பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 06, 2009

தேர்தல் 2009 - சிதம்பரம் யாருக்கு ?

சிதம்பரம் தொகுதி நிலவரம் பற்றி இன்பா

முதலில், எனக்கு(யல்லாம்) எழுத வாய்ப்பு தந்த இட்லிவடைக்கும், வாசகர்களுக்கும், உதவிய லோக்கல் நண்பர்களுக்கும் என் நன்றி....

ஆனீ,மார்கழி என நடராஜரே ஆண்டுக்கு இரண்டுமுறை வலம்வரும் தொகுதியில் ஐந்து வருடங்களுக்கு பிறகு, விசிட் வரும் இ.பொன்னுசாமி பாமக சார்பிலும்,

அடங்கமறு, திமிரு, சீறு,வெட்டு என்று ராமிரெட்டி(!) பாணியில் வசனம் பேசி, தலித்துகளை உசுப்பிவிட்டே அரசியலில் ஆளாகிவிட்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் சார்பிலும்,

நேருக்குநேர் 'மோது'கிறார்கள். இந்தமாதரி சமயங்களில் எங்கள் ஊருக்கு பஸ்சில் வந்தால் ஹெல்மட் அணிவது நல்லது. பஸ் கண்ணாடியோடு உங்கள் மண்டை உடைந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பி.கு : விஷால்,அர்ஜுன், j.k.ரித்திஷ்(?) வகையறாக்களை வைத்து படம் பண்ண விரும்பும் இயக்குனர்கள் திருமாவின் உணர்ச்சிகர பேச்சை கேட்கவும்.
'டைட்டில்' களை அள்ளுவதற்கு நான் கியாரண்டி.

சபா. சசிகுமார் தேமுதிக வேட்பாளர். லோக்கல் பிரச்சனைகளை சொல்லி ஒட்டு கேட்பதால் வாக்குகுட்டை கொஞ்சம் குழ்ம்பலாம். (தனுக்குதானே போஸ்டர் ஒட்டி, சினிமா, அரசியல் என 'உலக'புகழ் பெரும் இந்த காலத்தில், தேர்தலுக்கு செலவு செய்ய இவர் யோசிப்பதாக ஒரு செய்தி).

இனி, தொகுதி நிலவரம்.
வரைமுறைக்குப் பிறகு சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வரும் ஆறு சட்டசபைத் தொகுதிகள்:
1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரிஅரியலூர்
3. ஜெயங்கொண்டம்
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில்(தனி)

இதில் குன்னம்,அரியலூர்,ஜெயங்கோண்டம் ஆகிய தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டவை. மூன்று சட்டமன்ற தொகுதிகள எற்கனவே உள்ளவை.

தற்போதைய ச.ம.உ கள்:
சிதம்பரம்-அருண்மொழித்தேவன் (அ.தி.மு.க.,) காட்டுமன்னார்கோவில் - ரவிக்குமார் (டி.பி.ஐ.,) புவனகிரி - செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.,)

சிதம்பரம் 'தனி' பிரச்சனைகள் :
தொடங்குவதற்கு, கட்டுவதற்கு, பின் செயல்படுவதற்கு என மூன்று தலைமுறைகளை (!?) கண்ட ரயில்வே மேம்பாலம், போக்குவரத்து, சாலை வசதிகள் இல்லாததால் புகழ்பெற முடியாத பிச்சாவரம், நடராஜர் கோவிலில் பரம்பரையாய் இருந்துவந்த உரிமை, மாற்று ஏற்பாடுஇன்றி பறிக்கபட்டதால், எதிர்கால பயத்தில் வாழும் ஆயிரகணக்கான தீட்சிதர் குடும்பங்கள்.
சீர்படுத்த படாத பேருந்துநிலையம்,அதை சுற்றிஉள்ள சாலைகள்.

சிதம்பரம் (தனி) தொகுதியின் 'பொது' பிரச்சனைகள் :

சின்ன சுனாமிகள் போலே வருடம்தோறும் வரும் மழைவெள்ளம், அதனால் நாசமாகும் விவசாயம், தனித்தீவுகளாகும் தொகுதி, மெகா சீரியல்போல் வெள்ள நிவாரண நாடகங்கள். மாற்றுத்திட்டம் பற்றி யாரும் யோசித்ததாக தெரியவில்லை.

வேலை வாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் தொகுதிக்குள் இல்லாதது, சென்னைக்காக உறிஞ்சப்பட்ட வீராணம் இவற்றோடு பெரும்பான்மையான கிராமங்கள் அடிப்படை வசதிகளற்று இருப்பது தீராத பிரச்சனைகள்.

காட்டுமன்னார்கோவில்,ஜெயங்கோண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில், யாரோ ஒரு கவிஞர் சொன்னதுபோல் இதுவரை நமது அரசியல்வாதிகள் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் புதைகுமளவுக்கு பள்ளங்கள். இந்த நகரங்களுக்கு(?) பஸ்சின் பின்சீட்டில் பயணிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் இலவசம்.

பாமக மற்றும் சிறுத்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகள் தேர்தலுக்கு ஒரு முறை கூட்டணி மாறுவது, சாதிய அரசியல்.

எதுஎப்படியோ, இங்கு உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு பொன்னுசாமிதான் தற்போதைய பா.உ என்று தெரியவில்லையாம் . (ஏன், அவருக்கே மீண்டும் அறிவிக்கப்பட்ட பின்புதான் தெரியுமாம்)

கடந்த தேர்தல் முடிவுகள்

2004 ( ஓட்டு பதிவு சதவீதம் 66% )
எ.பொன்னுசாமி பா.ம.க 343424 46 %
தடா பெரியசாமி பா.ஜ.க 113974 15 %

1999 ( 65% )
பொன்னுசாமி பா.ம.க 345331 48 %
திருமாவளவன் த.மா.கா 225768 31 %

1998 ( 65% )
ஏழுமலை பா.ம.க 305372 45 %
கணேசன் தி.மு.க 297417 43 %


திருமாவளவன் போன பாராளுமன்ற தேர்தலில் சுயட்சையாய் நின்று சுமார் இரண்டு லட்சம் வாக்குகளை பெற்றுஇருக்கிறார். ஆகவே, இந்த முறை தேர்தலில் சிதம்பரத்தில் திமுக கூட்டணிக்கே 'ஜெ'


- இன்பா

இன்பாவிற்கு இட்லிவடையின் நன்றி.

21 Comments:

Anonymous said...

Rowdy should not win this election.

Anonymous said...

உண்மையாகவே நான் மிகவும் ரசித்தேன் சில வரிகளை.....

//**Rowdy should not win this election.**//

அப்படினா போட்டியிடும் யாரும் ஜெயிக்க கூடாது.

Anonymous said...

ஆண்டிமடம் சட்ட மன்ற தொகுதியும் இந்த முரை சிதம்பரத்தோடதான் வரும்...

மானஸ்தன் said...

என்ன இருந்தாலும் "காங்கிரசை வேர் அறுப்பேன்" என்ற திருமாவிற்கே கதர் சட்டைகளின் வோட்டு!

நேற்றுகூட "உலகத் தலைவர்கள்" பாராட்டிய இந்தியத் திருநாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் திரு love bell சொன்னார்:
திருமா எங்கள் தோழர்! தேர்தலுக்குப் பின் எங்களுடன் வந்து விடுவார்!
எனவே யார் ஜெயிச்சா என்ன?

மானஸ்தன் said...

குமுதம்.com online intervew-வில் தமிழ்க்குடி தாங்கியின் காமெடி நன்றாக உள்ளது. பேட்டி எடுப்பவர் மரம் வெட்டி கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் போல நன்றாக கேள்விகளைக் கேட்டார்!!

வாழ்க "குமுதத்தின்" நடுநிலைமை!

UMA said...

எதுஎப்படியோ, இங்கு உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு பொன்னுசாமிதான் தற்போதைய பா.உ என்று தெரியவில்லையாம் . (ஏன், அவருக்கே மீண்டும் அறிவிக்கப்பட்ட பின்புதான் தெரியுமாம்)

நிஜமான உண்மை அதுதான். எங்கள் நெய்வேலியும் முன்பு சிதம்பரம் தொகுதிதான். அவர் இப்போது பா. உ. என்பதே இப்போது தான் எங்களுக்கு ஞாபகம் வருகிறது.

சித்து said...

இந்த குருமா வைப்புத்தொகை கூட திரும்ப கிடைக்காத அளவுக்கு தோத்து போகணும். நாக்க மூக்க நடிப்ப விட இவன் நடிப்பு அற்புதம்.

ந.லோகநாதன் said...

கண்டிப்பாக பா.ம.க ஜெயிக்கும்...திருமாவின் நாடகம் மக்களுக்கு புரியும்

மானஸ்தன் said...

//நாக்க மூக்க நடிப்ப விட இவன் நடிப்பு அற்புதம்//

இதைப் படித்தால் குருமாவின் பாசமுள்ள சகோதரர் - கதர் இயக்கம் கண்டுஎடுத்த முத்து, ஐந்து ஆண்டுகள் பாராளுமன்றத்தில் ஒன்றும் பேசாமல் சாமியாராய் இருந்த "gold-milk" கோச்சுக்குவார்!!!!

திட்டுங்கள். நன்றாகத் திட்டுங்கள்!! ஆனாலும் அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாமே!!!

"மாண்பு மிகு" ஆகத் துடித்துக்கொண்டு இருக்கும் இந்தத் தலித்துகளின் காவலனின் "காங்கிரஸ் பாசம்" ஓங்கட்டும்.

chutneysambhar said...

PMK will definitely win..
chidambaram constituency has a strong presence of vanniar community who will always vote for pmk at any cost.PMK+AIADMK is a good combination here .Thiruma .....better luck next time

Erode Nagaraj... said...

எனக்கென்னவோ திருமாவளவன் தோற்று விடுவாரென்றே மனதில் படுகிறது.
The multilingual leader too might personally hint his party men, not to co-operate much for theeruma(?)vala-vala-van, keeping in mind that the elections for the state comes in year or more.

The buying(no. of seats)capacity of such "lead-errs" may be restricted by doing so.

Multilingual leader?
=Theme-Granny-Fire.

(english)theme=karu
Granny= nAni (hindhi)
Fire=thee(thamizh)
(நாகராஜா, பேர் எழுதறதுல எதுக்கு மானஸ்தனோட போட்டி... விடுப்பா..)

ராம கிருஷ்ணன் said...

வலை உலகில் திமுகவிற்கும் திருமாவிற்கும் இருக்கும் ஆதரவாளர்களை போல பாமகாவிற்கு பதிவர்கள் குறைவு.

மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போல மருத்துவர் அய்யாவுக்கு பொறாமையின் காரணமாக குட்டு படுவது பத்து வருடங்களுக்கும் மேலாக பார்த்துவருவதுதானே.

பொன்னுசாமியின் தொகுதி செயல்பாடு முப்பத்தொன்பது பாராளுமன்ற உறுப்பினர்களில் டாப் 15 ல் ஒருவராக வந்துருப்பார் என்பது எனது கணிப்பு.

நெய்வேலி உமா போன்றவர்கள் சொல்வது போல அவர் ஒன்றுமே செய்யாதவர் இல்லை. நெய்வேலியில் திருமாவின் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் குறை சொல்லுகிறார்கள் . மற்றபடி நெய்வேலியில் கார்போரேசனே எல்லாவற்றையும் செய்து விடுவதால் எம்பி எதுவும் செய்யாதது போல குறுப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

தமிழக எம்பிகளிலும் சரி மத்திய அமைச்சர்கள் பணியிலும் சரி பாமாகவினரின் செயல்பாடு எந்த கட்சியையும் ஒப்பிடும்போது சிறப்பானது என்பது நடுநிலையோடு காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்படுபவர்களுக்கு தெரியும்.

இரண்டு வருடங்கள் எந்த மக்கள் பணியுமே செய்யாமல் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் காரணமே சொல்லப்படாமல் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டு வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்டு வரும் தயாநிதி மாறனைப் பார்த்து கேள்வி கேட்க்க யாருக்கும் துப்பில்லை.குறை சொல்ல யாருக்கும் தைரியமில்லை.

திருமா மட்டும் தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்று கிழித்துவிட போகிறாரா? மங்களூர் தொகுதியில் எம்எல்எவாகயிருந்து என்னத்தை கிழித்தார் என்பதை யாராவது சொல்லுங்களேன்.

பாமக என்றால் மட்டும் குறை கூற நாக்கை தொங்க போட்டுக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.வெற்றி தோல்வி மக்களின் கைகளிலேயே.

Anonymous said...

I feel, DMDK has a fair chance.
He is better than PMK and Kuruma.

I wish Kuruma single digit.....

Let us see.

Anonymous said...

பொன்னுசாமி- எளிமையானவர். பண்பாளர். ஆர்ப்பாட்ட அரசியல் தெரியாதவர். ஆடம்பரம் அறியாதவர். ஊழல் கரை படாதவர். தன்னால் ஆனமட்டும் எல்லோருக்கும் உதவுபவர். கட்சி மாறாத விசுவாசமானவர்.யாருக்கும் தொந்தரவு தராதவர். எல்லாராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படுபவர்...

Anonymous said...

பொன்னுசாமி- எளிமையானவர். பண்பாளர்.
ஆர்ப்பாட்ட அரசியல் தெரியாதவர்.
ஆடம்பரம் அறியாதவர்.

எங்கையாவது பள்ளிகூட வாத்தியார போகவேண்டியதுதானே
அஞ்சு வருஷம் பார்லிமென்ட்டுக்கு போய் என்ன கிழிச்சார்??

Anonymous said...

தேர்தலுக்கு ஒரு முறை
கூட்டணி மாறுவதையே
தனது, நிரந்தர தேர்தல் கொள்கை என
வைத்திருக்கும் பாமக
இந்த தேர்தலில் தோற்றால்தான்
தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது

shiva said...

இன்பா இந்த பதிவில்
இரண்டு தரப்பையும்
நக்கலடித்தே எழுதியிருக்கிறார்

எழுத்தில்
நல்ல காமெடி சென்ஸ்..

சுயட்சையாய் நின்று
திருமா இரண்டு லட்சம் வோட்டு வாங்கியிருப்பதால்
இந்த தடவை
கூட்டணி ஆதரவோடு வெற்றி பெறுவார் என நானும் நம்புகிறேன்

ராம கிருஷ்ணன் said...

///பொன்னுசாமி- எளிமையானவர். பண்பாளர்.
ஆர்ப்பாட்ட அரசியல் தெரியாதவர்.
ஆடம்பரம் அறியாதவர்.

எங்கையாவது பள்ளிகூட வாத்தியார போகவேண்டியதுதானே
அஞ்சு வருஷம் பார்லிமென்ட்டுக்கு போய் என்ன கிழிச்சார்??

May 07, 2009 6:40 PM////


மற்றவர்கள் என்னத்தை கிழித்தார்களோ அதையேதான் கிழித்தார். ஏன் மைக் எடுத்து அடிக்க வேண்டுமா?


///தேர்தலுக்கு ஒரு முறை
கூட்டணி மாறுவதையே
தனது, நிரந்தர தேர்தல் கொள்கை என
வைத்திருக்கும் பாமக
இந்த தேர்தலில் தோற்றால்தான்
தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது

May 07, 2009 6:48 PM///

அதிமுக, நிதிஷ் குமார், சந்திரபாபு நாய்டு மற்றும் இடது சாரிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என திருவாய் மலர்ந்தது திருவாளர் இருபத்திரெண்டாம் நூற்றாண்டின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்திதான்.

கம்யுனிஸ்டுகளுக்கு கொத்தடிமையாய் இருந்தது போதும் என நம்ம மண்ணு மோகன் சிங்கு சொல்லி வாய் எச்சில் காயவில்லை.

எவன் வாயும் சுத்தமில்லாத போது மீண்டும் மீண்டும் இவர்கள் பாமகாவை மட்டும் பழிப்பது ஏன்?

Anonymous said...

///இரண்டு வருடங்கள் எந்த மக்கள் பணியுமே செய்யாமல் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் காரணமே சொல்லப்படாமல் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டு வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்டு வரும் தயாநிதி மாறனைப் பார்த்து கேள்வி கேட்க்க யாருக்கும் துப்பில்லை.குறை சொல்ல யாருக்கும் தைரியமில்லை.///


இட்லிவடையிடமிருந்தாவது பதில்( கேள்வி ) வருமா?

UMA said...

Thiruma will won Chidambaram with hand some votes.

UMA said...

சென்னை மாயவரம் இரயில் விட மிகுந்த தாமதமாக காரணம் கொள்ளிடம் பாலம் இந்த சிதம்பரம் தொகுதியில் வருகிறது.

இதை விரைவில் முடிக்க தொகுதி MP யும், ரயில் அமைச்சரும் என்ன செய்தனர்?

ஏன் கடலூர் - பெங்களூர் ரயில் இன்னமும் விடவில்லை?

சிதம்பரம் , மாயவரம், நெய்வேலி , விருத்தாசலம் மக்கள் அந்த ரயிலை ஆர்வமுடன் பல வருடங்களாக காத்திருக்கின்றனர்.

வடலூரில் இருந்த தொழில் சாலைகள் மூட காரணமான இடதுசாரிகளின் ஆதிக்கம் நெய்வேலியில் இல்லாததால் தான் நெய்வேலி தொழிற்சாலை நன்கு இயங்குகிறது. அங்கு தொ மு ச நன்கு தொழிலாளர் நலம் பேணுவதால், அம்மா தி மு க , வைகோ தி மு க மற்றும் இடதுசாரிகளின் ஆதரவாளர்கள் குறைவு. தி மு க வும், பி எம் கே அங்கு முதல் இரண்டு தொழில் சங்கங்கங்கள். அதன் பின் காங்கிரசுக்கு & திருமாவுக்கு ஆதரவு நிலை உள்ளது.