பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 16, 2009

ஏன் இந்த தடுமாற்றம் ?

ஜெயலலிதா *

மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். சந்திரன் மாற்றப்பட்டு, எஸ்.எம்.கே. முகமது அலி ஜின்னா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
( அ.தி.மு.க. கூட்டணியில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற விமர்சனம் காரணமாக இருக்கலாம்)

ஏற்கெனவே பெரம்பலூர் தொகுதி, திருவள்ளூர் தொகுதியில் 2 முறை வேட்பாளர்களை மாற்றிய அ.தி.மு.க. தலைமை, விழுப்புரம் தொகுதி வேட்பாளரையும் மாற்றியது.
*
நாள்தோரும் பல வித மாற்றங்களுக்கு உட்பட்டது

23 Comments:

R.Gopi said...

தேர்தலுக்கு முன்னாடி நாள் வரைக்கும், 40 தொகுதி வேட்பாளர்களுக்கும், வயத்துல கிலோ கணக்குல புளி கரைப்பார் ஜெயலலிதா!!

எஸ்.எஸ்.சந்திரன் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வு தேவைப்படுவதால், அவரை மாற்றியதாக, செய்தி வந்தது.

இது போன்ற செய்திகளில் நிறைய "உள்குத்து" எப்போதும் இருக்கிறது.

(இந்த ராதாரவி, எஸ்.வி.சேகர், ராமராஜன் இவங்கள பத்தியும் ஏதாவது செய்தி இருந்தா சொல்றது).

SathyaRam said...

It shows bad home work. If someone cannot finalize a candidate (they had 5 years to do this) then how can they govern the state properly?

again there are not much hope in TN. So better to vote this indecisive stuff than the family/cine politics.

Anonymous said...

சென்னை, மார்ச் 31 (டிஎன்எஸ்)

பிரபல நடிகரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகர், அண்ணா திமுகவினால் ஓரம் கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கத் தலைமை அழைப்பதில்லை. இதனிடையில் எஸ். வி. சேகர், 2009 மார்ச் 30 அன்று தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, பிராமணர்களூக்கு 7 சதவிகித இட ஒடுக்கீடு வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவரை 'வெற்றிப் படிகள்' என்ற வலைப் பதிவை நடத்தி வரும் பிரைம்பாய்ன்ட் சீனிவாசன், தொலைபேசி மூலமாகப் பேட்டி எடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் திடீரென்று ஏன் பிராமணர்களுக்காக 7 சதவிகித ஒதுக்கீடு கேட்டார், அதிமுக அவரை ஓரம் கட்டுவதன் பின்னணி, ஜெயலலிதாவின் முரண்பாடான நிலை, அண்ணா திமுகவில் ஓரம் கட்டப்ட்ட நிலையில் அவரைக் கட்சி வெளியேற்றினாலோ அல்லது அவராகவே வெளி வந்தாலோ அவரது எதிர்கால அரசியல் நிலை, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் முதலமைச்சர் கனவுடன் அலைவதைப் பற்றி அவரது கருத்து, காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய அவரது வெளிப்படையான கருத்து மற்றும் அவருக்குப் பிடித்த தேசிய அளவிலான தலைவர் ஆகியவை பற்றி மனம் திறந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பேட்டி அளித்தார்.

எஸ்.வி. சேகர் பேட்டியின் சுருக்கமான எழுத்து வடிவம் இங்கே:

பிராமணர் மீது திடீர் கவனம் எதுவும் இல்லை. நானே பிராமணன்தானே. என் வாழ்க்கையின் முன்னுரிமைகள் நாடு, மதம், சாதி. அப்புறம்தான் மாநிலம், குடும்பம் எல்லாமே. நாம் சார்ந்த சமூகத்திற்குக் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.

நான் படிக்கும்போதுகூட இடஒதுக்கீட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இல்லை. உச்சநீதிமன்றம், 50 சதத்திற்கும் மேல் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று கூறியும் கூட தமிழ்நாட்டில் இப்போது 69 சதம் கொடுக்கிறார்கள். என்ட்ரன்ஸ் தேர்வில் பிராமணர்கள் நன்கு பிரகாசித்ததால் அதிலும் ஒரு குயுக்தி செய்தார்கள். என்ட்ரன்ஸ் தேர்வையே எடுத்துவிட்டார்கள். பொதுப் பிரிவினருக்கு ஒரு சதவிகித வாய்ப்பும் கிடைக்கவில்லை. இது சமூக அநீதி. கோர்ட்டுக்குப் போனால் அடுத்த பத்து தலைமுறைக்கு நீதி கிடைக்காது. இன்று நீதிபதிகளே கோர்ட்டுக்குப் போக முடியாத நிலை. எனவே முதல்வர் கருணாநிதியிடம் கேட்டிருக்கிறேன். அவரால் மட்டும்தான் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

தன் வாழ்வின் லட்சியமாக பிராமணீயத்தைக் கேலி செய்தவர் கருணாநிதி. எல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். நான் கோரிக்கை மனுவைக் கொடுத்தற்குக் கனிவுடன் பரிசீலிக்கிறேன் என்றார்.

பிணத்தை அடக்கம் செய்யும் வெட்டியானுக்கு இடஒதுக்கீடு தருகிறீர்கள். அவனிடம் பிணத்தைக் கொண்டு போய் இறக்கும் பிராமணனை மட்டும் உயர் சாதி என இடஒதுக்கீட்டை மறுக்கிறீர்கள் என்றேன். இதற்கு உச்சநீதிமன்றத்தில் கேட்கணும் என்றார். நீங்கள் நினைத்தால் செய்ய முடியும் என்று கூறிவிட்டு வந்தேன். இதை நீங்கள் செய்தால், நான் பிரச்சாரம் செய்யவே வேண்டியதில்லை. தமிழ்நாட்டு பிராமணர்களே இதற்குத் தகுந்த விதத்தில் எதிர்வினை ஆற்றுவார்கள்.

வடக்கில் மாயாவதி, பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆம், இது சரியான தருணம். இதைத் தவறவிட்டால் மாயாவதி தமிழகத்தில் காலூன்றிவிடுவார். பிராமண வேட்பாளருக்கு வாக்களியுங்கள். பிராமணருக்கு இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் எனப் பிராமண அமைப்பின் மூலமாகச் சொல்லியிருக்கிறேன்.

பிராமணருக்கு இட ஒதுக்கீடு தந்தால் என் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன். ஆனால், ஓடிப் போய் திமுகவில் சேரமாட்டேன்.

நான் அதிமுக எம்எல்ஏன்னு நீங்க சொல்றீங்க. நான் சொல்றேன். ஆனால், அதிமுக சொல்லலையே. ஆளுங்கட்சிக்கு மட்டுமில்லை. அதிமுகவிற்கும் நான் எதிர்க்கட்சியில் இருக்கேன். அதிமுகவில் 2 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறேன். ஒரு கட்சியைத் தொண்டன் எப்படி மதிக்கணுமோ, அதே போல் கட்சியும் தொண்டனை மதிக்க வேண்டும். அது மறுக்கப்படும்போது சுயமரியாதை உள்ள ஒருவன் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நான் செய்கிறேன்.

வடக்கில் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் நட்புடன் தான் பழகுகிறார்கள். இங்கு மட்டும்தான் திமுகவும் அதிமுகவும் இப்படி முற்றிலும் எதிரான நிலையை எடுக்கிறார்கள். திமுக - அதிமுக எதிர்ப்பு நிலை என்பது மக்களை முட்டாளாக்கும் முயற்சி. மணல் அள்ளுவது, கான்ட்ராக்டுகள் என அனைத்திலும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுக்கும் கூட்டு உண்டு.

ஒரு முறை அதிமுக தொண்டர் ஒருவர், ரஜினி படம் போட்டு வாக்களிக்க வேண்டினார். உடனே கட்டம் கட்டப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்திலேயே, ஜெயலலிதா, ரஜினி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டார். இது எப்படி இருக்கு?

என்னைப் பொறுத்தவரை நான் மயிலாப்பூரில் வாக்கு கேட்டுப் போகும்போதே சொன்னேன், ஆரத்தியில் காசு போடமாட்டேன். அதே போல், என்னைத் தேடி வந்து ஏதும் காரியம் ஆகணும் என்றால் அதற்குக் காசும் வாங்கமாட்டேன். சுவீட் பாக்கேட் கூட வாங்கமாட்டேன். நான், ரோட்டில் எங்காவது செங்கல், ஜல்லி கொட்டியிருந்தால் காசு கேட்க மாட்டேன்.

2004 தேர்தலில் அம்மாவைச் சந்தித்த போதே கூறினேன். பாஜகவுக்கு 10 ஆண்டுகள் பிரச்சாரம் செய்துள்ளேன். எனக்குப் பிடித்த கட்சி பாஜக. பிடித்த தலைவர் நரேந்திர மோடி. பத்து நரேந்திர மோடி இருந்தால் இந்தியா அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும். அங்கு எல்லா மதத்தவர்களும் நலமுடன் வாழ்வார்கள்.

மோடியைச் சென்னையில் ஒரே ஒரு முறை சந்தித்தேன். அடுத்த மாதம் அவரது பிறந்த நாள் வருகிறது என்று கேள்விப்பட்டேன். அன்று டெலிபோன் டைரக்டரி பார்த்து அவர் அலுவலக லேண்ட் லைனுக்குத் தொலைபேசி செய்தேன். நான் நடிகன். அவருக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்தேன் என்று கூறினேன். என் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார்கள். அன்று மாலை எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் நரேந்திர மோடி பேசறேன். உங்க அழைப்புக்கு நன்றி என்று. இந்த கர்ட்டசி யாரிடம் இருந்தாலும் அவர் மேலே வருவார்.

தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவது ஒரு கோமாளித்தனம்.

விஜயகாந்த், சரத், கார்த்திக், டி.ராஜேந்தர் ஆகியோர் முதல்வர் ஆக ஆசைப்படலாம். எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. சினிமாவிலேயே நான் சூப்பர்மேன் கிடையாது, சாதாரண மனிதனாகத்தான் நடித்துள்ளேன். ஒவ்வொருவனுக்கும் முதலில் வேலை, பிறகு சம்பாத்தியம், அப்புறம் புகழ், அதிகாரம் எனத் தேவைகள் மாறிக்கிட்டே இருக்கும்.

ரவுடிகளும் பொறுக்கிகளும் அரசியலில் இருக்கும் போது நடிகர்கள் வருவது தப்பில்லை. விஜயகாந்த் ஆசைப்படுவதில் தப்பில்லை.

ஒரு காலத்தில் நாடகத்தில் நடிக்க வந்த என்னை மேடையில் உள்ள தூசு என்றார்கள். இன்னைக்கு என்னை டிராமா சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்.

கார்த்திக்குக்கு தேவர் இனத் தொண்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

விஜயகாந்தைக் கருப்பு எம்ஜிஆர் என்கிறார்கள். என்னைக்கூட சிகப்பு ஒபாமா என்கிறார்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

நிறைய பேர் பார்லிமென்டில் கொட்டாவி கூட விடுவதில்லை. கேள்வி கேட்கத்தான் வாயைத் திறந்துவிட்டாரோ என மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள் என அஞ்சுகிறார்கள்.

நான் காஞ்சி சங்கர மடத்தின் நெருங்கிய சீடர். காஞ்சிப் பெரியவர் படத்தைப் போட்டுத்தான் மகளின் கல்யாண பத்திரிகை அடித்தேன். அதில் தான் எனக்கும் அதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு வந்தது. கிரிமினல்கள், 10 முறைகள் ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள், அரசியலில் இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இது. பாபர் மசூதியை தீர்க்கக்கூடிய மிக முக்கிய நிலையில் இருந்தார். அவர் குற்றமற்றவர் என வெளியில் வருவார். 3 வருடங்கள் அவருடன் தலித் கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். அவருக்கு ஜாதியப் பார்வை கிடையாது. காஞ்சி மடம், மீண்டும் மிகப் பெரிய விசுவரூபம் எடுக்கும்.

என் தொகுதி மேம்பாட்டுக்கு 4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 50 சதவிகிதத்தை ரோட்டுக்கு என்று அவர்களே எடுத்துக்கொள்வார்கள். அதில்தான் கமிசன் அதிகம் உண்டு. காலையில் சட்டமன்றத்துக்குச் செல்லும் போது ஒரு ரோடு. சாயங்காலம் திரும்பி வருவதற்குள் இன்னொரு ரோடு போட்டிருக்கிறார்கள். அவ்வளவு வேகம். அதனால் இப்போது வீட்டுத் தண்ணீர் ரோட்டுக்குப் போவதற்குப் பதில், ரோட்டுத் தண்ணீர் வீட்டுக்குள் வருகிறது. இதற்காக மாநகராட்சிதான் வீட்டு வரி கட்ட வேண்டும்.

என் தொகுதி நிதியில் பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறேன். மயிலாப்பூர் மயானத்தில் தகன ேடை கட்ட, நடை மேம்பாலம் கட்ட, மாநகராட்சிப் பள்ளிக்கு 80 லட்சம் எனப் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியிருக்கேன். கையெழுத்து வாங்கிட்டுப் போயிருக்காங்க.கான்ட்ராக்ட் விட்டாங்களான்னு தெரியலை. சட்டமன்றத்திலேயே சொல்லிவிட்டேன். பணிகள் தொடங்கவில்லை. கான்ட்ராக்டர் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள். ஏற்பாடு செய்கிறேன் என்றேன். நானே கொத்தனார். சித்தாள் வேலை பார்க்கலாம். அதுக்கும் மேல் என்ன செய்வது?

mylaporemla@gmail.com என்பது என் மின்னஞ்சல் முகவரி. 9841023545 என்பது என் செல்பேசி எண். யாரும் எந்த நேரத்திலும என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

அவரின் பேட்டியை ஒலி வடிவில் இங்கே காணலாம்:
http://vetripadigal.blogspot.com/2009/03/blog-post_31.html

(டிஎன்எஸ்)

Anonymous said...

ஜெ.விடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கப்போகிறேன்:எஸ்.வி.சேகர்சென்னை மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. `எம்.எல்.ஏ.'வும், நடிகருமான எஸ்.வி.சேகர், கட்சியில் இருந்தும், எம்.எல்.ஏ.பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளார்.அடுத்த மாதம் (ஏப்ரல்) மைலாப்பூர் மாங்கொல்லை பொதுக்கூட்டத்தில் தனது முடிவை அறிவிக்கிறார்.இது குறித்து எஸ்.வி.சேகர் பதில், ‘’2006-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே அவர்கள் என்னை மனரீதியாக விலக்கிவிட்டார்கள்.அதன்பின், மைலாப்பூர் தொகுதியில் எந்த ஒரு இடத்திலும் அ.தி.மு.க.சம்பந்தமான எந்த ஒரு போஸ்டரிலும், விளம்பரத்திலும், இன்னும் சொல்லப்போனால், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கட்சிப்பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரிலும் எனது பெயர் முழுவதுமாக தவிர்க்கப்பட்டுவிட்டது.சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தொகுதிக்கு நான் விருப்ப மனு கொடுக்காமல், பணம் கட்டாமலேயே எனக்கு சீட் கொடுத்தார்கள்.அந்த சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. தோற்றது. ஆனால், மைலாப்பூரில் நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றேன். அ.தி.மு.க. வெற்றி என்றாலும், என் முகத்துக்காக மக்கள் ஓட்டுப்போட்டதும் வெற்றிக்கு காரணம் ஆகும்.அ.தி.மு.க.வில் நான் சேரும்போது, எனக்கு ஒரு தலைமையின் கீழ்தான் இயங்கமுடியும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவியிடம், சொல்லிவிட்டுத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். ஆனால், இன்று அப்படியில்லை என்பதே உண்மையாகும்.இப்படிப்பட்ட நிலையில் ஒரு பதவிக்காக மட்டும் ஒட்டிக்கொண்டு இருப்பது என்பது என் மனசாட்சிக்கு ஒத்துவரவில்லை. அதனால்தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகும் முடிவை எடுத்து உள்ளேன்.அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழ்புத்தாண்டுக்குப்பின் சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் மக்களுக்கு என் நிலைமையை சொல்லிவிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு என் ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு அறிவிப்பேன்."அம்மாவிடம்'' நான் எதிர்பார்த்தது மரியாதையும், அன்பையும்தான். அதுவும் இல்லாத நிலையில் இனியும் அவர்கள் கட்சியில் தொடர்வது அவசியம் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: நக்கீரன் செய்திகள்

Erode Nagaraj... said...

this is a preplanned political move of jayalalitha and certaimly not a confusion. She announced sme names and made other leaders believe that, hence, they will look for candidates on the basis of their rivals. now the change in candidates of AIADMK will create a mess in their strategy, as the votes ofr jaya is mostly for mgr's name and jaya's.

Anonymous said...

March 16: அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைவேன் என்றும் நடிகர் ராதாரவி நிருபர்களிடம் கூறினார்.

மேலும் கூறியதாவது:

தி.மு.க.வில் எப்போது இணைவீர்கள்?

விரைவில் முறைப்படி இணைவேன்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமுள்ளதா?

நான் அ.தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. அவர்களாகத்தான் சீட் கொடுத்தார்கள். இங்கேயும் அப்படித்தான். தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டால், போட்டியிடுவேன்.

பின்குறிப்பு: ஏற்கெனவே திமுகவில் ‘பிரச்சார பீரங்கி’யாக இருந்தவர்தான் ராதாரவி. ஆனால் அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுகவில் உரிய மரியாதை இல்லை என்று கூறி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக சைதை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

அ.தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் ராமராஜன் கிராமம், கிராமமாக பிரசாரம் செய்கிறார்.

Anonymous said...

ayyo ayyo..ivanga adikira comedyku alave illappa..ellam ayyava(kaliangara) paathu payam dhaan

Anonymous said...

ayyo ayyo..ivanga adikira comedyku alave illappa..ellam ayyava(kaliangara) paathu payam dhaan

Krish said...

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்:
1. ஆரணி-எம்.கிருஷ்ணசாமி

2. சேலம்-தங்கபாலு

3. ஈரோடு-இளங்கோவன்

4. திருப்பூர்-கார்வேந்தன்

5. கோவை-ஆர்.பிரபு

6. திண்டுக்கல்- என்.எஸ்.வி.சித்தன்

7. திருச்சி-சாருபாலா

8. கடலூர்-கே.எஸ்.அழகிரி
மயிலாடுதுறை- மணிசங்கர் அய்யர்

10. சிவகங்கை-ப.சிதம்பரம்

11. தேனி-ஆரூண்

12. விருதுநகர்-வி.சுந்தர வடிவேலு
தென்காசி-வெள்ளைப்பாண்டி

14. நெல்லை-ராமசுப்பு

15. புதுச்சேரி- நாராயணசாமி

ஆ.ஞானசேகரன் said...

Helloo இட்லி வடை இ. சரத்பாபு படத்தில் என் ஓட்டு இவருக்கு என்பது சனநாயக முறையில் சரி இல்லை என்றே நினைக்கின்றேன்.. ஓட் ரகசியமாக இருக்க வேண்டுமே... எங்கள் ஓட் இவருக்கே என்று இருந்தால் நன்றாக இருக்கும்...

IdlyVadai said...

//elloo இட்லி வடை இ. சரத்பாபு படத்தில் என் ஓட்டு இவருக்கு என்பது சனநாயக முறையில் சரி இல்லை என்றே நினைக்கின்றேன்.. ஓட் ரகசியமாக இருக்க வேண்டுமே... எங்கள் ஓட் இவருக்கே என்று இருந்தால் நன்றாக இருக்கும்...//

ஆமாம். ஏதோ ரஜினி மாதிரி பேசிவிட்டேன். மன்னித்துவிடுங்கள் :-)

Anonymous said...

ஆட்சி "மாற்றம்" வேண்டும் ஆட்சி "மாற்றம்" வேண்டும் என்று தினமும் போராடிப் பார்க்கிறார்! அதற்காக இப்போ வேட்பாளர்களை "மாற்றம்" செய்து "practice" பண்ணிக்கறார்! மொத்தத்தில் வாழ்க்கையில் "மாற்றம்" ஒன்றுதான் நிலையானது என்பதை அவர் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறார்!


பின் குறிப்பு:
வடசென்னையின் புதிய அம்மா கட்சி வேட்பாளர் 1989 ஆம் ஆண்டு ஜா. அணியில் இருந்தார். ஜெயின் வசம் இருந்த இரட்டை இலை சின்னத்தை முடக்க வழக்கு தொடுத்து இருந்தார்! (நன்றி : தினமலர்)

Anonymous said...

//this is a preplanned political move of jayalalitha and certaimly not a confusion.//

அண்ணா!
அந்த அம்மா பண்ணற கூத்தப் பாத்துட்டு நீங்க நல்லாக் "குழம்பி"ப் போயி, அம்மா "குழம்பலை" அப்டின்னு இட்லிவடை வாசகர்களைக் "குழப்பி" விட்டீர்கள்!
நன்றி! :-) :-D

Anonymous said...

Hot News:
சென்னை: கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திடீரென திசை மாறிச் சென்றுவிட்டதாக பாஜகவால் குற்றம் சாட்டப்பட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து அந்தக் கட்சிக்கு அதிர்ச்சி தந்த கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக பாஜக தலைவர் இல.கணேசனுடன் நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் ஆகியோர் நேற்றிரவு பேச்சு நடத்தி கூட்டணியை முடிவு செய்தனர்.

இதன்படி சமத்துவ மக்கள் கட்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர் உள்பட 6 இடங்களில் போட்டியிடுகிறது.

நாடாளும் மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்தக் கூட்டணியில் டி.ராஜேந்தரின் லட்சிய திமுக, புதிய நீதிக்கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் இணையும் என்று தெரிகிறது.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் நாகராஜன் கூறுகையில்,

இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரவுள்ளன. எனவே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும். தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன் 18ம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.

திருநெல்வேலியில் சரத்குமார் போட்டியிடவுள்ளார்

விருதுநகரில் கார்த்திக் போட்டி:

நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில்,

எங்கள் கட்சி பாஜகவுடன் 99.9 சதவீதம் கூட்டணி சேர்ந்துள்ளது. இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை மட்டும் நடைபெறவுள்ளது. 3 தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடும். விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

தென் மாவட்டங்களிலும், ராமநாதபுரம் தொகுதியில் திருநாவுக்கரசரை ஆதரித்தும், தென் சென்னையில் இல.கணேசனை ஆதரித்தும் நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

எங்கள் கட்சி பாஜக சின்னத்தில் போட்டியிடுவதா, தனி சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என்றார்.

விருதுநகரில் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி ஏற்படுத்த கார்த்திக்கை தனித்துப் போட்டியிடச் செய்ய திமுக அவருடன் பேசி வந்தது. இந் நிலையில் இந்தக் கூட்டணி சார்பில் கார்த்திக் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

விருதுநகர் காங்கிரஸ் அலுவலகம் சூறைவிருதுநகர்: விருதுநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை தொண்டர்கள் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்., இன்று அறிவித்தது. விருதுநகர் தொகுதிக்கு சுந்தரவடிவேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிரிப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டனர், இதில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக வாக்கு பெறும் வேட்பாளருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி: மாயாவதிதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டி யிட்டு அதிக வாக்குகள் பெறும் 2 பேருக்கு மாநிலங்களவை எம்.பி., பதவி வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி உறுதியளித்துள்ளதாக வந்த தகவலையடுத்து அக்கட்சியினர் உற்சாக மடைந்துள்ளனர்.

மாயவரத்தான்.... said...

Please vote for JK Ritheesh. Otherwise, he will come back to Cine Industry! Which one is more dangerous?! Think about it.

Anonymous said...

திரு மாயவரத்தான்,
ரித்தீஷ்-க்கு ஓட்டுப் போடறது இருக்கட்டும்!

நம்ம "பஞ்சாயத்ராஜ்" அமைச்சரான ஒங்க தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு மணிசங்கர ஐயர் நிலைமையை கொஞ்சம் அலசி அவர் கரை சேருவாரா மாட்டாரான்னு கொஞ்சம் சொல்லுங்க! :-D :-)

கொடும்பாவி-Kodumpavi said...

ஊரே பத்திகிட்டு எறியும்போது யாரோ பீடிக்கு நெருப்பு கேட்ட மாதிரி... மாயவரத்தான் அவர்களின் குசும்புக்கு ஒரு எல்லையே இல்லை.. :-)

லவ்டேல் மேடி said...

// Anonymous said...

நன்றி: நக்கீரன் செய்திகள் //


அட.... நம்ம (லேட்) வீரப்பன் சாரோட பேவரட் புக்கு.......!!! இவிங்களுக்கு எப்பவுமே ஒன் சைடு கோல் அடுச்சுதான பழக்கம்.............

லவ்டேல் மேடி said...

இப்பவே ஒரு நிலை இல்லாம இருந்தா ...... ஆட்சிய புடுச்சா எப்புடி கூட்டணி நெலையா இருக்கும்...........

Erode Nagaraj... said...

அண்ணா!
அந்த அம்மா பண்ணற கூத்தப் பாத்துட்டு நீங்க நல்லாக் "குழம்பி"ப் போயி, அம்மா "குழம்பலை" அப்டின்னு இட்லிவடை வாசகர்களைக் "குழப்பி" விட்டீர்கள்!
நல்லது தானே... சும்மா அலையறதை விட, இட்லி வடைக்கு குழம்பு-அலை நல்ல "ரத்ன"-"மான" match! :P புது angle-ல யோசிச்சா, சிந்திக்க விடுங்கப்பா... (தொடச்சுக்கலாம்)

Vedantha Desika Dasan said...

S. VE Shekar has said :
//தன் வாழ்வின் லட்சியமாக பிராமணீயத்தைக் கேலி செய்தவர் கருணாநிதி. எல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். நான் கோரிக்கை மனுவைக் கொடுத்தற்குக் கனிவுடன் பரிசீலிக்கிறேன் என்றார்.

பிணத்தை அடக்கம் செய்யும் வெட்டியானுக்கு இடஒதுக்கீடு தருகிறீர்கள். அவனிடம் பிணத்தைக் கொண்டு போய் இறக்கும் பிராமணனை மட்டும் உயர் சாதி என இடஒதுக்கீட்டை மறுக்கிறீர்கள் என்றேன். இதற்கு உச்சநீதிமன்றத்தில் கேட்கணும் என்றார். நீங்கள் நினைத்தால் செய்ய முடியும் என்று கூறிவிட்டு வந்தேன். இதை நீங்கள் செய்தால், நான் பிரச்சாரம் செய்யவே வேண்டியதில்லை. தமிழ்நாட்டு பிராமணர்களே இதற்குத் தகுந்த விதத்தில் எதிர்வினை ஆற்றுவார்கள்.//

சேகர் அவர்களே! நீங்கள் ஆயிரம் தான் சமாதானம் செய்தாலும், ஒரு உண்மையான பிராம்மணன் நிச்சயம் கருணாநிதிக்கு ஒட்டு போட மாட்டான். அவர் பிராம்மணனுக்கு செய்த அட்டுழியம் ஒன்றா இரண்டா?