பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 07, 2009

ப.சிதம்பரம் மீது ஷூ வீச்சுமத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். டெல்லி சீக்கியர் மீதான கலவர வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஜெகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். நிருபர்கள் கூட்டத்தில் டைனிக் ஜாக்ரான் இந்தி பத்திரிகை நிருபர் ஜர்னல் சிங் என்ற சீக்கியரும் கலந்து கொண்டார். அவர் சிதம்பரத்திடம் இந்த கேள்வியின் போது வாக்குவாதம் செய்தார். ஜெகதீஷ் டைட்லரை அரசியல் நோக்கத்தில் விடுவித்து இருக்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு ப.சிதம்பரம் விசாரணை நடத்தி அவர் மீது தவறு இல்லை என்பதால்தான் விடுவிக்கப்பட்டு இருக்கிறார் என்றார். இதனால் கோபம் அடைந்த ஜர்னல்சிங் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி சிதம்பரத்தை நோக்கி வீசினார். ஷூ சிதம்பரத்தின் முகத்தின் அருகே பாயந்த படி சென்று கீழே விழுந்தது. இதனால் சிதம்பரம் அதிர்ச்சி அடைந்தார். உடனே பாதுகாவலர்கள் நிருபரை மடக்கி பிடித்து வெளியே கொண்டு சென்றனர்.

இரண்டு லட்சம் !

ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த ஜர்னைல் சிங் கூறுகையில, நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன். ஆனால், சிபிஐ அறிக்கை குறித்து மத்திய அரசும் சிதம்பரமும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக வேறு வழியில் போராடியிருக்கலாமே என்று நிருபர்கள் கேட்டதற்கு, எந்த வகையில் போராடச் சொல்கிறீர்கள். இந்தப் பிரச்சனையில் 25 வருடமாக இதே தானே நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

AAM AADMI

31 Comments:

நான் அவன் இல்லீங்கோ said...

ஷூ அவர் மீது படாவிட்டாலும் அந்த நிருபர் வருந்த வேண்டம், ஒரு ஷூவை வைத்து இரண்டு லட்சம் சம்பாதித்து விட்டாரே. மிகவும் தவறான செயல். என்ன செய்வார் பாவம், அரசியல் குறுக்கீடால் தேர்தல் ஆணையம், நீதி துறை முதல் உள்ளூர் போலீஸ் வரை எங்கும் உரிய நீதி கிடைப்பதில்லை. ஐந்து வருடம் ராணுவ ஆட்சி வந்ததால் நாடு உருப்படும்.

mazhai said...

இனி எல்லோரும் செருப்பு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் நின்று பேட்டி கொடுக்கணும்

மானஸ்தன் said...

whether the "investigation" was fair and whether the "verdict" is right or wrong - this was a "shameful act" on the part of the journalist....

by this process, the "attention/importance" of this case is drifted from Mr Jagdish to this stupid media member.

R.Gopi said...

இதுக்கு முன்னாடி தீக்குளித்ததற்கு பரிசு, இப்போ அதை தொடர்ந்து ஷூ வீசலுக்கு பரிசா??

சூப்பர்டா மக்கா .........

வெங்கம்பயலுவ............ என்ன எல்லாம் செய்ய கூடாதோ அத எல்லாம் செய்யரானுவளே .......

Kalyan said...

I dont think this is the right way of protest, I dont see anything wrong what Chidabaram answered.

I protest the way the Sardarji had done, it is shameful act of Journalism..
----Take my Shoes-----

Congress had made Manmohan singh has the prime miniter..So are they Anti-Sikhs?

I dont know why Language/Race/Religion/Caste/Creed needs to be linked for anthing being done/Against..

I am no supporter of congress but i know media will use this Video to increase the TRP's and Anti-Congress men will use their advantage to criticise and kindle sikhs emotions

and congress will succumb to press to do something against tytler..

Same cycle Continues..

Previous Shoe Episode with Bush i was enjoying, but somehow this time i could not enjoy

Sympathies to you Mr.chidambaram, i like the way u handled the post-shoe throw.. Too...Hats off

cho visiri said...

Kalyan said.....
//Previous Shoe Episode with Bush i was enjoying, but somehow this time i could not enjoy//

When it happens at the next door, we treat it as no more than a incident. (Leave alone the fact that this Gentleman says he enjoyed it). Now when a similar thing happens, he is firing in all the cylinders.........
Contradiction, is thy name 'Shree kalyanjee".
Media reported that Shri Chidambaram declared that CBI was not under his control and it is an independent body. Well, facts are too big to be hidden in lies.

★кєттαναη ιѕ вα¢к★ said...

வணக்கம்..

நான் இங்க தத்துவம் சொல்ல வரல !

இனமானம் இல்லா தமிழனுக்கு., தன்மானம் உள்ள சீக்கியன் தந்த பரிசு ‘செருப்படி’

இது தான் காங்கிரஸுக்கு எங்கும் இனி கிடைக்கப்போகிறது..

----- அன்பு பிரபாகரன் -----

M Arunachalam said...

I consider this no different from "self-immolation" stunt performed by a reporter in TN.

Some of our guys rejoiced when a shoe was thrown by an Iraqi reporter on the then US President Bush recently. Now, the same disease has spread to Indian reporters too.

We Indians can't even protest in our own way but have to copy it? Pathetic.

After becoming Home Minister, PC seems to have developed a sense of humour. Otherwise, he would not have said "CBI was not under his control and it is an independent body", right?

PC was moved out of FinMin to save the ministry but now who is going to save HomeMin?

Ravi said...

IV, what Chidambaram said was: "CBI has only submitted a report to the court, the court can accept it or reject it or ask CBI to investigate further". He did not mention anything in the lines of Tytler being innocent. He added that this was not a forum to discuss that issue and said he would not take any arguments on that issue.

But looks like the reporter did not intend to cause harm as he flung the shoe across Chidambaram saying "I protest!". Nevertheless, such incidents are definitely condemnable but it also reflects the anguish of the affected people.

Rajaraman said...

இந்த சம்பவம் காங்கிரசின் உச்சக்கட்ட அயோக்கியத்தனத்திற்கு கிடைத்த பரிசு. Weldone Jarnail Singh.

Rajaraman said...

இந்த சம்பவம் காங்கிரசின் உச்சக்கட்ட அயோக்கியத்தனத்திற்கு கிடைத்த பரிசு. Weldone Jarnail Singh.

அமுதப்ரியன். said...

ஜனநாயகம் செத்து விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.....

--------------------------

அமுதப்ரியன்.
[ ம்..இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ???? ]

Inba said...

Journalist should know how to control his emotions

he became a bad example for the entire media

in future, it may happen that instead of shoe they will throw eggs,acids or even bombs

(after this comment, all press peoples can escape from our TN politicians, no more press meets!)

மஞ்சள் ஜட்டி said...

தில்லோட சப்பாத்தை வீசின சிங்குக்கு வாழ்த்துக்கள்....த்மிழ் நாட்டிலிருந்து போயி சிங் கைய்யாலே செருப்படி வாங்கின ப.சி வுக்கும் வாழ்த்துக்கள்...

யாராவது இங்கே அம்மா, மு.க மேலே ஏதாவது வீசுங்களேன்??

ஒரு பாட்டு ஞயாபகத்துக்கு வந்தது...

வீசும் செருப்புக்கு சிதம்பரம் தெரியாதா....
வாங்கும் ப.சி க்கு..ஷூ வருதுன்னு புரியாதா...

Krish said...

டைட்லர் என்ன செய்தார்னு எல்லாத்துக்கு தெரியும். அப்பறம் சிபிஐ எப்படி ரிப்போர்ட் கொடுத்தா எப்படி? தினகரன் பத்திரிக்கை கொலையில் அழகிரிக்கு தொடர்பில்லை என்று சொல்வது போல் இருக்கிறது!

சாய்கிருஷ்ணமுராரி said...

////இனமானம் இல்லா தமிழனுக்கு., தன்மானம் உள்ள சீக்கியன் தந்த பரிசு ‘செருப்படி’

இது தான் காங்கிரஸுக்கு எங்கும் இனி கிடைக்கப்போகிறது.////.
super comment

Raja said...

You are all talking out of your own shoes !! you have to step in to another's to really feel what they feel ! The sikhs have had a terrible tragedy brought upon them by the congress goons in 1984 and till today they are seeking some kind of a just closure. oru godhrakke BJP iya congress matrum palar eppadi ellaam kelvi kaekkuraanga !! ippo enga poi moonja vachipaanunga ! paradesi/maanamketta pasanga !

naan avan illeengo sonna madiri nadantha thaan, Indiavukku vidivu !!!

Anonymous said...

"I dont know why Language/Race/Religion/Caste/Creed needs to be linked for anthing being done/Against.. "

அண்ணாத்த இத்தினி நாளு எங்க இருந்தாப்பல? இப்பத்தான் வாய்ஸ் கொடுக்காவ?

பா. ரெங்கதுரை said...

”சிதம்பரம் செட்டியாருக்கு செருப்படி” என எந்தத் தமிழ் நாளேடு செய்தி வெளியிடுகிறமோ?

sankarfilms said...

hello sir..
same article i wrote in my blog.
plz visite my blog &give me a feed back sir.
sankarkumar

Vedantha Desika Dasan said...

Cho Visiri said : Shri Chidambaram declared that CBI was not under his control and it is an independent body

CBI in the UPA era means Chief Branch of Indian Govt. We have seen it in earlier episode of quotrachi. Now, it is Tytler.

Shame on CBI autonomy.

Anonymous said...

IV,
Please mention that Sikhs are infuriated only because of the Congis giving ticket to Tytler and Sharma, despite their direct involvement in killing of thousands of Sikhs in '84.

Congress has ruined this Nation more than LeT.

Anonymous said...

We cannot comment on the Rule of Law.

But there is a way to tackle this. Why NOT the SUPREME COURT ask the Government this Question:

WHOM DO YOU THINK IS PUNISHABLE FOR SIKH MASSACRES DURING 1984? IF YOU BRING THEM BEFORE THE LAW, THEN MR.JAGDISH TYTLER CAN BE RELEASED OUT OF THIS!

Any takers for this one above?

Prabhu Swaminathan said...

///இனமானம் இல்லா தமிழனுக்கு., தன்மானம் உள்ள சீக்கியன் தந்த பரிசு ‘செருப்படி’

இது தான் காங்கிரஸுக்கு எங்கும் இனி கிடைக்கப்போகிறது.////

Nice comments :)

வலைஞன் said...

மிகவும் அநாகரிகமான செயல்.வன்மையாக கண்டிக்கிறேன்
இந்த அரசின் பிரதம மந்திரியே சீக்கியர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து சீக்கியர்களும் இணைந்து காங்கிரசுக்கு ஓட்டளிக்காமல் இருக்கலாம்
அதை விடுத்தது செருப்பு எறிவதால் பயன் ஒன்றும் இல்லை

மேலும் இது சீக்கியர் vs தமிழர் சண்டை என்று தமிழ்த்தலைவர்கள் இங்கு உசுப்பி விடாமல் இருக்க கடவுள் அருள் புரியட்டும்

லவ்டேல் மேடி said...

செருப்பென்னுங்கோ தம்பி........ சாநியவே கரைச்சு மூஞ்சியில ஊத்துனாலும் .... அவுரு அஞ்ச மாட்டாரு......!!! ஏன்னா அவுரு காங்கிரஸ்காரர் .....!!!!

Anonymous said...

This Act Must Have Been Done Earlier By A Tamil, On Pranab Mukherjee Or Manmohan Singh ( To Show our Anguish When Large no. Of Srilankan Tamils Are Being Massacred In S.L.) Who Inspite of Strong Demand kept cool --didnot even murmur against S.L.-- Not only that, They are helping The Army Of that country by way of arms, ammunitions etc. Now if this is repeated, this may not have the desired effect.

Baski said...

ஒரு விஷயம் தெரியுமா.?

இனிமேல் பெரிய தலைவர்கள் பிரஸ் மீட்ல், நிருபர்கள் சூ, சொக்ஸ், பெல்ட், watch , மொபைல் முதலியவற்றை ரூமிற்கு வெளியே விட்டுவிட்டு வரவேண்டும் என மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளதாம். :-)

இதை ஐ நா சபை வரவேற்றுள்ளதாம். எல்லா உறுப்பு நாடுகளுக்கும் இதையே பரிந்துரை செய்துள்ளதாம்...

பி கு: ஏப்ரல் ஒன்று மட்டும் தான் கரடி விடணும்னா என்ன ???

Anonymous said...

கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

காங்கிரஸ்காரனுக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு.

saamakodanki said...

இந்திய குடிமக்கள் யாரும் செருப்பு போடக்கூடாது. முடிந்தால் குதிரைக்கும், எருமைக்கும் லாடம் கட்டுவது போல் இந்திய குடிமக்களுக்கும், குறிப்பாக நிருபர்களுக்கு லாடம் மட்டுமே தரப்படும். நிருபர்களுக்கு செருப்பு விற்றால், அதனை விற்ற வியாபாரிகளுக்கு இனி ஆயுள் தண்டனை.
இப்படிக்கு ப.சிதம்பரம், பல பீரங்கிகளை பார்த்த உள்துறை மந்திரி.

cho visiri said...

Anonymous said;-
//But there is a way to tackle this. Why NOT the SUPREME COURT ask the Government this Question:

WHOM DO YOU THINK IS PUNISHABLE FOR SIKH MASSACRES DURING 1984? IF YOU BRING THEM BEFORE THE LAW, THEN MR.JAGDISH TYTLER CAN BE RELEASED OUT OF THIS!//

I am afraid if such thing as suggested is resorted to by the Court it will set bad precedent.
I am reminded of one incident during my school days. Someone had stolen a costly pen of a student. When the teacher asked every one but did not get any clue, he caught hold of one person (whose credentials were not good) and told the class that if and when the real person was brought before him, the present accused shall be let off!
Law can not be and should not be dispensed in this manner.