பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 05, 2009

புது முகம் - ஒரு விளக்கம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் புது முகம் எங்கே என்று நிறைய பேர் குழம்பி போயிருக்கிறார்கள்.

அவர்களுக்காக இந்த படங்கள்.மேலே உள்ள படம் அழகிரியின் பழைய முகம்.

புது முகம் கீழே...

கலைஞர் எப்போதும் சொல்லுவதை தான் செய்வார், செய்வதை தான் சொல்லுவார். சில சமயம் சொல்லாததையும் செய்வார்

22 Comments:

கலைக்கோவன் said...

//புதுமுகங்களுக்கும்,
இளைஞர்களுக்கும்
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
-மு.க.ஸ்டாலின்//

அப்ப இளைஞர் -
வீரதளபதி(அப்படிதான் சொல்றாங்க)
ஜெ.கே.ரித்தீஷோ

Krish said...

அழகிரி என்னவோ தேர்தலுக்கு புது முகம் தான்! அடிமட்ட தொண்டனாக(!) இருந்து எந்த எதிபார்ப்பும் எல்லாம் அவர் செய்த தொண்டுகளை(!) பார்த்து தலைமை அவருக்கு இந்த வைப்பை அளித்துள்ளது.

Anonymous said...

இப்போ குழப்பம் எல்லாம் விலகி நான் ரொம்ப தெளிவா ஆயிட்டேன்!
இட்லி வடைக்கு மிக்க நன்றி!

நீங்களும் "தல" மாதிரி "slient-ஆ" சொல்லாம பல விஷயங்கள செய்யறீங்க!! அதற்கு உதாரணம் இந்த "foto-post"!!

தொடரட்டும் உங்கள் சேவை!

கொடும்பாவி-Kodumpavi said...

பழைய முகம் - புதிய முகம் - ‘உண்மையான முகம்' இது எப்போ தெரியும்?... தேர்தலுக்கு பிறவு.. அவருக்கும் பல முகங்கள் உண்டுன்னு தமிழனுக்கு தெரியாதா என்ன? திருமங்கல முகம்.. கருத்து கணிப்பு முகம்.. இப்படி முடிவில்லா பட்டியலாக நீளும்..
உடன் பிறப்புக்கள் இப்பவாவது தன் குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும்ன்னு அவுங்க தலைவர பாத்து கத்துகட்டும்.

Anonymous said...

இந்த "முகங்களின்" பழைய முகங்கள் பற்றி தங்களின் மேலான கருத்துகளைப் பதிவு செய்யவும்!

(a) "மன்னார்குடி" chemical factory-கு "favour" கேட்டு (மிரட்டிய) திரு "மேம்"பாலம்!

(b) தினகரன் ஆபிஸ் எரிப்பு சம்பந்தமாக "சன்" தொல்லைக்காட்சியில் "மாமா"வைத் தினமும் திட்டிய "மனசாட்சியின்" கடைக்குட்டி!

(c) மறைந்த திரு கிருட்டிணன் "தற்கொலை" வழக்கில் விடுவிக்கப்பட்ட, "திருமங்கலம்" புகழ் - கழகத்தின் கடை நிலை தொண்டன்" எதற்கும் அஞ்சா "கிரி"!

(d) 60000 கோடி ருபாய் "spectrum" புகழ் - "தலை"க்குத் தோள் கொடுக்கும் நடை வண்டி மக"ராச"ன்".

raja said...

tamilnadu urupaduma nu sollunga idli vadi

neysamy said...

The site becomes one sided.There are 12 new faces in the list.4ministers have been dropped.What else you expect from the list?

Anonymous said...

ஸர்த்தான்.. புது முகம் கயல்விழிக்கு கொடுக்கலையேன்னு உங்களுக்கு கோவம்...அத்தான் இப்படி பொலம்புறீங்க.....மொதல்லே கச்சி.. அப்புறோம் தான் குடும்பம்--இதுதான் தலைவர் பாலிஸி

கிரி said...

:-)))))

R.Gopi said...

இந்த புதுமுகங்களுக்கெல்லாம் சீட்டு?

மு,க.முத்து
கயல்விழி
உதயநிதி
அறிவுநிதி

R.Gopi said...

அழகிரி - FACE OFF - நல்லா இருக்கு "தல"

கருப்பு கண்ணாடி போட்டாலும் "தல" அளவுக்கு வர்றது ரெம்ப கஸ்டம்.

அது அவருக்கும் தெரியும். ஆனா, கருப்பு கண்ணாடி போட்டதும், அழகிரிக்கு பக்கா அரசியல்வாதி லுக் வந்துடுச்சே?

Mani-Bahrain said...

PAAVAM MADURAI MAKKAL (NAANUM MADURAI THAAN...) MADURAI MAKKALAGIYA NAANGAL EVVALAVO KODUMAIGALAI SANTHITHU VITTOM INDHA AZHAGIRIYINAAAL...MELUM IVAN VETRI PETRAL (THAANAGAVE JEYIKKA VAITHU KOLLUVAN INDHA AZZHUKKU KIRI...SAME LIKE THIRUMANGALAM) ATHAYUM THAANGI KOLLUM SAKTHI ENGALLUKKU UNDU...

Unknown said...

அட நம்ப அழகிரி தம்பி......!!! லிப்ஸ்டிக் கூட புதுசு மாதிரி தெரியுது........??? வாஸ்துபடி மாத்தீட்டாரா....????

Anonymous said...

ஜாலி அழகிரி


எப்பவும் பத்திரிகையாளர்களை அருகில் அண்டவிடாத மு.க.அழகிரியிடம், தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக்கப்பட்ட பிறகு கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. கல்கி மதுரை ஸ்பெஷலுக்காக அவரைச் சந்தித்தபோது நாம் ஜாலியாகக் கேள்விகளை வீசினோம். இதோ அவரது பவுண்டரி பதில்கள்....
என்ன படிச்சிருக்கீங்க...?
பி.ஏ. வரலாறு. (வரலாறு படைக்கப் பிடிக்குமா?)
படிக்கும்போது அரசியல் ஆர்வம்?
கலைஞரோட மகனா பிறந்துட்டு ஆர்வம் இல்லாம இருக்கமா? (நாங்க கேள்வி கேட்டா, திருப்பி நீங்கள் கேள்வி கேட்கறீங்களே)
உங்களுக்குப் பிடிச்ச அரசியல் தலைவர் யார்?
சோனியா காந்தி. (எம்.பி.யா சந்திக்க இப்பவே அப்பாயின்மென்டா?)
கடவுள் நம்பிக்கை உண்டா?
நான் அய்யா பெரியார்மேல நம்பிக்கை கொண்டவன். (ஹீ... ஹீ...)
கடவுள் உங்கள் முன் தோன்றினால்?
என்ன வேணும்னு கேட்பேன். (பார்த்துங்க... எம்.பி. ஸீட் கேட்டுடப் போறார்)
அப்பா கலைஞர்... தலைவர் கலைஞர்?
ஆரம்பத்திலேர்ந்தே தலைவர் கலைஞர்தான் என் சாய்ஸ். (அவருக்கு யாரு சாய்ஸ்?)
காலையில் படிப்பது?
முரசொலி, அப்புறம் மற்ற தினசரி... (உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதுவீங்களோ!)
கலைஞர் வசனம்... டி.எம்.எஸ்.. பாட்டு?
கஞைர் வசனம் என்னைத் துடிப்பாக்கும். டி.எம்.எஸ். பாட்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
மதுரைக்கு வராம இருந்திருந்தீங்கன்னா?
நீங்க கேள்வி கேட்க மதுரைக்கு வந்திருக்கமாட்டீங்க.... (எங்க இருப்பீங்களோ அங்க வந்திருப்போம்)
தி.மு.க.,வில் நீங்க விழுதா... வேரா...?
வேராய் மாறும் விழுதாக இருக்க ஆசை. (ஏதாவது ஒண்ணு சொல்லுங்க சார்)
வீட்டுல மதுரை ஆட்சியா... சிதம்பரம் ஆட்சியா...?
மீனாட்சி ஆட்சிதான். (காந்தி மேடம் கங்கிராட்ஸ்)
யாரோட மேடைப் பேச்சு பிடிக்கும்?
அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர்.... (அப்ப ஸ்டாலினோட பேச்சுக்குக் கா'வா?)
அம்மா செல்லமா... அப்பா செல்லமா?
அம்மா செல்லம்.... (அச்சச்சோ லூ... லூ... லா...)
கலைஞர் மகனாக இருப்பதில் என்ன சங்கடம்?
சினிமா நடிகர் மாதிரி என்னை வேடிக்கை பார்க்கறது சங்கடந்தானே. (படத்துல நடிக்க வேண்டியதுதானே)
கயல்விழி அரசியல் வாரிசா?
என் வாரிசு. (நல்லதுங்க)
நீங்க கிங்கா... கிங் மேக்கரா?
தி.மு.க., வோட சோல்ஜர். (யுத்தம் யாரோட?)
பலிக்காத கனவு?
அப்படி எதுவும் இல்லை. (அப்ப எம்.பி. கனவும் பலிச்சிடும்)
பிடித்த கலர்?
மஞ்சள். (கறுப்பு - சிவப்பு வருத்தப்படுமே ஸார்)
விரும்பிப் படிக்கும் புத்தகம்?
நெஞ்சுக்கு நீதி: (வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைச்சா சரிதான்.)
நடிக்கும் ஆசை உண்டா?
எனக்கு எப்பவுமே நடிக்கத் தெரியாது. (என்ன ஸார் இப்படிச் சொல்லிட்டீங்க?)
காதலர் தினம் கொண்டாடலாமா?
கூடாது. (கூடாதுன்னா கூடாதுதான். நோ பேச்சு)
உங்கள் பலம்... பலவீனம்?
பலம் - கோபம். பலவீனம் - அதீத கோபம். (அழகில்லையே)
ஏன் மாடர்னா கண்ணாடி போடலை?

யாரும் இதுவரைக்கும் சொல்லலை. இனிமே பாருங்க. (கலைஞர் கண்ணாடியா?)

திருமங்கலம்?

தி.மு.க.,வின் பூஸ்ட் (அப்ப எம்.பி., எலெக்ஷன்?)


-- கல்கி

Anonymous said...

ஆனானப்பட்ட அழகிரியையே முதன்முதலாக லேசாக ஆட்டிப் படைத்திருக்கிறது தேமுதிகவின் வேட்பாளர் தேர்வு.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் விஜயகாந்த், ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தி, சாதி ரீதியாக ஒரு சலசலப்பை ஏற்படுத்துவார் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள் ? மதுரையில் தடாலடியாக கேப்டன் அறிவித்திருக்கும் வேட்பாளரால், அழகிரியின் ஆதரவாளர்கள் சற்று ஆடிப் போயிருப்பதாகக் கேள்வி.
தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் பரபரப்பு அதிகம் பரவிக்கிடக்கும் தொகுதி மதுரைதான். அந்தப் பரபரப்புக் காரணம், அழகிரி அங்கே போட்டியிடப்போகிறார் என்பதுதான்.
மதுரையில் இருபெரும் கூட்டணிகளும், யாரை நிறுத்தப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு எகிறி வந்த வேளையில், முதன் முதலில் அதிரடியாக ஒரு பெண் வேட்பாளரை அங்கே அறிவித்திருக்கிறது தேமுதிக ! வேட்பாளரின் பெயர் முத்துலட்சுமி. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மேலூர் தொகுதியைச் சேர்ந்த இவர், யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர்.
பெண் வேட்பாளர்: மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வரலாற்றில் இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் பெண் வேட்பாளரை நிறுத்தியதே இல்லை. இதுவரை இங்கு சில பெண்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டதோடு சரி. இந்த நிலையில், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான தேமுதிக இங்கே முதல் முறையாக ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தி பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. சீட் கிடைத்த மறுகணமே முத்துலட்சுமியும் ஜரூராக பிரச்சாரத்திற்கு முரசு கொட்ட ஆரம்பித்து விட்டார்.
மதுரையில் அழகிரி போன்ற ஹெவிவெயிட்கள் மோத இருக்கும் நிலையில், ஏன் இப்படி ஒரு பெண் வேட்பாளர் ? என்ற கேள்வியை தேமுதிக நிர்வாகி ஒருவரிடம் முன்வைத்தோம். '' இதில்தான் இருக்கிறது எங்கள் கேப்டனின் சாமர்த்தியம் '' என்றவர், அதுபற்றி விலாவாரியாக நம்மிடம் விளக்க ஆரம்பித்தார்.
''காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய கேப்டன், மறுநாள் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வை நடத்தினார். அப்போது அவர் அதிக நேரம் செலவிட்டது. மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குத்தான். அங்கே யாரை நிறுத்துவது என அவர் ஆற அமர திட்டமிட்டார்.
மதுரைத் தொகுதியில், அவர் கட்சியின் மாநிலப் பொருளாளரும், கேப்டனின் நெருங்கிய நண்பரும், மதுரை மக்களுக்கு நன்கு அறிமுகமானவருமான சுந்தர்ராஜனை நிறுத்துவார் என்றுதான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், எங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி முத்துலட்சுமியை வேட்பாளராக அறிவித்தபோது எங்களால் நம்ப முடியவில்லை. தமிழகத்தில் பெண்களை நிறுத்த எத்தனையோ தொகுதிகள் இருக்கும்போது, பயமும் பதற்றமும் நிறைந்த மதுரையில் போய் கேப்டன் ஏன் ஒரு பெண்ணை நிறுத்துகிறார் என்ற கேள்வி கூட பலரிடம் இருந்தது. ஆனால், இதில் தான் வித்தியாசமான தேர்தல் கணக்கைப் போட்டு விளையாட்டைத் தொடங்கியிருக்கிறார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியைப் பற்றி நன்கு தெரிந்தவர் கேப்டன். அவரது சொந்த ஊரே அதுதான் இல்லையா ? இந்நிலையில், மதுரையில் பெண் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது கேப்டன் முதலிலேயே எடுத்து விட்ட முடிவு. ஆனால், அந்தப் பெண் வேட்பாளர் யார் ? என்பதைத் தேர்வு செய்யத்தான் அவருக்குக் காலம், நேரம் ஆகியிருக்கிறது. அப்படி அவர் தேர்ந்தெடுத்து நிறுத்தியிருக்கும் பெண்தான் முத்துலட்சுமி. அவர் படித்தவர் என்பதுடன் கேப்டனின் ரசிகர் மன்றத்திலும் இருந்து, கட்சிக்காகவும் பாடுபட்டவர். சரியாகத்தான் கேப்டன் இவரைத் தேர்வு செய்திருக்கிறார். மதுரையில் அழகிரி போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு எதிராக அதிமுகவும் ஒரு ஆண் வேட்பாளரைத்தான் நிறுத்தும். இந்த நிலையில், நாங்களும் ஓர் ஆண் வேட்பாளரை நிறுத்தினால் அது பத்தோடுஒன்று பதினொன்று என ஆகியிருக்கும். இப்போது நீங்களே கூட ஏன் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்ற அளவுக்கு கேட்கிறீர்களே ? அந்த அளவுக்கு முத்துலட்சுமியின் தேர்வு பலரையும் பேச வைத்திருக்கிறது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை பெண் வாக்காளர்கள் அதிகம். அது மட்டுமல்லாமல், மதுரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களும் அதிகம். அவர்கள் கையில் சில லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. அந்த ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு விழவும் வாய்ப்புண்டு. அந்த ஓட்டுக்களைத் திசை திருப்ப ஒரு பெண் வேட்பாளரால்தான் முடியும் என கணக்கிட்டிருக்கிறார் கேப்டன்.
மதுரை தொகுதியில் முக்குலத்தோர் அதிகம் என்ற நிலையில், அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் கேப்டன் நிறுத்துவார் என நாங்கள் கூட எதிர்பார்த்தோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி யாதவர் சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமியை கேப்டன், வேட்பாளராக்கியிருக்கிறார். இது அவரது துணிச்சலுக்கு ஓர் அடையாளம்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் யாதவர் ஓட்டுக்கள் உள்ளன. இதன் மூலம் யாதவர் சமூகத்துக்கு அவர் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். இதன்மூலம் யாதவர் சமூகத்திலுள்ள திமுக வாக்கு வங்கியை கேப்டன் கவரப்போகிறார். அதுமட்டுமல்ல, கடந்த சட்டமன்ற்த தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் எந்தத் தொகுதியில் தேமுதிக குறைந்த ஓட்டு வாங்கியது என கேப்டன் ஆராய்ந்தபோது, மேலூரில்தான் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலூர் தொகுதியின் 15 சதவிகித வாக்காளர்கள் யாதவர்கள். எனவே, அவர்களது ஓட்டுக்களை இந்த முறை கவருவது மட்டுமன்றி வருங்காலத்தில் தொகுதியில் கட்சியை வளர்க்கும் நோக்கில்தான் கேப்டன் துல்லியமாக நடத்தி முடித்திருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை எம்.பி. தொகுதிக்குள் அடங்கிய மதுரை கிழக்குத் தொகுதியில்தான் தேமுதிக அதிகபட்சமாக இருபது சதவிகித வாக்குகளை வாங்கியது. அதன்பின் வந்த உள்ளாட்சித் தேர்தலில் அதைவிட அதிக ஓட்டு வாங்கியிருக்கிறோம். ஆகவே, ஏற்கனவே கிடைத்த ஓட்டுக்களுடன் இப்போது யாதவர் சமூக ஓட்டுகள், மற்ற பெண்களின் ஓட்டுகளும் சேர வாய்ப்புண்டு. இப்போது சொல்லுங்கள். கேப்டனின் வேட்பாளர் தேர்வு சூப்பர் இல்லையா ? இந்தத் தேர்தலில் கேப்டனின் பிரச்சாரமும் சேர்ந்து கொண்டால் நாங்கள் வெற்றி பெற யாரைக் கேட்க வேண்டும் ?'' என்று நீளமாகப் பேசி முடித்தார் அந்த நிர்வாகி.
''தேமுதிக பெண் வேட்பாளரை நிறுத்தியிருப்பது திமுகவுக்குப் பாதகமா ?''
''பெண் வேட்பாளரை விஜயகாந்த் நிறுத்தியிருப்பதால் பெண்களின் ஓட்டு அவருக்கு விழும் என்பது வேடிக்கையானது'' என்ற அவர்கள், ''கிலோ ஒரு ரூபாய் அரிசி, இலவச சமையல் வாயு, கலர் டிவி., மகப்பேறு நிதி என அரசின் பற்பல திட்டங்களால் அதிக அளவில் பயனடைந்திருப்பது பெண்கள்தான். அதோடு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சுழல்நிதி மூலம் சுமார் இரண்டு லட்சம் பெண்கள் பலனடைந்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி திமுகவின் தேர்தல் அலுவலகங்களை காந்தி அழகிரிதான் திறந்து வைக்கிறார். அப்படியிருக்க தேமுதிக பெண் வாக்காளர்களை வசீகரித்துவிடும் என நம்புவது முட்டாள்தனமானது'' என்றனர்.
'' உயர்கல்வித்துறை துணைத்தலைவராக இருக்கும் டாக்டர் ராமசாமி, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமச்சந்திரன், கடல்சார் ரங்கநாதன் எல்லாருமே திமுக அரசால் நியமிக்கப்பட்ட யாதவர்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் யாதவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவை மேயராக்கி அழகு பார்த்தவர் அண்ணன் அழகிரி. எனவே, யாதவ சமுதாய வாக்குகள் யாருக்கோ போய்விடும் என்பது கற்பனையின் உச்சம்'' என்கிறார் சந்திரசேகரன்.
என்றாலும்கூட, சாதி மற்றும் பெண் என்ற அடிப்படையில் கேப்டன், தேமுதிக வேட்பாளரைத் தேர்வு செய்திருக்கும் விதம் மதுரை திமுக வட்டாரத்தை சற்றே கிலியில் ஆழ்த்தியிருப்பதே நிஜம். இதெல்லாம் ஜூ ஜூபி என பெரும்பாலான திமுகவினர் கருதினாலும் தேமுதிக வேட்பாளர் தேர்வை அவ்வளவு சுலபத்தில் அலட்சியப்படுத்தி விட முடியாது என்ற கருத்து உடன்பிறப்புகளிடம் உள்ளது. முத்துலட்சுமி தேர்வு அழகிரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதால், அவர் மதுரையில் போட்டியிடுவது பற்றி மறுபரீசிலனை செய்வார் என்ற பேச்சும் இப்போது கிளம்பியிருக்கிறது.

- குமுதம் ரிப்போர்ட்டர் ( 05- 04- 2009)

Anonymous said...

3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அழகிரிமக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக வேட்பாளராக அழகிரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் நேர்காணலுக்காக சென்னை வந்திருந்த அவர் இன்று மதுரை திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்க திமுகவினர் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் மூன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

- Malaimalar 06.04.2008

Inba said...

Madurai is like Trisha..
Azhagiri is like Prakasharaj(Gangster)

who is that Vijay(Gilli)is going to save trisha???

Anonymous said...

Madurai is like Trisha..
Azhagiri is like Prakasharaj(Gangster)

who is that Vijay(Gilli)is going to save trisha???


கன்னியாகுமரியில் ஆரம்பித்து நேற்று திருச்சி வரை பிரச்சாரம் செய்த தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கூடிய கூட்டம் திமுக, அதிமுக என இரு தரப்பையுமே கிலியில் ஆழ்த்தியுள்ளது.

News from ThatsTamil

-- Did you get the answer?

Anonymous said...

got it!

கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வரை ரொம்ப பேரு "வெட்டியா" டைம் பாஸ் பண்ணறாங்க! அவங்க எல்லாம் இந்த "கடவுள்" கூட்டணி தலைவர் காட்டுற "வேடிக்கைய" பாத்தாங்களாம்!

இந்த மாதிரி சினிமாக்காரங்களாலதான் தமிழ் நாடு குட்டிச்சுவரா போய் இருக்கு. இந்த லக்ஷணத்துல இன்னும் ஒரு "வாய் சவடால்" தலைவர்.

கூப்புடுங்கப்ப நம்ம "கைப்புள்ளைய"! அட்லீஸ்ட் கொஞ்ச நேரம் வாய் விட்டாணும் சிரிக்கலாம்.

RK Anburaja said...

வணக்கம்.

அழகிரி அண்ணன் MP மட்டும் இல்லை. வருங்கால ’மத்திய அமைச்சர்’

அவரு நெனைச்சா என்ன வேனாலும் பண்ணுவார். 3லட்சம் என்ன! 3கோடி ஓட்டு வித்தியாசத்துல கூட ஜெயிப்பாரு!

நீங்க வேனா பாருங்க! 39-ம் தோத்தாலும் அண்ணன் மட்டும் ஜெயிப்பார்.

”பணம் பாதாளம் வரை பாயும்”


இவண் - அன்பு பிரபாகரன்

Inba said...

hello,

the correct answer is

the Gilli of Madurai..
mannin mainthen
Political
Superstar..
Su.Samy

saamakodanki said...

இந்த புள்ளை என்ன செய்தது? ஏன் இந்த புள்ளையை பார்த்து அனைவரும் மிரள வேண்டும்.

பால் வலியுற முகத்த பாத்து யாரும் பயப்படலாமா?