பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 07, 2009

சோனியாவின் தமிழக பிரச்சாரம் ரத்து - பரபரப்பு தகவல்

"எங்களுடன் ஒருமித்தக் கருத்து கொண்ட கட்சியாக அ.தி.மு.க.,வைக் கருதுகிறோம்' என, ராகுல் கொடுத்துள்ள புதுக்குரல், தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனியாவின் தமிழக பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கலக்கம் அடைந்துள்ளது - செய்தி.

ஆனால் உண்மையான காரணம் வேறு ....இட்லிவடை Exclusive..
தற்போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் காயத்ரிஸ்ரீதரை ஆதரித்து காமெடி நடிகை ஆர்த்தி, காமெடி நடிகர் கணேஷ் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இவர்களே நல்ல காமெடி செய்வார்கள் எதற்கு டெல்லியிலிருந்து சோனியா காந்தி என்று கூட்டணி கட்சி தலைவர்கள் நம்புவதாக சொல்லப்படுகிறது.


சோனியா காந்தி தமிழக பிரச்சாரம் ஏன் ரத்து என்று சைடில் ஓட்டு போடுங்கள் :-)

பிகு: சின்ன பாப்பா கலரை பாருங்க - கருப்பு சிகப்பு. அதனால் இந்த செய்தி உண்மை, காமெடி இல்லை !

23 Comments:

Mr. M said...

Voting "All of the above" option illayia ..... I will select that ....

மஞ்சள் ஜட்டி said...

இது ஒண்ணே போதும் ..மு.க வயிற்றில் புளி, புண்ணாக்கு கரைக்க....பேதி தாங்காமல் தான் போயி ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டாரோ?

காங்கிரசை நம்பினோர்க்கு இதுதான் கதி போலும்.. அதான் மாட்டு மருத்துவக்குடி உஷாராக (எங்கு பதவி, பவிசு கிடைக்குமோ) கூட்டணி மாறி விட்டாராக்கும்...

தி.மு.க பாடு திண்டாட்டம் தான்...ஏற்க்கனவே இருக்கிற காங்கிரஸ் கோஷ்டி மோதலில் இது வேற ..இனி ஒரு பய தேர்தல் வேலை செய்ய மாட்டான்..

Bala said...

Reason is very clear, congress wants to join with ADMK after the election, so they started avoiding DMK. Another reason is they know that their alliance will lose in Tamilnadu, so why to waste time and efforts.

Anonymous said...

புலிகள் தங்கள் கடிசி எதிரியாக சோனியாவை நினைத்திருப்பதாக உலவுத்துறை தகவல் வந்திருந்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அரசு, அச்சந்தேகத்தை உறுதி செயவது போல், ஒரே மேடையில் தோன்றும் ஒப்பந்தத்திளிருந்து ஒருவர் மட்டும் விலகிக்கொன்டதும் காரணமாக இருக்கலாம், என்றார் என் நண்பர். எமது தமிழீழ தாகங்கள் இப்படித்தான் அரசியல் தலைவர்கள்குளப்புவதால் தடுமாறகின்றன.

மானஸ்தன் said...

அனானி சொல்வது மிகவும் சரி!
மு. எ. இ. மு. க. (முதுகு எலும்பு இல்லாத முத்து வேல் கருணாநிதி அய்யா!) Literally in all senses!

மானஸ்தன் said...

வாங்க மஞ்ச ஜட்டி. நல்ல இருக்கீங்களா?

கொஞ்ச நாளா நீங்க வராம இட்லி வடை கடைல களையே கட்டலை!!!

Erode Nagaraj... said...

mAnasthan,

i think mvimvk is literally not at all in senses!

BTW, Mr. Yellow Brief, Do you know the difference between the jetties of 1970 and 2009?

SathyaRam said...

Did you manage to get the murasoli editorial that targetted Hindu

IdlyVadai said...

//Did you manage to get the murasoli editorial that targetted Hindu//

எப்ப வந்தது ?

மஞ்சள் ஜட்டி said...

ஹாய்..மாநஸ்த்.. ஹவ் ஆர யு ?? சாரி போர் தி டிரபிள் ...இடையிலே கொஞ்சம் பிசி...அதான்...

geeyar said...

தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வதை தவிர்த்தார் அன்று ஜெ.
இன்று கே. சம்திங் ராங்.

இன்னொரு மே21 ஐ தவிர்க்க நினைத்திருப்பார்கள்

vasans valaipookkal said...

காங்கிரஸ்காரனுக்கு தமிழ் நாட்டின் மந்திரி ஆசை தீவிரமாகி இருக்குமோ?

M Arunachalam said...

To avoid being seen with the head of the party which is perceived as being anti-SL Tamils, Karunanidhi, as usual, went & lied down in a hospital bed feigning fever.

To avoid the ignominy of their imported leader being booed by people for acting against the interests of SL Tamils, which will be flashed across all media, Sonia Cong. cancels the public meeting using Karunanidhi's hospitalisation as an alibi, thinking people are fools.

Coming to know (thru their own secret exit poll) about their party's & their alliance's expected fate in this Lok Sabha Elections, now Sonia Cong. is trying to create confusion in the minds of voters - particularly those who are going to vote in the 4th & 5th phase elections in Bihar & TN - by wooing the opposition parties like JD-U & AIADMK. Thats why instead of Sonia, who doesn't like JJ, it is Rahul who has wooed the AIADMK.

Hmmm.... just to remain in power, what all dramas these wretched politicians play?

chutneysambhar said...

News floating in power circles at here in delhi is BJP may cross 200 this time.Reasons are

1. it has performed exceedingly well in all its strongholds like MP, Guj, Karnataka, few North east seats etc.

2. Another factor is revival in UP where they are expected to get 30 seats giving a severe blow to mayawati and mulayam. People speculate that core hindu votes esp Brahmins have come back to support BJP.

3. Allies including JD(U)and RLD have also done well.

4. Chiranjeevi has split votes in AP and has benefited the poor TDP and alliances. Opinion pools suggested that congress will benefit.

5. Only in kerala the congress seems to have done better. But here also they fear that bjp may open account in kasargod/ trivandrum

also central intelligence agencies strongly feel that its not safe to tour TN at this stage where the feeling against delhi vip's of congress is pretty high.They don't want to take a chance now.Congress is confident that it will be complete sweep by AIADMK and allies this time.

BJP cadres are so excited about their chances that they are going for a all out battle in rajasthan and delhi. All leaders including advani and modi are leaving no stones unturned.

Congress got so jittery that rahul has asked everyone excluding BJP to join UPA. It was so childish from him. Imagine MK and Jaya, Chandrababu and YSR, Mamta and Karat, Laloo and Nitish on one side...

Lets wait till 16th for the end of this suspense thriller

UMA said...

சோனியாவுடன் கூட்டணி- ஜெயா ஆலோசனை மற்றும் ராமதாஸ் ஆசை-செய்தி.
இலங்கை பிரட்சனை என்ன ஆனது? சோனியாவை இதுவரை திட்டியது என்ன ஆச்சு?
என்ன வெட்கங்கெட்ட பொழைப்பு?

Anonymous said...

சோனியா வருகை ரத்து: பரபரப்பான பின்னணிகள்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தமிழக வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியிருந்த காரணத்தை தாண்டி மேலும் சில காரணங்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பிரச்சனை திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்த்தைவிட பெரும் தேர்தல் பிரச்சனையாகிவிட்ட நிலையில், அது குறித்து திருச்சியில் நடந்த மே தின + தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதையே தவிர்த்த திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, சோனியா காந்தி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்வதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

சோனியா காந்தி வருவதை தவிர்க்கும் (தடுக்கும்) பொருட்டே அவர் சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் இன்று நிலவும் அரசியல் சூழலில் சோனியா காந்தி பிரச்சாரத்திற்கு வருவது எந்த விதத்திலும் தங்களது கூட்டணிக்கு பயன் தராது என்பது மட்டுமின்றி, அது எதிர் வினையையே ஏற்படுத்தும் என்று கருணாநிதி கருதியதாகக் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சோனியா காந்தி இதுவரை வாய் திறக்காமல் இருந்து விட்டு இப்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அது பற்றி எது பேசினாலும் அது சாதகமான விளைவுகளைத் தராது என்பது மட்டுமின்றி, அவரது வருகையை எதிர்க்கும் தமிழ் உணர்வாளர்களின் கருப்புக் கொடி போராட்டம் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் கருதினாராம்.

இதையெல்லாம் உணராத காங்கிரஸ் கட்சியினர் சோனியாவை பிரச்சாரத்திற்கு அழைப்பதில் உறுதியாக இருந்த நிலையில், புதுவையிலும், சென்னையிலும் அவர் தனியாக பேசுவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று உணர்ந்த காரணத்தினால்தான் சோனியா காந்தியின் வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியாவின் தமிழக வருகையை விரும்பாத காரணத்தினால்தான் கருணாநிதி மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டார் என்று காங்கிரஸ் தொண்டர்களே நினைக்கின்றனர். ஏற்கனவே பல தொகுதிகளில் இரு கட்சிகளின் தொண்டர்களிடையே தேர்தல் பணிகளில் ஒத்திசைவு இல்லாத நிலையில், தங்கள் தலைவரின் பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கூட்டணி குறித்த கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மக்களவைத் தேர்தலிற்குப் பின், ‘யாரால் .... ஏற்பட்டது’ என்ற பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் வெளிப்படையாக வெடிக்கும் என்றும், அதுவே கூட்டணிக்கு முடிவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

http://tamil.webdunia.com/newsworld/election2009/gossips/0905/06/1090506114_1.htm

SathyaRam said...

the article in murasoli i think came on wednesday in response to hindu's strong editorial on bus fare & madurai ..

it seems the article said it knows how to kill the scorpion like hindu. if you manage to find it pls put

லவ்டேல் மேடி said...

//
தற்போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் காயத்ரிஸ்ரீதரை ஆதரித்து காமெடி நடிகை ஆர்த்தி, காமெடி நடிகர் கணேஷ் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இவர்களே நல்ல காமெடி செய்வார்கள் எதற்கு டெல்லியிலிருந்து சோனியா காந்தி என்று கூட்டணி கட்சி தலைவர்கள் நம்புவதாக சொல்லப்படுகிறது. //
ஆமாங்கோவ்....!! அந்த அம்மையார் அங்கிருந்து வந்து ஹிந்தியில தான் காமிடி பண்ணும்... அது யாருக்கும் புரியாது....!!! ஏன்னா நம்மாளுங்க நெறையா பேருக்கு ஹிந்தி தெரியாது.....!!! அதுக்கு தமிழ் காமிடியர்கள வெச்சு காமிடி பண்ணுன நல்ல பப்ளிசிடி தான.....!!! தி.மு.க வின் அருமையான தேர்தல் பிரச்சார யுக்திகளில் இது ஓர் நல்ல முயர்ச்சி.......

IdlyVadai said...

//the article in murasoli i think came on wednesday in response to hindu's strong editorial on bus fare & madurai ..

it seems the article said it knows how to kill the scorpion like hindu. if you manage to find it pls put//

Can you give me hindu's link ? I will try to find Murasoli article.

Anonymous said...

நம் வாழ்வை இருட்டாக்கி மின்சாரத்தை தடை செய்தது,நம்மை போன்ற தமிழ் இனத்தை அளிக்க உதவி செய்தது,இலவசம் என்ற பெயரில் நம் வரிபணத்தை எல்லாம் "ஏப்பம்"விட்டு விலை வாசியை ஏற்றி விட்டது,சட்டம் ஒழுங்கு என்றல் "கிலோ என்ன விலை" என்று போலீசையே கேட்க வைத்து..."குடும்ப" முன்னேற்றதுக்காக தமிழ்நாட்டையே வறுமையில் வாடவைத்தது, இது போன்ற கொடுமைகளை நாம் "நினைத்து" பார்த்து ஓட்டளிக்க வேண்டும்!

வாழவந்தான் said...

இட்லிவடை,
'சோனியாவின் தமிழக பிரச்சாரம் ரத்து' இந்த சர்வேயில் 'மல்டிபல் ஆப்ஷன்' செலக்ட் செய்யும் வசதி தேவை.
EVM இல் தான் 49-O சேர்க்க மாட்டானுங்க நீங்களாவது இந்த சர்வேக்கு மல்டிபல் ஆப்ஷன் தாங்க

Anonymous said...

http://www.hindu.com/2009/05/05/stories/2009050555300800.htm

Election dadagiri in Tamil NaduNo political party can claim to have adhered to the Model Code of Conduct in letter and spirit all the time. Several parties, big and small, ruling or in the opposition, across India have honoured the guidelines in the breach. Tamil Nadu’s ruling party, the Dravida Munnetra Kazhagam, has crossed previous limits by its transgressions of the Code — in utter disregard of the Election Commission of India, which is vested by the Constitution with the “superint endence, direction and control of elections.” The Code is meant to provide a level playing field to all parties, with its crucial Part VII designed to ensure that the ruling party at the Centre and in the States does not misuse its official position for campaigning. By effecting a Statewide reduction in bus fares just days before the Lok Sabha election without even a formal government order, the DMK government has fallen foul of the rules of the game. If the overnight reduction without any prior announcement was bad enough, worse was the explanation offered to the Election Commission by the Chief Secretary: that the managing directors of the State transport undertakings took the decision on their own. That all the transport corporations ordered a downward revision on the same day without consulting the Minister was such a tall tale that the Election Commission was able swiftly to dismiss the explanation and ask the State government to withdraw the fare cut.

However, the bus fare cut is only one of several violations of the Code. Madurai, where M.K. Azhagiri, son of Chief Minister M. Karunanidhi, is contesting on the DMK ticket, is witness to money power and muscle power undermining the democratic process. Ruling partymen have been distributing money to voters and attacking political opponents who objected to their ways. Several cases have been filed and the Chief Electoral Officer has sent a report to the Election Commission. Evidently, an attempt is being made to replicate the formula worked out in the by-election for the Thirumangalam Assembly constituency in Madurai district in January. Then as now, huge resources were placed in the hands of the ruling party’s campaign managers; and the Election Commission had to step in and transfer officials seen to be favouring the ruling party. The DMK won the constituency by a huge margin, and Mr. Azhagiri was seen, within the DMK and outside, as the protagonist of a New Way of winning elections. It is now up to the Election Commission of India to act decisively to ensure that dadagiri, whether by ruling partymen or others, has no place in the elections scheduled for May 13 in Tamil Nadu.

IdlyVadai said...

//the article in murasoli i think came on wednesday in response to hindu's strong editorial on bus fare & madurai ..

it seems the article said it knows how to kill the scorpion like hindu. if you manage to find it pls put//

I tried very hard, but I could not find the article. If anyone finds that article, let me know.