பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 17, 2009

ஒரு சந்தோஷமான செய்தி


இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருந்தாலும், பா.ம.க போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளது. தமிழக மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட வேண்டிய செய்தி இது.

தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போய்விடும் என்று ராமதாஸ் கூறினார். ஆனால் பாமக தான் காணாமல் போனது. இனிமேல் பாமகவை விளம்பரம் போட்டுத்தான் தேட வேண்டும் என்று துரைமுருகன் சொல்லியிருக்கார்.

வருங்காலத்தில் விளம்பரம் செய்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி இந்த கட்சி நிலமை இருக்க வேண்டும். அது தான் தமிழகத்துக்கு நல்லது.


கூட்டணி தாவுவது குரங்கு பனை மரத்தில் ஏறுவது போல - ஏறினால் நுங்கு; விழுந்தால் சங்கு

36 Comments:

Jeeva said...

இட்லி வடை....சிதம்பரத்தின் வெற்றியைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்!!!!!

Baski said...

மேலோட்டமாக பார்த்தால் மருத்துவர் அய்யாவுக்கு பெரிய ஆப்பு என்று தான் சொல்லணும். உன்னிப்பாக கவனித்தால், ஏ.கே மூர்த்தி, வேலு கொஞ்சம் நன்றாகவே போட்டியில் இருந்திருகிறார்கள்.

அம்மாவின் புலிகள்/ஸ்ரீலங்கா "அந்தர் பல்டி" வீண்.
கொஞ்சம் நல்ல வாக்குறுதிகளை கொடுத்திருக்கலாம்.

விஜயகாந்த் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பார் எனவே நினைக்கிறன்.

UMA said...

இலங்கை பிரச்சனை மக்கள் பிரச்சனை அல்ல.

அதை நகர மேல் தட்டு மக்கள் மட்டும் உணர்ந்தனர்.கலைஞர் சட்டத்திற்கு உட்பட்டு தன்னால் முடிந்ததை செய்தார் என்று மக்கள் நம்பினார்கள்.

அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை மக்கள் எண்ணிபார்த்தனர்.

விஜயகாந்த்: கருணாநிதி நன்றி செலுத்தவேண்டிய முதல் நபர் இவர்தான். முன்பு ரஜனிகாந்த் செய்ததை போல நன்மை செய்துள்ளார்.

பா.ம.க வின் தோல்வி:

வன்னியர் அதரவு சுருங்குகிறது. அதை விஜயகாந்த் பங்கு போடுகிறார்.

தேர்தலை வியாபாரம் ஆக்கியவர்.

இதில் ராஜிய சபா சீட்டு வேறு ஒன்று வேண்டுமாம்(அன்புமணிக்கு)

சந்தர்ப்ப வாதம் மக்கள் விரும்பவில்லை.

பா.ம.க அமைச்சர்களின் சாதனைகளை முன் நிறுத்தி பிரச்சாரம் செய்யவில்லை.

அன்புமணிக்கு மந்திரி பதவி மறுபடியும் அளிக்க மன்மோகன் அழைப்பு!!!.

பா. ரெங்கதுரை said...

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், வன்னியர்கள் எனப்படும் படையாச்சிகள் / பள்ளிகளின் ஜாதி வெறிக்குச் சரியான சவுக்கடியை மற்ற ஜாதியினர் கொடுத்துள்ளனர். அதே போல கொங்கு மண்டலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதி வெறியர்களின் கட்சிக்கும் மற்றவர்கள் சரியான அடி கொடுத்துள்ளனர். பாராட்டுகள்!

குடுகுடுப்பை said...

வருங்காலத்தில் விளம்பரம் செய்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி இந்த கட்சி நிலமை இருக்க வேண்டும். அது தான் தமிழகத்துக்கு நல்லது.//

நான் ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன் இனி வேண்டாம் தேவையில்லாத விளம்பரம்.

Anonymous said...

படமே பதிவை மெருகூட்டிவிட்டது...மாங்காய் வியாபாரம் என்றும் சங்கு ஊதியாச்சி என்றும் ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? ராமதாஸ் இல்லாமல் கொஞ்சம் நிம்மதியா ஆட்சி செய்யலாம்....

Narayanan said...

it is good that maram vetti is gone. Now government can run freely and make right decisions and implement them.

Anonymous said...

Billioner doller Question from TN.:-

Is it Mr. chidambaram P has won in Sivagangai or not Pls clear this doubt for me.

enpaarvaiyil said...

தனியாக நின்று ஓட்டை பிரித்த விஜயகாந்த் தன்பலம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்தியதை பாராட்டவேண்டும்.
பாமாகாவை தன்னுடன் கூட்டு சேர்த்து அவர்வோட்டுக்களை தங்களுக்கு சாதகமாக பெற்று தொகுதிகளை தேத்திகொண்டது ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தனம்.
கலைஞர் கூட்டணியில் கடைசி நேரத்தில் இணைந்துகொண்டு ஒரு தொகுதியை வென்ற திருமாவளவன் தன்னை கேலி பேசியவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார்.
அவர் பேச்சை கேட்டிருந்தால் ராமதாசிற்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.

நலம் பெறுக said...

மக்கள் ஆதரவு என்பது மட்டுமல்ல ஜனநாயகம் மக்கள் நிராகரிப்பும் ஜனநாயகம் தான். இது தான் பாமகவுக்கு இந்த தேர்தல் கற்றுத் தரும் பாடமாக இருக்கும்.

MiniLorry said...

UMA: இது மக்கள் பிரச்சனை இல்லை என்றால், வேறென்ன?

தண்டோரா said...

பாமாகவை மக்கள் முற்றிலும் நிராகரித்து விட்டனர்.விஜயகாந்த் தனக்கு கொடுக்க பட்ட அசைன்மெண்டை கச்சிதமாக முடித்து விட்டார்.இந்த தேர்தல் முடிவுகள் ராஜபக்ஷெக்கு கீரின் சிக்னல்.(ராமதாசு கமெண்ட் போட்டி பரிசை தைலாபுரத்துக்கு அனுப்பி விடுங்கள்)

Anonymous said...

When tamil inam (his) was killed, he wrote letters. He acted sick.

When his family(real tamil inam for him) needs, he's fit and ready to fly to Delhi next week.

He won't touch external affairs in solving the crisis (current and post). he will want IT,Road,Telecom etc minstries.

UMA-Correct me if I m wrong.

IdlyVadai said...

UMA - ஒரே கமெண்டை எல்லா இடத்திலும் போடாதீர்கள். நன்றி

Anonymous said...

Uma must be kanimozhi or one of the other concubines daughter.

Anonymous said...

Manmohan should not give the same portfolios to anybody & more so to his allies so that he can get to know the corruption prevailed in the departments if a new person is appointed as minister. Azhagiri can be given Law & Parliamentary, Kanimozhi, Woman welfare & Maran , Sports & Youth developmwnt

UMA said...

இட்லி வடையில் எது லேட்டஸ்ட் டாபிக் என்று தெரியாமல் அவசரத்துல போட்டுட்டேன்.இனி போட மாட்டேன். என்னுடைய எழுத்துக்களை போட்டு வருவதற்கு மிக்க நன்றி.

என்னுடைய தேர்தல் கணிப்பு ஓரளவு சரி என்று எண்ணுகிறேன். இல்லாவிட்டால் என்னை தவிர அனைவரும் ஒரே கருத்தை தான்
இட்லி வடையில் சொன்னார்கள். நான் மட்டும் தான் தனிப்பட்டு கிராமத்து மக்கள் சார்பாக சொன்னேன்.

UMA said...

ஏன் ரயில்வே விட்டுட்டீங்க?.

இந்த முறை ரயில்வே நம்ம தமிழ் நாட்டுக்கு.

சென்னையிலிருந்து ஒரு மணிகொரு தடவை மதுரைக்கு பகலிலும் இரவிலும் ரயில் விடப்படும்.

இத்தனை பஸ் இந்த சாலையில் செல்ல வேண்டாம்.

UMA said...

I will write about Sri Lanka issue in 2 or 3 days .

Erode Nagaraj... said...

Mr. Anonymus,

Maintain some decorum in blogs. It is being read by many decent people.

Po"stinks" like this may invite unwanted visitors to reply in the same way and that will be a torture for the blog owner and moderator.

seetha said...

i am delighted about maruthuvar's loss for more than pne reason.Firstly ,the way he harassed kushbu, instigating so much agaist her.secondly i feel people have realise dhis double standards.English for his grand daughters ,tamil for others and tradion for women but otherwise he is periyar's disciple etc. godd riddens.

selva said...

I got surprised from the result of Chidambaram. As far as i heard from the pepoles of chidambaram, PMK will win with decent lead.

But Thirumavalavan won with 1 lakh votes different as exactly gussed by your election team.

chutneysambhar said...

One good thing that has happened for congress is the confidence it has got to dump regional parties and win elections on its own.

Best example is Uttar pradesh and bihar. In UP it won handsomely and in bihar it caused enough damage to RLD , LJP and thaught lalu and paswan a good lesson.

Time is not far away when it can dump NCP in maharashtra.

The best thing to find a third alternative in Tamil Nadu is for congress to join hands with DMDK.

Iam sure there will be crores of voters waiting for that

UMA said...

பா. ம. க வால் ஜெயாவுக்கு விழுப்புரம்,மாயவரம்,சீட்டுகள் கிடைத்துள்ளன.ஆனால் பா. ம. க வுக்கு எந்த ஜெயாவால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இலங்கை பிரச்சனை நம்மால் தீர்க்க முடியாது.அது ஒரு இன்டெர் நேஷனல் பிரச்சனை.அதை சாதுர்யமாக கையாளவேண்டும்.அதற்கு பிரபகார் முழு ஒத்துழைப்பு நமக்கு தர வேண்டும்.முன்பு ராஜீவ் இலங்கைக்கு IPKLF அனுப்பியபோது பிரபகார் ஒத்துழைக்காததால் அது தோல்வியில் முடிந்தது.

இலங்கை பிரச்சனை நம்மால் தீர்க்க முடியாது. அது ஒரு இன்டெர் நேஷனல் பிரச்சனை. அதை சாதுர்யமாக கையாளவேண்டும். அதற்கு பிரபகார் முழு ஒத்துழைப்பு நமக்கு தர வேண்டும்.

முன்பு ராஜீவ்இலங்கைக்கு IPKLF அனுப்பியபோது பிரபகார் ஒத்துழைக்காததால் அது தோல்வியில் முடிந்தது.

தமிழக அரசியல்வாதிகள் அதை மனப்பூர்வமாக கையாளவில்லை. வெறும் தேர்தல் ஓட்டுக்காக , மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்கவே அதை எடுத்துகொண்டார்கள்.

ராணுவத்தை அனுப்பி தனி தமிழ் இலங்கை வாங்கி தருவது, விமானத்தில் சோறு (மூட்டை)போடுவது அடுத்த நாட்டில் முடியாது. நமது விமானம் அவர்கள் எல்லையில் அவர்கள் அனுமதி இல்லாமல் பறக்க முடியாது.

மக்களை பிரபாகர் பிடியிலிருந்து காப்பாறுவதே உடனடி தேவை. அனேகமாக பிரபாகர் அங்கிருந்து தப்பித்து வெளியேறி விட்டதால் இனி போர் இருக்காது.

வங்காள தேச அரசு வெற்றி பெற்றபின்பும் அவர்களை சிறையில் அடைத்த பாகிஸ்தானை எதிர்த்து போராடிய முக்தி வாகினி அமைப்பை இந்திய ராணுவம் உதவி செய்து விடுதலை வாங்கி கொடுத்ததை போல இங்கு முடியாது.

இங்கு பிரபாகர் தேர்தலில் பங்கு பெறவும் வில்லை,வெற்றி பெறவும் இல்லை,மற்ற தமிழ் தலைவர்களை விட்டுவைக்கவும் இல்லை.

Krish said...

UMA:

மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலும் பணம் எப்படி விளையாடியது என்று தெரியாத? சாதனைகளை மட்டும் சொல்லி ஜெயித்திருந்தால் சந்தோசம்.

எது எப்படியோ, பமாக வின் தோல்வி அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

கிரி said...

ராமதாசு அய்யாவிற்கு தேர்தல் முடிவு பேதி ஆகி இருக்கும்..

அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக வுடன் கூட்டணியா! ;-)

Siraj-Kuwait said...

Erode Nagaraj, you said it.

Other wise, Tamil Eelam issue is still a hot spot for all the politicians in Tamilnadu. Keeping an eye on it, Kalaignar hit the right spot. What will be his next action? I guess nothing. But, he should do something and stretch his power to the center to control the tiny island's barbaric activities.

Dear Idli: pls make a BIG REQUEST to Kalaignar not to distribute free TV, lands..etc. to the poor people, instead make a path for them to buy those things on their own.

VISA said...

என் உடல் மனம் ஆவி அனைத்தும் ஒருங்கிணைந்த பாராட்டுக்கள். மேலும் இந்த படத்தை பார்த்தவுடன் வீட்டில் விசில் அடித்து சிரித்தேன். அருமையாக சித்தரித்திருந்தீர்கள். தமிழ்நாட்டு மக்கள் கொள்கை இல்லாத கட்சிக்கு இது தானடா தீர்ப்பு என ஓங்கி உரைத்திருக்கிறார்கள். இனிமேலாவது திருந்தினால் சரி. இல்லையேல் திருந்தியது போலாவது நடிக்கலாம்.

Anonymous said...

ரொம்ப சந்தோஷம்! நிச்சயமாக "கொண்டாட" வேண்டிய தருணம்!!

இதே நிலைமை இரண்டு கழகங்களுக்கும், காங்கிரசுக்கும் சீக்கரமே வர வேண்டும்.

lalitha said...

நான் மட்டும் தான் தனிப்பட்டு கிராமத்து மக்கள் சார்பாக சொன்னேன். ,,,,,,,,,,,,
விலை போனது ஜனநாயகம் .இதில் பெருமை வேறு.

Anonymous said...

Also write about that MMK (Muslim Munnetra Kazhagam's) defeat. Enna aattam pottanunga! Deposit gaali.

Baski said...

PMK in TN, BJP in North needs to reinvent themselves to face next elections.

I strongly agree Captains role in results of this elections.
He had divided either parties would have gained good number of votes.

PMK's caste card can help only a segment of votes.
A good thing about PMK is they have good leaders who really performed well as ministers in central govt.
(except Anbumani Ramadoss). This is the only party that brings TN good future leaders.

BJP needs to stop taking "Nonsenses" that would spoil muslim/christian votes. Hindus are moderates. They dont like religiosity either. ADMK would have lost a good chunk of votes due to their future ally plans with BJP.

Bribing voters could be a hype. Can anyone tell if they have got money from any parties..??
When I asked my friends/families regarding this.. noone got even a penny. I am not sure howmuch true this information is.

மஞ்சள் ஜட்டி said...

மாங்கா மாங்கா..ராமதாசு மாங்கா
தேர்தல்ல சங்கூதின பா.ம.க மாங்கா..
ஏ மாங்கா!! இது சங்கா??
------
(ரட்சகன் பட பாடல் ஸ்டைல் ல் பாடவும்)
சோனியா சோனியா காங்கிரசு சோனியா
தேர்தலில் நீ ஜெயிச்சதெப்படி கூறு?
தி.மு.க வோட கூட்டு வெச்சா இல்ல
அம்மாவுக்கு ஆப்பு வெச்சா ?
சிலமுறை லாலுவும் உண்டு,
சில முறை raamathaasum உண்டு...
ஜால்ரா அடிப்பதை கண்டு ...
பதவி, கூட்டணி உண்டு....

Anonymous said...

அன்புமணி : அப்பா அப்பவே வேணாம் இந்த கூட்டணி என்று சொன்னேன் கேட்டியா நீ.
ராமதாஸ் : போடா முனு தலைமுறைக்கு பிறந்த முட்ட பயலே. படிக்கும் போது நீ ஒழுங்க படிகல அப்போ வேற ஆல அல்மாரட்டம் செய்து டாக்டர் பாஸ் பண்ண வைத்தேன். அதே மாதிரி கொல்ல புறம் வழிய மதிய அமைச்சரா ஆக்கினேன். அந்த வேலையையும் ஒழுங்க பாக்காம வேணு கோபலளோட சண்டைய போட்டு காலத்த ஓட்டுன. இந்த லட்சணத்துல எனக்கு அட்வைஸ் பன்னுரியாக்கும் போடா அங்கே சாராயம் இருக்கு போய் போட்டு விட்டு பேசாம படுத்து துன்கூரதுக்கு உள்ள வழிய பாரு

வால்பையன் said...

எதோ கனவு கண்டா வெளியே சொல்ல முடியாதாம்!
அது மாதிரி ஆகி போச்சு டாக்குடரு நிலமை

சோழன் said...

"Yaarukku Yaaru Sanku uthurathunnu poruthirunthu parunkal "

First of All heartful thanks for all voter who are all cast thier vots for PMK & its alliance

Election Result give a temporary death to Indian Republic by American crows.

Still true Peoples voting for us apart from Money Flow in entire election system .

Before end of 2011 let us see

Ha! Ha!

Note :-This feedback only for humans (Gentlemen) only .