பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 14, 2009

தேர்தல் 2009 - டிவி சேனல்களின் கருத்து கணிப்புகள்

நேற்று எல்லா டிவி சேனல்களிலும் கருத்து கணிப்பை போட்டு தாக்கிவிட்டார்கள். தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏறக்குறைய சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன என்று தெரிகிறது. ஆனால் மக்கள் எப்போதும் வேறு விதமாக சிந்திப்பர்கள் என்று நம்புகிறேன். நிச்சயம் முடிவு வேறு விதமாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது...


டைம்ஸ் நவ்:
காங்கிரஸ்-154,
பாஜக 142,
இடதுசாரிகள்-38,
இதர கட்சிகள்-124.


சிஎன்என்-ஐபிஎன்:
காங்கிரஸ் 145-160,
பாஜக 135-150,
3-வது அணி 110-130,
இதர கட்சிகள் 70-100.

ஸ்டார் நியூஸ்:
காங்கிரஸ்-199,
பாஜக 196,
3-வது அணி 100,
இதர கட்சிகள்-36.

ஹெட்லைன்ஸ் டுடே:
காங்கிரஸ்-191,
பாஜக 180,
இடதுசாரிகள்-38,
இதர கட்சிகள்-134.

இண்டியா டிவி:
காங்கிரஸ்-195,
பாஜக 194,
3-வது அணி-108,
இதர கட்சிகள்-46.

நியூஸ் எக்ஸ்:
காங்கிரஸ்-199,
பாஜக 191,
3-வது அணி-104,
இதர கட்சிகள்-48.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சில மாநிலங்களுக்கான வாக்குக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 29ஐ கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. லாலு-பாஸ்வான் கூட்டணிக்கு 6-ம், காங்கிரஸýக்கும் 3 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக 23, அதன் கூட்டணிக் கட்சிகள் 5, திமுக 7, காங்கிரஸ் 4.

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாகக் தொடங்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவியின் கட்சிக்கு 4 இடங்களும், காங்கிரஸுக்கு 15-ம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்றும் தெலுங்கு தேச கூட்டணிக்கு 20 தொகுதிகள்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸýக்கு 6.

அசாமில் பாஜக கூட்டணிக்கு 7, காங்கிரஸýக்கு 5.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பாஜகவுக்கு 19, காங்கிரஸýக்கு 7.

ராஜஸ்தானில் காங்கிரஸýக்கு 13, பாஜகவுக்கு 10, சுயேச்சைகள் 2.

கேரளத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 15, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 5.

கர்நாடகத்தில் பாஜகவுக்கு 16, காங்கிரஸýக்கு 9, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 3.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 11, பாஜக 13, சிவசேனை 12.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கு 17, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 24.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 27, சமாஜவாதி கட்சிக்கு 23, பாஜக 14, காங்கிரஸ் 13.

இதில் எந்த கருத்து கணிப்பு சரி ?
( நன்றி: தினமணி )

14 Comments:

Baski said...

எனக்கென்னமோ பா.ஜ.க சரியாக களப்பனியாற்றவில்லை எனவே தோன்றுகிறது.

காங்கிரஸ் ஆட்சி தான் மத்தியில்.

ஆனால் தமிழகத்தில் அம்மா தான்.

வருத்தத்துடன்,
பாஸ்கி.

வலைஞன் said...

இத்தனை கணிப்புகளும் உளறல் என 16 ஆம் தேதி நிரூபிக்கும்
ஆளப்போகும் சனியன் எதுவென்று வரும் சனியன்று தெரியும்!

Anonymous said...

எது சரியான கருத்துக்கணிப்பு என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம் :)

SathyaRam said...

NDTV poll on TN is absurd:

a. They are talking as if vijaykanth is getting 10% fresh. But whereas he got 8% earlier itself.
b. If Vijaykanth gets 10% only then it is less than expected and ADMK will sweep
c. Also 42% for DMK/CONG alliance is quite high
d. Not sure about seats vs percentage as PMK may get less percentage but may get more seats.
e. not sure how they predicted an OTHERS victory for 1 with no idea being who the OTHER is.
f. All depends on polling percentage in every constitutency

லவ்டேல் மேடி said...

அடங்கொக்கமக்கா...!!! எல்லாரும் கச்சிகாரங்க வாங்கி குடுத்த சரக்க அடுச்சிட்டு எப்புடி மப்புல ஒலருறாங்க பாருங்க .......!!!

மஞ்சள் ஜட்டி said...

வேற வேலையே இல்ல இந்த சேனல்களுக்கு.. கருத்து கணிப்பாவது, செருப்பு கணிப்பாவது...இதுக்கு தடை விதிச்ச தேர்தல் கமிஷனை பாராட்டனும்... சண் டிவி தி.மு.க வுக்கு ஆதரவாகவும், mega டிவி காங்கிரசுக்கு ஆதரவாகவும், மக்கள் டிவி பா.ம.க வுக்கு ஆதரவாகவும் செருப்பு கவனிப்பு ..மன்னிக்கவும்.. கருத்து கணிப்பு செய்வார்கள்... இதெல்லாம் பார்க்கனும்னு நம்ம தலை எழுத்து...

நான் 49-ஒ தான்....

Anonymous said...

//Anonymous said...
எது சரியான கருத்துக்கணிப்பு என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம் :)//


ரொம்ப சரி!

Anonymous said...

மஞ்ச ஜட்டி சொன்ன மாதிரி, கட்சிக்கு ஒரு டிவி வெச்சுண்டு மொத்தத்துல கருத்து "திணிப்பு"தான் பண்ணறாங்க.
மக்களும் "தலை எழுத்தேன்னு" பாத்துத் தொலைக்கறாங்க!

சகிப்புத் தன்மைக்கு ஒரு global award இருந்தா தமிழக மக்களுக்கு குடுக்க சொல்லலாம்.

Anonymous said...

The so-called projections by the
TV channels are their wish. It reveals their bias towards the Congress and the UPA. Time and time again they deride NDA and BJP.
Even in panel discussions every anchor cuts the BJP spokesmen short
while the vociferous UPA and other
partisans are allowed free run. So
much for the fairness or impartiality of these Channels.
Saturday may perhaps may make them
look silly. Like they were made to in 2004.

அக்னி பார்வை said...

///மக்கள் எப்போதும் வேறு விதமாக சிந்திப்பர்கள் என்று நம்புகிறேன். ///

மக்கள் முடிவுகள் வேறுவித்மாக் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை... சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை.....

Krish said...

கூட்டணி ஆட்சி இல்லாமல் கங்க்ரசோ அல்லது பிஜேபி யோ ஆட்சி அமைத்தால் தான் உண்டு.
எந்த தொந்தரவும் இல்லாமல் பிரதமர் 5 வருடம் ஆட்சி செய்ய வேண்டும்

Anonymous said...

MK LEADS IN TN EXIT POLLS WITH 16 SEATS
NewsX Bureau
In the last four parliamentary polls, Tamil Nadu parties have been crucial to government formation at the Centre.

This time, however, there was speculation that AIADMK chief Jayalalitha would be a kingmaker because people had more or less written off the DMK patriarch Karunanidhi.

However, the NewsX AC Nilesen exit poll shows that DMK may well emerge as the biggest party in the state winning as many as 16 seats. Jaylalitha seems to be in for a rude shock and may win a mere 9 seats.

AIADMK ally PMK which won 5 seats in 2004 may well lose two this time, ending up with just 3. Another AIADMK ally MDMK which won for seats in 2004 may face a complete rout this time round.

The exit poll also shows that CPM may win 2 seats and the CPI may not open its account this time, while the Congress will perhaps retain 9 seats.

According to the NewsX AC Nielsen poll, the Congress-DMK alliance, which won 26 seats in the last elections may this time win 25 seats and the AIADMK alongwith PMK and MDMK may win just a dozen, down 1 seat compared to the last elections. Others did not open their account last time but this time they may win 2 seats.
TAMIL NADU
DMK-16,
CONG-9,
ADMK-9,
PMK-3,
CPM-2

PONDY
CONG-1

Anonymous said...

DMDK - 37/40
ADMK - 0
Congress - 0
BJP - 2
DMK - Lost Deposit
Others - 1
(South Madras - Sarath Babu)

Anonymous said...

இது முன்கூட்டியே தெரிந்த தால் தான் ஜெயா கடைசி நாள் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல் கட்சியினரை விரட்டிகொண்டிருந்தார்.