பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 02, 2009

தேர்தல் 2009 - திருச்சி யாருக்கு ?

திருச்சியில் தற்போது மேயராக இருக்கும் சாருபாலா தொண்டைமான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். இவர் வெற்றி பெறக்கூடாது என்றே நினைக்கிறேன். பதவியில் இல்லாத யாரும் கிடைக்கவில்லையா காங்கிரசுக்கு ?


திருச்சியில் தற்போது மேயராக இருக்கும் சாருபாலா தொண்டைமான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். இவர் வெற்றி பெறக்கூடாது என்றே நினைக்கிறேன். பதவியில் இல்லாத யாரும் கிடைக்கவில்லையா காங்கிரசுக்கு ? அதிமுக கட்சி வேட்பாளர் ப குமார். இவரை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. (ஸ்ரீரங்கம் கோவிலில் தேர்தல் பணிகளை ஆரம்பித்தார் என்பதை தவிர - நன்றி டோண்டு). ஏஎம்ஜி விஜயகுமார் நமது கேப்டன் கட்சியின் வேட்பாளர். இவர் பலப்பல / பளபள வாக்குறுதிகள் அள்ளி தெளித்து இருக்கிறார். வழக்கம்போல் ITpark, ஏர்போர்ட் அப்க்ரேட், ரிங் ரோட். தயவு செய்து இவருக்கு வாக்கு வேண்டாம். பாரதியஜனதா கட்சியில் லலிதா குமாரமங்கலம் நிற்கிறார். குமாரமங்கலம் எம்பியாக இருந்தபோது பல மேம்பாலங்கள் ஆரம்பிக்கப்பட்டு மிகுந்த காலதாமதத்துக்கு பின் கட்டி முடிக்கப்பட்டது. குடும்ப அரசியல் அனைத்து மட்டங்களிலும் பெருகி வருகிறது என்பதற்கான சான்றாகவே இவரது தேர்வு இருக்கிறது. ஒருவர் இறந்தால் அவரது குடும்பத்தினரை வேட்பாளராக நிறுத்தும் பழக்கம் ஒழியவேண்டும்.

தற்போதைய எம்பியான கணேசனுக்கு இதயத்தில் இடம் அளித்த கருணாநிதிக்கு எனது வாழ்த்துக்கள். திருச்சி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால் கே.என் நேருவின் தம்பி ராமஜெயமுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும். பலவருடமாக அமைச்சர் அவர்கள் திருச்சிக்கு பல பெரிய கம்பெனிகளை கொண்டுவரும் முயற்சியில் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. Dell , hewlett packard முதலிய கம்பெனிகளின் manufacturing Unit திருச்சிக்கு வருவதாக இருந்து கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது அந்த நிறுவனத்தினரை தவிர மற்ற அனைவரும் அறிந்ததே.

திருச்சியில் கட்டப்பட்ட பஸ்ஸ்டாண்ட் பணிகள் முடிந்தவுடன், அவ்விடம் அரசாங்கத்தின் வேறொரு துறையை சார்ந்ததாக கண்டறியப்பட்டு, வாட்டர்டேங்க் கட்டிய பெருமை அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால் அவ்விடத்தில் நிற்பதாக ப்ளான் செய்யப்பட்ட பேருந்துகள் இன்றும் ரோடோரத்தில் நிறுத்தப்பட்டு வருகிறது. புழுதிக்கு பஞ்சமே இல்லை. மத்திய பேருந்து நிலையம் புதுமைப்படுத்தியவுடன் அதற்குள் பேருந்துகள் உள்ளே நுழைவது முடியாமல் போனதால் (இரண்டு பீமுக்கு இடையில போதிய இடைவெளி இல்லாததால்) அவற்றை இடித்து மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது. அதே போன்று, இங்கும் ஏதாவது செய்து இருக்கலாம். மாயாஸ் பாருக்கு செல்லும் மேம்மக்கள் புழுதியை தாண்டி செல்லும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கண்டிக்கத்தக்கது.

பல நல்ல கல்லூரிகளை கொண்ட ஊர். ஆனாலும் புதிதாக எந்த தொழிற்சாலையும் கடந்த முப்பது வருடமாக வரவில்லை. வரும் வாய்ப்புக்களும் இருப்பதாக தெரியவில்லை.

திருச்சிக்கு தற்போதைய தேவைகள் - சாலை மேம்படுத்துத்தல், புதிய தொழிற்சாலைகள், இன்னும் பல உழவர்சந்தைகள், காந்தி மார்க்கெட் புதுமைப்படுத்துதல், குடிதண்ணீர் பிரச்சனைக்கான தீர்வு.

இவற்றை எந்த கட்சியினரும் தீர்க்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் உங்கள் வாக்குகளை விஜய டி ராஜேந்தர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகானுக்கு செலுத்தி அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன். (இவர் ஒருசமயம் நூதனமான முறையில் கவர்னர் மாளிகையின் முன்பு கிரிக்கெட் விளையாடி ஏதோ ஒரு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். எந்த போராட்டம் என்று நினைவில் இல்லை. பின்னூட்டத்தில் சரியாக தெரிவித்தால் இட்லிவடை எப்போதும் போல் பட்டைநாமம் பரிசாக தருவார்).

மாநிலத்தளவில் பிரபலமான எந்த வேட்பாளரும் நிற்காததால், திருச்சியில் வெற்றிபெறும் கட்சி தமிழ்நாட்டில் பொதுவாக நிலவும் ஆதரவு நிலையை பிரதிபலிக்கும் என்றே கருதுகிறேன்.

- மணிகண்டன்

கடந்த தேர்தல் முடிவுகள் இப்படி இருந்திருக்கிறது

2004 - ஓட்டு சதவீதம் - 68%

எல். கணேசன் ம.தி.மு.க 450907 56 %
பரஞ்ஜோதி அ.தி.மு.க 234182 29 %

1999 (55%)
அரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க 377450 55 %
அடைக்கலராஜ் காங்கிரஸ் 288253 42 %

1998 (55%)
ரெங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க 305233 47 %
அடைக்கலராஜ் த.மா.கா 293778 45 %
சுபா சோமு காங்கிரஸ் 23747 4 %

மணிகண்டன் சொல்லுவது போல் தமிழ்நாட்டில் நிலவும் ஆதரவு நிலையை பொறுத்து இங்கே வெற்றி - தோல்வி நிச்சயக்கப்படும். திருச்சி அதிமுகவிற்கு.

30 Comments:

Anonymous said...

ஒரு தலை பட்சமான பதிவு. மன்சூர் அலிகானை பார்த்தால் ஒரு M.P. போலவே தெரியவில்லை. தினமும் திருச்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பு என்று சொல்லிக் கொண்டு காமெடி செய்கிறார். நல்ல காமெடியன். Deposit கூட அவருக்கு கிடைக்க விடக்கூடாது.

மானஸ்தன் said...

திரு மணிகண்டன் மண்ணின் மைந்தர் என்பது ரொம்பத் தெளிவாகத் தெரிகிறது. :-)
அவரின் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்துள்ளார். அவரின் பல கருத்துகள் மக்களின் நாடித் துடிப்பை பிரதிபலிப்பதாக உள்ளது..
(எனக்கும் திருச்சிக்கும் நெறைய தொடர்பு உள்ளதால் இதை சொல்கிறேன்)!

தமிழ் நாட்டின் மத்திய மற்றும் முக்கியமான இந்தத் தொகுதியான ஒரு நல்ல வேட்பாளர் கூட இல்லை என்பது வேதனை. திருச்சி இன்னமும் ஒரு பெரிய கிராமம் போன்றுதான் இருக்கிறது. கல்வியை வியாபாரமாக்கிய பெருமை இந்தத் தொகுதியில் பல கல்லூரிகளை (பொறியியல் இல்லை, "bury" இயல்!) நடத்திக் கொண்டு இருக்கும் அரசியல் வியாதிகளையே சேரும்......இரண்டு முறை திரு ரங்கராஜன் எம் பியாக இருந்தும் பெரிசாக ஒண்ணும் நடக்கவில்லை.

L(oafer) கணேசன் போன்ற பச்சோந்திகளுக்கு எல்லாம் வாக்களித்து இந்த ஊர் மக்கள் அதன் பயனை அனுபவிக்கின்றனர்.

இந்த முறையும் யார் வந்தாலும் இந்தத் தொகுதிக்கு விடிவு காலம் இருக்காது என்பது என் கருத்து.

தமயந்தி said...

athu yaarunga tirunelveli vasanth

UMA said...

தி .மு. க அல்லது அ .தி .மு .க அல்லது விஜயகாந்த் அணிக்கு அளிக்காத வாக்கு உபயோகம் இல்லை. டில்லியில் மத்திய ஆட்சியை அமைக்க போகும் அரசை தீர்மானிக்கும் தேர்தலில் சின்ன அணிகளுக்கு ஒட்டு போடுவது எதையும் சாதிக்காது. எனவே நன்கு சிந்தித்து நல்ல அணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

காங்கிரசை கவனித்தால்.

1. இப்போதுள்ள பிரதமர் மன்மோகன் சிங் குறை சொல்ல முடியாதவர்.
2.இந்த 5 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
3. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
4. முன் எப்போதும் இல்லாதவகையில் நெடுஞ்சாலைகள் அகல படுத்தப்பட்டு உலகத்தரத்திற்கு போடப்பட்டு வருகின்றன .
5.பல்வேறு உலக தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைக்க பட்டு வருகின்றன.
6. இரயில் போக்குவரத்துக்கு மேம்பட்டுள்ளது.
7. மின்சாரம், இரயில் , பஸ் கட்டணம் ஏற்றபடவிலை.
8. புதிய மேம்பாலங்கள் பல்வேறு சாலைகளில் கட்டப்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது. கத்திபாரா ஜங்ஷனில் இப்போது ஒரு மணித்துளி கூடநெரிசலில் காத்து நிற்க வேண்டாம்.
9.பல்வேறு வேலை வாய்ப்பு திட்டங்கள். ( கணிப்பொறியால் )
10.அரசாங்க உழியர்களுக்கு சம்பள உயர்வு ( கணிப்போறி வேலைக்கு சமமாக) .
11. பல் வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு புதிய பஸ் விடப்பட்டுள்ளது.
12. அரசு உழியர்களுக்கு சிறப்பு மருத்துவ ஏற்பாடு

பல்வேறு மக்கள் நல பணிகள். உதாரணமாக- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட உணவுக்காக நிதி உதவி, ஏழை பெண்கள் திருமண உதவி , நூறு நாள் வேலை திட்டம், இலவச டிவி, காஸ் அடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி, இனிமேல் விவசாய கடன்களுக்கு வட்டி கிடையாது, உழவர் சந்தை போன்ற திட்டங்கள்.

புதிய வரி இல்லாமல், கட்டணங்களை ஏற்றாமல், இவ்வளவு திட்டங்களை கொண்டு வருவதற்கு வசதியாக இரண்டு அரசுகளும் ஒத்த கூட்டணியாக இருக்கவேண்டும்.
எனவே தி. மு.க அணிக்கு வாக்களித்தல் நமக்கு நன்மை உண்டு.

இதை படிப்பவர்கள் பலர் நல்ல வேளையில் இருக்கலாம் . ஏன் இலவச திட்டங்கள் நீங்கள் என கேட்கலாம். ஏழைகளும் மக்கள் தான். நமது சாப்பாடு அவர்களின் வியர்வையில் விளைந்த முத்து என எண்ணி பார்க்க வேண்டும். அவர்களால் விவசாயத்தின் மூலம் கிடக்கும் வருவாயில் சேமிக்க முடியாது. எதுவும் வாங்க முடியாது. நம்மால் முடிந்த அளவு உதவி செய்யவேண்டும். அப்படி சேயும் உதவி கடவுள்களுக்கு சென்று சேரும்.

அப்படி இல்லாவிட்டால் ஜெயா உதவியுடன் மதிய ஆட்சி வந்தால் , கருணாநிதியையே குறை கூறவே ஜயாவிற்கு நேரம் போதாது.

எனவே நன்கு சிந்தித்து ஒட்டு போடுங்கள். கருணை உள்ள கருணாநிதிக்கா ? அல்லது ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத்து எழுபத்திரெண்டாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி அவர்கள் குடும்பத்தை நிர் மூலமாக்கிய ஜெயாவுக்கா? எண்ணி பாருங்கள். .உங்கள் வீட்டு பெண்மணிகள், குழந்தைகள் ஆகியோரை கேளுங்கள். பின் ஒட்டு போடுங்கள்.

மணிகண்டன் said...

தேங்க்ஸ் இட்லிவடை.

அனானி, மன்சூர் அலிகான் மீது அவதூறை வாரி தெளிக்கிறீர்கள். இது சரி இல்லை.

Anonymous said...

/// இப்போதுள்ள பிரதமர் மன்மோகன் சிங் குறை சொல்ல முடியாதவர்.///

எத்தனை விவசாயிகள் தற்கொலை? எதனை குண்டு வெடிப்புகள்? ஸ்பெக்ட்ரம் ஊழல், சுவிஸ் வங்கி பணம் பற்றி வாய் திறக்க மாட்டேங்கறார். இலங்கையில ஒரே படுகொலை.
பாராளுமன்றத்துல பணமோ பணம். இன்னுமுன் இந்திய ஏழைகள், ஏழைகள் தான்!

//முன் எப்போதும் இல்லாதவகையில் நெடுஞ்சாலைகள் அகல படுத்தப்பட்டு உலகத்தரத்திற்கு போடப்பட்டு வருகின்றன .////

ஒரே ஒரு கிராமத்தில கூட உருபிடியான சாலை இல்லை. தேசிய நெடும்சாலையில மட்டும் தான் மக்கள் போரங்கள?
//பல்வேறு உலக தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைக்க பட்டு வருகின்றன.////
நல்ல அரசியல் வாதி மாதிரி பேசுறீங்க...ஹி ஹி ஹி
/// மின்சாரம், இரயில் , பஸ் கட்டணம் ஏற்றபடவிலை.////
மின்சாரமே இல்ல. அதனால கட்டணமும் இல்ல!

/// பல்வேறு மக்கள் நல பணிகள். உதாரணமாக- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட உணவுக்காக நிதி உதவி, ஏழை பெண்கள் திருமண உதவி , நூறு நாள் வேலை திட்டம், இலவச டிவி, காஸ் அடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி, இனிமேல் விவசாய கடன்களுக்கு வட்டி கிடையாது, உழவர் சந்தை போன்ற திட்டங்கள்.////

இலவச கல்வி உண்டா? இலவச மருத்துவ வசதி உண்டா? கிராமங்களில் வேலை வைப்பு உண்டா? யாருக்கு வேணும் உங்க கலர் டிவி? எதனை அரசு பள்ளியில் ஆசிரியர் இல்லை தெரியுமா உனக்கு? எதனை இடங்களில் நல்ல ரோடு இல்லை தெரியுமா உனக்கு? பொறியியல் கல்வி வியாபாரம் பற்றி தெரியுமா?

//கருணை உள்ள கருணாநிதிக்கா ? ////

ஐயோ பாவம்! தமிழ் நாட்டுல எப்படி கருணாநிதி குடும்பம் நம்பர் ஒன் பணக்கார குடும்பம் ஆனது மட்ட்டும் சொல்லுங்க! நான் ஒட்டு போடறேன்!

Anonymous said...

@UMA - You may be cong+dmk supporter, try be specific on whatever you are saying. All general comments like - 5.பல்வேறு உலக தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைக்க பட்டு வருகின்றன. are not very accurate.
All govt employees may be happy with DMK. But whoever does/support bundth should be punished - this is my opinion.

Inba said...

உள்ளாட்சி தேர்தல் முதல்
பாராளுமன்ற தேர்தல் வரை
ஒரே வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்?

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை
தொண்டர்கள்தான் இல்லையென்று பார்த்தால்
தலைவர்களுக்கும் இப்போது பஞ்சம்
நம்பவே முடியவில்லை.

பேசாமல்
திருச்சராபள்ளியை
சாருச்சராப்பள்ளி என்று
மாற்றிவிடலாம்

Anonymous said...

Lalitha Kumaramangalam should Win this seat.

UMA said...

இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டும்,விடுதலைப்புலிகளுக்கு அழிவே கிடையாது, இலங்கைக்கு இந்திய போர்படைகளை அனுப்பி தமிழீழம் பெற்று தருவேன் - ராமதாஸ்.

தமிழக மக்கள்: அன்பு சகோதரனே கொஞ்சம் தமிழ் நாட்டு மக்களை கவனியுங்கள். எங்களுக்கு நல்லது முதலில் பண்ணுங்கள்.
பின்னர் இலங்கை தமிழரை கவனிக்கலாம்( தேர்தல் வரை).

இந்த வேகம் எதுவரை? ( மே 13 வரை)

Prabhu Swaminathan said...

UMA..please please tell me you are joking..

You said JJ sent out lacs of people home by passing one GO. Whom did she sack? those lazy gooses who prided that they can never be sacked and coming to govt office at 10 and treating customers like servants. She taught them a good lesson.

Baski said...

UMA - you are *perfectly* wrong.

1. Golden Quadrant (Good Highways) is BJP's project.
2. For IT-companies you should thank its CEO's. Govt didnot fund these projects. Thank Narayana Murthy / Azim Premji / etc.
Btw., Govt troubles these companies with worst powersupply and high corruption.
3. Hike for Govt employees salary.
Are you happy about it?
Did they ever work? (Take any dept)
They get much better money through bribe... Thanks to govt again.
4. I am amazed that you are attracted with "Free".
Please understand it is WASTE of money.
#############################
# FREE=WASTE=BRIBE=BAD-GOVT #
#############################
But, This is the trump-card of DMK. As major population wants "Free"

I can write more., but it will not be useful.

In short, I will vote to young patriotic "Independents".
Because any political party needs Money (for Biriyani and Anbalippu and Sumo)., which is possible ONLY through *scams*.

I suggest to vote to young patriotic "Independents".
Otherwise Kalam's dream (India Superpower) will remain dream.

Baski said...

//இப்போதுள்ள பிரதமர் மன்மோகன் சிங் குறை சொல்ல முடியாதவர். //

There are many scams during his regime. You forgot it.
CBI lost its image because of pressure from Cong.

Let us think about our problem.

Can somebody imagine what will happen if all indian out-sourcing companies (IT-ITES-Call center jobs) are closed?

This can happen as all developed countries are waking-up(due to recession) now.

Don't think about Global Trade Agreement and all. They are meant for developing countries.
What can WTO do? You cannot stop countries like USA. It is proven in many cases like Iraq war.

If something like that happens,
1. There will be a heavy revenue loss for central govt? (Huge income tax will be lost).
2. Real Estate then Banks Crash.
3. Will take years to recover.

The fact is:
We are heavily relying on foreign money to pay Indian salaries.
This inflow can stop at any moment.
May projects can go to an African country. (Obama is an Afro-American).

###################################
# Is India not prepared for this? #
###################################
The whole blame goes to current PM.

India's strength is agriculture. But
Rice export is banned. (low production)
Suger is being imported.
No projects to increase cultivatable land.
Never heard of any projects for Agri.

Let govt Spend money in free stuffs... to get votes...
Long live "free" and DMK.

Tamil said...

//எனவே நன்கு சிந்தித்து ஒட்டு போடுங்கள். கருணை உள்ள கருணாநிதிக்கா ?///


தமாசு தமாசு.... என்ன இது "Chicken" பிரியாணியும், குவாட்டரும் வாங்கி தின்கிற கலக கண்மணிகளுக்கு நடுவிலா பேசுகிறீர்கள்?

UMA said...

பாஸ்கி அவர்களே:

1.திட்டம் போட்டால் மட்டும் போதாது. பணம் ஒதுக்கி செயல் படுத்தவேண்டும் .மற்றபடி அனைத்தும் கனவுதான். அப்படியானால் இப்போதுள்ள மின்சார பற்றாக்குறைக்கு BJP தான் காரணமா?

2. கணிபொறி நிறுவனங்கள் அனைத்தும் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் வாழ்கையை அனுபவிக்க குறைந்த கூலிக்கு இந்தியர்களை பயன்படுதிகொள்ளும் திட்டமே.முற்காலத்தில் மக்கள் துபாய்க்கு சென்று கடுமையாக உழைத்தது போலத்தான்.நம்மை கடுமையை சுரண்டி வேலை வாங்கி, அவர்களுக்கு காரியம் முடிந்தபின் நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இது எதிர் பார்த்து தான். இந்தியாவில் கணிபொறி உபயோகம் இன்னமும் அதிகம் வரவில்லை . அதை முன்னேற வழி வகுத்தால் நாடும் முன்னேறும், நம் மக்களுக்கும் வேலை கிடைக்கும்.அந்நிய நாட்டினருக்கு எடுபிடி வேலை செய்ய வேண்டாம். கணிபொறியை எதிர்த்த இடதுசாரிகள் ரஷ்ய, சீனாவில் அதன் உபயோகத்தை பார்த்தாவது திருந்த வேண்டும்.

3. அரசாங்க ஊழியர்கள் , அரசுத்துறை ஊழியர்கள் வேலை செயவில்லை என்பது பொய்யான குற்றசாட்டு.அவர்கள் தான் நமது நாட்டு மக்களுக்கு வேலை பார்ப்பவர்கள்.

4. ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் சொன்னது போல் ஏழை ,உடல் முடியாதவர்கள், நாட்டுக்கு பிரயோஜனம் இல்லாதவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என நினைக்கிறன். அது இந்தியாவில் சாத்தியம் இல்லை. கொலை காரனையே உடனே தூக்கில் போட முடியாது.

5. இப்போது தான், நல்ல கல்விநிலையங்களான IIT, IIM முதலிய இடங்களில் படித்தவர்கள் வெளி நாட்டு நிறுவனங்களில் சேர்ந்து சோப்பு, பவுடர், கோக கோலா, பெப்சி விற்பதை தள்ளி விட்டு இந்திய கட்டுமான வேலைக்கு சேர விரும்பியுள்ளனர். நமது நாட்டு மக்களுக்கு தொண்டு செய்ய வந்துள்ளனர்.

6. கலாம் கனவு இந்தியா முன்னேறுவதே . பணம் மட்டும் அல்ல முன்னேற்றம். கட்டுமானம், மின்சாரம், வீடு, ரோடு, பாலம், விமான, இரயில் வசதி, கல்லூரிகள் போன்றவே அனைவருக்கும் தேவை. செல் போன் உபயோகிக்காத ஆளே இந்தியாவில் இல்லை. முன்பு போனுக்கு நாம் அலைந்தது போய், போன் கனைக்க்ஷன் நம்மை தேடி வருகிறது. 50 பைசாவில் இந்தியாவில் யாருடனும் பேசலாம்.

7. இந்தியா போல மருந்து, மாத்திரைகள் , உணவு, பாஸ் ,ரயில் டிக்கட், குறைந்த ஆனால் அபரிதமாக கிடைக்கும் நாடு உலகில் இல்லை. ஒரு டாலர் பணத்தில் ஒரு நாளை ஓட்டலாம்.

பிஜேபி வந்தால் அயோத்தியில் கோவில் தான் கட்டுவதாக கதை பண்ணுவார்கள்.

UMA said...

பிரபு சாமிநாதன் அவர்களே:

அரசாங்க உழியர்களை அப்படி சொல்லாதீர்கள். ஒரு சில பேர் அப்படி இருக்கலாம். பெரும்பாலும் நல்லவர்கள் நிறைய பேர் , நல்லா வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். அரசு உழியர்கள் எப்போதும் நாட்டுக்காக , நாட்டு மக்களுக்காக , திட்டம் போடுதல், மற்றும் திட்டத்தை செயலாக்கம் செய்பவர்கள்.

மனிதாபிமானம் இல்லாமல் வேலை நீக்கம் செய்ததோடல்லாமல், இரவோடிரவாக குடும்பத்தினரை வீட்டை விட்டு துரத்துதல், மின்சாரம் ,தண்ணீர் துண்டிப்பு, முதலியன கொடுமை தான்.அப்போது குய்யோ முறையோ என்று கத்திய இடது சாரிகள் இப்போது அம்மாவின் காலடியில்.

என்னுடைய உறவினர்கள் பலர் அப்போது பாதிக்கப்பட்டவர்கள். சீட்டு கிழித்தவர்களும் மன அதிர்ச்சியால் பாதிக்க பட்டனர்.

Anonymous said...

தி .மு. க அல்லது அ .தி .மு .க அல்லது விஜயகாந்த் அணிக்கு அளிக்காத வாக்கு உபயோகம் இல்லை. டில்லியில் மத்திய ஆட்சியை அமைக்க போகும் அரசை தீர்மானிக்கும் தேர்தலில் சின்ன அணிகளுக்கு ஒட்டு போடுவது எதையும் சாதிக்காது. எனவே நன்கு சிந்தித்து நல்ல அணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

காங்கிரசை கவனித்தால்.

1. இப்போதுள்ள பிரதமர் மன்மோகன் சிங் குறை சொல்ல முடியாதவர்.
2.இந்த 5 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
3. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
4. முன் எப்போதும் இல்லாதவகையில் நெடுஞ்சாலைகள் அகல படுத்தப்பட்டு உலகத்தரத்திற்கு போடப்பட்டு வருகின்றன .
5.பல்வேறு உலக தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைக்க பட்டு வருகின்றன.
6. இரயில் போக்குவரத்துக்கு மேம்பட்டுள்ளது.
7. மின்சாரம், இரயில் , பஸ் கட்டணம் ஏற்றபடவிலை.
8. புதிய மேம்பாலங்கள் பல்வேறு சாலைகளில் கட்டப்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது. கத்திபாரா ஜங்ஷனில் இப்போது ஒரு மணித்துளி கூடநெரிசலில் காத்து நிற்க வேண்டாம்.
9.பல்வேறு வேலை வாய்ப்பு திட்டங்கள். ( கணிப்பொறியால் )
10.அரசாங்க உழியர்களுக்கு சம்பள உயர்வு ( கணிப்போறி வேலைக்கு சமமாக) .
11. பல் வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு புதிய பஸ் விடப்பட்டுள்ளது.
12. அரசு உழியர்களுக்கு சிறப்பு மருத்துவ ஏற்பாடு

பல்வேறு மக்கள் நல பணிகள். உதாரணமாக- கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட உணவுக்காக நிதி உதவி, ஏழை பெண்கள் திருமண உதவி , நூறு நாள் வேலை திட்டம், இலவச டிவி, காஸ் அடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி, இனிமேல் விவசாய கடன்களுக்கு வட்டி கிடையாது, உழவர் சந்தை போன்ற திட்டங்கள்.

புதிய வரி இல்லாமல், கட்டணங்களை ஏற்றாமல், இவ்வளவு திட்டங்களை கொண்டு வருவதற்கு வசதியாக இரண்டு அரசுகளும் ஒத்த கூட்டணியாக இருக்கவேண்டும்.
எனவே தி. மு.க அணிக்கு வாக்களித்தல் நமக்கு நன்மை உண்டு.

இதை படிப்பவர்கள் பலர் நல்ல வேளையில் இருக்கலாம் . ஏன் இலவச திட்டங்கள் நீங்கள் என கேட்கலாம். ஏழைகளும் மக்கள் தான். நமது சாப்பாடு அவர்களின் வியர்வையில் விளைந்த முத்து என எண்ணி பார்க்க வேண்டும். அவர்களால் விவசாயத்தின் மூலம் கிடக்கும் வருவாயில் சேமிக்க முடியாது. எதுவும் வாங்க முடியாது. நம்மால் முடிந்த அளவு உதவி செய்யவேண்டும். அப்படி சேயும் உதவி கடவுள்களுக்கு சென்று சேரும்.

அப்படி இல்லாவிட்டால் ஜெயா உதவியுடன் மதிய ஆட்சி வந்தால் , கருணாநிதியையே குறை கூறவே ஜயாவிற்கு நேரம் போதாது.

எனவே நன்கு சிந்தித்து ஒட்டு போடுங்கள். கருணை உள்ள கருணாநிதிக்கா ? அல்லது ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத்து எழுபத்திரெண்டாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி அவர்கள் குடும்பத்தை நிர் மூலமாக்கிய ஜெயாவுக்கா? எண்ணி பாருங்கள். .உங்கள் வீட்டு பெண்மணிகள், குழந்தைகள் ஆகியோரை கேளுங்கள். பின் ஒட்டு போடுங்கள்.

SAIKRISHNAMURARI said...

//uma // dont tell lie // jaya did correct//they never work properly always ask bribe only// see bank they search keys in key board// rto office and passport office // politicians are better compared to govt employee//the educated govt employs only barrier for our country's growth

Anonymous said...

Vote for people who have not been MPs at all so that they can also make money & one more family will become rich. There is no point in making the same families richer & they assume such power they will send autos to deal with you if you raise even a legitimate demand. Atleast the new comer will not become corrupt overnight till he gets his bearings in the corrupt verandahs of parliament. Also he will take some time to enlist goondas before which we will have chance to get some work done thro' him.
Thyagu

யோசிப்பவர் said...

இட்லிவடை,
சன் டிவியில் தேமுதிகவுக்கு விளம்பரம் பார்த்தீர்களா???

Baski said...

UMA - I can reply to all your questions. I dont want to clutter much.

DMK/Cong/BJP/ADMK/PMK/MDMK/DMDK candidates donates (invests) the party around 50L.
Apart from that they spend a big chunk in elections for Stage/Serial-light/Banner/Anbalippu/Biriyani/Quater/..?

So a candidates spending goes beyond a crore.
What will be the intention of a guy who spends/wastes/invests like this?

அன்பு ★ பிரபாகரன் ★ said...

??? kovindhaaaaaaaaaaaaaaaa ???

மணிகண்டன் said...

***
What will be the intention of a guy who spends/wastes/invests like this
***

baski, i think the intention would be to serve public. What else ?

lok said...

@UMA- Do you have some political knowledge or writing some junk based on junk blogs floating in the Net ?

Anonymous said...

Periyar DK attacked army vehicles in coimbatore. The government has to take extremely strong action on those culprits. After the arrest of a few of those people who were involved, they have reportedly attacked a DMK office in Chennai. Irrespective of the ADMK/DMK political divide, jayalalitha should have condemned this actions of the periyar DK. She does not seem to have done that yet.

IV, please highlight this. This is a very serious issue. Staging an attack inside the high court, attacking army convoy are really bad tendencies. If jaya chooses not to condemn this people for her political expediency, I will prefer that DMK wins this election. There must be limits, even to political expediency.

நாரத முனி said...

ஆமா கருத்து கணிப்பெல்லாம் வெளியிட கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லிருக்கே? என்ன இட்லி வடையாரே, நீதிமன்ற அவமதிப்பு வழக்குன்னு வந்தா எப்டி சமாளிக்க போறீங்க ?

Anonymous said...

//என்ன இட்லி வடையாரே, நீதிமன்ற அவமதிப்பு வழக்குன்னு வந்தா எப்டி சமாளிக்க போறீங்க ?//

அட்ரா சக்க... இட்லிவடை யார்னு கூடிய சீக்ரம் எல்லார்க்கும் தெரியபோகுது....

டன்மானடமிழன் said...

///அரசாங்க உழியர்களை அப்படி சொல்லாதீர்கள். ஒரு சில பேர் அப்படி இருக்கலாம். பெரும்பாலும் நல்லவர்கள் நிறைய பேர் , நல்லா வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். அரசு உழியர்கள் எப்போதும் நாட்டுக்காக , நாட்டு மக்களுக்காக , திட்டம் போடுதல், மற்றும் திட்டத்தை செயலாக்கம் செய்பவர்கள்.///

வெய்யில் ரொம்ப ரொம்ப ஞாஸ்தியாடுச்சி
வேற என்னத்தை சொல்ல...

Prabhu Swaminathan said...

UMA..i would like to ask you something. Lets take an example - as you say if all government employees are 100% dedicated then can you tell me how many govt school teacher's children are studying in govt schools? i don't think it will even be 5%.

If they are so dedicated, hardworking then why do they send their kids to private school?

same is the case for govt doctors...and i can give you lot more such examples..

Baski said...

//i think the intention would be to serve public. What else ?//

Manigandan,
What do we expect at 1st of every month?

Once winning MP they will look forward to loot. Have fun with benefits of MP.
Most of the MP's never visit their constituency till next election.

They neither speak/goto in parliment nor work for their people. (few exceptions)

Never expect them to serve public.

In this election winning regional parties is going to support the highest bidder. I am sure JJ will be rich by few hundred crores (not joking) after this election. (I hope ADMK is going to sweep this time)


I feel, We need change in election process.
Like presidential selection in USA, Indian public should able to select its Prime Minister along with their MP's