பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 24, 2009

சி.ஐ.டி. செயற்குழுக்கூட்டம்

சர்ச்சைக்குரிய டி.ஆர். பாலு, ஆ. ராசா, ஆகியோரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங் முன் வந்துள்ள போதிலும், அவர்களுக்காக கருணாநிதி கேட்கும் இலாக்காக்களை ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இதனால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேர்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசில் கடந்த முறை வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற்றிருந்த தி.மு.க, இந்தமுறையும் அதே இலாக்காக்களை தரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை நிர்ப்பந்தம் செய்து வருகிறது. ஆனால், இம்முறை மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதால், கருணாநிதியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் மேலிடம் பணியவில்லை என கூறப்படுகிறது. வளம் கொழிக்கும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை, தொலைத் தொடர்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் ஆகிய இலாக்காக்களை தி.மு.க. கோருவதாகவும், அதற்கு காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால், அவர்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், கருணாநிதியின் நிர்பந்தம் காரணமாகவே அவர்களை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள பிரதமர் திரு.மன்மோகன் சிங் தற்போது முன்வந்துள்ளதாவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை பணிகளில் காட்டிய மெத்தனம், லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதில் அலட்சியம் போன்ற காரணங்களால் டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் தரைவழிப்போக்குவரத்து மற்றும் கப்பல் துறையை ஒதுக்கவும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா சிக்கியதால் அவருக்கும் முன்னர் வகித்த இலாகாவை ஒதுக்கவும் பிரதமர் விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையை தி.மு.க.வுக்கு வழங்க பிரதமர் முன் வந்தபோதிலும், ராசாவுக்கு அந்த துறை வழங்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் அறிவித்தபடி, தி.மு.க., செயற்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டில் நேற்று காலை முதல் இரவு முழுவதும் சிஐடி நகர் வீட்டில் கருணாநிதியும், கட்சியின் முக்கிய தலைவர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கு என்ன என்று விவாதித்தகாக தெரிகிறது.

டி.ஆர்.பாலு, ராசா, தயாநிதி மாறன் மற்றும் அழகிரி என்று நான்கு பேர் இருக்க மூன்று மந்திரி பதவிகளை எப்படி பங்கு போடலாம் என்று கருணாநிது குழம்பி போய் உள்ளார் என்று தெரிகிறது.

குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி தான் கொடுக்க முடியும் என்று கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது ஆனால் அந்த ஒருவர் யார் என்பது தான் பிரச்சனை.

அழகிரி, தயாநிதி இருவரும் தங்களுக்கு கேபினட் தான் வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அழகிரிக்கு கேபினட் அந்தஸ்து வழங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறுவதாக தெரிகிறது.

கருணாநிதியின் பிரச்சனைனை தீர்க்க தனி மந்திரி பதவி ஒன்றை உருவாக்கலாமா என்று மன்மோகன் சிங் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது.

25 Comments:

Anonymous said...

நான் நேத்திக்கே சொன்னேன். இன்னும் ரெண்டு நாளுல இந்த ஆளு "அந்தர் பல்டி" அடிச்சு அமைச்சரவைல சேர முடிவு செஞ்சுடுவார்னு.

இந்த முறை மு.க.வின் கெடுபிடிகள்/ நிபந்தனைகள் டெல்லியில் செல்லுபடியாகாது.

எனவே கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருப்பார். அதுதான் அவருக்கும், குடும்பதிற்கும், தமிழக ஆட்சிக்கும் நல்லது என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

இதன் பின் விளைவாக "கடைக்குட்டி", "அழுக்கு கிரி", "சங்கமக்கா", "பாலம்", "நடைவண்டி", இவங்கள்ல யாராவது "revolt" செய்து கொஞ்சம் "படம்" காட்டினால் நன்றாக இருக்கும்.

எல்லாரும் கத்துக்க வேண்டிய நல்ல விஷயம் "முகவின் குடும்பப் பாசம்", வாழ்க.

Anonymous said...

///குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி தான் கொடுக்க முடியும் என்று கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது ஆனால் அந்த ஒருவர் யார் என்பது தான் பிரச்சனை.///

இது பிரச்சினையே இல்லை. அந்த படத்த பாத்தா தெளிவா இருக்கு. மூணு குடும்பம், மூணு பதவி. simple.

Anonymous said...

சில பின் கேள்விகள்:

(1) ஏன் இந்தக் கூட்டம் சி.ஐ.டி.நகரில் கூடியது? ஏன் கோபாலபுரத்தில் கூடவில்லை?

(2) இட்லி வடை மஞ்சள் கமெண்ட் போல ஏன் காபினெட் Minister for "rowdyism" or "gundaism" உருவாக்கக் கூடாது?

(3)"வயத்து பேதிக்காரன்" அடிக்கடி டாய்லெட் போறதுபோல ஏன் மு.க. நெனச்சு நெனச்சு அறிக்கை விடறார்?

(4) ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

(5) "குருமா" சோகமாகக் குடுத்த அறிக்கையின் காரணம் என்ன? (பார்க்க : தினமலர்)

M Arunachalam said...

//குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி தான் கொடுக்க முடியும் என்று கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது ஆனால் அந்த ஒருவர் யார் என்பது தான் பிரச்சனை.//

Its quite simple. குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி தான் கொடுக்க முடியும் means, Dayalu familykku 1 Ministry, Rajathi familykku 1 Ministry and Moran familykku 1 ministry.

Matter over.

Aamaam, what to give for T.R.BINAAMILU ?

Anonymous said...

North Indian media's are making fun of our TN family politics. Dr.KK's ideology is mainly against dynasty politics , so sad. Its high time he shud get rid of politics and start sending telegrams. He cud hav asked for External Affairs :( to save his face.

IdlyVadai said...

கடைசி தகவல் -

டி.ஆர். பாலு - துணை சபாநாயகர்
அழகிரி - கெமிக்கல் மற்றும் உரத்துறை
தயாநிதி - ஜவளித்துறை
ராஜா - தொலைத் தொடர்பு மற்றும் தலவல் தொழில்நுட்பம்
கனிமொழி - மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சர் ( தனிப் பொறுப்பு )

Anonymous said...

going by this logic mu.ka. muthu or his 'golden voice' son will get minister as they also belong to a family...... god save TN

Anonymous said...

காங்கிரஸ்: இந்த முறை ஊழல் செய்பவர்கள் வேண்டாம். 'நல்ல'குடும்பத்தை சேர்ந்த கொலைப்பழியுள்ள ஆட்கள் போதும்.

காங்கிரஸுக்கும் முதுகெலும்பில்லை, கொடுப்பதை கொடு என்று ஐம்பது கோடி செலவு செய்ததை மீட்க வேண்டும் என்று பிச்சையெடுக்கும் இவர்களுக்கும் வெட்கமில்லை. ஊழல்வாதி என்று துப்பியபிறகும் துடைத்துக்கொண்டு கொடுத்த பதவியை ஏற்பார்கள்.

வாழ்க தமிழினம்.

Geeyar said...

கருணாநிதியை மட்டும் தாக்குகின்றீர்கள். பாராளுமன்ற தேர்தலில் தோற்று பின்பக்கம் வழியாக(200 கோடி?) சென்று இன்று கேபினட் அமைச்சர் பதவியில் சிறிதும் வெட்கமின்றி இருக்கும் ப.சிதம்பரம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

Anonymous said...

IdlyVadai said...
கடைசி தகவல் -

டி.ஆர். பாலு - துணை சபாநாயகர்
அழகிரி - கெமிக்கல் மற்றும் உரத்துறை
தயாநிதி - ஜவளித்துறை
ராஜா - தொலைத் தொடர்பு மற்றும் தலவல் தொழில்நுட்பம்
கனிமொழி - மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சர் ( தனிப் பொறுப்பு

மற்றும் ஒன்று மு.கருணாநிதி - (தன்) குடும்ப நலத்துறை அமைச்சர்.

இந்த பதவிக்கு தான் காங்கிரஸ்க்கும் இவருக்கும் மிகுந்த போட்டி எற்பட்டுதம் finaly சோனியா தன் தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

வலைஞன் said...

//கடைசி தகவல் -

டி.ஆர். பாலு - துணை சபாநாயகர்
அழகிரி - கெமிக்கல் மற்றும் உரத்துறை
தயாநிதி - ஜவளித்துறை
ராஜா - தொலைத் தொடர்பு மற்றும் தலவல் தொழில்நுட்பம்
கனிமொழி - மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சர் ( தனிப் பொறுப்பு )//

இது உண்மை என்றால்,தி மு க விற்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் இவ்வளவு பயந்தாங்கொளி கட்சியா??? வெட்கம் வெட்கம்

Anonymous said...

ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவர் தனது மகன்கள் / மகள்கள் உரிய அந்தஸ்திலும்
செல்வாக்கிலும் தொழில் முறையில் நல்ல வேலையுடனும் இருக்கவேண்டும் என
எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

ஒரு டாக்டரும், வக்கீலும், சார்டர்டு அகெளன்டன்ட், ஏன் ! ஒரு நடிகரும் கூட‌
தத்தம் மகன்களை, மகள்களை த்ததம் தொழிலிலேயே நிலை நிறுத்து அவர்களையும்
வாழ்க்கையில் முன்னேறிச்செல்ல தான் ஒரு ஏணியாக இருக்கிறார்களே ! அது சரி எனச்
சொல்பவர்கள் அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு என ஏன் நினைக்கவேண்டும் ?

அவையத்து முந்தி இருப்பச்செயல் தானே தந்தை தம் மகற்காற்றும் உதவி. வள்ளுவனின்
கூற்றே இது தானே.

இருக்கட்டும். யார் யாருக்கு பதவி கேட்கிறார்களோ அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
வந்தவர்கள்தானே ? ஏதேனும் அதில் குறை இருப்பின் அது மற்ற திமுக எம்.பி.களுக்குத்தானே
இருக்கவேண்டும்.! கட்சியைச் சாராத மற்றவர்களுக்கு இதில் என்ன குறை இருக்க முடியும் ?

இது காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கு இடையே இருக்கும் பிரச்னை. அவர்கள் சுமூகமாக
தீர்த்துக்கொள்வார்கள்.

Raj said...

அனானீ சொல்வது correct. இது அவர்கள் பிரச்சனை. அவர்களாகவே தீர்த்து கொள்வார்கள். இதுக்கு நடுல நமக்கு கொஞ்சம் "timepass' கொடுக்கறாங்க. அவ்ளோ தான் matter.

வாழ்க ஜனநாயகம் !

Anonymous said...

Since Mu.Ka. may get his "share" in the Indian Cabinet, it is time the State Congress SHOULD also ask for their members be made Tamil Nadu State Ministers. Fair and Square.

Anonymous said...

/// Anonymous said...///
//ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவர் தனது மகன்கள் / மகள்கள் உரிய அந்தஸ்திலும்
செல்வாக்கிலும் தொழில் முறையில் நல்ல வேலையுடனும் இருக்கவேண்டும் என
எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று தோன்றவில்லை.//

குடும்பத் தலைவன் குடும்பத்துக்கு மட்டும்தான். இந்த ஆள் ஒரு பெரிய கட்சியின் தலைவன். அதனால் குடும்பத்தை மட்டும் கவனித்தால் எல்லாரும் ஏசத்தான் செய்வார்கள்..விட்டால் நாற்பது தொகுதிக்கும் குடும்ப வாரிசுகளை வரிசையாக நிறுத்தி, திருட்டுத்தனமாக வெற்றிபெறச் செய்து எல்லாருக்கும் "மின்சாரம், கப்பல், ரயில், ரோடு, நிலக்கரி, சுரங்கம், தொலைத்தொடர்பு என்று எல்லாத் துறையையும் கேட்பார் - மொத்தமாக அடிக்க.

மக்கள் எல்லாரும் "வாயில் விரல்" வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்து அடுத்த தேர்தலிலும் அதே "விரலால்" ஓட்டும் போடுவார்கள் (கொடுப்பதை வாங்கிக்கொண்டு).

இந்த பின்னூட்டம் போட்ட அனானிக்கு ஒரு செய்தி. உங்களைப் போல இருப்பவர்கள் இருக்கும் வரை இந்த "மாதிரி" தலைவர்களின் பாடு கொண்டாட்டம்தான்!

வாழ்க (பண)(ஜன)நாயகம்.


பின் குறிப்பு:

இந்த எழுத்து நடை திரு/திருமதி/செல்வி உமா போன்று உள்ளது. இதை அவர் அனானி என்ற பெயரில் போட்டு இருந்தால், அவருக்கு ஒரு விண்ணப்பம்.

உங்கள் கருத்துகளை தைரியமாக எழுதுங்கள் - உங்கள் பெயரிலேயே. கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு. இருந்தாலும், "நல்ல கருத்துக்கள்" வந்தால் பலரும் சந்தோஷப்படுவர், நான் உள்பட.

ரஜினி ரசிகன் said...

அன்புள்ள பெயரிலியே, உங்களுக்காக உதாரணத்தை தேடாதீர்கள்! அல்லது மாற்றாதீர்கள்!

ஒரு முரடன் ஒரு பெண்ணை கர்ப்பழித்து விடுகிறார், பிறகு அதே பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இது நடந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது, இப்போது இவர்கல்லுக்கு 26 வயதில் ஒரு ஆண் பிள்ளையும், 24 வயதில் ஓர் பெண்ணும் இருகிறார்கள், இப்ப சொல்லுங்க இவுங்க ரெண்டு பிள்ளைகளும் அப்பாவின் வழியை பின்பற்ற வேண்டுமா?

paarvai said...

ஹாஹா...ரஜினி ரசிகரே.....சும்மா அதிருதில்ல உங்க கருத்து.....பெயருக்கேற்ற மாதிரியே இருக்கு ....கலக்கல்.
இதற்கு பெயரிலி என்ன சொல்லப் போகிறார்

Anonymous said...

இட்லி வடை அய்யா,

போட்டது தான் போட்டாங்க மஞ்ச துண்டு அய்யாவின் முழுமையான ஃபாமிலி ட்ரீ போட்டிருக்கக் கூடாதா?நார்த் இந்தியர்கள் அசந்து போயிருப்பங்க இல்லை?ஆனானப் பட்ட லல்லு கூட மஞ்ச துண்டுக்கு சலாம் போட்டிருக்கும் .திராவிட கும்பலின் ஊழல் மற்றூம்,மனைவி, மக்கள் பெருக்கும் திறம் அறிந்து பார் வியந்திருக்கும் அல்லவா.

UMA said...

//// நான் நேத்திக்கே சொன்னேன். இன்னும் ரெண்டு நாளுல இந்த ஆளு "அந்தர் பல்டி" அடிச்சு அமைச்சரவைல சேர முடிவு செஞ்சுடுவார்னு.////

கருணாநிதி பற்றி இப்போது தான் தெரிந்ததா? ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. . கருணாநிதி செய்வது சரிதான். தமிழ் நாட்டுக்கு அதிக மந்திரிகள் தேவைதான்.அப்போது தான் தமிழ் நாட்டுக்கு நிறைய திட்டங்கள் கொண்டுவர முடியும். யாருக்கு மந்திரி என்பது தி.மு.க தலைவருக்கும் ,தி.மு.க தொண்டருக்கும் ஒற்றுமை இருந்தால் போதும். தி.மு.க வுக்கு ஓட்டு போடதவர்களின் கிண்டல்களுக்கு எல்லாம் கவலைப்பட முடியாது.

Jeeva said...

சட்டசபையில் தமிழ்நாட்டில் இருக்கும் உங்களைப் பிரதிநிதிப் படுத்துபவர்களைத் தான் இப்படி வெட்கம் கெட்டுப் போய் விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். நூறு கோடி ஊழல் செய்தாலும் குடும்ப அரசியல் செய்தாலும் ஊழலிலேயே ஊறிப் போனாலும் அவர்களையே தான் திரும்பத் திரும்ப தேர்ந்தெடுக்கிறீர்கள். ஏன் எத்தனை பேர் சுயேட்சையாக நின்றார்கள்.....இவர்களுக்கு பூச்சாண்டி காட்டுவதற்காகவாவது அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்டு இருக்கலாமே!! ஏதோ உங்களூக்கும் இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் சம்பந்தமே இல்லாதது போல இங்கு வந்து வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்!!!!

அஞ்சா நஞ்சன் said...

//ஒரு டாக்டரும், வக்கீலும், சார்டர்டு அகெளன்டன்ட், ஏன் ! ஒரு நடிகரும் கூட‌
தத்தம் மகன்களை, மகள்களை த்ததம் தொழிலிலேயே நிலை நிறுத்து அவர்களையும்
வாழ்க்கையில் முன்னேறிச்செல்ல தான் ஒரு ஏணியாக இருக்கிறார்களே ! அது சரி எனச்
சொல்பவர்கள் அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு என ஏன் நினைக்கவேண்டும் ?//

குடும்பமும் நாடும் ஒன்றா? வியாபாரமும் அரசியலும் ஒன்றா?

ரா.கிரிஷ் said...

தன் குடும்பத்திற்கு மட்டும் பதவிகளை கேட்டு பெறுவதில் கலைஞரை மிஞ்ச யாருமில்லை என்பதை இன்னொரு முறை நிருபித்துள்ளார்.

Anonymous said...

Thamilanin maanathai vittru thinpavar ennkal MU.KA.

Anonymous said...

Thamilanin maanaththai vittru thann kudumpaththukkaka thinpavar ennkal MU.KA.

UMA said...

DMK being sullied by a biased media-by Nakkeeran Gopal

The Entire argument of the Dravida Munnetra Kazhagam’s (DMK) image being sullied post-elections, in the controversy over ministerial berths at the Centre, is cooked up by a section of the media. This section, including several media houses in north India, predicted a clear victory for the All-India Anna Dravida Munnetra Kazhagam-led front in the Lok Sabha elections.

When the DMK-led front upset their predictions, they went on a rampage against the DMK in the DMK-Congress squabble for ministerial berths. Bringing blood relatives into politics has become quite common — from neighbouring Kerala to distant Kashmir. Why single out the DMK?

This shows the hatred of a section of the media towards the DMK. There are certain forces in the country which want to create an image of the AIADMK supremo J. Jayalalithaa as a dominant and invincible political force in Tamil Nadu.

DMK treasurer M.K. Stalin may be the son of DMK chief M. Karunanidhi, but his political journey started in the 1970s. He was arrested under the Maintenance of Internal Security Act (MISA) during the Emergency. He climbed up the party hierarchy step-by-step and proved himself a worthy leader.

The DMK’s Rajya Sabha MP Kanimozhi happens to be the daughter of the DMK chief. But she was in public life as an activist and poet for quite a long time before taking the political plunge. She opted out of the race for a minister’s post, putting party’s interests first. She has also proved herself as a party worker. The DMK’s south zone organising secretary and chief minister’s son M.K. Azhagiri has also grown in the party in stages. He proved his poll management abilities by helping the DMK win four Assembly constituencies during byelections. He also helped the DMK win nine out of the 10 southern Tamil Nadu Lok Sabha constituencies in the Lok Sabha polls.

The idea that the DMK’s image has taken a beating is born out of anger towards the grand old Dravidian party.

People who claim that the DMK’s image has been dented by the family drama are those who expected the Ms Jayalalithaa-led AIADMK front to sweep the elections. When their myth was shattered by the grassroot-level support of the DMK, they waited for an opportunity to sully the party’s image. The squabble between the Congress and the DMK over portfolios and ministerial berths was a shot in the arm for them.

Nakkeeran Gopal is editor of Nakkeeran, a popular bi-weekly magazine in Tamil