பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 14, 2009

தேர்தல் 2009 - 49-ஓ செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49ஓ விதியின்படி பதிவேடு 17 ஏ ல் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் ஞாநி ஓ-பக்கங்களில் கடந்த சில வாரங்களாக 49-ஓ பற்றி எழுதி வருகிறார்.

நேற்று நடந்த தமிழக் தேர்தலில் 49-ஓவை மக்கள் எப்படி பயன் படுத்தினார்கள் என்று சில செய்திகள்...


ஓட்டு போட விரும்பாதவர்கள் 49 (ஓ) விதியின்படி, ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் கையெழுத்திடும் பதிவேட்டில், தாங்கள் ஓட்டு போட விரும்பவில்லை என்று எழுதி கையெழுத்திட வேண்டும். இதற்கென தனி படிவம் ஏதும் தரப்படாது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல், பலர் படிவங்கள் கேட்டுள்ளனர். - நரேஷ் குப்தா



பெரும்பாலான ஓட்டுச்சாவடி மையங்களில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதற்கான படிவம் 49(ஓ) குறித்த தெளிவில்லாத அறிவிப்பால், இளைஞர்கள் ஏமாற்றதுடன் ஓட்டளித்துச் சென்றனர்.


புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி பிரிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை சட்டசபை தொகுதியில் மட்டும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என `49ஓ' விதியை பயன்படுத்தி 10 ஆயிரத்து 267 பேர் வாக்களித்துள்ளனர்.

கந்தர்வகோட்டையில் 852 பேர் `49ஓ' பிரிவை பயன்படுத்தினர்.

மற்ற 4 சட்டசபை தொகுதிகளிலும் இதேபோல் `49ஓ' விதி அதிகபடியாக பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.



சுதீர் என்பவர் தனது தாயாருடன் பெருங்குடி தாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள வாக்குசாவடிக்கு வந்தார். அப்போது தாங்கள் எந்த அரசியல் கட்சியையும் நம்ப தயாராக இல்லாததால் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறினார்கள். எனவே வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தெரியப்படுத்தும் 49 ஓ படிவம் வேண்டும் என்று கேட்டனர். இதற்கு அதிகாரிகள் ஓட்டுபோட விரும்பவில்லை என்று எழுதிக்கொடுத்தாலே போதும் என்றும் அதற்கென்று தனியாக படிவம் கிடையாது என்றும் கூறினார்கள்.

புளியந்தோப்பு போலீஸ் நிலையம் அருகே உள்ள 3-வது மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடியில் கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டுப்போட வந்தார். அப்போது அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து, ஆட்காட்டி விரலில் மை வைத்து கொண்டார். அப்போது அவர் தனக்கு ஓட்டுப்போட விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் கையில் மை வைத்துவிட்டதால், கட்டாயமாக ஓட்டு போட்டே தீரவேண்டும் என்று கூறிவிட்டனர். அதன் பிறகு அந்த மாணவர் வேறு வழியில்லாமல் தனது வாக்கை பதிவு செய்து விட்டு சென்றார்.

கொளத்தூர் பூம்புகார் நகரைச்சேர்ந்த இந்துமதி என்ற பெண் அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு வந்தார். அங்கிருந்த தேர்தல் அதிகாரியை பார்த்து நான் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை. எனவே தேர்தல் கமிஷன் அறிவித்தபடி 49ஓ விண்ணப்பம் கொடுங்கள் என்று கேட்டார்.Image

அதற்கு அதிகாரி அப்படியெல்லாம் விண்ணப்பம் எதுவும் இல்லை என்று மறுத்தார். அதை கேட்காமல் இந்து மதி தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்து விட்டு திரும்பினார்.

வண்ணாரப்பேட்டை தியாகராயர் கல்லூரியில் வாக்களிக்க வந்த சரவணன் என்ற வாக்காளர் ஒருவர் தான் எந்த கட்சிக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் தனக்கு 49ஓ படிவம் வேண்டும் என்றும் கேட்டாராம். அதற்கு அதிகாரிகள் பிற்பகலில் தான் அப்படிவம் வரும் என்று கூறியதையடுத்து, சரவணன் அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

V Gopalakrishnan, a social activist, was the first at the MGR Corporation School in Chennai South constituency to ask for the Rule 49 (0) option. "The polling officer at booth 136 was totally blank. Then he asked me to vote for some candidate and leave'. When I insisted on entering my refusal to vote in the 17A register, he called the zonal officer, who was equally ignorant. Finally, I called the district electoral officer and, after 90 minutes of struggle, got it done,"

Dr S Murugasundaram, a dermatologist and a voter of ward 70 of Kilpauk in Chennai Central, had a similar experience when he went to vote at 8am. "The officer was rude when I told him about 49 (O). He asked me not to create a ruckus and leave the place. However, I stood my ground and registered my refusal to vote," he said. Several people complained of policemen threatening them when they refused to leave the polling booths without registering their names under Rule 49 (O) to prevent bogus voting in their names.

V Anandarajan of Nanganallur, which falls under the Sriperumbudur constituency, found the exercise smoother, but the officer there refused to apply indelible ink on his finger though the rule specifies that ink should be marked on the voter's finger. All this, despite posters in front of polling booths mentioning the rule and the procedure being explained in the polling officer's handbook (page 39).



17A - படிவம்(form) - பதிவேடு(register) என்பதால் இந்த குழப்பம் என்று தெரிகிறது. அடுத்த முறை இன்னும் நிறைய 49-0 வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.


11 Comments:

Venkat said...

Why Don't include 49 (o) button in Voting machine, instead of form or other papers.

Thomas said...

நான் சென்னை சூளைமேடு சங்கராபுரம் வாக்குச்சாவடிக்கு ஒட்டு போட போனபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.அங்கு உள்ள பூத்து ஒபிசெர்(பெண்) மற்றும் பிரசிடம் ஒபிசெர் (ஆண் ) இருவருக்குமே 49 ஒ குறித்து ஏதும் தெரியவில்லை அல்லது தெரியாதது போல நடித்தார்கள் என்ற தான் சொல்லவேண்டும். குறிப்பாக அவர்களிடம் நான் 49 ஒ க்கு பதிவு செய விரும்புகிறேன் என்று சொல்லியும், நீங்க சொல்றது என்னகு புரியவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அரசு ஊழயுயர்களாக இருக்கும் இது போன்ற ஆட்களால் ஜனநாயகம் மாறபோவதில்லை. எனது அண்ணனும் தேர்தல் பணி செய்ய சென்றிருக்கிறார். அவர்களுக்கு தேர்தல் அதன் நடைமுறைகளை பற்றியும் கொடுத்த கையேட்டில் 49 ஒ பற்றி மிக தெளிவாக சொல்லபட்டிருக்கிறது.இந்த நிலையை எங்கு பொய் சொல்வது,மிகவும் எரிச்சல் அடைந்து ஏதோ ஒரு கருமத்திற்கு வோட்டுபோட்டு வீடு வந்தேன்.

Rakesh said...

Boss, a case is pending in supreme court regarding this issue.

வலைஞன் said...

1.வலைத்தளத்தில் வாக்களிக்கும் வச்தி

2.எதிர் ஒட்டு பதிவு செய்யும் வசதி.:
இம்முறையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு ஓட்டுகள்
முதல் ஒட்டு அவர் விரும்பும் வேட்பாளர் அல்லது 49-A இல்;
இரண்டாம் ஒட்டு அவர் எந்த வேட்பாளர் வரக்கூடாது என விரும்பிகிறாரோ அவருக்கு போட!
ஒரு வேட்பாளர் பெறும் மொத்த ஓட்டுக்கள் அவர் பெற்ற நேர் ஓட்டுக்கள் -(minus) எதிர் ஓட்டுக்கள்

மேற்கண்ட இரண்டும் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்ல்து

Anonymous said...

ஏங்க இட்லி வடை.,

மிலிடெரி (இராணுவ) ஆட்சி - அப்படின்னு ஒரு பட்டன் வைச்சா நல்லாருக்குமே !!!

கிரி said...

//அடுத்த முறை இன்னும் நிறைய 49-0 வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன். //

வழிமொழிகிறேன்

Anonymous said...

yes military rule for next 5 years . if that option will come . sure india will be a developed nation before 2020.

Dhakshin

Anonymous said...

Yes, i think we can expect another election within 12 months and then more voters will opt for 49(o).

Anonymous said...

TN turnout phenomenal
Our Bureau CHENNAI


TAMIL Nadu’s official figures on voter turnout on Wednesday were nothing short of phenomenal. A state-wide average of 72.46%, out of the 4.13 crore registered voters, has raised many eyebrows in the state.
The state has been steadily polling above the national average ever since the country went to the polls for the first time in 1952. The figures only dipped twice in 1998 and 1999. The last time the gap between the national and state averages was this big was in the 1967 polls. And it was in the same year that DMK replaced the Congress party in the assembly for the first time. The scenario is quite the opposite today with the ruling DMK in alliance with the Congress.
It is normally said that a high voter turnout indicates anti-incumbency. But, poll analysts say it may not be so in TN this time. They adds that the voters had other incentives to vote this time, referring to the allegation that money was distributed systematically in almost all constituencies in Tamil Nadu.
Officials in the state electoral office hinted at the possibility of re-polls in some of the constituencies. However, the ‘cash’ king constituency, that has been infamous for its electoral ‘malpractices’, has not clocked the highest figures in the state. Karur, a rural constituency, tops the list with 80.95% followed closely by Tiruvannamalai, a constituency close to Chennai, with 80.60%. Madurai follows far behind at 77.52% with Namakkal, Perambalur and Arakkonam having polled about 78%. These three have never seen high voter turnouts historically.
Nagapattinam, a reserved constituency where the Left parties are said to have a sure edge, has also scored above Madurai at 77.6%. Virudhunagar constituency from where Vaiko is contesting has polled 75.33%, P Chidambaram’s Sivaganga 71.21% and Mani Shankar Aiyar’s Mayiladuthurai 72.6%.
Chidambaram, a reserved constituency, which saw popular Dalit leader Thol Thirumavalavan contesting against former MP E Ponnusamy, polled 75%. TN’s poll arithmetic has also created ripples as the widespread notion is that the most urban constituencies vote the least and rural ones vote the most.
Urban constituencies of Coimbatore, Tiruchi and Madurai have polled 70.83%, 67.88% and 75.82% respectively.
Tirunelveli, Kanyakumari and Salem follow at 66.21%, 64.50% and 76.73%. In fact, all 39 constituencies have polled consistently high above 60%, including Nilgiris, a hill station with a significant tribal population, at 70.7%.
Voter turnout in Chennai has also been a pleasant surprise with an average of 62% across its three constituencies. Chennai Central, the only fully metropolitan constituency, has polled the lowest at 61.13%


தேர்தல் ஆணையம் தகவல் தமிழகத்தில் 72.46% வாக்குப் பதிவு


சென்னை, மே 15: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 72.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கரூரில் 80.95, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் இறுதி நிலவரப் பட்டியல்:
தொகுதி சதவீதம்
1.கரூர் 80.95
2.திருவண்ணாமலை 80.60
3.நாமக்கல் 78.64
4.பெரம்பலூர் 78.30
5.அரக்கோணம் 78.10
6.நாகப்பட்டினம் (தனி) 77.60
7.மதுரை 77.52
8.கள்ளக்குறிச்சி 76.76
9.சேலம் 76.73
10.கடலூர் 75.98
11.விருதுநகர் 75.33
12.ஆரணி 75.20
13.தேனி 75.07
14.சிதம்பரம் (தனி) 75.00
15.விழுப்புரம் (தனி) 74.90
16.திருப்பூர் 74.60
17.திண்டுக்கல் 74.60
18.காஞ்சிபுரம் (தனி) 74.00
19:ஈரோடு 74.00
20.பொள்ளாச்சி 73.62
21.தஞ்சாவூர் 73.55
22.மயிலாடுதுறை 72.60
23.வேலூர் 72.10
24.சிவகங்கை 71.21
25.கோவை 70.83
26.நீலகிரி (தனி) 70.70
27.தர்மபுரி 70.53
28.கிருஷ்ணகிரி 70.13
29.தென்காசி (தனி) 70.13
30.திருவள்ளூர் (தனி) 69.19
31.தூத்துக்குடி 69.09
32.ராமநாதபுரம் 68.41
33.திருச்சி 67.88
34.ஸ்ரீபெரும்புதூர் 66.40
35.நெல்லை 66.21
36.கன்னியாகுமரி 64.50
37.வட சென்னை 63.50
38.தென் சென்னை 63
39.மத்திய சென்னை 61.13

யோசிப்பவர் said...

வெங்கட் சொல்வது போல் 49-Oவுக்கு தனியே ஒரு பட்டன் கொடுத்துவிட்டால் நல்லது.

பி.கு.: எங்கள் வாக்குசாவடியிலும் இதே குழப்பம் வந்ததால், 49O பதியச் சென்ற நான் ஏதோ ஒரு சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்டு வந்தேன்!!:-(

Boston Bala said...

---எதிர்ப்பார்க்கிறேன்.---49 ஓ-விற்குஎதிர்ப்பு ஆக்குகிறீர்களா :)