பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 08, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 - ஒரு பார்வை

அய்யா இட்லி வடை!
எதுக்கு இப்போ அந்த "பிருமாண்டமான குரல்" வோட்டு?? நம்ம அரசியல் வியாதிங்கள விட மோசமா அரசியல் பண்ணறாங்க!!
முடிஞ்சா இந்த நிகழ்ச்சி பத்தி நான் கிருக்கினத போடுங்க.
நன்றி.
மானஸ்தன்

அய்யா மான்ஸ்தன்!,

இந்த ஓட்டு பெட்டியை சைடில் வைக்க சொன்னது ஒர் அம்மணி.
(அம்மணி சொன்னால் பதிவை எடுப்பேன் அல்லது போடுவேன் என்பது உங்களுக்கே தெரியும் )
இப்ப நீங்க இந்த பதிவை போட சொல்லறீங்க, என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்க போல.

நன்றி,
இட்லிவடைஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 - ஒரு பார்வை "தமிழகத்தின் மிகப் பிரும்மாண்டமான குரல் தேடல்" என்ற வசனத்துடன் ஆரம்பம் ஆகும் விஜய் டி.வியின் நிகழ்ச்சி. இப்போது கிட்டத்தட்ட 2009 இன் பாதிக்கு வந்துவிட்டோம். இருந்தாலும் இந்த 2008க்கான தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது! ஆரம்ப வாரங்களில் இளம் தலைமுறையின் குரல்வளத்தைத்தேட வைக்கப்பட்ட பல சுற்றுகள், சில பிரபல பாடகர்/பாடகிகளின் மேற்பார்வையில் பயிற்சிகள் என்று கொஞ்சம் நன்றாகவே இருந்த இந்த நிகழ்ச்சி கொஞ்சம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதில் பல தடைகளைத்தாண்டி இருபது இளம் கலைஞர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட போது போட்டி விறுவிறுப்பாக ஆனது. ஏனோ தெரியவில்லை, மிகவும் நன்றாக தொகுத்து வழங்கிக் கொண்டு இருந்த பின்னணிப் பாடகி சின்மயி திடீரென்று ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டார் (அல்லது ஒதுக்கப்பட்டார்!??). தமிழையும் ஆங்கிலத்தையும் "கொலை" செய்வதற்கு என்றே பிறந்துள்ள ஒரு தொகுப்பாளினி அவரின் (அவருக்கு) "மிகவும் அடக்கமான" கணவருடன் சேர்ந்து தொகுத்து வழங்கிக்கொண்டு உள்ளார் இப்போது. அந்தக் கணவர் தான் ஒரு "நாயர்" என்பதை மறக்காமல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் ஞாபகப்படுத்திக்கொள்கிறார். மெகா சீரியல் போல மிகவும் "கடியாக" இப்போது நகரும் இந்த நிகழ்ச்சிக்கு மூன்று "குடும்ப" judges! மூவரும் நல்ல பாடகர்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்களிடம் "நடுவு நிலைமை" குறைந்து காணப்படுகின்றது. (possibly, they are dictated by the super singer director, or vijay TV management to take such stand). நமக்கு அது சரியாக விளங்கவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பு இருபதில் இருந்து பத்தாகக் குறைந்து, பின் ஆறாக ஆக்கினர். பின், அந்த ஆறு பேரையும் "judge" ஆக ஆக்கி ஒருவரைத் தேர்ந்து எடுக்க வைத்து கொடுமை. தொடர்ந்து நடுவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களை உள்ளே கொண்டு வருவதற்கு "wild card" என்று அறிவித்து போட்டியாளர்களின் எண்ணிக்கையை 10 ஆக்கினர். இந்த நடுவர்கள் ஆடிய "அரசியல் ஆட்டம் காரணமாக" அந்த ஆறில் இருந்து ஒரு நல்ல "மானஸ்தன்" வெளியேறி அவர்களின் மூக்கை உடைத்தார். அதனால் அவர் தந்தையை மேடையில் ஏற்றி irritate செய்து சந்தோஷப்பட்டனர் இந்த "family judges". "இன்னா செய்தாரை" என்ற குறளுக்கு இலக்கணமாக அந்தத்தந்தை பெரிய மனதுடன் இந்த "பெயர்பெற்ற (கெட்ட)" family judges இன் செயல்களை புறம் தள்ளினார். அவருக்குப் பாராட்டுகள். தொடர்ந்த வாரங்களில், "சித்தப்பாவிற்கு ஒரு சுற்று", கொள்ளுத் தாத்தாவுக்கு "dedication", மூன்றாம் தலை முறைப் பேராண்டிக்கு ஒன்று, என்று தலை சுற்றும் அளவுக்கு பல சுற்றுகள்! இடை இடையே சில "neutral judges" வந்த போது, இந்த மும்மூர்த்திகளின் (family judges) "favourite" போட்டியாளர்கள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டனர்! அதையும் மீறி பாட வேண்டிய சூழ்நிலை வந்தால், அப்போதே அவர்களுக்கு சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தையும் வழங்கினர்! (to prevent them from getting eliminated!). அரை இறுதியில் அஜீஷ், ரேணு, ரவி, ரஞ்சனி,விஜய் போட்டியிட, அதிலிருந்து முதல் மூவரையும் இறுதிப் போட்டிக்கு அனுப்பினார். இவர்களில் ரவி has the best attitude in singing. In almost 95% of his songs he got the nuances right, and his performances were undoubtedly the best.... அஜீஷ் has got a unique husky voice, and he sings half-throat open, which suits well for some of the melodies. for other genres his voice is unacceptable...he is still very young, and he will go a loong way in his musical career, for sure! ரேணு's biggest plus is her "gifted" voice. problems: breathing in long phrases, she cannot sing (confidently and perfectly) songs with even a bit of classical (carnatic) touch! sad, but true! ரஞ்சனி-the contestant with never-say-die attitude! has got a good grasp of music, and has a bold voice with a great throw. has handled the complex songs-sangathis excellently, including singing difficult swara phrases. விஜய் - undoubtedly the most creative and versatile singer in this edition. has the guts to select songs which are unheard of and sang some brilliant pieces. he is the one who had set the tone for others to follow, in improvising the sangathis....unfortunately, he was made to stand on the elimination stage more often - again this was due to the poor and biased judges!! his biggest problem is his voice! nevertheless, he will make a good musical career. semi-finals-க்கு அப்பொரமும் இவங்களுக்கு இந்த நிகழ்ச்சிய சீக்ரம் முடிக்க மனசு வரலை...அதுனால இன்னும் ஒரு "wild-card" ரவுண்டு அறிவிச்சுட்டு மறுபடியும் மூணு contestant-களை உள்ளே கொண்டு வந்தாங்க, judges' choice என்ற பெயரில். அந்த மூன்று பேரில், ஒருவர் பிரசன்னா "மக்களின்" ஏகோபித்த சப்போர்ட் பெற்றவர், அவரின் lively performance மூலம். அவரின் பலம் பலவீனம் இரண்டுமே அவர் பாடும் விதம்தான். கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார். அதை குறைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது நபர் ராகினி ஸ்ரீ. இவருக்கு சங்கீத background இருக்கு. ஆனாலும் அவர் பாடிய பல பாடல்கள் முகம் சுளிக்க வைத்தன. உதாரணத்திற்கு ஒரு சுற்றில் அவருக்கு ஸ்லோகம் சொல்லிக் குடுக்கும் மாமி ஒருவர் வந்து, அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். (ஸ்லோகம், பாட்டு, நாட்டியம், வயலின், கி போர்டு etc., etc., எல்லாம் தெரியும் என்று). ஆனால் அந்த அம்மணி அந்த சுற்றில் பாடிய பாடல் "சிவ ராத்ரி"....அது மெலடி பாட்டாம்! வேறு பாடலே கிடைக்கவில்லை அவருக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக அதை இந்த இரண்டு ஆண் நடுவர்கள் ரசித்துப் பாராட்டியது மிகவும் கேவலம்... மூன்றாவது போட்டியாளர் மிகவும் சுமாராகப் பாடும், ஆனால் பாடுவதில் ஈடுபாடு அதிகம் கொண்ட, ஊக்குவிக்கப் பட வேண்டிய சந்தோஷ். இவருக்கு wild-card entry எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். wild-card சுற்று ஒரு வழியாக இந்த வாரம் முடிந்தது. அதில் பாடியவர்களில் ரஞ்சனி, விஜய் and பிரசன்னா கொஞ்சம் கேட்கும் படி பாடினார்கள். மற்ற இருவரும் ரொம்பவே சுமார் ரகம். ஒரு கட்டத்தில் ஸ்ரீநிவாஸ் "slap on the face of critics" என்று கத்தியது ரொம்பவே ஓவர். அவரின் நிலையை அவரே தாழ்த்திக்கொண்டார். பாவம், அவரால் சங்கீத ரசிகர்கள் இன்டர்நெட்டில் கொடுக்கும் சில உண்மையான விமர்சனங்களை digest பண்ண முடியவில்லை. கடைசியாக, பிரசன்னாவை பப்ளிக் வோட்டு மூலம் final-இக்கு அனுப்புவதாக அறிவித்தனர். அதற்கு முன்னதாக நம் "நாயர்" பிரசன்னாவை "actor" என்று "irritate" செய்து அதன் மூலம் பிரசன்னாவை உசுப்பேற்றி விட்டு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைத்தார். "நாயரின்" இந்த செய்கை கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும். விஜய் T.V. crew did a wonderful job with editing, and ensured that poor prasanna was shown in poor light. பொதுவாக இந்த மாதிரி reality ஷோக்களில் போட்டியாளர்கள் பெற்ற வோட்டுகளின் எண்ணிகையை அறிவிப்பார்கள். இந்த முறை சொல்லவில்லை. நடுவர்களின் ஏகோபித்த சாய்ஸ்-ஆக ரஞ்சனி இறுதிப் போட்டிக்கு அனுப்பப்பட்டார். நல்ல, நடு நிலைமையான தீர்ப்பு. பாராட்டுகள், ரஞ்சனிக்கும் - நடுவர்களுக்கும். இப்போது உள்ள ஐந்து பேரில் நாலு பேரும், மூன்று மாதம் முன்னால் "சூப்பர் சிக்ஸ்" நிலையில் இருந்தவர்கள். அதில் இருந்த "மானஸ்தன்" ரோகித் மட்டும் இப்போது இல்லை. so, இந்த இறுதி போட்டியை அப்போதே முடித்து இருக்கலாம்!! இந்த அரசியல்-விளையாட்டுக்கு ஈடான இந்த போட்டியை ஜவ்வு மிட்டாய் மாதிரி இந்த அளவுக்கு இழுத்து இருக்க வேண்டாம்! விட்டால் 2010 வரை கொண்டு சென்று இருப்பார்கள்! (with the slogan "ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008, "தமிழகத்தின் மிகப் பிரும்மாண்டமான குரல் தேடல்")... வேறு எந்த additional wild-card சுற்றுகளும் இனி இல்லாமல் இந்தக் குரல் தேடலை விரைவில் முடித்து வைப்பார்கள் என்று நம்புவோமாக. அப்படியே இறுதிப் போட்டிகாவது இந்த குடும்ப நீதிபதிகளையும், மிகவும் மட்டமாக anchor செய்யும் "நாயர்" குடும்பத்தையும் மாற்ற வேண்டும் என்பது என்போன்ற டைம் வேஸ்ட் பண்ணி இந்த ப்ரோக்ராம் பார்த்த பல "நொந்த" உள்ளங்களின் கருத்து.
எப்படியோ யாருக்கு எவ்வளவு ஓட்டு வரும் என்று பார்க்கலாம் :-)

21 Comments:

R.Giridharan said...

Must Read: Shaji’s article on these kinds of Super singer shows!

சென்னை பித்தன் said...

மாமி,sorry,அக்கா சொன்னா கேட்டுத்தான் ஆகணும்.

லவ்டேல் மேடி said...

எது எதுலயோ அரசியல் பன்னுராங்க .( இட்லி வடை உட்பட....) , இதுல நடந்தா என்ன...!!! நடக்குலைனா என்ன....!!!!

சுரேஷ் கண்ணன் said...

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கவியலாததால் இதிலுள்ள அரசியலைப் பற்றிச் சொல்ல இயலவில்லை. ஆனால் கவனித்தவரை சில போட்டியாளர்கள் இப்போது பாடும் சினிமாப்பாடகர்களை விட நன்றாகவே பாடுகின்றனர். ஆனால் இவர்களுக்கு சினிமாவில் அதிலுள்ள அரசியலைத் தாண்டி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. போன போட்டியில் வென்ற நிகில் மேத்யூ எத்தனை பாடல்களை பாட முடிந்தது என்பதும் ஆராயப்பட வேண்டியது. மிர்ச்சி சுசித்ரா போன்ற எரிச்சலூட்டும் குரல்களுக்கே அதிக வாயப்பு போகின்றது.

இந்த நிகழ்ச்சியின் தொகு்பபாளர்களை மாற்ற வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்தே கிடையாது. மாலினியின் எரிச்சலூட்டும் அலட்டல்கள் ஒருபுறமென்றால் யுகேந்திரன் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் தன்னை 'நாயராக' அடையாளப்படுத்திக் கொள்வது மிகுந்த எரி்ச்சலை ஏற்படுத்துகிறது.

Anonymous said...

//இந்த ஓட்டு பதிவை நடத்த சொன்னது ஒர் அம்மணி.
(அம்மணி சொன்னால் பதிவை எடுப்பேன் அல்லது போடுவேன் என்பது உங்களுக்கே தெரியும் )//

yaarunga antha ammani?

vijay said...

me tha first!!!

//இரண்டாவது நபர் ராகினி ஸ்ரீ. இவருக்கு சங்கீத background இருக்கு. ஆனாலும் அவர் பாடிய பல பாடல்கள் முகம் சுளிக்க வைத்தன. //
இதே பாடல்களை நீங்கள் திரையில் ரசித்து பார்த்தீர்கள் இல்லையா? அதை மேடையில் பாடினால் தப்பா?? ஒரு பெண் என்பதால் தானே முகம் சுளிக்கிறீர்கள் ?? பெண்கள் பொது மேடையில் சில விஷயங்களை பாடக்கூடாது என்பதுபோன்ற பெண்ணடிமை மனோபாவம் தான் இது!! இட்லிவடை you too ??

//உதாரணத்திற்கு ஒரு சுற்றில் அவருக்கு ஸ்லோகம் சொல்லிக் குடுக்கும் மாமி ஒருவர் வந்து, அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். (ஸ்லோகம், பாட்டு, நாட்டியம், வயலின், கி போர்டு etc., etc., எல்லாம் தெரியும் என்று). ஆனால் அந்த அம்மணி அந்த சுற்றில் பாடிய பாடல் "சிவ ராத்ரி"....அது மெலடி பாட்டாம்! //
ஒய் !! மாமி புகழ்ந்ததுக்கும் சிவராத்திரி பாடினதுக்கும் என்னய்யா சம்மந்தம் ??? ராகினி எப்பவுமே பொதுவான பாட்டுதான் பாடுவா 'இந்த மாதிரி' பாட்டெல்லாம் பாடமாட்டா ன்னு அவா சொன்னாளா ??

//ஒரு கட்டத்தில் ஸ்ரீநிவாஸ் "slap on the face of critics" என்று கத்தியது ரொம்பவே ஓவர்//
இது ரொம்பவே சரி. அவர் அப்படி சொன்னபோது உங்க கன்னமும் வலித்திருக்குமே !!! ஏனென்றால் நெட்டில் தேவை இல்லாமல் ரொம்பவே விமர்சிக்கப்பட்டவர் தான் ராகினி. சூப்பர் சிங்கர் டைட்டில் வெல்லாவிட்டாலும் அவர் ஒரு சூப்பர் சிங்கர் தான் என்று பலதடவை நிருஉபித்தார். western classical இவர் அளவுக்கு வேறு யாரும் பாடவில்லை. நீங்க சொன்ன அந்த மேட்டர் பாட்டு அவர் வாய்ஸ் க்கு நல்லா சூட் ஆகுது அதை நல்லா பாடினாங்க. அதுக்காக அவங்களுக்கு அந்தமாதிரி பாட்டு தான் வரும்னு சொல்லலை. ஆனால், அதே பாடல்களை ரஞ்சனி ரேனு மற்றவர்கள் பாடிஇருந்தா காமெடியா இருந்திருக்கும்.

பசங்கள்ள எப்படி விஜய் ரொம்ப ச்றேஅடிவே அது மாதிரி பெண்கள்ல ராகினி

vijay said...

நீங்க பாராட்டுற சின்மயி கூட "ராகினி மேல தேவை இல்லாம ரொம்ப ஓவரான கமெண்ட்ஸ் நெட்ல ரொம்ப பேர் போடறாங்க , அந்த சின்ன பொண்ணு மேல என் அவ்வளோ கொலை வெறி" ன்னு ஒரு பதிவு போற்றிந்தாங்க

அப்புறம், சின்மயி போனதும் நீங்க சொன்னமாத்ரி கொஞ்சம் களை போயிருச்சி, அந்த இம்சைமாலினி வந்ததும் மிச்ச களையும் போச்சு. airtel ன்னு சொல்லும்போது அந்த அம்மணி நாக்கை ஒரு சொழாட்டு சொழஅட்டுவைங்க பாருங்க, கொடுமை !!!

செந்தழல் ரவி said...

கலக்கலான அலசல்...!!!!..

டிசம்பர் சீசனுக்குள்ள முடிச்சுருவானுங்க...

சித்து said...

"ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008,தமிழகத்தின் மிகப் பிரும்மாண்டமான குரல் தேடல், இதில் யாருடைய குரல் சிறந்தது" என்று அந்த Poll தலைப்பு இருந்தால் பொருத்தமாக இருக்கும். எதோ இவர்களை விட்டால் தமிழகத்தில் வேறொருவருடைய குரலும் பிரமாண்டமாக இல்லை போலும்.

Anonymous said...

இட்லிஅண்ணா, வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Anonymous said...

இது என்ன மாதிரி விமர்சனம் என்று புரியவில்லை. பாட விரும்பும் பாடகர்களுக்கு மேடை போட்டுக் கொடுத்து பல பெரிய பாடகர்களுடன் கூடப் பாடும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இந்தப் போட்டியை 3 மாதங்களில் முடித்திருந்தால் அந்த பங்கேற்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெளியே தெரிந்திருப்பார். இன்று கிட்டத்தட்ட 5-6 பாடகர்களு உருவாகி இருக்கிறார்கள்.

//ஒரு கட்டத்தில் ஸ்ரீநிவாஸ் "slap on the face of critics" என்று கத்தியது ரொம்பவே ஓவர்//

அட.. ஹரிஹரன் சொன்னதை கவனிக்கவில்லையா?

சங்கீத ஞானம், பின்னணி பாடகருக்கு வேண்டிய திறமைகள், இசையமைப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் போன்ற பலவற்றையும் பார்த்துதானைய்யா பாடகர்களை ஊக்குவிக்கிறார்கள். உங்கள் ‘அரசியலை’ எல்லாம் ஏன் அடுத்தவர் மேல் ஏற்றுகிறீர்கள்?

அந்த போட்டி எரிச்சலையடையச் செய்கிறதோ இல்லையோ... இந்த அரைவேக்காட்டுத்தனமான விமர்சனம் மிகவும் எரிச்சல்தான்.

கிரி said...

2011 ம் ஆண்டு:

2008 ம் ஆண்டிற்கான குரல் தேடல்

2012 ம் ஆண்டு

2008 ம் ஆண்டிற்கான குரல் தேடல்

---------------
--------------------
--------------------------

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .
பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

KRICONS said...

உங்கள மாதிரி இடம் விடாம எழுதுரவங்களுக்காக ஒரு பதிவையே போட்டிருக்கேன். வந்து படிச்சுட்டு திருத்திக்கோங்க.

http://kricons.blogspot.com/2009/05/1.html

Erode Nagaraj... said...

giridharan,

where is shaji's article? in uyirmmai? link please...

Anonymous said...

Just check out these little girls performances and compare.

http://www.youtube.com/watch?v=QHqqTVA6iZs

http://www.youtube.com/watch?v=45sAi5LdXIA&feature=related

http://www.youtube.com/watch?v=-XoKZKobBQQ&feature=related

Just a sample of the talent coming from God's own country.

-Mahesh

Anonymous said...

//where is shaji's article? in uyirmmai? link please...
//

http://shajiwriter.blogspot.com/2008/09/reality-music-shows-and-reality-of.html

Anonymous said...

அடிக்கற வெயிலில்
இதுபோன்ற
மகா அறுவையான பதிவையெல்லாம் போட்டு
ஏன் அய்யா கொல்றிங்க?

ஜில்லுனு எதாச்சும் போடுங்க இட்லி அண்ணா

ரா.கிரிதரன் said...

ஈரோடு நாகராஜ்,

ஷாஜியின் 'சொல்லில் அடங்காத இசை' - இந்த புத்தகத்தில் வந்த கட்டுரை அது.

அவர் வலைமனையிலும் உள்ளது.

நன்றி!

Anonymous said...

Checkout this heart touching "PrabhuDeva" dance competition performance :
http://video.yahoo.com/watch/5020271/13354421

தங்கவேல் ப. ந. said...

idlyvadai polling results:

தமிழகத்தின் பிரமாண்டமான குரல் யாருடையது ?

அஜீஷ்
63 (7%)

ரஞ்சனி
85 (10%)

பிரசன்னா
172 (20%)

ரேணு
312 (37%)

ரவி
200 (24%)Votes so far: 832
Poll closed

-------------------------
This results has been disappered from idlyvadai. don't know why ?

but thanks to google cache to see it for few days. Check here
http://209.85.129.132/search?q=cache:yifguA5gM68J:idlyvadai.blogspot.com/