பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 05, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 05-05-2009

இந்த வாரம் இட்லிவடைக்கு முனி எழுதும் கடிதம்..

ஸ்ரீமான் இட்லிவடைக்கு,
(இப்படி தான் உன்னை சிலர் கூப்பிடுகிறார்கள். அதனால் நானும் உன்னை கூப்பிட்டு பார்த்தேன் )

எப்படி இருக்க ? தேர்தல் வந்தாலும் வந்தது கடிதம் போடுவதை ஏன் நிறுத்துவிட்டாய் ? இல்லை உனக்கும் பன்றிக்காய்ச்சல் வந்துவிட்டதா ?

எங்கே பார்த்தாலும் பன்றிக்காய்ச்சல் நீயூஸ் தான். இதை தான் ரஜினி அன்றே சொன்னார் "கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும்" என்று.

கூடவே உலக நாயகன் பற்றி ஏதாவது சொல்ல வேண்டாமா ? போன வெள்ளிக்கிழமை உன்னைப் போல் ஒருவன் செய்தியாளர்கள் சந்திப்பில் "ரெட்' கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்துகிறோம் என்று கமல் சொன்னார். ஆனால் இந்த கேமரா தொழில்நுட்பத்தை தமிழுக்கு அறிமுகம் செய்திருப்பது நம்ம அருண் வைத்தியநாதன். படம் அச்சமுண்டு அச்சமுண்டு. படம் எப்ப ரிலீஸ் என்று தான் தெரியலை. உனக்கு தெரிஞ்சா கேட்டு சொல்லு

அழகிரி போட்டியிடும் மதுரை மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு அந்த இடத்தில் ஒரு டோக்கன் தராங்களாம். அந்த டோக்கனை திமுக தேர்தல் அலுவலகத்தில் காட்டினால் அங்கு பணம் வழங்கப்படுகிறது என்று செய்தியை படித்தையா ? இது இப்படி இருக்க குரங்கு பிடித்தால் ஓட்டு என்று கேள்விப் பட்டதுண்டா?

இமாசலப்பிரதேச வேட்பாளர்கள் இப்ப நொந்து நூலாக போயிருக்கிறார்கள். மக்கள் குரங்கு பிடித்தால் தான் ஓட்டு என்று சொல்லிவிட்டார்கள். இமாசலப்பிரதேசத்தில் சுமார் நான்கு லட்சம் குரங்குகள் உள்ளன. விவசாய பயிர்களை இந்த குரங்குகள் சூரையாடுகின்றன. அதனால் தற்போது அங்கே உள்ள மக்கள் குரங்கை பிடித்து அப்புறப்படுத்தும் வேட்பாளர்களுக்கே ஓட்டு என்று சொல்லிவிட்டார்கள்.

நம்ம தலைவர்கள் இங்கே ஈழப்பிரச்சனையை கையில் எடுத்து காக்கா பிடிக்க அங்கே குரங்கை பிடிக்கிறார்கள்.

எது எப்படியோ அதிமுகவிற்கு அடித்த 'அதிர்ஷ்டத்தை பாரேன்' வலைப்பதிவு முழுசா அம்மாவுக்கு ரோசா மாலையாக விழுகிறது ( 'அதிர்ஷ்டத்தை பாரேன்' என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்தால் நான் அதற்கு பொறுப்பில்லை )

சரி குரங்குக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ? குரங்குக்கு வால் வெளியே இருக்கும் மனிதனுக்கு அது உள்ளே இருக்கும்.

லாலுவிடம் “எப்பவும் ரெம்ப சந்தோஷமா இருக்கீங்களே அது எப்படி..” என்று கேட்டதற்கு
“என் மனைவி ராப்ரிதேவிக்கு செல்போனை எப்படி பயன்படுத்துறதுன்னு தெரியாது. ‘ஆன் ‘ செஞ்சு பேசத் தெரியாது. ராப்ரிக்கு தனி செல்போனும் இல்லை. அதனால அவள்கிட்ட இருந்து எனக்கு போன் வர்றதே இல்லை. நான் நிம்மதியா இருக்கேன்” என்கிறார். இது இப்படி இருக்க ஏர்டெல் விளம்பரத்தில் மாதவன் எதிரில் இருக்கும் மனைவிக்கு (வித்யா பாலன் ) போனில் பேசுகிறார். SMS செய்கிறார். எது ஆனந்தம் என்று போன் வைத்திருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். விஜயகாந்த் மாதிரி புள்ளி விபரம் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி பேர் செல்போன் இணைப்பு வாங்குகிறார்கள். இதில் எவ்வளவு பெண்கள் என்று தெரியவில்லை.

தங்கம் விலை, சென்செக்ஸ் மாதிரி பஸ் கட்டணமும் ஆகிவிட்டது பார்த்தையா ? நேற்று குறைந்த பஸ் கட்டணம், இன்று தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. தோல்வி பயம் வந்துட்டுது என்ன செய்ய. ஆனால் இந்த தேர்தல் விதிமுறைக்கு யார் காரணம் என்று நீ நினைக்கிற ? பஸ் கட்டண குறை�புக்கு காரணமான அதிகாரிகள் மீது, இன்று காலை 10 மணிக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆக அமைச்சர் நேருவும், கலைஞரும் இதற்கு காரணம் இல்லை. நல்ல கூத்து.

சன் டிவியில் விஜயகாந்த் விளம்பரத்தை பார்த்தியா ? ஒரு வேளை மரியாதை படத்தை சன் வாங்கிவிட்டார்களோ என்னவோ. விஜயகாந்த் என்றவுடன் புள்ளிவிவரம் ஞாபகத்துக்கு வருது என்ன செய்ய! சினாவில் ஆண் பெண் விகிதம் 126-100 என்ற அளவில் இருக்கிறதாம் அதனால் அங்கே பொண்களுக்கு தட்டுப்பாடு.

”உங்க மாமியாரை காணோம்னு இங்கே சொல்றீங்களே .. இது தீயணைப்பு நிலையம்மா”
“ஐயோ சந்தோஷத்துல என்ன பண்ணறேதுன்னே தெரியலையே”

ஏன் இப்ப எல்லாம் ஜோக்ஸ் ஜோதிகாவை காணவில்லை என்று கேட்ட வாசகருக்கு இந்த ஜோக்.

பெண்கள் பற்றி இன்னொரு நியூஸ் - மல்லிகா ஷெராவத் மில்க் ஷேக் என்றொரு புது வகை மிக் ஷேக்கை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நம்ம ஊர் நடிகைகளின் பெயரில் ஆரம்பிக்கலாம். ஆனால் கடைக்காரர் திவால் ஆகிவிடுவார்.



தமிழ்நாட்டில் கொசுத் தொல்லை மாதிரி ரவுடிகளின் தொல்லையும் அதிகமாகிவிட்டது. சில நாட்கள் முன்பு ராணுவத் தளவாடங்களுடன் சென்ற லாரிக்ள் கோவையில் சனிக்கிழமை வழிமறித்து அதில் இருந்த பொருள்களை பெரியார் திராவிட கழகமும், மதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஐந்து லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளார்கள். ராணுவ வீரர்களின் உடமைகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள், இதில் ராகெட் குண்டுகள் வெடித்தது போன்ற சத்தம் வந்திருக்கிறது. இதனால் கோபம் வந்த ராணுவ வீரர்கள் பொது மக்கள் கார்களை போட்டு அடித்துள்ளார்கள். பொது மக்கள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல் கருணாநிதி மீது நடந்த தாக்குதல் என்றே நினைக்க வேண்டும். ஏன் என்றால் நடப்பது மக்கள ஆட்சி. என்ன நான் சொல்லுவது புரிகிறதா ?



சரி அரசியலை விட்டு ஐபிஎலுக்கு போகலாம். இந்த முறை ஐ.பி.எல் போன முறை மாதிரி விறுவிறுப்பாக இல்லை. ஆனால் http://fakeiplplayer.blogspot.com/ என்ற தளத்தில் ஐ.பி.எல். குழுவில் இருக்கும் ஒருவர் அங்கே நடக்கும் அந்தரங்க விஷயங்களை பற்றி எழுதுவதாக கூறுகிறார். இவருக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். இப்ப ஐ.பி.எல் டீமில் யாரும் லேப்டாப் உபயோகப்படுத்த கூடாது என்று சொல்லிவிட்டார்கள். நல்ல காமெடி!

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்று
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கரிடம் விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்ற நியூஸ் இன்று வந்துள்ளது. இதற்கு பேர் தான் 'வாழும் கலை' போல.

தேர்தல் காலத்தில் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் என்ன என்னவோ பேசுகிறார்கள். இவர்கள் பேசும் பேச்சு அட அட. இலவசமாக டிவி, சாராயம் என்று கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு “Memory Plus" மாத்திரை கொடுத்தால் இவர்கள் என்ன சொன்னார்கள் என்று ஞாபகம் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

விஜயகாந்துக்கு எப்படி இவ்வளவு ஆதரவு என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த மர்மம் நேற்று தான் எனக்கு புலப்பட்டது.

தி.நகர் ராம்ராஜ் வேஷ்டி, பனியன் கடைக்கு சென்றிருந்தேன் அப்ப கடைக்குள் வந்த ஒருவர். கையை நீட்டி ”இந்த கரை வேட்டி இரண்டு செட் தாங்க” என்றார்.
கடைக்காரர் எடுத்து கொடுத்துவிட்டு ”விஜயகாந்த் கட்சி துண்டு, கர்சிப் கூட எங்களிடம் இருக்கு” என்றார்.
“இது ராமதாஸ் கட்சி வேட்டி இல்லையா ? நான் ராமதாஸ் கட்சி, அந்த வேட்டி எனக்கு காமிங்க”
கடைக்காரர் எடுத்து காமிக்க, இந்த நீல நிறம் வருவது எனக்கு பிடிக்கலை எனக்கு விஜயகாந்த் வேட்டியையே கொடுங்க என்று இரண்டு செட் வாங்கிக்கொண்டு போனார். இப்ப தெரியுதா விஜயகாந்துக்கு ஏன் இவ்வளவு ஆதரவு என்று ?

தென் சென்னையில் தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடுற 'டிராஃபிக்' ராமசாமியை ஆதரிச்சு சாதாரணத் தொண்டர் ஒருத்தர் பேசிய பேச்சு சூப்பர் ( நன்றி ஜூவி )

காலையில் எழுந்ததும் 'அடியுங்கள் தந்தி'ன்னு சொல்றவங்களைக் கேள்விப்பட்டிருக்கீங்களா? 'ஏன்யா தந்தியடிக்கணும்'னு கேட்டா, அப்போதான் பிரதமர் மன்மோகன்சிங் ஈழப் பிரச்னையைத் தீர்க்க மனசு வைப் பாராம். அவனவன் காலங்காத்தால பைப்ல தண்ணி அடிக்க முடியாமத் திண்டாடிக்கிட்டு இருக்கிறப்ப, தந்தி அடிக்கச் சொல்ற கலைஞரை என்னன்னு சொல்றது? இவரையாச்சும் ஒரு கணக்கில சேர்க்கலாம்... அய்யா அத்வானி சொன்னதைக் கேட்டீங்களா? சுவிஸ் வங்கியில் போட்டிருக்கிற எழுபது லட்சம் கோடி ரூபாய் பணத்தை வெளியே கொண்டு வரப் போறதா பீத்திக்கிட்டு இருக்காரே அவர்... கிராமக் கூட்டுறவு வங்கி யில இருக்கிற கணக்கையே நம்ம ஆளு லேசுல தர மாட்டேங்கறான்... சுவிஸ் வங்கியில அவ்வளவு சுளுவா கொடுத்துடுவானா? ஏதோ ஏ.டி.எம். மெஷின்ல கார்டை செருகி பேலன்ஸ்ல இருக்குற பணத்தை எடுக்குற மாதிரி ஈஸியா சொல்றாரே அத்வானிஜி? 'ரகசியம் காக்கப்படும்'னு சொல்லித்தானே சுவிஸ் வங்கியே இயங்கிட்டு இருக்கு? அப்புறம் அதுவே எப்படி காட்டிக் கொடுக்கும்? இந்த மாதிரி கப்ஸா விடுற அரசியல்வாதிகளை எல்லாம் புறக்கணிச்சிட்டு நம்ம அண்ணன் ராமசாமிக்கு ஓட்டுப் போடுங்க. அவரால பெரிசா ஏதும் செய்ய முடியாட் டியும் அட்லீஸ்ட் நம்ம ரெங்கநாதன் தெருவில இருக்கிற ஆக்கிரமிப்புகளையாச் சும் சரி பண்ணுவார்...''


ஆனா, இந்தப் பேச்சைக் கேக்க மொத் தமா நின்ன கூட்டத்துல எத்தனை பேர் இருந்தாங்க தெரியுமா வெறும் பத்துப் பேர்! ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜம்தானே...

நேற்று வந்த செய்தியில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவியுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எது எப்படியோ கருப்பு பணம் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வந்த அத்வானிக்கு ஜெ.

ஜெ என்று சொன்னவுடன் தான் ஞாபகத்துக்கு வருது அ.தி.மு.க., சார்பிலும் மொபைல்போன் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தொலைபேசி ஒன்றில் இருந்து வரும் அழைப்பை 'ஆன்' செய்தால், ஜெயலலிதாவின் குரலில் இரண்டு நிமிடம் வரை பிரச்சாரம் செய்யப்படுகிறது. 'நான் ஜெயலலிதா பேசுகிறேன்,' என்று துவங்குகிறது அந்த பேச்சு.
எனக்கு 'நான் மாது வந்திருக்கிறேன்' என்று காதில் விழுகிறது. உனக்கு ?

கடைசியாக இரண்டு படங்கள் ஒன்று நாத்திகர்களுக்கு மற்றொன்று ஆத்திகர்களுக்கு




தயவு செய்து ஆறு வித்தியாசங்கள் ( அல்லது ஒற்றுமை ) கண்டுபிடிக்காதீர்கள்!

இப்படிக்கு,
முனி

கோடு போட்டால் (ஈ)ரோடு போடுகிறார் நாகராஜன்


32 Comments:

மானஸ்தன் said...

நாத்திகர் - ஆஸ்திகர் போட்டோ! எப்பிடியா இப்டி "think" பண்றீங்க!!!

டூ மச்!
:-D :-)

யோசிப்பவர் said...

கடைசி படம் சூப்பர் மச்சி!!
வித்தியாசம் 1)ரங்கநாதருக்கு படுக்கை பக்கத்துல ஏசி இல்லை.
பி.கு. :- ஆறு வித்தியாசம்தானே கண்டுபிடிக்கக் கூடாது!!

mazhai said...

எங்க மஞ்சள் துண்ட காணோம் ?
இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருந்தா பரவால்ல..

மகாபாரதத்தில கண்ணன் படுத்திருக்கும்போது தலமாட்டுல துரியோதனனும் கால்மாட்டுல தருமனும் உக்காந்து இருந்தப்போ - அந்த சீன் ஞாபகத்துக்கு வருது
ஆனாலும் தலைமாட்டுல தான் இப்போ spectrum பவர் ஜாஸ்தியா இருக்கு

சுரேஷ் கண்ணன் said...

//கடைசியாக இரண்டு படங்கள் //

:-) ரசித்தேன்.

Mani-bahrain said...

அந்த கேடுகெட்ட மு. க இணையாக ரெங்கநாதர் ஆஅஹ்ஹ்....

அநியாயம்...அக்கிரமம்...

Guruprasad said...

kallai mattum kandal kadavul kidayathu,
kadavul mattum paarthal, fever varathu....
enno voy, muni! ithellam mazhaikku pin varum thoovanam pola...
rendu padathiayum paatha,
"kanngal panithathu, idhayam inithathu, vayaru pasithathu"

Narayana, narayana...

Erode Nagaraj... said...

Aasthigar * naasthigar
---------- * ------------
1.photo should * 1.already down
have been on *
top. *
*
2. title spelt * 2.should be
correctly * Nasty-Gar
*
3. shri & Bhoo * 3. Moo
*
4. பாம்பில் *4.படுக்கையில்
படுக்கை & * பம்பு & விஷம்
அம்ருதம் *

ஜகத் கஸ்பர் said...

என்ன IV, முனியின் கடிதத்தில் காரம், மணம், குணம் ரொம்ப கம்மியாக இருக்கிறது. அதிர்ஷ்ட்டத்தை பாரேன் கோஷ்டி மிரட்டல் விட்டுள்ளதே அதனாலா. அதெல்லாம் குரைக்கிற ரகங்கள். அவ்வளவுதான்.

SAN said...

The last photo is Idly Vadai Punch!!!!!!!!

மானஸ்தன் said...

///2. title spelt * 2.should be
correctly * Nasty-Gar*

3. shri & Bhoo * 3. Moo///

திரு நாகராஜ் அண்ணாச்சி!
நச்சுனு சொல்றீங்க!!
வயித்துல தமிழ் "pun" இருந்தா வலிக்கும். நீங்க இப்டி ரொம்ப இங்கிலீஷ் "pun" பண்ணாலும் வயிறு வலிக்கும்!

முடியல! எல்லாத்தையும் நிறுத்திகங்க! :-D :-)

Nithi said...

கடைசி படம் சூப்பர்ங்க

rkrajmohan said...

ரெண்டு பொண்டாட்டிகாரனுவ விடுங்க

soundri said...

lalithakrishnan
யாரை ,,,,,,,,,யாரோடு ,,,,,, பெருமாளே . ,,,,,,

வால்பையன் said...

//குரங்குக்கு வால் வெளியே இருக்கும் மனிதனுக்கு அது உள்ளே இருக்கும்.//

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு!

Anonymous said...

சார் நீங்க எங்கேயோ போய்டீங்க .. அதிர்ஷ்டத்தை பார்பவர்களுக்கு நேரம் சரியில்லை. மே 16 ஆம் தேதி யாருக்கு அதிர்ஷ்டம்னு தெரியும். மற்றபடி பாவம் பாடிகாட் முனி பிரசாரத்துல பிசியா இருக்காரு. அது தான் தந்தி ச்சே. தபால் போடல (கலைஞர் நியூஸ் படிச்சா ஒரே தந்தி தான் ஞாபகம் வருது ) கடைசி போட்டோ கலக்கல். ஆனா தமிழ்குடி தாங்கி,பகுத்தறிவு சூரியன், தமிழனத்தின் ஒரே குத்தகை தலைவர், கலைஞரோட ஸ்ரீ ரங்கநாதரை கம்பேர் பண்ணாதீங்க தலைவா இது கலைஞர ரொம்ப புகழ்ற மாதிரி இருக்க.

கால்கரி சிவா said...

கடைசி படம் எந்த கோயில். மிக ரம்மியமாக உள்ளது...

அதற்கு முந்தைய படம் ஒரு நாடகம் என பட்டவர்த்தனமாக தெரிகிறது.

Baski said...

ரொம்ப வருசத்துக்கு முன்னாடி "The World This Week" என்ற நிகழ்ச்சி அந்த வாரத்தின் அனைத்து நிகழ்வின் கோர்வையாக "பிரணாய் ராய்" தொகுத்து வழங்குவார்.
உங்கள் முனி கடிதம் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்து "The World This Month" வழங்கப்படுகிறது.

இந்த கடிதம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் வருவதால் நான் இன்னும் கொஞ்சம் "அரசியல் நையாண்டி" எதிர்பார்த்தேன்.

பள்ளிகொண்ட பெருமாள் போட்டோ கொஞ்சம் மனநிறைவை தந்தது.

கொஞ்சம் ஜெ.ஜெ நாடகத்தையும் அம்பலம் செய்துருக்கலாம்.
உங்க "அம்மா பாசம்" கொஞ்சம் ஜாஸ்தி தான்.

-- பாஸ்கி

Erode Nagaraj... said...

ஆறு அல்ல... எட்டு!
பின்னூட்டத்திலேயே, கட்டம் போட்டு காட்ட முடியாமல், இமேஜாகப் போட்டுவிட்டேன், என்னுடைய வலைப் பக்கத்தில்... பார்க்கவும்..

Shankar said...

இந்துக்களைத் திருடன்,காட்டுமிராண்டி, ராமன் ஒரு குடிகாரன் போன்ற இழிவார்த்தைகளைச் சொல்லிய பகுத்தறிவுப் பகலவனின் நாடகப்படத்தையும், எம்பெருமான் மஹாவிஷ்ணுவின் அனந்தசயனப் படத்தையும் ஒன்றாக போட்ட இட்லிவடையாரை வன்மையாக கண்டிக்கிறேன். தயவுசெய்து இதுபோன்ற ஒப்பீடல்களைத் தவிர்க்கவும். வேதனையுடன் ஷங்கர்.

லவ்டேல் மேடி said...

/////// இந்த வாரம் இட்லிவடைக்கு முனி எழுதும் கடிதம்.. ////////


அடங்கொன்னியா ....!!! முனி எப்பைங்க வெஜுடேரியனா மாறினாரு .....!!!
நம்பவே முடியல ....!!!!



/////////// எப்படி இருக்க ? தேர்தல் வந்தாலும் வந்தது கடிதம் போடுவதை ஏன் நிறுத்துவிட்டாய் ? /////////////



இல்லீங்கோ சாமி.... !! அவிங்களோட ஓட்டுக்கு காசு எவ்வளவு வாங்கலாமின்னு கண்ணக்கு போட்டுக்கிட்டு இருக்குராங்கோவ்....!!!





////////// இல்லை உனக்கும் பன்றிக்காய்ச்சல் வந்துவிட்டதா ? //////////



அட தேனுங் சாமி....!! இவிங்க காச்ச்சலு அதுக்கு வராம இருந்தா சேரிங்கோவ் .....!!!!!





////////// எங்கே பார்த்தாலும் பன்றிக்காய்ச்சல் நீயூஸ் தான். இதை தான் ரஜினி அன்றே சொன்னார் "கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும்" என்று. ///////////



அடங்கப்பா..... ...!!! தேனுங் சாமி.......??? இதுல அரசியல் ஏதும் இல்லீங்களே.......?????



///////////// கூடவே உலக நாயகன் பற்றி ஏதாவது சொல்ல வேண்டாமா ? போன வெள்ளிக்கிழமை உன்னைப் போல் ஒருவன் செய்தியாளர்கள் சந்திப்பில் "ரெட்' கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்துகிறோம் என்று கமல் சொன்னார். ஆனால் இந்த கேமரா தொழில்நுட்பத்தை தமிழுக்கு அறிமுகம் செய்திருப்பது நம்ம அருண் வைத்தியநாதன். படம் அச்சமுண்டு அச்சமுண்டு. படம் எப்ப ரிலீஸ் என்று தான் தெரியலை. உனக்கு தெரிஞ்சா கேட்டு சொல்லு ////////////



சபாஷ்...... சரியான போட்டி.......!!!!!



/////////////// அழகிரி போட்டியிடும் மதுரை மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு அந்த இடத்தில் ஒரு டோக்கன் தராங்களாம். அந்த டோக்கனை திமுக தேர்தல் அலுவலகத்தில் காட்டினால் அங்கு பணம் வழங்கப்படுகிறது என்று செய்தியை படித்தையா ? இது இப்படி இருக்க குரங்கு பிடித்தால் ஓட்டு என்று கேள்விப் பட்டதுண்டா? /////////////////////





அட..... சாமி.....!! ஏனுங் சாமி......!!!! இது எல்லா ஊருலயும் உண்டுங்களா....??????





///////////////// இமாசலப்பிரதேச வேட்பாளர்கள் இப்ப நொந்து நூலாக போயிருக்கிறார்கள். மக்கள் குரங்கு பிடித்தால் தான் ஓட்டு என்று சொல்லிவிட்டார்கள். இமாசலப்பிரதேசத்தில் சுமார் நான்கு லட்சம் குரங்குகள் உள்ளன. விவசாய பயிர்களை இந்த குரங்குகள் சூரையாடுகின்றன. அதனால் தற்போது அங்கே உள்ள மக்கள் குரங்கை பிடித்து அப்புறப்படுத்தும் வேட்பாளர்களுக்கே ஓட்டு என்று சொல்லிவிட்டார்கள். ////////////////////



அப்போ அங்க .... எந்த அரசியல்வியாதிங்க போனாலும் புடுச்சு வெச்சுக்குவாங்கின்னு சொல்லுங்க......!!!!!

அட்ரா சக்க......!!!! அட்ரா சக்க.......!!!!!



//////////////// நம்ம தலைவர்கள் இங்கே ஈழப்பிரச்சனையை கையில் எடுத்து காக்கா பிடிக்க அங்கே குரங்கை பிடிக்கிறார்கள். //////////////////


எப்புடியோ ... அவிகளுக்கு ஆட்சிய புடுச்சா சேரி.....!!!!!!!!



////////// எது எப்படியோ அதிமுகவிற்கு அடித்த 'அதிர்ஷ்டத்தை பாரேன்' வலைப்பதிவு முழுசா அம்மாவுக்கு ரோசா மாலையாக விழுகிறது ( 'அதிர்ஷ்டத்தை பாரேன்' என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்தால் நான் அதற்கு பொறுப்பில்லை ) ////////


இந்த டகால்டி வேலதான வேண்டாமுன்கிறது ........ !!! கொளந்தையும் கில்லி உட்டுபோட்டு ....... , தொட்டளையுமும் ஆட்டி உடுறியா நீ......?????



//////// சரி குரங்குக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ? குரங்குக்கு வால் வெளியே இருக்கும் மனிதனுக்கு அது உள்ளே இருக்கும். /////////


ஆனா... இப்போ அத மனுசனுங்க வெளியிலதான் உட்டுபோட்டு திரியுரானுங்கோவ்......!!!!!



////// லாலுவிடம் “எப்பவும் ரெம்ப சந்தோஷமா இருக்கீங்களே அது எப்படி..” என்று கேட்டதற்கு “என் மனைவி ராப்ரிதேவிக்கு செல்போனை எப்படி பயன்படுத்துறதுன்னு தெரியாது. ‘ஆன் ‘ செஞ்சு பேசத் தெரியாது. ராப்ரிக்கு தனி செல்போனும் இல்லை. அதனால அவள்கிட்ட இருந்து எனக்கு போன் வர்றதே இல்லை. நான் நிம்மதியா இருக்கேன்” என்கிறார். ////////



ஆம்மாங்கோ லல்லு சார்.....!!!! எல்லா பொண்டாட்டிக்கு பயுந்த பசங்க...!!!!

தேனுங் லல்லு சார்...... உங்க ஊட்டுகுலார இருந்து இப்புடி ஒரு சவுண்டு அடிக்கடி வருதாமாங்கோ.....

" ஏய் ... உன்ன வெட்டாம உடமாட்ட்டண்டி ..... என்னையாடி திட்டுற....." அப்புடீன்னு......???? இது நெசந்தானுங்களா சாரே........???




////// இது இப்படி இருக்க ஏர்டெல் விளம்பரத்தில் மாதவன் எதிரில் இருக்கும் மனைவிக்கு (வித்யா பாலன் ) போனில் பேசுகிறார். SMS செய்கிறார். எது ஆனந்தம் என்று போன் வைத்திருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். //////



தேனுங் சாமி ... இது அவரோட நெசோ பொண்டாட்டி ( ஜமுனா ) க்கு தெரியுமுங்களா.....???



////// விஜயகாந்த் மாதிரி புள்ளி விபரம் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி பேர் செல்போன் இணைப்பு வாங்குகிறார்கள். இதில் எவ்வளவு பெண்கள் என்று தெரியவில்லை. //////


இந்த கேள்விய நீங்க இபபுடி பப்புளிக்கா கேட்டுபோட்டீங்கல்லோ ........ !! அவரோட அடுத்த படத்துல அத ஒரு பன்ச் டயலாக்கா வெச்சுபோட்டு கணக்கா கரிகிட்டா சொல்லிபோடுவாருங்கோவ்....!!!!



////// தங்கம் விலை, சென்செக்ஸ் மாதிரி பஸ் கட்டணமும் ஆகிவிட்டது பார்த்தையா ? நேற்று குறைந்த பஸ் கட்டணம், இன்று தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. ////////////



அவுருக்கென்னோ .... அவுரு சம்முன்னு காருல போவாரு....!!!!!!!!




////// தோல்வி பயம் வந்துட்டுது என்ன செய்ய. ஆனால் இந்த தேர்தல் விதிமுறைக்கு யார் காரணம் என்று நீ நினைக்கிற ? /////


எல்லா நம்ம இட்லி vadathaanungo சாமி.....!!! நெம்ப குசும்பு..... .!!!!!!




//////// பஸ் கட்டண குறை�புக்கு காரணமான அதிகாரிகள் மீது, இன்று காலை 10 மணிக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆக அமைச்சர் நேருவும், கலைஞரும் இதற்கு காரணம் இல்லை. நல்ல கூத்து. /////



அட...... ஆம்மாங்க சாமி......!!! ரவைக்கு 1 மணிவரைக்கும் கோந்து பாத்திட்டுதே போனமுங்கோவ்.........!!!! நெம்ப நல்ல கூத்துதாங்கோவ் .....!!!






//////// சன் டிவியில் விஜயகாந்த் விளம்பரத்தை பார்த்தியா ? ஒரு வேளை மரியாதை படத்தை சன் வாங்கிவிட்டார்களோ என்னவோ. விஜயகாந்த் என்றவுடன் புள்ளிவிவரம் ஞாபகத்துக்கு வருது என்ன செய்ய! சினாவில் ஆண் பெண் விகிதம் 126-100 என்ற அளவில் இருக்கிறதாம் அதனால் அங்கே பொண்களுக்கு தட்டுப்பாடு. /////////




தேனுங் சாமி...... புள்ளி வெவரம் தெப்புடீங்கோ......??? புள்ளி மட்டுந்தானுங்களா .... இல்ல பொரத்தாண்ட ராசாவும் வருமிங்களா......???





/////// ”உங்க மாமியாரை காணோம்னு இங்கே சொல்றீங்களே .. இது தீயணைப்பு நிலையம்மா” “ஐயோ சந்தோஷத்துல என்ன பண்ணறேதுன்னே தெரியலையே” ////////




நல்ல மருமவ..... பேசாம சந்தோசத்துல ... " மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாத்து சிரிச்சுகிட்டு இருக்க சொல்லுங்கோ....." நெம்ப சூப்பரா இருக்கும்......!!!!!




//////// ஏன் இப்ப எல்லாம் ஜோக்ஸ் ஜோதிகாவை காணவில்லை என்று கேட்ட வாசகருக்கு இந்த ஜோக்.

பெண்கள் பற்றி இன்னொரு நியூஸ் - மல்லிகா ஷெராவத் மில்க் ஷேக் என்றொரு புது வகை மிக் ஷேக்கை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நம்ம ஊர் நடிகைகளின் பெயரில் ஆரம்பிக்கலாம். ஆனால் கடைக்காரர் திவால் ஆகிவிடுவார். //


ஓஓவ்..... ஓஓவ்......!!! சாமி...... இது நெம்ப டூ மச்.....!! நீயி ஏங்கி வடநாட்டு சாமி மாதிரி தெரியுது.... ????


நமிதா மில்க் ஷேக்குன்னு உட்டு பாருங்கோவ்...... !! சேல் சும்மா பிச்சிகிட்டு போகுமுங்கோவ் ..!!!!




/////// தமிழ்நாட்டில் கொசுத் தொல்லை மாதிரி ரவுடிகளின் தொல்லையும் அதிகமாகிவிட்டது. சில நாட்கள் முன்பு ராணுவத் தளவாடங்களுடன் சென்ற லாரிக்ள் கோவையில் சனிக்கிழமை வழிமறித்து அதில் இருந்த பொருள்களை பெரியார் திராவிட கழகமும், மதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஐந்து லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளார்கள். ராணுவ வீரர்களின் உடமைகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள், இதில் ராகெட் குண்டுகள் வெடித்தது போன்ற சத்தம் வந்திருக்கிறது. இதனால் கோபம் வந்த ராணுவ வீரர்கள் பொது மக்கள் கார்களை போட்டு அடித்துள்ளார்கள். பொது மக்கள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல் கருணாநிதி மீது நடந்த தாக்குதல் என்றே நினைக்க வேண்டும். ஏன் என்றால் நடப்பது மக்கள ஆட்சி. என்ன நான் சொல்லுவது புரிகிறதா ? //////



வர ... வர ... தமிழனுக்கு மதிப்பே இல்ல.... நம்ம ஊரு அரசியல் வியாதிங்க எல்லாம் வட நாட்டு அரசியல் வியாதிங்களுக்கு குத்தவைக்கு கொத்தடிமையா இருக்குறாங்க.....!!
அதுனால ராணுவமும் நம்மள கொத்தடிமைனு நெனச்சுகிச்சு....!!! ஒரு பய நம்மூருல ட்ரைனிங் எடுக்க முடியாது.......!!!! ஆமா சொல்லிபோட்டேன்....!!!!



//////// சரி அரசியலை விட்டு ஐபிஎலுக்கு போகலாம். இந்த முறை ஐ.பி.எல் போன முறை மாதிரி விறுவிறுப்பாக இல்லை. ஆனால் http://fakeiplplayer.blogspot.com/ என்ற தளத்தில் ஐ.பி.எல். குழுவில் இருக்கும் ஒருவர் அங்கே நடக்கும் அந்தரங்க விஷயங்களை பற்றி எழுதுவதாக கூறுகிறார். இவருக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். இப்ப ஐ.பி.எல் டீமில் யாரும் லேப்டாப் உபயோகப்படுத்த கூடாது என்று சொல்லிவிட்டார்கள். நல்ல காமெடி! /////////


ஐய்யோஒ........!!! நல்ல காமிடிங்கோவ்.....!!!!





///////// இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்று
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கரிடம் விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்ற நியூஸ் இன்று வந்துள்ளது. இதற்கு பேர் தான் 'வாழும் கலை' போல. /////////




ம்ம்ம்கும்ம்ம்.......!!! செவுடன் காதுல சங்க ஊதி என்ன பிரயோசனம்......!!!!!!




/////// தேர்தல் காலத்தில் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் என்ன என்னவோ பேசுகிறார்கள். இவர்கள் பேசும் பேச்சு அட அட. இலவசமாக டிவி, சாராயம் என்று கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு “Memory Plus" மாத்திரை கொடுத்தால் இவர்கள் என்ன சொன்னார்கள் என்று ஞாபகம் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். ///////




அட நீங்க வேற சாமி.....!! இவுங்க பேசுற பேச்ச கேட்டா .... மக்களெல்லாம் உருகிப்போயி அழுவுராங்கின்னு கேள்விப்பட்டு .... எல்லா சீரியல் டையரக்டர்களும்
எல்லா தலிவருங்கோ பிரச்சாரத்தையும் ஒன்னு உடாம அட்டான்ன்டு பண்ணி
நோட்ஸ்ஸ்ஸா எடுக்குறாங்களாம்....!!! எப்புடியோ யாரோ ஒருத்தருக்கு இவிங்க பேச்சு பிரயோசனமா இருக்குதுங்கோ சாமி.......!!!!!!




/////// விஜயகாந்துக்கு எப்படி இவ்வளவு ஆதரவு என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த மர்மம் நேற்று தான் எனக்கு புலப்பட்டது.

தி.நகர் ராம்ராஜ் வேஷ்டி, பனியன் கடைக்கு சென்றிருந்தேன் அப்ப கடைக்குள் வந்த ஒருவர். கையை நீட்டி ”இந்த கரை வேட்டி இரண்டு செட் தாங்க” என்றார்.
கடைக்காரர் எடுத்து கொடுத்துவிட்டு ”விஜயகாந்த் கட்சி துண்டு, கர்சிப் கூட எங்களிடம் இருக்கு” என்றார்.
“இது ராமதாஸ் கட்சி வேட்டி இல்லையா ? நான் ராமதாஸ் கட்சி, அந்த வேட்டி எனக்கு காமிங்க”
கடைக்காரர் எடுத்து காமிக்க, இந்த நீல நிறம் வருவது எனக்கு பிடிக்கலை எனக்கு விஜயகாந்த் வேட்டியையே கொடுங்க என்று இரண்டு செட் வாங்கிக்கொண்டு போனார். இப்ப தெரியுதா விஜயகாந்துக்கு ஏன் இவ்வளவு ஆதரவு என்று ? ////////



ஆமா.... உங்குளுக்கென்ன அங்க வேல.....!! அப்போ நீங்குளுமும் விசியகாந்த் சாரு கட்சியா.....??? அடங்கொன்னியா .......!!!!!!




//////// இந்த மாதிரி கப்ஸா விடுற அரசியல்வாதிகளை எல்லாம் புறக்கணிச்சிட்டு நம்ம அண்ணன் ராமசாமிக்கு ஓட்டுப் போடுங்க. //////



அடங்கொக்கமக்கா....... !! அத்வானி = ராமசாமி ' யா????

அடுச்சுடு ராமசாமி........!!!!!



/////// அவரால பெரிசா ஏதும் செய்ய முடியாட் டியும் அட்லீஸ்ட் நம்ம ரெங்கநாதன் தெருவில இருக்கிற ஆக்கிரமிப்புகளையாச் சும் சரி பண்ணுவார்...'' /////


ஆமாங்கோவ்.....!!! நம்ம வடக்குபட்டி ராமசாமி அண்ணனுக்கே ஓட்டு
போடுங்கோவ் ..!!!

அப்பத்தானுங்கோவ் அவுரு " ரெங்கநாதன் தெருவில சாலையா இருக்குற ஆக்ரமிப்பா அகற்றிவிட்டு எல்லா சாபிங் காம்ப்லக்சா மாத்திபுடுவாருங்கோவ்.....!!!!!!




/////// ஆனா, இந்தப் பேச்சைக் கேக்க மொத் தமா நின்ன கூட்டத்துல எத்தனை பேர் இருந்தாங்க தெரியுமா வெறும் பத்துப் பேர்! ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜம்தானே... //////




அட பதினோரு பேருங்கோவ் சாமி....!! உங்களையுமும் சேத்திக்கோங்க.......!!!!





//////// நேற்று வந்த செய்தியில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவியுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எது எப்படியோ கருப்பு பணம் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வந்த அத்வானிக்கு ஜெ. ////////



ஐயோ பாவம்....... நம்ம மன்மோகன் சிங் ...... இதன நாள் இருந்த மாதிரியே அமைதியா இருந்திருக்கலாம்....!!! வாய குடுத்து மாட்டிகிட்டாரு......!!!!!!




/////// ஜெ என்று சொன்னவுடன் தான் ஞாபகத்துக்கு வருது அ.தி.மு.க., சார்பிலும் மொபைல்போன் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தொலைபேசி ஒன்றில் இருந்து வரும் அழைப்பை 'ஆன்' செய்தால், ஜெயலலிதாவின் குரலில் இரண்டு நிமிடம் வரை பிரச்சாரம் செய்யப்படுகிறது. 'நான் ஜெயலலிதா பேசுகிறேன்,' என்று துவங்குகிறது அந்த பேச்சு.
எனக்கு 'நான் மாது வந்திருக்கிறேன்' என்று காதில் விழுகிறது. உனக்கு ? ////////



மூத்ர சந்துல அடி வாங்காம நீ போகமாட்ட போல....!!!!!!
அப்பறம் உன்ர இஷ்டம் ......!!!!





//////// தயவு செய்து ஆறு வித்தியாசங்கள் ( அல்லது ஒற்றுமை ) கண்டுபிடிக்காதீர்கள்! /////


சத்தியமா ரெண்டுக்கும் சிங்குலு ஒத்தும கூட இல்லீங்கோவ்.......!!!!!!





/////// இப்படிக்கு,
முனி ...... ////




இதுல முகவரி வேற......!!!!





இப்படிக்கு ,

லவ்டேல் மேடி .....

(ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........)

வலைஞன் said...

அந்த படங்கள் மனதை மிகவும் புண் படுத்துகின்றன
யாரைப்போய் ,யாரோடு ! ! !
தயவு செய்து எடுத்துவிடுங்கள்
நன்றி

IdlyVadai said...

//ஆறு அல்ல... எட்டு!
பின்னூட்டத்திலேயே, கட்டம் போட்டு காட்ட முடியாமல், இமேஜாகப் போட்டுவிட்டேன், என்னுடைய வலைப் பக்கத்தில்... பார்க்கவும்..//

முனி கடிதத்தில் இணைத்துவிட்டேன் :-)

Erode Nagaraj... said...

aahaa... thank you... :)

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/05/blog-post_05.html

இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்கப்பு....

Krish said...

///அதிர்ஷ்டத்தை பாரேன்' என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்தால் நான் அதற்கு பொறுப்பில்லை )
//// lucklook வருது !!!

கடைசி படம் சூபர்!

Anonymous said...

yow...umaku arive illaya...perumal padathai ippadi opidalama....

கிரி said...

//தென் சென்னையில் தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடுற 'டிராஃபிக்' ராமசாமியை //

இவர் போட்டியிடுவதே நீங்க கூறி தான் தெரியும்....

இது குறித்து எந்த பதிவும் இட்லி வடையில் பார்த்ததை போல நினைவில்லையே ..

Anonymous said...

http://in.tamil.yahoo.com/News/Regional/0905/04/1090504013_1.htm

Enna nu solrathu? Ithai naan enna nu solrathu???

vinoth kumar said...

eppadi ippadi yosigkareenga

Erode Nagaraj... said...

நேற்றும் இன்றும் இரட்டிப்பு சந்தோஷம்!
இட்லி வடையின் முதல் பக்கத்தில் நேற்று..
யூத் ஃபுல் விகடனில் இன்று... ஆனால், இது கொஞ்சம் சீரியஸ்...

http://youthful.vikatan.com/youth/index.asp

Anonymous said...

தமிழர்களே தமிழர்களே !
நீங்கள் கலைஞரை கடலில் தூக்கி போடுங்கள் (இந்த தேர்தலில் கண்டிப்பா போட்ருவாங்க) !
அவர் கட்டுமரமாக மிதப்பார் (கடல் கூட இவரை சேர்த்து"கொல்லாது" போல) !
அவர் மீது ஏறி நாம் (ஆறு கோடி உலக தமிழர்களும்) பயணம் செய்யலாம் !
கவிழ்ந்து விடமாட்டாராம் (அவ்வுளவு பெரிய கப்பலா?) !

"கலக" கண்மணிகளே. இதை நான் சொல்லவில்லை.
இப்போ தான் கலைஞர் டிவி பார்த்தேன் (முதன் முறையாக). அதில் வந்தது.
"லூசு" மாறி பேச கலைங்கரால மட்டும் தான் முடியும்.

-- இதை எங்கேயாவது போடவேண்டும் என சம்பந்தமில்லாமல இங்கே பின்னூட்டமாக போடுகிறேன்.

Anonymous said...

என்ன இட்லிவடை? why are you unnecessarily comparing நாக்க மூக்க with பெருமாள்? தேவை இல்லாத வேலைனு நெனைகறேன்