பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 17, 2009

நரேஷ் குப்தாவுக்கு மருத்துவ பரிசோதனை

நரேஷ் குப்தாவுக்கு மருத்துவ பரிசோதனை இது என்ன பெரிய நியூஸ் என்று கேட்பவர்களுக்கு ...

தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று காலை 10 மணியளவில் சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

பின்னர், அவர் டீன் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நிர்வாகம் சார்பில் டீ, பிஸ்கெட் வழங்கப்பட்டது. அதை அவர் வாங்கி குடிக்க மறுத்து விட்டார். இது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பின்னர், நரேஷ் குப்தா மருத்துவமனையில் உடல் முழுவதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனைகளை முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பயன்படுத்தத் தொடங்கினால், அவை மேலும் மேம்படும் என்று போன மாசம் ஞாநி எழுதியது நினைவிருக்கலாம்

14 Comments:

M Arunachalam said...

These politicians will divide the society on caste basis by bringing in reservations to garner votes for themselves to come to power. But, when it comes to using the "services" of those "reserved" professionals' skills, say getting treated by a Reserved Doctor or in a Govt. Hospital, they will run helter skelter. Because they know they won't survive even 1 day if they are "treated" by those who became doctors for reasons "other than" merit.

Take the case of "messaiah" of reservations V.P.Singh, who got treatment in a London hospital by foreign doctors. Same is the case with Murasoli Maran who was "admitted" for treatment in a private hospital but not in AIIMS or other Govt hospital.

OORUKKUTHAAN UBADESAM; THANAKKENDRU VARUMBODHU THERIUM DWESHAM.

Anonymous said...

///அதை அவர் வாங்கி குடிக்க மறுத்து விட்டார். இது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.///


பின்னே. வாங்கிட்டு குடிக்காம இருந்த யாருக்குதான் ஆச்சர்யம் வராது!! :-D

Krish said...

ஆ ஊ ன்ன அப்போல்லோ க்கு போகும் அரசியல் வாதிகளிடம், யாராவது இந்தக் கேள்வியை கேட்டல் நல்ல இருக்கும். பிரஸ் மீட் ல கேள்வி கேட்கும் நிருபர் எல்லாம், ரொம்ப ஈசியான கேள்விகளையே கேட்குறாங்க!
கருணாநிதியையோ, ஜெ வையோ நேரடியாக இப்படி கேள்வி கேட்க யாரும் இல்லை!

Anonymous said...

I wonder why no body inclusive of the so called bravest GNANI TO THE OPPOSITION POLITACL PARTIES OF tAMILNADU HAS NOT COME SO FAR TO KNOW THE TOTAL AMOUNT SPENT BY THE tAMILNADU gOVERNMENT FOR cHIEF mINISTERS bACK PAIN TREATMENT HE AS TAKEN RECENTLY AT THE RAMACHANDRA MEDICAL HOSPITAL SO FAR AND ALLIED EXPENSES INCURRED IN THIS REAGRD.
suppamani

பா. ரெங்கதுரை said...

//அரசு மருத்துவமனைகளை முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பயன்படுத்தத் தொடங்கினால், அவை மேலும் மேம்படும் என்று போன மாசம் ஞாநி எழுதியது நினைவிருக்கலாம்.//

ஞாநி போன்றவர்களின் மூட நம்பிக்கைகள் எந்த ஒரு மதவாதியின் மூடநம்பிக்கைகளையும் விட சற்றும் குறைந்தவை அல்ல.

உயர் அரசுப் பதவியில் இருப்பவர்கள் அரசாங்க மருத்துவமனைக்கு வருவார்களேயானால், உயரடுக்குப் பிரிவினரின் சிகிச்சைக்கான தனிப் பிரிவு அங்கு ஒன்று உருவாகி அதனால் ஏழைகளுக்கு மேலும் இன்னல்கள் ஏற்படலாமே தவிர வேறு எதுவும் உருப்படியாக நடந்துவிடாது.

பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உயர் வருவாய்ப் பிரிவினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் மேம்பட்ட அறை வசதி போன்றவை ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதை ஞாநி போன்றவர்கள் தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள்.

கொடும்பாவி-Kodumpavi said...

அரசு ஆஸ்பத்திரிக்கு அரசியல் வாதிகள் போவதில்லை ஏன்? என்ற கேள்விக்கு நிறைய பேர் தரும் பதில்கள் இட ஒதுகீட்டின் முறையில் பயின்ற மருத்துவர்கள் அங்கிருப்பார்கள் அதனால்தான் போவதில்லை. ஏன்யா உங்களுக்கு இப்படி தோணுது??
அப்படி படிச்சவன் எல்லாருமே இப்படி தான் இருப்பாங்கன்னு ஒரு வட்டம் போட்டுகிட்டு இப்படி கூப்பாடு போடுறீங்களே ஏன்? அப்படி படிச்சவங்களே கூட ஒரு வாய்ப்பு கிடைச்சதாலே ஒரு நல்ல மருத்துவரா வந்திருக்க வாய்ப்பே இல்லையா?
ஏன் நாம்மில் பலர் தனியார் மருத்துவ மனைக்கு செல்கிறோம்.
1. நம்மிடம் காசு இருக்கிறது
2. தனி கவனிப்பு நமக்கு கிடைக்கிறது என்ற மனப்'பிராந்தி'
3. பளிங்கு போல் தரை அதை துடைக்க இருவர் இரவு பகல் பாராமல் துணி தேய்ந்தாலும் துடைப்பதை நிறுத்தாதவர்கள்
4. பளிச்சென்று குழாய் மாட்டிக்கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் ( அப்படி பேசினாலே படிச்சவருங்கன்னு நினைக்கற கூட்டம் ஒன்னு இருக்கு நம்ப நாட்டிலே)
5. கை தொட்டால் காசு கட்ட வேண்டும். 24 மணி நேர கண்காணிப்பு - புன்னகை மாறாமல் சேவை ( மனதிற்குள் ஆயிரம் திட்டு)
6. எல்லாவற்றிக்கும் த/அ மருந்தில்லாமல் நேரத்திற்கு மாற்று நிற மருந்துகள் - அதற்கு தனி ரசீது.

எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் இருந்தும் அவற்றை பயன் படுத்தி அரசு சார்பில் ஒரு கவுன்ஸலிங்க் வகுப்பு மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஏன் அரசு நடத்தக்கூடாது?
மருத்துவம் தேர்ச்சி பெற்று வருவது என்பது ச்சும்மா ஒரு ஜுஜிபியான ஜிலேபி வேலை கிடையாது. அதுக்கென்று கொஞ்சமேனும் மெனக்கிடனும்.
வசதிகள் அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவு - தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது.

ஜாதியை விட பொருளாதார அடிப்படையில் இச்சலுகைகளை வைத்திருந்தால் ஜாதியால் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லாமல் தடுக்கலாம்.

sundaikai said...

ஏன் சார் தெரியாமல் தன் கேட்கிறேன், அறுவை சிகிச்சை செய்தால் 35% (அதான் 35% வாங்கின SC/ST Dr. ஆகிடலாமே) தான் பொழைக்க chance இருக்கு என்றால் நீங்க சிகிச்சை செய்து கொள்வீர்களா. அரசியல் வியாதிகளும் மனிதர்கள்தானே!

Anonymous said...

ivanunga ellam arasiyalvaathikazhin kaithdikazh thaan...eppa puriya porom itha..?

Anonymous said...

Perhaps Naresh Gupta was scared to drink tea offered at the hospital :).

R.Gopi said...

Well said

கொடும்பாவி-Kodumpavi

saamakodanki said...

பேரனுக்கு பேரனுக்கு பேரன் வரை சொத்து சேர்த்து வைத்து விட்டு தான் போக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் அரசியல்வாதிகள், சில உயர் அதிகாரிகள் மத்தியில் இப்படியும் ஒரு அதிகாரியா? இவரையும் மிரட்டுவதற்கு முயன்ற சிலரும் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு முறை. வாழும் காலத்தி்ல் யாருக்காவது நல்லது செய்து வாழ வேண்டும் என்று நினைக்கும் இவரை பார்த்தாவது சுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திருந்த வேண்டும்.
நல்லவர் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு பெய்யும் மழை என்ற திருவள்ளுவர் குறள் தான் நினைவுக்கு வருகிறது.

M Arunachalam said...

Kodumpavi,

Why are you digressing from the post? This post is highlighting how a Govt Bueracrat has got the courage of his convictions to go & get check-up at a Govt Hospital & why can't our politicians take a leaf out of that?

I have told my view-point as to why I think these bloddy politicians who are basically hypocrates who don't want to practice what they are too willing to preach. There ends the matter.

What is the point in talking about what public does or doesn't do when the point in question here is why the politicians don't get treated in Govt. Hospitals.

Anonymous said...

If he had drunk teas and athe biscuits Karunanidhi would have written a 'poem' accusing him of swindling public money by eating biscuits and drinking tea from taxpyers' money :(.

கொடும்பாவி-Kodumpavi said...

அருணாச்சலம் அவர்களே,

நீங்க சொன்னதுக்கு எதிராவோ அல்லது பிடிக்காமலோ இதை சொல்லவில்லை. எதார்த்தம். ஒரு தனிப்பட்ட கவனிப்பு கிடைக்க வழி இல்லை என்பது தெளிவாக தெரிந்த பின் பணம் உள்ள எவனும் அரசு மருத்துவ மனை மட்டும் அல்ல சில தனியார் மருத்துவ மனைகளுக்கும் செல்ல மாட்டான். அதிலும் அரசியல் வியாதிகளுக்கு பணம் மட்டும் அல்ல 'அதிகாரமும்' சேர்ந்து விட்ட படியால் யார் செல்வார்கள்?
கௌரவ குறைச்சல் வேறு. மாற்றத்தை அந்த அரசியல் வாதிகள் கொண்டு வரவேண்டும் என்று நாமே சொல்கிறோம் ஆனால் நாம் அதை செய்கிறோமா? ( அட நாமும் சாதாரண மனிதர்கள் தானே .. மகாத்மாக்கள் அல்லவே )
மறுபடியும்.. எப்போது ஒரு அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக சேவையுடன் கூடிய வசதிகளை பொது மனிதனுக்கு வழங்குகிறதோ அப்போ நாம் நெஞ்ச நிமித்துகிட்டு பேசலாம். அப்படி ஏற்பட்டால் பல தனியார் மருத்துவமனைகள் மூடு நேரிடும்.
இப்போ.. மருத்துவம், கல்வி, ஆன்மீகம் ஆகிய மூன்றும் தான் ஒரு நல்ல சமுதாய அந்தஸ்தையும், கோடிக்கணக்கான பணத்தையும் தர வல்ல வழிகள்.
நம்ப நரேஷ் குப்தா சென்றார் என்றால் குளிர்பானம் கொடுக்கும் மருத்துவர்கள்.. ஒரு பொது மனிதன் சென்றால் எரிமலையாவது ஏன்?
நரேஷ் குப்தாவின் பிரபலமா அல்லது அவர் வகிக்கும் பதவியா? எது குளிர்பானத்தை அவருக்கு நீட்டியது?

இன்னிக்கு கூட விஜய் டிவியில் காபி வித் அனு பார்த்தேன்.. கவிஞர் வைரமுத்து.. தயாநிதி மாறன்.. பங்கேற்றனர்..
கேள்வி : உங்களுக்கு அரசியல் பிடிக்காதாமே?
பதில் : எங்க குடும்பத்தில் அனைவருமே அரசியலில் அங்கம் வகிப்பவர்கள்... நான் தவராமல் எல்லா பொது கூட்டங்களுக்கும் செல்வேன்.. ஆனாலும் அவர்கள் பேசும் மேடை பேச்சுகளில எனகொரு ஆர்வம்.. என்னா நா படிச்சது எல்லாம் கான்வெண்ட்.. லயோலா (Loyola) கல்லூரி..!?

இதப்படி இருக்கு..? இது ச்சும்மா ஒரு சாம்பிள்..
தமிழை 'மூச்சா'க சுவாசிக்கும் ஒரு தலைவரின் வீட்டு பேரன்.. கான்வெண்ட் .. அது சரி .. தமிழ் கூடவா சரியா பேச வராது..?

புதியதாக குழந்தைகளை சேர்க்கும் பள்ளிகளில் கூட second language என்ன? என்று கேட்கிறார்கள்.. ‘தமிழ்' என்று ஒரு லுல்லூய்க்கு சொல்லி பாருங்க.. ஒன்னு 'what do you mean'.. 'you kid will not have self confident' .. 'I am telling you you are spoiling your kids future'.. இப்படி பலப்பல சொற்றொடர்கள் வந்து விழும். ஐயா நான் தமிழ் தான் படிச்சேன் ஆனா நானும் திக்கு தெரியாத ஊரில்.. மொழி தெரியாத மாநிலத்தில் குப்பை கொட்டிட்டு வந்திருக்கேன்னு நம்மால சொல்ல முடியல.. அந்த தன்நம்பிக்கைய கொடுத்தது இந்த தமிழ்தான். ஆனா நாமக்கு ஒரு மாயை இப்படி ஆகிடுமோ.. அப்படி ஆகிடுமோன்னு..
என்ன கொடும சரவணான்னு சொல்லிட்டு நடைய கட்ட வேண்டியதுதான்.
இதுக்கெல்லாம் ..சூடாயிடாதீங்க..