பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 20, 2009

என்டிடிவி திமுகவுக்கு எதிரான டிவி - கருணாநிதி

என்டிடிவிக்கு நேற்று பேட்டி அளித்த முதலமைச்சர் கருணாநிதி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; அவர் எனது நண்பர் என்று கூறியிருந்தார். விடுதலைப்புலிகளின் லட்சியங் கள் உன்னதமானவை என்றும், தமிழீழம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் போராடி வருவதாகவும் கருணாநிதி தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்; எனவே அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகள் என்று முதலமைச்சரின் கருத்துக்களுக்கு எதிராக கபில் சிபல் கூறியிருந்தார்.

இன்று முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி கீழே.


கேள்வி: என்டிடிவியில் பிரபாகரன் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றி செய்திகள் வெளியாகி உள்ளனவே?
பதில்: என்டிடிவியில் நான் கூறிய கருத்துக்களை அவர்கள் முழுமையாக வெளியிடவில்லை. நான் கூறிய செய்தி திரித்துக் கூறப்பட்டுள்ளது. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு எதிரான டிவி.

கே: பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்கி விட்டதாகவும், அவர் எந்த நிலையிலும் பிடிபடலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை பிரபாகரன் இறந்தால் அதனை எப்படி கருதுவீர்கள்?

ப: யார் இறந்தாலும் நான் வருத்தப்படுவேன்.

கே: ராஜீவ் காந்தியை நீங்கள் மறந்து விட்டீர்களா?
ப: அவரை நாங்கள் எப்போதும் மறக்கவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய நினைவிடம் அமைக்க நிலம் வழங்கியிருக்கிறோம். ஐ.டி. சாலைக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்டியிருக்கிறோம். எனவே அவரை நாங்கள் மறக்கவில்லை.

கே: விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல என்று நீங்கள் கூறினீர்களா?
ப: அவர்கள் நக்சலைட்டுகளை போல தீவிரவாத இயக்கமாக உருவாகவில்லை. ஒரு விடுதலை இயக்கமாக அது ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் அது தீவிரவாத இயக்கமாக மாறி விட்டது என்றுதான் நான் கூறினேன்.
என்னுடைய இந்த கருத்துக்களை மாற்றி வெளியிட்டு தேவையற்ற பிரச்சனைகளை என்டிடிவி உருவாக்கி இருக்கிறது.

கே: இலங்கையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வலியுறுத்துவீர்களா?
ப: போரை நிறுத்தும் வரை அதனை கேட்டுக் கொண்டே இருப்போம்.
கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா?
ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.

கே: அதிமுகவுடன் 6 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. ஆனால் திமுக கூட்டணியில் 3 கட்சிகள்தான் உள்ளன. எனவே திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது.
ப: நிச்சயமாக 30 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம். விறகு கட்டைகள் 10 கட்டைகளாக சேர்ந்து எரியும். ஆனால் ஒரு விளக்கு எரிந்தாலும் போதும். வீட்டுக்கு தேவையான வெளிச்சம் அதில் கிடைக்கும்.

எச்சரிக்கை: இது கற்பனை பேட்டி இல்லை.

31 Comments:

padukali said...

ஆஹா சூப்பர் மட்டேராச்சே இது

மஞ்சள் கமெண்ட் பிரமாண்டமான பிரமாதம்

விறகு கட்டை, விளக்கு என்று மேடபோர் போட்டு தாக்குது.

padukali said...

யார் இறந்தாலும் வருத்தப்படும் நல மனம் படைத்த இவர் வீரப்பன் இறந்த பொது அழுதாரோ....

நினைவிடம் வைத்தால் தான், ரோட்டுக்கு பெயர் வைத்தால் தான் அவர் நினைப்பு இருக்கும் . இல்லாமல் அவர் நினைப்பு இல்லை என்ற கொள்கை விளக்கம் சூப்பர்

ஜெயலலிதா இல்லை என்றல் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல சிரமம் போல தெரிகிறது

சித்து said...

இவர் அடிக்கும் கூத்தில் இட்லிவடை இன்று வந்த ஒரு முக்கிய செய்திய பற்றி மறந்து விட்டதுபோலும். http://www.breakingnewsonline.net/2009/04/election-commission-rejects-plea-to.html இதை பற்றியும் எழுதுங்கள், நம் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்போம். அதைவிட நம்மால் வேறு என்னத்த செய்ய முடியும்??

டன்மானடமிழன் said...

பகுத்தறிவு பரதேசிகளுக்கு
திராவிட திருடர்களுக்கும்
மலத்தை தின்று வளர்ந்தவர்கள்
எனவே
அவர்களுக்கு
அசிங்கம், அவமானம் என்கிற
வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது.

இவர்களை பற்றிய பதிவுகளுக்கு
பதிலாக
சாருவின் கு(பு)ட்டி கதைகளை
போடுங்கள்
சும்மா டைமாவது பாஸ் ஆகும்...

Anonymous said...

முடியலை !!! போதும்.

வாழவந்தான் said...

//
அவர்கள் நக்சலைட்டுகளை போல தீவிரவாத இயக்கமாக உருவாகவில்லை. ஒரு விடுதலை இயக்கமாக அது ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் அது தீவிரவாத இயக்கமாக மாறி விட்டது
//
நக்சலைட் ஆதரவாளர்களை கேட்டால் அது ஒரு விடுதலை புரட்சிக்கான இயக்கமா ஆரம்பிக்கப்பட்டு தீவிரவாத இயக்கமா மாரிடிச்சுனு சொல்லுவாங்க. சரி சாமி, தங்க ஊசின்னு கண்ணுலையா குத்திக்கமுடியும்

//
போரை நிறுத்தும் வரை அதனை கேட்டுக் கொண்டே இருப்போம்.
//
அப்படிபோடு! கடைசிவரைக்கும் அறிக்கை, பள்ளிகூடத்துல பரீட்சை பேபரை வாங்கி வெக்கிறமாதிரி ராஜினாமா வாங்கி வெச்சிகறது, அதுவும் இல்லைனா ரோட்ட அடச்சு மனித சங்கிலி, வளையலுனு சீனு போடுறதுதான், அங்க எத்தினி பேரு செத்தா என்ன, அவங்க பேரசொல்லி ரெண்டு சீட்டு ஜெயிச்சா போதும்.
//
ஆனால் ஒரு விளக்கு எரிந்தாலும் போதும். வீட்டுக்கு தேவையான வெளிச்சம் அதில் கிடைக்கும்
//
வீட்டை கொளுத்துரதுக்கும் ஒரு விளக்கு திரி போதும், மக்களே அதுவும் இது சிகப்பு விளக்கு(அபாய அறிகுறி)

பிகு: தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் இவளோ தரம்கெட்டுபோய் வோட்டுபோருக்க வேண்டாம்.

R.Gopi said...

இவர் ("தல") அடிக்கிற அந்தர் பல்டிய பார்த்தால், இட்லிவடை சொன்ன குரங்கு கூட வெட்கம் கொள்ளும் அளவுக்கு இருக்கிறது.

இவர் அதை சொன்னார், பின், பிரச்சினை என்றதும், திரித்து கூறி விட்டதாக அழுது, புலம்பி வேறு மாதிரி சொன்னார். இதை தொடர்ந்து பார்த்து, படித்து, பதிவிட்டு, நாம் எல்லோரும் ஒரு நாள் கின்னஸ் சாதனை புரிய போகிறோம். அந்த சாதனை பதிவில் கின்னஸ் புத்தகம், பின்வருமாறு குறிப்பெழுதும்.

"ஒண்ணுமே இல்லாத வேத்துவேட்டை ("தல"யை) பற்றி தமிழ்நாடு என்ற ஊரில், இவ்வளவு லட்சம் பேர் இன்னென்ன சொன்னார்கள். ஆனாலும், அந்த வெத்துவேட்டு உலக பணக்காரர்கள் வரிசையின் முதல் 500 இடங்களுக்குள் இருக்கிறது".

SathyaRam said...

So our man has said Naxalites are terrorists. What are the chances of him disowning it tomorrow?

Boston Bala said...

---எச்சரிக்கை: இது கற்பனை பேட்டி இல்லை. ---:) :))

M Arunachalam said...

MK seems to be totally confused & out of his mind.

To out-do Jaya on SL Tamils issue yesterday he gave that NDTV interview wherein he said LTTE was not a terrorist organisation & Prabakaran was his friend. Today, to placate Sonia Cong. as if they will withdraw their support to his minority TN Govt., he has back-tracked his previous statement & now saying NDTV has mis-quoted him since they are anti-DMK.

I think he is suffering from MPSD i.e. Multiple Political Stance Dis-order before election time. This disease will go off after May 13 & after May 16, it will take another form which is called MOSD i.e. Multiple-type Oppaari Stunt Dis-order.

This may even come on Sun TV as a full length sob serial. Sun TV will soon start telecasting its trailer - its title is "AYYO AYYO KOLRAANGALE".

Watch & enjoy. Don't take him seriously.

Inba said...

போன தேர்தல நாற்பதும் நமதே
இந்த தேர்தல முப்பது போதுமா?

நேற்று என்டிடிவிலே பேசினது "தல" இல்லை
அது கிராபிக்ஸ்.. ..அம்மாவோடே சதி..
இதுக்கு பின்னாடி எந்திரன் டைரக்டர் சங்கர் இருக்காரு

Anonymous said...

This old cunning fox has gone mad...any one having an opinion not in line with his views are his opponents as for as he is concerned. If NDTV is an opponent why did he agree for the interview in the first place....GOD pls take him away as soon as possible

Krish said...

/// விறகு கட்டைகள் 10 கட்டைகளாக சேர்ந்து எரியும். ஆனால் ஒரு விளக்கு எரிந்தாலும் போதும். வீட்டுக்கு தேவையான வெளிச்சம் அதில் கிடைக்கும்.////
:-D clarify!

Anonymous said...

"எச்சரிக்கை: இது கற்பனை பேட்டி இல்லை. "

God man.. I coudnt control my laughter after reading this..

on the contrary if you have tagged

Echarikkai: Ethu karpanai petti

then we would have taken aback coz muka is capable of bultis big time(It is in his blood)

Anonymous said...

இட்லி வடை தயவு செய்து பெருஸை பற்றிய செய்தியை குறைத்து விடுமாறு கேட்டு கொள்கிறேன்... இவர திட்ட தொல்காப்பியர் வர வேண்டும், சும்மா கடியை போடாதீர்கள்... மானங்கெட்ட இவர்களை எவ்வளவுதான் திட்டுவது? ஏதாவது நல்ல டாபிக் இருந்தால் பதிவு செய்வது உசிதம்!!! We are saturated to the maximum...........

Mani-bahrain said...

//கே: இலங்கையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வலியுறுத்துவீர்களா?
ப: போரை நிறுத்தும் வரை அதனை கேட்டுக் கொண்டே இருப்போம்.//

ஆனால் போரை நிறுத்த விட மாட்டார்.!!!

தண்டோரா said...

Iam expecting a parisu from idli vadai which was announced some time back for my comment.athuvum election arivippu maathirithaana?

IdlyVadai said...

//Iam expecting a parisu from idli vadai which was announced some time back for my comment.athuvum election arivippu maathirithaana?//


Sorry. I will be sending them this week. Operational issues :-)

Siraj said...

NDTV-க்கு பேட்டி கொடுக்கும்போது மட்டும் அது DMK-க்கு எதிரான TV என தெரியவில்லயா தலைவரே.....அப்புறம் ஏன் கொடுத்தீர்கள் அப்பு...?

Anonymous said...

///கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா?
ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.///


"சாக்கடையிலும் மோசமான" எண்ணங்கள் கொண்ட "முத்தமிழ் அறிஞர்" "தன்மானத் தமிழ்க் காவலர்" பயன்படுத்தி உள்ள வார்த்தை "அடிவருடி".

வெட்கக்கேடு. இந்த அளவுக்கு "unparliamentary" வார்த்தைகளைப் பயன்படுத்தி "derogatory" remarks செய்து இவர் தாழ்ந்து கொண்டே செல்வதை நிறுத்தினால் நல்லது.

Raj said...

இட்ல்ய்வடையாரே,

தயவு பண்ணி இந்த மாதிரி செய்தி போடறதை நிறுத்தாதீர் ! "
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்" என்பது பெரிசுகளின் அட்வைஸ் !!

so, please keep them coming.

Anonymous said...

/// விறகு கட்டைகள் 10 கட்டைகளாக சேர்ந்து எரியும். ஆனால் ஒரு விளக்கு எரிந்தாலும் போதும். வீட்டுக்கு தேவையான வெளிச்சம் அதில் கிடைக்கும்.////
:-D clarify!

அதாவது ஒரே ஒரு எம் பி (விறகு) இருந்தாலே போதும், வீட்டுக்குத் தேவையான வெளிச்சம் (பணம்) கிடைக்கும் என்பதே அதன் பொருள். ஏதோ, இந்த சிறுவனின் சிற்றறிவுக்கு எட்டியது, பிழையிருந்தால் "தல" மன்னிப்பாராக!

UMA said...

super.Well done Karunanidhi. முள்ளை முள்ளால் தான் எடுக்கணும். சுயநலனுக்காக கூட்டு சேர்ந்த எதிரும் புதிருமான ( இலங்கை தமிழ் நலன் / LTTE ) ஜெயா , ராமதாஸ் , வைகோ , நெடுமாறனை சமாளிக்க கலைஞருக்கு நல்ல வழி கிடைத்துள்ளது. இப்போது அந்த பொருந்தாத கூட்டணி என்ன செய்யும்? டப்பா கிழிண்டுடும்.

Anonymous said...

==விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். நான் தீவிரவாதி அல்ல; எனவே, அவர் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்===

நல்ல லாஜிக். சரி. இவர் நண்பர் பிரபாகரன். இவர் முத்தமிழ் அறிஞர். இவருடைய லாஜிக்கின்படி பிரபாகரனும் முத்தமிழ் அறிஞர்!!!

Anonymous said...

டிவியில் வந்தது இவர் இல்லை. டி வி க்காரங்க கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பண்ணிட்டாங்க.

Anonymous said...

என் டி டி விக்கு வெக்கப் போறார் ஆப்பு, ஒரு கவிதை எழுதி..அதவிட பெரிய தண்டனை கொடுக்க முடியாது..

Anonymous said...

பாருங்களேன்....என் டி டி விக்கு நாளைக்கு பூணூல் போட்டு விடுவார் கலைஞர். நாயுடு பூணூல் இல்லை: நாயக்கர் பூணூல் இல்லை. ஒன்லி அய்யர் பூணூல் தான்.. அதில்தான் வருமானம் அதிகம் இருக்குதாம்.

Anonymous said...

கலைஞர் பதில்: என்டிடிவியில் நான் கூறிய கருத்துக்களை அவர்கள் முழுமையாக வெளியிடவில்லை. நான் கூறிய செய்தி திரித்துக் கூறப்பட்டுள்ளது. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு எதிரான டிவி.===

சரிங்க.. நீங்க தான் முழுமையாக வெளியிடுங்களேன்...
ஆமாம், கேஸ், கீஸ் போடுங்களேன். அவங்களுக்கு புத்தி வரும்

கிரி said...

//எச்சரிக்கை: இது கற்பனை பேட்டி இல்லை.//

;-)

Anonymous said...

MK kavidai on communist leader Late Mr Baladandayutham is highly condemnable. He will not hesitate to criticise in worst possible words all leaders even though they are not alive. what a shame. MK has totally gone mad. He should live for 125 years and see in his lifetime, the decline of his party, his sons empire and decline of the power of his family. and distribution of his family property and wealth to the ordinary samaniyan of tamil nadu.

Anonymous said...

yaar yarayolam anda paazha pona tsunami thookichu...indha "pagutharivu" kezhatha mattum thookama vitruche...