பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 11, 2009

விஜய.டி. ராஜேந்தர் - கே.பாக்யராஜ் திடீர் சந்திப்பு

சமீபத்தில் திமுகவை ஆதரித்து கள்ளக்குறிச்சி வந்த தி(க)ரைக்கதை மன்னன் கே. பாக்கியராஜும், அங்கு போட்டியிடுகின்ற விஜய.டி. ராஜேந்தர் மற்றும் அவர் மகன் சிம்பு ஆகியோர் சந்தித்து கொண்டார்கள். அவர்கள் பேச்சின் முழு விவரம் இதோ..கே.பா : ஹலோ டி.ஆர் சௌக்கியமா. உங்களை பார்த்தும் ஒரு குட்டி கதை நினைவுக்கு வருது.. ஒரு காட்டிலே ஒரு கரடி..

டி.ஆர் : யோவ் நீ சொல்ற கதை குட்டி. அடிச்சா உடையும் உன் சோடா புட்டி.

கே.பா : சாரி என்ன தனியா நிக்கரிங்களே.. கூட்டணி தேறலையா?

டி.ஆர் : அம்மா,அய்யா ரெண்டு பேரையும் பார்த்தேன். நாற்பது தொகுதியில் எனக்கு செல்வாக்கு உண்டு. அதில் முப்பத்திஒன்பதாவது தரணும்னு சொன்னேன். தரல. இவன் சிங்கம். சிங்கிளா தான் நிப்பான்

கே.பா (மனதிற்குள்) : உனக்கு ஓட்டும் சிங்கிளா தான் விழும்.

கே.பா : ஆனா இந்த தடவ திமுகதான் ஜெய்க்கும். நாங்க கலர் டிவி தரோம். புழுத்த ச்சே பழுத்த அரிசி தரோம். இவ்ளோ எதற்கு. மதுரை பக்கம் இருக்கிற குடும்பங்களோட ஒரு மாசம் மொத்த செலவையும் நாங்க பாத்துகிறோம்.

டி.ஆர் : ஓசி தருவர் எல்லாம் வெற்றி அடையார். கள்ளக்குறிச்சியில் நான் பெரும் படை உடையார். காரணம், நான் விஜய.டி. ராஜேந்திர உடையார்.

(அப்போது சிம்பு அங்கு வந்தார்)

சிம்பு : ஹாய் டாடி. யாரு இவரு

கே.பா : ஐயோ. என்னை யாருன்னு தெரியலையா.

சிம்பு : எனக்கு அரசியலில் நாலு பேரைத்தான் தெரியும். கருணாநிதி தாத்தா. கனிமொழி ஆத்தா. சின்ன மாமா ஸ்டாலின், பெரிய மாமா அழகிரி, சின்ன அங்கிள் தயாநிதி,பெரிய அங்கிள் கலாநிதி.. தட்ஸ் ஆல்.

கே.பா : கண்ணா இப்படியெல்லாம் பேசினா திமுகவில் சீட் கிடைக்காது.

சிம்பு : ஓய நாட்?

கே.பா : உன் பெயர் சிலமபரசன்னு தமிழ்லே இருக்கு. அதை 'ஜெ.கே.சிம்பிஷ்'ன்னு மாத்திக்கணும். இப்போ நீ நடிக்கறத விட இன்னும் கேவலமா நடிக்கணும். அதை நூறு பேர பாக்கவிட்டு, அவங்களுக்கு பிரியாணி போடணும்.

சிம்பு : சாரி அங்கிள். எனக்கு அரசியல் வேண்டம். நான் சின்ன பையன்.

கே.பா : நீ சின்ன பையனா. உன் சமாசாரம் எல்லாம் ஊரே பார்த்தாச்சு. நயந்தாரா உதட்டை எதோ சாம்பார்ல போட்ட முருங்கைக்காய் மாதிரி...

சிம்பு(கோவத்துடன்) : ஸ்டாப் இட். நானும், நயனும் எவ்ளோ புனிதமா, உன்னதமா வாழ்ந்தோம். எங்க அந்தரங்கத்தை பத்தி பேசறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. வேணும்னா நெட்ல ஸ்டில்ஸ் போட்டிருக்கேன். போய் பார்த்துகோங்க.
எதோ அப்பா நல்லது செய்வாருன்னு இங்க பேசவந்தேன்,

கே.பா : இதுவரைக்கும் அப்படி என்ன நல்லது செஞ்சுஇருக்கார் உங்க அப்பா டி.ஆர்.

சிம்பு : மும்தாஜை நம்ம ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கார். இத விட 'பெருசா' என்ன செய்யணும்.

கே.பா : நல்ல பாயிண்ட்டு. கலைஞர் எனக்கு சீட் தருவாருன்னு பார்த்தா, கடைசியிலே பேண்ட்டு போட்ட வெற்றிகொண்டான் மாதிரி ஆக்கிடாங்க.
நானும் உங்க கட்சியில சேர்ந்துவிடுகிறேன்.

டி.ஆர் : மன்சூர் எனக்கு போர்வாள். நீங்க எனக்கு அருவாள்.

கே.பா : நான் ஒரு குட்டிகதை சொல்றேன். சிம்பு, அப்படி பாக்காதே. குட்டி அப்படினா பொண்ணு இல்லை. சின்ன கதைனு அர்த்தம்.ஒரு நாட்டுலே ஒரு ராஜா, அவனுக்கு ரெண்டு மகன்கள்...

சிம்பு : டாடி, இவர் அருவாள் இல்லை. அறுவை வாள். எஸ்கேப்

(அப்பாவும், மகனும் தலை தெறிக்க ஓடியவர்கள்தான், இன்னமும் தொகுதிபக்கம்
திரும்பவில்லையாம், பிழைத்தனர் கள்ளக்குறிச்சி மக்கள்)


ஒளிந்துகொண்டு கே(சு)ட்டது இன்பா

13 Comments:

RVs said...

Do see my post - http://koottanchoru.wordpress.com/2009/03/27/டி-ராஜேந்தர்-தேர்தல்-ஆலோ/

Of course, it was written well before TR decided to contest the polls...

Erode Nagaraj... said...

சரி, ஹிந்து ராம் முதல் பெரும்பான்மையானவர்கள் ஜெயலலிதா அமோக வெற்றி என்று சொல்வதையும் மாநில ஆட்சி மு.க.'விடம்' இருப்பதையும் வைத்துப் பார்த்தால், தேர்தல் நாள் முதல் முடிவு நாள் வரை ஏகப்பட்ட கலாட்டாக்கள் இருக்கும் போலிருக்கிறதே! வயதானவர்கள், பெண்கள் குழந்தைகள், வியாதியஸ்தர்கள் பிரயாணங்களில் உஷார்...

Anonymous said...

boss romba yosikkatheenga
http://tricksdon.blogspot.com/

தண்டோரா said...

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ராமதாஸ் அணி மாறுவதற்கு முன்பாவது நீங்கள் அறிவித்த பரிசு வரும் என காத்திருக்கும் ஏழை?? கமெண்டாளன்

தண்டோரா said...

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ராமதாஸ் அணி மாறுவதற்கு முன்பாவது நீங்கள் அறிவித்த பரிசு வரும் என காத்திருக்கும் ஏழை?? கமெண்டாளன்

IdlyVadai said...

// அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ராமதாஸ் அணி மாறுவதற்கு முன்பாவது நீங்கள் அறிவித்த பரிசு வரும் என காத்திருக்கும் ஏழை?? கமெண்டாளன்//

நேற்றே அனுப்பிவிட்டேன். இன்று அல்லது நாளை கிடைக்கும். கிடைத்தவுடன் சொல்லுங்கள். லேட்டாகிவிட்டது சாரி. அடுத்த முறை டோக்கன் கொடுக்கலாம் என்று இருக்கேன்.

Erode Nagaraj... said...

//கிடைத்தவுடன் சொல்லுங்கள்.//

:)

Anonymous said...

நேருவும் காக்கையும் போஸ்ட்க்கு prize "இன்னும்"அறிவிக்கவில்லை.

ஊர்ல சொல்லறது சொலவடை.
சொன்னத செய்யறது இட்லி வடை!!

(தண்டோரா வாழ்க!)!!

Anonymous said...

sema timing jokes...

thanks to idlyvadai for loughing theropy..

Anonymous said...

அப்பாவும், மகனும் தலை தெறிக்க ஓடியவர்கள்தான், இன்னமும் தொகுதிபக்கம்
திரும்பவில்லையாம், பிழைத்தனர் கள்ளக்குறிச்சி மக்கள்) /

உங்கள் கற்பனை நிஜமாக கூடாதா என
ஏங்குகிறோம்

இவன்
கள்ளகுறிச்சி பொது ஜனம்

Anonymous said...

அப்பாவும், மகனும் தலை தெறிக்க ஓடியவர்கள்தான், இன்னமும் தொகுதிபக்கம்
திரும்பவில்லையாம், பிழைத்தனர் கள்ளக்குறிச்சி மக்கள்) /

உங்கள் கற்பனை நிஜமாக கூடாதா என
ஏங்குகிறோம்

இவன்
கள்ளகுறிச்சி பொது ஜனம்

மஞ்சள் ஜட்டி said...

//நேருவும் காக்கையும் போஸ்ட்க்கு prize "இன்னும்"அறிவிக்கவில்லை.//

உடையாரே ஊ..... லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டுதாம்...

மானஸ்தரே ...! பரிசெல்லாம் வரும்...ம..ம...ஆனா வர்ராது.... வர வர இட்லிவடை சோம்பேறி வடை ஆயிட்டுது..

sweet said...

andha karadi alavukku un status pogala athaane UNMANI