பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 29, 2009

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்


தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் நியமனம்

கவர்னர் மாளிகையின் அறிக்கை:

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக கவர்னர் நியமனம் செய்து அறிவித் துள்ளார். இதுவரை முதல்- அமைச்சர் கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை மு.க.ஸ்டாலின் கவனிப்பார். இனி அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் என்றழைக்கப்படுவார்.

தமிழக வரலாற்றில் துணைமுதல்வராக ஒருவர் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்

கலைஞர் அறிக்கை
கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப் பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப் பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல் பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசிய மும் உள்ளது. எனவே இந்தப் பணிகளை நமது நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இரு வருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்டுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரொடொகால் படி மத்திய கேபினட் மந்திரி மாநில மந்திரியை விட ஒரு படி மேல். துணை முதல்வர் அப்படி கிடையாது.

47 Comments:

கலைக்கோவன் said...

முதல்வராக்கி இருக்கலாம்..,
துணை முதல்வர் ஸ்டாலினுக்கு
வாழ்த்துக்கள்..!

தயாளு அம்மாளின்
முதல்வர் அழகிரிக்கும் தான்

மானஸ்தன் said...

///பிரொடொகால் படி மத்திய கேபினட் மந்திரி மாநில மந்திரியை விட ஒரு படி மேல். துணை முதல்வர் அப்படி கிடையாது.///


கொளுத்திப் போடுவதில் உம்மை மிஞ்ச ஒருவன் பொறந்து வர வேண்டும்.
வாழ்க உன் பணி.

Ramadoss Magesh said...

ஏற்கனவே குடும்பத்துக்கு மத்தியிலயும் மாநிலத்திலையும் பிரிச்சு குடுத்து கொஞ்ச நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா..நீங்க வேற protocol குழப்பத்தை கிளப்பி விடுரின்களே

M Arunachalam said...

//பிரொடொகால் படி மத்திய கேபினட் மந்திரி மாநில மந்திரியை விட ஒரு படி மேல். துணை முதல்வர் அப்படி கிடையாது.//

Do you mean to say, Dy. CM is equal to Union Cabinet minister?

But, even as per protocol, a State CM is equal to Union cabinet minister, right? So, who knows, very soon, Dy. CM may become CM soon, ON THE REQUEST OF ALL MLAs.

By the by, what is the 'plan in pipe-line' for Thunaivi's daughter & RS MP, Kanimozhi? Any guesses from IV or any of the readers?

UMA said...

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழகம் அடுத்த தலைமுறையின் கீழ் வருகிறது.இனி ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் நாள் தொலைவில் இல்லை.தி .மு. க .வில் அனைவராலும் விரும்பப்படும் இளம் தலைவர் ஸ்டாலின் . அவரின் தீவிர பிரச்சாரத்தின் காரணமாக கலைஞரின் தேர்தல் பிரச்சாரம் செய்யாத குறை தெரியாமல் தி.மு.க கூட்டணி நல்ல வெற்றி கண்டுள்ளது.

வாழவந்தான் said...

முதல் துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்!
மு.க.ஸ்டாலின் அவர்களின் மைந்தன் உதயநிதியின் அரசியல் பிரவேசம் எப்போது?

ரஜினி ரசிகன் said...

மைனாரிட்டி துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்!

kanami said...

கனிமொழிக்கு ஆப்பு மட்டும்தானா??? உமா ஆண்டி சொல்லுங்க!

நல்லூரான் said...

அம்மா உமா ,
திமுக(திருக்குவளை.மு.கருணாநிதி-நன்றி ஞாநி) ஜெயித்ததற்கு வேறு முக்கிய காரணம் உண்டு.
இந்த வார ஆனந்த விகடனில் சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது
கதையின் தலைப்பு "2209-ல் ஒரு நாள்". படித்துப் பாருங்கள் ..
அஞ்சாநெஞ்சரின் வீச்சு தெரியும்.

Anonymous said...

தமிழனுக்கு கொஞ்சம்கூட சொரனையே இல்லை! இல்லாட்டி இப்படி வேடிக்கைபாத்துக்கிட்டு இருப்பான?

முதல்ல எங்க தலைவிக்கு (அதாங்க கனிமொழி) பத்தி சொல்லிட்டு அப்பறம் பதவிஎத்துக்கங்க!

G.R said...

///பிரொடொகால் படி மத்திய கேபினட் மந்திரி மாநில மந்திரியை விட ஒரு படி மேல். துணை முதல்வர் அப்படி கிடையாது.///


//கொளுத்திப் போடுவதில் உம்மை மிஞ்ச ஒருவன் பொறந்து வர வேண்டும்.
வாழ்க உன் பணி.//

:-)) எப்படிண்ணே..

kanami said...

இது கொடுமையிலும் கொடுமை! பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது!

Anonymous said...

எங்கள் தலைவிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழகம் அடுத்த தலைமுறையின் கொள்ளகாரர்களின் கீழ் வருகிறது. இனி திருட்டு தளபதி ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் நாள் தொலைவில் இல்லை. தி .மு. க .வில் (திருடர்கள் முன்னேற்ற கலகம்) அனைவராலும் விரும்பப்படும் இளம் தலைவர் ஸ்டாலின் . அவரின் தீவிர பிரச்சாரத்தின் காரணமாக கபோதி கலைஞரின் தேர்தல் பிரச்சாரம் செய்யாத குறை தெரியாமல் தி.மு.க கூட்டணி திருட்டு வெற்றி கண்டுள்ளது.

senthil said...

All The Best To OUR DY CM

தண்டோரா said...

கேள்வி: ஸ்டாலினுக்கு முடிசூட்டும் எண்ணம் உண்டா?

மு.க : திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல..முடிசூடுதல்.பட்டாபிஷேகம் எல்லாம் நடத்த..

உண்மைதான் .. திமுக சங்கர மடம் இல்லைதான்..ஆனால் திங்கற மடம் ஊரெல்லாம் கையேந்தி ஒரு குடும்பம் மட்டும்

தண்டோரா said...

சட்டமன்ற இடைத்தேர்தலில் கனிமொழி போட்டியிட்டால் வியப்பதற்கில்லை.பின் அமைச்சர் பதவி என்ற உறுதிமொழி இப்போதைக்கு அளிக்கபட்டிருக்கலாம்(சி.ஐ.டி காலனியில் இடி அதிகமாம்)

Anonymous said...

IV,
Potti mudivu enna achuppa?!
Innum result varaliye?

Litmuszine said...

Arun

//By the by, what is the 'plan in pipe-line' for Thunaivi's daughter & RS MP, Kanimozhi? Any guesses from IV or any of the readers?//

"Assuming Power Without Responsibility" is a dangerous path (only to the poor public !!). Already a Maina(o) is walking in that path by graping all the credits and throwing all the misdeeds to those Puppets in power with almost a complete support from all corners of Media (brokers). Her recently crowned Prince is also taken oath to follow the same along with Mum.

Do you think whether all these, this Ras(j)athi unaware?

வலைஞன் said...

ஒரு மகன் துணை முதல்வர்
ஒரு மகன் மத்திய அமைச்சர்
ஒரு மருமகன் மத்திய அமைச்சர்
ஒரு மகள் பாராளுமன்ற உறுப்பினர்
ஒரு மருமகன் தொழிலதிபர்
ஒரு பேரன் திரைப்பட தயாரிப்பாளர்

பில்கேட்சை விட அதிகமாக சொத்து

தமிழர்களையும் தமிழையும் காப்பாற்றுபவர் என்ற புகழ்

85 வயதிலும் வேலை செய்யும் உடல் ஆரோக்கியம்

கடவுளை வீட்டுக்கே வரவழிக்கும் சக்தி

ஆஹா ! ஆஹா !!

ஒரு சர்வாதிகாரியால் கூட சாதிக்க முடியாத இவைகளை ஒரு குடியரசில் தன் வசனத்திறமையை மட்டும் வைத்து சாதித்தவர்

ஒரு சிலரை ஏமாற்றலாம்
எல்லோரையும் சிலநேரம்
ஏமாற்றலாம்
ஆனால்
எல்லோரையும் எப்பொழுதும்
ஏமாற்றமுடியாது
என்கிற பொன்மொழியை பொய்யாக்கி காட்டியவர்
(எல்லோரையும் எப்பொழுதும்
ஏமாற்றமுடியும் என்று)

இச்சாதனையாளர் பல்லாண்டு வாழ்ந்து தன் கொள்ளு பேரன்,எள்ளு பேரன் அனைவர்க்கும் தொண்டு செய்ய என் வாழ்த்துக்கள்

UMA said...

தி.மு.க மதிய அமைச்சர்களின் தேர்வு மிகவும் கவனமாக செய்யப்பட்டுள்ளது. கட்சியின் வெற்றிக்கு காரணமான அழகிரி, பின்தங்கிய வகுப்பை சேர்ந்த ராஜா, திறமை மிக்கவர் என்று எதிர்கட்சிகள் சொன்ன ( தூக்கியடித்தபோது) மாறன், கொங்கு மண்டலத்துக்கு காந்தி செல்வன், தஞ்சாவூர் பழனிமாணிக்கம், வன்னியர் தலைவர் ஜெகத்ரட்சகன் மற்றும் கலையுலக நெப்போலியன் என்று அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி தேர்ந்தெடுத்த டீம் அது.

வாரிசு அரசியல் என்னும் எதிர்கட்சி ( எதிரி கட்சி அல்ல) தோழர்களே கொஞ்சம் கீழே படியுங்கள்:

சிந்தியா, NT ராமாராவ் ,அஜய் மக்கன் ,ஜிதின் பிரசாத்,சோலங்கி, துஷார் சவுத்திரி , சச்சின் பைலட் , ப்ரநீத் கவுர், அகதா சந்குமா முதலான மந்திரிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள். பட்நாயக் மாநில முதல்வர்.

எனவே திறமை மற்றும் கட்சி தொண்டர்கள் விரும்பினால் யாரும் அரசியலுக்கு வரலாம். அதை குறை சொல்லுபவர்கள் அனைவரும் அந்த கட்சிகளுக்கு ஓட்டு போடாத எதிர்கட்சியினர் தான்.

கனிமொழிக்கு பதவி இல்லை என்று குறை சொல்லுபவர்கள் [ சோ ( zee டிவியில்) முதலானவர்கள் ], அவருக்கு பதவி கொடுத்திருந்தாலும் குறை சொல்லுபவர்களே.

lalitha said...

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன,,,,,,

UMA said...

///
ஒரு மகன் துணை முதல்வர்
ஒரு மகன் மத்திய அமைச்சர்
ஒரு மருமகன் மத்திய அமைச்சர்
ஒரு மகள் பாராளுமன்ற உறுப்பினர்
ஒரு மருமகன் தொழிலதிபர்
ஒரு பேரன் திரைப்பட தயாரிப்பாளர்

பில்கேட்சை விட அதிகமாக சொத்து

85 வயதிலும் வேலை செய்யும் உடல் ஆரோக்கியம்

ஒரு சர்வாதிகாரியால் கூட சாதிக்க முடியாத இவைகளை ஒரு குடியரசில் தன் வசனத்திறமையை மட்டும் வைத்து சாதித்தவர்

///


மனிதர்களுக்கு மிருகங்களை விட வியாதிகள் அதிகம் வருவதற்கு காரணம் மற்றவர் முன்னேறுவதை பார்த்து பொறாமை படுவதே.

மிருகங்கள் கண்ணாடி போட்டு பார்த்திருப்போமா? அவைகளுக்கு சர்க்கரை, பிரஷர் நோய் உண்டா? . ஏன்?அவைகள் மற்ற மிருகங்களை பார்த்து பொறாமை படுவதில்லை.

நமது பையன் மார்க் வந்து விட்டால் உடனே அடுத்த வீட்டு பையன் மார்க் என்ன என்பதே நமது அடுத்த கேள்வி. நமது பையன் குறைந்த மார்க் பெற்று லோக்கல் கல்லூரியில் இடம் கிடக்கும் போது அடுத்த வீட்டு பையன் அதிக மார்க் பெற்று மருத்துவ கல்லூரியில் சீட்டு கிடைத்தால் நமக்கு ஜுரம் வரும்.

இதை உணர்ந்தால் நாம் வியாதி இல்லாமல் நலமாக வாழலாம்.

guruprasad said...

இளம் தலைவர் ஸ்டாலின்
Appo Rahul Gandhi, Agatha Sangma yellam kuzhandhai thalaivara?
BTW, such an important governance decision, why was it not discussed, voted, vetoed neither in party general council, nor in public council?
//திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல..//
Vaazhga Periya Periyava CareNoNidhi
Vaazhga Periyava Stal(l)in(g)
திமுக மடம் pugazh dilliyai nokki paravi, CONGRESS மடம் konjam clue eduthu kollattum....
Arulthiru RamaDAZE Adigal eppodhu Arulthiru AnbuMONEY-kku "Thunai Tittaalar" padhavi tharuvar...?

Baski said...

I strongly feel that "Stalin Deserves" this now.

Btw, there is no alternate candidate for CM. (in Karunanidhi's Family).

;-)

UMA said...

இன்றைய எக்ஸ்பிரசில் சுதர்சனின் ஒரு நல்ல கட்டுரை வந்துள்ளது .இலங்கையில் விடுதலை புலிகளின் இந்த மோசமான முடிவுக்கு காரணம், இங்குள்ள வைகோவும், நெடுமாரனுமே என்று விளக்கமாக சொல்லுகிறது கட்டுரை. தவறான தகவல்களை தந்து அவர்கள் சரணடைய எண்ணிய போது அவர்களை திசை திருப்பி ஏமாற்றியவர்கள் அவர்கள் என்று
தெரிகிறது.

" Every day Vaiko and Nedumaran would tell him that Tamil Nadu was burning, that the lawyers were fully behind them in their sympathy strike and that it would continue and gather momentum, that Muthukumar’s death was going to spark a wave of suicide deaths, that the DMK was going to lose very badly in the elections and that in New Delhi BJP was going to come to power after which things would be hunky dory for the LTTE. These guys gave the LTTE leadership a lot of false hopes. The LTTE was led up the garden path….
That’s strong language.
I’ve never told you this before, but Nadesan asked Nedumaran to prepare a surrender draft, I think it was in the end of March. In the language that was used the word “surrender” did not figure. Nedumaran advised that the LTTE should say they were “ready for a ceasefire.” Nadesan came back and said that Sri Lankans were specifically looking for “surrender of arms.” Nedumaran advised them to stick by “ceasefire and ready for negotiations.” It is diabolical. With friends like Vaiko and Nedumaran, Prabhakaran didn’t need enemies!"

Prabhakaran depended critically on advice from the wrong people like Nedumaran and Vaiko. Tamils let down Tamils.


V Sudarshan is the Executive Editor of ‘The New Indian Express’

Guruprasad said...

//மிருகங்கள் கண்ணாடி போட்டு பார்த்திருப்போமா? அவைகளுக்கு சர்க்கரை, பிரஷர் நோய் உண்டா? . ஏன்?//
If we happen to know any veterinary doctor, you may please check about these. This sentence is like your leader's statement //Ramar oru kudikaarar//
வாரிசு அரசியல் என்னும் எதிர்கட்சி ( எதிரி கட்சி அல்ல) தோழர்களே கொஞ்சம் கீழே படியுங்கள்:

சிந்தியா, NT ராமாராவ் ,அஜய் மக்கன் ,ஜிதின் பிரசாத்,சோலங்கி, துஷார் சவுத்திரி , சச்சின் பைலட் , ப்ரநீத் கவுர், அகதா சந்குமா முதலான மந்திரிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள். பட்நாயக் மாநில முதல்வர்.
All of these people are the single vaarisugal, who made it. We have come to accept this long time back, when Indira Gandhi came into active leadership. But almost 30-40 years later, we are seeing everyone in the family taking all the important stages...thats what is mean and so funny...
//பின்தங்கிய வகுப்பை சேர்ந்த ராஜா// why not Thol. Tirumavalavan? why should the post go to a former minister who was not able to give any satisfactory response for multi-crore scam in spectrum auction?

//மற்றவர் முன்னேறுவதை பார்த்து பொறாமை படுவதே// I take strong objection to this. No one is being jealous, because we know very well, we did not contest in the election nor won the election to rightfully seek a ministerial berth and feel jealous we did not get. All the sarcasm, cynicism, angusih you see is actually the manifestation of helplessness and bare-nakedness of us - electorate -being ripped and raped hopelessly by an octogenarian leader, who has no shame in ruthlessly promoting his family ahead of any one.
This game is worse than the board-room games of big corporates, and we dont need to take this with our bums open. We can atleast crib and whine!

மே(ல்)தாவி said...

இங்கதான் நம்ம தலைவரின் சாணக்கியம் யாருக்கும் புரிய மாட்டேங்குது. ராஜாவுக்கு பதவி குடுக்குற மாதிரி குடுத்து, முதல் பாராளுமன்ற தொடரில் எதிர்கட்சிகள் spectrum ஊழலை அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சி மேஞ்சு, ராஜாவுக்கு ஆப்பு வக்கும் போது அவரை ராஜினாமா செய்ய சொல்லி எதிர் கட்சி வாயை அடைத்து அந்த காலி இடத்தில் அம்மணி (கனிமொழி)யை appoint செய்ய காங்கிரஸுடன் ரகசிய உடன்பாடாமே!

IT & Communication துறை மேல் எப்போதும் கண் வைத்திருக்கும் தயாநிதி அப்போது என்ன செய்வார் என பொருத்திருந்து பார்ப்போம். கனிமொழிக்கு பதவி கொடுக்க முயலும்போதெல்லாம் ஏதாவது தடங்கல் ஏற்படுகிறதே! ராஜாத்தி அம்மா ஏதாவது பரிகார ஹோமம் செஞ்சு பாருங்களேன். நீங்கதான் பகுத்தறிவு பாசறையின் துணைவி !!! ஆயிற்றே!!

Anonymous said...

ஊத்தப்பம் உமா அவர்களுக்கு
//திறமை மிக்கவர் என்று எதிர்கட்சிகள் சொன்ன ( தூக்கியடித்தபோது) மாறன்//
அப்படி பட்ட மாறனுக்கு IT பதவி தராமல் அனைவராலும் திட்ட பட்ட ராஜா, ஏன் பதவி தந்தார்?
இது 3 வது கேள்வி இதுக்காவது பதில் சொல்லு .

Anonymous said...

ராகுல் காந்தியின் தேர்வு
ஊழலுக்கு இடமில்லை
மன்மோகன் நேர்மை
எல்லாம் தவிடு பொடி
தமிழகத்தில்
மைனாரிட்டி அரசே காங்கிரஸ் தயவில்
மிரட்ட வேண்டியவனே
மிரளும் மர்மம் என்ன?
தொலை தொடர்பு துறை ஊழல்
கூட்டு கொள்ளை
பிளக்மைல்
பிணையம் தான்
ராசாவுக்கு மீண்டும்
அதே துறை
நாட்டையே கூறு போடும்
கூட்டதிருக்கு
தலைவர் நமது பிரதமர்
வாழ்க தர்மம்
கூட்டணி தர்மம்
மக்களுக்கு பட்டை நாமம்

Guruprasad said...

A funny thing about your leader, UMA!
He was in New Delhi for 2-3 days, strongly bargaining berths for his family, and other supporters of the family, but when it comes to welfare of Tamils, he can only send telegram and write a letter, is it?

Gaana said...

"இனி திருட்டு தளபதி ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் நாள் தொலைவில் இல்லை."

இனி திருட்டு தலைவி ஜெயலலிதா தமிழக முதல்வராக வரும் நாள் தொலைவில் இல்லை. இரண்டு ஆண்டுகள் பொறுத்துக்கொள்ளுங்கள் . எல்லாம் ஒரே திருட்டு கூட்டம் தான். இந்த திருடரகளாவது திருடினாலும் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் எண்ணிலா மேம்பாலங்கள் தொழிற்சாலைகள் என்று. அந்த திருட்டுத்தலைவியோ திருடுவதைத்த்விர வேறு ஏதாவது நன்மை மக்களுக்கு செய்துள்ளாரா என்று எண்ணிப்பார்க்கிறேன் . ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. நீங்கள் யாராவது சொல்லுங்களேன் அப்படி ஏதாவது இருக்கிறதா என்று.

லவ்டேல் மேடி said...

என்ன கொடும சார் இது....!!!!

Gaana said...

"இனி திருட்டு தளபதி ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் நாள் தொலைவில் இல்லை."

இனி திருட்டு தலைவி ஜெயலலிதா தமிழக முதல்வராக வரும் நாள் தொலைவில் இல்லை. இரண்டு ஆண்டுகள் பொறுத்துக்கொள்ளுங்கள் . எல்லாம் ஒரே திருட்டு கூட்டம் தான். இந்த திருடரகளாவது திருடினாலும் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் எண்ணிலா மேம்பாலங்கள் தொழிற்சாலைகள் என்று. அந்த திருட்டுத்தலைவியோ திருடுவதைத்த்விர வேறு ஏதாவது நன்மை மக்களுக்கு செய்துள்ளாரா என்று எண்ணிப்பார்க்கிறேன் . ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. நீங்கள் யாராவது சொல்லுங்களேன் அப்படி ஏதாவது இருக்கிறதா என்று.

மானஸ்தன் said...

UMA said...
///மிருகங்கள் கண்ணாடி போட்டு பார்த்திருப்போமா? அவைகளுக்கு சர்க்கரை, பிரஷர் நோய் உண்டா? . ஏன்?அவைகள் மற்ற மிருகங்களை பார்த்து பொறாமை படுவதில்லை.///


என்ன சொல்ல வருகிறீர்கள் இதில் இருந்து? :-D :-)

தயவு செய்து இட்லி வடை வாசகர்களை நல்ல மனிதர்களாக இருக்க விடுங்கள்.
இல்லை என்றால்...........:-D

Anonymous said...

Hai all you guys....have missed a point.....long since it is a known fact that DMK was hijacked by MK and its made a family property. All these present DMK followers remain loyal only to lick spill over money. Oldies who have joined the party for their so called much lauded "principles" remain idiots and useless by todays standards of the DMK party. Then why to make hell of a lot of hue and cry.....!

Baski said...

//எனவே இந்தப் பணிகளை நமது நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, //

This line is convince whom?
பேராசிரியர்? or other family members?

Btw, why these oldies not retire?
Wheelchair CM!
Hospital Assembly!

Lot of useless news due to this.

Please rest in piece. ;-)

Inba said...

இதனால் சகலமானவர்களுக்கும்
அறிவிப்பது என்னவென்றால்

கருணாநிதியின் வீட்டில் இருந்தும்
அரசியல் கட்சி/அமைச்சர் பதவிகளில்
இல்லாதவர்கள்

1. அவரது இரண்டு மனைவியர்
(கூடுதல் வயதாகி விட்டதால்)

2. அவர் வளர்க்கும் நாய்.
(அதற்கும் கால்நடை துறையில் 'அதிகாரம்' இல்லாத பதவி கேட்டு
பெரிய அம்மா (சோனியா) காலை பிடித்து கதறுவதாக செய்தி வந்திருக்கிறது)

valaignan said...

I have two questions to UMA

1)Can anyone working as CM of a state amass this much of wealth HONESTLY?

2)What are the good things that Mr.MK has done to the people of Tamil Nadu or development of this state in the last 40 years?

Thank you

Baski said...

//இதை உணர்ந்தால் நாம் வியாதி இல்லாமல் நலமாக வாழலாம்.//

டி.ஆர். பாலு கிட்ட போய் சொல்லிபாருங்க.

Baski said...

//
2)What are the good things that Mr.MK has done to the people of Tamil Nadu or development of this state in the last 40 years?
//

நீங்க இந்த இணையதளத்திற்கு புதுசா?

யாருகிட்ட... என்ன கேள்வி கேட்டுபுட்டீங்க?

தப்பு பண்ணிடீங்க.

Please go and read her past views on M.K (or DMK) accomplishments.

Anonymous said...

DMK PRACHARA BEERANGHI "UMA" madem AVARKALE...

YEPPADHI UNGALAMATUM IPPADI MUDIYUTHU???

KONJAM KOODA SORANAYEE ILLAYA...

கால்கரி சிவா said...

//மிருகங்கள் கண்ணாடி போட்டு பார்த்திருப்போமா? அவைகளுக்கு சர்க்கரை, பிரஷர் நோய் உண்டா? . ஏன்?அவைகள் மற்ற மிருகங்களை பார்த்து பொறாமை படுவதில்லை//

வரும். கண்ணில் காட்ராக்ட் வரும். பிரஷர், சுகர் வரும். கான்சர் வரும். ஒரு மிருக டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

பொறாமையால் மிருகம் ஒன்றை ஒன்று அடித்து கொன்றுவிடும்.

Erode Nagaraj... said...

மிருகங்களின் இயல்போ, சிந்தனையோ,தகிடு தத்தங்களோ, காட்டிக் கொடுத்தலோ, பச்சை மாமிசம் முதல் மலம் வரையிலான சுவையோ தெரிந்திருக்க வேண்டுமென்றால் மிருகமாய்ப் பிறந்து - மனிதனாய் யோசித்தால் மட்டுமே முடியும். அது வரை அவைகளையாவது விட்டு வையுங்களேன் மாவு அக்கா...

Vikram said...

//UMA said...
மிருகங்கள் கண்ணாடி போட்டு பார்த்திருப்போமா? அவைகளுக்கு சர்க்கரை, பிரஷர் நோய் உண்டா? . ஏன்?அவைகள் மற்ற மிருகங்களை பார்த்து பொறாமை படுவதில்லை.//

UMA avargale - mirungangallukku mudugu thundulla prechanai varuma?
kekkanumnu thonichhu ketten.....

Raghavendran Madhavan said...

பத்த வச்சிடியே பரட்டை !

Anonymous said...

உமா ஆயா, நீங்க கைக்கு அஞ்சு வாய்க்கு பாத்தா?

Anonymous said...

umavirkku onru puriyavillai.miugangalukku arasiyal kidayadhu.enda mirugamum mudal amaichar aanadhu illai.than peran varai amaichar aakuvathu illai.kalaijarin kannadi, mattra udal ubathaigal yarai parthu poramai pattahal vanthadu.