பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 16, 2009

நன்றி நண்பர்களே

இட்லிவடையில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் coveritlive மூலம் பதிவு செய்தோம். காலை 7:30 மணியிலிருந்து நண்பர்கள் நிறைய பேர் பார்த்தார்கள் என்று தெரிகிறது( குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்கள்) ஒரே சமயத்தில் 3500+ பேர் பார்த்தார்கள் என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது.


நண்பர்கள் பலர் உடனுக்குடன் செய்தி, முன்னனி நிலவரம் தந்தார்கள். சில சமயம் பின்னூட்டங்களை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. சிலருக்கு இதனால் கோபம், மன வருத்தம் ஏற்படுத்தியதற்கு மன்னிச்சுருங்க. வேறு வழி தெரியவில்லை. அடுத்த தேர்தல் போது இன்னும் சிறப்பாக செய்யலாம் கவலைப்படாதீங்க.

கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றி.

தேர்தல் முடிவுகள் தேர்தல் டீம் கணித்த மாதிரி இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தேர்தல் டீமுக்கு ஸ்பெஷல் நன்றி.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஸ்பெஷல் வாழ்த்து.

பல பேர் தென் சென்னையில் சரத்பாபு எவ்வளவு வாக்குகள் பெற்றார் என்று கேட்டார்கள். அவர் 14101 வாக்குகள் பெற்றுள்ளார். பரவாயில்லை.


வெற்றி பெற்றவர்கள் பார்ட்டிக்கு போவார்கள், தோல்வி அடைந்தவர்கள் மீட்டிங்கிற்கு போவார்கள். நான் தூங்க போகிறேன் :-)


அப்டேட்: ஜெயா டிவியில் வரும் தகவல்களை கொஞ்சம் சொல்லுங்க என்று ஒரு நண்பரிடம் கேட்டதற்கு, எங்க வீட்டில் சன் டிவி தான் பார்ப்பாங்க என்று பதில் சொன்ன அவருக்கும் என் நன்றி.

14 Comments:

Anonymous said...

//தேர்தல் முடிவுகள் தேர்தல் டீம் கணித்த மாதிரி இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தேர்தல் டீமுக்கு ஸ்பெஷல் நன்றி. //

அப்படியா? கொஞ்சம் புள்ளிவிவரங்கள் கொடுக்கறீங்களா?

எனக்குத் தெரிந்து CNN-IBN ஓரளவுச் சரியாகவும், ஆனந்த விகடன் படு மோசமாகவும் கணித்திருந்தது என்று நினைக்கிறேன். இவ எப்படி செய்திருக்கிறது என்பதை பார்க்கவேண்டும்.

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துகள்.

சுபா என்பவரது பிளாக்கில் 27 ஏப்ரல் அன்று நான் இட்ட பின்னூட்டம்

தங்கள் பார்வைக்கு

http://shubasblog.blogspot.com/2009/04/mk-fasts-for-lankan-peace-oops-its-over.html

Krish said...

Money does everything.

1. விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மானிக்தாக்கூர் வெற்றி பெற்றதாக அறிவத்ததற்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொகுதியில் பதிவான வாக்குகளாக அறிவிக்கப்பட்ட வாக்குகள் 7 லட்சத்து 44 ஆயிரத்து 880.

ஆனால் எண்ணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 7லட்சத்து 67 ஆயிரம் 563.

இரண்டுக்கும் இடையில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்....

2. P. Chithambaram....he actually lost. Enna kodumai...

But good to see that PMK lost. CPI lost. Lalu lost. Baswan lost.Mayawathi lost. all opportunitist people lost.

மதுரை பொறுக்கி said...

இந்த முறை தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் என்னை போலவே பலருக்கு, முக்கியமாக bloggers க்கு அதிர்ச்சி ஆக இருக்கலாம்.மதுரையில் ஒரு வோட்டுக்கு 500 Rs. கொடுக்கப்பட்டது. பணம் வாங்கியவர்கள் அழகிரிக்கே ஓட்டு போட்டார்கள். என் வீட்டில் வழக்கமாக A.D.M.K வுக்கே வோட்டு போடும் பாட்டி கூட இந்தமுறை அழகிரிக்கு வோட்டு போட்ட அதிசயம் நடந்தது. இப்படித்தான் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் 4 அல்லது 5 தேர்தலுக்கு பிறகு இது பற்றி விழிப்புணர்வு வரும் என்று நான் கஷ்டப்பட்டு நம்புகிறேன். அதுவரை மக்கள் தீர்ப்பே மண்ணாங்கட்டி தீர்ப்பு என்று நடப்பதை தேமே என்று பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான்.

Natrajan said...

சிலருக்கு இதனால் கோபம், மன வருத்தம் ஏற்படுத்தியதற்கு மன்னிச்சுருங்க.
okey - mannichutten. enakkum
வேறு வழி தெரியவில்லை

மது said...

கனடாவில் எல்லாம் மொத்த வாக்கு வீதத்தில் ஒரு சதவீதத்திற்குக் குறைவாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் முதன்மையில் இருக்கும் இரு வாக்காளர்களுக்கு மட்டும் மறு தேர்தல் வைப்பார்கள். தமிழகத்தில் அப்படி எதுவும் கிடையாதா?? தெரிந்து கொள்வதற்காக மட்டுமே கேட்கிறேன்.

அஞ்சா நஞ்சன் said...

கருத்து கணிப்பில் பதில் சொல்வர்கள் எல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்கோ இட்லி வட ....... !!! அருமையா ஏற்பாடு செஞ்சிருன்தீங்கோ...!!!!
உங்களுக்கும்....!!! வெற்றி பெற்ற வேட்பாளகள் எல்லாருக்கும் எம்பட பொன்னான வாழ்த்துக்கள்......!!!!!

UMA said...

தமிழக தேர்தல் முடிவு ஒரு அலசல்:

இலங்கை பிரச்சனை மக்கள் பிரச்சனை அல்ல.

அதை நகர மேல் தட்டு மக்கள் மட்டும் உணர்ந்தனர்.கலைஞர் சட்டத்திற்கு உட்பட்டு தன்னால் முடிந்ததை செய்தார் என்று மக்கள் நம்பினார்கள்.

அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை மக்கள் எண்ணிபார்த்தனர்.

விஜயகாந்த்: கருணாநிதி நன்றி செலுத்தவேண்டிய முதல் நபர் இவர்தான். முன்பு ரஜனிகாந்த் செய்ததை போல நன்மை செய்துள்ளார்.

பா.ம.க வின் தோல்வி:

வன்னியர் அதரவு சுருங்குகிறது. அதை விஜயகாந்த் பங்கு போடுகிறார்.

தேர்தலை வியாபாரம் ஆக்கியவர்.

இதில் ராஜிய சபா சீட்டு வேறு ஒன்று வேண்டுமாம் ( அன்புமணிக்கு)

சந்தர்ப்ப வாதம் மக்கள் விரும்பவில்லை.

பா.ம.க அமைச்சர்களின் சாதனைகளை முன் நிறுத்தி பிரச்சாரம் செய்யவில்லை.

வைகோவின் தோல்வி:

தன்னை 18 மாதங்கள் சிறையில் அடைத்த ( இதே இலங்கை பிரச்சனைக்காக) ஜெயாவின் பின்னால் சுற்றுவதை மக்கள் விரும்பவில்லை.

தமிழ் தீவிரவாதிகளை மற்றும் தீக்குளிப்பதை மக்கள் விரும்பவில்லை.

காங்கிரசஸ் தலைவர்கள்:

1996 க்கு பின்னர் அதிக சீட்டுகள் வாங்கி காங்கிரசஸ் ஆட்சி அமைக்கும் போது தோற்ற துரதிஷ்டமான தமிழக காங்கிரஸ் தலைவர்கள் :

இளங்கோவனுக்கு தேர்தலின் பொது தான் கருணாநிதி தெரிவார் . கலைஞருக்கு தமிழகத்தில் குடைச்சல் கொடுத்த கூட்டணி தலைவர் ( ராமதாசுக்கு அடுத்தபடி)

மணிசங்கர் : டில்லி வாலா.

தங்கபாலு: தொண்டரில்லா தலைவர்.

சிதம்பரம்: வெறும் MP தான் இந்த முறை ( நோ அமைச்சர்)

பிரபு: யார் இவர் என்று மக்கள் கேட்கும் தலைவர்.( நீலகிரி தாண்டினால்)

தங்கபாலு: தமிழக காங்கிரஸ் தலைவராம்இவர்.

சாருபாலா : பாவம்.

தா.பாண்டியன்: ஒரே கையெழுத்தில் இரண்டு லக்ஷம் பேரை வீட்டுக்கு அனுப்பிய ஜெயாவை ஆதரிக்கும் தோழர்.

Ki said...

Nandri idilly vadi

Ki said...

Nanbar idilly vadai avargaley area wise details koduthal innum nandraga irukum.

S Suresh said...

another congress government..... ruling many times after the independence... what they did for the country is NOTHING? Is there a chance to bring back the money from swiss account.? Will new CONGRESS GOVERNMENT ask the details from swiss bank?

Anonymous said...

*You have done in very good job. we felt we were in some street corner with lot of friends follwing the results and discussing about it. Interent has to be thanked but more than that the way it was used to bring thousands of persons in one place to help follow the results is great. thanks to Sri ( Sriamthi?) Idly-Vadai. I ahveonly one advice: the comments shoud not degenerate into 'kuzhai adi' level. There can be fun, leg pulling, harsh views but the level should not be cheap or base. At any rate it was a great opertion where the opertion was successfuly but lo! the patient ( democracy) died!--
Dilli Palli

Vikram said...

IV,
Good work - though I was a bit disappointed that you turned off the chat for "general users"!

Now that the results are out,waiting for your prediction on the portfolios - hope you get it right this time :-)