பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 19, 2009

நாளை கோபாலசாமி ஓய்வு பெறுகிறார்

தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி வரும் 20 ம் தேதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து,தற்போது தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையர் 21 ம் தேதி பொறுப்பை ஏற்க உள்ளார்.


இதனால் காலியாகும் தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.எஸ். சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் 1973 ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

கோபாலசாமி வரும் 20 ம் தேதி ஓய்வுபெற்றதும், நவீன் சாவ்லா 21 ம் தேதி புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார்.எஸ்.ஒய். குரேஷி ஏற்கனவே தேர்தல் ஆணையராக உள்ளார்.

இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த சம்பத், கடந்த ஜனவரி மாதம் எரிசக்தித் துறைக்கு மாற்றப்பட்டார்.59 வயதாகும் சம்பத், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தல் ஆணையப் பொறுப்புகளை கவனிப்பார் எனறு தெரிகிறது.

நேற்று கோபாலசாமி ஐ.பி.என்க்கு அளித்த பேட்டியில்..

பிலிபட் பகுதியில் வருண் பேச்சு அடங்கிய சி.டி.,யை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடை.ந்ததாகவும், டி.வி.,யில் வெளியிடப் பட்டதை விட, சி.டி.,யில் வருணின் பேச்சு மிகவும் மோசமாக இருந்ததாகவும், அந்த பேச்சு தன்னுடையது இல்லை என்று வருண் கூறுவது நம்பமுடியாதது என்றும் கோபாலசாமி தெரிவித்தார். மேலும், நவீன்சாவ்லா விவகாரம் குறித்து தெரிவித்து போது, வேலை நிமித்தமாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், நவீன்சாவ்லாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதியது குறித்து தான் எந்த வருத்தமும் அடையவில்லை. வேலை நிமித்தமாக மட்டுமே, நவீன்சாவ்லாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.


நேர்மையாக பணியாற்றிய கோபாலசாமிக்கு இட்லிவடை மற்றும் இட்லிவடை வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள்!

13 Comments:

மானஸ்தன் said...

அந்தப் பேட்டியில் அவர் ரயில்வே கேபினெட் அமைச்சரின் "கொலைவெறிப்" பேச்சையும் பற்றி சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்,


21-ஆம் தேதி முதல் ஒரு காங்கிரஸ் கைக்கூலி தேர்தல் ஆணையர் எனும்போது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.


பின் குறிப்பு:
மஞ்சள் கமெண்ட்-இல் "இட்லிவடை மற்றும் இட்லிவடை வாசகர்கள் சார்பில் என்று போடவும்".

R.Gopi said...

இட்லிவடை

மானஸ்தன் சொல்ற மாதிரி, நல்லவர்கள் வாழ்த்தும் வாய்ப்பை எங்களுக்கும் கொடுக்கும் விதமாக,

இட்லிவடை மற்றும் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்

என்று போடலாம். ஏன்னா, "தல"யோட சேர்ந்து இவ்ளோ நாள் நம்ம அரசியல் பண்ணினாலும், இது போன்ற ஒன்று, ரெண்டு வாழ்த்தாவது, "உள்குத்து" இல்லாத "நுண்ணரசியல்" இல்லாத, நிஜ வாழ்த்து சொல்லுவோம்.

அப்புறம் தான் இருக்கவே இருக்கு, "தல" ஸ்டைல் அரசியல், அத தொடங்குவோம்.

மானஸ்தன் said...

a relevant news item.

சோனியா மீதான குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
புதுதில்லி,

ஏப்.19: வெளிநாட்டு விருது ஒன்றைப் பெற்றதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

சோனியா காந்தி நவம்பர் 2006ல் பெல்ஜியம் சென்றபோது அந்நாட்டின் உயரிய விருதைப் பெற்றது தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவது அவசியம் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கருத்து தெரிவித்திருந்தார். எனினும் கோபாலசுவாமிக்கு அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்க உள்ள நவீன் சாவ்லா மற்றும் மற்றொரு தேர்தல் ஆணையர் குரேஷி ஆகியோர் விசாரணை முடிந்துவிட்டது என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையர்களின் கருத்துக்கள் இறுதி முடிவெடுப்பதற்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பான்மை அடிப்படையில் சோனியாவை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரிப்பார் எனத் தெரிகிறது.

நன்றி: தினமணி

விசாரணை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தவர் நாளை ஓய்வு பெறப்போகும் இன்றைய தேர்தல் ஆணையர் திரு கோபால்ஸ்வாமி.

விசாரணை எப்போது யாரால் முடிக்கப் பட்டது? தேர்தல் ஆணையர்களின் கருத்துக்கள் என்றால் அதில் திருகோபால்ஸ்வாமி அவர்களின் கருத்தும் அடக்கமா? இல்லை, இது காங்கிரசால் பயன் பெற்றுக்கொண்டு இருக்கும் "நவீன பாவலா" வின் விளையாட்டா? "பெரும்பான்மை" என்ற சொல்லை வைத்து இந்த நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு அளவே இல்லையா? மக்கள் நல்ல தீர்ப்பை எழுதட்டும்.

neysamy said...

நார்மலாக வரவேண்டிய ஊதியஉயர்வு , பதவி உயர்வு , போனஸ் , ரேஷன் அரிசி ஆகியவற்றை தடுத்த கோபால்சாமி கோட்டம் இனி இருக்காது. மிகவும் மகிழ்சியான செய்தி.

neysamy said...

திருமங்கலம் தேர்தலை காஷ்மீர் தேர்தலுடன் இணைத்து சொன்ன கோபால்சாமி கொட்டம் அடங்கியது. நரேஷ் குப்தாவும் மூட்டை கட்டப்பட வேண்டியவர்.

அமர் said...

இட்லிவடை மற்றும் இட்லிவடை வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள் என்று தெரிவித்திருப்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறேன். இட்லி வடை சார்பில் வாழ்த்துகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.

மானஸ்தன் said...

///நார்மலாக வரவேண்டிய ஊதியஉயர்வு , பதவி உயர்வு , போனஸ் , ரேஷன் அரிசி ஆகியவற்றை தடுத்த கோபால்சாமி கோட்டம் இனி இருக்காது. மிகவும் மகிழ்சியான செய்தி.///

+++++++++
திரு நெய்-(வேலி)-சாமி அவர்களே!
அவர் என்னங்க பண்ணாரு? சட்டத்துல என்ன சொல்லி இருக்கோ அத "implement" பண்ண சொல்லி இருப்பாரு! அதுக்கு போயி அவர நீங்க "சர்வாதிகாரி" லெவெல்ல சித்தரிக்கறது சரியா? அவர் சட்டத்துல இல்லாதத தேர்தல் சமயங்களில் சொல்லி இருந்தால் நம்ம இரு "பெரிய" கழகத் தலைவரும் / தலைவியும் - அவர்களின் ஜால்ரா கூட்டணி "சம்சாகளும்" குட்டித் தலைகளும் சும்மா இருந்திருப்பார்களா? சிந்தியுங்கள்!

என்னமோ போங்க. நாட்டுல எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் போன்ற (!!) நல்லவர்களின் விருப்பம். உங்களுக்கு சந்தோஷம்னா சந்தோஷம்தான்!

நிச்சயமாக இந்த நாராச "அரசியல் வியாதிகளிடம்" இருந்து விலகிச் செல்லும் அவருக்கும் கண்டிப்பாக சந்தோஷமாகதான் இருக்கும் ("என்று நம்புகிறேன்"!)!!

மானஸ்தன் said...

///திருமங்கலம் தேர்தலை காஷ்மீர் தேர்தலுடன் இணைத்து சொன்ன கோபால்சாமி கொட்டம் அடங்கியது.///

என்ன சொல்ல வரீங்க? காஷ்மீரை அவர் "insult" பண்ணிவிட்டார் என்றா? பரவா இல்லை, ஏதோ "அறியாமல்" சொல்லி விட்டார். விட்டு விடுங்கள்!


///நரேஷ் குப்தாவும் மூட்டை கட்டப்பட வேண்டியவர்.///
பாத்துங்க. தென் மாவட்டங்களில் "ஆளுக்கு மூட்டை கட்டுவது" என்றால் அது ரொம்ப "dangerous-statement".


ஏற்கனவே தமிழக முதல்வர் அவர்கள், திரு நரேஷ் குப்தா "state-government" இல் இருந்து சம்பளம் வாங்கும் அதிகாரி, மீண்டும் தமிழக அரசு பணிக்குத் திரும்ப வர வேண்டி இருக்கும் என்றெல்லாம் "friendly"யாக சொல்லிவிட்டார்!

அதற்கு மேலும் நீங்கள் வேறு எதற்காக இப்படி போட்டுத் தாக்குகிறீர்கள்?

கொடும்பாவி-Kodumpavi said...

பிரபாகரன் என் ‘தோஸ்து' அப்படின்னு முதல்வர் அறிக்கை வுட்டுருக்காரு.. காங்கரஸ்காரர்கள் காதில் ‘ங்கொய்ங்'ன்னு சத்தம் கேக்குதாமே யாரோ செவுட்டுல ப்ளார்னு அறைஞ்சாப்ல.. இனா வானா என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.. காரம் கொஞ்சம் தூக்கல்ல்வே இருக்கட்டும். (நா மொளகாப்பொடிய சொன்னேன்!)

Anonymous said...

கோபாலசாமியை தேர்தல் நடக்கும் பொழுது எப்படி ஓய்வு பெற அனுமதிக்கிறார்கள்.வேண்டுமென்றே திட்டமிட்டு இத்தாலிய ராணியின் கைக்கூலியான கிறுத்துவ மிஷநரி ஏஜெண்டான சாவ்லாவை காங்கிரஸ் அரசு திட்டமிட்டு தேர்தல் கமிஷனுக்குள் திணித்திருக்கிறது. அடுத்து நடை பெறப் போகும் முக்கியமான தேர்தல்களின் என்ன தில்லு முல்லும் செய்து காங்கிரசை இவன் ஜெயிக்க வைப்பான். ஏற்கனவே ப்ரோக்ராம் செய்யப் பட்ட வோட்டிங் மெஷின்களை இவன் இடம் மாற்ற இருப்பதாக சு சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். சாவ்லாவின் தலமையில் நடக்கப் போகும் தேர்தல் ஒரு மாபெரும் மோசடி தேர்தலாகவே இருக்கப் போகிறது. ஒரு ஊழல் பேர்வழியை இந்த முக்கியமான பதவியில் இந்த முக்கியமான தருணத்தில் அமர்த்தியிருப்பதன் பின்ணணியில் ஒரு பயங்கரமான சதி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்த காங்கிரஸ் எதிர்பாராமல் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப் படும் பொழுதும் வேறு பல சிக்கல்களை இவன் பா ஜ கவுக்கு அளிக்கும் பொழுதும் இவனது உண்மை முகம் வெளிப்படும். ஏற்கனவே இட்லி வடை இந்த நவீன் சாவ்லாவின் முள்ளுமாரித்தனங்களை கட்டுரையாகப் போட்டிருக்கிறார். அதையும் மீள்பதிவு செய்யுங்கள் இட்லி வடை அவர்களே

Anonymous said...

முஸ்லிம்கள் தாடி வைக்கக்கூடாது என்று சொன்ன புண்ணியவான் நீதிபதிகள் தேர்தல் ஆணையர் என்ற மதச்சார்பற்ற நடுவண் பணியில் இருக்கும் கோபாலசாமிகள் நெற்றியில் நாமமோ பட்டையோ போட்டுக்கப்படாது என்று சொல்லவில்லையே ஏன்?

neysamy said...

கோபால்சாமி இன்னமும் சொல்லவேண்டியவை. ( கற்பனை)
1. புது பேருந்து ஏதும் இயக்க கூடாது. ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த பேருந்துதான் ஓட வேண்டும்.
எல்லா பேருந்தும் என்ஜினை ஸ்டாப் செய்யாமல் ஓட்ட வேண்டும் . பணிமனைக்கு வந்தபின்னும் எஞ்சின் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி யாராவது என்ஜினை ஸ்டாப் செய்துவிட்டால் அந்த பேருந்தை தேர்தல் முடிந்தபின் தான் ஸ்டார்ட் பண்ணவேண்டும் .
2. ரேஷன் கடையில் அரிசி போடக்கூடாது. வேண்டுமானால் சென்றமாத அரிசி வாங்காமல் இருந்தால் வாங்கிகொள்ளலாம்.
3.ஹோட்டலில் தேர்தல் முடியும் வரை உணவு கிடையாது. வேண்டுமானால் பழைய சாதம் , பழைய மீந்த சாப்பாட்டை தரலாம்.
4. பேருந்து ஓட்டக்கூடாது.வேண்டுமானால் ஜனங்களை ஏற்றிக்கொண்டு , பலமானவர்களை விட்டு தள்ள சொல்லலாம். அப்படியே ஊருக்கு போக வேண்டும்.
5. மருத்துவமனை இயங்கக்கூடாது. வேண்டுமானால் போஸ்ட் மார்டம் பண்ணலாம்.
6. எந்த பேப்பரிலும் தேர்தல் செய்தி போடக்கூடாது. வேண்டுமானால் இந்தியா சுதந்திரமடையும் முன்பு உள்ள செய்திகள போடலாம்.
7. மற்றபடி கொலை,கொள்ளை,கற்பழிப்பு , விபத்து வெள்ளம் புயல் செய்திகளை போடலாம். ஆனால் அதை கண்டு பிடித்ததையோ அல்லது நிவாரண உதவி செய்ததையோ போடக்கூடாது.
8.திருமணம் செய்யலாம். ஆனால் தேர்தல் முடியும் வரை குடும்பம் நடத்தக்கூடாது.

neysamy said...

முஸ்லிம்கள் தாடி வைக்கக்கூடாது என்று சொன்ன புண்ணியவான் நீதிபதிகள், தேர்தல் ஆணையர் என்ற மதச்சார்பற்ற நடுவண் பணியில் இருக்கும் கோபாலசாமிகள் நெற்றியில் நாமமோ, பட்டையோ போட்டுக்கப்படாது என்று சொல்லவில்லையே ஏன்?

சொந்தசெலவில் ஊருக்கு கோவிலுக்கு வரும் போது திருமங்கலம் தேர்தலை பற்றி எப்படி கருத்து சொல்லலாம்?. திருமங்கலம் தேர்தல் காஷ்மீர் தேர்தலைவிட மோசம் என்றது எப்படி நியாயம்?

அவரது காஷ்மீர் பற்றிய அறிவு குறைவு என்பது தெரிகிறது.