பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 11, 2009

மின்சார பற்றாக்குறையும் கருணாநிதியின் முயற்சியும் - உமா

நானே கேள்வி நானே பதில் டைப்பில் மின்சாரம்... ( நன்றி: உமா )

மின்சாரம் என்பது என்ன?

மின்சாரம் என்பது மிக சுலபமாக யாவரும் ( குழந்தைகள் உள்பட) உபயோகிக்கக்கூடிய சக்தியாகும். பெட்ரோல், மண்ணெண்ணெய் ,விறகு, எரிவாயு , சூரிய சக்தி போன்றவை மற்ற சக்தி வடிவங்களாகும்.

மின்சாரத்தை எப்படி உற்பத்தி செய்கிறார்கள்?

அனல் மின்சாரம், நீர் மின்சாரம், அணு மின்சாரம், காற்றாலை ஆகிய வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது.

மின்சார பற்றாகுறை ஏன் ஏற்படுகிறது?

அனல் மின் நிலையம் , அணு மின் நிலையம் வருடம் முழுவது இயங்கும். நீர் மின்சாரம் நமது ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளில் தண்ணீர் திறந்து விடப்படும் போது உற்பத்தி செய்யபடுகிறது. மழை காலங்களில் தான் அவை இயங்கும். இப்போதுள்ள மினசார நிலையங்கள் நல்ல முறையில் இயங்கியும் , நமக்கு தேவையான அளவு மின் உற்பத்தி கிடைக்கவில்லை . அதற்குமின்சார தேவைகள் அதிகமானதே காரணம்.

மின் நிலையங்களை உடனே கட்டி உடனே மின்சாரம் தந்தாள் என்ன?

அது முடியாது. ஒரு மின் உற்பத்தி நிலையத்தை கட்ட ஆரம்பித்தால் அது உற்பத்தி தொடங்க சுமார் 5 வருடங்கள் ஆகும். 5 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மின்சார தொழிற்சாலைகள் தான் இப்போது உற்பத்தி செய்கின்றன.

முன்பு ஜெயா ஆட்சியின் போது ஒரு திட்டமும் தொடங்கவில்லை. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ஜெயங்கொண்டம் மின்சார திட்டம் ஜெயாவின் பிடுங்களால் வீடியோகான் மற்றும் ரிலையன்ஸ் அம்பானிகள் ஓடிவிட்டனர். அந்த ஜெயங்கொண்டம் திட்டம் நிறைவேறி இருந்தால் இப்போது மின் பற்றாகுறை இருக்காது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் பல புது மின் நிலையங்களுக்கு அனுமதி கொடுத்தார். பலவற்றை ராமதாசும் ஜெயாவும் வரவிடாமல் தடுத்து விட்டார்களா. ( கடலூர், ஜெயம்கொண்டம் அவைகளுக்கு உதாரணம்) நில உரிமையாளர்களை கிளப்பி விட்டு ஆர்பாட்டம் செய்யவைத்து அவைகளை வரவிடாமல் செய்து விட்டார்களா.

முன்பிருந்து நன்கு இயங்கி வரும் நெய்வேலி மின்சார நிலையத்துக்கு நிலக்கரி கிடைக்க விடாமல் சுரங்கங்களுக்கு நிலம் கொடுத்தவர்களை தூண்டி விட்டதும் அவர்கள் தான். பின்னர் கருணாநிதியின் முயற்சியால் அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு இப்போது முழு அளவில் அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது.

இப்போது பல புது திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் மூன்று மிகப்பெரிய திட்டங்களும் , நெய்வேலியில் இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்கமும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மற்றும் எண்ணூர், செய்யாறு ஆகிய இடங்களில் NTPC திட்டங்கள் வருகின்றன.

அவை முடிய சில வருடங்கள் ஆகும். அதன் பின்னர் மின் பற்றாகுறை வராது. ஆனால் அப்போது கருணாநிதி இல்லாமல் இருந்தால் ஜெயா ஆட்சியில் இருந்தால்நான் தான், நானே தான், எல்லாம் என்னால் தான் என்று தம்பட்டம் அடிப்பார் என்பது தான் கொடுமை .

புது திட்டங்கள் கட்ட எந்த தனியார் நிறுவங்களும் முன் வரவில்லை. கட்டுபடியாகும் மின்சார கட்டணம் கிடைக்காததே அதன் காரணம். ஜெயாவும் , ராமடாசும் மின் கட்டணத்தை ஏற்றும் போதும் எதிர்த்து மக்களை கிளப்பி விட்டதால், சரியான மின்சார கட்டணம் தர தயாராக உள்ள தொழில் சாலைகளும் மின்சாரம் கிடைக்காமல் அவதிப்படுகின்றன.

அதுவரை காத்திருக்க முடியுமா? இடைக்கால தீர்வு என்ன?

அதற்கு ஒரு நல்ல தீர்வான வார விடுமுறை நாளை மாற்றியமைத்து பீக் நேர மின்சார தேவையை மட்டுபடுத்த , அரசின் கோரிக்கைகளை அவர்கள் ஏற்கவிடாமல் தடுத்ததும் இந்த கோஷ்டியே . இப்போது மின்சாரம் அதிகமாகி ( காற்றாலைகள் இயங்க தொடங்கியதால், ஆடி காற்று அடிக்க ஆரம்பித்தால்) மின்சாரம் தொடர்ந்து (கூடுமானவரையில்) தருவதை தாங்க முடியாமல் பிதற்றுவதும் அவர்களே.

மின் வெட்டு மற்றும் லோடு ஷெட்டிங் என்றல் என்ன?

மின் வெட்டு என்பது மின்சார வாரியம் மின்சாரத்தை நிறுத்தாது.ஆனல் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டஅளவைவிட அதிகம் உபயோகித்தால் அதற்கு அபராதம் உண்டு. மின் வெட்டை அரசாங்கம் அறிவிக்கும்.

லோடு ஷெட்டிங் என்பது மின்சாரத்தை ஒழுங்கு படுத்த ( voltage, frequency) மின்சாரத்தை சில இடங்களுக்கு நிறுத்துவது. அப்படி செய்தால் தான் , நம்மிடம் உள்ள மின் உபகரணங்கள் பழுதடையாது.

இப்போது கரண்ட் கட் ஆவதற்கு காரணம் அதுதான். மின்வெட்டு அல்ல. மின் வெட்டை அரசாங்கம் அறிவிக்கும். லோடு ஷெட்டிங் அறிவிக்க முடியாது. அது எப்போது வேண்டுமானாலும் மின்சார ஒழுங்கு முறைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.

பின் குறிப்பு:
இந்த விஷயங்கள் மின் துறையில் வேலை செய்யும் எனது உறவினர் சொல்லியதிலிருந்து நான் புரிந்து கொண்டது.


வரும் ஆனா வராது அது என்ன ? - பில் வரும், கரண்ட் வராது :-)

27 Comments:

Anonymous said...

துக்ளக்கில் சில/பல மாதங்கள் முன்பு இதே பிரச்சனை பற்றி வேற்றுக் கருத்து வந்ததாக நினைவு. முடிந்தால் அதையும் போடவும்.

Anonymous said...

science பரீட்சைக்கு prepare பண்ணறதுக்கு நோட்ஸ் மாதிரி இருக்கு.

என்ன, அங்க இங்க கொஞ்சம் "political" science மாதிரி இருக்கு!!

:-D

Anonymous said...

நாட்டுல "மின்சாரத்" திருட்டு (உதாரணம் அரசியல் பொதுக்கூட்டங்கள், வழி நெடுகிலும் tube-lights, etc.,) ஒழிக்கப்படவேண்டும்.

பெரிய நிறுவனங்களுக்கு, especially the continuous processing plants, அவர்களே மினி-plants வைத்துக்கொள்ளவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, "transmission loss"-ஐ குறைக்க பொறியாளர்கள் நல்ல வழி காண வேண்டும்.

வீடுகளுக்கும், சிறு தொழில் செய்யும் தொழிற்ப் பேட்டைகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

டன்மானடமிழன் said...

உன் குற்றமா
என் குற்றமா
யாரை நானும் குற்றம் சொல்ல

எப்படி இருந்த
இட்லிவடை இப்படி ஆயிடுச்சே...

கால கொடுமையா ?
வெய்யில் கொடுமையா?

கலைக்கோவன் said...

ஒரே அரசியல் வாடை அடிக்குது..,
எழுதினவர் தி.மு.க காரரோ...,

Anonymous said...

Ms.Uma had written a very correct post and textbook answer. How politicians sabotage development schemes is brought out nicely.
However,as a citizen, I am not satisfied with the Govt. response, because..
1. The Govt. fully aware of its generation capabilities, demand and expected shortages
2.TNEB is one of few EB in India not reorganised for better management.Generation,Transmission and distribution was to be segragated and managed.
3.Transmission loss minimisation and electricity theft prevention was not given priority.
4.Captive PP of private industry was not given concessions and better utilised.
5.Like Jaya's rain harvesting scheme, solar water heaters for houses and flats not made compulsory.
6.Using the clout in the center, more power could have been bought from central grid.

If there had been a will, there would have been a way.

UMA said...

என்னுடைய கட்டுரையை பிரசுரித்ததற்கு மிக்க நன்றி. இப்படி தெரிந்திருந்தால் புள்ளி விவரங்கள் சேகரித்து கொடுத்திருப்பேன்.

Payam Ariyan said...

கலைஞர் >> ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தேர்தலுக்கு அப்புறம் பாத்துக்கலாம்...

UMA said...

கருணாநிதியின் முயற்சியால் எடுத்துகொள்ளபடும் தமிழ்நாடு திட்டங்கள்:


1. மேட்டூர் - III- 600 MW

2. வட சென்னை- 1200 MW

3. நெய்வேலி -2 விரிவாக்கம்-500 MW

4. துத்துக்குடி ( NLC & TNEB)-1000 MW

5. NTPC இன் வல்லூர்(எண்ணூர்)-- 1000 MW

6. NTPC இன் உடனகுடி( சூப்பர் கிரிடிகல்) -- 1600 MW

ஆதாரங்கள் ( அரசாங்க வலை )

1. http://www.cea.nic.in/thermal/project_monitoring/BS%20TN.pdf.


2. http://www.cea.nic.in/thermal/project_monitoring/BS%20NLC.pdf


3. http://www.cea.nic.in/thermal/project_monitoring/BS%20NTPC.pdf

4. http://www.tneb.in/jv2.php

Senthilvel S P said...

hmm nice writeup...about electricty vs karunanithi

keep up

கலைக்கோவன் said...

//Neyveli TPS-II Exp.*
NLC
(Distt. Cuddalore, TN. )
500
U-1 250 11/08 02/09 02/10 06/10
U-2 250 03/09 06/09 05/10 09/10
Date of TEC 19.8.02
Date of Sanction 18.10.04//

உமா அவர்களுக்கு..,
உங்க Data படி
2004-ல் நெய்வேலி TS-2 Expansion
Sanction ஆகி இருக்கிறது..,
அப்போ கலைஞரோட ஆட்சியா?

ஏனெனில் நெய்வேலியில்
எந்த ஒரு கட்சியும்
மின் திட்டத்தை எதிர்த்து
போராடியதாக செய்தி இல்லை..,
NLC -யில் நிலமிழந்தவர்கள் தான்
போராடி வருகிறார்கள்..,

நீங்கள்
ஜெவையோ ராமதாஸயோ
வேறு பிரச்சனைகளில்
விமர்சியுங்கள்..,

UMA said...

1.அரசாங்கம் மின்சார கட்டணத்தை உயர்ததாதனால் தனியார் யாரும் மின் நிலயம் அமைக்க முன்வரவில்லை. அவர்களுக்கு லாபமும், நிச்சயமான மாதந்திர பணமும் மின் வாரியத்திலிருந்து வருமா என்ற சந்தேகம் உள்ளது.
ஏனெனில் மாதந்திர கணக்கு போட்டால் மின்சார வாரியத்துக்கு பில் முலம் வரும் வரவை விட நிலக்கரி வாங்கும் செலவும் , மத்திய தொகுப்பில் ( நெய்வேலி, ராமகுண்டம், கல்பாக்கம்)இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு கொடுக்கவேண்டிய பில் பணம் வரவை விட அதிகம்.

தனியார் கடன் வாங்கித்தான் மின் திட்டம் ஆரம்பிப்பார்கள். போதிய வருமானம் நிச்சயம் இல்லாததால் யாரும் கடன் கொடுக்க முன் வரவில்லை.எனவே தனியார் திட்டம் இங்கு ஒத்து வராது.

2.மின்சார சேதாரம் சுமார் 20 % . இதற்கு காரணம் பழைய மின் சாதனங்களும் மின் திருட்டும் ஆகும். புது மின்சாதனங்கள் ( டிரான்ஸ்பார்மர் ) வாங்க பணம் வேண்டும். அது மின் கட்டணங்களை உயர்த்தினால் தான் முடியும்.

3. கேபிடிவ் மின் நிலயங்கள் / கம்பைன்ட் சைக்கிள் கேஸ் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு சுமார் 7 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை. அதை வாங்கி மின்சார வாரியம் நஷ்டத்துக்கு விற்க முடியாது. சில தொழிற்சாலைகள் அதை வாங்கி பயன் படுத்துகின்றார்கள்.

4. சூரிய சக்தியை பயன்படுத்த விலை உயர்ந்த உபகரணங்கள் வாங்க வேண்டும். அதை விலை கொடுத்து மக்கள் வாங்க மாட்டார்கள்.

5. குண்டு பல்புக்கு பதில் CFL பல்பு அனைவரும் மாறினாலே பாதி வீட்டு மின்சார பில்லை குறைக்கலாம்.
(விலை 150 ரூபாய் )

http://www.bajajelectricals.com/c-189-compact-fluorescent-lamps.aspx

சித்து said...

/*டன்மானடமிழன் said...
உன் குற்றமா
என் குற்றமா
யாரை நானும் குற்றம் சொல்ல

எப்படி இருந்த
இட்லிவடை இப்படி ஆயிடுச்சே...

கால கொடுமையா ?
வெய்யில் கொடுமையா?*/

Repeatu...

வெளி நாட்டுக் கம்பெனிங்களுக்கு Subsidy மின்சாரம் இலவச நிலம் இன்னும் என்னனவோ சலுகைகள் ஆனால் உள்ளூர் தொழில்கள் எந்த சலுகையும் கிடையாது, அட விவசாயம்?? கேட்டா விவசாய கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம்னு சொல்வீங்க. சரி கடன் தள்ளுபடி செஞ்சதுக்கு அப்புறம் உற்பத்தி எந்த அளவுக்கு கூடியிருக்கு?? விவசாயிகள் தற்கொலை எவ்வளவு குறைந்துள்ளது??

See the ground reality and then speak ppl. Goto 3 tier cities and villages then u know how these ppl are suffering. For the past 2 weeks no power cut anywhere (as far as i heard in specific areas), then how is this possible??

UMA said...

மின்சாரத்துறை சீரமைப்பும் மன்மோகன் அரசும்:

இந்தியாவில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் மின்துறை ஒழுங்குமுறை ஆணையத்தால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நமது தென் மண்டலத்துக்கு பெங்களூரில் தென் மண்டல மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது ( SRLDC)

அங்குள்ள மிக பெரிய கணினி திரையில் தென் இந்தியாவில் உள்ள அனைத்து மின் நிலையங்களின் மின் உற்பத்தி ( ON LINE ) தெரியும். அதை தொடர்ந்து அங்கு கண்காணிப்பார்கள். மின் உற்பத்தி குறைந்தால் உடனே எச்சரிப்பார்கள்.

அதற்கு அபராதமும் உண்டு. அபராதம் அந்த 15 நிமிட நேரத்துக்கு என்ன frequency என்பதை பொறுத்து அமையும். சில சமயங்களில் அது ரூபாய் 10 ஆக கூட இருக்கும்.

கடந்த பல வருடங்களாக பேசப்பட்ட மின் துறை ஒழுங்குமுறை ஆணையம் மன்மோகன் அரசால் முழுவதுமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் மின்சாரம் தேவைப்படும்போது அதிக மின் உற்பத்தி. தேவை குறையும் பொது குறைந்த மின் உற்பத்தி என்பதாகும்.

இதன் ஆரம்பமாக எல்லா மின் உற்பத்தி நிலையங்களும் ஆன்லைனில் மின் துறை ஆணையத்துடன் இணைக்கப்பட்டன. மின்சார உற்பத்தி தகவல்கள் உடனுக்குடன் ஆணையத்தில் தெரியவரும்.

ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும் தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதன் இஷ்டப்பட்ட விலைக்கு விற்க முடியாது. மதிய மின்துறை ஆணையம் விலையை முன்கூட்டியே நிர்ணயித்து அறிவித்துவிடும்.

அந்த விலை ஒரு வருடம் அமலுக்கு இருக்கும் . அந்த விலை மின்சார நிலையத்தை அமைக்க ஆன செலவுடன் ( fixed cost ) நிலகரி செலவு முதலான செலவுகளை ( variable cost) கணக்கில் எடுத்து அறிவிக்கும்.

ஒரு நாள் என்பது 96 பதினைந்து நிமிட பிளாக்குகளாக பிரிக்கப்படும். நடு இரவு 12 மணிக்கு முதல் பிளாக் ஆரம்பித்து அடுத்த நடு இரவு 12 மணி வரை 96 வது பிளாக் முடியும்.

ஒவ்வொரு மின் நிலையமும் அடுத்த நாள் மின்சார உற்பத்தி திட்டத்தை ஆணையத்துக்கு பிளாக் வாரியாக முறைப்படி அறிவிக்கவேண்டும். அதே போல் மின் உபயோகிப்பாராகிய மின் வாரியமும் தனது தேவையை அறிவிக்க வேண்டும்.

அதன்படி அடுத்த நாள் மின் உற்பத்தியும் , மின் தேவையும் இருந்தால் எல்லாம் சரி. ஆனால் எதிர்பாராதவிதமாக ஏதேனும் பிரேக் டவுன் ஏற்பட்டு அல்லது நிலக்கரியின் தரம் மாறினால் மின் உற்பத்தி குறையும்.
அதற்கு அபராதம் பல மடங்கு. உற்பத்தி குறைவுக்கு காசும் கட்டு அபராதமும் வேறு. எனவே அனைத்து நிலையங்களும் ஒழுங்காக மின்சாரத்தை சீராக குறையாமல் உற்பத்தி செய்யவேண்டும்.

அதே போல் மின்சார வாரியமும் மின் தேவைக்கேற்ப வினியோகிக்க வேண்டும். ஏதேனும் ஒரு இடத்தில் அதிக மின்சாரம் இழுத்தால் உடனே அந்த லயனை கட் பண்ண வேண்டும். அப்படி செய்து தங்கள் கொடுத்த தேவை படி உபயோகிப்பதை உறுதி செய வேண்டும். மீறினால் அபராதம் தான். அதுவும் பல மடங்கு.

இவ்வாறு மின் உற்பத்தியும் , மின் வினியோகமும் திறம்பட சமாளித்தல் மின்சார தரம் / அளவு சரியாக இருக்கும். அதாவது frequency/ voltage லிமிட்டுக்குள் இருக்கும்.

இதன் காரணமாக மின் வாரியம் , மின் தட்டுப்பட்டு வரும் பீக் நேரமான மாலை 6 முதல் 9 மணி வரை மிகுந்த சிரமப்படும். அப்போது நீர் மின் நிலையத்தை ஆரம்பித்து ஒரு முன்று மணி நேரம் உற்பத்தி செய்து அதிக தேவையை சமாளிக்கும்.

இது இப்படி இருக்கும் போது, அடுத்த பிராபளம் இரவு 3 மணி முதல் 5 மணி வரை
மின் தேவை இல்லாமல் எல்லா அளவும் ( frequency, voltage) எகிரி விடும். அதை சமாளிக்க சில மின் நிலையங்களில் உற்பத்தியை குறைக்க வேண்டும். அப்போது உற்பத்தி காசு அதிகம் வரும் மின் நிலையத்தையே நிறுத்தவேண்டும். அது அனேகமாக தனியார் நிலையமாக தான் இருக்கும். போன வருடம் பல நாட்கள் அது போல பல நிலையங்கள் ( CGPP) நிறுத்தப்பட்டு இருந்தன.

நெய்வேலியில் டிசம்பர் மழையில் சுரங்கத்தில் வெள்ளம் புகுந்ததால் மின் உற்பத்தி அடியோடு நின்று பவர் கட் வந்தது. அதை உடனடியாக சரி செய்து மழை விட்ட உடன் மின் உற்பத்தி ஆரம்பமாகி பொங்கலுக்குள் முழு உற்பத்தி அடைந்தது.

இதில் அரசாங்கமும் , மின் வாரியமும், மின் நிலையங்களும் முழு கண்காணிப்பாக இருப்பதால் மின்சாரம் சரியாக உற்பத்தி செய்யவில்லை என்பது ஒரு புரட்டு குற்றசாட்டு
( ராமதாஸ் மற்றும் ஜெயா கோஷ்டியின்). மின் வெட்டு யாரும் விரும்பி வருவதில்லை.

பெட்ரோல் விலை ஏறும்போது நாம் நடந்து கடைக்கு செல்வது போல மின்சாரம் இல்லாத போது பழைய முறையான விசிறியை உபயோகிக்க பழக வேண்டும். தேவையற்ற மின் விளக்கை , மின் விசிறியை அணைக்க வேண்டும்.

Kannan S said...

-You people won't believe.. but still I am seeing, my company is running generators for 6-10 AM and PM to avoid over billing..

this has been given an order (threattened) to my company. What happened to the power, we used before this shortage?

This inturn creates Diesel shortage, which whole chennai met few months back..

Can you recall this ?

Baski said...

அடடே ! பிரமாதமான பேத்தல்.

இதிலே ஆற்காட்டார் அடித்த "மின்சார கான்ட்டிரக்ட்" ஊழல் பற்றியோ, நிலக்கரி இறக்குமதி ஊழல் பற்றியோ ஒரு வரி கூட இல்லை.

ஜெ வும் , மு.க வும் எந்த ஒரு விசயத்தையும் ஆதாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள்.

என்னுடைய உறவினர் கூட மின்சார வாரியத்தில் உயர் பதவியில் இருந்தவர் தான். அவர்களோட அபிப்ரயம் படி ஜெ வோட நிர்வாகம் நன்றாக இருந்ததாம்.

ஜெ இன் முதல் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல தவறுகள் செய்தார். அனால் இரண்டாவது முறை பொறுப்பேற்ற பொது அதை திருத்தி கொண்டதாக உணர்கிறேன்.

ESMA, TESMA போன்றவை நல்ல நிர்வாகத்தின் சான்றுகளாகவே நான் நினைக்கிறன்.

ஆனால் மு.க வின் ஆட்சி முதலின் நன்றாக தான் இருந்தது. இப்போ
குடும்ப அரசியல்.
ஓட்டுக்காக "இலவசங்கள்" - வீண் பணம் செலவு. நல்ல காரியங்களுக்கு பயன்படுத்திருக்கலாம்.
ஊழல் தலைவிரித்தாடுகிறது.
சட்டம் ஒழுங்கு நாறிவிட்டது.

என்ன மு.க எப்பவுமே தெளிவாக மத்தியஅரசில் காய் நகர்த்துவார்.

ஆனால் ஜெ விற்கு அது தெரியாது.

என்னை பொறுத்த வரை ஜெ இன் நிர்வாகம் மு.க விட நல்லாவே இருக்கும்.

இருவரும் ஓட்டுக்காக எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் கீழ் இறங்கி கீழ்த்தரமாக போகக்கூடியவர்கள்.

எனக்கு தெரிந்து கேப்டன் இப்படி கீழ்த்தரமாக இதுவரை செல்லவில்லை. அவரோட நிர்வாகம் ஜெ வோட நிர்வாகத்தை விட நன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது.

Rama Krishnan said...

உமா நெய்வேலி சிறுத்தைகளின் அடியாளம்.திமுக கூட்டணிக்காக கொஞ்சம் உறுமுகிறது. ஒன்னும் தெரியாத விஷயங்களை எப்படியும் பயன்படுத்திகொள்ளலாம். யாரும் கேட்கப்போவதில்லை. ரோடு போடுவது,பாலம் கட்டுவது, தகவல் தொடர்பு வளர்ச்சி எல்லாமே காலத்தின் தேவைகள். யார் ஆட்சி என்றாலும் வரப்போவதுதான். ஆனால் அவரவர் ஆட்சியில் வந்தது என்று பீற்றிகொல்வார்கள்.அதிகாரிகளுக்குதான் தெரியும் -குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டதுதான் இன்றைய திட்டங்களாக வரும் என்பது. மின்சாரம் சரியாக உற்பத்தி செய்யவில்லை என்பது ராமதாஸ் மற்றும் ஜெயா கோஷ்டியின்ஒரு புரட்டு குற்றசாட்டு என்றால் அரசின் திட்டங்கள் அனைத்தும் கருணாநிதி கொண்டு வந்தவை என்பதும் ஒரு வடி கட்டிய புரட்டு சாதனைதான்.

Anonymous said...

உமா! உங்களை எப்படி பாராட்டறதுன்னே தெரியல! குப்பற படுத்தப்பறமும் மீசைல மண் ஒட்டலன்னு சொல்றீங்க? இதுக்கு மேல கலைஞருக்கு கூஜா தூக்க முடியாதுங்க!

Mohan said...

UMA and IV,

CFL is not the best solution for energy and environment. CFL is dangerous in terms of ultraviolet radiation, radio frequency radiation and high mercury content.

What is the real energy cost of a CFL? What does it cost to mine, manufacture, package, ship, sell, operate, dispose of CFLs on the environment? These are questions ignored by CFL promoters (UMA).

Very few research and awareness programs were conducted in India. That does not mean CFL is best. Check this out, Mercury pollution in Kodaikanal - http://www.greenpeace.org/india/campaigns/toxics-free-future/toxic-hotspots/kodaikanal-tamil-nadu

http://www.sipcotcuddalore.com/pr_210807.html

LED (Light Emitting Diode) street lighting is the future because of very low maintance, energy efficient and environmentally friendly. LED take up to six times less power than CFL.

Why not TN government setup a factory to produce LED street lamps and other indoor lamps for government uses? They wouldn't do that, because the regular local contractor cannot milk money from EB, corporation and panchayats for supply and maintenance.

Switching to LEDs could save more energy than CFL and is more clean.

For (Hamara) Bajaj and (Hindusthan) Lever patriotism is business.

UMA said...

அரசாங்க பல்பு கேட்கும் மோகனே , நீங்கள் அரசாங்கம் தயாரிக்கும் மருந்துகளை உபயோகித்திருக்கீர்களா? .

இந்திய மருந்து கழகமும் IDPL
( http://www.idpl.gov.in/home.html )

ராஜஸ்தான் மருந்து கழகமும் RDPL
(http://www.rdpl-india.in/index.htm )

அனைத்து மருந்துகளும் சத்துணவு மாத்திரைகளும் தயாரிக்கிறார்கள். தெரியுமா?
நாங்கள் அதை உபயோகிக்கிறோம். விலை குறைந்த, நல்ல தரமான மருந்துகள் அவை.

அது சரி அரசாங்க மருத்துவ மனைக்கு மருத்துவத்திற்க்காக செல்வீர்களா? அல்லது தனியார் மருத்துவ மனைக்கு செல்வீர்களா?

நாங்கள் அரசு மருத்துவ மனைக்கு தான் செல்வோம். ஆனாலும் நலமாக தான் இருக்கிறோம்.

UMA said...

Mohan,you are correct.But expecting Govt to start manufacture of LED lamp is too much.First step is to start using available CFL lamps in small way in the houses and then go for change latter to LED lamps as and when available.In my village we are already using CFL lamps in bathe rooms and toilets. We are also using LED Torch Light.

Regarding Govt action, I want to say that during the last election Jeya critisised the construction of over bridges in Chennai and has put garland who used over bridge in the Jaya TV show as a joke.

Nobody in Chennai condemned her.

UMA said...

எல்லா அரசியல் வாதிகளும் கொள்ளையர்கள் தான். அதில் எது நமக்கு யார் சில பல நன்மைகள் செயிகிரார்களோ அவர்களை தேர்ந்தெடுத்தால் நமக்கு நன்மை. அங்கு கருணாநிதி குடும்பம் கொள்ளை அடிக்கும் என்றல் இங்கு சசிகலா குடும்பம் கொள்ளை அடிக்கும். ஆற்காட்டார் கொடுத்த பெட்டியை பண்ருட்டி வேல்முருகன் ராமதாசிடம் கொடுக்காததால் கடலூர் மின் திட்டம் வரவில்லை. டாட்டா பெட்டி தராததால் ,( ramadas, jeya, vaiko panku ) டாட்டாவின் டைட்டானியம் திட்டம் வரவில்லை.

Note: எல்லாம் கேள்விப்பட்டது
( எனக்கு ஒன்றும் தெரியாது)

Prabhu said...

உமா அவர்களே.

இப்ப இருக்கிற பிரச்னை க்கு ஜெ தான் காரணம். சரி. அப்படி பார்த்தா கொஞ்ச நாளைக்கு முன்னாடி மன்மோகன் அரசின் சாதனை அப்படின்னு நீங்க ஒரு பட்டியல் கொடுத்தீங்க. அதுக்கு காரணம் அதுக்கு முன்னாடி ஆட்சி செய்த வாஜ்பாயி அரசு தானே? :)

கலைக்கோவன் said...

கருணாநிதி குடும்பம் கொள்ளை
மட்டும் அடிக்க வில்லை..,
தமிழ் நாட்டை இன்னும்
பட்டா மட்டும் தான் பாக்கி
என சொல்லுமளவுக்கு
பிரித்துக்கொண்டார்கள்..,
ஸ்டாலின் வரவை ..,
எனக்கு தெரிந்த வரை
ஜெ கூட குறை சொல்லியதில்லை,
ஏனெனில் ஸ்டாலின் ..,
கட்சிக்காக உழைத்தார் கூடவே
கலைஞர் மகன் என்பதால்
கொஞ்சம் கூடுதல் promotion..,

ஆனால் இன்று
கனிமொழி - ராஜ்ய சபா எம்.பி
அழகிரி - மதுரை முதல்வர்
தமிழரசு - சென்னை முதல்வர்
(சென்னை தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்)

இப்படி...,
படுக்கையில் இருக்கும்
முதியவர் உயில்
எழுதுவது போல் உள்ளது கதை.

வலைஞன் said...

அதெல்லாம் சரி பா!
நாளக்கி ஓட்டை நான் யாருக்கு போடுவது?
துரியோதனனுக்கா ,சூர்ப்பனைக்கா ?

Subramanian said...

//பெட்ரோல் விலை ஏறும்போது நாம் நடந்து கடைக்கு செல்வது போல மின்சாரம் இல்லாத போது பழைய முறையான விசிறியை உபயோகிக்க பழக வேண்டும். தேவையற்ற மின் விளக்கை , மின் விசிறியை அணைக்க வேண்டும்.
//

EBBA...MUDIYALLA.."WHY BLOOD ??SAME BLOOD !!"

THE FACT is LAW AND ORDER and Administration far better in the last JJ Period.

TRY TO DIGEST THE TRUTH. THINK FROM THE LAY MAN STAND POINT.

-Subbu

ஜெகத்ரட்சகன் said...

உமா கேள்விப்பட்டது.....


////ஆற்காட்டார் கொடுத்த பெட்டியை பண்ருட்டி வேல்முருகன் ராமதாசிடம் கொடுக்காததால் கடலூர் மின் திட்டம் வரவில்லை. டாட்டா பெட்டி தராததால் ,( ramadas, jeya, vaiko panku ) டாட்டாவின் டைட்டானியம் திட்டம் வரவில்லை.////


உமா அவர்களுக்கு, கடலூர் மின் திட்டமே ஆற்காட்டாரின் பினாமி எனும்போது...( பிஜியார் எனெர்ஜி சிஸ்டம் ஆணழகன் ஆர்காட் வீரருக்கு சொந்தமானது என்று ஊரெல்லாம் பேச்சு..) மேலும் மேட்டூர் மின்திட்ட விரிவாக்கத்தில் பவர் ஸ்டேஷன் கட்டுமான பணியினை பதினைந்தாயிரம் கோடி மதிப்புடையதை பி.ஹெச்.ஈ.எல் உடன் மட்டும் போட்டியிட்டு வென்றது எப்படி என ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்...
கருணாநிதி மற்றும் அவரின் சிகாமணிகளின் குப்பைகளை கிளறினால் அழுகிய முடை நாற்றம் தான் வரும்.. அது மற்றவர்களை விட மிக மிக அதிகம்...