பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 26, 2009

தமிழுக்குக் கோயில்!


செய்தி இது தான்: திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கோவில் கட்டப்படுகிறது. ( தினமலர், டைம்ஸ் பத்திரிகையில் வந்திருக்கிறது )

தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன், தினைமாவு, கனிகள் வழங்கப்படும் என்றும் விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இசை, பா- புனைதல், இலக்கண வகுப்பு, தமிழ் வழிக்கலைகள் கற்றுத்தரப்படும். ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்திருவிழாவும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலகளாவிய தமிழ் பெருவிழாவும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்கள்.

காலையில் இதை படித்துவிட்டு பா.ராகவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ( அவரும் தமிழர் தானே ) எழுதிய பதிவு இது

தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனை என்ற வரி என்னை யோசிக்க வைத்தது.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஓ, ஔ, ஃ என்ற எழுத்துக்களை ராகமாக பாட போகிறார்களாம். இதைவிட


அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி


என்ற சரஸ்வதி சபதம் படத்தில் வரும் பாடலை பாடலாம். அட்லீஸ்ட் மக்கள் ரசிப்பார்கள்.


கடைசியாக ஒரு சந்தேகம்:

ஏன் தமிழை தமிழன்னை என்று சொல்லுகிறோம் ? ஏன் தமிழ்தந்தை என்று சொல்லுவதில்லை ?


33 Comments:

மானஸ்தன் said...

///கடைசியாக ஒரு சந்தேகம்:

ஏன் தமிழை தமிழன்னை என்று சொல்லுகிறோம் ? ஏன் தமிழ்தந்தை என்று சொல்லுவதில்லை ?////

i will get an appointment for you to meet "THE" தன்மானத் தலைவர், தமிழ்க் காவலர் திரு மு.க.

அவரைக் கேளுங்கள்.

எதற்கும் கையில் கொஞ்சம் பஞ்சு வைத்துக்கொள்ளுங்கள். விரசமாகத் திட்டினால் காதில் வைத்துக்கொள்ள!

மானஸ்தன் said...

///அதை விட்டுவிட்டு அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்றால் பிட் படத்தில் வரும் சவுண்ட் எஃபெக்ட் மாதிரி இருக்கும்.////


வோய் இட்லி,
ஏனய்யா நீயும் மு.க மாதிரி விரசமா எழுதி என்ன மாதிரி "கொழந்தைகள்" மனசைக் கெடுக்கற?
வன்மையாகக் கண்டிக்கிறேன்.

tamilcutter said...

/* அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்றால் பிட் படத்தில் வரும் சவுண்ட் எஃபெக்ட் மாதிரி இருக்கும் */

என்ன கீழ்தரமான விமர்சனம் ?!?!?!

I feel shame that I was a follower of idlyvadai blog. I quit now.

வாழவந்தான் said...

நல்ல விஷயம்தானே அதுக்கு இப்படி ஒரு (பிட் படத்தில் வரும் சவுண்ட் எஃபெக்ட் ) கம்பாரிசன் தேவையா?
மஞ்சா கமன்ட் எழுதி எழுதி உனக்கு மஞ்ச பத்திரிக்கை(x rated) எபக்ட்டுல பதிவு எழுததான் தோணுதோ?

Anonymous said...

yenna "thamizh" , (evan enna keezhtharama kindal paninaalum)anbum porumaiyum udayathu ..
athunala thaan annai nu sollurom..
-Raji

IdlyVadai said...

சில வரிகளை நீக்கிவிட்டேன். நன்றி

Anonymous said...

நாடு, மொழி, ஆறு போன்றவைகளை பெண்ணாக உருவகிப்பது ஒரு மரபுதானே.

கலைக்கோவன் said...

//காலையில் இதை படித்துவிட்டு பா.ராகவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ( அவரும் தமிழர் தானே )//

இது கொஞ்சம் ஒவர்

அப்போ நீர் தமிழர் இல்லையா?

பா. ரெங்கதுரை said...

கண்ணகி சிலைக்கு மாடலாகத் தன் பெண்சிநேகிதியான நடிகை கல்பனா என்கிற பிராமணப் பெண்ணை நிற்கவைத்தார் கருணாநிதி. தமிழன்னைக்கு மாடலாக எந்த நடிகையைப் பிடித்தார்களோ?

ரஜினி ரசிகன் said...

காரைக்குடியில், கம்பன் மணிமண்டபத்தில் தமிழ்த்தாய்க்கு கோவில் இருக்கிறது.

Truth said...

Mother land, Mother tongue appadi thaan. :-)

சந்திரமௌளீஸ்வரன் said...

//ஏன் தமிழை தமிழன்னை என்று சொல்லுகிறோம் ? ஏன் தமிழ்தந்தை என்று சொல்லுவதில்லை //

mother tounge

என்ற சாதாரண விளக்கம் தெரியலையா உங்களுக்கு

நித்யகுமாரன் said...

இங்கே சென்னையில், சோழங்கநல்லூரில் ஒரு பூங்காவில் தமிழன்னைக்கு ஒரு சிலை உண்டு. பாவம் கை கால் உடைபட்டு ஆதரவின்றி அமர்ந்திருக்கிறாள்.

இப்படி அன்னைத்தமிழ் பெயரில் சிலைகளையாவது வைக்காமல் இருக்கலாம்.

நாமே சிலை வைப்போம். பின்பு அதை கிரில் போட்டு பாதுகாப்போம். என்னே தமிழச்சாதி...?

நித்யன்

Anonymous said...

Okay. i am sure they will install four or five charity boxes ( Undiyal) in thetemple. After all should they who installed the deity not eat. Remember Thamizhukku Amudhu ( sappadu) enru peyar!"

Adhu sari, what is Maruthavar going todo. he wil ltry to go one step up and install Tamil Paatti ( mother of Tamil Annai) Koil!!!

Inba said...

கருணாநிதி அவர்கள்
தமிழர்களுக்கு
செய்த பாவங்களுக்கு
பரிகாரம் செய்வதற்காக

முதல்வர் பதவியை
தூக்கிஎறிந்துவிட்டு
இந்த கோயிலில்
இனி
'பூசாரியாக'
பணியாற்ற போவதாக கனவு கண்டேன்

பலிக்குமா???

லவ்டேல் மேடி said...

ஆஹா...!!! அருமை...!! கண்டிப்பா ஒரு விசிட் அடிக்கணும்...!!! ஐயா இட்லி வட கொஞ்சம் எக்ஸ்ட்ரா டீட்டெயில்ஸ் ப்ளீஸ்.....!!!!!!

Baski said...

சூப்பர் ஐடியா! தமிழ் கோயில்.

ஆமா!! இதுக்கு டப்பு யாரு கொடுத்தா ?

யாருயா சொன்னது தமிழ் தந்தை இல்லைன்னு. உங்க அட்ரஸ் கொஞ்சம் குடுங்க. கண்டன தந்தி அனுப்போணும்.

நம்ம மு.க வை மறந்துடீங்களா?

அவர் தான் தமிழ் தந்தை, தமிழ் மாமா, தமிழ் சித்தப்பா, தமிழ் பெரியப்பா, தமிழ் அண்ணன், தமிழ் தம்பி, தமிழ் மகன், தமிழ் பேரன், தமிழ் கொள்ளுபேரன்.

தமிழ் + (*) = மு.க.

அவர் மண்டைய போட்டதும் இந்த கோயிலில் மு.க வுக்கு ஒரு சிலை வைச்சு, அவர் பெயரில் அர்ச்சனை.
இருக்கவே இருகிறார்கள் வாலியும், வைரமுத்துவும். பின்னி பிடல் எடுத்துற மாட்டாங்களா என்ன??

கழக கண்மணிகள் வருசா வருஷம் மாலை போட்டு காவடி எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் மஞ்சள் துண்டு...

Krish said...

நல்ல விஷயம்...

///முதல்வர் பதவியை
தூக்கிஎறிந்துவிட்டு
இந்த கோயிலில்
இனி
'பூசாரியாக'
பணியாற்ற போவதாக கனவு கண்டேன்

பலிக்குமா??? ///

கோவிலுக்கு நல்ல வருமானம் வந்தால் பலிக்கும்.

கிரி said...

இட்லி வடைக்கு இந்த பதிவில் நல்ல திட்டு ..கேர் ஃ புல்லா எழுதுங்க இட்லிவடை ..

அஞ்சா நஞ்சன் said...

tamilcutter-ஐ சமாதானப்படுத்தற வழியைப் பாரும்.

ராம கிருஷ்ணன் said...

தேர்தல் முடிஞ்சு போச்சு. பாமக ஒழிஞ்சு போச்சு. பிஜேபியும் என்ன எழுதியும் ஒன்னும் தேரல . எல்டிடிஇ யையும் ஒழிச்சு ஓரம் கட்டியாச்சு. ரஜினி கமல் படமும் ஏதும் வர மாதிரி தெரியலை. யாரை திட்ட? கருணாநிதியை மட்டும் கடிச்சு கடிச்சு போரடிச்சு போயிடுச்சு. அதான் தமிளு த்தாய் மேல பாயுறோம், கறேகிட்டா இட்டலி வ்வடேய்.....?

Anonymous said...

தமிழுக்கு சாவு மணி அடித்து கல்லறையில் கிடத்திய முக, சமாதி கட்டுவார்.

Anonymous said...

மானஸ்தன் அவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், தயவு செய்து எல்லா பதிவிலும் மு.க வை (பெருசை!!!) இழுக்காதீர்கள், அவர் பெயரை தழிக்கு கோவில் என்ற தலைப்பில் பார்க்கவே எனக்கு எரிச்சலாக உள்ளது. அவரை திட்டி கூட நாம் பேசினால் அது அவருக்கு பெருமை தான்......
என்னை பொருத்த வரை அவர் ஒரு செத்து போன பாம்பு.....

Anonymous said...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமுக்கம் மைதானத்தின் வாசலில் தமிழண்னைக்கு கோவில் உள்ளது.

Anonymous said...

கடவுளை கல் என திட்டியோர்
நம் அருந்தமிழையும்
கல்லாக்கி விடுவரோ!?

யோசிப்பவர் said...

This is totally Rubbish!!!

மானஸ்தன் said...

யோசிப்பவர் said...
This is totally Rubbish!!!

எது? இந்த போஸ்டா? இல்ல கோயில் கட்டற ஐடியா-வா?
தெளிவாச் சொல்லுங்க சாமீ!

அருண்மொழி சார்பாக..... said...

அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவில் ராமருக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள் என்று இன்றைக்கு ஒரு செய்தி படித்தேன். சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது.

ராமரை காட்டிற்கு அனுப்பி, ராவனனுடன் சண்டை போட வைத்து, அதன் பிறகு அவன் பொண்டாட்டியை வீட்டை விட்டு துரத்தி, அவனை சம்புகனை கொல்ல வைத்தாகிவிட்டது. இப்போது எதற்கு இத்தனை பெரிய செலவு?

எனக்குத் ராமன் பிடிக்கும் என்று சொல்வதே அபத்தம். நமக்குத் ராமனை தெரியும். அவ்வளவுதான். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளை தெரிந்திருக்கலாம். அவர்கள் யாமறிந்த கடவுள்களில் என்று விருத்தம் பாடலாம். மற்றபடி சிலை வடித்து, கோயில் கட்டி, ஆறு கால பூஜை செய்து பொங்கல் வைப்பது என்பது அபத்தத்தின் உச்சம். அறியாமையின் விளைவு.

கோயில் விஷயத்தில் இந்தியாவுக்கு வெளியே யாராவது இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஜப்பானியர்களின் மதப்பற்றிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது. அவர்கள் உபயோகிக்கும் மதம், நம்முடையதைக் காட்டிலும் சுத்தமாக இருக்கிறது. நம்மால் நாலு பேர் சேர்ந்தாற்போல் தவறில்லாமல் தேர் இழுக்க, பரிவட்டம் கட்டகூட வராத பாவத்துக்கா கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறார்கள்?

ஒரு ஆன்மிக கருவி என்கிற அளவில் மதத்திற்கு கொடுக்கவேண்டிய நியாயமான கவனத்தைக் கொடுத்துவிட்டுப் போவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். சரி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துச் சரக்கா? ஒழியட்டும், சேது சமுத்திரத்தை நிறுத்தியது போதாது? முடிந்தால் பேச்சிலும் எழுத்திலும் மொழியைச் சிதைக்காமல் அழகாகக் கையாண்டு அதன் ஆயுசை இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் அதிகரிக்க நம்மாலான உதவியைச் செய்யலாம்.

எனக்கென்னவோ இந்த ராமர் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வெறும் கூத்து.

இந்தத் ராமர் கோயில் சார்பில் அடுத்த மதத்தினரை வெட்டுவது, கொல்லுவது எல்லாம் கற்றுத்தரப்போகிறார்களாம். கொஞ்சநஞ்சம் கோயில் பக்கம் வர நினைக்கும் தலைமுறையையும் தலைதெறித்து ஓடச் செய்ய இதனைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் இருக்க முடியுமென்று தோன்றவில்லை.

நாட்டில் இருக்கிற சாமியார்கள் படுத்துகிற பாடு போதாதா? மதம் பிடித்து அடுத்தவர் கோயிலை இடிக்க ஒரு புதுத் தலைமுறை வேண்டுமென்று யார் அழுதது? அனுராதா ரமணன் சொர்னமால்யா என்று இவர்கள் கூத்திகளுடன் கும்மாளமடிக்க கோயில் ஒரு கேடா

இதுதான் எனக்குப் பெரிய தீவிரவாதமாகத் தோன்றுகிறது. யாராவது இந்த அபத்த முயற்சியைத் தடுத்து நிறுத்த முன்வருவார்களா?

நன்றி : http://www.writerpara.com/paper/?p=708

இந்த கட்டுரையை பாராட்டுப்பவர்கள் உங்களது பதிவில் இதை காப்பி செய்து நீங்களும் வெளியிடுமாறு வேண்டுகிறேன்

Anonymous said...

Check the MP list from tamilnadu.

Not yet updated.

btw, who maintains such websites. Give it to some bloggers, they can maintain better.

Anonymous said...

//கண்ணகி சிலைக்கு மாடலாகத் தன் பெண்சிநேகிதியான நடிகை கல்பனா என்கிற பிராமணப் பெண்ணை நிற்கவைத்தார் கருணாநிதி. தமிழன்னைக்கு மாடலாக எந்த நடிகையைப் பிடித்தார்களோ?//
வேற யாரா இருக்கும் நமிதா தான் :)... மு.க ஆட்சியில தமிழன்னை புஷ்டியா இருக்காங்கன்னு காட்ட வேண்டாமா?

Anonymous said...

London matrum Americavile Father "English"kku kovil vaithu ange A B C D E F enru Z varaikkum solli archanai seivathu ulagarinda vishayam. Ethai patri IV kku karuthu kura neram ellai anal Annai tamizukku kovil amaipathu kevalamam...

Tamil Iname vizithukoll. Arindu koll tamil dhrogigalai...

Vaikoo or muka or thika sees your article you might get above archanai...

Erode Nagaraj... said...

கோவில் கட்டுவது பெரிய புண்ணியம் என்பது, பகுத்தறிவுப் பாசறைக் கூட்டத்தின் அடி மன உணர்வு. ஹிந்தி எதிர்ப்பு - ஆங்கிலத்திற்கு ஆப்பு என்று முழங்கியபடியே, தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் - ஹிந்தி பள்ளிக்கு அனுப்பி, அவர்கள் அவற்றை கற்ற பாவம் போகட்டும் என்று தமிழன்னைக்கு கோவில் கட்டுகிறார்கள்….விடுங்கள்…

selvenran said...

barathamatha endru solkirarkal barathamatha-kku purushan yaru...?