பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 13, 2009

அரசியல்வாதி - டயப்பர் - என்ன ஒற்றுமை ?

தமிழகம், புதுச்சேரியில் என்று 40 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடக்கிறது.

4 கோடியே 16 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 40 தொகுதிகளிலும் 852 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நீங்கள் செய்ய வேண்டியது உங்க பூத்துக்கு சென்று உங்கள் ஓட்டை பதிவு செய்து உங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். நிச்சயம் நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

தேர்தல் மை கொசுறு: மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் நிறுவனம் தான் இந்த தேர்தல் மை சப்ளை செய்கிறது. 10மிலி கொண்ட 20 லட்சம் பாட்டில்கள் பயன்படுத்தப் போகிறார்கள். ஒரு பாட்டிலில் 700 வாக்காளர் கைகளில் அடையாளம் வைக்கலாம். பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்துக்கு மட்டும் சுமார் மூன்று லட்சம் பாட்டில்கள்!. குறைந்த அளவு லட்சத்தீவுகளுக்கு வெறும் 120 பாட்டில்கள்தான்.

கீழே விடையை படித்துவிட்டு ஓட்டு போட செல்லுங்கள். நன்றி.


இரண்டையும் அடிக்கடி மாற்றவேண்டும். காரணம் ஒன்றே!

17 Comments:

அஞ்சா நஞ்சன் said...

90% 100% என்றெல்லாம் நம்ம ஊரில் வாக்குப்பதிவு நடந்தால் இந்த அரசியல் வியாதிகள் எல்லாம் காணாமல் போய் விடுவர்.

அட பேரா முக்கியம்? said...

// இரண்டையும் அடிக்கடி மாற்றவேண்டும். காரணம் ஒன்றே!
அட, இது நல்லா இருக்கே.

உங்க 'தவறாமல் வாக்களிப்போம்' பதிவுல வந்தவரு மூக்குல விரல் வச்சிருந்ததுக்கு அதுதான் காரணமா? :-) அதுக்குள்ள, நம்ம மாலன்ல இருந்து எத்தன பேரு கோவிச்சுகிட்டாங்க பாருங்க.

லவ்டேல் மேடி said...

நல்லது...!!! முடிந்தால் ... வயதானவர்களுக்கு மையை கொண்டு ஹேர் டை கூட அடித்து விடலாம்........!!!

பாட்டில் கணக்கு நெறையா காட்டலாமே.......!!!!

மாயவரத்தான்.... said...

இல்லாங்காட்டி நாறிடும்!

Erode Nagaraj... said...

இட்லி அண்ணே,
டயப்பர் நாம் செய்யும் "காரியத்தால்" மாற்ற வேண்டியதாகிறது.
அரசியல்-வ்யாதியை, அவர் செய்யும் "காரியத்தால்" மாற்ற வேண்டியதாகிறது.

Erode Nagaraj... said...

வோட்டு போடுங்கள், ஆனால் வெளியே வந்து இவர்களைப் "போல்" செய்யாதீர்கள்... நல்லதொரு குடும்பம்; பல் "கலை" கழகம்...

http://news.sawf.org/Bollywood/57876.aspx

Anonymous said...

மக்கள் டிவியில் இலங்கை அவலம் பற்றிய சிடி ஒளிபரப்பியதால் தான் அதை மக்கள் பார்க்க முடியாதவாறு மின் தடை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் சதி என திமுக சேம் சைட் கோல் அடித்ததே ? இன்னும் என்னவெல்லாம் நாடகம் பாக்கி இருக்கோ ?

தண்டோரா said...

எங்கள் தெருவில் 48 பேர் விடுபட்டுவிட்டது(என் பெயரும்)..ஒட்டு போட முடியவில்லை..2004,2006,2007(உள்ளாட்சி தேர்தல்) வாக்களிதேன்.இத்தனைக்கும் அதே நிரந்தர முகவரி..இந்த முறை பெயர் இல்லை.(பரிசு கிடைக்க பெற்றேன்..நன்றி)

IdlyVadai said...

//எங்கள் தெருவில் 48 பேர் விடுபட்டுவிட்டது(என் பெயரும்)..ஒட்டு போட முடியவில்லை..2004,2006,2007(உள்ளாட்சி தேர்தல்) வாக்களிதேன்.இத்தனைக்கும் அதே நிரந்தர முகவரி..இந்த முறை பெயர் இல்லை.//

தன் பெயர் இருக்கா என்று முன்பே சரி பார்த்திருக்க வேண்டும். எதற்கும் உங்க பெயர் வேறு எங்காவது இருக்கா என்று பாருங்கள். எனக்கு அந்த அனுபவம் உண்டு.

//(பரிசு கிடைக்க பெற்றேன்..நன்றி)//
அப்பாடா!

Erode Nagaraj... said...

//(பரிசு கிடைக்க பெற்றேன்..நன்றி)//

enna parisu?

மணிகண்டன் said...

இது என்ன வாக்குபதிவுல default வச்சா அதுக்கே எல்லாரும் vote பண்ணுவாங்கன்னு ட்ரை செய்யறீங்க போல ! திடீர்ன்னு ரேணு லீடிங் போனதை சொன்னேன் !!!! எல்லா தேர்தல்லையும் தில்லுமுல்லா ?

Ki said...

Nalla Comparisam Idly

Anonymous said...

This happened for my friend:

During Name verification, all the family member's name was there.. but today, only his mother name was there and none other names found.

It would be fine, to tell us how to face these kind of issues..

Anonymous said...

அரசியல் வியாதிகள் = "reusable" diaper. (சுழற்சி முறையில்).

தண்டோரா said...

வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ..அது போல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம் என்று தெரிந்து கொண்டேன்..இருந்தாலும் சும்மா இருக்க வில்லை..ஒரு சுற்று போய் வந்தேன்..நான் பார்த்த வரை "அதிர்ஷடபார்வை"சூரியனுக்கு கம்மிதான்..தென் சென்னை தொகுதியில் இருக்கும் சொந்தங்களுக்கு (100 நபர்கள்)பேசினேன்...இல...இல்லை..இலைக்கே..பம்மல்,,பல்லாவாரம் பிரியாணி கடைகள் மிக பிஸி..ஆனால் ஒன்று..வெட்டுபவன் அய்யாவாக இருந்தாலும் அவை "அம்மா" என்றே கத்தியது.மதுரையில் சுமார் 40,000 வாக்கு வித்தியாசத்தில் அழகிரியும்.
தஞ்சையில் சுமார் 25000 வாக்கு வித்தியாசத்தில் பழனியும் ஜெயிக்க கூடும்..துரை,பாலகிருஷ்ணன்..மோகன் ஜெயித்தாலும் அதே வித்தியாசம் தான்..நீலகிரி(நண்பர் சொன்னபடி ராசா நிச்சயம் தோற்கிறார்(18000 - 25000)..மதுரை,மத்திய சென்னையில் கேபிள் கட்டணம் 2 வருடம் இலவசமாம்..

Anonymous said...

After the voting all the politicians are showing middle finger.Must be symbolic.

Anonymous said...

I wish DMK and ADMK to loose terribily in these elections.

We need new people in governance.