅடி உதை அவமானங்களை சந்தித்திருந்த அந்த விடுதலை வீரர். ஏற்கனவே பல முறை பேரன் சென்னைக்கு வந்து முயற்சித்த கதையையும் சொன்னார். விடுதலை வீரருடன் ரயிலில் வந்தால் உடன் வரும் உதவியாளருக்கு டிக்கட் இலவசம் என்பது அரசு அளித்திருக்கும் சலுகை. எனவே அடிக்கடி இந்த விடுதலை வீரரை பேரன் சென்னைக்கு அழைத்து வந்து நாள் முழுக்க ரயில்வே நிலையத்திலேயே உட்காரவிட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கேட்கப் போய்விடுவான். இரவு ரயிலில் ஊர் திரும்பும் வரை ரயிலடியில் விடுதலை வீரர் கிடக்க வேண்டியதுதான்.

தள்ளு வண்டிக் கலைஞரை டெல்லிக் காட்சிகளை டி.வியில் பார்த்தபோது ஏனோ இந்த உண்மைக் கதை நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய இளைஞர், இன்று 84 வது வயதில் மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதற்காக தள்ளு வண்டியில் வைத்து அலைக்கழிக்கப்படுகிறார். விடுதலை வீரருக்கும் இவருக்கும் ஒரே வித்யாசம், இப்படி அலைவது இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதுதான்.

தி.மு.க என்பது திருக்குவளை மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று. கட்சி என்கிற கம்பெனியின் கண்ட்ரோலிங் ஷேர்ஸ் எல்லாம் குடும்பத்திடமே இருக்கின்றன. குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் வரிசையாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒழுங்காக முடித்துத் தருவதற்காக ஓய்வு பெறும் வயதைத் தாண்டியபிறகும் போர்ட் சேர்மன் பதவியில் கலைஞரை தொடரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டி.வியில் பார்த்த டெல்லிக் காட்சிகளில் தள்ளு வண்டி ஊர்வலத்தில் பின்னால் போகிற பிரமுகர்களில் ஒரு பலியாடு மாதிரி முகத்தைப் பார்த்தேன். தெரிந்த முகமாயிருந்தது. வயதாகிவிட்டதால் கொஞ்சம் பின் வழுக்கையும், முன்புறம் வயதை மீறிய கருந்தாடியுமாக - திருச்சி சிவா! தி.மு.கவின் ராஜய சபை உறுப்பினர். ஸ்டாலினுடன் இளைஞர் தி.மு.க உதவி தளபதிகளில் ஒருவராகத் துடிப்புடன் செயல்பட்டு விஸ்வாசமாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் கட்சியில் இருக்கிறவர். புத்தகம் படிக்கிற ப்ழக்கமும், எழுதுகிற பழக்கமும் உடைய கண்ணியமான மனிதர். கட்சி அவருடைய விஸ்வாசத்துக்கு அளித்த உச்சமான பரிசு எம்.பி.பதவி மட்டும்தான். இந்த முறை அவருக்கு ஓர் இணை மந்திரி பதவியாவது தருவார்கள் என்று நினைத்தேன். ம்ஹூம். எம்.ஜி.ஆர் விஸ்வாசியாக இருந்து கல்வித் தந்தையாக மாறி அண்மையில் தி.மு.கவில் இனைந்து எம்.பியான கோடீஸ்வரர் ஜெகத்ரட்சகனுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுத்த பிறகு மீதி பதவி எதுவும் இல்லையே. மன்மோகன் சிங் குறைந்தது தி.மு.கவுக்கு பத்து இணை அமைச்சர் பதவிகளையாவது கொடுத்திருந்தால், சிவா மாதிரி அரசியல் அசடுகளுக்கும் வாய்ப்பு கொடுத்திருப்பார்களோ என்னவோ..

மூத்த கட்சிக்காரரான டி.ஆர்.பாலுவை ஓரங்கட்டிவிட்டதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. இதில் ஒன்றும் வியப்பு இல்லை. பண்ணையார் வீடுகளில் எப்போதும் துடிப்பான புது இளம் கணக்குப் பிள்ளைகள் வந்துவிட்டால், வயசான பழைய கணக்குப் பிள்ளைகள் தாமாகவே குறிப்பறிந்து ஒதுங்கிக் கொள்வதுதான் மரபு. இன்னும் கொஞ்சம் கவுரமாக பாலுவுக்கு ஏதாவது மாநில ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்து ரிட்டையர் ஆக்கியிருக்கலாம்.

வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ? யாரெல்லாம் அமைச்சர் ஆக்கப்படுகிறார்கள் ? எப்படி இருந்த தி.மு.க இப்படி ஆகிவிட்டது ? இன்னும் அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ ?

நீ ஒன்றும் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஆவேசப்பட வேண்டாம். நீங்களேயாவது உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள். என் கவலையெல்லாம் உங்களின் இலவச மயக்கங்களில் சிக்கியிருக்கும் மக்களின் கதியைப் பற்றித்தான்.

நன்றி: குமுதம், 26-5-2009

21 Comments:

Erode Nagaraj... said...

எதுவுமே செய்யாவிட்டாலும் கடைசி நேரத்தில் மக்களை வாங்கிவிடலாம் என்று பாடம் படித்ததால், உங்களுக்கு கொடுக்கத்தான் இப்போது அடிக்கிறேன் என்ற நியாயம் எடுபடும் என்ற எண்ணத்தில்...


குற்ற உணர்வின்றி
கொள்ளைகள் நிகழும்;
கொடுமைகள் திகழும்;
உருப்படாத வலைப் பூக்கள் இகழும்.

இருக்கட்டுமே...
என்ன இப்போ?

பா. ரெங்கதுரை said...

//ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய இளைஞர்//

இதைக் குசும்பு என்பதா வக்கிரம் என்பதா? கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்த, சிறையில் பூனை வளர்த்த கதைகளின் பின்னணி கண்ணதாசனின் ’வனவாசம்’ படித்தவர்களுக்குத் தெரியும். தி.மு.க.வின் தலைமைப் பதவியைப் பிடிக்கவும் தன் போட்டியாளர்களை ஓரங்கட்டவும் அன்று கருணாநிதி நடத்திய நாடகம் அது. அதிகாரத்தைத் தன் குடும்பத்தினருக்குக் கைமாற்றித்தர இன்று டெல்லியில் நடத்தும் நாடகம் இது.

Anonymous said...

குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

கலைஞர் உரை:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

கலைஞர் உரை:
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

கலைஞர் உரை:
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்

குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

கலைஞர் உரை:
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.

Anonymous said...

குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

கலைஞர் உரை:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.(Relation only surrounds CM)

குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்(Cheated SriLankan Tamils)

குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

கலைஞர் உரை:
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?.(CM should answer to his question)

குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

கலைஞர் உரை:
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்(Think again and again and do something good)

குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

கலைஞர் உரை:
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்(After your death it will happen)

குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

கலைஞர் உரை:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்(Rama is drinker.. Where Rama got Engineering Degree ? Hi Hi Hi)

குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

கலைஞர் உரை:
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது(Started your carrier as Tamil Leader and ended as Family Leader)

குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

கலைஞர் உரை:
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை( ... for whom this Kural)

குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.கலைஞர் உரை:
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்(Recent comments about CM)

குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

கலைஞர் உரை:
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.(Sonia never did anything for the welfare of Srilankan Tamil, but for Power U are going behind Congress)

குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

கலைஞர் உரை:
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்(Truth .... !)

Anonymous said...

குறள் 959:
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

கலைஞர் உரை:
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்(Ada Rama...)

குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

கலைஞர் உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்(Why Tasmark Wine shop..?)

குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.(So what about Tasmark Wine shop)

குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

கலைஞர் உரை:
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.(New revolution will raise against corruption after your mukthi)

குறள் 882:
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

கலைஞர் உரை:
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்(Many politicians aware sir)

குறள் 886:
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

கலைஞர் உரை:
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்(After CM death this will happen to DMK)

குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

கலைஞர் உரை:
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்(So only fasting in beach)


குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

கலைஞர் உரை:
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்(100% suits)

Anonymous said...

ஞாநியின் கவலை வீண் கவலை...ஸ்ரீ பிரகாசா, கே எம் முன்ஷி, போன்றவர்களை காங்கிரஸ் இப்போது மறந்து விட்டது. தேர்தலில் உதை வாங்கியவர்களை கவர்னராக்குகிறது.
எல்லா அரசியல் கட்சிகளும் சாக்கடைகள் தான். தி மு க மட்டும் எப்படி விதி விலக்கு ஆக இருக்க முடியும்..திருச்சி சிவா அசடு. சம்பாதிக்க தெரியாத மனிதன்... வள்ளுவர் கோட்டத்தில் ஜனவரியில் தமிழ்ப் ”புத்தாண்டு” பாராட்டு விழாவை ஒரு கோடி செலவில் நடத்தி இருந்தால் பதவி கிடைத்திருக்கும்...ஹூம். நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்று யாருக்கும் சந்தேகம் வேண்டாம்... அதல பாதளத்திற்கு என்பது உண்மை.

Kameswara Rao said...

IV,

இந்த தள்ளாத வயதிலும் குடும்ப நன்மைக்காக, தம் மக்களின் வாழ்வுக்காக, வருங்கால கனவுகளுக்காக கருணாநிதி எம் ஜி ஆர் படத்தின் பேரை தன சொந்தம் ஆக்கி கொண்டார் படத்தின் பெயர் இது தான் "நினைத்ததை முடித்தவன்"

மாநிலத்தில் சுயாட்சி, மக்களவையில் கூட்டாட்சி ...திராவிட கட்சிகளின் கோஷம் இப்போது மாநிலத்தில் (ஸ்டாலின்) சுயாட்சி, மக்களவையில் (அழகிரி, தயாநிதி, ராசா) கூட்டாட்சி.

காமேஷ்

ஆ.ஞானசேகரன் said...

//தி.மு.க என்பது திருக்குவளை மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று//

ம்ம்ம்ம்ம்

Anonymous said...

குடும்பத்தில் எல்லாரையும் திருப்திப்படுதினார் மு.க. எனவே அவருக்கு இனி கவலை இல்லை.
தோழியுடன் ஜெ கொட நாடு கெளம்பிட்டார். அதலால அவருக்கும் கவலை இல்லை.

இந்த ரெண்டு "தலை" (எழுத்துகளும்) கவலை இல்லாம "ரெஸ்ட்" எடுப்பதினால் "நாராச அறிக்கைப் போர்" இன்னும் ஒரு மாசத்திற்கு இருக்காது என்பது தமிழக மக்களுக்கு நல்ல செய்தி.

வாழவந்தான் said...

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

இந்த குறள் நல்லா பொருந்தும்னு நினைக்கிறன்?

அய்யன்மீர், திரு முக வாழும் வள்ளுவர். அவர் குறள் வழி நடப்பதில் குறையொன்றுமிருக்காது

Inba said...

தன் வீட்டு நாயை தவிர
மற்ற அனைத்து குடும்பத்தினரையும்
தொழில், பதவி என செட்டில் செய்து விட்ட
கருணாநிதிக்கு இரண்டு கவலைகள் மட்டுமே இருக்கமுடியும்.

தனக்கு பின்னால், தன் மகன்கள் மற்றும் மற்றும் மருமகன்கள்
அடித்து கொள்ளாமல் இருக்கவேண்டும்

தான் இல்லாத எதிர்கால தேர்தல்களில்
'அம்மா' வும், மக்களும் சேர்ந்து கட்சிக்கு
'ஆப்பு' அடிக்காமல் இருக்க வேண்டும்.

UMA said...

ஜெயா கோடை விடுமுறையை கழிக்க கொடநாடு தனி விமானத்தில் சென்றார். இனிமேல் அடுத்த தேர்தலுக்கு சென்னை திரும்பி வருவார்.அதுவரை அறிக்கை மழை கொட நாட்டிலிருந்து வெளிவரும்.

வலைஞன் said...

தமிழ் மக்களை நினைத்தால்தான் பாவமாக உள்ளது

1969 முதல் 8 ஆண்டுகளில் மு க ஆட்சியை வெறுத்து,எம் ஜி ஆர் வசம் ஆட்சியை கொடுத்தனர்.அவரோ தான் நிர்வாக திறமையோ,சுய அறிவோ இல்லாதவர் என்பதை அடுத்த 10 ஆண்டுகளில் நிரூபித்தார்.
மீண்டும் ஜெயா விடம் ஆட்சி போயிற்று.அவரோ மு க வை தேவன் ஆக்கும் அளவு ராட்சசியாக இருந்தார்.
எல்லாம் வெறுத்து மக்கள் யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கே ஒட்டு என முடிவு செய்து விட்டார்கள்.
இனி நம்மை இறைவன் காப்பற்றினால்தான் உண்டு

Krish said...

//Dynasty politics has become common trend in India: Karunanithi////

It seems India is not a democratic country. You cannot become a CM,PM,MP,MLA if your father is not a politician. Congress, DMk,PMK, and ..Lalu,Umar,Thackery,Gowda,...list goes.

/Will you stop your children or grandchildren from becoming journalists," he shot back, saying many children of Indian politicians had followed the footsteps of their parents./////

Politician's son being a politician is not a problem. But taking over other senior people, not giving opportunity to other (like thrich Shiva) is a problem.

//Asked how he rated Stalin's elevation to the post, Karunanidhi said Stalin would place his detention under Maintenance of Internal Security Act (MISA) during emergency a greater honour than today's achievement. ///

This is the only reason he used to say. There are many people suffered at that time. Even worst than Stalin....but nobody know where they are now!

Krish said...

அன்பழகன் மாதிரி ஒருத்தர் கடைசி வரை முதல்வர் ஆகாம போவது ரொம்பவே துரதிர்ஷ்டமானது!

கருணாநிதி, முரசொலி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி, கயல்விழி... இன்னும் எத்தனை பேரோ!
இந்த வீரசாமி, பொன்முடி, வீரபாண்டி, துரை... இவங்களை எல்லாம் அப்படி சரிகட்டியிருப்பர் கருணாநிதி?
வைக்கோவுக்கு அப்பறம் எதிர்த்து கேக்க சரியான ஆள் இல்ல அங்க.

அன்பு ★ பிரபாகரன் ★ said...

தன் வீட்டு நாயை தவிர
மற்ற அனைத்து குடும்பத்தினரையும்
தொழில், பதவி என செட்டில் செய்து விட்ட
கருணாநிதிக்கு இரண்டு கவலைகள் மட்டுமே இருக்கமுடியும்.

தனக்கு பின்னால், தன் மகன்கள் மற்றும் மற்றும் மருமகன்கள்
அடித்து கொள்ளாமல் இருக்கவேண்டும்

தான் இல்லாத எதிர்கால தேர்தல்களில்
'அம்மா' வும், மக்களும் சேர்ந்து கட்சிக்கு
'ஆப்பு' அடிக்காமல் இருக்க வேண்டும்.
///

இன்னுமொரு கவலையும் இருக்கிறது!

எப்படியாவது தமிழின தலைவர் ஆகி விட வேண்டும் என்பது!

அது 'பிரபாகரன்' என்ற ஒற்றை தலைவன் உயிரோடு இருக்கும் வரை நடக்காது என்பதால் ‘அவரை கொல்லவும் துணிந்தவர்/துணைபோனவர்’ கலைஞர்...

Kannan.S said...

can anybody post karunanidhi's kural vilakkam?
else pl. share me the link... I will do that..

அஞ்சா நஞ்சன் said...

//கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்த, சிறையில் பூனை வளர்த்த கதைகளின் பின்னணி கண்ணதாசனின் ’வனவாசம்’ படித்தவர்களுக்குத் தெரியும்.//

ரெங்கதுரை சார், மு.க. சிறையில் பூனை வளர்த்த கதை என்னவென்று சொல்லுங்களேன்.

Baski said...

Between the age of 40 to 60 should be the good period to serve the nation.

I feel 20 years of public-life should be good enough.

Also politicians should retire at the age of 60.

Can election commission bring such rule?

shanmuganathan said...

தமிழின தலைவர்............. இலங்கையில் லட்சம் லட்சமாய் தமிழர்கள் உயிர் இழக்கும் வேலையில் அவர்களுக்காக உண்ணாவிரதம் மட்டுமே இருக்க முடிந்த உன்னதமான தலைவர் ஆனால் நடக்க முடியா விட்டாலும் தம் உறவுகளுக்கு பதவி வாங்கி தர புதுடெல்லி வரை சென்ற உன்னதமான தலைவர் நம் தமிழின தலைவர்..................................

Anonymous said...

I agree, Disabled beggar.