பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 19, 2009

வடக்கு வாழ்கிறது - தெற்கு தேறுகிறது !

"கடந்த மே திங்கள் பத்தாம் நாள் சென்னை தீவுத்திடலில் தியாகத்திருவிளக்கு சோனியா காந்தியுடன் நான் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில், "முன்பெல்லாம் வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது'' என்றிருந்த நிலை மாறி- இங்குள்ள அரசும், இந்திய மத்திய அரசும் இணக்கமான நிலை பெற்றிருப்பதால் இப்போது "வடக்கு வாழ்கிறது- தெற்கு தேறுகிறது" என்ற சிறப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான பட்டியலை விவரித்தேன்" - கலைஞர் அறிக்கை

தென்மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் தி.மு.க., வென்றுள்ளதால் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக அழகிரி பொறுப்பேற்க உள்ளார். - செய்தி.

52 Comments:

UMA said...

சுதந்திர இந்தியாவில் இந்த 5 வருடங்களில் தான் தமிழ் நாட்டுக்கு அதிக பணம் ஒதுக்கி மத்திய அரசு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தி வருகின்றது.

தூத்துக்குடி தமிழன் said...

பூமில அடிச்சது போதாதுன்னு இனி கடலலையும் அடிக்க போரைங்கப்பா ...........

மானஸ்தன் said...

///வடக்கு வாழ்கிறது - தெற்கு தேறுகிறது///
ஆமாம். மதுரை தெற்கேதான் இருக்கு.


தெரியாமத்தான் கேக்கறேன், தியாகத்திருவிளக்கு அப்டின்ன என்ன?

பதவி ஆசைல எப்டி எல்லாம் பேசுது மு-க-நாக்கு (நாக்கமுக்க)!!

வெட்கக்கேடு.

cho visiri said...

Vellippani Malaiyin Meedhulaavuoom,
Maelaikkadal muzhudhum
Kappal Viduvoom

Ahagum irukkirathu and Malaiyum irukkirathu.
(T.R)Paalaiththan kaetkavendum.

லவ்டேல் மேடி said...

எப்படியோ.... நம்ம தமிழருக்கு கிடைத்தால் போதும்......! டி.ஆர் . பாலுவை போல் இவரும் தமிழக சாலைகளை சீர் படுத்தினால்.. விரைவில் தென் மண்டல அதிபர் தமிழக மக்களின் மனதில் நீகா இடம் பிடித்து விடுவார்......!!!!!


அதே போல் ... தகவல் தொழில்நுட்ப்பத் துறை ... தயாநிதிக்கு கொடுத்தால்... புதிய திட்டம் போடாவிட்டாலும்.... பழைய நிறைவேற்றப் படாத நல்ல.... நல்ல... திட்டங்களை தூசு தட்டி மெருகேற்றுவார்....... !!!

Inba said...

வடக்கு (மு.க.ஸ்டாலின், கனிமொழி,மாறன் கோஷ்டி)
வாழ்கிறது

தெற்கு (மு.க.அழகிரி, ரித்திஷ்(?))
தேறுகிறது

lalitha said...

சேது சமுத்திர திட்டம் இனி அண்ணன் பையில

டன்மானடமிழன் said...

/// UMA said...
சுதந்திர இந்தியாவில் இந்த 5 வருடங்களில் தான் தமிழ் நாட்டுக்கு அதிக பணம் ஒதுக்கி மத்திய அரசு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தி வருகின்றது.///

1. உமா உண்மையை பேசனும்....அது இந்த ஜென்மத்துல நடக்காது.(திராவிட அகராதியில் இல்லாத ஒரே ஒரு வார்த்தை உண்மை)

2.
உமாவுடைய பின்னுட்டத்தை வெளியிடக்கூடாது. இட்லிவடையின் நடுநிலை அப்படி செய்யாது.(ஏன்னா கண்ண மூடிகிட்டு தராசில் எடை போடும் ஒரு நீதிதேவன்தான் இட்லிவடை)

3.
இனி எந்த பதிவின் பின்னுட்டத்தையும் படிக்ககூடாது.

4.
ஒவ்வொரு பதிவிலும் Red லைட் வைத்துவிடவும் Redலைட் எறிந்தால் உமா In நினைத்து நாங்க turn off பண்ணிடறோம்.

4 நடக்கலைனா
3 நடக்கும்

மானஸ்தன் said...

///சுதந்திர இந்தியாவில் இந்த 5 வருடங்களில் தான் தமிழ் நாட்டுக்கு அதிக பணம் ஒதுக்கி மத்திய அரசு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தி வருகின்றது//.

கேடுகெட்ட மு.க. கூட்டம் கடந்த ஐந்து வருடங்களில் அடித்த கொள்ளை எவ்வளவு?
(1) நடை வண்டி மூலம் வந்த அறுபதாயிரம் கோடி spectrum பணம் எங்கே?

(2) பாலங்கள் மூலமும், சேது சமுத்ரம் மூலமும் "கப்பல்" கொள்ளைக்காரன் அடித்த பணம் எங்கே?

(3) இலவசம் - இலவசம் என்று இந்த "கழக" "சவங்கள்" நம் வரிப் பணத்தில் இருந்து ஒரு சிலருக்கு மட்டும் குடுத்த "தொல்லைக்கட்சிப் பொட்டி" மூலம் வட்டமும், மாவட்டமும், கழக உடன் பிறக்காத பிறப்புகளும் அடித்த பணம் எங்கே?

(4) ஐம்பது ரூபாய்க்கு "ஒரு மாசத்திற்கான" பொருட்கள் என்று ரேஷன் கடைகள் மூலம் அடித்த கொள்ளைப் பணம் எங்கே?
ரேஷன் அரிசி கடத்தல் மூலம் கிடைத்த பணம் எங்கே?

(5)அரசு கேபிள் டிவி என்று சொல்லி அதற்கு ஒரு இருநூறு கோடி ருபாய் ஒதுக்கி, கடைசியில் "கண்கள் பணித்து" இதயம் இனித்து" மொத்தமாக ஊத்தி மூடியதில் சுருட்டிய பணம் எங்கே?

ஐம்பதுக்கும் நூறுக்கும் ஓட்டுப் போடும் மக்கள் இருக்கும் வரை இந்த நாட்டை கடவுள் நினைத்தாலும் காப்பற்ற முடியாது.


உமா அவர்களே. உங்களுக்கு ஒரு விண்ணப்பம்.
தயவு செய்து தமிழ் நாட்டு அரசியல் வியாதிகளை - குறிப்பாக நாட்டை மொத்தமாக குட்டிச்சுவராக்கிய மு.க. மற்றும் பச்சையம்மா (ஜெ) இவர்களுக்கு "ஜால்ரா" அடித்து வக்காலத்து வாங்குவதை இனியாவது நிறுத்துங்கள்.

Anonymous said...

உமா அக்கா எங்க அந்த நிதியெல்லாம்?

Erode Nagaraj... said...

வடக்கு வழங்குகிறது என்று சொன்னதாக ஞாபகம்.

க்வோட்ரோக்கியின் சொந்தமே வருக!
கோட்டாவை ஒதுக்கித் தருக!!

Anonymous said...

ரயில்வே கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மம்தா மே.வங்க அரசியலில் கவனம் செலுத்த போவதாக தெரிவிக்கவே ரயில்வேவும் தனக்கே வேண்டும் என்றாராம் தலைவர்.

6 நிச்சயம். மகனும் மகளும் அமைச்சர்.. கண் கொள்ளா காட்சி..

கொடும்பாவி-Kodumpavi said...

நாகராஜ் சரியா சொன்னீங்க... வடக்கு வழங்குகிறது.. தெற்கு முழுங்குகிறது..
மானஸ்தனுக்கு என் வன்மையான கண்டனத்தை முன் வைக்கிறேன்.. ஐம்பதுக்கும் நூறுக்கும் என்று சொல்லி இருக்கிறார்.. ஐந்நூறுக்கும் ஆயிரத்திற்கும் என்று இருக்க வேண்டும்.. சொற் பிழையா அல்லது எழுத்துப்பிழையா?

Kannan S said...

//சுதந்திர இந்தியாவில் இந்த 5 வருடங்களில் தான் தமிழ் நாட்டுக்கு அதிக பணம் ஒதுக்கி மத்திய அரசு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தி வருகின்றது.//

1. சூப்பரா சொன்னீங்க.. உமா அக்கா.. 5 முறை முதல்வராக இருந்து, இந்த முறை மட்டும் உருப்படியா வேலை பார்க்கிறார்.. அப்படிதானே..?

2. மத்திய அரசு என்ன தமிழ் நாட்டுக்கு பொண்ணு கொடுத்தாங்களா ? அதிக பணம் கொடுப்பதற்கு..

3. நீங்க தலைவர் புண்ணியத்துல அரசாங்க வேலைல சேர்ந்திருக்கலாம், அனால் வாங்கும் சம்பளம் எங்க வரி பணம்...

4. அப்படி கவர்மென்ட் வேலை இல்லைன்னா..மன்னிச்சிருங்க..

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் -தமிழ் சொலவடை...

Anonymous said...

யோவ், பேரனையும், மருமகனையும் விட்டுட்டீரே!!. (மருமகன்?!! ஹி ஹி. அது எல்லோரும் அறிந்த ரகசியம். :-) )

Erode Nagaraj... said...

{{ஐம்பதுக்கும் நூறுக்கும் ஓட்டுப் போடும் மக்கள் இருக்கும் வரை இந்த நாட்டை கடவுள் நினைத்தாலும் காப்பற்ற முடியாது}}.

dear mAnas,

ஐம்பதுக்கும் நூறுக்கும் மக்கள் ஒட்டு போடத்தான் செய்வார்கள்.

நெடுங்காலமாக படிப்பு மறுக்கப்பட்டு, கல்வியறிவு பற்றிய அறிவே கூட இல்லாத கொடுமைக்கு ஆளாகி, வெறும் கலவி அறிவினால் தம்மைப் பெருக்கிக்கொண்ட மக்கள்.

சரி, புண்ணிய பாவங்களுக்கு பயந்தேனும் நல்லது நடக்குமா என்றால், பக்தி இலக்கியத்தைப் புறக்கணித்த திராவிடர் கழகங்கள் அதிலும் அவன் வழியை அடைத்து விட்டன.

சொல்லப் போனால், நல்ல தமிழ் என்ற, தமிழின் சாரமே, பக்தியிலக்கியம் சார்ந்து தான் இருக்கிறது. அதை மூடி மறைத்ததால்,
"ல - ள - ழ - ன - ண" ஒன்றும் விளங்கவில்லை, தற்காலத் TAMIL Speaking "குழந்தைகளுக்கு".

ஐந்நூறு ரூபாய் என்பதோ ஆயிரம் என்பதோ, அவர்களுக்குப் பணமாகத் தெரியாது. அபிமான நடிகனின் படத்திற்கான பால் குடமாகவோ, நீண்ட நாள் கனவாகிய புடவையாகவோ, side dish-கள் சகிதமான சரக்காகவோ தான் கண்ணில் தெரியும்.

இதில் எங்கே, அது பணமாகத் தெரிந்து, அதிலும் காந்தி படம் தெரிந்து, சத்தியம் என்ற வார்த்தை DTS effect-ல் காதில் விழுந்து...

குஷ்டமப்பா... ச்சே... கஷ்டமப்பா...

Anonymous said...

பங்குச்சந்தை நிலவரம்:

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த பங்குகளை வாங்குவோர் பயனடையலாம்:

Dr.M.Karunanithi (DMK) Pvt Ltd.

உரிமையாளர்கள்:

கருணாநிதி, ஸ்டாலின், மாறன் (முரசொலி, தயாநிதி etc.),கனிமொழி,அழகிரி,கயல்விழி and so on.

Kannan.S said...

thalaivarae... 300+ comments paarthu romba naal achu... mokkai pottutu solreengala..?

UMA said...

இனி தமிழ் நாடு மகாராஷ்டிரா , குஜராத் போல முன்னேறிய மாநிலமாகும்.

Anonymous said...

How come Tamil Naththam started showing your blog again?!

Anonymous said...

Mr இட்லிவடை please please உமாவுடைய பின்னுட்டத்தை வெளியிடக்கூடாது.
ethu arasiyal pasa arambikka patta blog illai.inku anaivarum varukirom.yar manamum pun padakudathu.Stop his/her commands.

Manikandan said...

If Algiri is the minister of Highways, Our people have to shift to some other state.
Our country population is 110 crores but we couldn't able to find one suitable person for Ministry. MK(Nakka Mukka) son mattum aligiri ellana evana ellam eppavo encounterla potturupanga.
evanagul ellam nama nattuku kidaicha saba kedu.We all have to fight for another one Independence.
//சுதந்திர இந்தியாவில் இந்த 5 வருடங்களில் தான் தமிழ் நாட்டுக்கு அதிக பணம் ஒதுக்கி மத்திய அரசு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தி வருகின்றது.//

UMA I request you please don't support to DMK and ADMK.I think you and your family belongs to DMK supporter. Please don't as the DMK party man.please think as an human being,From 1990 to 2009 more than 15 years DMK had ministers in Central ministry but they did not done anythink useful to tamilnadu. they asking ministry like Road and ship ministry,Information technology,Forest ministry.they can able to do many things to our people but actually what is happening,they using their minisrty power to making money to their family MR. MK(Nakka mukka) family.The only gainer is MK,DMK and MK family. For People only manasla mattum thaan Idum undu.

lalitha said...

இனி தமிழ் நாடு மகாராஷ்டிரா , குஜராத் போல முன்னேறிய மாநிலமாகும்.......

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Manikandan said...

UMA...Please you have to understand why gujarat state is first in India?Due to following factors.
1.No Corruption
2.No Family Politics.
3.Very good Administration.
4.Decision Making
5.Using their natural resources
6.Narendra Modi - Don't compare to them with Godhara violence. IN recent assembly election many muslims are voted for Narendra Modi because of many state improvement plan provided by him.


Come to our tamil Nadu.
1.Corruption Government.
2.Family Politics
3.Rowdy kundars etc.....
4.Political drama

Anonymous said...

//UMA
இனி தமிழ் நாடு மகாராஷ்டிரா , குஜராத் போல முன்னேறிய மாநிலமாகும்//
அப்ப இந்த 5 வருடம் தமிழ்நாடு முன்னேறவில்லை என்பதே உண்மை .கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள் உன் புளுகு 8 நிமிடத்தில் தெரிந்து விட்டது.

Anonymous said...

please stop postings UMA commands She making other person angry.

Anonymous said...

உமா என் கேள்விக்கு பதில் இன்னும் சொல்ல வில்லை.50000 ஆய்ரம் மக்களுக்காக delhi செல்லாதவர் ( போன் பன்னல் அதிகம் பணம் ஆகும் என்று தந்தி அனுப்புகிறார்). evar குடும்பத்துக்காக delhi செல்வது சரியா? .ivaruku yen thamil enak kavalar yenra pattam vanum?

Anonymous said...

கருணாநதி வேறு மதத்தில் பிறக்காமல் போனதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் .
இல்லை என்றால் 40 மனைவிகள் கட்டி, 1 தொகுதிக்கும் ஒரு மனைவி என்று ஒதிக்கி வட்டம் ,மாவட்டம் என்று அணைத்து பதவிகளும் தன் குடும்பத்துக்கு கொடுத்து இருபார்.
this is only for UMA ku.

கலைக்கோவன் said...

//UMA said...

சுதந்திர இந்தியாவில் இந்த 5 வருடங்களில் தான் தமிழ் நாட்டுக்கு அதிக பணம் ஒதுக்கி மத்திய அரசு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தி வருகின்றது.//

போற்றி பாடடி கண்ணே..,

இ.வ நீங்கள்
உமாவிற்க்கு ஒரு
ஜால்ரா பரிசளிக்க கூடாது.
(தெவைப்பட்டா ஒரு போட்டி
வச்சி குடுங்க)

Anonymous said...

Don't give importance to UMA's comments... Otherwise, she would get popular, and who knows, she might get a DMK ticket for the next elections (if not already). Just ignore her and her ignorance.

Manikandan said...

Hi all,Don't comment on UMA

Avanga DMK party members..avargal appadithan support panni pesuvanga..nama kodukura comment vaichu avanga yosicha pothum..

//UMA - ungalai pola party members support irrukurathala thaan nama country politician namala nalla emuthuranga..ungalaku DMK or ADMK government irrunthapotha ethavathu government job or anything kidaichu irruntha thaivu seithu support pannathinga...konjam party members yosikirathu vitutu...Noraml public irruntu makkala yosichu parunga...then only you can realize the public feelings.

\\One more information:- My father also got government job at the time of DMK period, he is very strict followers of MK(nakka mukka) but i didn't support this party due to above mentioned reason \\
Please kindly start change yourself because we are the future to select good government

Anonymous said...

ஒரு மாவீரன் தனது இனத்துக்காக இறந்து கிடக்கிறான். தமிழ் இனத்திற்காக தன் உயிரையும் தனது மைந்தன் உயிரையும் இழந்து கிடக்கிறான். பிரபாகரா !! என் தலைவா !! நீ மட்டும்தான் தமிழர்களின் உன்னத தலைவன் !! சுயநலமில்லாமல் தமிழ் மக்களுக்காக வாழ்நாள் முழுதும் போராடி மடிந்தாயே !! நீதான் தமிழர்களின் ஒரிஜினல் தலைவன் !!! மற்றவரெல்லாம் டூப்ளிகேட். 5000 கோடி ரூபாய் சொத்தும், அளவுக்கதிகமான பேராசையும் கொண்டு, சொந்த இனத்தையே அழிக்க துணைபோய், இன்று தான் பெற்ற மக்களுக்கு மந்திரி பதவி வாங்க டெல்லியில் தவமிருக்கும் மானங்கெட்ட மக்களெல்லாம் தலைவனாம் !! எல்லாம் மானங்கெட்ட தமிழனின் தலையெழுத்து !!

இத்தாலியில் பிறந்ததெல்லாம் அன்னையாம் !!
எங்களுடன் பிறந்து என் இனத்துக்காக போராடி மாண்ட நீ தலைவனில்லையாம் !!
வெறுங்கை வீசி வந்து வாரிசுகள் பல கண்டு அனைத்துக்கும் அடுத்த 20 தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ளவர்தான் தலைவராம்.
வெட்கங்கெட்ட மக்கள் !!!

வாழ்க உன் புகழ் !! வாழ்க உன் மரணம் !!!

வருத்தங்களுடன்
-பாலா-


by KB Bala,Singapore
source Dinamalar

Anonymous said...

ஒரு மாவீரன் தனது இனத்துக்காக இறந்து கிடக்கிறான். தமிழ் இனத்திற்காக தன் உயிரையும் தனது மைந்தன் உயிரையும் இழந்து கிடக்கிறான். பிரபாகரா !! என் தலைவா !! நீ மட்டும்தான் தமிழர்களின் உன்னத தலைவன் !! சுயநலமில்லாமல் தமிழ் மக்களுக்காக வாழ்நாள் முழுதும் போராடி மடிந்தாயே !! நீதான் தமிழர்களின் ஒரிஜினல் தலைவன் !!! மற்றவரெல்லாம் டூப்ளிகேட். 5000 கோடி ரூபாய் சொத்தும், அளவுக்கதிகமான பேராசையும் கொண்டு, சொந்த இனத்தையே அழிக்க துணைபோய், இன்று தான் பெற்ற மக்களுக்கு மந்திரி பதவி வாங்க டெல்லியில் தவமிருக்கும் மானங்கெட்ட மக்களெல்லாம் தலைவனாம் !! எல்லாம் மானங்கெட்ட தமிழனின் தலையெழுத்து !!

இத்தாலியில் பிறந்ததெல்லாம் அன்னையாம் !!
எங்களுடன் பிறந்து என் இனத்துக்காக போராடி மாண்ட நீ தலைவனில்லையாம் !!
வெறுங்கை வீசி வந்து வாரிசுகள் பல கண்டு அனைத்துக்கும் அடுத்த 20 தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ளவர்தான் தலைவராம்.
வெட்கங்கெட்ட மக்கள் !!!

வாழ்க உன் புகழ் !! வாழ்க உன் மரணம் !!!

வருத்தங்களுடன்
-பாலா-


by KB Bala,Singapore
source Dinamalar

Anonymous said...

///UMA...Please you have to understand why gujarat state is first in India?Due to following factors.
1.No Corruption
2.No Family Politics.
3.Very good Administration.
4.Decision Making
5.Using their natural resources
6.Narendra Modi - Don't compare to them with Godhara violence. IN recent assembly election many muslims are voted for Narendra Modi because of many state improvement plan provided by him.


Come to our tamil Nadu.

1.Corruption Government.
2.Family Politics
3.Rowdy kundars etc.....
4.Political drama///

Answer:
1.Corruption Government.
(1 to 2 Lakes to Driver post ...Lot of posting given in all sectors)

2.Family Politics

(///Anonymous said...Don't give importance to UMA's comments... Otherwise, she would get popular, and who knows, she might get a DMK ticket for the next elections///

எங்க வங்கி கட்டட்டும் பார்போம்.உடன் பிறப்புக்கு மனசுல மட்டும் தானே எடம்)

3.Rowdy kundars etc.....

(Fasting for 3 hours and breaking government buses)

4.Political drama

(TN Report To Election Commission: No bus fair reduced before election days.....One who travel in bus only have to say about this)

UMA said...

ஸ்பெக்ட்ரம் ஊழல் - ஒரு விளக்கம்.

எல்லோரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அடிக்கடி சொல்லுகிறீர்கள் .எனவே அது உண்மையில் ஊழல் அல்ல . அது நமது நாட்டுக்கு வரவேண்டிய நோஷனல் வருமானம் தான்.

உதாரணம் டெவலப் ஆகாத இடத்தில ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறீர்கள் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு என்று வைத்து கொள்வோம். அதை ஒரு வருடம் கழித்து இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு விற்று விடுகிறீர்கள் . பின்னர் அந்த இடம் டெவலப் ஆனா உடன் 5 லக்ஷம் ரூபாய்க்கு போனால் உங்கள் லாபம் ஒரு லக்ஷம் ( மூன்று வருடம் முன்பு விற்றது )தான்

ஆனால் இப்போது விற்று இறுந்தால் 4 லக்ஷம் ( முன்று லக்ஷம் அதிகம் ) கிடைத்திருக்கலாம். நன்கு டெவலப் ஆகாமல் இருந்திருந்தால் விலை ஏறாமல் இருக்கலாம். ஆனால் பணம் தேவைப்படும் போது கிடைத்த லாபத்துக்கு விற்பது தான் புத்திசாலித்தனம். இப்போது பிளாட் விற்பவர்கள் எல்லாம் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். எனென்றால் என்னும் இரண்டு மூன்று வருடங்களில் விலை ஏறும் என்று தெரிந்தும் இப்போது விற்பது காலத்தின் கட்டாயம்.

அதே போலத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் எனப்படுவதும் ஒரு நோஷனல் லாஸ் தான். ஊழல் இல்லை.

இந்த லாசுக்கு காரணம் என்ன?

நாளை வரை பொறுங்கள். ப்ளீஸ் . எனக்கு நேரம் ஆகி விட்டது.

UMA said...

ப்ளீஸ் மாற்று கருத்தை படியுங்கள் பின் சிந்தியுங்கள். சரியென்றால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்.
தயவு செய்து திட்டவேண்டாம். மற்றவர் சொல்வதை கேட்டால் தான் உண்மை விளங்கும்.

நீதிமன்றத்தில் கூட குற்றவாளியின் கருத்தை கேட்பார்கள்.இட்லி வடை நீதிமன்றம் போன்றது.நிறைய பேர்
(விமரிசனம் பண்ணாதவர்களும்) படிக்கிறார்கள்.

Erode Nagaraj... said...

Yes, Uma. You are right(as conclusion is left to us).

This is not a national loss. You just calculate and div(o)ide this amount and put it on 100 crore+ heads. Then it will be a meager amount.

Governing a nation is not just real estate business. You need to foresee things, Even if you think of laying a road, you need to work on how the traffic will be after 50 years and do it accordingly.

The problem that prevails is, not that we artistes only predict or anticipate what sangathi will be sung next, our ministers are well versed too in anticipating.

They very easily gain the knowledge and awareness of anticipation by getting bails!

Here, they applied their ability of predicting the rates and in doing the business successfully, saying, "look this is going to grow more... if i give you now, you will gain enormous money.. so, what will be in return for us?"

"PAGUTHTHARIVU"

மானஸ்தன் said...

///கொடும்பாவி-Kodumpavi said...
மானஸ்தனுக்கு என் வன்மையான கண்டனத்தை முன் வைக்கிறேன்.. ஐம்பதுக்கும் நூறுக்கும் என்று சொல்லி இருக்கிறார்.. ஐந்நூறுக்கும் ஆயிரத்திற்கும் என்று இருக்க வேண்டும்.. சொற் பிழையா அல்லது எழுத்துப்பிழையா?///


கொடும்பாவி அண்ணே!பிழை எல்லாம் இல்லை. "கழக" நாதாரிகள் பணம் கொடுப்பதிலும் "தில்லு-முல்லு" செய்து, பாவம் கிராமத்து மக்களை ஏமாற்றி உள்ளார்கள்.
அதைக் "கேள்விப்பட்டதால்" எழுதினேன்.

மானஸ்தன் said...

***UMA said...
///நீதிமன்றத்தில் கூட குற்றவாளியின் கருத்தை கேட்பார்கள்.///


ஒப்புக் கொண்டதற்கு நன்றி. :-D

இனிமே நீங்க சொல்லுங்க..... சொல்லுங்க.....
சொல்லிகிட்டே இருங்க.....

யாரும் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க :-D

மானஸ்தன் said...

ஒரு வாரமா இட்லி வடை பக்கத்தை சரியாப் பாக்கல. இப்போதான் இந்த கருத்துக் கணிப்பு கண்ணுல பட்டது.

////கனிமொழி 283 (54%)
தயாநிதி மாறன் 304 (59%)
அழகிரி 437 (84%)
டி.ஆர்.பாலு 192 (37%)
அ.ராசா 162 (31%)////


எதுக்கு அண்ணே bracket-ல *percentage*?? :-D
என்ன மாதிரி முட்டாளுங்க மொத்தத்தையும் கூட்டிட்டு 100% வரலைன்னு சொல்லுவோம்!
:-D

இந்த இந்த வோட்டிங்கே அவசியம் இல்ல.. அதுல "multiple" choice வேற!

கொடுமைடா சாமி. :-D

ஒங்கள சொல்லி குத்தம் இல்ல.
வோட்டு போட்ட அந்த 515 புண்ணிய ஆத்மாக்களை சொல்லணும்! :-D

Prakash said...

//இந்த லாசுக்கு காரணம் என்ன?//

உமா அக்கா,

ரொம்ப சீரியல் பாப்பீங்க போல. "தொடரும்" போட்டுடீங்க.

//அதே போலத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் எனப்படுவதும் ஒரு நோஷனல் லாஸ் தான். ஊழல் இல்லை.//

இந்த "நோஷனல் லாஸ்" எவ்ளவு கட்டிங் வாங்கிட்டு செஞ்சார்னு அப்படியே கேட்டு சொல்லுங்கோ.
உங்கள் விளக்கம் கேட்டால் ராசா கூட விழுந்து விழுந்து சிரிப்பார்.

Ma.dai.Yen said...

உமா அக்கா,
அப்படியே தினகரன் எரிப்பு பற்றியும் ஒரு விளக்கம் கொடுத்துடீங்கனா நல்லா இருக்கும்.

நம்ம வருங்கால மத்திய அமைச்சர் மாண்புமிகு டாக்டர் திரு மு.க.அழகிரி அபாண்ட பழி போடபட்டுள்ளதை கொஞ்சம் விளக்கினால் நன்று.

பசுவை போன்ற அமைதியான அவர் முகத்தை பார்த்த பின் கூட இப்படி பேச எப்படி தான் இந்த இட்லிவடை வாசகர்களால் முடிகிறதோ??

Krish said...

உமா அக்காவ அண்ணன ன்னு தெரியல...
எதுவா இருந்தாலும் பரவில்லை ...இத படிங்க....மாலன் அவர்களின் வலைப் பதிவிலிருந்து

"“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

Anonymous said...

***மானஸ்தன் said...
***UMA said...
///நீதிமன்றத்தில் கூட குற்றவாளியின் கருத்தை கேட்பார்கள்.///


ஒப்புக் கொண்டதற்கு நன்றி. :-D

இனிமே நீங்க சொல்லுங்க..... சொல்லுங்க.....
சொல்லிகிட்டே இருங்க.....

யாரும் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க :-D//
Mr மானஸ்தன்
Really Ur Hero.
Appuna ipadithan irkkum.

Anonymous said...

MIS or Mr UMA
சரியான இடத்தில் வந்து தவறான பதிலை சொல்ல முயற்சி பண்னுற.அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்று தெரியாதவருக்கு ஏன் MP பதவி. ரியல் எஸ்டேட் ல் லாஸ் அனா அது ஒருவரின் பிரச்னை,இது ?.....

Anonymous said...

ஊரை எரித்து புலியை கொன்று விட்டார்கள் அவர்களுக்கு என்ன போச்சு எரிந்தது தமிழனின் வீடுகள் தானே வீழ்ந்த்தது தமிழனின் உயிர் தானே ... "ஆயிரம் தந்தி அனுப்பிய அபூர்வ சிந்தாமணி" கருணாநிதி பதவி பிச்சை கேட்டு சோனியாவுக்கு துதி பாட ஓடினார் தமிழனுக்கும் ஏதாவது கவிதை வைத்திருப்பார் பொருத்திரு மானம் கெட்ட தமிழனே ! இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஒரு ரூபாய் அரிசி வாங்கி வாய்க்கரிசி போடு செத்து போன நம் இன மக்களுக்கு...

Anonymous said...

காட்டிக் கொடுத்தான் ஒரு கருணா, காக்கவில்லை இன்னொரு கருணா

மானஸ்தன் said...

"அதிகாரப் பிச்சை" கிடைக்கவில்லை. தி.மு.க.வுக்கு ஆப்பு.

வெளியில் இருந்து ஆதரவு. நாக்க முக்க அறிவிப்பு.

மானஸ்தன் said...

மு.க. டெல்லி சென்று அமைச்சர் பதவி கேட்டதைப் போல் தமிழக ஆட்சியில் காங்கிரஸ்-கு பங்கு வேண்டும்.

மாணிக்தாகூர் கூட்டம் "விருதுநகரில்"அதிரடி.

rayar from dubai said...

நண்பர்களே
தி மு க ,அதிமுக , போன்ற கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் பெரியதாக செய்ய வில்லை
பின்பு ஏன் தி மு க வை மட்டும்? , நிச்சியமாக ரோடு, பாலம் ஆகியவை இவர்கள் இல்லை என்றால் சான்ஸ் இல்லை?
இந்த விஷயத்தில் இவர்களை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும்
எந்த அரசியல்வாதி கொள்ளை அடிக்காமல் இருக்கிறர்கள்?

R.Gopi said...

//மானஸ்தன் said...
"அதிகாரப் பிச்சை" கிடைக்கவில்லை. தி.மு.க.வுக்கு ஆப்பு.

வெளியில் இருந்து ஆதரவு. நாக்க முக்க அறிவிப்பு.//

*********

Ha ha hahaha ha ha ha

UMA said...

வடக்கு எப்போதும் தெற்கை மதிப்பதில்லை. எதையும் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலை இன்னமும் மாறவில்லை. அப்படி போரடவில்லையானால் தமிழ் நாட்டுக்கு முன்னேற்றம் கொண்டு வர முடியாது.இன்னும் ஒரு 5 வருடங்கள் இருந்தால்,தமிழ் நாட்டை அபிவிருத்தி செய்து ரோடு,பாலங்கள்,ரயில்வே, மருத்துவம்,சென்னை மெட்ரோ, சென்னை குடிநீர்,முதலிய , திட்டங்களை நிறைவேற்றலாம்.

ஆனால், தமிழனுக்கு எப்போது தமிழனே எதிரி என்பது போல எதிர்கட்சிகள் கிண்டல் செய்வதால் நஷ்டம் தமிழ் நாட்டுக்குத்தான்.

இலங்கையில் ஒவொரு குழுவும் தனித்தனியாக இருந்ததாலும், கருணா போன்றவர்கள் தமிழர்களைகாட்டி கொடுத்தாலும் தான் இலங்கை தமிழர்கள் இதனை இன்னல்களும் அடைந்தனர்.