பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 25, 2009

பௌர்ணமி

"நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்கள் முன்னால்..." என்ற அறிவிப்போடு வாணி மஹாலில் கே.பாலசந்தரின் பௌர்ணமி நாடகத்தை சக வலைப்பதிவர் ஒருவர் ஓசி டிக்கேட்டில் அழைத்துக்கொண்டு போனார்.

வாணி மஹால் ஒரு பெரிய ஹாலாக மாறியிருந்தது. இவ்வளவு பெரிய ஹால் எந்த பில்டர் இந்த மாதிரி கட்டித் தருகிறார்கள் என்று கேட்கணும். நாடகத்தில் சுவருடன் சேர்ந்து பூத்தொட்டி ஆடும் செட்டை பார்த்த நமக்கு இந்த செட் சினிமாத் தனமாக நல்லா இருந்தது.

ஒரே ஹாலில் முழு நாடகமும் நடக்கிறது. மிருதங்கங்களுக்கு வைப்பது மாதிரி நான்கு மைக் கீழே வைத்திருந்தார்கள். (முன் வரிசையில் வந்திருந்த கமல், கவுத்தமிக்கு தெரிந்திருக்கும் )


ஒரு பௌர்ணமியில் தொடங்கி அடுத்த பௌர்ணமியில் முடிவடையும் கதை. நாடகத்தின் பெயரும், அதில் நடிக்கும் நாயகியின் பெயரும் பௌர்ணமி. ரோஜா சாயல் கதை - "பாகிஸ்தான் தீவிரவாதியை விடுவித்தால் தான், அப்பாவி இந்தியனை(சாப்ட்வேர் என்ஜினியர், பிரேம்சாய்) விடுவிப்போம்" என்கிறது பாக் அரசு. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

சாப்ட்வேர் என்ஜினியரை பிரிந்து மனைவி பௌர்ணமி (ரேணுகா) பதைபதைக்கிறார். மற்றவர்கள் சுமாராக பதைபதைக்கிறார்கள். நாடகத்துக்கு இது போறும் என்று நினைத்துவிட்டர்கள் என்று நினைக்கிறேன். ரேணுகாவின் மாமியார் எப்ப எந்த சீனில் வந்தாலும் யாருக்காவது காப்பி கொடுத்துவிட்டு போய்விடுகிறார். இவர் தான் "எங்கே பிராமணன்" சீரியலில் சமையல் செய்யும் மாமியாகவும் வருகிறார். அந்த சீரியலில் போட்ட காப்பியை இங்கே தருகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

ரேணுகா (வழக்கம் போல்) துடுக்காக வசனம் பேசுகிறார், ஓவர் ஆக்ஷன் என்று கூட சொல்லலாம். எல்லாவற்றையும் கச்சிதமாக செய்கிறார் - பாலசந்தரின் பழைய புதுமை பெண் !

சாப்ட்வேர் என்ஜினியரின் தம்பியாக வரும் சுந்தர் எங்கோ பார்த்த மாதிரி ஒரு கேரக்டர். கையை நீட்டி நீட்டி ரொம்ப சத்தம் போடுகிறார், அடிக்கடி மீடியாவிற்கு போவேன் என்று அரசு அதிகாரிகளிடம் பூச்சாண்டி காண்பிக்கிறார். பாத்திமா பாபுவிற்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ரேணுகாவிற்கு பிறகு மனதில் நிற்பவர் இவரே.

சாப்ட்வேர் என்ஜினியர் தங்கையாக பாமா (காவ்யா, அதாங்க பாம்பு மாதிரி பொட்டு வைத்துக்கொண்டு வருவாரே அவரேதான்) எப்ப பார்த்தாலும் கையில் செல்போனுடன் இருக்கிறார். - தற்காலத்து அல்ட்ரா மாடர்ன் பெண்ணாம். தன் மாமியாராக வரப்போகும் பூங்கிழவி சாரி பூங்குழலி ( ஃபாத்திமா பாபு ) எப்போது வீட்டுக்கு வரும் போதும், காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். எந்த வீட்டீலும் இது மாதிரி நடக்காததால் எல்லோரும் சிரிக்கிறார்கள். ஃபாத்திமா பாபு எல்லா சீன்களிலும் விதவிதமாக டிரஸ் செய்து வருகிறார். எப்படி சீக்கிரம் டிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இவர் பாடம் நடத்தலாம். பாகிஸ்தானில் ரேணுகாவின் கணவர் சித்திரவதை அனுபவித்துக்கொண்டு இருக்க இவர்கள் இங்கே பதட்டப்படாமல் காலில் விழுந்து காமெடி செய்வது நல்ல தமாஷ்.

நாடகத்தில் அடிக்கடி ஹிந்தி பேசி, Waist Coat அணிந்து வந்தால் ... ? டெல்லியிருந்து வருகிறார் என்று அர்த்தம். அப்படி வருபவர் தான் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் சந்திரகாந்த் ( பூவிலங்கு மோகன் ) டெல்லியில் நல்ல செல்வாக்கு உடைய இவர் பிரதமருடன் பெளர்ணமி பேச ஏற்பாடு செய்கிறார்.

கடைசியில் பெளர்ணமி பிரதமரிடம் "கணவருடன் நாடே முக்கியம், இந்த exchange offer வேண்டாம்" என்று சொல்லிவிடுகிறார். ஏதாவது நல்லது நடக்காதா என்று ஏங்கி காத்துக்கொண்டிருக்கிறார் பௌர்ணமி.

ஜெய்ஹிந்த்!


பௌர்ணமி 'பால'சந்திரனாக இருக்கிறது.

( வாணி மஹாலில் உள்ளே நுழையும் போது, ஃபோட்டோ எல்லாம் எடுக்க கூடாது என்று கராராக டிக்கெட் கொடுப்பவர் சொன்னார். அதையும் மீறி எடுத்த ஃபோட்டோக்கள் இவை )

16 Comments:

Anonymous said...

யோவ் இட்லி!

"அமாவாசை" அன்னிக்கு (நேற்று) "ஓசில" ஒய்யாரம் பண்ணிடு "பௌர்ணமி" பாத்துடீர்!

ஒங்க அராஜகத்துக்கு எல்லையே இல்லையா? (போட்டோ - மஞ்சள் கமெண்ட்)

கொஞ்சம் அடங்குமய்யா! :-D

Litmuszine said...

கதையைத்தான் சுட்டாங்கன்னு பார்த்தா, ட்ராமாவுக்கான backdrop ஐயும் சுட்டுடாங்கபோல.
"Nokia XpressMusic" மாடல் போன்களுக்கு வைத்த ad பேனர் ஒன்றை தூக்கிவந்து இந்த ட்ராமாவுக்கு ஒரு backdrop ஆ use பண்ணிகிட்டாங்களா? !!

Truth said...

//வாணி மஹாலில் உள்ளே நுழையும் போது, ஃபோட்டோ எல்லாம் எடுக்க கூடாது என்று கராராக டிக்கெட் கொடுப்பவர் சொன்னார். அதையும் மீறி எடுத்த ஃபோட்டோக்கள் இவை

idha sollradhuku vekkama illa?

SathyaRam said...

i pity that you have wasted your sunday evening with a play from a director who has lost everything or if i correct it got exposed after Ananthu's death.

even in Osi ticket it is utter waste.

Anonymous said...

////Truth said...
idha sollradhuku vekkama illa?
////

@Truth
உண்மை. "இல்லை". :-D

Erode Nagaraj... said...

ரொம்ப நல்லது.

இத்தனை வருஷமா, சினிமா ஒரு விஷுவல் மீடியா அப்படீன்னு ஒரு தெளிவான ஞானம் இல்லாம, நாடகங்களை எல்லாம் ஷூட் பண்ணி, பாக்கறவன் முட்டாள் - எடுத்திருக்கற நாம "நெம்ப" புத்திசாலின்னு, ஓவரா "விளக்கி" சீன எல்லாம் வெச்சு, சுமாரா படம் எடுத்து, பெரிய பில்ட் அப் குடுத்து, "இயக்குனர் சிகரம்" - "A Film by K.Balachander" இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணாம திருந்தி, பழையபடி நாடகத்துக்குப் போன தெளிவைபாராட்டறோம்...

Erode Nagaraj... said...

கஷ்டாவதானி டி.ராஜேந்தர், தன்னோட பாட்டுக்கெல்லாம் "நடனம்" அமைச்சிருப்பார். அதுல, அபிநயத்துக்கு பதிலா, விளக்கி நடிச்சே இருப்பார். இத, பசங்க எல்லாம் கிண்டல் பண்ணி, "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு-ன்னு" கான்செப்ட விட்டுட்டு, லிட்டரலா வார்த்தைகளுக்கே டான்ஸ் ஆடுவாங்க. இத படம் பூரா, பாக்கரவுனுக்க்த் தெரியாத மாதிரி பண்ணீருப்பார்லாபச்சந்தர்.

லவ்டேல் மேடி said...

ஓய் இட்லி வட ......


உன்னைய மாதிரி ஊருக்கு ஒரு ஆளு இருந்த போதும்யா.....


நாடகம் பாத்ததே ஓசியில .... இதுல கதைய வேற நீ வெளியில ஓப்பன் பண்ணுற....


உன்னைய பவுர்ணமியன்னைக்கு சங்கிலியில கட்டிபோட்டுதான்யா ட்ரீட்மென்ட் குடுக்கணும்.......

Vikram said...

good initiative by KB to revive stage plays in a sense.

".....பௌர்ணமி நாடகத்தை சக வலைப்பதிவர் ஒருவர் ஓசி டிக்கேட்டில் அழைத்துக்கொண்டு போனார்."

I heard that this osi ticket kallacharam was one of the main reasons (the other bigger reason being the growth of "cinema") for the downfall of stage plays!

Krish said...

நல்ல முயற்சி. தொடரட்டும்.

Anonymous said...

http://www.nowpublic.com/world/ltte-appoints-padmanadan-head-international-relations-updat

Anonymous said...

//who has lost everything or if i correct it got exposed after Ananthu's death.//

அப்படி ஒரேயடியா சொல்லிட முடியாது. அனந்துவின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது என்றாலும் பாலசந்தரின் தனிப்பட்ட வெற்றிகள் நிறைய இருந்தன. நீர்க்குமிழி, எதிரிநீச்சல், மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் மாதிரி நாடகங்கள் கொடுத்தவர்தான் பாலசந்தர். இன்றைக்கு மொக்கையாயிட்டார்.

அனந்து தனியாக கொடுத்த ‘சிகரம்’ வெற்றியடையவேயில்லையே.

புதுசா எதுவும் யோசிக்க முடியாம வர்த்தக சுழலுக்குள்ள சிக்கிகிட்டு வெறும் டிவி சீரியல் தயாரிப்பாளரா மொக்கையா போயிட்டார் பாலசந்தர்.

ஒரு படைப்பாளி எப்பவும் புதுசா சிந்திக்கனும். முடியலைன்னா படைப்பிலிருந்து ஒதுங்கிக்கனும். அவர் ஒரு ரிடையர்ட் சகாப்தம்.

ரா.கிரிதரன் said...

போலி sensibilityக்கு பேர் போனவரின் நாடகம். இப்போது பார்த்தால் இவரின் படம்/நாடகம் ஒட்டாமலே இருக்கிறது.

ஏன் என்று தெரியவில்லை.

Rajesh said...

i have the experience of sitting in crazy mohan and sve sekhar's stage shows. let me tell you. it is quite horrifying. CHOCOLATE KRISHNA was nothing more than reciting dialogues. NO proper stage set. no proper lighting.people come then and there. vomit the memorized dialogues and leave the stage.the quality of stage drama's have come down to such drastic measures. i hear marati theater shows are rocking out there. i saw pournami. as an avid theater show lover, i felt it stood apart from the contempory theater performances. i hope people like KB can bring back the lost glory of tamil theater shows.

Anonymous said...

http://churumuri.wordpress.com/2009/05/25/as-tom-said-price-of-freedom-is-eternal-vigilance/

The saga surrounding the inclusion of various members of the Karunanidhi family in the Manmohan Singh council of ministers continues. As per current indications, MK’s eldest son M.K. Azhagiri and grand-nephew Dayanidhi Maran are to be given cabinet berths.

And, as per current indications, his daughter Kanimozhi has opted to sit out.

Presumably, the poet-cum-sub-editor is miffed at the precedence to Maran but she is not saying it. But the curious thing is the lady’s Rajya Sabha webpage. It doesn’t throw too much light on her educational qualifications, profession, positions held, books published, countries visited, and sundry other activities.

But on one key question, it is dead sure: Yes, the 1968-born Kanimozhi is a “freedom fighter”.

http://en.wikipedia.org/wiki/Kanimozhi

http://www.expressindia.com/latest-news/Miffed-Kanimozhi-may-stay-out-of-govt/465427/

http://kanimozhi.org/

http://churumuri.wordpress.com/2007/06/04/how-many-poems-can-fetch-a-poet-rs-85-crore/

Gane said...

Piracy