பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 02, 2009

வடம் - வடாம் ஆகும் மர்மம்

இந்த செய்தி நிஜமாக வயிற்றை கலக்குகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணிடம் இருந்து நகைகளை திருடி வந்த திருடனை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். பிடித்து விசாரித்ததில் இவன் பல பெண்களிடம் தன் கைவரிசையை காண்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் ஒரு பெண்ணிடம் கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி, மற்றும் பையில் 50 சவரன் மதிப்புள்ள தங்க வடம் சங்கலிகள் இருந்தன. டீ சாப்பிட்ட்டுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது பையை காணவில்லை. அதே போல் கழுத்தில் இருந்த இரட்டை வடம் சங்கலி காணவில்லை. பேருந்து நிலையம் முழுவதும் தேடி கண்டுபிடிக்க முடியாமல், பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் செய்தார்.

உடனடியாக உதவிக் கமிஷனர் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பேருந்து நிலையம் அருகே கிடந்த பையை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அதனுள் இருந்த நகைகள் காணாமல் போயிருந்தது. பதிலுக்கு நகைகள் மாதிரி வேறு ஏதோ வஸ்து இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது. இவை என்ன என்று எல்லோரும் குழம்பிபோய் இருக்கிறார்கள். சாம்பிள் எடுத்து ஆய்வுக்காக வடநாட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த நகைகளை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளார்கள்.

அதன் படம் கீழே.போலீசார் அந்த பகுதி முழுவதும் தற்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களே வெய்ய காலத்தில் ஜாக்கிரதையா இருங்க. வடம் வடாம் ஆகும்

மேலும் இது போல செய்திகள், படங்கள் இங்கே

பிகு: அந்த போட்டோ பார்த்தா போலீஸ் டிஸ்பிளே பண்ணுவாங்களே அதே மாதிரி இருக்கு. எதற்கும் படத்தை எடுத்தவருக்கு நன்றி என்று போடுகிறேன். அப்பறம் போலீஸ் கேஸ் ஆகிவிட போகிறது.


9 Comments:

vikram said...

appo whatever shown in the photo - ellam "covering" nagaya?

Anonymous said...

இந்த செய்தி நிஜமாக வயிற்றை கலக்குகிறது.


கலக்காம வேற என்ன பண்ணும்? அந்த வடாத்துல நன்னா தூக்கலா மிளகாய் சாறு விட்டுருப்பா!! போயி விஜாரிச்சு பாருங்க! அப்டியே ஒரு "entroquinol" சாப்டுங்க! எல்லாம் சரி "ஆயி"டும்!!!

Anonymous said...

ஒரே ஒரு கமெண்ட்டுதானா?? என்ன கொடுமை சரவணன் இது!

K.Ramachandran said...

Very interesting post !! Let us convert our wives' jewels to delicious dishes and enjoy a gr8 meal :-)).

மடல்காரன்_MadalKaran said...

புளிச்சு போன தேர்தல் செய்திக்கு நடுவே கொஞ்சம் இதமா ஒரு நொறுக்ஸ்.!

Natrajan said...

ஏன் தல - உங்கள என்ன தாளிச்சாலும் உறைக்க மாட்டேங்குது - எதாவது வேண்டுதலா
நடராஜன்

மெனக்கெட்டு said...

இட்லி வடையில் டாப் 10 பதிவுகள்
(03/04/09) இது வரை


மொத்த பதிவுகள் - 2396 அடேந்தாத்தா!

(அடேங்கப்பா!.. வை விட பெரிசு!)


அரசியல் - 668
செய்தி - 276
செய்திகள் - 238 ?
சினிமா - 206
நகைச்சுவை - 161
பேட்டி - 128
பத்திரிக்கை - 127
கட்டுரை - 121
அறிக்கை - 72
செய்தி விமர்சனம் - 68

எலெக்ஷன் புள்ளிவிவரம் மாதிரி இட்லி வடை புள்ளிவிவரம்.

ஹி ஹி சும்மா மெனக்கெட்டு பாத்தது.

vasans valaipookkal said...

வடம் வடமாய் சங்கிலி போனது
குடம் குடமாய் கண்ணீ ர் ஆனது!

லவ்டேல் மேடி said...

நா நெனைக்குறேனுங்கோ தம்பி ......... இந்த திருட்டுகெல்லாம் காரணம் தி. மு . க தலைவரு ஐயா கலைஞர்தான்னு ..... !!! அவுரு ஒர்ருவாய்க்கு அருசி போட்டந்துனாலதேன் வடாகம் போட்டு எமாத்துராங்கோ.......!!!!!!