பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 06, 2009

குட்டிக்கதை - யாருக்கு பொருந்தும் ?

பிரசாரத்தின் பொழுது திமுகவிற்கு ஆதரவாக நடிகர் பாக்யராஜ் குட்டிக்கதைகளை கூறிவருகிறார்... இது லேட்டஸ்ட்

ஒரு ஊரில் கணவன்-மனைவி இருக்காங்க. கணவனுக்காக கருவாடு, முருங்கைக்காய் போட்டு மனைவி சமைத்தார். தட்டு கழுவ சென்ற மனைவி, அய்யய்யோ என்று சத்தம் போட்டார்.

கணவர் ஓடிச் சென்றார். அவரும்அய்யய்யோஎன்று அலறினார். காரணம், உறவினர் ஒருவர் வீட்டை நோக்கி வந்துட்டிருக்கிறார்.

அவர் மொத்தத்தையும் சாப்பிட்டு விடுவாரே என்ன செய்வது என்று அந்தம்மா யோசித்தார். ஒரு யோசனை உதித்தவராய், அவர் வரும்போது என்னை அடிப்பது போல் அடிங்க. நான் அழுவதுபோல் அழுகிறேன். அதைப் பார்த்துவிட்டு அவர் போய் விடுவார் என்று அந்தம்மா கூறினார்.

உறவினர் கதவைத் தட்டியவுடன், அந்தம்மா கன்னத்தில் கணவன் ஓங்கி அடிக்கிறார். அந்தம்மா அழுகிறார். உடனே உறவினர் அடிக்காதீங்க என்று சொல்லிவிட்டு போனார்.

உறவினர் சென்றதும், கை படாமல்தானே அடித்தேன். எப்படி என் நடிப்பு என்று கணவன் சொன்னார். அதற்கு, நான் மட்டும் என்ன குறைச்சல். அழுதாலும் கண்ணீர் வரவில்லையே என்று மனைவி சொன்னார். உடனே, அந்த உறவினர் எட்டிப் பார்த்து, நானும் வெளியில் போகவில்லை. சும்மா போவது போல நடித்தேன என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்.

அதேபோலத்தான் ஜெயலலிதா, வைகோ, ராமதாசும் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம்.

இந்த கதை உண்ணா விரதத்துக்கும் பொருந்தும் போல இருக்கே?

9 Comments:

ரா.கிரிதரன் said...

இவர் மட்டும் என்னவாம்?-இந்த கதையிலே, சம்பந்தமேயில்லாமல் முருங்கக்காயை நுழைத்து விட்டாரே, நம்ம ஆளு!

ஜெ,கருணாநிதி,ராமதாஸ் டிராமாக்கள் போல இவருக்கும் ஓண்ணுமில்லாததை மெருகேற்றி ஜல்லி அடிப்பதே வேலையாகப் போய்விட்டது!

வலைபூக்களின் அரசன் said...

ஜெவுக்கு இவ்வளவு அழகாக திரைக்கதை அமைக்கத்தெரியாது! இதைதான் same side gole என்பார்களோ!

M Arunachalam said...

Bagyaraj has ultimately equated the plight of SL Tamils with Murungaikai meals. What a Tamil Pasam he has got! He is the color Tamilian. Adhanga, PACHCHAI Tamilian.

மானஸ்தன் said...

ஐயய்யோ" !! "உண்ணா விரதம்"! "கை!


ரொம்பவே பொருந்தும்!!!

UMA said...

அருமையான கதை.

vinoth kumar said...

nice story

Erode Nagaraj... said...

திரைக்கதை அமைத்து நடிப்பதைப் பற்றி பாக்யராஜ் சொல்ல வந்தது சரி தான். நம்மை விட கீழிருப்பவர்களுக்குத்தான் நாம் அறிவுரை சொல்ல முடியும். தயாநிதி-இராஜா, ஸ்டாலின்-அழகிரி, மு.க.-சோனியா எல்லாம் பாக்கியை விட சாமர்த்தியசாலிகள்.

Anonymous said...

http://defence.lk/new.asp?fname=20090506_10

லவ்டேல் மேடி said...

ஒருவேள .... இந்த ஆளு ... டபுள் கேம் ஆடுராரோ ... என்னமோ.....??? எப்புடியோ..... மூத்தற சந்துல அடிவாங்காம இருந்தா சேரி......!!!!