பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 11, 2009

தேர்தல் 2009 - கடலூர் யாருக்கு ?


தேர்தல் 2009 - கடலூர் யாருக்கு ? கலைக்கோவன் வரதராசன் அலசல்...

1998 ,99 & 2004 தேர்தல் முடிவுகளின் படி கடலூரில் கூட்டணி பலம் மட்டுமே வென்றுள்ளது. (குறிப்பாக பா.ம.க இடம்பெற்ற கூட்டணி)

தி.மு.க கூட்டணியில் வேற்று தொகுதி/மாவட்ட(வன்னியரல்லாத) வேட்பாளரே கடந்த 1999 & 2004 தேர்தல்களில் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த முறை போட்டியிடும் அழகிரியும் சென்டிமெண்ட்டாக வேற்று தொகுதிகாரர்.

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க சார்பில் கடந்த 1999 & 2004 தேர்தல்களில் அக்கட்சியின் அப்பொதைய மாவட்ட செயலாளரே போட்டியிட்டு தோற்றிருக்கின்றனர்.., இந்த முறை போட்டியிடும் சம்பத்தும் மாவட்ட செயலாளர் தான்.

மேலே குறிப்பிட்டவை சும்மா ஒரு சென்டிமெண்ட் அலசல்.

காங்கிரஸில் போட்டியிடும் அழகிரிக்கு முதல் தலைவலியே.., அக்கட்சி சீட் கிடைக்காத P.R.S.வெங்கிடெசன் மற்றும் மா.த நெடுஞ்செழியன் போன்றோரே.
(நல்ல வேளை தலைவர்கள் பிரச்சனை மட்டுமே.., தொண்டர்கள் பிரச்சனை வர வாய்ப்பே இல்லை..,அதனால் இவர்களால் ஓட்டு களைய வாய்ப்பும் இல்லை) இருந்தாலும் தி.மு.க ஆதரவு இருப்பதால் தொகுதியை சுற்றி வர இவருக்கு பிரச்சனை இல்லை.களப்பணியில் தி.மு.க வழக்கம் போல பிந்தியே இருந்தது.
(சுவர் விளம்பரத்திற்க்கு கூட வேட்பாளர் ”கை” ய்யையே எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிட தக்கது) பேருக்கு காங்கிரஸ் இருந்தாலும் தி.மு.க வையும் வி.சியையும் நம்பி தான் பிழைப்பு ஒடுகிறது.
ஆளும் கூட்டணி சார்பில் ஓட்டுக்கு 300 ரூபாய் வரை தர தயாராக உள்ளதாக ஒரு புரளியும் உள்ளது.

காங்கிரஸ் போலவே அ..தி.மு.க சீட் அதிருப்தி இருந்தாலும் அது வெளியில் தெரியவில்லை.முன்னாள் மா.செ சொரத்தூர் ராஜேந்திரனும் சம்பத்திற்க்காக பிரச்சாரத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.

கூட்டணிக்கு பா.ம.க வும் பலம் சேர்க்கிறது.
உள்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்லல் என அ.தி.மு.க சுறு சுறுப்பாகவே உள்ளது.

இப்படி தி.மு.க & அ.தி.மு.க கூட்டணி இருந்தாலும் இவர்களின் பெரிய தலைவலி தே.மு.தி.க,,.கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் பெற்ற 1 லட்சத்து 40 ஆயிரம் ஓட்டுகள்(6 தொகுதிகளில்).

இவற்றில் விருத்தாசலத்தில் விஜயகாந்த் பெற்ற 60 ஆயிரம் மற்றும் பண்ருட்டியில் பண்ருட்டியார் பெற்ற 30 ஆயிரம் ஒட்டுக்களும் அடக்கம்.

பண்ருட்டியில் கட்சியை விட பண்ருட்டியாரின் தனி செல்வாக்கு என்பதும், விருத்தாசலத்தில் கட்சியை விட விஜயகாந்த் என்ற நடிகரின் பெயருக்கும் முக்கியமாக பா.ம.க எம்.எல்.ஏ மீதான மக்கள் அதிருப்தி மற்றும் அ.தி.மு.க அறிமுக வேட்பாளர் என்பதும் காரணமாக கூறப்பட்டாலும் .., தே.மு.தி.க விற்க்கு கிடைக்க போகும் ஓட்டுகள் ..., தி.மு.க & அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது.

தே.மு.தி.க களப்பணியை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் அளவிற்க்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்

இவ்வாறாக கூட்டணி பலம்,உள்குத்து அரசியல் கலந்து இருந்தாலும் இலை வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளதாக தெரிகிறது.

- கலைக்கோவன் வரதராசன்

8 Comments:

Baski said...

Yes, ADMK has high chances here.

MDMK may loose votes as they have not yet done enough canvasing "Work" :-)

Baski said...

typo. DMDK..
got confused..

Anonymous said...

அரசியல் (அ) நாகரிகம்

மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின் பொது அன்புமணியை "கொள்ளைபுரமாக வந்த தலைவர்" என கூறிவுள்ளார்.

இதற்கு பதிலடியாக அன்புமணி அவரது பிரச்சாரத்தில் சொன்னது:

"உன் தங்கச்சி கனிமொழி கொல்லைப்புறமாக தான் வந்தாளா??
மன்மோகன் எப்படி வந்தார் ??"

பேசுறதை எல்லாம் பேசிவிட்டு நம்ம கலைஞர் போல் "ஜகா" வாங்கிட்டார்.

"எனது அப்பா (மருத்துவர் அய்யா) என்னை அப்படி வளர்க்கவில்லை. அதனால் நான் அப்படி கேட்க மாட்டேன்".

இது அந்தர் பல்டி டோய்....

இதை கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.
எப்படி இந்த தலைவர்கள் வாய் கூசாமல் இப்படி பேசுகிறார்களோ ?

தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் ரொம்ப பிரகாசமா தெரிகிறது.. :-)

UMA said...

கடலூரில் அடங்கியுள்ள நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் தி.மு,க அதரவு பெற்ற காங்கிரசுக்கு முழு ஆதரவு இருக்கிறது. வேட்பாளர் அழகிரியும் அந்த பகுதி தி.மு.க பிரமுகர்களுடன் தெரு தெருவாக சென்று ஆதரவு கேட்டுள்ளார். எப்போதும் தி.மு.க வுக்கு ஓட்டு போடும் நெய்வேலி மக்கள் சென்ற முறை ( குறிஞ்சிப்பாடி தொகுதி) தி. மு.க பன்னிர் செல்வத்துக்கு ஒட்டு போடாமல் வைகோ கட்சி ராமலிங்கத்துக்கு ( நெய்வேலி லோக்கல் ஆள் என்பதால்) ஒட்டு போட்டு இப்போது சிரமங்கள் பல ( பஸ் டெபோ மாற்றம்,நெய்வேலி நிர்வாகத்திடம் தி மு.க பலமாக பேச முடியாதது, ) ஏற்பட்டு உள்ளதால் மற்றும் தி.மு.க மற்றும் பி.எம்.கே இங்கு முதல் இரண்டு தொழில் சங்கங்கள் - அங்கீகரிக்கப்பட்டவை -எதற்கும் இருவரும் ஒத்து போகாததால் பட்ட கஷ்டங்கள் மக்களை இங்கு தி.மு.க வுக்கு வாக்களிக்க வைக்க போகின்றன.

நெய்வேலி அருகில் வந்துள்ள ஒரு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நெய்வேலி அருகே வரவிருக்கும் மருத்துவ கல்லூரி , மற்றும் நெய்வேலியின் நீண்ட நாள் கோரிக்கைகளான நெய்வேலியிலிருந்து சென்னை, மதுரை, பழனிக்கு பல தடவை புத்தம் புது பஸ் விட்டது ஆகியவை மக்களை தி.மு.க விற்கு ஓட்டளிக்க வைக்கும்.

Krish said...

தேமுதிக வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் உமா சொல்வது போல் வளர்ச்சி திட்டங்களை கொண்டுவருவது சிரமம். ஆட்சி மாறின கடந்த ஆட்சியின் நல்ல திட்டங்களை முடக்குவது, வேறு கட்சியை சேர்ந்த எம் எல் ஏ தொகுதிகளில் எதும் செய்ய விடாமல் தடுப்பது போன்ற வேளைகளில் நல்ல ஆளுங்க கெட்டிக் காரங்க.

கலைக்கோவன் said...

கடலூருக்கு “இலை”
போடலியா..?

நாகு (Nagu) said...

அதிமுகவின் சம்பத்தும் தேமுதிகவின் தாமோதரனும் சகோதரர்கள். இந்த பெரிய விஷயத்தையே அமுக்கிவிட்டீர்களே.

கலைக்கோவன் said...

//நாகு (Nagu) said...
அதிமுகவின் சம்பத்தும் தேமுதிகவின் தாமோதரனும் சகோதரர்கள். இந்த பெரிய விஷயத்தையே அமுக்கிவிட்டீர்களே.//

கடலூர் பற்றிய முந்தைய பதிவை
படித்தால் புரியும்
http://idlyvadai.blogspot.com/2009/04/2-vs.html